வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 27, 2023

மஹர், திருமணத்தின் மரியாதை

وآتوا النساء صدقاتهن نحلة

 இஸ்லாமிய திருமணங்களின் சிறப்பம்சம் மஹர் ஆகும்.

 ஏன் இஸ்லாமிய மார்க்கத்தின் பொதுவான சிறப்பம்சங்களில் ஒன்றாக  கூட இதைக் குறிப்பிடலாம்..

 அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அவள் ஒப்புக் கொள்ளும் அளவிலான ஒரு தொகையை அல்லது ஈட்டை கொடுத்துத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.

 பெண்ணினத்தின் மரியாதை . திருமண உறவின் மரியாதை – குடும்ப வாழ்வின் பொறுப்புணர்வு ஆகிய பல வற்றை மஹர் நிச்சயப்படுத்துகிறது.

 மஹரை சதாக் என்றும் திருக்குர் ஆன் கூறுகிறது.

திருமண உறவின் மீது திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணின் மீதும் உண்டான உண்மையான அன்பை வெளிப்படுத்தும் அடையாளம் இது என்பது அந்த வார்த்தையின் பொருளாகும்.

 ஒவ்வொரு இளைஞனும் இதை நினைவில் கொள்ளனும் திருமணத்தின் மீது உள்ளார்த்த மதிப்பு – திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் மீது உளமார்ந்த ஈடுபாடு இருக்கிறது என்பதை காட்ட மஹர் எவ்வளவு என்பதை தீர்மாணிப்பதே சிறப்பான வழிமுறையாகும். நிச்சயம் முடிந்த கையோடு போன் வாங்கிக் கொடுப்பதை விட.

 மனமாற மஹர் கொடுங்கள் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.

  وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا  (سورة النساء: 4

 இதிலுள்ள நிஹ்லா என்ற வார்த்தைக்கு கட்டாயமாக என்றும் ஒரு பொருள் உண்டு.

وقال قتادة : معنى نحلة فريضة واجبة

 மன விருப்பத்தோடு என்றும் ஒரு பொருள் உண்டு,

 وقيل : نحلة أي عن طيب نفس من الأزواج من غير تنازع

 உங்களது பண்பாட்டின் அடையாளமாக என்றும் ஒரு பொருள் உண்டு,

 والنحلة الديانة والملة

இந்த மூன்று பொருட்களையும் இணைத்தும் கருத்துக் கொள்ளலாம். உங்களது மனைவிக்கான மஹரை உங்களது பண்பாட்டின் அடையாளமாக மனம் நிறைந்து கட்டாயம் கொடுத்து விடுங்கள் என்றும் இந்த வசனத்திற்கு அர்த்தம் செய்யலாம்.

 அதில் மஹரின் அந்தஸ்தும் தரமும் நமக்கு வெளிப்படும்/

 மஹர் கட்டாயம் .மஹர் இல்லாத திருமணம் இல்லை.

 ஒரு திருமணத்தில் மஹர் தொகை குறிப்பிடப்படாவிட்டாலும் , அல்லது மஹரே இல்லை என்று கூறப்பட்டிருந்தாலும் கூட மஹர் கொடுப்பது கட்டாயமே என்று இஸ்லாமிய சட்டம் கூறுகிறது இது மஹரின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. மஹர் குறிப்பிடப்படாத  சந்தர்ப்பங்களில் மணப்பெண்ணை ஒத்த பெண்களுக்கு வழங்கப்பட்ட தொகை மஹராக நிர்ணயம் பெறும்.

 ஒருவர் ஆணாக இருப்பதாலேயே திருமணம் செய்து கொள்ளும் தகுதி வந்து விடும் என்று இஸ்லாம் கூறவில்லை. மஹர் கொடுப்பதற்கும் செலவுக்கு கொடுப்பதற்கும் ஒரு ஆணுக்கு வசதி வருகிற போதுதான் அவர் திருமணம் செய்து கொள்ளும் தகுதி பெறுகிறார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த வசதி இல்லையா ? நோன்பு வைத்து ஆசையை அடக்கிக் கொள் என்றார்கள்,

 عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعاً«يا معشر الشباب، من استطاع منكم الباءة فليتزوج؛ فإنه أغض للبصر، وأحصن للفرج، ومن لم يستطع فعليه بالصوم؛ فإنه له وِجَاءٌ».

