தத்துவ உலகில் ஒரு விஞ்ஞானி என்று புகழ் பெற்ற டாக்டர் வால்டர் ஆடம்ஸ் ஒரு வினோதமான நிகழ்வை கூறுகிறார்.
ஒரு வேட்டைக்காரன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு யானை நொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த யானை நடக்க முடியாமல் கீழே விழுந்தது வேட்டைக்காரன் அதன் அருகே சென்று ஆராய்ந்தான். யானையின் காலில் ஒரு முள் குத்தியிருந்தது. அந்த முள்ளை அகற்றிய அவன் யானையின் காயத்தில் மருந்து தடவினான் சற்று நேரத்தில் யானை எழுந்து காட்டுக்குள் சென்று விட்டது.
இது நடந்து பல காலம் கழித்து அருகிலிருந்த நகரத்திற்கு வேட்டைக்காரன் சென்றான் அங்கே ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. அந்த சர்க்கஸைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான் ஆனால் அவனிடத்தில் பணம் இல்லை எப்படியோ சிரமப்பட்டு கடைசி வகுப்பில் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்தான். அங்கு ஒரு யானை இருந்தது இந்த வேட்டைக்காரனை கூர்ந்து பார்த்தது . பிறகு மைதானத்தை விட்டு காலரிப்
பகுதிக்குள் நுழைந்து வேட்டைக்காரனை தூக்கி எடுத்துக்கொண்டு போய் முதல் வகுப்பில் உட்கார வைத்தது.
லுக்மான் அலை அவர்களுக்கு
பல்லாயிரக்கணக்கான தத்துவங்களை கற்றுக் கொடுத்த்தாக கூறும் இறைவன் அதை அல்லாஹ்வுக்குநன்றி
சொல் என்றே தொடங்குகிறேன். ஞானத்திற்கே நன்றி என தலைப்பிட்டது
போல் அது அமைந்திருக்கிறது.
وَلَقَدْ
آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ ۚ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا
يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
நாம் லுக்மானுக்கு ஞானத்தை
கொடுத்தோம். அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வீராக! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறவர் அதன் பலனை அவரே அடைகிறார். நன்றி மறந்துகிறவர் அல்லாஹ்வை குறைபடுத்தி விட முடியாது, அல்லாஹ் தேவை எதுமற்றவன். புகழுக்குரியவன்.
லுக்மான் ரஹ் அவர்களுக்கு கொடுத்த ஞானத்தின் மொத்த சாரையும் இந்த ஒரு அறிவுரையில் அல்லாஹ் சொல்லுகிறான்
நாம் அல்லாஹ்விற்கு அதிகம் சுக்ரு (நன்றி) செய்பவர்களாக இருக்க வேண்டும் . அவ்வாறு நன்றி செலுத்துகையில் இன்னமும் அதிகமாக அல்லாஹ்வுடைய அருட்கொடைகள் கிடைக்கும்.
அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருட்கொடைகளுக்கு நிகராக நம்மால் நன்றி செலுத்த முடியாது எனினும் நமக்கு சக்திக்கு முடிந்த வரை அவனுக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்.
அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருட்கொடைகளின் மதிப்பு என்ன ?
காது கேட்பது என்பது உலகத்தில் பெரிய நிஃமத்.
உலகத்தில் பிறக்கும் மனிதர்கள் 1000 பேரில் 5 பேருக்கு காது கேட்பதில்லை.
காது கேட்கவில்லை என்றால் சரியான தூக்கம் இருக்காது. தூக்கம் என்பதே காது தன் வேலையை நிறுக் கொள்வது
தான் . தூக்கத்திலிருந்து விழித்தல் என்பதும் காது
திறந்து கொள்வது தான்.
அல்லாஹ் குர்ஆனில் குகைவாசிகள் பற்றி பேசுகிற போது 300 வருடங்கள் அவர்கள் தூங்கினார்கள் என்பதை 300 வருடங்கள் அவர்களுடைய காதுகளை மூடினோம் என்கிறான் .
