வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 29, 2024

மேற்குவங்கம் சொல்வதென்ன ?

 மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் ஆர் ஜி கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை இருக்கிறது. பிரபலமான மருத்துவ மனை அது.

அங்கு பயிற்சி மருத்துவராக கல்வி கற்றுக் கொண்டு இரவு நேரத்தில் பணியில் இருந்த மருத்துவ மாணவி ஒருவர் அதிகாலையில் அங்கிருந்த அரங்கு ஒன்றில்  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது,

மருத்துவமனையின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் தன்னார்வலர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவத்தை அடுத்து, அந்த பகுதியின் உதவி காவல்துறை ஆணையர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஷ்தாவையும், அந்தப் பதவியில் இருந்து மாநில அரசு நீக்கியுள்ளது.

 இதுவிசயத்தில் நாடு முழுக்க உள்ள மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் அரசில ஆதாயம் தேடிக் கொள்ள மத்திய்யை ஆளும் பாஜக கட்சி கடுமையாக முயன்று வருகிறது.  ஆகையால் கடந்த இரண்டு வாரங்களாக இது   நாட்டில் தொடர்ந்து பரப்பான

.இது சம்ப்ந்தமான கவலைக்குரிய பல செய்திகளையும் இஸ்லாமின் இது விவகாரத்தில் இன்றும் எவ்வளவு அவசியமாகின்ற என்பதை இன்றைய ஜும்ஆ உரையில் பார்க்க இருக்கிறோம்.

 கொடூரம்.

 அந்த மாணவி, டாகடர் பட்டம் பெற்று, மேற்படிப்புக்காக ஆர் ஜி கர் மருத்துவ மனையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருபவர் அதாவது ஒரு முதுநிலை மருத்துவர். அவருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது

 அவரது பிரேத பரிசோதனை அறிக்கை எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விடக் கூடியது.

 அவர் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டிருக்கிறார்.  அவரது உடலில் சாதாரணமாக ஒரு ஆணினால கற்பழிக்கப்பட்டால் கிடைக்கும் விந்துவின் அளவை விட அதிகப்படியான விந்து கிடைத்துள்ளது. இது அவர் பலரால் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.

 அவருடைய தலை, முகம். கழுத்து. கைகள் .பிறப்பு உறுப்பு 16 க்கும் அதிகமான பெரிய காயங்கள் இருக்கின்றன. இது கற்பழிப்பை தாண்டி அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

 மிக அழுத்தமாக கழுத்தை நெறித்து அவர்  கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால்  நுரையீரலில் இரத்தம் கசிவு  –ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது கண்களில் கூட இரத்தம் கசிந்துள்ளது.

 கழுத்து எலும்பு உடைக்கப்பட்டுள்ளதாகவுக் ஒரு அறிக்கை கூறுகிறது.

 கற்பழிப்பு, கொலை என்பதை தாண்டி நடை பெற்றுள்ள இந்த கோடூரங்கள் மக்களை பெரிய அளவில் கொந்தளிக்க வைத்துள்ளன.

 வேலியே பயிரை மேய்ந்த கதை

 இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த ஒரு தன்னார்வலர். இவரது பணி, ஏறக்குறைய ஊர்க் காவல்படையினரைப் போல பாதுகாப்பு பணிதான்.மருத்துவமனைக்கு வெளியே உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில்தான் இவர் பணிபுரிந்தார்.

 மேகு வங்க மாநிலத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இத்த்கைய தன்னார்வலர்கள் தான் பாதுகாப்பு பணியில் இருக்கின்றன.

 இந்த நிகழ்விற்கு பிறகும் கூட  மேற்கு வங்கத்தின்  வடக்கு பர்தமான் பகுதியில் பணியில் இருந்த காவல்துறை தன்னார்வலர் ஒருவர், மாவட்ட மருத்துவமனையின் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்தி வெளியானது.

ஆர் ஜி கர் மருத்துவ மனையில் நர்சிங் அதிகாரியாக உள்ள சுஷ்மிதா மஜும்தார் ; “காவல்துறையினர் இருக்கிறார்கள், ஆனால் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.என்கிறார்.

இது பெண்களின் பாதுகாப்பின் தரம் எந்த அளவில் உள்ளது என்ற பெரும் கேள்வியை எழுப்புகிறது.

