வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 09, 2021

விபத்துக்கள் தரும் செய்திகள்

 எல்லா வகையான அறிவுத்திறன், தொழில் நுட்ப வளர்ச்சி பாதுகாப்பு உத்திகள் அனைத்தையும் திகைக்க வைக்கிற ஒரு நிகழ்வு

மரணம். அதுவும் திடீர் மரணங்கள்.

இந்திய கூட்டுப்படைகளின் தளபதி பிபின் ராவத் நேற்றைய முன் தினம் குன்னூரில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட 11 அதிகாரிகளும் நிமிடச சருக்கில் அடையாளம் கூட கண்டு பிடிக்க முடியாத அளவில் மிக மோசமாக பலியாகிவிட்டனர். உயர் பாதுகாப்பில் இருந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனார்கள்.

ஜனாதிபதிக்கு அடுத்த நிலையிலிருக்கும் ஒரு அதிகாரி எதிர்பாராத ஒரு கணத்தில் இப்படி அதிர்ச்சிகரமாக மரணமடைந்திருப்பது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலை தில்லியிலிருந்து கோவைக்கு வந்து அங்கிருந்து அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட்ருந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வெளிங்டன் அருகே 3 கீ மீ தொலைவில் தேடி வந்த இலைக்கை எட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவருடைய இறப்பு சம்பவித்திருக்கிறது.

தரமான அதிக சக்தி மிக்க ஹெலிகாப்டரில் தகுதியான மூன்று விமானிகள் இருந்தும் பெரும்பாலோர் இறக்க நேரிட்டுவிட்டது.

பிபின் ராவத் தனது மரணத்தை தேடி தில்லியிலிருந்து பயணம் செய்து வந்தது போல இருக்கிறது. அவரது வருகையைப் பற்றிய விளம்பரங்கள் எதுவும் பிரதானமாக இருக்கவில்லை. ஏன் அவர் இறந்த பிற்கு தான் அவர் தமிழகத்திற்கு வந்திருக்கிறார் என்ற செய்தியே உலகிற்கு தெரிந்தது.  என்னென்ன இரக்சியங்கள் நாட்டில் நடக்கின்றனவோ என்று மக்களில் சிலர் இதனால் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திருக்குர் ஆன் கூறுகிறது.

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكُّمْ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

நமது ஒவ்வொரு ஓட்டமும் மரணத்தை தேடி ஓடுவதாக இருக்கலாம்.

القصة ذكرها ابن أبي شيبة في المصنف، والثعلبي في تفسيره، وأحمد في الزهد، 

ذُكر أن وزيراً جليل القدر كان عند داود عليه السلام، فلما مات داود صار وزيراً عند سليمان بن داود، فكان سليمان عليه السلام يوماً جالساً في مجلسه في الضحى وعنده هذا الوزير فدخل عليه رجل فسلّم عليه وجعل هذا الرجل يحادث سليمان ويحدّ النظر إلى هذا الوزير ففزع الوزير منه، فلما خرج الرجل قام الوزير وسأل سليمان وقال: يا نبي الله! من هذا الرجل الذي خرج من عندك؟ قد والله أفزعني منظره؟ فقال سليمان: هذا ملك الموت يتصور بصورة رجل ويدخل عليَّ، ففزع الوزير وبكى وقال: يا نبي الله أسألك بالله أن تأمر الريح فتحملني إلى أبعد مكان إلى الهند، فأمر سليمان الريح فحملته، فلما كان من الغد دخل ملك الموت على سليمان يسلم عليه كما كان يفعل، فقال له سليمان: قد أفزعت صاحبي بالأمس فلماذا كنت تحد النظر إليه، فقال ملك الموت: يا نبي الله إني دخلت عليك في الضحى وقد أمرني الله أن أقبض روحه بعد الظهر في الهند فعجبت أنه عندك، قال سليمان: فماذا فعلت؟ فقال ملك الموت: ذهبت إلى المكان الذي أمرني بقبض روحه فيه فوجدته ينتظرني، فقبضت روحه؟

மிகச்சிலருக்கு சரியான மரண வேளை அமைகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது மரண வேளை

பல் விளக்கியபிறகு ஆயிஷா அம்மாவின் மடியில் உயிர் பிரிந்தது.

