வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 29, 2011

காதல் கலாட்டா


وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُوْلَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ(221

முஸ்லிம் வாலிபர்களும் இளம் பெண்களும் காதல் வயப்படுவதும் மாற்று சமூகத்தவர்களுடன் திருமண செய்து கொண்டுவிடுவதும், சமீப காலமாக அதிகரித்திருக்கிறது.

இன்றைய நிலையில் பெற்றோர்களை ஆலிம்களை சமுதாயத் தலைவர்களை அதிகம் கவலை கொள்ள வைத்துள்ள செய்தி இது.

பள்ளி கல்லூரிகளுக்கு தனியாக பிள்ளைகளை அனுப்ப வேண்டிய சூழ்நிலை, வறுமை காரணமாக இளம் பெண்களை வேலைக்கு அனுப்புகிற நிலை, படித்த நடுத்தர குடும்பங்களில் அதிக சம்பளத்திற்கான ஆசையில் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு பணி செய்ய தூர இடங்களுக்கு பெண்களை அனுப்புகிற நிலை, இது மட்டுமல்லாது திருமணம் போன்ற நிகழ்வுகளில் எந்தவித த்யக்கமும் இன்றி ஆண்களும் பெண்களும் இரணடறக் கலந்து பரிமாறிக் கொள்ளும் நிலை ஆகிய காரணங்களால் கட்டுப்பாடுகள் தளர்ந்து, சுதந்திரமான வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கிற இன்றைய நிலையில் இது நடக்க கூடியதே?

யார் வீட்டிலும் நடக்க கூடும் என்பதை உணர்ந்து கொண்டு உஷார அடைவது நம் அனைவரின் முதல் க்டமையாகும்.  

பெருமானார் தன் பின்னால் உட்கார்ந்திருந்த சஹாபியின் முகத்தை திருப்பி விட்டார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ-   البخاري – 1513

உயர்ந்த சிறந்த இடங்களில் கூட காதல்காமம் பாடு படுத்தி விடும்
யூசுப் (அலை) சுலைகா இருவரும் சிறந்தவர்களே
சுலைகா அம்மையார் தனது தரப்பை விளக்கிச் சொன்ன கருத்தை திருக்குர் ஆன் பல முறை திருப்பிச் சொல்லுகிறது.

قَالَتْ فَذَلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ وَلَقَدْ رَاوَدتُّهُ عَنْ نَفْسِهِ فَاسْتَعْصَمَ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونَ مِنَ الصَّاغِرِينَ(32)
قَالَتْ امْرَأَةُ الْعَزِيزِ الْآنَ حَصْحَصَ الْحَقُّ أَنَا رَاوَدتُّهُ عَنْ نَفْسِهِ وَإِنَّهُ لَمِنْ الصَّادِقِينَ(51)ذَلِكَ لِيَعْلَمَ أَنِّي لَمْ أَخُنْهُ بِالْغَيْبِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي كَيْدَ الْخَائِنِينَ(52)وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ(53)

மிக  உயர்ந்த இடங்களில் கூடஎதிர்பார்க்கப் படாத சந்தர்ப் பங்களில் இத்தகைய விபத்துக்கள் நிகழ வாய்புண்டு

உறுதிமிக்க இதயமும் அல்லாஹ்வின் துணையும் இல்லாவிட்டால் இத்தகைய சந்தர்ப்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இளைஞர்களும் இளைஞ்களும் முக்கியமாக் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி இதில் இருக்கிறது.

மனிதர்கள் வாழ்வில் உயர்வின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிற போது அல்லாஹ் இத்தகைய சோதனைகளை வைக்கிறான். உறுதி மிக்க இதயத்தோடு இந்த சூழ்நிலையை வென்று வருகிறவர்கள் வாழ்வில் மிக உன்னதமான நிலையை அடைவார்கள். யூசுப் அலை அவர்களைப் போல.
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு பழியாகிவிட்டால் அதள பாதாளம் தான்,

கல்லூரிக்கும் வேலைக்கும் பிள்ளைகளை அனுப்பி வைக்கிற போது  அவர்களுக்கான இலக்கு என்ன  என்பதை  பெற்றோர்கள் விவரிக்க வேண்டும் .அதில் இடையூறுக்கு வழி விடாதவாறு அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் மொத்த வாழ்வும் பறிபோய்விடும் என எச்சரிக்க வேண்டும்.