மருத்துவ மனை மட்டுமா

பொதுவாக மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும். அங்கு ஒரு பெண் முதல்வராக இருக்கிறார் என்றாலும்.

 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB- என்சிஆர்பி) அறிக்கையில், மேற்கு வங்கத்தில் 2022ஆம் ஆண்டில் 1111 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 34,738 வழக்குகள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 71.8 சதவீதமாக உள்ளது.

 மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல பொதுவாக நமது நாடு முழுவதிலும் பதிவாகிற வழக்குகளில் சராசரியாக் 65.4 சதவீத வழக்குகள் பெண்களுள் மீதான வன் முறைகள் பற்றியதாகும்.

 

தமிழ் நாடு – சென்னை ரயிலில்…

 

நம்முடைய தமிழ் நாட்டிலும் நிலை மிக திருப்திகரமானது இல்லை. 3 வயது சிறுமி முதல் 60 வயது கிழவி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிற நிகழ்வுகள் இங்கும் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 நான்கு நாட்களுக்கு முன் கடந்த 26ம் தேதி காட்பாடிக்கு அருகில் ரயில் நடை பெற்ற ஒரு கொடுமையை இன்றைய பதிரிகை செய்தி கூறுகிறது.

 கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 26-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு பெட்டியில் பெண் என்ஜினியர் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். அவரை பார்த்துக்கொண்டே வந்த இரண்டு பேர், நடவடிக்கைகளை கண்காணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள், திடீரென என்ஜினியர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று தப்பி ஓடியிருக்கிறார்கள். உடனே பெண் என்ஜினியர் பதற்றம் அடைந்து 2 பேரையும் விரட்டிச்சென்றாராம். கழிவறை அருகே வரும் போது திடீரென பெண் என்ஜினியரை அந்த 2 பேரும் அருகில் இருந்த கழிவறைக்குள் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம். பின்னர் ரயிலில் இருந்து குதித்து இருவரும் தப்பிச் சென்றுவிட்டார்களாம். இதில் நிலைகுலைந்த அந்த பெண், ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தார்.

 படிப்பதற்கும் கேபதற்கும் அச்சப்பட வைக்கிற நிகழ்வுகள் எங்கும் இன்றைய சூழலில் அதிகரித்திருக்கின்றன

 குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.

மேற்கு வங்க குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதில் யாரையும் தப்ப விடக்கூடாது.

குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு நிகரான தண்டனை இரக்கமின்றி பொது வெளியில் வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான்  இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகும்.

மன்னிப்பின் சிகரமான மாநபி (ஸல்) அவர்கள் உரைனா என்ற வழக்கில் அப்படித்தான் கடும் தண்டனையை பெருமானார் வழங்கினார்கள்.

உரைனா என்ற பகுதியை சார்ந்த ஒரு குழுவினர், பெருமானாரிடம் ஆதரவு அனுசரனையும் கேட்டு பெற்றுக் கொண்டு, முஸ்லிம்களின் சதகா மந்தையை கொள்ளை அடித்து அதன் பாதுகாவலர்களை கொடூரமாக கொலை செய்து விட்டு சென்று விட்டனர். அவர்களை பிடித்து வர உத்தரவிட்ட பெருமானார் அவர்களது கண்களை பிடுங்கவும் கை களை வெட்டவும் பாலை வனத்தில் அவர்களை போட்டு விடவும் உத்தரவிட்டார்கள்.

عن قتادة أن أنسا رضي الله عنه حدثهم أن ناسا من عكل وعرينة قدموا المدينة على النبي صلى الله عليه وسلم وتكلموا بالإسلام فقالوا يا نبي الله إنا كنا أهل ضرع ولم نكن أهل ريف واستوخموا المدينة فأمر لهم رسول الله صلى الله عليه وسلم بذود وراع وأمرهم أن يخرجوا فيه فيشربوا من ألبانها وأبوالها فانطلقوا حتى إذا كانوا ناحية الحرة كفروا بعد إسلامهم وقتلوا راعي النبي صلى الله عليه وسلم واستاقوا الذود فبلغ النبي صلى الله عليه وسلم فبعث الطلب في آثارهم فأمر بهم فسمروا أعينهم وقطعوا أيديهم وتركوا في ناحية الحرة حتى ماتوا على حالهم

 குற்றவாளிகள் விவகாரத்தில் இரக்கம் காட்டக் கூடாது அவர்களது குற்றத்திற்கேற்ற தண்டனை வழங்கப்பட வேண்டும் அதுவும் பகிரங்கமாக பொது வெளியில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற திருக்குர் ஆனின் உத்தரவுக்கு ஏற்ப செய்யப்பட்ட தீர்ப்பு இது.  

