நமது நாட்டின் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தும்
சிறப்பாகவும் கம்பீரமாகவும் நடந்தேறின என்றாலும் இந்திய மக்கள் குறிப்பாக அடித்தட்டு
மக்கள் அனைவரின் இதயத்திலும் ஒரு கேள்வி அனலென கனன்னறு கொண்டே இறுக்கிறது.
இந்தியாவின் குடியரசு தத்துவம் பாதுகாப்பாக இருக்கிறதா ? என்பதே அக்கேள்வி.
குடியரசு என்றால்
நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று பொருள். ஆனால் இங்கு இப்போது சிறுபான்மையின மக்களும்
ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மத தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி தங்களது அடிப்படை
உரிமைகளை நாட்டின் பல இடங்களிலும் இழந்து வருகிறார்கள். காணும் இடந்தோறும் கோயில்கள்
கட்டப்படுகின்றன. ஆனால் பள்ளிவாசல்களும் தேவாலங்களும் செயல்பட பலத்த எதிர்ப்பு காட்டப்படுகிறது.
நீதிமன்றங்களும் காவல்துறையும் கூட அரசியல் சாசணத்தின் தூய வழியில் நடப்பதில்லை. பள்ளிவாசலுக்கான
அனுமதியை மறுக்கிறார்கள். வேறு இடத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என்று மிகவும் கூலாக காவல்
அதிகாரி கூறுவார். வேறு இடம் எங்கே என்று கேட்டால் பதிலே இருக்காது.
பணக்கார்ர்களுக்கு
சலுகை காட்டப்படுகிறது. ஏழை எளிய மக்கள் மேலும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். விலை வாசியும்,
வரிகளும் வானத்தை தொடுமளவு உயர்ந்து நிற்கின்றன. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி
தரப்படுகிறது. சில நிறுவங்களின் கைப்பிடிக்குள் நாடு சென்று கொண்டிருக்கிறது.
மக்களின் கடைசி
தேடலாக இருக்கிற நீதி மன்றங்கள் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்கவேண்டு, ஆனால் இப்போது
அவை சனாதன தர்மத்திற்கு மட்டுமே செங்கோல் செய்கின்றவையாக மாறிவருகின்றன.
சமீபத்திய ஒரு
தீர்ப்பை கவனித்தாலே போதுமானது.
2020இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு 16 பசு
மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக 22 வயதான முகமது அமீன் என்ற
நபரை குஜராத் காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத்தின்
தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத்
சந்திரா, முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 லட்சம்
அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில்
கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.
நீதிபதி சமீர் தனது தீர்ப்பில், "பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் அனைத்து
செல்வங்களும் கிடைக்கும். பசுக்கள் கவலையுடன் இருக்கும் இடத்தில் செல்வங்கள்
அழிந்து போகும். பசு ஒரு விலங்கு அல்ல, அது ஒரு தாய்.
இந்த உலகத்திற்கே பசு முக்கியமானது. பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது.
அவ்வாறு பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும்உலகில் உள்ள வேறு
எந்த ஜீவராசியும் பசுவை போன்று நன்றியுணர்வு கொண்டது இல்லை. எனவே, அத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும்
மதிப்பளிக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும்
பசுக்கள் பலன் கொடுக்க கூடியவை ஆகும். உதாரணமாக, ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும்.
பசு சாணத்தை வீடுகளில்
பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை. பசுவின் கோமியம்
தீராத நோய்களையும் தீர்க்கும். என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல்
இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்னைகளும் தீரும்” என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு
ஆயுள் தண்டனையும் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கிற ஒரு நீதிபதி சட்டம் அரசியல்
சாசனம் என்று எதைப்பற்றியாவது கவலை கொண்டுள்ளாரா என்பதை கவனிக்க வேண்டும்.
நமது மாபெரும்
குடியரசு நாட்டில் குறிப்பிட்ட ஒரு உயர் சாதியினரை கோட்பாடு எப்படி கோலோச்சுகிறது பார்த்தீர்களா
?
அதனால் தான்
நமது குடியரசின் தத்துவத்தை பாதுகாப்பதற்காக நாம் ஒரு விழா எடுக்க வேண்டும்.. ஒரு பெரும்
முயற்சி செய்ய வேண்டும் என்று நமது நாட்டின் ஜனநாயக சக்திகள் கூறுகின்றன.
