வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 22, 2024

வலு மிகு சொல்.

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ 

மனிதன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு  حيوان ناطقபேசத் தெரிந்த மிருகம் என்று தத்துவ அறிஞர்கள் வரைவிலக்கணம் சொல்வார்கள்.

இதன் பொருள்و மனிதனுக்கு மட்டுமே மொழி இருக்கிறது என்பது அல்ல; மற்ற உயிரனங்களுக்கும் மொழி உண்டு தான். ஆனால் கருத்துக்களை பேசும் அளவுக்கு  அது செழிப்பானது அல்ல. மனிதனுக்கு மட்டுமே கருத்துக்களை பேசும் அளவு வளமான மொழியாற்றல் இருக்கிறது.

மனிதன் அவனது உள்ளம் கற்பனை செய்கிற செய்திகளை பிற மனிதனை ஈர்க்கும் வண்ணம்  அழகுபடவும் யாரையும் கட்டுப்படுத்துகிற வகையில் வீரியமாகவும் பேசுகிற ஆற்றலை பெற்றிருக்கிறான்.

சவூதியில் ஆரெம்கோ என்ற பிரபலமான ஒரு நிறுவனம் இருக்கிறது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக ஷைகு யாசீன் என்பவர் இருந்தார். அவரைப் பற்றி இஸ்லாமிய கலைக்களஞ்சியம் சொல்கிறது. ஷைஹ் யாசீன் யரிடமாவது கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் அவர் தன்னுடைய ஒரு கையையை யாசீனுக்கு கொடுத்துவிடுவார்.

வரலாற்றில் பெரும் தாக்கம் செலுத்துகிற மகா அலக்ஸாண்டரின் உலக படையெடுப்பின் போது இந்தியப் பகுதியில் நுழைய முயன்ற சந்தர்ப்பத்தில் களைப்பின் காரணமாக அவரது படைவீர்ர்கள் அவருக்கு எதிராக புரட்சி செய்தார்கள். வீர்ர்களின் சோர்வை புரிந்து கொண்ட அலக்ஸாண்டர் அவர்களுக்கிடையே ஒரு சொற்பொழிவாற்றினான். அவ்வளவு தான் வீரர்கள் புதிய உற்சாகத்தோடு படை எடுத்துப் புறப்பட்டார்கள்.

மனிதர்கள் பேசிய பல வாசகங்களும் மிக பிரபலமாக  காலம் கடந்தும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

செயல்கள் எண்ணத்தை பொறுத்தே அமைகின்றன. - ஒரு நம்பிக்கையாளர் ஒரே பொந்திலிருந்து இரண்டு முறை கொட்டு வாங்க கூடாது என்பது போன்ற நபி (ஸல்) அவர்கள் பேசிய ஏராளமான சொற்கள் வரலாற்றில் நீடித்து வாழ்கின்றன.

இன்று போய் நாளை வா ! என்ற ராமாயணம் வாசகம். அது போல ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்ற பைபிள் வாசகம். யூ டூ புரூட்டஸ் என்ற சேக்ஸ்பியரின் வார்த்தைகள், நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவரின் வாசகம்.

இது போன்ற  இன்னும் ஏராளமான மனிதர்களின் வார்த்தைகள் ஆகாயாத்தில் அப்படியே நிலைத்து நிற்கின்றன.

இவ்வாறு மனிதன் பேசுய சொற்களில் மகோன்னதமனாது, லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது.

عن جابر بن عبد الله رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول :( أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَفْضَلُ الدُّعَاءِ الحَمْدُ لِلَّهِ

இந்த ஒரு வாசகத்தை பூமியில் வேறூன்றி வானில் கிளை பரப்பி நிற்கிற பிரம்மாண்டம் என்று திருக்குர் ஆன் போற்றுகிறது.

مْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ 

இந்த ஒரு சொல்லை மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்து சேர்ப்பதற்காகத்தான். ஆதம் நபி முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரையிலான அத்தனை நபிமார்களும் பாடுபட்டார்கள். தவ்ராத் முதல் குர்ஆன் வரை அத்தனை வேதங்களும் உழைத்தன.

இதுவே ஈமானுக்கும் இறைமறுப்பிற்கும் இடையிலான எல்லைக் கோடு. இதுவே மனிதனை அல்லாஹ்வுடன் கட்டிப்போடுகிற பெருங்கயிறு. இதுவே இதயத்தை இணைவைப்பிலுருந்து சுத்தப்படுத்துகிற அரு மருந்து. இதுவே சாத்தானுக்கு சம்மட்டி அடி கொடுக்கிற முஃமினின் பேராயுதம்.

