வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 15, 2024

செவிலியர் சபீனாக்கள் பெருகட்டும்.

لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ

பரிசை விட பெரியது காரியமாற்றுவது.

சென்னையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கல்பனா சாவ்லா சாதனைப் பெண்மணிக்கான விருதை நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நர்சு சபீனா அவர்களுக்கு வழங்கினார். அவர்      ஷிஹாப் தங்கள் மனித நேய மையம் குழுவில் இணைந்து பணியாற்றிவருபவர் ஆவார்.

துணிவு மற்றும் சாகச செயல்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கமும் 5 இலட்சம் ரூபாய் பணமும் விருதின் பரிசாக வழங்கப்படும்.

இந்த பணத்தையும் பரிசையும் விட வயநாட்டில் நிலச்சரிவு மீட்பு பணியின் போது நர்சு சபீனா ஆற்றிய பணி மிகப் பெரியது.

வயநாடு நிலச்சரிவில் அதிகம் பாதிக்கப்பட்டது. முண்டைக்கை என்கிற ஊர். அந்த ஊரை பிரதான நிலத்தோடு இணைக்கிற ஒரு பாலம் பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போது சூரல் மலையிலிருது முண்டக்கைக்கு பெங்கி ஓடுகிற வெள்ளத்திற்கு மேலே கடுமையான மழைக்கு நடுவே ஒரு கயிறு கட்டப்பட்டது. நர்சு சபீனா, உபகரணங்கள் அடங்கிய பையை கையில் பிடித்த படி  கயிற்றில் தொங்கியபடி சென்றார். மீட்பு பணியின் ஒரு உச்ச கட்ட முயற்சியாக அந்த காட்சி உலகம் முழுவதிலும் பரவியது.

யாரும் பிரமிக்கிறபடி தான் அன்று அந்த நிகழ்வு இருந்தது.

தமிழக அரசுக்கு நன்றி. மிக விரைவான ஒரு கால கட்டத்தில் மாநிலத்தின் ஒரு மூளையில் வசிக்கிற சாதனையாளரை சரியாக தேர்ந்தெடுத்து தமிழக அரசு இந்த விருதை வழங்கியிருக்கிறது.

இலக்கில் குறியாக இருப்பவர்களுக்கு தடைகள் பெரிதல்ல

நேற்று செய்தியாளர்களிடம் செல்வி சபீனா கூறிய ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

அன்று அவ்வாறு சென்ற போது பயம் எதுவும் தெரியவில்லை. வெள்ளமே கயிறோ கண்ணுக்கு தெரியவில்லை அந்தப் பக்கம் இருக்கிற நோயாளிகள் தான் என் கண்ணுக்கு தெரிந்தார்கள்.

என்ன அற்புதமான வார்த்தைகள் ?

இனி வரும் காலங்களில் இந்த வாசகம் ஒரு பொன்வாசகம் ஆகலாம். கடமை செய்கிற யாருக்கும் இலக்கு எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்ட இந்த சூழலில் இதைவிடச் சிறந்த வார்த்தை வேறில்லை.

அன்றைய அந்த கோரப் பொழுதையும் மழை பொழிவை ஒரு தடவை நினைத்துப் பார்த்து விட்டு இந்த வாசகங்களை கவனித்துப் பாருங்கள் நர்சு சபீனாவின் தொழில் தரமம் புரியும்.

சபீனா இந்தக் காரியத்தை நிகழ்த்தும் போது அதை பெருமைக்காக செய்யவில்லை. அது தனக்கு இந்த அளவு வரவேற்பையும் கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்கவும் மாட்டார்.

ஆனால் மனிதாபிமானப் பணியில் தனது கடமையை உணர்ந்து செயல்படும் யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

நம்மில் ஒவ்வொரு வரும் அவருக்கு வாய்ப்புள்ள துறைகளில் தமது கடமையை நிறைவேற்ற இத்தகைய உணர்வோடு தயாராக இருக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இது தருகிறது.