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ (2)

 فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ

 மேற்கு வங்கத்தில் நடை பெற்றா இந்த கொடூரத்தில் முதலமைச்சர் மம்தா தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என உறுதி அளித்துள்ளார். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் மரண தண்டனைக்கு ஆதரவானவர் அல்ல. இருப்பினும் தேவைப்பட்டால் குற்றவாளி தூக்கிலிடப்படுவார். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரது அரசு கூட இந்த விவகாரத்தில் போராட்டம் வெடித்த பிறகு தான் இத்தகைய வார்த்தகளை பேசுகிறது.

ஆரம்பத்தில் இந்த வழக்கதை மூடி மறைக்க் முயற்சி செய்தார்கள் என்ற குற்றச் சாட்டும் பிரேத பரிசோதன அறிக்கையை வெளியிட தாமதம செய்தார்கள் என்ற குற்றச் சாட்டும் மாநில அரசாங்கத்தின் மீது இருக்கிறது.

எனவே மாநிலத்தின் ஒரு பெண் முதலமைச்சராக தன் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்ப்தற்கு அனைத்து வழக்குகளிலும் கடுமையான தண்டனை கிடைப்பதற்கு ம்ம்தா பானர்ஜி அவர்கள் உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கில் யாரும் தப்பி விடாமல் இருப்பதற்கு அவர் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள மற்ற மருத்துவ மனைகளில் பாதுகாப்பு பணியில் இருக்கிற போலீஸ் தன்னார்வலர்களை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.

பிரேத பரிசோதனை அறிக்கையை தருவதில் காவல்துறை மிகுந்த தயக்கம் காட்டியது விசாரணையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மருத்துவமனை மாணவர் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. அந்த அமைப்பின் தலைவரான மருத்துவர் ஹசன் முஷ்டாக் பிபிசியிடம் பேசுகையில், "மாணவியின் உடலில் பலத்த தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் இருப்பதும், அவர் கொடூரமாக கொல்லப்பட்ட விதத்திலிருந்து இது ஒரு நபரின் செயல் அல்ல என்றும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துவிட்டு, எங்கள் வேலையை முடித்துவிட்டோம் என்று சொல்வது எங்களின் கோபத்தை அதிகரிக்கிறது." என்கிறார்.

இத்தகைய சந்தேகம் பெரும்பாலோரிடம் இருக்கிறது. இதை சந்தேத்த்திடமின்றி தீர்க்கும் பொறூப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது.

மத்திய அரசு  நாடகம் போடக் கூடாது. .

இது விவகாரத்தில் மத்திய பாஜக அரசு பச்சையாக நாடகம் போடுகிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஸ்தம்பிக்க வைக்க அது முயற்சி செய்கிறது.

பாஜக கட்சியினர்  பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவது போல கேலிக்குரிய செய்தி வேறெதுவும் இல்லை.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட்தை கண்டும் காணாமல் இருந்தவர்கள் அவர்கள்.

காஷ்மீரில் சிறுமியை கோயில் வளாகத்தில் வைத்து கொடூரமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை பாராட்டியவர்கள் அவர்கள்.

இந்த வழக்கில் நாடகத்தனமாக அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.

நாடு முழ்வதிலும் பெண்களுக்கு எதிராக நடை பெறுகிற வழக்குகளில் கடுமையான தண்டனைகளை உடனடியாக கடுமையாக வழங்க மத்திய அரசு உண்மையாக முயற்சிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் உத்தர பிரதேசத்தில் பாஜக அரசுக்கு எதிரான போராட்ட்த்தில் இறங்கினார் என்பதற்காக அவரது கோடிக்கணக்கான மதிப்புள்ள வீட்டை சில மணி நேரத்தில் இடித்து தள்ளிவிட்டது உ பி அரசு.