 

ஜுனைதுல் பக்தாதியின் மரண வேளை

 

وقال ابن عطاء: "دخلت عليه، وهو في النزع، فسلمت عليه، فلم يرد، ثم رد بعد ساعة، وقال: "اعذرني! فإني كنت في وردي"، ثم حول وجهه إلي القبلة ومات".

மரண வேளை சிலருக்கு சோதனையாக அமைகிறது.

 

உலகின் மிகப்பெரிய வீரனாகவும் புரட்சியாளனாகவும் கதாநாயகனாகவும் அறியப்பட்ட நெப்போலியன  போனபர் செயிண்ட் ஹலீனா தீவில் தனிமைச் சிறையில் மாண்டான். ஜோஸபைன் என்ற அவனுடைய முன்னாள் மனைவியின் பெயரையும் பிரான்ஸ் என்ற தன்னுடைய நாட்டின் பெயரையும் உச்சரித்தபடியே மாண்டான் என்று சொல்லுகிற வரலாறு நெப்போலியனின் வாழ்க்கையை அவலச் சுவையானதாக மாற்றிவிடுகிறது

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வந்து மரணம் நேர்வதை விரும்புவார்கள்

 

عن أبي أمامة رضي الله عنه، قال: كان النبي -صلى الله عليه وسلم- يتعوّذ من موت الفجأة، وكان يعجبه أن يمرض قبل أن يموت. رواه الطبراني في معجمه الكبير

 

நோய் வந்து மரணம் நேரும் போது தவ்பாவுக்கு வாய்ப்புக்கிடைக்கும். மரணத்தை அவரும் மற்றவர்களும் எதிர் கொள்ளும் மனோநிலையும் உருவாகும்.

 

ஆனால் இது மனிதனின் சக்திக்கு உட்பட்ட விசயமல்ல, இறைவனின் நாட்டம் மட்டுமே தொடர்பான காரியம்.

 

அல்லாஹ் ஒரு சர்வாதிகார அரசனைப் போல நம்முடைய குற்றங்களுக்கு உடனடியாக தண்டனைகள் தந்து விடுவதில்லை.

 

நமது விருப்ப்படி நடக்க நம்மை அவன் அனுமதிக்கிறான். அவன் நிர்ணயித்திருக்கிற ஒரு தவனை வரை. அந்த தவனை வந்து சேருகிற போது நொடியும் சமயம் தராமல் கோப்பில் ஒரு கையெழுத்துப் போட மனைவியிடம் ஒரு ரகசியத்தை சொல்ல மக்களிடம் ஒரு வார்த்தை பேசிக் கொள்ள ஒரு போன் நம்பரின் கடைசி எண்ணைச் சொல்ல எதற்கும்

வாய்ப்புக் கிடைக்காது. அல்லாஹ்வின் நிர்ணயம் தப்புவதில்லை.

 

மரணம் என்பது அவன நிர்ணயித்த நேரத்திலேயே வருகிறது. அதனால் அகால மரணம் என்பது இல்லை.

 

ஷரஹு பிக்ஹுல் அக்பர் முல்லா அலி காரி கூறுகிறார் (ரஹ்)

(பக்கம் 152.)