وضربنا علي آذانهم
காது கேட்காதோருக்கு
வாய் பேச முடியாது, வாய் பேச முடியாவிட்டால் அது எவ்வளவு சிரமம் ?
தெளிவாக பேச முடியாத்தையே பெரும் குறையாக நபி மூஸா (அலை) அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். எனக்கு திக்குவாய் இருக்கிறது என்னைவிட தெளிவாக பேசுகிற ஹாரூனை என்னுடன் அனுப்பு என்று கேட்டார்கள்
எனும் போது அறவே வாய்ப் பேச முடியாமல் போவது எவ்வளவு பெரிய இழப்பு ? அதோடு ஒப்பிடுகிற போது பேச்சு என்பது எத்தகைய பேரரருள் ?
இந்த நிஃமத்தின் கனத்திற்கு நாம் அல்லாஹ்விற்கு சுக்ரு நன்றி செய்ய வேண்டாமா ?
அல்லாஹ் குர்ஆனில் மேலும் கேட்கிறான்.
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ (8)
அவர்களுக்கு நாம் கண்களை தரவில்லையா ?
பார்வை எவ்வளவு பெரிய நிஃ மத் ?
பார்க்கும் திறன் இல்லை என்றால் வாழ்க்கையில் 90 சதவீதம் இல்லையே!
நன்மையானவற்றை பார்க்கிற அனுபவிக்கிற ரசிக்கிற வாய்ப்பு கிடைக்காது
அதுமட்டுமல்ல பார்வையில்லாதவர்களுடைய வாழ்க்கை அவர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு பெரிய சுமை.
2012 ம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பு சொல்லுகிறது
உலக மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் அதாவது 285 மில்லியன் மக்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்
இந்தக் கணக்கில்
நாம் இல்லை என்பது எத்தகைய பெரிய
அருட்கொடை ?
முஸ்லிம் சமுதாயத்தில் பல உன்னதமானிதர்கள் உடல் குறையுள்ளவர்களாக இருந்தார்கள். அந்தக் குறையை கடந்து அவர்கள் மகத்தான சாதனைகளை செய்தார்கள்.
உஸ்மான் ரலி அவர்களின் மகன் அபான் என்பவர் ஊனமுற்றவராக இருந்தார் காது சரியாக கேட்காது வாய் பேச முடியாது.
சஹாபிகளில் அஹ்னப் இப்னு கைஸ்
மாற்றுத்திறனாளி இரண்டு தொடை ஒட்டிப் பிறந்தவர்கள் அறுவை சிகிச்சை செய்தபிறகு ஒரு துடையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது நடக்க முடியாமல் சிரமட்டார்கள். ஒரே ஒரு கண் மட்டும் தான் வேலை செய்யும் கன்னங்களில் ஒட்டிப்போய் இருக்கும்
திருக்குர் ஆனின்
மிகச் சிறந்த விரிவுரையாளர் இமாம் ஜமஃஷரி கால் முறிந்த முடவராக இருந்தார்கள்
நபிமார்களுக் பின்னால் கனவுகளுக்கு விளக்கம்
சொல்வதில் மிகத் திறன்வாய்ந்த வராக அறியப்படுகிற இப்னு சீரீன் (ரஹ்) காது கேட்காதவராக இருந்தார்.
இமாம் திர்முதி கடைசி காலத்தில் பார்வையற்றவராக இருந்தார் இமாம் ஷாபியீ அவர்களை மூல நோய் வாட்டி வதைத்தது. அதனால் அவரது நாற்காலிக்கு கீழே ஒரு பாத்திரம் வைக்கப் பட்டிருக்கும். அந்தப் பாத்திரத்தில் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும். இமாம் ஷாபி பயணம் செய்ய வாகன்ங்களில் ஏறுகிற போது அவரது கால்சராய் வழியே இரத்தம் வழிவதை நான் பார்த்திருக்கிறேன் என அவருடைய மாணவர் கூறுகிறார்.
இம்மாபெரும் பெருமக்கள் இத்தனை துன்பத்தை அனுபவித்தார்களே ! அல்லாஹ் நமக்கு அவற்றில் ஒரு சிரமத்தையும் தரவில்லையே!