இன்னும் ஒரு முக்கிய அம்சமாக பிள்ளைகள் தங்களது வாழ்வில நடைபெறுகிற செய்திகளை பெற்றோர்களிடம் பரிமாறிக் கொள்கிற அளவிலான ஒரு நட்பு கடைபிடிக்கப் பட வேண்டும்.

பெற்றோர் வாலிப பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.அதே நேரத்தில் தேவையற்று எப்போதும் சந்தேக கண்ணோடு பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது. அது வேறு வகையான பிரச்சினைகளை கிளப்பி விடும்.  

عَنِ ابْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللَّهُ وَمِنْهَا مَا يُبْغِضُ اللَّهُ وَمِنْ الْخُيَلَاءِ مَا يُحِبُّ اللَّهُ وَمِنْهَا مَا يُبْغِضُ اللَّهُ فَأَمَّا الْغَيْرَةُ الَّتِي يُحِبُّ اللَّهُ فَالْغَيْرَةُ فِي رِيبَةٍ وَأَمَّا الَّتِي يُبْغِضُ اللَّهُ فَالْغَيْرَةُ فِي غَيْرِ الرِّيبَةِ وَأَمَّا الْخُيَلَاءُ الَّتِي يُحِبُّ اللَّهُ أَنْ يَتَخَيَّلَ الْعَبْدُ بِنَفْسِهِ لِلَّهِ عِنْدَ الْقِتَالِ وَأَنْ يَتَخَيَّلَ بِالصَّدَقَةِ -  احمد 22630

ஒரு தொழுகையாளிபள்ளிப் புறாதிடீரென சில மாதங்களாக காணவில்லை. நான் விசாரித்தனுப்பிய போது கூட்டமில்லாத ஒரு சம்யம் பார்த்து வந்தார். ஒரே அழுகை. ஆசுவாசப் படுத்தி விசாரித்த போது.  தனது 12 வது படித்த்து விட்டு வேலைக்கு சென்ற மகள் எதிர் ஒர்க்ஸ் ஷாப்ப் கார இந்துவொடு சென்று விட்ட்தாகவும் கோவிலில் வைத்து தாலி கட்டிட்க் கொண்டு விட்ட்தாகவும் கூறி அழுதார்.

(மிக நாசூக்காக அந்தப் பையனை வரவழைத்து இஸலாத்தை ஏற்கச் செய்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை)

ஒரு தொழுகையாளியின் வீட்டில் இப்படி நடக்க காரணம் என்ன?

அவர் மட்டுமே தொழுகையாளியாக இருந்தார். வீடு முஸ்லிம் வீடாக இருக்கவில்லை.

முஸ்லிம்கள் அனைவரும் தமது இல்லத்தை முஸ்லிம் இல்லமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யனும்.
அல்லாஹ்வை பற்றிய பயம். மார்க்கம் உயர்ந்த்து என்ற சிந்தனை நம்மிடமும் அழுத்தமாக் இருக்கனும் பிள்ளைகளுக்கும் ஆழமாக பதிய வைக்கனும்.

அல்லாஹ்வை பற்றிய பயம் என்பது அல்லாஹ் கண்ணக் குத்தி விடுவான் என்று மிரட்டுவதல்ல .

அல்லாஹ்வை நினைத்து அஞ்சி வாழ்ந்தால் அல்லாஹ் பரகத் செய்வான் . படிப்பை இலேசாக்குவான். தேர்வையை நிறவேற்றுவான். வெற்றியை இலேசாக்குவான் வாழவை சிறப்பாக்குவான் என்பதை ஒவ்வொரு கட்ட்த்திலும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாகும்.