அகால் மரணம் என்று கூறக் கூடாது

 

காலமாகிவிட்டார்என்றால் அவரது 'ரிஸ்க்முடிந்து அவருக்காக நிர்ணயிக்கப்பட்ட காலம் நிறைவாகி இறந்து விட்டார் என்பது பொருள்.அகால மரணமாகிவிட்டார் என்றால் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்(ரிஜ்க்) முடிவடைவதற்கு முன்பே இறந்து விட்டார் என்பது பொருள். இது குர்ஆனுக்கும்ஒரு முஃமீன் நம்ப வேண்டியதற்கும் முற்ற முற்ற முரணாகும். கொலை செய்யப்பட்டு மரணித்தவர் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்அவரது மௌத்துடன் முடிந்தபின்புதான் மரணிக்கிறார். அவர்களது காலம் வந்துவிட்டால் ஒரு மணிநேரம் முந்தவோ மாட்டாது என அல்லாஹு தஆலா கூறுகின்றான்

 

மரணம் யாருக்கும் அகாலமாக வருவதில்லை. அவசரமாகவும் வருவதில்லை

 

حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمْ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ

 

ஒருவருக்கான காலம் முடிகிற போது மரணத்திடமிருந்து  தப்ப முடியுமா பெருமானார் (ஸல்) சொன்ன உதாரணம்  ) இப்னு கஸீர் )

 

عن سمرة قال: قال رسول الله صلى الله عليه وسلم "مثل الذي يفر من الموت مثل الثعلب تطلبه الأرض بدين فجاء يسعى حتى إذا أعيا وأسهر دخل جحره وقالت له الأرض يا ثعلب ديني فخرج وله حصاص فلم يزل كذلك حتى تقطعت عنقه ومات"

 

ஒரு குள்ளநரி பூமியிடம் கடன் வாங்கியிருந்த்து, பூமி க்டனை திருப்பிக் கேட்ட்தும் ஓட்டம் பிடித்த்து. களைத்து ஓயந்து பொந்துக்கு வந்த போது பூமி கேட்ட்து என்னுடை கடனை திருப்பிக் கொடு என்று கேட்ட்து. குள்ள நரி ஓடியது .. கடைசியில் கழுத்து முறிந்து இறந்தது. பூமியிடமிருந்து தப்பி நரி எங்கே ஓடிவிட முடியும்?

 

எத்தகைய சிறந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும்  நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில் மரணம் வந்தே தீரும்

 

சுலைமான் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மரணம் ஏற்பட்டது, .

 

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتْ الْجِنُّ أَنْ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ(14)

 

 

நமக்கான் நேரம் தீர்மாணிக்கப்பட்டிருக்கிறது, அது எப்போது என்று நமக்கு தெரியாது. எப்போதும் நிகழலாம்.

 

ஆகையால் மரணம் என்பது விரும்ப படக் கூடிய ஒன்றல்ல தான் என்றாலும்.அது வரும் போது அச்சப்படக் கூடாது.

 

عن عائشة رضي الله عنها أنها قالت: قال رسول الله ﷺمن أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه فقلت: يا نبي الله: أكراهية الموت فكلنا نكره الموت، قالليس كذلك؛ ولكن المؤمن إذا بشر برحمة الله ورضوانه وجنته، أحب لقاء الله فأحب الله لقاءه، وإن الكافر إذا بشر بعذاب الله وسخطه كره لقاء الله فكره الله لقاءه متفق عليه،

 

ஆனால் அந்த மரணம் திடீரென்று ஏற்பட்டு விடாமல் இருக்க நாம் பிரார்த்திக்கலாம்.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ مَوْتِ الْفَجْأَةِ وَمِنْ لَدْغِ الْحَيَّةِ وَمِنْ السَّبُعِ وَمِنْ الْحَرَقِ وَمِنْ الْغَرَقِ وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ وَمِنْ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ  - احمد – 6306

 

حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ عَمَّنْ سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ يَقُولُ سَمِعْتُ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ

 

ஆபத்துக்களையும் விபத்துக்களை நாமே தேடிச் செல்லாமல் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் விபத்து நேராலாம் என்ற எச்சரிக்கை எப்போதும் இருந்தால் விபத்துக்களை தவிர்க்க முடியும்,.

காற்றடித்தாலே பெருமானார் (ஸல்) அவர்கள் பயப்படுவார்கள்.