நம்மைச் சுற்றி சோதனைக்கு ஆளானோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் .
நமது நாட்டில் 30 சதவீதம் பேருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. 27 கோடி மக்கள் பிளாட்பாரத்தில் வாழ்கிறார்கள் அங்கேயே அவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள் ஐந்து தலைமுறையாக பிளாட்பாரத்திலேயே தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்களாம். நாம் சிந்திக்க வேண்டும் நமக்கான ஒரு வீடு அது வாடகை வீடு என்றாலும் நமக்கு பாதுகாப்பாக இருக்கிறது இதுபோல அல்லாஹ் நமக்கு செய்திருக்கிற அருட்கொடை எவ்வளவு ?
இமாம் தப்ரீ ரஹ் சொல்கீறார்கள் அல்லாஹ் நமக்கு கொடுத்த நிஃமத்தை என்னவே முடியாது என்றால் அதற்கு நன்றி செலுத்தவே முடியாது என்பதே பொருளாகும்.
அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள
அருட்கொடைகளின் கனத்தை புரிந்து கொள்வதற்கு நமக்கு கீழ் நிலையில் இருப்பவர்களை பார்க்கப்
பழக வேண்டும். அவர்களின் நிலையை எண்ணிப் பார்க்க
வேண்டும் .
சஃது சீராஜி ரஹ் அவர்கள் “ நான் செருப்பில்லை என்று கவலைப்பட்டேன் கால் இல்லாதவனை பார்க்கும் வரை
என்றார்கள்
முஹம்மது நபி ஸல் அவர்கள் நமக்கு கற்றுத்தந்த நெறிகளில் மகத்தான ஒரு தத்துவம் இருக்கிறது
உங்களுக்கு மேலே
இருப்பவர்களை பார்க்காதீர்கள். கீழே இருப்பவர்களை பாருங்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் குறையாக கருதாமல் இருக்க
அது உதவும்.
قال: قال رسولُ اللَّه ﷺ: انْظُرُوا إِلَى مَنْ
هو أَسفَل مِنْكُمْ وَلا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوقَكُم؛ فهُوَ أَجْدَرُ أَن
لا تَزْدَرُوا نعمةَ اللَّه عَلَيْكُمْ متفقٌ عَلَيْهِ،tوعن أبي هريرة
ஈமானிய வாழ்க்கையின் முதலில் அடையாளம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது அல்லாஹ் குர்ஆனில் நன்றி மறப்பது குப்ர் என்று சொல்லுகிறான்
عن
أم المؤمنين عائشة رضي الله عنها: أن نبي الله صلى الله عليه وسلم كان يقوم من
الليل حتى تتفطر قدماه، فقالت عائشة: لمَ تصنع هذا يا رسول الله وقد غفر الله لك
ما تقدم من ذنبك وما تأخر؟! قال: ((أفلا أحب أن أكون عبدًا شكورًا))؛ متفق عليه
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவு நின்று தொழுதார்கள். ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதே
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் நான் அல்லாஹ்விற்கு நன்றி உள்ள அடியானாக இருக்க வேண்டும்?
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிற போது என்ன கிடைக்கும் ?
முதலாவது அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும்
இரண்டாவதாக கஷ்டங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நீங்கள் நன்றி
செலுத்தினால் அல்லாஹ் உங்களை வேதனை செய்யப் போவதில்லை . அல்லாஹ் நன்றி
மிக்க வன் என்கிறது திருக்குர் ஆனுடைய 147 வது வசனம்....
மூன்றாவதாக நன்றி செலுத்தினால் நன்மைகள்
பெருகும். நீங்கள் நன்றி செலுத்தினால் மேலும் உங்களுக்கு அதிகமாகத் தருவேன் என அல்லாஹ்
கூறுகிறான்.