எனவே தான் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வார்கள்.

யார் இந்த வார்த்தையை எங்கும் எப்போதும் அதிகமாக சொல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். எந்தக் காலத்திலும்.

அதனால் தான் இந்த வார்த்தைய சொல்வதற்கு குறிப்பிட்ட காலம்   எதுவும் இல்லை என்பார்கள் அறிஞர்கள்

படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒருவர் இந்த வார்த்தையை சொன்னால் அவரது செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

 مَنْ تَعَارَّ مِنْ اللَّيْلِ فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي أَوْ دَعَا اسْتُجِيبَ لَهُ فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلَاتُهُ ) . رواه البخاري (1154) من حديث عبادة بن الصامت ، رضي الله عنه .

ஒளு செய்த பிறகு சொன்னால் சொர்க்கத்தின் 8 வாசல்கள் திறக்கும்

 مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ) . رواه مسلم (234) من حديث عقبة بن عامر، رضي الله عنه .

காலையில் சொன்னால் மாலை வரை சைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

  مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنْ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ ، رواه البخاري (3293) ومسلم (2691) ، واللفظ له ، من حديث أبي هريرة .

 இறை நம்பிக்கையை மலர்ச்சியாக  வைத்துக் கொள்ளும் வழி.

 عن  أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: جَدِّدُوا إِيمَانَكُمْ . قِيلَ : يَا رَسُولَ اللَّهِ ! وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا ؟ قَالَ : أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ  

 நெருக்கடிகள் தீரும்

  كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو عِنْدَ الْكَرْبِ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ) . رواه البخاري (6345) ومسلم (2730) من حديث ابن عباس رضي الله عنهما .

 மனிதர்களுக்கு ஏற்படுகிற பெரிய நெருக்கடி சகராத் . அந்த நெருக்கடியிலிருந்து மீளவும், அந்த நேரத்தில் ஈமானை பாரிசுப்படுத்திக் கொள்ளவும் முஸ்லிம்கள் இந்த வார்த்தைக்காக அதிகம் ஏங்குகிறார்கள்.

 முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்திக்கிற காரியங்களின் ஒன்று

اللهم اجعل أخر كلامنا من الدنيا لا إله إلا الله.

யா அல்லாஹ் எங்களுடைய கடைசி வார்த்தையாக ;லாயிலாக இல்லல்லாஹுவாக ஆக்கு!

இதற்கு காரணம் பெருமாணார் (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது.

عن معاذ بن جبل قال: قال رسول الله صلى الله عليه وسلممن كان آخر كلامه لا إله إلا الله دخل الجنةرواه أبوداود 

பொதுவாக முஸ்லிம் முதியவர்கள் துஆ செய்யுமாறு கேட்கும் போது ஈமான் சலாமத்திற்காக துஆ செய்யுங்கள் என்று கோரிக்கை வைப்பார்கள். அதன் பொருள் கடைசி நேரத்தில் கலிமா நாவில் வந்து விட வேண்டும் என்பதே!

அல்லாஹ் அந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் வழங்குவானாக!

நமது முன்னோர்கள் தங்களுடைய கடைசி வார்த்தைகள் இப்படி அமைந்து விட வேண்டும் என்பதில் பேரதிகம் அக்கறை செலுத்தினர்.

இப்னு முல்ஜிம் என்பவனால் குத்தப்பட்டு காயம்பட்டிருந்த நிலையில் அலி ரலி அவர்கள் இதை தவிர வேறு எதையும் பேச வில்லை என்கிறது ஒரு வரலாறு.

لما احتضر علي بن أبي طالب رضي الله عنه بعد أن ضربه ابن ملجم عليه لعنة الله، كان لا يقول إلا هذه الكلمةلا إله إلا الله، لا إله إلا الله أخلو بها وحدي، لا إله إلا الله يغفر بها ذنبي، لا إله إلا الله يجبر بها كسري، لا إله إلا الله يقبل بها عملي، لا إله إلا الله ألقى بها ربي.

هكذا كان يقول علي إلى أن لقيت روحه ربها جل وعلا.

 இன்றும் நம்முடைய மக்களில் பலர் கடசி நேரத்தில் லாயிலாக இல்ல்ல்லாஹுவை மறந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் நம்மை உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் பாதிப்புக்குள்ளானவர்களில் 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

அவர்களில் மரணித்த பலரும் கலிமா சொல்லியபடிதான் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய செய்திகளை கேள்விப்படுகிற போது அறிந்து கொள்ள முடிகிறது.

