நம்முடைய தமிழ் மாநிலத்தில் 17 வது சட்டமன்ற தேர்தல் வரக்கூடிய 23 ம் தேதி வியாழக்கிழமை நடக்க இருக்கிறது.
நம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்க போகிற இந்த் தேர்தலில் நம்மில் வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.
இதில் நாம் பின்தங்கி விடக்கூடாது.
கடந்த தேர்தலில் நமது மாநிலத்தில் இந்துத்துவ அமைப்புக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிட்ட பகுதிகளில் 70 / 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆனால் சிறுபான்மை இன மக்கள் நிறைந்த பகுதிகளை 50 சதவீத்த்திற்கு குறைவாகவே வாக்குகள் பதிவானதாக அரசியல் கட்சிகள் புள்ளிவிபரத்துடன் தெரிவிக்கிறார்கள்.
இப்போது நாடு இருக்கும் சூழலில் இப்படி வாக்களிக்கும் விகிதம் குறையும் என்றால் தவறான ஆட்களே ஆட்சியை பிடிப்பார்கள்/
ஒரு நாள் நாம் காட்டுகிற சோம்பேறித்தனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கும் ஆபத்தை கொண்டு வந்து சேர்ப்பதாக அமைந்து விடும்.
அது மட்டுமல்ல ஓட்டுப் போடாமல் இருப்பது குற்றமாகும்.
ஓட்டுப்போடுவது ஒரு சாட்சியமளிக்கிற செயலாகும்.
வாக்கு சீட்டில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரது பெயருக்கு நேரே முத்திரை பட்டனை அழுத்து கிற போது இவரை எங்களது பிரதிநிதியாக இருக்க நான் சாட்சியமளிக்கிறேன் என்று செயலால் சாட்சியமளிப்பது ஆகும்.
தேர்தல் கமிஷன் வா வா என்று நம்மை அழைக்கிறது. நாம் வாய்ப்பிருந்தும் ஓட்டு போடாமல் இருக்க கூடாது..
திருக்குர் ஆன் கூறுகிறது.
ولا يأب
الشهداء إذا ما دعوا
وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ
قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
எனவே தேர்தலுக்காக லீவு விடப்படுகிற போது வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம் என்று நினைப்பது இஸ்லாமிய பார்வையில் ஒரு குற்றமாகும்.
தங்களது அடிப்படை கடமையை நிறைவேற்ற
தவறுகிறவர்களிடமிருந்து அல்லாஹ் தன் பொறுப்பை விலக்கிக் கொள்கிறான்.
பெரும்பாலும் பண வசதி படைத்தவர்கள் அதிக கல்வியறிவு பெற்றவர்கள். பெரும் அந்தஸ்தில் இருப்பவர்களே அலட்சியம் காட்டுகிறார்கள். இதுவிவகாரத்தை
திருக்குர் ஆன் தெளிவாக
எச்சரிக்கிறது.
لِلَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمُ الْحُسْنَى
وَالَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا لَهُ لَوْ أَنَّ لَهُمْ مَا فِي الأرْضِ جَمِيعًا
وَمِثْلَهُ مَعَهُ لافْتَدَوْا بِهِ أُولَئِكَ لَهُمْ سُوءُ الْحِسَابِ
وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ) (الرّعد/ 18).
பல
நாடுகளில் குடிமக்கள் தங்களை ஆள்வோரை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருக்கிற போது
ஜனநாயகம் என்ற நிஃமத்தின் அருமையை நாம் உணர்ந்து புரிந்து அதன் படி செயல்பட வேண்டும்.
இந்த கடமையை செய்யத் தவறினால் இதற்காக நாம் பின்னர் விசாரிக்கப்படுவோம் என்று முஹம்ம்து
நபி ஸ்ல் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
يقول النبي (ص): "كلُّ نعيمٍ مسؤولٌ عنه يوم القيامة،
தேர்தல்
நேரத்தில் சரியானவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்க செல்லாமல் இருப்பது தவறான ஆட்கள்
அதிகாரத்திற்கு வர வழி வகுத்து விடும். இது அநீதிக்கு உதவி செய்வதாக அமைந்து விடும்.
பெருமானார்
(ஸல்) எச்சரித்தாரக்ள்
قال رسول الله ﷺ: (من أعان ظالماً بباطل، ليدحض بباطله حقاً،
فقد برئ من ذمة الله عز وجل، وذمة رسوله
எனவே நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் முதியவர்கள் இளைஞர்களை வாக்களிக்க தூண்ட வேண்டும். பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.