 ، أي من استطاع منكم مؤنة النكاح فليتزوج

 முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு தனி சிறப்பு சட்டம் இருந்தது.  ஆர்கள் திருமணத்திற்கு மஹர் தர தேவையில்லை.

 தப்ஸீர் குர்துபியில் வருகிறது.

  لأن النبي صلى الله عليه وسلم كان مخصوصا في النكاح بأن يتزوج بغير صداق ، وقد أراد زينب فحرمت على زيد فدخل عليها بغير ولي ولا صداق

ஆயினும் பெருமானார் (ஸல்) தனது பெரும்பாலான திருமணங்களுக்கு தானே மஹர் கொடுத்தார்கள். அதுவும் சாதாரனமாக அல்ல. மரியாதையாக

 பெருமானார் (ஸல்) அவர்களின் பெரும்பான்மையான மஹர் 12 ½ ஊக்கியா தங்கமாக இருந்த்து.

 عن أبي سلمة بن عبد الرحمن، أنه قال: سألت عائشة زوج النبي صلى الله عليه وسلم : كم كان صَداقُ رسول الله صلى الله عليه وسلم ؟ قالت: «كان صَدَاقُهُ لأزواجه ثِنْتَيْ عشرة أُوقِيَّةً ونَشَّاً»، قالت: «أتدري ما النَّشُّ؟» قال: قلت: لا، قالت: «نصف أُوقِيَّةٍ، فتلك خمسمائة درهم، فهذا صَدَاقُ رسول الله صلى الله عليه وسلم لأزواجه».

 ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹம்

12 ½ ஊக்கியா என்பது 500 திர்ஹம்.

ஒரு திரஹம் என்பது 2.3 கிராம் வெள்ளி. 10 திர்ஹம் என்றால் 23 கிராம் வெள்ளியாகும்.

500 திர்ஹம் என்பது 1150 கிராம் வெள்ளியாகும்.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 80  ரூபாய் . அதன்படி 1150 கிராம் வெள்ளியின் விலை  92 ஆயிரம் ரூபாய் ஆகும். ரூபாய் ஆகும்.

 

அதாவது பெருமானார் (ஸல்) அவர்கள் இன்றைய மதிப்புக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தே திருமணங்களை செய்துள்ளார்கள்.

 திருமணத்தை சுன்னத் நபி வழி என்று சொல்லி அதில் அக்கறை காட்டுகிற நாம். அந்த திருமணத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த மஹரிலும் அக்கறை செலுத்த வேண்டும் அல்லவா?

 திருமணத்திற்கு தயாராகிற ஒவ்வொரு ஆண்மகணும் நினைவில் வைக்க வேண்டிய செய்தி இது.

 எனது மஹர் எனது பொறுப்பு

 வயது 25 ஆகிவிட்டதால் கல்யாணம் செய்து கொள்ள வில்லையா என்று பலர் கேட்கலாம்  பெற்றோர்கள் ஆசைப்படலாம்.

 ஒவ்வொரு இளைஞனும் தீர்மாணிக்க வேண்டிய ஒரு உறுதி மொழி என்ன தெரியுமா ?

 திருமணம் என்பது எனது மரியாதை . அதை நான் கொடுக்கிற மஹர் தீர்மாணிக்கிறது. எனது திருமணத்திற்கான மஹர் தொகையை நானே திரட்டிய பிறகு எனது திருமணம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்மாணித்தால் அது சிறப்பான இளமையின் அடையாளமாக இருக்கும்.