முஸ்லிம்களுக்கு எதிராக காட்டுகிற வேகத்தில் ஒரு 10 சதவீத்த்தையாவது இது போன்ற குற்றவாளிகள் விசயத்தில் மத்திய பாஜக அரசு வெளிப்படுத்த வேண்டும்.

குற்றவாளிகளுக்கு அவர்களது கட்சியில் அடைக்கலம் தருகிற வேலையை நிறுத்த வேண்டும்.

மிக முக்கியமாக மேற்கு வங்கத்தில் நடை பெற்றுள்ள இந்த கொடூரத்தை அரசியலாக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்க கூடாது. .

பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

 பெண்கள் என்னதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் பெரிய பதவியில் இருந்தாலும் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட்தாக கூறப்பட்டாலும் அவர்களது பலவீனமான நிலையை  யாரும் மறந்து விடக் கூடாது.

 ஒரு பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு அவர் சக அதிகாரியுடன் சென்ற போது பாலியல் தொல்லை தரப்பட்ட்தாக ஒரு வழக்கு சமீபத்தில் நமது தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்த்தை அதில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்ட்தையும் நாம் மறந்து விட முடியாது.

 எனவே பெண்களின் நிலை எப்படி இருந்தாலும்  மருத்துவர், அதிகாரி, அறிவியல் ஆய்வாளர் என்ற எந்த பெறுமைக்குரிய அம்சத்திற்கு அப்பாலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள். அவர்களது பாதுகாபில் எந்த ஒரு சிறு சந்தர்ப்பத்திலும் இதில் அலட்சியம் காட்டக் கூடாது.

 அப்படி அலட்சியமாக இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது.

 மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட இந்த சகோதரி – தான் ஒரு பெண் என்பதை நினைவில் வைத்து ஓய்வெடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான இட்த்தை தேர்வு செய்திருந்தால்  இந்த விபத்திலிருந்து அவர் தப்பித்திருக்கல வாய்ப்பிருக்கிறது.

 பெற்றோர்கள் ஒவ்வொருவரும் படிக்கச் செல்கிற , அல்லது பணிக்குச் செல்கிற அல்லது ஷாப்பிங் உள்ளிட்ட வேறு காரணங்களுக்காக வெளியே செல்கிற் தங்களது பெண் பிள்ளைகளுக்கு அவர்களது பாதுகாப்பின் அவசியத்தை கவனமாக நினைவூட்ட வேண்டும்.

 இது சுதந்திரம் சுயமரியாதை என்ற கோஷங்களுக்கு அப்பாற்பட்ட்து என்பதை புரிய வைக்க வேண்டும்.

 இஸ்லாத்தை போல பெண்களின் சுதந்திர்த்திற்கு சுய கவுரவத்திற்கும் மதிப்பதிளித்த சித்தாந்ந்தம் இந்த உலகில் வேறெதுவும் இல்லை.

 அதே இஸ்லாம் தான் அவர்கள் தங்களது பாதுகாப்பு குறித்தும் தொல்லைக்கு ஆளாகமல் இருப்பது குறித்தும் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

 يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (59)

 என்னதான் வானளாவ பெண்கள் வளர்ந்து விட்ட்தாக பேசினாலும் அல்லாஹ்வின் இந்த அறிவுரை இன்றும் அவசியமாகத்தான் இருக்கிறது.

 உடலை மூடுவது மட்டுமா – பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் அனைத்தும் இதற்கு பொருந்தும் – இது வே பர்தாவின் தத்துவமாகும்.

 விலை உயர்ந்த செல்போனை கையில் வைத்திருந்த பெண்ணால் அதை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. செல்போனை பறித்துக் கொண்டு ஓடியவர்கள் அந்தப் பெண்ணை இரயில் டாய்லட்டில் தள்ளி மானபங்கம் செய்து விட்டார்கள் என்பது தங்களது பாதுகாப்பிற்கு பெண்கள் எதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை காட்டுகிறது.

உடுத்துகிற ஆடை ‘,. அணிகிற நகைகள், கையில் வைத்திருக்கிற பொருட்கள் ஒவ்வொன்றிலும் அவர்களது பாதுகாப்பின் கவனம் இருக்க வேண்டும்.

 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கிற பள்ளி கல்லூரிகள் பணியிடங்கள் என பெண்கள் செல்லுமிடங்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

 எங்கோ ஒன்று தான் விபத்தில் முடியும் ஆனால்  அது நமக்கு நடக்காது என்று யாரும் தைரியமாக இருந்து விட முடியாது. \

 மாணவிகளுக்கு - பெண்களுக்கும் ஒரு வேண்டு கோள்

 எவரையும் எந்த இட்த்தையும் சந்தேகப்பட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அவ்வளவு எளிதில் எதையும் பாதுகாப்பானதாக நீங்கள் கருதுவிடக் கூடாது. உங்களது படிப்போ பணி செய்யும் சூழலோ இன்றைய நாகரீகமோ உங்களை பாதுகாத்து விடும் என்று நம்பினால் ஒரு வேளை மோசம் போய்விடுவது நீங்களாகத்தான் இருக்கும்.

 முஹம்மது நபியின் (ஸல்) அவர்களின்  சபையில் உமர் ரலி கூறீய வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை

  قال عمرُ بن الخطابِ -- وقلتُ يا رسولَ اللهِ يدخلُ عليكَ البرُّ والفاجرُ فلو أمرتَ أمهاتِ المؤمنينَ بالحجابِ فأنزل اللهُ آيةَ الحجابِ

உமர் ரலி எந்த இட்த்தில் யார் விசயத்தில் இந்த எச்சரிக்கையை சொல்கிறார் என்பதை கவனியுங்கள்!

 இஸ்லாமின் வேதமான திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் – உலகின் நல்ல மறைகள் கலாச்சாரங்கள் அனைத்தும் 

பெண்களை இழிவு படுத்துபவை அல்ல, இந்த உலகின் இயல்பை அறி ந்து கூடிய வகையில் அவர்களை பாதுகாக்க முயற்சி செய்பவை

 மேற்கு வங்கத்தில் மருத்துவத்தில் முதுகலை படிக்கும் மாணவிக்கு நடந்த நிகழ்வு. தமிழகத்தில் பெண் இஞினியருக்கு ஏற்பட்ட நிகழ்வு, தினசரி பதிரிகைகள் கொண்டு வந்து கொட்டுகிற செய்திகள் பெண்களின் பாதுகாப்பும் இந்தக் காலத்தில் இன்னும் அதிக அச்சத்திற்குரியதாக  இருக்கின்றன.

 வெளியே செல்கிற பெண்கள் மட்டுமல்ல வீட்டிற்குள்ளிருந்து கொண்டு சமூக ஊடகங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிற பெண்களும் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்களின் அதிக கவர்ச்சி மிகு துறையாக இருக்கிற சினிமா துறை – தலைவர்களை தருகிற தொட்டில் என்று தமிழக மக்கள் நம்புகிற சினிமா துறையில்  பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை சமீபத்தில் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. மக்களின் பேரன்பிற்குரிய பல பெரிய நடிகர்கள் மீது இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

 இஸ்லாமின் பர்தா என்கிற கோட்பாடு பெண்மையை பாதுகாக்கிற மாபெரும் கேடமயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அந்த பர்தாவின் அம்சங்கள் எதையும் அவர்கள் அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

 பெண் மருத்துவ படுகொலை விவகாரத்தில் உண்மையான முழு விசாரணை நடை பெற வேண்டும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விரைவில் பொது வெளியில் வழங்கப்பட வேண்டும்.

 இன்றைய சூழலில் எந்த இட்த்திலும் பெண்கள் தங்களது பாதுகாப்பு குறித்து சிறு அலட்சியமும் காட்டக் கூடாது. இதை நமது பெண்களுக்கு நாம் அற்வுறுத்த வெண்டும்

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!  

இது தொடர்பா  சில முந்தைய பதிவுகள்

பெண்களின் பாதுகாப்பே பிரதானமானது.2022

உம்மத்தின் கண்களை காப்போம்! 2022

பெண்களின் பாதுகாப்பு யார் கையில்? 2013

 

 

 

 

 

  

No comments:

Post a Comment