முண்டக்கை பகுதியை சேர்ந்த அப்துஸ் சலாம் என்பவர் கூறினார். நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். தண்ணீர் பெருகி வந்தது. கதவை திறக்க முயற்சித்தோம். முடியவில்லை. தண்ணீர் ஏறிக் கொண்டே இருந்தது. நான் என் மனைவியையும் மகளையும் அணைத்துக் கொண்டேன். நான் அவர்களை கலிமா சொல்லச் சொன்னேன். நானும் கலிமா சொன்னேன். வீடு எப்போது விழும் என்று தெரியவில்லை. தப்பிப்போம் என்று நினைக்கவேயில்லை. திடீரென எங்களது வீட்டில் வெள்ளம் வடிந்தது. கதவை திறந்தேன். அப்போது திறந்தது. ,மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறினேன். கீழே விழுந்து புரண்டு எழுந்து மேடேறி ஒரு தேயிலை தோட்ட்த்தில் ஏறிக் கொண்டோம். கொஞ்ச நேரத்தில் எங்களது வீடு விழுந்து அடித்துச் செல்லப்படுவதை பார்த்தேன் .

பலரிடம் பேசிய போதும் கலிமா சொல்லி விட்டோம்  என இப்படியே சொன்னார்கள்.

இன்னொருவர் சொன்னார். நிலச்சரிவில் தப்பித்து வெளியேறிய நாங்கள் இரு நூறு முன்னூறு பேர் முண்டக்கையில் ஒரு மேட்டின் மீது நின்று கொண்டிருந்தோம். எங்கே போவது என்று தெரியவில்லை. நிலம் சரிந்து எல்லா இட்த்திலும் பள்ளமாகியிருந்த்து. இரவிலிருந்து மறு நாள் மதியம் மூன்று மணி வரை அங்கேயே நின்று கொண்டிருந்தோம். மழை கடுமையாகிக் கொண்டே இருந்தது.   எப்போது வேண்டுமானாலும் நாங்கள் நிற்கிற பகுதி அடித்துச் செல்லப்படலாம் என்று அஞ்சினோம். மறு நாள் மதியம் கப்பல் படையினர் வந்து எங்களை மீட்கும் வரை நாங்கள் கலிமா தான் சொல்லிக் கொண்டிருந்தோம்.

பலரும் இப்படி ஒரு வார்த்தையை சொன்னதை கேட்கிற போது அந்தச் சூழல் எவ்வளவு கடுமையாக இருந்திருக்கிறது என்பது புரிந்த்து. அதே நேரத்தில் தங்களது கடைசி வார்த்தையாக கலிமா அமைந்து விட வேண்டும் என்பதில் இருந்த துடிப்பையும் புரிந்து கொள்ள முடிந்த்து.

முஸ்லிம் உம்மத் இவ்வறு பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது.

வயநாட்டில் அம்மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற சோகத்திற்கு நடுவே கடைசி நேரத்தில் கலிமா சொல்லும் பாக்கியம் பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ் நமது மூச்சின் கடைசி நிமிடத்தை இப்படி கலிமாவில் கவனமுள்ளதாக ஆக்கவேண்டுமே என்ற ஆதங்கம் எழுகிறது.

வயநாட்டு சிலச்சரிவின் பாடங்களில் இதுவும் கவனித்தக்க ஒன்றாகும்.

கடைசி நேரத்தில் கலிமா சொல்லும் வாய்ப்புக்கு என்ன வழி ?

நமக்கும் கடைசி நேரத்தில் கலிமா வர வேண்டும் எனில் அதற்கு சில வழிகள் உண்டு என்று

  1. 1.   முதலாவது. அல்லாஹ்விடமே உதவி கேபது.

أن تستعين برب الأرض والسماوات؛ فمن أعانه الله فهو المعان، ومن خذله الله فهو المخذول، فاستعن بالملك أن يثبت قلبك، وأن يسدد رميتك، وأن يثبت قدمك على الطريق، ذكر الإمام ابن الجوزي أن شيخاً من الشيوخ قال لطالب علم عندهيا بني! ماذا أنت صانع لو مررت على غنم فنبحك كلبها؟ فقال التلميذادفع الكلب ما استطعت، قالفماذا تصنع إن نبحك الثانية؟ قالأدفع الكلب ما استطعت، قالفإن نبحك الثالثة؟ قالأدفع الكلب ما استطعت، فقال الشيخ لتلميذهيا بني! ذاك أمر يطول، ولكن استعن بصاحب الغنم يكف عنك كلبها، وكذا استعن بالله يكف عنك كيد الشيطان.