 கலயாணத்தின் போது அணிந்து கொள்கிற கோட் சூட்டில் அல்ல, மஹர் தொகையிலேயே தனது கவுரவம் நிலை பெறுவதாக ஒவ்வொரு மாப்பிள்ளையும் கருத வேண்டும். அதுவே உண்மையுமாகும்.

 அதனால் தான் அணீந்திருந்த வேட்டியை தவிர வேறு ஒன்றுமே இல்லாத ஒரு ஏழையிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு இரும்பு மோதிரத்தையாவது திரட்டிக் கொண்டு வா என்று கூறினார்கள்.

 عن سهل بن سعد قال: جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت: "إني وهبت من نفسي" -فقامت طويلا- فقال رجل: زوجنيها إن لم تكن لك بها حاجة،قال: هل عندك من شيء تصدقها ؟ قال: ما عندي إلا إزاري فقال: إن أعطيتها إياه جلست لا إزار لك فالتمس شيئافقال: ما أجد شيئا فقال: التمس ولو خاتما من حديد

  .மஹருக்காக பாடுபட்டு அதற்கான தொகையை திரட்டி திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளையை தான் பெருமானார் பாரக்கல்லாஹி லக என்று வாழ்த்தினார்கள்.

 நமது திருமண அழைப்பிதழ்களில், நபி (ஸல்) அவர்கள் கூறிய திருமண துஆ என்று குறிப்பிட்டு , பாரக்கல்லாஹு லக வபாரக அலைக்க வஜம பைனகுமா பில் கைர் என்று என்று எல்லோரும்  அச்சிடுகிறோம்.

 உண்மையில் அந்த துஆ வுக்கான தகுதி ஒரு நபித்தோழருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா ?  

 அந்த துஆஅப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்களுக்கு பெருமானார் கூறிய துஆ வாகும்.

 பெரும் செல்வந்தராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்கள் இஸ்லாமை ஏற்று மதீனாவிற்கு வாந்த போது சொத்துக்களை முழுவதை மக்காவாசிகளிடம் இழந்திருந்தார்கள்.

 மதீனாவில் அவரை ஸஃது பின் ரபீஆ ரலி அவர்களுக்கு சகோதரராக பெருமானார் (ஸல்) ஆக்கினார்கள்.

 ஏழையாக மதீனாவுக்கு வந்த அப்துர் ரஹ்மான் (ரலிகொஞ்ச நாட்களிலே மதீனாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்கள்.

 அவரது திருமணக்கோலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பெருமானார் (ஸல்) எதை கொடுத்து திருமணம் செய்து கொண்டீர் என்று கேட்டார்கள். ஒரு பேரீத்தம் பழ கொட்டை அளவு தங்கம் கொடுத்து திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கூறினார்,

 தனது தோழர் உழைத்து திரட்டி மரியாதையான மஹர் கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பதை கண்டு மகிழ்ந்து பெருமானார் கூறீனார்கள். பாரகல்லாஹு லக வபாரக அலைக்க  

 புகாரியில் வருகிறது.

 عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال بارك الله لك أولم ولو بشاة

 எனவே மஹருக்காக உழைத்தவர் துஆ விற்குரியவர் ஆகிறார்/

 ஒரு பழைய வரலாற்றை நினைவூட்டுகிறேன்.

நபி மூஸா அலை அவர்கள் ஏதுமற்றவராக – சாப்பாட்டிற்கே வழியில்லாதவராக மத்யன் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவரை ஆதரித்த நபி சுஐப் அலை வர்கள் எட்டு வருடம் உழைத்தால் தனது மகளை திருமணம் செய்து தருவதாகவும் 10 வருடம் உழைத்தால் மகளை அவருன் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்

 இறைத்தூதர் மூஸா அலை அவர்கள் தனது மஹருக்காக 10 வருடம் பாடுபட்டார் என்று திருக்குர் ஆன் கூறுகிறது

 قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ   (سورة القصص: 27)