விளம்பர நோக்கம் இல்லை எனில் மரியாதை தானாக வந்து சேரும்

நர்சு சபீனா மேலும் கூறினார்.

நான் கயிற்றில் தொங்கிச் செல்கிற போது எங்களது டீமில் இருந்த அதிகாரி ஒருவர் தான் இந்த வீடியோவை எடுத்தார். அதையும் என அக்காவிற்கு காட்டுவதற்காகவே நான் அனுப்பினேன். அது இந்த அளவு வைரல் ஆகும் என்றும் நினைக்கவில்லை

இது போன்ற சந்தர்ப்பத்தில் விளம்பரம் தேடிக் கொள்ளுவதில் அதிக ஈடுபாட்டக் கூடாது என்பதை  மக்களுக்கு அவர் புரிய வைக்கிறார்.

எல்லாம் வல்ல இறைவன் அந்தச் சகோதரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யட்டும். அவரது பணி மேலும் சிறக்க துணை நிற்கட்டும்

முஸ்ளிம்க கவனம் செலுத்தட்டும்.

நர்சு சபீனா அவர்களின் பணியையும் அவருக்கு கிடைத்த பரிசையும் கண்டு  முஸ்லிம் சமூகத்திலுள்ள இளைஞர்களும் இளைஞிகளும் உற்சாகம் பெற வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் இது போன்ற (Skills) தொழில் வல்லுனர்கள் பெருக வேண்டும்.

நர்சு சபீனாவுக்கு அவருடைய திறமைதான் இந்த வாய்ப்பை வழங்கியது.  

மருத்துவ துறையில் தற்கால முஸ்லிம்களின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும்.

மருத்துவர்கள் ஆவது சிறப்பானது தான் என்றாலும் அதற்கான வாய்ப்பு தற்போதைய நீட் விவகாரத்தால் மிக கடுமையானதாக மாறியிருக்கிற சூழ்நிலை மருத்துவ துணை படிப்புக்களில் கவனம் செலுத்துவது நல்லது.

மருத்துவ துறையின் சார்பு  துறைகளான செவிலியர் பணி, பரிசோதனை வல்லுனர் பணி, ஆபத்துகால உதவி பணிகளில் முஸ்லிம் சகோதர்ர்களும் சகோதரிகளும். ஈடுபாடு காட்ட வேண்டும்.    

அது சுய கவுரவத்திற்கும்மனித குலத்திற்கு சேவை செய்யவு உதவும்

முஸ்லிம்கள் மருத்துவ துறைகளில் மிகச் சிறப்பான வரலாற்றை கொண்டவர்கள் ஆகும்.     

இஸ்லமிய பிரச்சாரத்தை முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடங்கிய காலத்தில் அரபு நாடுகளிலும் அதன்பிற்கு பிறகும் வெகு காலம் வரை ஐரோப்பிய நாடுகளிலும் நோய்களுக்கு மந்திரவாதிகளை அனுகுவதே வாடிக்கையாக இருநத்து.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நோயிற்கும் மருந்துண்டு என்று கூறினார்கள். 

يقول النبي: "مَا أنزلَ اللهُ داء إلا أنزل له دواء، علِمَه مَنْ عَلِمَه وجَهِلَهُ مَن جَهِلَه

இது நோயுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று தூண்டியதோடு எந்த நோயிக்கும் மருது கண்டு பிடிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை தூண்டியது.

அந்த காலத்தில் இது ஒரு புரட்சிகர வாசகமாகும்.

அரபு நாட்டில், மக்கள் நோய்வந்தால் மந்திர வாதிகளை தேடி ஓடிய காலம் அது.

இந்த நபி மொழிக்கு பின்னணியில் ஒரு செய்தி உண்டு.

பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த புதிதில் நோயாளிகளை ஓதிப்பார்க்க அன்னாரிடம் மக்கள் அழைத்து வந்தனர். ஓதிப்பார்த்த பிற்கு மருத்துவரிடம் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறீனார்கள். அப்போது ஆச்சரியப்பட்ட மக்கள் நீங்களா இப்படி கூறுவது என்று கேட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

تداووا عباد الله.. فإن الله تعالى لم ينزل داء إلا أنزل له الدواء " الترمذي وأبو داود ".

 நோயிக்கு வைத்தியம் செய்வது அல்லாஹ்வின் விதியின் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு எதிரானதாகுமா என சஹாபாக்கள் கேட்டனர். நோய் ஒரு விதி எனில் அதற்கான மருத்துவமும் ஒரு விதி தான் என பெருமானார் (ஸல்) கூறினார்கள்

 فقد جاء جماعة من الصحابة يسألون الرسول - صلى الله عليه وسلم -: يا رسول الله، هل في دواء نتعاطاه ووقاية نتخذها، هل تمنع هذه من قدر الله؟ فقال - صلى الله عليه وسلم -: ((بل هي من قدر الله))؛ رواه الترمذي، وأحمد، والحاكم.

 அரபு நாட்டில் மருத்தும் செய்து கொள்கிற பழக்கத்தை கீபி 7 ம் நூற்றாண்டிலே தொடங்கி வைத்தார்கள் நபிகள் நாயகம்(ஸல்)

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ள பல சிறப்புக்களில் ஏராளமான மருத்துவ குறிப்புகளை கொடுத்துள்ளவர் என்றும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவரது மருத்துவ குறிப்புகள் திப்ப நபவி என்ற பெயரில் இன்றும் ஒரு மருத்துவ முறையாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

 பெருமானாரின் மருத்துவம் என்பது நோயுக்கு மருத்துவம் செய்வது என்பதை விட நோய்வராமல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதை நோக்கமாக கொண்டிருந்தது.

 முஹம்மது நபி (ஸல்) அவர்களது மருத்துவ குறிப்புக்களை பாரம்பரிய நாட்டு மருத்துவ குறிப்புகள்  என்கிறார் வரலாற்றாசிரிய இப்னு கல்தூன். 

 இது அரபுலகை பொருத்து ஒரு புரட்சி என்றால் உலக அளவில் மாபெரிய புரட்சியாகும். ஏனெனில் ஐரோப்பாவில் 19 ம் நூற்றாண்ட் வரை அதாவது இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவம் கூடாது என்ற மூடப்பழக்கம் தான் இருந்தது.

 இங்கிலாந்தின் புரட்சிகர சிந்தனையாளர் பெர்னாட்ஷா சொல்கிறார். :

ஐரோபாவில் மக்கள் மருத்துவர்கள் தேவையில்லை என்று நினைத்தனர். நோயை கடவுளின் நாட்டம் என நினைத்தனர். 19 ம் நூற்றாண்டு வரை இக்கருத்து பிரிட்டனில் காலூன்றி இருந்தது, 19 ம் நூற்றாண்டில் முதல் முறையாக ஒரு இளைஞன் தன்னுடைய தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மகன் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தான். அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகே நோயுக்கு மருத்துவம் பார்த்தல் வழக்கத்திற்கு வந்தது.என்கிறார்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவத்தை வளர்த்த்தோடு மருத்துவர்களை சிறப்பாக ஆதரிக்கவும் செய்தார்கள்.

 உடலிம் இரத்தம் குத்தி எடுப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தார்கள். அவ்வாறு

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்  அபூ தய்பா என்ற ஒரு அடிமை.  அவர் தனது எஜமானர்களுக்கு தினசரி மூன்று திர்ஹம்கள் கொடுக்க வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டிருந்தது. பெருமானார் (ஸல்) அவர்களிடம் பேசி அவர் தர வேண்டிய தொகையை இரண்டு திர்ஹம்களாக குறைக்க ச் சொன்னார்கள். அவ்வாறு செய்யப்பட்டது.