இன்றைய நம்முடைய குடும்பங்களில் இத்தகைய பேச்சுக்கு இடம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

எதுவரை கண்கானிப்பது ? பிள்ளைகளுக்கு பின்னாலேயே சென்று கொண்டிருக்க முடியுமா? என்று எப் எம் வானொலியில் ஒரு பெண் கேட்டார்.

நியாயமான கேள்வி தான்! . இதற்கான பதில் சாதாரணமானதே!
வீட்டில் சரியான பண்பாடு கற்றுத்தரப்பட்டால் பிள்ளைகளுக்கு பின்னேலேயே சென்று கொண்டிருக்கத் தேவையில்லை.

எல்லோருக்கும் மிகவும் பழக்கமான ஒரு நிகழ்வு
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) திருடகளிடம் தன் சட்டையில் 40 தங்க நாணயங்கள் வைத்து தைக்கப் பட்டிருக்கிறது என ஒத்துக் கொண்டார். ஆச்சரியப்பட்ட திருடர்கள் உண்மையை ஒத்துக்கொண்ட்தறகான காரணத்தை கேட்டனர். அம்மா பொய் பேச்க் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக கூற்னார். திருடர்கள் திருந்தினர்.

அம்மாவின் வளர்ப்பு வீட்டு வாசல் படிக்கும் அப்பாலும் வேலை செய்திருக்கிறது.

வீட்டு வளர்ப்பு சரியாக இருக்கும் எனில் ஒரு இளைஞர் தான் நல்லவனாக வாழ்வதொடு ஒரு சமூகத்தையும் நல்வழிப்படுத்த முடியும் என்பதற்கான அற்புதமான உதாரணம் இது.

இஸ்லாமிய வாழ்க்கை முறையை வீட்டில் பெற்றோர்கள் அமுல்படுத்தினால் பிள்ளைகளிடம் அந்த நடைமுறை தானாக வரும்.
குறைந்த பட்சம் இஸ்லாம் தடுத்துள்ள் விசயங்களில் பிள்ளைகளை தடுக்க அதிக கவனம் செலுத்தனும்.

முன்பு வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளிகளிடம் வீட்டுச் சிறுவர்களை அறிமுகப் படுத்துகிற போதுலாயிலா சொல்லிக் காட்டுபாதிஹா ஓதிக் காட்டுதுஆ செல்ல்லிக் காட்டு என்று சொல்வார்கள்
இப்போதோ என் பையன் நல்லா டான்ஸ் ஆடுவான், பாட்டுப் பாடுவான் என்று அறிமுகப் படுத்துகிறார்கள்.

இதுபோன்ற நம்முடைய வளர்ப்பு முறையில் ஏற்பட்ட கோளாறுகள் தீனை மதிக்காமல் இளைஞர்கள் இளைஞிகள் வேறு பக்கங்களில் தாவுவதை இலேசாக்கிவிட்டன.

மார்க்கம் தடை செய்துள்ள காரியங்களிலி இருந்து பிள்ளைகளை தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்.
قو أنفسكم واهليكم نارا
நெருப்பருகே செல்கிற குழந்தையை ஏய் போகாதே என்று சொல்வதோடு எந்த தாயும் நிறுத்திக் கொள்ள மாட்டாள்
அது போல தீய விசயங்களில் பிள்ளைகளை தடுக்க முழு முயற்சியை பெற்றோர்கள் எடுக்க வேண்டும்.
இது விசயத்தில்  பாசம் நம் கண்களை மறைத்து விடக்கூடாது.
முஸ்லிம் குடும்பங்களை பொறுத்தவரை இன்றுள்ள சூழ்நிலையில் பாசம் என்ற பெயரில் பிள்ளகளுக்கு பெற்றோர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள்.

அதீத செல்லத்தின் காரணமாக படிக்கிற காலத்திலேயே பைக் செல்பேன் என வாங்கிக் கொடுக்கிறார்கள்.

இன்றைய காதல் விவ்காரங்களில் செல்போன்  பெரும் பங்கு வகிக்கிறது.