 ஆனால் அந்த பாடு வீண் போகவில்லை. தனியாளாக ஒன்று மில்லாதவரக அங்கு சென்ற மூஸா அலை அவர்கள் 10 வருடங்களுக்கு மனைவியுடன் மட்டுமல்ல ஏரளமான கால் நடைகளுடன் திரும்பினார் என்று வரலாறு கூறுகிறது

 எனவே மஹருக்காக உழைக்கனும். கனிசமான மஹர் கொடுக்கனும் என நினைத்து செயல்பட்டால் அல்லாஹ் தவ்பீக் செய்வான். வாழ்கையை சிறப்பானதாக அல்லாஹ் ஆக்கி வைப்பான்/

 பெற்றோர்களும் கூட தங்களது ஆண் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன் மஹர் கொடுப்பதற்காக தொகையை திரட்ட தூண்ட வேண்டும்.

 பெற்றோர்களே தங்களது மகன்களுக்கான மஹரை கொடுத்தால் அது செல்லுபடியாகும் தான்.

நபி (ஸல்) அவர்களுக்கு அபீஸீனியாவிலிருந்த உம்மு ஹபீபா அம்மாவை திருமணம் செய்து கொடுத்த நஜ்ஜாஸீ மன்னர் அவருக்கு நாலாயிரம் திர்ஹம் மஹர் கொடுத்தார் என்று வரலாறு வருகிறது. அதை பெருமானார் ஏற்றுக் கொண்டார்கள். என்றாலும் மற்ற மனைவியருக்கு பெருமானாரே மஹர் கொடுத்துள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

 عن أم حبيبة أنها كانت تحت عبد الله بن جحش فمات بأرض الحبشة فزوجها النجاشي النبي - صلى الله عليه وسلم - وأمهرها عنه أربعة آلاف وفي رواية أربعة آلاف درهم وبعث بها إلى رسول الله - صلى الله عليه وسلم - مع شرحبيل ابن حسنة . رواه أبو داود ، 

 இன்னொன்றும் இங்கு நினைவு கூறத்தக்கது.

சில இடங்களில் திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தினர் தங்களது பண வசதியின் பெருமையை காட்ட 200 பவுன் 300 பவுன் என்று மஹர் கொடுக்கின்றனர்.  இன்னும் அதிகமாகவும் கொடுக்கின்றனர்.

 அன்பு நிறைந்தவர்களே ! ஒரு போதும் இதை பெருமைக்காக செய்யாதீர்கள்.

 பெண் வீட்டார்களே! ஒரு போதும் இதை பெருமைக்காக ஒப்புக் கொள்ளவும் செய்யாதீர்கள்.

 உண்மையில் மனம் விரும்பி மகிழ்ச்சியாக பெருந்தன்மையாக கொடுப்பதானால் இதை விட அதிக மாக கூட கொடுக்கலாம்.

 நபி ஸல் அவர்கள் தனது மனைவிமார்களுக்கு பொது வாகவும் தனது மகள்களுக்கும் 500 திர்ஹம் அளவிலான மஹரையே கொடுத்துள்ளார்கள்.

 பாத்திமா ரலி அவர்க்களின் மஹரும் 500 திர்ஹம் தான் .

 தனது ஈரக் குலை துண்டுக்கு பெருமானர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டது  500 திர்ஹமை தான்.

 அதனால் தான் உமர் ரலி அவர்கள் மஹர் தொகையின் அதிக பட்ச அளவாக 500 திர்ஹமை தீர்மாணிகலாம் என்று நினைத்தார்கள்.

 ஆனால் அல்லாஹ் திருக்குர் ஆனில் குவியல் குவியலாக கொடுத்தாலுன் என்ற வார்த்தையில் மஹர் எவ்வளவு அதிகமாகவும் இருக்கலாம் என்று கூறிவிட்டான் .