யாருக்கு நாம்
வாக்களிப்பது என்பதில் நாம்
குழப்பம் அடையவும் கூடாது,
தற்போதைய சூழலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் மக்கள்
தடுமாறி நிற்க எதுவும் இல்லை.
தேர்தல் களம் தெளிவாகவே இருக்கிறது
நமது நாட்டின்
ஜனநாயக முறை பெரும் ஆபத்தில் இருக்கிறது. மத்தியில்
ஆட்சியில் இருக்கிற கட்சி நாட்டை சர்வாதிகாரப் போக்கிற்கு கொண்டு சென்று
கொண்டிருக்கிறது.
தற்போதைய தேர்தல்
கமிஷனின் தலைவராக இருப்பவரை நீக்க வேண்டும் என்று
சுமார் 130 எம் பிக் கள் கோரிக்கை வைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விவாதிக்கப் பட்டிருந்தால் இந்த தேர்தல் கமிஷனரின் முறைகேடுக என்ன
என்பது பேசப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் ஆளும்
கட்சிக்கு அருதிப் பெரும்பான்மை இருக்கிறது. அதை வைத்து அந்த
தீர்மாணத்தை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியால் தோற்கடித்து விட முடியும் என்றாலும்
எதிர் கட்சி எம் பி க்க்களின் இத்தனை பேரின் கோரிக்கைகளை மத்தியில் ஆளும் கட்சி
குப்பை தொட்டியில் வீசிவிட்டது.
எந்த விதமான அவசர
அவசியமும் இல்லாமல் எஸ் ஐ ஆர் என்கிற தீவிர வாக்களார் சீர்திருத்த்த்தை மேற்கொண்டு
பல மாநிலங்களிலும் தகுதியுள்ள இலட்சக்கணக்கா வாக்காளர்களை தேர்தல் கமிஷன்
நீக்கியுள்ளது. தமிழகத்தில் கோடிக் கணக்கானோர் அவ்வாறு
நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதே போல இப்போது
டிலிமிடேசன் என்ற ஒரு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அமுல் படுத்தி இருக்கிறது.
பல மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்று வருகிற சூழலில் மக்களின் கவனம் வேறு
பக்கம் இருக்கிற சந்தர்ப்பம் பார்த்து மத்திய அரசு இந்த சட்ட திருத்த்தை கொண்டு
வருகிறது. இந்த சட்ட திருத்த்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை
எண்ணிக்கைகு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும். அப்படி பார்க்கிற போது குடும்ப
கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமுல் படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களூக்கு
இப்போது இருக்கிற எம்பிக்களின் எண்ணிக்கையை விட புதிதாக கிடைக்கிற எண்ணிக்கை
குறையும். ஒரு வேளை மத்திய அரசு சொல்வது போல இப்போது இருக்கிற எண்ணிக்கையை சரி
பாதி அதிகமாகும் என்று சொல்லப் பட்டாலும் கூட தமிழகத்திற்கு அதிகப் பட்சமாக 60 எம்
பிக்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே நேரம் உத்திரப் பிரதேசத்திற்கு 120 எம்பிக்கள்
கிடைப்பார்கள். இதன் மூலம் என்ன நடக்கும் என்றால் ? வடமாநிலங்களில் கிடைக்கிற
செல்வாக்கை மட்டுமே வைத்துக் கொண்டு இந்தியாவை ஆட்சி செய்து விட முடியும். தென்
மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும். எனவே இந்த கொடுமையான சட்ட்திருத்தை
எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எதிர்க் கின்றன. தென் மாநிலங்கள் அனைத்தும்
எதிர்க் கின்றன.
இதில் கவனிக்க வேண்டியது.
தென்மாநிலங்களில் தேர்தல் பணிகளில் மக்கள் கவனமாக இருக்கிற போது மத்திய அரசு இந்த
சட்ட திருத்த்தை கொண்டு வருகிறது. ஏன் இவ்வளவு அவசரப் படுகிறீர்கள் என்ற
கேள்விக்கு பதில் இல்லை.
சரவதேச அளவில்
நாட்டின் மரியாதையை சீர்குலைக்கிற வகையில் அமெரிக்காவில் சிறு குழந்தைகள் பாலியல்
குற்றவாளியான எப்ஸீடீனின் பைல்களில் நம்முடைய பிரதமர் மோடியின் பெயர் இடம்
பெற்றுள்ளது. இந்த பைல்களில் இடம் பெற்ற இங்கிலாந்தின்
இளவரசர் பணி நீக்கம் செய்யப் பட்டார். ஆனால் இந்தியாவில் அது
ஒரு சிறு சலனத்தை கூட ஏற்படுத்தாத அளவிற்கு மக்கள் மூளைச் சலைவை
செய்யப்படுகின்றனர்
மத்தியகிழக்கில்
யுத்த மேகம் சூழ்ந்திருக்கிற காலச் சூழலில் நம்முடைய பிரதமர் இஸ்ரேலுக்கு சென்று
இஸ்ரேலை பாதர் நேசன் என்று கூறியது மிகவும் கேலியாக பார்க்கப் படுகிறது.
நாட்டின்
பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்து வருகிறது. வரலாற்றில்
இல்லாத அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டதட்ட 97 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நம்முடைய நாட்டின் விவகாரங்களை
அமெரிக்க அதிபர் தலையிட்டு அவருடைய மாநிலம் பற்றி பேசுவது போல பேசுகிறார். இந்தியா
30 நாளைக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார். இந்தியா
பாகிஸ்தான் சண்டையை நான் தான் நிறுத்தினேன் என்று பல தடவை சொல்லி விட்டார்.
எனவே இந்த தேர்தலில்
நாட்டில் பாஜக இல்லாத அரசாங்கம் என்ற இலக்கை நோக்கி செயல் பட வேண்டியது இன்றைய அத்தியாவசிய
தேவையாக இருக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் எப்படி நாடு முழுக்க வெள்ளைக்காரகளுக்கு
எதிரான மனோ நிலையில் இருந்த்தோ அதே போல இப்போது மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான
மனோ நிலை தேவைப்படுகிறது.
மாநிலத்திலும்
மத்தியிலும் ஒரே சார்பு கட்சி ஆட்சியில் இருந்தால் மாநிலம் சிறப்பாக முன்னேறும்
என்று ஒரு பசப்பு வார்த்தையை சில கட்சிகள் பேசிவருகின்றன.
அது பொய்யான மக்களை
திசை திருப்பும் வார்த்தையாகும்
தமிழக அமைச்சர் பிடி
ஆர் பழனிவேல் ராஜன் மிக அருமையாக இந்த வாத்த்த்தை தவிடு பொடியாக்கி எதார்த்த
சூழ்நிலையை விளக்கி உள்ளார்.
குஜ்ராத்த்தி மத்தியை
ஆளும் கட்சி தான் கடந்த பல வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசாங்கத்தின்
நிதியை இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அளவு அதிகப்படியான நிதியை பெற்றுவருகிறது.
ஆனால் அங்கு
மக்களின் நிலை என்ன ?
குஜராத்தில் பள்ளிப்
படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டின் சதவீத்த்தை விட பாதியளவினரே ஆகும்.
டாக்டர்கள் தமிழகத்தில்
இருப்பதை விட பாதியளவே உள்ளனர்.
வறுமை
கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமிழ்நாட்டை விட ஆறு சதவீதம் அதிகம்
இந்த புள்ளிவிவரங்கள் அச்சம் தரும் வகையில்
மத்தியை ஆளும் கட்சி ஆட்சி செய்கிற மாநிலங்களில் இருக்கின்றன.
பீகார் மாநிலத்தை பற்றி யூடியூபில் இருக்கிற
வீடியோக்க்களை பாருங்கள். மாநிலத்தில் பொதுப் போக்கு வரத்து என்பது எப்போதாவது கிடைக்கும்
ஒரு வசதியாக இருக்கிறது. பீகாரின் தலை நகர் பாட்னாவில் இன்னும் சைக்கிள்
ரிக்ஷாக்களின் ஆதிக்கம் தான் என்பதை அவை புலப்படுத்தும்.