கணவன் வெளி நாட்டில் இருக்க மனைவிக்கு ஒருத்தன் ராங்க் காலில் தொடர்பு கொள்கிறான். மன்னிப்புக் கேட்கிறான். மீண்டும் தொடர்பு கொள்கிறான், தன்னுடை காதலி ஏமாற்றிவிட்ட்தாக் கூறி அனுதாபத்தை பெறுகிறான். அவளுக்கும் அவனுக்கும் தொடர்பு உருவாகியது. கணவன் திரும்பி வந்தான். மனைவி செல்போன் காரனுடன் சென்று விட்டான். கணவன் குழந்தைகளுக்கா அவளை கெஞ்சி மீண்டும் வீட்டுக்கு வந்து விடும்படி கோர. அவள் செல்போன் காரனின் கையை பிடித்துக் கொண்டு திரும்பி வந்தாள் .என்ற செய்தி ஒரு முஸ்லிம் ஊரில் நடந்தது.

பள்ளி கல்லூரிக்கு செல்லும் பெண்கள் செல்போனால் சீரழிந்த கதை ஏராளம்.
·         குடும்பத்தினருக்கு போன் தேவையில்லை.
·         வாங்கிக் கொடுத்தால் அதிக கவனம் தேவை.
·         பிள்ளைகளின் போன் வீட்டுற்குள்  வந்தவுடன் பொது இட்த்தில் வைக்கப் பட வேண்டும்.
·         அழைப்புக்கள் , எஸ் எம் எஸ்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
·         தேவையற்ற பொழுது போக்க்கு  அழைப்புக்கள் , எஸ் எம் எஸ்களை வன்மையாக தடுக்க வேண்டும்.

இன்றைய கால கட்ட்த்தில்  குற்றத்வாளிகளை கண்டு பிடிக்க  காவல் துறை அதிகமாக செல்போனை கண்கானிக்கிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் செல்பேனை கண்காணித்தால் பல தவறான நட்த்தைகளை தடுத்து விடலாம்.

பல வழக்குகளை விசாரித்துப் பார்த்த்தில் பெற்றோரில் ஒருவருக்கு குறிப்பாக தாயாருக்கு பிள்ளைகளின் காதல் விவகாரம் தெரிந்தே இருக்கிறது.

எங்கே அவமானமாகிவிடுமோ என்று அம்மா மறைக்கிறார். விச்யம் பெரிதாகி விட்ட பிறகு கணவரிடம் தெரிவிக்கிறார். அவ்ரோ விசயத்தை நாசூக்காக சரியாக அனுகத்தெரியாமல் குதிக்கிறார். அதற்குள்ளாக பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேற முழு திட்ட்த்தை தயாரித்து விடுகிறார்கள்.


எந்த விசயத்தையும் ஆரம்பத்திலேயே கவனித்து விட வேண்டு. அவமானம் கருதி அல்லது அஜாக்கிரதையால் விஷ விதைகளை வளர விடக் கூடாது.

முதல் கணத்திலேயே பொறுமை வேண்டும் என பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார். விழிப்புணர்வும் அப்படித்தான்.
அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால் மார்க்கமும் மானமும் பறி போய்விடக்கூடும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ-   البخاري – 6133
சக முஸ்லிமுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து பாடம் பெறுவதும் நமக்கு பாதுகாப்பாகும்.

பர்தா குறித்த சிந்தனை தெளிவாக உணர்த்தப் பட வேண்டும்
புர்கா அணிவது பர்தாவில் இரண்டாவது  தரமானதே!
முதல் தர பர்தா என்பது அன்னிய அண்களிடமிருந்து பெண்கள் விலகி இருப்பதாகும்.

عَنْ أَبِي وَائِلٍ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ فَضَلَ النَّاسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ بِأَرْبَعٍ بِذِكْرِ الْأَسْرَى يَوْمَ بَدْرٍ أَمَرَ بِقَتْلِهِمْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَوْلَا كِتَابٌ مِنْ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ وَبِذِكْرِهِ الْحِجَابَ أَمَرَ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَحْتَجِبْنَ فَقَالَتْ لَهُ زَيْنَبُ وَإِنَّكَ عَلَيْنَا يَا ابْنَ الْخَطَّابِ وَالْوَحْيُ يَنْزِلُ فِي بُيُوتِنَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ وَبِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُ اللَّهُمَّ أَيِّدْ الْإِسْلَامَ بِعُمَرَ وَبِرَأْيِهِ فِي أَبِي بَكْرٍ كَانَ أَوَّلَ النَّاسِ بَايَعَهُ