فعن أم المؤمنين عائشة رضي الله عنها قالت: وكان إذا رأى غيماً أو ريحاً عُرِف ذلك فى وجهه. فقالت: يا رسول الله، أرى الناس إذا رأوا الغيم فرحوا، رجاء أن يكون فيه المطر، وأراك إذا رأيتَه، عرَفْتُ فى وجهك الكراهية؟ قالت: فقاليا عائشة! ما يؤمننى أن يكون فيه عذاب، قد عُذِّب قوم بالريح، وقد رأى قوم العذاب فقالوا: {هذا عارِضٌ مُمْطِرُنا}(الأحقاف: 24)) رواه مسلم.

எதிலும் ஒரு எச்சரிக்கையை கடைபிடிக்குமாறு சொன்னதாகவே இதற்கு பொருள் கொள்ள வேண்டும்.

 

நேற்றைய முன் தினம் குன்னூரின் சீதோஷ்ண நிலையை சரியாக கவனிக்க தவறிவிட்டார்கள். அது வும் ஹெலிகாப்டர் விபத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

வெளிங்க்டனுக்கு முன்னதாக ஒரு பள்ளத்தாக்கில் தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர் கொஞ்சம் உயர்ந்து ஒரு சிகரத்தை தாண்டினால் வெளிங்க்டன் விமானப்படை தளத்தில் தரை இறங்கியிருக்கலாம். இந்த விமானியால் பள்ளத்தாக்கில் அழுத்திய மேக மூட்டத்தால் ஹெலிகாப்டரை உயர்த்த முடியவில்லை .

விபத்து நிகழ்ந்து விட்டது.

வாகனங்களில் விரைகிற போது கவனத்தில் வைக்க வேண்டும். ஒரு சிறு ஸ்ட்ரக் . காற்றில் பறந்து வந்து கார் கண்ணாடியை மூடுகிற ஒரு துணி-  விபத்தை ஏற்படுத்தி விடலாம். ஒரு சிறு கால்குலேசன் மிஸ்டேக். கார் அல்லது பைக்கின் டையர் சருகுதல் அல்லது  வெடித்தல் பெரிய விபத்தை ஏற்படுத்தி விடலாம். .

எனவே அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கைகொள்ள வேண்டும்.

நமது இளைஞர்கள் டூவீலரில் விரைகிறார்கள். கார்களில் பறக்கிறார்கள். எப்போதும் விபத்து நிகழ்வதில்லை என்ற தைரியம்

ஆனால் எல்லா நேரமும் அப்படி இருக்காது.

அதே போல் விபத்துக்களை தவிர்க்க மற்றொரு வழி, ஆபத்தான பயண வழிமுறைகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குன்னூரில் அதுவும் குறிப்பாக கட்டேரி வனப் பகுதியில் மேகமூட்டம் அடிக்கடி மாறும் என்ற சூழலில் தரை வழியாக பயணத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

பயணத்திற்கு பாதுகாப்பான சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பது முக்கியம் அவசரப்படுவதை விட.

ஆகாய மார்க்கத்தை விட தரை மார்க்கம் சிறந்த்து. கார் பயணத்தை விட ரயில் பயணம் ஆபத்து குறைந்தது. நீண்ட தூரங்கள் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை விட பஸ் பயணம் சிறந்தது. என்பது போன்று பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.  

பயணத்தின் போது பெருமானார் கற்றுத்தந்தந்த அற்புதமான துஆ

الله أكبر، الله أكبر، الله أكبر، سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ، اللهم إنا نسألُكَ في سفرنا هذا البرَّ والتقوى، ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واطو عنا بعده، اللهم أنت الصاحب في السفر، والخليفة في الأهل، اللهم إني أعوذ بك من وعْثاءِ السفر، وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل     

அல்லாஹ் நம் அனைவரது பயணங்களையும் இலேசாக்கி பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக!

குன்னூர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தகுந்த ஆறுதலை தந்தருள்வானாக

இதுமாதிரியான எந்த வித விபத்துக்களை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!

 

 

 

1 comment:

  1. محمد إلياس البلالي7:59 PM

    ما شاء الله

    ReplyDelete