எல்லாம்
வல்ல இறைவன் நமது நாட்டின் இறையாண்மையை, குடியரசை,கியாமத் நாள் வரை பாதுகாப்பானாக!
நாட்டின் பன்முகத்தன்மைக்கும் மக்களின் சமத்துவ வாழ்விற்கும் சமூக நல்லிணக்கத்திற்கு
எதிராக இருக்கிற சக்திகளை முறியடிப்பானாக. முனை மழுங்க்ச் செய்வானாக!
குடியரசு
என்பது வெறும் எழுத்துக்களாலும் விதிகளாலும் கோர்க்கப்பட்ட புத்தகம் அல்ல. அது மனித
வரலாற்றின் மகத்தான ஒரு தர்மம். பெரும் சத்தியம்.
அந்த சத்தியத்திற்கு
சில நேரங்களில் சோதனைகள் வரலாம். சட்டமும் நீதியும் சில காலம் வளைக்கப்படலாம். ஆனால்
அது நிலைக்காது.
திருக்குர்
உறுதியளிக்கிறது.
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ
إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (81)
பெருமானார் (ஸல்) அவர்களை மக்கவிலிருந்து விரட்டி விட மக்காவின் எதிரிகள்
முயற்சி செய்த போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
இன்னொரு கருத்தின் படி கஃபாவைச் சுற்றி 360 சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டு
பெருமானார் (ஸல்) அவர்கள் மனம் வருந்திய போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
குர்துபி கூறுகிறார்.
إن الباطل كان زهوقا أي لا بقاء له والحق الذي يثبت
தங்களை சர்வாதிகளாக
பிரகனப்படுத்திக் கொண்டவர்கள் அழிந்தார்கள் பிர்அவனை போல. ஹிட்ல்ர் முசோலியனைப் போல.
உலகின் மகத்தான
சீர்திருத்தங்களுக்கு காரணமான இஸ்லாமிய் மார்க்கத்தை, “இஸ்லாம் ஏ ஹாண்டிகேப்ட் ரிலீஜன்”
இஸ்லாம் ஒரு நொண்டி மார்க்கம் என்று விமர்ச்சித்தார்
. பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் . இன்று அவர் முடமாகிக் கிடக்கிறார்.
அநீதி இழைத்தவர்கள்
ஒரு போதும் நிம்மதியாக இருந்து விட முடியாது.
இதோ அதற்கு
இப்போது இன்னொரு சாட்சி கிடைத்திறுக்கிறது.
2002 ம் ஆண்டு குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்
கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். மிகப்பெரும் இன வெறியாட்டம் நிகழ்நத்து. அப்போது
குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி அவர்கள் அதை தடுக்கவில்லை.
அவர் மீது
பல்வேறு குற்றச் சாட்டுகள் கூறப்பட்டன. அமெரிக்க இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அவர்
தம் நாட்டிற்குள் நுழையக் கூடாது என தடை விதித்திருந்தன.
அரசியல்
எனும் சதுரங்கத்தில் தந்திரமாக காய் நகர்த்தி மோடி இந்தியாவின் பிரதமர் என்கிற உயர்
பதிவியை அடைந்தார். அவர் மீதான தடைகளை உடைத்தார். இனி அவரது புகழுக்கு எல்லை எதுவும்
இல்லை என்கிற அளவில் அவருடைய் ஆட்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
கி 20 என்ற
அமைப்பின் தலைவராக மொடி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வளர்ச்சிப்பாதையில்
செலுத்தியவதற்காக தேர்வு செய்திருக்கிறார்கள் என்று அவருடைய ஆட்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
கடந்த் ஆண்டு இதே பொருப்பை இந்தோனேஷியா வகித்த்து. அது ஒரு சுற்றி வருகிற பொறுப்பு.
இந்த சாதாரண விசயத்தை ஊதிப்பெரிதாக்குகிறார்கள். அவருடைய ஆட்கள். இதே போல ஒவ்வொரு விவகாரத்திலும்
உண்மையல்லாதவைகளை ஊதி ஊதியே மோதியை பெரியவராக்கி வைத்தார்கள்.
ஆனால் இந்த
தந்திரங்கள் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.
இதோ பிபிசி தொலைக்காட்சி மோடி கேள்விக்குள்ளாக்கப்படுகிறார் என்ற தலைப்பில் ஒரு டாக்குமெண்டை இப்போது ஜனவரி 17 ம்
தேதி வெளியிட்டிருக்கிறது.