عن أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ لَمَّا نَزَلَتْ آيَةُ الْحِجَابِ جِئْتُ أَدْخُلُ كَمَا كُنْتُ أَدْخُلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَاءَكَ يَا بُنَيَّ- احمد 11585

இந்த பர்தா கவனிக்கப் படாமல் போவதால் தான் பால்காரனிலிருது வாகன் ஓட்டிகள் வரை பல தரப்பட்டவர்களும் முஸ்லிம் பெண்களை தங்களது தீய நோக்கங்களுக்கு பலிகடாவாக்கி விடுகிறாரகள்.

உடன் படிக்கிற அல்லது வேலை செய்கிற ஆண்களிடம் சகஜமாக முஸ்லிம் மாணவிகள் சகஜமாக பழகு வது குறித்து தீர்க்கமான எச்சரிக்கை விடப் பட வேண்டும் இந்த பண்பாடு  புர்கா போடுவதை விட முக்கியமானது என்பதை புரிய வைக்க வேண்டும்.

நல்லவர்களைப் போல மிக நாசூக்காக பழகிகாதல் போன்ற விசயங்களில் ஈடுபடாத வர்களை போல பாசாங்கு காட்டி முஸ்லிம் பெண்களை வ்சப்படுத்தி அவர்களை மார்க்கத்தின் வழியிலிருந்து திசை திருப்பிக் கொண்டு போக இந்துதுவ சக்திகள் மிக தந்திரமான திட்டங்களை தீட்டி இருப்பதை முஸ்லிம் மாணவிகளுக்கு தெளிவாக முன்னுதாரன்ங்களை சொல்லிக் காட்டி எச்சரிக்கை செய்வதும் பயனுள்ள ஒரு முறையாக அமையும்.

தம் பிள்ளைகளுடைய தோழர்கள் தோழிகள் யார் என்பதிலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்தனும். தோழர் அல்லது தோழிகளின் வீடுகளுக்கு செல்லும் தம் பிள்ளைகளுக்கு அங்கு ஏதேனும் இடையூறுகள் வாய்ப்புள்ளதா என்பதை கவனிக்க தவறக்கூடாது.

இது போல பெற்றோர்கள் அவரவர் சூழ்நிலைக்கு ஏறப் கவனிக்க வேண்டிய விசய்ங்கள் பலதும் இருக்கிறது. தம் பிள்ளைகள சரியாக வளரவேண்டும் என்ற அக்கறையும் கவலையும் இருந்தால் அதற்கு தேவையான வழிகள் குறித்த சிந்தனை தானாகவே கிடைக்கும். 

இதற்கும் மேலாக அல்லாஹ்வை நாடவேண்டும். குர் ஆன் கற்றுத்தரும் அற்புதமான இரண்டு துஆக்கள்

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا(74)
இதன் பொருள்
என்னை சார்ந்தவர்களை முத்தகீகளாக்கி அவர்களுக்கு என்னை பொருப்பாளானாக்கு. (சித்தனையன் கோட்டை கமாலுத்தீன் ஹ்ஜரத் சொன்ன விளக்கம்) 

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنْ الْمُسْلِمِينَ-  الآحقاف 15

உருதுவில் அழகிய முஹாவரா உண்டு.
நஜாத்கே லியே தாதி இஸ்லாஹ் காபீ நஹீ
(ஈருலக வெற்றிக்கு நாம் மட்டுமே நல்லவராக இருந்தால் போதாது.)

நமது பிள்ளைகளை நல்லவர்களாக்குகிற விசயத்தில்  நமது பங்கை ஆற்றாவிட்டால், இப்போது நாம் எவ்வளவு உன்னத நிலையில் இருந்தாலும் அது நீடிக்காமல் போய்விடும் ஆபத்த்து உண்டு.

No comments:

Post a Comment