 இது சம்பந்தமான சுவையான வரலாறு அனைவரும் அறிந்ததே

 عن مسروق قال : ركب عمر بن الخطاب منبر رسول الله صلى الله عليه وسلم ثم قال : أيها الناس ما إكثاركم في صداق النساء وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه وإنما الصَّدُقات فيما بينهم أربع مائة درهم فما دون ذلك ، ولو كان الإكثار في ذلك تقوى عند الله أو كرامة لم تسبقوهم إليها فلا أعرفنَّ ما زاد رجل في صداق امرأة على أربع مئة درهم ، قال : ثم نزل فاعترضته امرأة من قريش فقالت : يا أمير المؤمنين نهيتَ النَّاس أن يزيدوا في مهر النساء على أربع مائة درهم ؟ قال : نعم ، فقالت : أما سمعت ما أنزل الله في القرآن ؟ قال : وأي ذلك ؟ فقالت : أما سمعت الله يقول { وآتيتُم إحداهنَّ قنطاراً } الآية ؟ قال : فقال : اللهمَّ غفراً ، كل النَّاس أفقه من عمر ، ثم رجع فركب المنبر ، فقال : أيها الناس إني كنت نهيتكم أن تزيدوا النساء في صدقاتهن على أربع مائة درهم ، فمن شاء أن يعطى من ماله ما أحب

 எனவே மஹர் எவ்வளவு பிரம்மாண்ட தொகையாக இருந்தாலும் அனுமதிக்கப் பட்டதே!  

 குவைத் நாட்டில் 2022 நடை பெற்ற ஒரு திருமணத்தில் ஒரு செல்வந்தர் 10 இலட்சம் குவைத் தீனார்களை மஹராக கொடுத்துள்ளார். அதன் மதிப்பு அமெரிக்க டாலரில் 32 இலட்சம் அமெரிக்க டாலர்களாகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடியா ஆகும்.

குவைத்தில் வழங்கப்பட்ட அதிகப் பட்ச மஹர் இது என்று குவைத்தின் ஸபக் இதழ் தெரிவிக்கிறது .

 இப்போது கடும் சண்டை நடந்து வருகிறதல்லவா சூடான். அங்கு 2022 ம் ஆண்டில் வாதி ஜமீலாவில் வசிக்கும் சம்ரா என்ற பெண்ணுக்கு 300 பசுக்களும் 200 காளைகளும் மஹராக வழங்கப்பட்டுள்ளன என என்று கூறுகிறது அல் இமாராத்துல் யவ்மு என்ற பத்ரிகை.

 இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மஹர் பிரம்மாண்டமாக கொடுக்கலாம்.

 ஆனால் அன்பிற்குரியவர்களே  அது பெருமைக்கானதாக இருக்க கூடாது.

 திருக்குர் ஆன் குறிப்பிடுவது போல நிஹ்லா பண்பாட்டின் அடையாளமாக பெருந்தன்மையின் குறியீடாக கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்று உணர்ந்து செய்யப்படுவதாக இருக்க வேண்டும்.

 அருமையானவர்களே ஆடம்பரத்திற்கு மஹர் தீர்மாணிக்கப்படுகிற போது அது பின்னர் பிரச்சனைகளுக்கு ஆளாகிவிடுகிறது.

 மஹர் சம்பந்தமான சில சட்டங்களை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

மஹர் என்பது அன்பளிப்போ சும்மா கொடுத்து வைக்கிற பொருளோ அல்ல.

 அது பெண்ணின் முழு உரிமையாகும்.

 தனது முழு வாழ்வையும் ஒரு ஆண் மகனுக்கு அர்ப்பணிக்கிற தயாராகிற  பெண் அதற்கு மரியாதையாக எதிர்பார்க்கிற ஒரு அடையாளம் மஹராகும்.

 அதனாலாயே திருமண நிக்காஹ் ஒப்பந்தம் நிறைவடைந்த உடனேயே அவளுக்கு பாதி மஹருக்கான உரிமை வந்து விடுகிறது. கணவருடன் தனியறையை பகிர்ந்து கொண்டு விட்டால் அவளுக்கு முழு மஹருக்கான உரிமை வந்து விடும்.

 وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَنْ يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ 

 திருமணம் முடிந்து தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தலாக் நடந்து விட்டால் மணப்பெண்ணுக்கு பாதி மஹர் கொடுக்க வேண்டும்.