இது மோடி
குஜராத் முதல்வராக இருந்த 2002 ம் ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய முஸ்லிம் இன அழிப்பை
பற்றி பேசுகிறது. அப்போதிருந்து செய்யப் பட்டு வந்த புலன் விசாரணையை இப்போது பிபி சி
வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பொது ஊடகங்களில்
அந்த டாகுமெண்டரி ஒளிபரப்புவதை தடை செய்து விட்ட்து என்றாலும் கூட மிக குறுகிய நாட்களில்
அந்த டாகுமெண்ட்ரி சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த டாகுமெண்டரி
என்ன சொல்கிறது ?
· குஜராத் படுகொலையில் 2200 பேர் இறந்துள்ளதாக சொல்லப்பட்டாலும் சொல்லப்பட்டதை விட இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
· Wide spread systematic rap of muslim women பரந்த அளவில் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
(அதாவது
எந்த தெருவில் எந்த குடும்பத்தை யார் சீரழிப்பது என்ற திட்டம் வகுத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.)
·
ஒரு இல்டசத்து 38 ஆயிரம் பேர் உள் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.
·
அனைத்து முஸ்லிம் வியாபார நிறுவன்ங்களையும் அழித்தல் என்ற இலக்கில்
தாக்குதல் நடைபெற்றது.
·
இந்துக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
·
விசுவ இந்து பரிஷத் இந்த குற்றங்களில் திட்டமிட்டு இறங்கிய போதும்
மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் இந்து நடந்த்து.
·
நரேந்திர மோடி தான் இதற்கு நேரடி பொறுப்பு என்று பிரிட்டிஷ்
வெளியுறவுத்துறையின் அறிக்கை கூறுகிறது.
·
கலவரம் நடப்பதற்கு முன்னதாக 2002 பிப்ரவரி 27 அன்று முதல்வர் மோடி இது பற்றி ஒரு கூட்டம் நட்த்தி அதிகாரிகளை கண்டு
கொள்ளாமல் இருக்க கூறினார் என்ற செய்தியை பல அதிகாரிகளும் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
·
குஜராத்தின் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா இத ஒப்புதல் வாக்குமூலமாக
பதிவு செய்துள்ளார். அவர் படுகொலை செய்யப்பட்டார்.
·
பிபிசியின் டாக்குமெண்டரியில் சுப்ரமண்ய சாமி தனக்கு ஹரண்பாண்டியாவின்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
·
இன்னும் இன்னும் என பல செய்திகளை பிபிசியின் டாக்குமெண்டரி எடுத்துக்
கூறுகிறது.
இந்த டாக்குமெண்டரி
படம் நமது நாட்டின் குடியரசு த்த்துவத்தை சிதைக்க முயலும் இந்துத்துவ சக்திகளின் முகமூடியை
மீண்டும் ஒரு முறை உலக அளவில் கிழித்து தொங்கவிட்டுள்ளது, குறிப்பாக பிரதமர் மோடி அவர்களின்
நிலைப்பாட்டை பெரிதும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த டாகுமெண்டரி
ஒரு சாதாரண நிகழ்வல்ல.
எல்லா வகையிலும்
அரசியல் அதிகாரத்தின் உட்ச நிலையில் – யாரையும் எப்படியும் விலைக்கு வாங்கிவிடலாம்
என்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பெரும் தைரியத்தில் இருக்கிற சூழலில்- நாட்டை
கிட்டத்ட்ட ஒரு இரும்புத்திரை சர்வாதிகாரத்திற்குள் நாட்டை கொண்டு சென்று கொண்டிருக்கிற
சூழலில் மதிப்பிற்குரிய ஒரு செய்தி நிறுவனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் கூட அடக்கி
வைத்துவிட்டார்கள்.
ஆனால் இப்போதும்
கூட ஒன்று நிச்சயமானது நீதி சோதனைக்குள்ளாகலாம். ஒரு போதும் அது தோற்று விடாது.
இந்திய குடியரசு
தினக் கொண்டாட்ட்த்தில் மகிழ்ந்திருக்கிற நமக்கு அந்த குடியரசை பாதுகாக்கிற பெரிய கடமை
இப்போது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தோளின் மீது இருக்கிறது என்பதை இந்த டாகுமெண்டரி
உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல இறைவன்
நமது நாட்டை அதன் வளத்தை செழிப்பை சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பானாக!
·
No comments:
Post a Comment