     இப்னுல் ஜவ்ஸி ரஹி அவர்கள் தனது மாணவருக்கு சொன்னார்கள். ஒரு ஆட்டுமந்தையை காவல் காக்கும் நாய் உன்னை கடிக்க வரும் எனில் நாயுடன் போராடிக் கொண்டிருப்பதை விட அந்த ஆட்டு மந்தையின் சொந்தக்காரனிடமே உதவி கேட்டுவிடுவது நல்லது. அவன் உன்னை பாதுகாத்து விடுவான். அது போல அல்லாஹ்விடம் உதவி கேள் அவன் உன்னை பாதுகாத்து விடுவான்.

  1. 2.   திருக்குர் ஆன் அதிகமாக ஓதுவது

 திருக்குர் ஆனை தொடர்ந்து தர்தீலாக ஓதுவது இதயத்தை நிலைப்படுத்தும் என்கிறது திருக்குர் ஆன். இதயம் நிலைப்படும் போது கடைசி நேரத்தில் கலிமா வரும்.

وَقَاْلوا لَوْلا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا} [الفرقان:٣٢]

 இதிலுள்ள தர்தீல் என்ற சொல்லுக்கு விரிவுரைகளை படித்தல் என்றும் ஒரு பொருளுண்டு

وقال آخرون : معنى الترتيل : التبيين والتفسير .  - تفسير الطبري

 அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் சொன்னார்; மகளே! அழாதே! இதே வீட்டில் நாலாயிரம் தடவை குர் அன் ஹத்தம் செய்திருக்கிறேன், இந்த நல்ல முடிவிற்காக

لمّا نزل الموت بالعابد الزاهد عبد الله بن إدريس اشتد عليه الكرب فلما أخذ يشهق بكت ابنته. فقال: يا بنيتي، لا تبكي فقد ختمت القرآن في هذا البيت أربعة آلاف ختمة.. كلها لأجل هذا المصرع.

 ஓத முடியாவிட்டால் கேளுங்கள். அதுவும் இதயத்தை நிலைப்படுத்தும்.

  1. 3.   தொடர் திக்ரு தஸ்பீஹ் செய்வ்து.

தினசரி வழமையாக திக்ரு செய்வது இறுதி நேரத்திலும் திக்ரை கொண்டு வந்து சேர்க்கும். ஏனெனில் திக்ரு செய்பவர் விழிப்போடு இருப்பார் என்கிறது ஹதீஸ்

قال صلى الله عليه وسلم(مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت

 திக்ரு இறை நினைவில் நம்மை வைக்கிறது. அப்பொது இறவன் நம்மோடு இருப்பான்.

 أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني؛ فإن ذكرني في نفسه ذكرته في نفسي، وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم، وإن تقرب إلي شبراً تقربت إليه ذراعاً، وإن تقرب إلي ذراعاً تقربت إليه باعاً، وإن أتاني يمشي أتيته هرولة).

  1. 4.   தொழுகையை ஜமாத்தாக தொழுவது

பாவக்கறைகளை கழுவுகிறது தொழுகை.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

عن النبي صلى الله عليه وسلم قال: (تحترقون تحترقون، حتى إذا صليتم الصبح غسلتها

நீங்கள் அழுக்கடைகிறீர்கள் அழுக்கடைகிறீர்கள் தொழுகை உங்களை கழுவுகிறது.

பாவங்கள் அப்படியே தங்கி விடுகிற போது கடைசி நிமிடம் கவலைக்குரியதாகி விடும்.

 இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸீ ஒரு நிகழ்வை கூறுகிறார்.

ஒருமனிதரிடம் ஒரு பெண்மணி குளியல் அறைக்கு  வழி கேட்டார். அந்தப் பெண்ணின் அழகு அவரை தடுமற வைத்தது. அவர் தனது வீட்டிற்கு வழிகாட்டினார். அந்தப் பெண் வீட்டிற்கு வந்த போது அவளை சீரழிக்க நினைத்தார். அந்தப் பெண் மிக தந்திரமாக தனக்கு பசிக்கிறது உணவு வாங்கி தந்தால் உடன்படுகிறேன் என்று சொன்னாள். உணவு வாங்கச் சென்றவர் திரும்பி வருவதற்குள் அந்தப் பெண் தப்பி ஓடினாள்/ திரும்பி வந்து பார்த்த அவர் குளியல் அறையை கேட்டவள் எங்கே குளியல் அறையை கேட்டவள் எங்கே என்று பிதற்றினார். அவருடைய சகராத்தில் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட போது குளியல் அறையை கேட்டவள் எங்கே என்று கேட்டபடியே மரணித்தார்.

 எனவே பாவங்கள் இறுதி நிமிட்த்தை பாழாக்கி விடும்.

 அந்த கறைய அழிக்கும் சக்தி தொழுகைக்கு இருக்கிறது. எனவே ஜமாத்தாக தொழுவது இறுதி நிமிடத்தை அழகாக்கி வைக்கும்.

 5.   சொர்க்கம் நரகம் பற்றி அதிகமாக சிந்திப்ப்து.

இந்த சிந்தனை சதா உள்ளத்தில் இருக்க வேண்டு. சொர்க்கம் பற்றிய சிந்தனை தொடர்ந்து நன்மைகளை சிந்திக்க வைக்கும். நரகம் பற்றிய சிந்தனை தீமைகளை விட்டு விலக்கி வைக்கும்.

சொர்க்கம் நரகம் பற்றிய தகவல்களை அதிகமாக அறிந்திருக்கிற போது கடைசி நேரத்தில் கலிமா சொல்லும் சிந்தனையை அது தூண்டி விடும்.

 6.   நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்

மக்களில் சிலர் நன்மையின் திறவு கோல்களாகவும் தீமையின் பூட்டுக்களாகவும் இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்/

وفي سنن ابن ماجة بسند حسن من حديث أنس أن النبي صلى الله عليه وسلم قال: (إن من الناس ناساً مفاتيح للخير، مغاليق للشر)    

இத்தகைய மனிதர்களுடன் அதிகமாக சேர்ந்திருப்பது. உரையாடுவது .அவர்களது உரைகளை கேட்பது இறுதி நேரத்தில் கலிமாவை நியாபகப்படுத்தி விடும்.

சில நேரங்களில் அந்த நல்ல மனிதர்களே நினைவில் வந்து கலிமாவை கற்றுத்தந்து விடுவார்கள்

நிலச்சரிவில் உயிரழந்தவர்கள் இஸ்லாமின் கண்ணோட்ட்த்தில் ஷஹீத்களே

 قال رسول الله –صلى الله عليه وسلم: (...الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِيقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ... رواه البخاري ومسلم

 வயநாட்டு நிலச்சரிவில் தப்பித்தவர்களுக்காக நாம் பல வகைகளிலும் உதவிகளை செய்து கொண்டிருக்கிறொம்.

 அவர்கள் நமக்கு செய்கிற உதவி நமது இறுதி நிமிட்த்தில் அவர்களைப் போன்ற கலிமாவின் சிந்தனை நம்மிடம் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும்.

 அல்லாஹ் நமக்கும் நம்மைச் சார்ந்த அனைவருக்கும் அந்த நசீபை வழங்கியருள்வானாக!

 திடீரென்று ஏற்படுகிற மரணங்களிலிருருந்தும் இயற்கை பேரிடர்களிலிருந்தும் உலக மக்களை அல்லாஹ்  காத்தருள்வானாக!

 

9 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அற்புதமான பல அரிய கருத்துக்களை சர்வ சாதாரணமாக சொல்லிக் கடந்து விடுவதும், சாதாரண கருத்துக்களை பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்துவதும் தங்களின் வெள்ளி மேடைக்கு மட்டுமே உரித்தான வலுமிகு சொல்லிற்கு ஒரு சான்றாகும்...

    ReplyDelete
  3. Khaja Muhyidheen Kaleemi Aamiri9:19 PM

    أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ
    என்ற ஆயத்திற்கு வித்தியாசமாக இப்படியும் தஃப்ஸீர் செய்யலாம் என்பதற்கு இந்த பதிவு ஓர் சான்று.
    மாஷா அல்லாஹ்...!

    Jazakallah Hazrath.

    ReplyDelete
  4. Anonymous9:21 PM

    அல்ஹம்துலில்லாஹ்... சிறந்த தொகுப்பு ஹஜ்ரத்...

    ReplyDelete
  5. Anonymous9:32 PM

    மாஷா அல்லாஹ் சூப்பர்

    ReplyDelete
  6. Anonymous11:03 PM

    இன்று போய் நாளை வா ! என்ற ராமாயணம் வாசகம்

    இது தேவையற்ற பதிவு

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு சலாமத்தை தந்தருள்வானாக ஆமீன்

    ReplyDelete
  8. அல்ஹம்துலில்லாஹ் அருமையான குறிப்பு

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்

    ReplyDelete