 திருமணம் முடிந்து தாம்பத்யம் நடந்து விட்டால் முழு மஹர் கொடுக்க வேண்டும்.

 திருமணம் நடந்த சில நிட்த்தில் கணவன் இறந்து போய்விட்டாலும் முழு மஹர் கொடுக்க வேண்டும்.

 சில மாதங்கள் அல்லது வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் மஹர் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் மஹர் கிடையாது என்று சில பேர் நினைக்கிறார்கள். அது தவறு,

 நிச்சயதார்த்த்தின் போது மணப்பெண்ணுக்கு தரப்படும் நகைகள் மஹர் என்று குறிப்பிடப்பட்டால் மட்டுமே அது மஹரில் சேரும். இல்லை எனில் அது அன்பளிப்பு வகைகளில் சேரும். ஒரு பிரச்சனை ஏற்படும் எனில் அன்பளிப்புகளையும் கூட திரும்ப கேட்பது முறையானதல்ல.

 ஒரு திருமணத்தில் தம்பதிகளுகிடையே   தாம்பத்திய உறவு நடந்த பிறகு பிரச்சனை ஏற்படும் எனில் மஹர் தொகை முழுவதும் மனைவிக்கு உரியதாகும். அதை திருப்பி கேட்க கூடாது. அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சரி.  கொடுத்த பிறகு எப்படி திருப்பிக் கேட்கிறீர்கள் என்று அல்லாஹ் கேட்கிறான்.

 ( وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَءَاتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا(20) وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا(21) سورة النساء

 கணவர் இறந்து போகும் பட்சத்தில் தாம்பத்தியம் நடந்திருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி முழு மஹரும் மனைவிக்குரியதாகும்.

 எவ்வளவு கொடுத்திருந்தாலும் திரும்ப கேட்க கூடாது.

ஒரு சில நிமிடங்களே அகியிருந்தாலும் திரும்ப கேட்க கூடாது.

 திரிமிதியில் ஒரு ஹதீஸ் வருகிறது

தாம்பத்தியத்திற்கு முன்னரே கணவரை இழந்து விடுகிற பெண்ணுக்கு மஹரும் உண்டும் சொத்தில் பங்கும் உண்டும்.

  وعن علقمة عن ابن مسعود أنه سئل عن رجل تزوج امرأة ولم يفرض لها شيئا ، ولم يدخل بها حتى مات ، قال ابن مسعود : لها مثل صداق نسائها لا وكس ولا شطط وعليها العدة ولها الميراث ، فقام معقل بن سنان الأشجعي فقال : قضى رسول الله - صلى الله عليه وسلم - في بروع بنت واشق امرأة منا بمثل ما قضيت ففرح بها ابن مسعود . رواه الترمذي ،

இப்படி ஒரு கேள்விக்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி இப்படி பதில் சொன்ன போது அருகிலிருந்த மஃகப் பின் யஸார் ரலி இப்படி ஒரு தீர்ப்பை பெருமானார் வழங்கினார்கள் என்று கூறினார்.   

 திருமணம் ஆன வுடன் கணவனை பறிகொடுக்கிற பெண்களுக்கு கணவரின் சொத்திலும்  பங்கும் உண்டு என்பதையும் கூட கவனிக்க வேண்டும்,

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் தாம்பத்தியமே நடக்கா விட்டாலும் சரி எனபதுமாகும்.

 சமீப காலத்தில் நாம் சந்திக்கிற மற்றொரு பிரச்சனை

அதிக அளவில் மஹர் கொடுக்கப்படுகிற திருமணங்களில் தாம்பத்தியம் முடிந்த பிறகும் கூட கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை ஏற்படும் எனில் மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் மஹர் தொகையை விட்டுத்தர மறுக்கிறார்கள்.

 இது அப்பட்டமான சட்டமீறலாகும்.