வட நாடு முழுக்க இதே நிலை தான் இருக்கிறது. அதனால்
தான் தமிழ்நாட்டில் பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று வட
மாநிலத்தவர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
இதற்கிடையே அசாம் முதலமைச்சர் “சைக்கிள்
ரிக்ஷாகாரர் முஸ்லிமாக இருந்தால் அவர் 4 ரூபாய் கேட்டால் நீங்கள் இரண்டு ரூபாய்
மட்டும் கொடுங்கள் என்று பகிரங்கமாக வெறுப்பை தூண்டி விடுகிறார், நாட்டின்
அமைதியையும் நல்லிணக்கத்தை தொடர்ந்து அந்த கட்சியை சார்தவர்கள் சீரழித்து
வருகிறார்கள்.
எனவே மதவாத வெறித்தனத்தோடு நாட்டை பின்னோக்கி
இழுத்துச் செல்லும் கட்சியை அதன் கூட்டாளிகளையும் மக்கள் சரியாக அடையாளம் கண்டு
கொள்ள வேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம் சகோதரகள் தனது குடும்பத்தில் வாக்குரிமை
அனைவரையும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், நாட்டின் ஜனநாயகத்தையும் வளர்ச்சியையை
கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.
சினிமா கவர்ச்சியை
மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சிலர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
அவர்களின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணர்வு என்பது மிகவும் கேலிக்குரிய அளவில்
இருக்கிறது.
வாக்காளர்கள்
கவர்சியை தாண்டி எதார்த்த அரசியல் நிலவரத்தை சிந்தித்து வாக்களிப்பதே
புத்திசாலித்தனமாகும்.
அதே போல சில சிலர் இன
வாத கருத்துக்களை புரட்சிகரமாக பேசுவது போல நடிக்கின்றனர். ஒரு எதார்தத்தில்
அவரக்ளது அரசியல் ஈடுபாடு என்பது குழுப்பமானதாகவும் இளைஞர்களை பேச்சுக்
கவர்ச்சிக்கு ஆட்படுத்துவதாகவுமே இருக்கிறது இவர்கள் முன்னோடிகளாக யாரை காட்டுகிறார்களோ
அவர்கள் சமூகத்தை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டவர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.
புதிய முயற்சிகள்
ஆதரிக்கப்பட வேண்டியவைதான் ஆனால் அவை தகுதியானதாக தரமுள்ளதாக இருக்க வேண்டும்.
இளைய சமுதாயமும்
வாக்காளர்களும் இதுவிவகாரத்தை சரியாக சிந்தித்து இந்திய நாட்டையும் தமிழ்
மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய தற்போதைய சூழலை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். எந்த
சூழலிலும் வாக்குகள் சிதறி தவறானவர்கள் வெற்றி பெற வாய்ப்பளித்து விடக் கூடாது. .
நிறைவாக நாம் வாக்களித்து ஒரு கட்சி வெற்று பெறுகிறது என்றாலும்
அது நல்லாட்சி தருவது எல்லாம் வல்ல இறைவனின் கையிலேயே இருக்கிறது என்பது நமது அழுத்தமான
நம்பிக்கை எனவே
நாம் அல்லாஹ்விடம் முறையிடுவோம்.
قلَّما
كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ يقومُ من مَجلسٍ حتَّى يدعوَ
بِهَؤلاءِ الكلِماتِ لأصحابِهِ : اللَّهمَّ اقسِم لَنا من خشيتِكَ ما يَحولُ
بينَنا وبينَ معاصيكَ ، ومن طاعتِكَ ما تبلِّغُنا بِهِ جنَّتَكَ ، ومنَ اليقينِ ما
تُهَوِّنُ بِهِ علَينا مُصيباتِ الدُّنيا ، ومتِّعنا بأسماعِنا وأبصارِنا وقوَّتنا
ما أحييتَنا ، واجعَلهُ الوارثَ منَّا ، واجعَل ثأرَنا على من ظلمَنا ، وانصُرنا
علَى من عادانا ، ولا تجعَل مُصيبتَنا في دينِنا ، ولا تجعلِ الدُّنيا أَكْبرَ
همِّنا ولا مبلغَ عِلمِنا ، ولا تسلِّط علَينا مَن لا يرحَمُنا
الراوي
: عبدالله
بن | المصدر
: صحيح
الترمذي
இது பெருமானாரின் அன்றாட
பிரார்த்தனை என்பதை அறிய முடிகிறது. தவறான ஆட்சியாளர்கள் வந்து விடக் கூடாது என்பதில்
ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பிரார்த்தனையில் சேர்த்திருந்தார்கள்.
நாமும் தொடர்ந்து அல்லாஹ்விடம்
பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்.