عَنْ حُمَيْدٍ قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ كَسْبِ الْحَجَّامِ فَقَالَ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَمَهُ أَبُو طَيْبَةَ فَأَمَرَ لَهُ بِصَاعَيْنِ مِنْ طَعَامٍ وَكَلَّمَ أَهْلَهُ فَوَضَعُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ

 وكان خراجه ثلاثة آصع فوضع عنه صاعا .

 மக்கள் உயிரைப் பாதுகாக்கிற் பணியில் இருக்கிற மருத்துவர்களுக்கு சில சலுகைகள் தரலாம் என இந்நபி மொழி உணர்த்துகிறது.

 துணை மருத்துவ பணிகள்

 மருத்துவ பணியை போல மருத்துவத்திற்கு துணையாக இருக்கிற செலிலியர் பணியை பெருமானார் ஸ்ல் அவர்கள்  ஆதரித்தார்கள்

 யுத்தங்களுக்கு செல்கிற போது இதறகாக பெண்களை பெருமானார் (ஸல்) அவர்கள்  அழைத்துச் சென்றார்கள்

 

 முதலுதவிப்பணி

 உஹது யுத்த்த்தில் பெண்கள்

النساء اللاتي شاركن في هذه الغزوة عائشة بنت أبي بكر الصديق، وأم أيمن بركة الحبشية، وأم عمارة نسيبة بنت كعب، وحمنة بنت جحش، وأم سليط، وأم سليم ونسوة من الأنصار كما تذكر كتب السير.

 பெண்கள் செய்த பணியை மற்றொரு செய்தி விவரிக்கிறது.

 பெண்கள் உடலை போர்த்தியிருந்த நிலையில் – கால் சலங்கை வெளியே தெரிய – முதுகில் தண்ணீர் பைகளை தூக்கி கொண்டு குதித்தோடி காயம் பட்டவர்களுக்கு புகட்டுபவர்களால பெண்கள் இருந்தனர்.

இந்தச் செய்தி புகாரியில் உண்டு.

  ورد في كتاب الطبقات لابن سعد

  عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ ، انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ ، وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ ، أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ القِرَبَ ، وَقَالَ غَيْرُهُ : تَنْقُلاَنِ القِرَبَ عَلَى مُتُونِهِمَا ، ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلَآَنِهَا ، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ القَوْمِ

 மருத்துவ சிகிட்சை பணி

 ففي صَحيحِ مُسلمٍ، عن أُمِّ عَطيَّةَ الأنصاريَّةِ، قالت: «غزَوتُ مع رَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ سَبعَ غَزواتٍ، أخْلُفُهم في رِحالِهم، فأصْنَعُ لهم الطَّعامَ، وأُداوي الجَرحى، وأقومُ على المَرْضى

 முதலுதவி செய்யும் பெண்களுக்கு பரிசுகள்

 இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் ஒரு அறிவிப்பில் இவ்வாறு உதவி செய்யும் பெண்களுக்கு பெருமானார் (ஸல்) பரிசுகள் வழங்குவார்கள் என்ற செய்தி இருக்கிறது.

فقال ابنُ عبَّاسٍ رَضيَ اللهُ عنهما:

كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَغْزُو بالنِّسَاءِ فيُدَاوِينَ الجَرْحَى، وَيُحْذَيْنَ مِنَ الغَنِيمَةِ

ويُحذَيْنَ مِنَ الغنيمةِ» أي: يُعْطَيْنَ الْحَذْوَةَ وهي العطِيَّةُ،

 இன்று யுத்தங்கள் இல்லை என்றாலும் அது போன்ற நெருக்கடிகளுக்கு பெண்கள் தேவை.

 மருத்து உதவிப் பணிகளுக்கு பெண்கள் அளவுக்கு உதவ ஆண்களால் முடியாது.

 பக்குவமும் பொறுமையும் ஆண்களிடம் அந்த அளவு இருக்காது.  

 இதனால் தான் மருத்துவத் துறையில் இஸ்லாமில் ஆண் பெண் வேறுபாடு இல்லை.