 பணக்காரர்கள் பெருமைக்கு மஹர் கொடுத்து விட்டு  அல்லாஹ் ரஸீலின் சட்ட்த்தில் விளையாடுகிறார்கள்.

 இதற்காக அவர்கள் செய்கிற கேவலான உத்தி என்ன தெரியுமா ?

 பெண்ணுக்கு தலாக் தர மறுப்பது. அவளை குலா கேட்கும் படி நிர்பந்திப்பது.

 சமீபத்தில் ஒரு தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை வந்த்து. இருவருக்கும் இடையே மன ஒருமைப்பாடு இல்லை, நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். கணவன் தலாக் விட மறுக்கிறான்,

 காரணம் அவன் கொடுத்த  கொடுத்த அதிக அளவிலான மஹர தொகைகளை திரும்ப பெற முடியும் என்பதற்காக .

 எனவே பெருமைக்காக மஹர் தொகையை பெரிய அளவில் கொடுக்கிற போது அல்லது வாங்குகிற போது ஏதேனும் பிரச்சனை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதுவே பிரச்சனைகள் எளிதில் தீராமல் போவதற்கு காரணமாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  

 எனவே மணமகனின் பெற்றோர்களே அதிக தொகையை பெருமைக்காக மஹராக கொடுக்காதீர்கள். மனம் விரும்பி மஹர் கொடுங்கள். ஒரு பிர்ச்சனை எனில் மார்க்கம் கூறிய படி இதுவிசய்த்தில் நடந்து கொள்வேன் என்ற பெருந்தன்மை இருப்பவர்கள் தாரளமாக மஹர் கொடுங்கள்.

 இல்லை எனில் உங்களுக்கு பெருந்தன்மைக்கு ஏற்ற அளவில் கொடுங்கள்.

 அது ஒரு ஜோடி செருப்பாக கூட இருக்கலாம்.  

 وعن عامر بن ربيعة أن امرأة من بني فزارة تزوجت على نعلين فقال لها رسول الله - صلى الله عليه وسلم - أرضيت من نفسك ومالك بنعلين ؟ قالت : نعم ، فأجازهرواه الترمذي .

 பெரிய தொகையை சபையில் கொடுத்து விடடு பின்னர் பிரச்சனைகளின் போது மிட்க போராடுபவர்களாக ஆக வேண்டாம்.

 பெண்ணின் பெற்றோர்களே அதிக மஹரை பெறும் போதும் கவனமாக இருங்கள். ஒரு பிரச்சனை ஏறுபடும் போது இதன் காரணமாகவே பெண்மக்கள் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

ஒரு மரியாதையான அளவிலான மஹர் போதும் பெறுமைக்கான மஹர் தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள்.

 இறுதியாக  இன்றைய இந்த உரையில் நாம் முக்கியமாக குறிப்பிட விரும்புவது,

 மாப்பிள்ளைகளே மஹர் கொடுக்க தயார் ஆகுங்கள்.

மனமாற மஹர் கொடுங்கள் பெறுமைக்கு கொடுக்காதீர்கள் .

மஹர் என்பது  மணப்பெண்ணின் உரிமையாகும். அதை நியாயம்ற்று பறிக்க முயசிக்க கூடாது.

 எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் திருமண வாழ்வையும் அவன் விரும்பும் வழியில் சிறப்பானதாக ஆக்கியருள்வானாக!

 

 

6 comments:

  1. Anonymous11:06 PM

    மாஷா அல்லாஹ்! இதைப்பற்றி இதற்குமேல் கூடுதல் குறைவு செய்து பேசமுடியாமா! ஹஜ்ரத்!
    அல்லாஹ் உங்ஙகளுக்கு அருள் செய்வானாக! ஆமீன்.

    ReplyDelete
  2. Anonymous11:08 PM

    Supper Hz ... Inshallah

    ReplyDelete
  3. Anonymous9:52 AM

    மாஷாஅல்லாஹ் ...

    ReplyDelete
  4. Anonymous11:04 PM

    மாஷாஅல்லாஹ

    ReplyDelete