நான்காவதாக
நன்றி செலுத்தினால்
நமக்குக் கிடைத்திருக்கிற நிஃமத்கள் பரிபோகாமல் பாதுகாக்கும்
இது நன்றியினால் கிடைக்கிற பேரருளாகும். செல்வம் வந்த பிறகு வறுமைக்கு திரும்பி விடக்கூடாது கல்விக்கு கிடைத்த பிறகு மடமை தனத்திற்கு திரும்பி விடக்கூடாது காரணம் வாழ்க்கையில் இதை விட துரதிஷ்டம் எதுவும் கிடையாது
அல்லாஹ்விற்கு
நாம் எப்படி நன்றி செலுத்துவது.
மார்க்கம் அதையும்
கற்பிக்கிறது.
முதலாவது அல்லாஹ் நமக்கு செய்த நிஃமத் (உபகாரம்)
செய்திருக்கிறான் என்பதை உணர்வதாகும்.
தாவூது நபி அல்லாஹ்விடம் எப்படி நான் உனக்கு நன்றி செலுத்துவது ? அது கூட நீ செய்யும் அருள் தானே என்று கேட்டார்கள். அல்லாஹ் கூறினான். எப்பொழுது எனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று நினைத்தாயோ அப்போதே நன்றி செலுத்தி விட்டவனாகிவிடுவாய்
இரண்டாவது அல்லாஹ் கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுவும் நன்றி செலுத்துவதில் ஒரு வகையாகும்.
மூன்றாவதாக அல்ஹம்துலில்லாஹ்
அதிகம் சொல்லணும்
அல்ஹம்துலில்லாஹ் என்பதுதான் நன்றி செலுத்துவதில்லை தலையாய வார்த்தை சொர்க்கவாசிகளில் சொர்க்கத்திற்குள் நுழைந்தவுடனே அல்ஹம்துலில்லாஹ் சொல்வார்கள் என்று குர்ஆனில் அல்லாஹ் சொல்லுகிறான்
நபி ஸல் அவர்கள் ஒரு சஹாபியை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் நான் நன்றாக இருக்கிறேன் என்றார். அவரிடம் மீண்டும் எப்படி இருக்கிறீர்கள்
என்று கேட்டார்கள். நம்முடைய பதில் பெருமானாருக்கு பிடிக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார் . நான் நன்றாக இருக்கிறேன் அல்லாஹ்வைப் புகழ்கிறேன் என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன்
நாம் நம்முடைய மனைவி பிள்ளைகளுக்கு
குடும்பத்தாருக்கு அல்ஹம்துலில்லாஹ் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும்
தொடர்ந்து மாஷா அல்லாஹ் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லா என்பதைச் சொல்வது சிறந்தது
நான்காவது அல்லாஹ் நமக்கு தந்த அருளை அதை அல்லாஹ் விரும்புகிற வழியில் செலவு செய்ய வேண்டும்
எல்லாவற்றிற்கும்
மேலாக நன்றி சொல்லும் பாக்கியத்த்தை தா என அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.
நபிமார்களின் பிரார்த்தனை
ஒன்றை குர் ஆன் குறிப்பிடுகிறது.
رَبِّ
أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى
وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي
إِنِّي تُبْتُ
إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
இறைவா ! நீ எனக்கு செய்த அருட்கொடைகளுக்கும் என் பெற்றோர்களுக்கு
செய்த அருட்கொடைகளுக்கும் நன்றி செலுத்துகிற வாய்ப்பு கொடு! நீ விரும்புகிற நல்லவழிகளில் நற்செயல்களை செய்யவும்
வாய்ப்புகளை கொடு! என் குழந்தைகளை எனக்கு நல்லவர்களாக ஆக்கிவிடு நான் பாவங்களிலிருந்து
மீண்டுவிட்டேன். நான் முஸ்லிமாகி விட்டேன்
அல்லாஹ் நமக்கு
செய்துள்ள அருட்கொடைகளை உணர்ந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு நன்றி செலுத்தி
வாழ்கிற குணமும் குடும்பமும் அமையும் எனில் அதை விடச் சிறந்த வாழ்வு வேறெதுவும் இல்லை.
தங்களைப் போன்று இந்த பணி செய்ய முடியாவிடினும்,
ReplyDeleteஇதை படிக்க வாய்ப்பு தந்த அல்லாஹ் வே புகழ் அனைத்தும் உனக்கே!
அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDelete