மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை, குறைத்து, முன்னதாகவே விடுதலை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கும் என, செப்., 13ல் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள், செப்., 15ல் கொண்டாடப்பட்டது. சுமார் ஒரு மாதம் கழித்து இப்போது 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தவதற்கான அரசானை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசானையில்
பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை,கடத்தல். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த சாராயம் விற்றல், வனம் தொடர்பான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஜாதி மற்றும் மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் போன்றோர், முன்னதாக விடுதலை செய்ய தகுதியற்றவர்கள் என்றும் அதேபோல, ஊழல் ஒழிப்பு சட்டம், போதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், இதர வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் போன்றோருக்கும், முன்னதாக விடுதலை அளிக்கக் கூடாது என்றும் அந்த அரசானை கூறுகிறது.
இந்த அரசானையின் படி கோவை மத்திய சிறையில், 20 ஆண்டு கள் தண்டனை காலம் கடந்த 132 கைதிகள் உள்ளனர். 'இவர்கள் விடுதலை செய்யப்பட்டால், இவர்களால் யாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது என கருதப்படும் 99 கைதிகள், விடுதலைக்கு தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை அரசு உத்தரவுப்படி, விடுதலை செய்வதற்கான பணி நடக்கிறது' என்று கோவை சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் இன்னொரு செய்தியும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வெளியே வந்தால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் விடுதலை என்பதே அது.
அரசு ஆணையின் இந்த விதிகள் சரியானது தானா என்ற ஒரு பெரிய விவாவதம் தற்பொது எழுந்துள்ளது.
இதில் ஜாதி மத
மோதலில் ஈடுபட்டவர்கள் என்ற வார்த்தை திட்டமிட்டு முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளின்
விடுதலையை தடுத்து விட்டது. என்ற குற்றச்சாட்டு அழுத்தமாக முன் வைக்கப்படுகிறது. மாநில
அரசு தமிழகத்திலுள்ள இந்துத்துவ சக்திகளின் அழுத்த்த்தில் அல்லது அவர்கலை திருப்திப்
படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பது முஸ்லிம்களின் குற்றச்சாட்டு ஆகும்.
சிறைக்கைதிகளில்
திருந்தி வாழ்கிறவர்களுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் சுதந்திர வாழ்வை அனுபவிக்க
விடுவது தான் ஒரு சிறந்த அரசாங்கத்தின் இயல்பாகும்.
பத்று யுத்தத்தின்
கைதிகள் விசயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களை விடுதலை செய்வது என்ற முடிவையே
எடுத்தார்கள்.
أسر المسلمون في غزوة بدر سبعين أسيرًا،
جمع النبي صحابته، وبدأ
يسألهم ويستشيرهم في أمر الأسرى.
فقال المستشار الأول لرسول الله
(أبو بكر الصديق) : "يا رسول الله، هؤلاء بنو العم والعشيرة والإخوان،
وإني أرى أن تأخذ منهم الفدية، فيكون ما أخذناه قوة لنا على الكفار، وعسى أن
يهديهم الله فيكونوا لنا عضدًا".
فقال عمر بن الخطاب
والله ما أرى ما رأى أبو بكر، ولكن أرى أن تمكِّنني
من فلان -وذكر قريبًا له- فأضرب عنقه، وتمكن عليًّا من عقيل بن أبي طالب -أخيه-
فيضرب عنقه، وتمكن حمزة من فلان أخيه فيضرب عنقه، حتى يعلم الله أنه ليست في
قلوبنا هوادة للمشركين، وهؤلاء صناديدهم وأئمتهم وقادتهم.
பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் யோசனையின் படி கைதிகளை விடுதலை செய்தார்கள். ஆனால் பணயத்தொகை பெற்றுக் கொண்டு கைதிகளை விடுதலை செய்தார்கள். அவர்கள் உயிர்பிழைக்கட்டும் என்ற பெருந்தன்மை தான் அதற்கு காரணம்.
அப்படி பணம் வசூலிக்கும் போது சிலரிடம் கறாராக வசூலித்தார்கள்.
பெருமானாரின் பெரிய தந்தை அப்பாஸ் ரலியிடம் தண்டத் தொகை வசூலிக்கப் பட்ட வரலாறு குறிப்பிட்த்தக்கது.
من أروع الأمثلة التي تُذكر في أمر الفداء، ما دار بين رسول الله والعباس بن عبد المطلب عم رسول الله ، وقد كان
أسيرًا في يوم بدر، وكان قد خرج مُستكرَهًا إلى بدر، وقاتل مع المشركين، وأُسِر مع
من أُسر، وكان رجلاً غنيًّا، وسوف يدفع فدية ليفتدي نفسه، ودار بينه وبين رسول
الله هذا الحوار الرائع، الذي ينقل درجةً
من أرقى الدرجات في قيادة الدول، فلا يوجد أيُّ نوع من الوساطة أو المحاباة لأحد
من الأقارب أو الأهل أو العشيرة.
قال العباس: "يا رسول الله، قد كنت مسلمًا". أي أنه كان
يُخفِي إسلامه، ومن ثَمَّ فلا يدفع الفداء.
فقال رسول الله r: "اللَّهُ أَعْلَمُ بِإِسْلاَمِكَ، فَإِنْ
يَكُنْ كَمَا تَقُولُ فَإِنَّ اللَّهَ يَجْزِيكَ، وَأَمَّا ظَاهِرُكَ فَقَدْ كَانَ
عَلَيْنَا؛ فَافْتَدِ نَفْسَكَ، وَابْنَيْ أَخَوَيْكَ نَوْفَلَ بْنَ الْحَارِثِ
بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، وَعَقِيلَ بْنَ أَبِي طَالِبِ بْنِ عَبْدِ
الْمُطَّلِبِ، وَحَلِيفَكَ عُتْبَةَ بْنَ عَمْرٍو".
فقال العباس: ما ذاك عندي يا رسول الله.
فقال r: "فَأَيْنَ الْمَالَ الَّذِي دَفَنْتَهُ
أَنْتَ وَأُمُّ الْفَضْلِ، فَقُلْتَ لَهَا: إِنْ أُصِبْتُ فِي سَفَرِي هَذَا،
فَهَذَا الْمَالُ الَّذِي دَفَنْتُهُ لِبَنَيَّ: الْفَضْلِ وَعَبْدِ اللَّهِ
وَقُثَمٍ".
فقال العباس: "والله يا رسول الله، إني لأعلم أنك رسول الله؛ إن
هذا لشيء ما علمه أحد غيري وغير أم الفضل، فاحسب لي ما أصبتم مني: عشرين أوقية من
مال كان معي".
فقال رسول الله "ذَاكَ
شَيْءٌ أَعْطَانَا اللَّهُ تَعَالَى مِنْكَ". وأنزل الله: {يَا أَيُّهَا
النَّبِيُّ قُلْ لِمَنْ فِي أَيْدِيكُمْ مِنَ الأَسْرَى إِنْ يَعْلَمِ اللهُ فِي
قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِمَّا أُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَكُمْ
وَاللهُ غَفُورٌ رَحِيمٌ} [الأنفال: 70].
அப்பாஸ் ரலி தனக்காகவும் தனது மகனகளுக்காகவும் ஒரு வருக்கு 4 ஆயிரம் திர்ஹம் என்ற விகிதத்தில் பணம் செலுத்தி விடுதலை பெற்றார். அன்சாரி சஹாபிகளில் சிலர் அப்பாஸ் ரலி அவர்களுக்காக பரிந்து பேசிய போது கூட பெருமானார் அதை ஏற்றுக் கொள்ள வில்லை.
இன்னும் சில ஏழை
கைதிகளை தண்டத்தொகை இல்லாமலே விடுதலை செய்தார்கள்.
وقد منَّ النبي
على بعض الأسرى بغير فداء، وأطلقهم هكذا دون أن يأخذ منهم شيئًا، ومنهم أبو عزة الجمحي
وكان رجلاً فقيرًا، وقال للرسول قد عرفت ما لي من مال، وإني لذو حاجة وذو عيال، فامنن
عليَّ". فمنَّ عليه
கைதிகளில் எழுத்தறிவு
பெற்றிருந்த சிலரை ஒருவர் பத்து சிறுவர்களுக்கு எழுத்தறிவை கற்பிக்க வேண்டும் என்ற
நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தார்கள்.
சிறைக்கதைதிகளிடமிருந்து
இது மாதிரியான நற்செயல்களை எதிர்பார்த்து அதண்டிப்படையில் விடுதலை செய்வது சிறப்பான
காரியமாகும்.
அதே நேரத்தில்
சில கைதிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்று தெரியவருகிற போது ஒரு கடும்
தண்டைனையாக அவர்களுக்கு மரண தண்டனையும் பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
பத்றில் கைது செய்யப்பட்ட
70 பேரில் 2 பேருக்கு மரண தண்டனை
قَتَلَ النبي أسيرين هما: عقبة بن أبي مُعَيْط، والنضر بن الحارث؛ لأنهما كانا من أكابر مجرمي قريش،
ஒரு அரசு குற்றங்களை தடுப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் குற்றவாளிகளுக்கு திருந்த வாய்ப்பளிப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
இதுவிசயத்தில் நீதியும் சமூக அக்கறையும் முக்கியமானது .
முஸ்லிம்களின்
பெருவாரியான ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிற அரசிடம் தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது
இதை தான்.
அரசு யாரை விடுதல்ல
செய்வது சரி என்று நினைக்கிறதோ அவர்களை விடுதலை செய்யட்டும்.
விடுதலை பெற்றவர்கள்
நிம்மதியன ஒரு நல்ல வாழ்வை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அதே நேரத்தில்
அரசு விதித்திருக்கும் நிபந்தனைகள் சரியானது தானா நீதியானது தானா என ஒரு முறை யோசிக்கட்டும்.
முன்னாள் பாரதப்பிரதமர்
ராஜீவ் காந்தி படுகொலை என்பது இந்த நாட்டில் நடை பெற்ற எந்த பெரிய குற்றச்செயல்களையும்
விட குறைந்தது அல்ல. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் மரியாதையை சர்வதேச அளவில்
தலை குனிய வைத்த விவகாரம் அது. அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்
பட வேண்டும் என்று அரசு வாதிட்டுக் கொண்டிருக்கிறது. ஆளுநர்கள் முடிவெடுக்க கால நிர்ணயம்
செய்ய வேண்டும் என்று நமது சட்டமன்ற சபாநாயகர் தில்லியில் நடை பெற்ற மாநாட்டில் பேசினார்.
இந்த விவகாரத்தை மனதில் வைத்தே அவர் பேசினார். அந்த 7 பேரின் விடுதலை என்பது தமிழகத்திலுள்ள
அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.
நமது நாட்டில்
மத மோதல்களை குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட
பிரக்யா சிங் அசீமானந்தா போன்றோர் விடுதலை
செய்யப்பட்டார்கள் என்பதையும் அரசு ஒப்பிட்டு பார்க்கட்டும்.
பிரக்யாசிங்க்
2008 ம் ஆண்டு நடைபெற்ற மாலேகான்
குண்டு வெடிப்பு வழக்கில் நேரடி குற்றவாளி என
நிரூபிக்கப் பட்டார். அந்த
குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். 82 பே
காயமடைந்தனர். குண்டு வெடிக்க பயன்பட்ட
பிரக்யாசிங்க் பயன்படுத்திய அவரது பைக் பிரதான
சாட்சியாக அமைந்தது. 2017 ம் ஆண்டு என்
ஐ ஏ அமைப்பு
அவர் மீதான சில கடுமையான
குற்றச்சாட்டுக்களை தளர்த்தியது அதன் காரணமாக அவர்
விடுதலை செய்யப்பட்டு இப்போது போப்பால் தொகுதி
எம்
பி யாக இருக்கிறார். அது
மட்டுமல்ல. 2019 ம் ஆண்டு இந்திய
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார்.
2007 ம் ஆண்டு நடைபெற்ற அஜ்மீர் தர்கா மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புவழக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட அசீமானந்தா. அந்த குற்றங்களை தான் செய்த்தாக ஒப்புக் கொண்டவர் அவரை குற்றம் நிரூபிக்கப் பட வில்லை என்று கூறி 2019 ம் ஆண்டு என் ஐ ஏ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த்து.
நாட்டில் குற்றவாளிகள் விவகாரத்தில் எத்தகைய அத்துமீறல்கள் அநீதிகள் நடக்கிறது என்பதை ஆளும் அரசுக்கு தெரியாத்து அல்ல.
தமிழகத்திலும்
கூட முன்பு ஒரு தடவை இதே போல மதுரை மார்க்சிஸ்ட கவுன்சிலர் லீலாவதி திமுக வினர் சிலரால்
படுகொலை செய்யப் பட்ட போது அந்த குற்றவாளிகள் காலம் வருவதற்கு முன்பே அண்ணா பிறந்த
நாளில் விடுதலை செய்யப் பட்டார்கள் என்ற தகவலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்.
எனவே ஒரு நீண்ட கால கோரிக்கையாக இருக்கிற முஸ்லிம் சிறைக்கைதிகளீல் தகுதியானவர்களை விடுதலை செய்ய திமுக அரசு அக்கறை காட்ட வேண்டும். இதில் மாண்புமிகு முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
எல்லா இட்த்திலும் சட்டம் மிகச் சரியாகவே வேலை செய்கிறது என்று சொல்லி அவர் முஸ்லிம் சமூகத்தை ஏமாளியாக்க கூடாது.
நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் படித்த பள்ளிக்கூட்த்தின் முதல்வருக்கு 10 நாட்களுக்குள்ளாக எப்படி ஜாமீன் கிடைத்தது. ?
எனவே முஸ்லிம் சமூகத்தின் மீதான ஒரு பெரும் கறையாக ஒரு காலகட்ட்த்தில் நடந்த நிகழ்வுகள் அமைந்து விட்டன. அதற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் மிகப் பொருமையாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு நீண்ட காலமாக சிறையிலிருக்கிற முஸ்லிம் என்பதற்காகவே விடுதலை செய்யப்படாமல் இருக்கிற சிறைக்கைதிகள் விவகாரத்தில் தமிழக முதல்வர் துணிந்து ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் அவர்களில் அதிக உடல்நலக்குறைவுக்கு ஆளானவர்களையாவது இந்த ஆண்டே விடுதலை செய்ய வேண்டும்.
முஸ்லிம் சமூகமும் இன்றைய எதார்த்த சூழ்நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது பொறுப்பேற்றிருக்கிற அரசை இந்த ஒரு காரணத்தை வைத்தே முழுமையாக பகைத்துக் கொள்ள முடியாது.
முஸ்லிம்
கைதிகள் விடுதலையில் அரசிடமிருந்து நயமான ஒரு நடவடிக்கையை பெருவதற்கு தொடர்ந்து மாற்று
வழிமுறைகள் கையாளப்பட வேண்டும்.
No comments:
Post a Comment