 இஸ்லாம் மிக அவசியமாக பர்தா முறையை வலியுறுத்துகிறது. ஆனால் மருத்துவ துறையை பொருத்தவரை அது அத்தியாவசிய தேவைகளின் துறை என்பதால் அதில் பெண்களுக்கு பெண்களே அல்லது ஆண்களுக்கு ஆண்களே கிடைக்காத போது மாற்று பாலினத்தவர் சிகிட்சை அளிக்கலாம் அது போல சிகிட்சை பெறலாம் என்ற சட்ட அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளாது.

 وقال الخطيب الشربيني في مغني المحتاج:

(واعلم أن ما تقدم من حرمة النظر والمس، هو حيث لا حاجة إليهما، وأما عند الحاجة، فالنظر والمس مباحان لفصد، وحجامة، وعلاج، ولو في فرج للحاجة الملجئة إلى ذلك، لأن في التحريم حرجاً، فللرجل مداواة المرأة وعكسه، وليكن ذلك بحضرة محرم، أو زوج... ويشترط عدم امرأة يمكنها تعاطي ذلك من امرأة، وعكسه...

 இது இந்த துறையில் ஈடுபடுகிறவர்களுக்கு ஏற்படுகிற சங்கடத்தை தவிர்க்கும் மிக முக்கியமான நிலைப்ப்பாடாகும்.

 (இயல்பாக இந்த நடைமுறையை தான் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ மனைகள் – ஆபத்துதவி நிலையங்கள் கையாளுகின்றன)

 தயக்கம் தேவையில்லை 

இன்று நர்சிங்க் துறையில் கிருத்துவ பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் இதில் ஈடுபடுவது குறைந்த்திருக்கிறது. இதற்கு ஆண் பெண் கலப்பு என்ற சிறு தயக்கமே காரணமாகும்.

 ஆனால் இந்த துறையில் இந்த தயக்கம் தேவையற்றது என்பதே நாம் இந்தச் செய்திகளை எடுத்துக்காட்டுவதன் நோக்கமாகும்.

 இஸ்லாத்தில் நர்சிங்க் துறை புனிதமான துறைகளில் ஒன்றாகும்  ஜிஹாதைப் போலவே.

 இஸ்லாத்தில் முதல் நர்ஸ்  - உலகின் முதல் பெண் நர்ஸ்

 அவசர காலத்தில் பல பெண்களும் முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட பொதுவாக நர்சிங்கள் பணியில் சில சஹாபா பெண்மணிகள் இருந்துள்ளனர்.  

  رُفيدة بنت سعد الأسلمية

ருபைதா அஸ்லமிய்யா (ரலி) என்ற சஹாபி பெண்மணி இஸ்லாமில் முதல் நர்சாக கருதப்படுகிறார்.

 முதல் முதலுதவிக் கூடம் மஸ்ஜிதுன்னபவியில்

 அகழ்யுத்த்தின் போது இந்த அம்மையாருக்காக மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலில் மருத்துவ கூடாரம் அமைது தரப்பட்ட்து.

 பெருமானார் (ஸல்) அவர்களின் பேரன்பிற்குரிய சஃது பின் முஆத் ரலி அவர்கள் காயம்பட்ட போது ருபைதா அம்மாவின் கூடாரத்திற்கு அருகில் அவருக்கு என்று ஒரு தனி கூடாரம் அமைத்து கவனித்துக் கொள்ள பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே போல ருபைபதா அம்மாவின் பெருமானார் (ஸ்ல) அவர்கள் வந்து அங்கு சிகிட்சை பெறுபவர்களையும் சஃது ரலி அவர்களையும் கண்டு செல்வார்கள்.

 أُقيمت لها خيمة في المسجد النبوي بها، وعندما أُصيب سعد بن معاذ  بسهم في غزوة الخندق، أمر النبي الصحابة أن يُحولوه إلى خيمة رفيدة، وكان النبي يمر على خيمتها فيتفقد الجرحى ويتفقد حال سعد

 யுத்த காலத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே ருபைதா ரலி மருத்துவ உதவிப்பணிகள் செய்வார்

 கைபர் யுத்த்தில் அவர் பங்காற்றிய போது அவருக்கும் கனீமத்தில் ஆண்களுக்கு நிகரான ஒரு பங்கு தரப்பட்ட்து.

 بل كانت تداوي مرضى المدينة، كما شهدت رفيدة غزوة خيبر، وأسهم لها النبي بسهم رجل..  

 வரலாற்று ஆய்வின் படி பார்த்தால் ருபைதா ரலி அவர்கள் தான் உலகில் அறியப்பட்ட முதல் பெண் நர்ஸ் ஆவார்.

 பொதுவாக இன்றைய நவின உலகில் பிரான்ஸ் நாட்டின் Florence Nightingale  புளோரன்ஸ் நைட்டிங்கோல் என்ற பெண்மணி தான் உலகின் முதல் நர்ஸ் என்று பேசப்படுகிறார். அவர் 1820 ல் பிறந்து 1910 இறந்திருக்கிறார். ஆனால் அவருக்கு 1200 வருடங்களுக்கு முன்பாக வரலாறு கண்ட நர்ஸாக ருபைதா ரலி அவர் திகழ்கிறார்.

ருவைதா முதலுதவி முகாம்

ருபைதா ரலி அவர்க்களின் தந்தை சஃது மருதுதுவராக இருந்தார். அவருக்கு ருபைதா ரலி உதவியாக இருந்தார். இதுவே அவருக்கு ஆன்கள் கோலோச்சிய காயங்களுக்கு மருந்திடுதல், உடைந்த உறுப்புக்களுக்கு கட்டுப்போடுதல் போன்ற துறைகளில் தனி அனுபவத்தை அளித்திருந்தது அந்த அனுபவங்கள் அவருக்கு மஸ்ஜிதுன்னபவியிலேயே ஒரு முகாம் அமைக்கும் அளவில் தகுதியை கொடுத்திருந்த்து. அந்த முகாமை நபி (ஸல்) அவர்களே ருபைதா ரலி அவர்களின் கூடாரம் என்று குறிப்பிட்டார்கள்

وكان رسول الله  قد قال لقوم    سعد معاذ حين أصابه السهم بالخندق: اجعلوه في خيمه رفيدة حتى أعوده من قريب.

அதனால் வரலற்றி முதல் மருத்துவ உதவி முகாமின் சொந்தக்கார்ர் என்று அவர் பாராட்டப்படுகிறார்.صاحبة الخيمة الطبية الأولى في التاريخ 

இதனால் கிரேக்கத்தை சேர்ந்த முதல் மருத்து பணியாளரான  Hippocrates ஹிப்போகிராஸுக்கு நிகராக ருபைதா ரலி பேசப்படுகிறார்

ருபைதா (ரலி) செவிலியர் பயிற்சி

ருபைதா ரலி அவர்களின் அனுபவச் செழுமையின் காரணமா மற்ற பல பெண்களுக்கும் அவர் செவிலியர் துறையில் பயிற்சி அளித்த்தாகவும் அவ்வாறு அவரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டவர்கள் அன்னை ஆயிஷா ரலி அவர்களும் ஒருவர் என்று சில வரலாற்று தகவலகள் தெரிவிக்கின்றன.

وتعتقد بعض المصادر أنّ رُفيدة الأسلمية قامت بتدريب نساء أخريات، من ضمنهن أمهات المؤمنين مثل عائشة بنت أبي بكر

  ருபைதா ரலி அவர்களின் பெயரால்

 ருபாதா ரலி அவர்களின் இந்த பெருமையை பாராட்டும் வகையில் அரபுலகில் பல பள்ளிக்கூடங்களுக்கும் தெருக்களுக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 ஜோர்டானில் ஒரு கல்லூரிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது .

 போர்க்காலங்களில் மருத்துவ உதவிப் பணிகளில் ஈடுபடுகிற செம்பிறைச் சங்கம் ருபைதா ரலி பெயரில் ஒரு குழுவை வைத்திருக்கிறது.

பஹ்ரைன் அரசு ருபைதா ரலி அவர்களின் பெயரில் காயம்பட்டவர்களுக்கான ஒரு கல்லூரியை நிருவியிருக்கிறது.

 அங்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணிபுருயும் மாணவருக்கு ருபைதா ரலி விருது என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படுகிறது.

 يُطلق اسم رُفيدة الأسلمية على عددٍ من المدارس والشوارع والمباني التعليمية والمؤسسية في عدد من دول العالم الإسلامي. كما أُطلق اسمها على كليةٍ في الأردن تحمل اسم «كلية رفيدة الأسلمية للتمريض والقبالة» في مدينة الرصيفة، وتمنحُ المنظمة العربية للهلال الأحمر والصليب الأحمر «وسام رفيدة الأسلمية»، كما تمنح كلية الجراحين الملكية في إيرلندا بالتعاون مع جامعة البحرين  «جائزة رُفيدة الأسلمية» لطالبٍ مميزٍ في كل عام، وهناك العديد من الجوائز والأوسمة التي تحمل اسمها حول العالم.

2016 ம் ஆண்டு சவ்வூதியின் ரியாழ் நகரத்தில் Rufaida center  for Women's Health எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.

மொரோக்கோவிலும் ருபைதா ரலி பெயரில் ஒரு மருத்துவ மையம் உள்ளது.

கொரோனோ காலத்தில் பள்ளிவாசல்களை தற்காலிக முகாம்களாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை அங்கீகரிக்க பல இஸ்லாமிய சட்ட தீர்ப்பு நிறுவனங்களும் ருபைதா ரலி அவர்களின் முகாமை மேற்கோள் காட்டின.

உலக நர்ஸுகளுக்கு முன் மாதிரி 

 மருத்துவ நூல்களை பிரசுரிக்கும் பிரபல நிறுவனமான Elsevier பதிப்பித்துள்ள The Student Nurse Handbook என்ற நூலில் பிரிட்டனின்
புகழ் பெற்ற நர்ஸ் Bethann Siviter பெதன் ஸ்விட்டர்
இப்படி கூறுகிறார்.

உங்களுக்கு முன் சென்ற சில நர்சிங் கதாநாயகிகளை கவனியுங்கள். நீங்கள் பின்வரும் பிரபலமான பெயர்களில் சிலவற்றைப் பின்பற்றலாம். புளோரன்ஸ் நைட்டிங்கேல், மேரி சீகோல், எலிசபெத் நெனேகா அயோனோ, எதெல் கார்டன் ஃபென்விக், எடித் லூசியா கேவெல், ருஃபைடா அல் அஸ்லாமியா மற்றும் நான்சி ரோப்பர்"

அவர் ருபைதா (ரலி) அவர்களின் பெயரை கடைசியில் கூறினாலும் ருபைதா ரலி அவர்களின் பணி சர்வதேச தரத்திலானது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதற்கு இது சாட்சியாகும். 

 இன்றைய சபீனாக்களை நாம் அன்றைய ருவைதாக்களின் உம்மு சுலைம்கள்  உம்மு அத்திய்யாக்களின் (ரலி) வாரிசுகளாக இன்று நாம் பார்க்கிறோம்.

பார்க்க வேண்டும்.

 அந்தப் பணியும் படிப்பும் தொடர்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 நர்சிங்க் என்ற படிப்பு மட்டுமல்லாத இன்று ஏராளமான மருத்துவ உதவிப் படிப்புகள் புதிதாக வந்திருக்கின்றன.

 Bsc யில் கூட  Physician Assistant மருத்துவ உதவியாளர் போன்ற இன்னும் பல துறைகள் வந்துள்ளன.

ஹெல்த் கேர் மருத்து கண்காணிப்பு என்ற தளத்தில் பல மருத்து பட்டய படிப்புகள்

 ஆக்ஸீடெண்டல் கேர் டுரோமே கேர் பொன்ற எமர்ஜென்ஸீ வார்டில் பணியாற்றுவதற்கான பல படிப்புகள் வந்துள்ளன.

 அதே போல பிஸியோ தெரபி  – சைக்யாரிஸ்ட்  போன்ற பல துறைகள் இப்போது மிகவும் புகழ்பெற்று வருகின்ற்ன

 சராரியான படிப்புக்களை விட இது மாதிரியான துறைகளில் நம் சமூகம் மக்களுக்கு நாம் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.

 நமது பிள்ளைகள் இத்துறைகளை விரும்பினால் தகுந்த பாதுகாப்போடு அவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தர வேண்டும்.

 நர்ஸு சபீனா அவர்களையும் அவர்களை போல தம் உயிரை பணயம் வைத்து நிவாரணப்பணிகளில் ஈடுபடுகிற அனைவரையும் நாம் மனதார பாராட்டுகிறோம்.

இது போன்று காரியமாற்றுவர்கள் எல்லாம் வல்ல இறைவன் இன்னும் இன்னும் அதிக அன்புபளிப்புக்களை தருவான்

لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ

அவர்களை எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்தும் அல்லாஹ் பாதுகாப்பானக! மக்களுக்கு நிம்மதி அளிக்கிற அவர்களுக்கு அவர்களது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!

 

 

 

 

 

 

 

 

 

2 comments:

  1. Anonymous8:18 PM

    وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
    தன்னலம் பாராமல் சேவையாற்றுவது சம்பந்தமாக இந்த ஆயத்து பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்... அல்லாஹ்வே நன்கறிந்தவன்

    ReplyDelete
  2. عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ،، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ فَحُشِيَ بِهِ جُرْحُهُ.
    'ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) அவர்களிடம் மக்கள் வந்து, 'நபி(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சை செய்யப்பட்டது?' என்று கேட்டபோது, எனக்கும் கேள்வி கேட்கப்பட்டவருக்குமிடையில் யாரும் இருக்கவில்லை. 'இந்த விஷயத்தை என்னை விட அதிகம் தெரிந்தவர் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அலீ(ரலி) தங்களின் கேடயத்தைக் கொண்டு வந்தார். அதில் தண்ணீர் இருந்தது.

    ஃபாத்திமா(ரலி) அந்தத் தண்ணீரால் நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவினார். ஒரு பாய் எடுக்கப்பட்டு அது கரிக்கப்பட்டது. பின்னர் அந்தச் சாம்பல் நபி(ஸல்) அவர்களின் காயத்தில் பூசப்பட்டது' என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாயிதி(ரலி) கூறினார்' என அபூ ஹாஸிம் அறிவித்தார்.

    ஸஹீஹ் புகாரி : 243.


    அக்காலத்தில், காயத்திலிருந்து வழியும் இரத்தத்தை உடனடி
    யாக நிறுத்த காயத்தில் சாம்பலை வைப்பார்கள். பொதுவாக, எந்தச் சாம்பலாயினும் உடனடியாக அது இரத்த இழப்பை
    நிறுத்திவிடும். நறுமணக் கோரைப் புல் வகையால் தயாரிக்கப்பட்ட பாயாக இருப்பின் இரத்தமும் நிற்கும். நறுமணமும் கிடைக்கும்

    சாம்பலில் காய்வுத் தன்மை இருக்கும் அதே நேரத்தில் கரிக்கும் தன்மை குறைவாக இருக்கும்

    பத்ஹுல் பாரி

    அஸ்ஸலாமு அலைக்கும்

    ஹஜ்ரத்


    செவிலியர் சபீனாக்கள் பெருகட்டும்
    இந்த தலைப்பில்

    இதை சேர்த்துக் கொள்ளலாமே.

    ReplyDelete