வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 24, 2011

ஹிஜ்ரத்தில் பெண்கள்


ஹிஜ்ரி 1433 வது புதிய ஆண்டு பிறக்கிறது.

ஹிஜ்ரத்தின் பயணத்தில் ஆண்களைப் போலவே பெணக்ளும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சில பெண்கள் அனுபவித்த வலியும் வேதனையும் அவர்களின் தியாகமும் ஆண்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.

பெண்களின் குடியேற்றம் என்பது ஆண்களின் ஹிஜ்ரத்தை விட சிரமம் நிறைந்தது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.  

அகபா உடன் படிக்கையில் முதல் பெண்

ஹிஜ்ரத் செல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அகபா உடன்படிக்கைகளே என்பது வரலாற்றை வாசித்தவர்களுக்கு தெரியும்.

மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த அஸ் அத் பின் சராரா வின் தலைமையிலான 6 நபர்களை சந்தித்து இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள்.  அந்த  6 பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.

மூன்று அகபா உடன்படிக்கைகள் முதலாவது நபித்துவத்தின் 11 ஆண்டில் நடந்தது. அப்போது 6 பேரும் அடுத்த ஆண்டு 12 பேரும் அதற்கு அடுத்த ஆண்டு 75 பேருமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர்.

மூன்றாவது தடவை வந்த குழுவினர் தங்களது ஊரான யத்ரிபு  முஸ்லிம்களுக்கு பாதுகாப்பளிக்கும்  என்று உறுதியளித்தனர்.

ஹிஜ்ரத்தின் பாதையை மதீனாவை நோக்கி திருப்பி விட்ட பெருமை அந்த மூன்றாம் அகபா உடன்படிக்கைக்குரியது. அந்த உடன்படிக்கைக்கு வந்த 75 முஸ்லிம்களில் இரண்டு பெண்களும் இருந்தனர்.

நஸீபா பின்து கஃபு என்ற உம்மு அம்மாரா அவர்களில் ஒருவர் அஸ்மா பின் து அம்ர் என்ற உம்மு மனீஃ இரண்டாமவர்.
  أم عمارة

نسيبة بنت كعب: بن عمرو: وتكنى أم عمارة الأنصارية، وهي زوج زيد بن عاصم الصحابي الجليل، وكانت بطلة مجاهدة من أبطال الإسلام،
ويحفظ لها التاريخ وقفتها يوم أحد، وهي تقاتل دون النبي - صلى الله عليه وسلم - حتى قال: ((ما التفت يميناً وشمالاً إلا وأنا أراها تقاتل دوني))

وقد جرحت ثلاثة عشر جرحاً، والدم ينزف منها، فنادى المصطفى - صلى الله عليه وسلم - ابنها عمارة قائلاً: ((أمك أمك أعصب جرحها، بارك الله عليكم من أهل بيت، مقام أمك خير من مقام فلان وفلان))
 فلما سمعت أمه قالت: ادع الله أن نرافقك في الجنة، فقال: ((اللهم اجعلهم رفقائي في الجنة))،
فقالت: ما أبالي ما أصابني من الدنيا.

ويحدث التاريخ عن موقفها في حروب الردة، ومقاتلة مسيلمة الكذاب الذي قتل ابنها حبيب، وقطعه قطعاً، حين شاركت في الحرب كأحد الأبطال الميامين حتى قطعت يدها



முதல் நான்கு முஹாஜிர் பெண்கள்

மதீனா  குடியேற்றத்திற்கு 8 வருடங்களுக்கு முன்னதாக அபீசீனியாவிற்கு குடிபெயர்ந்து செல்லும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். பெருமானாரின் உத்தரவை ஏற்று நபித்துவத்தின் 5ம் ஆண்டில் 16 பேர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். இஸ்லாத்தின் அந்த  முதல் 16 அகதிகளில்  நான்கு பேர் பெண்கள். ருகையா, லைலா, சல்மா சஹலா (ரலி) ஆகிய நால்வரே அவர்கள்.
ورقية
ويكون عثمان ورقية أول من هاجر على قرب عهدهما بالزواج،
وهاجرت رقية ثانية مع زوجها إلى الحبشة مع المؤمنين الذين بلغوا ثلاثة وثمانين رجلاً. وبهذا تنفرد رقية ابنة رسول الله بأنها الوحيدة من بناته الطاهرات التي تكتب لها الهجرة إلى بلاد الحبشة،
: "إنهما أول من هاجرا إلى الله بعد لوط".

முதல் மதீனா முஹாஜிர் பெண்மணி

மதீனா செல்ல்லும் படி பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட போது முதல் பெண்மனியாக லைலா (ரலி) மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்தார். அவர் அபீசீனியாவிலிருந்து மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.  அபீசீனியாவிற்கு முதலில் ஹிஜ்ரத் செய்த நான்கு பெண்களில் லைலா அம்மையாரும் ஒருவராக இருந்தார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. லைலா அம்மையார் இரண்டு முறை அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ததோடு முதன் முதலாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர் என்ற சிறப்பையும் சேர்த்துப் பெற்றார். இது மட்டுமல்லாது லைலா அம்மையார் இஸ்லாமை தழுவியதிலும் ஒரு சிறப்புச் செய்தி இருக்கிறது.

லைலா அம்மையார் (ரலி) ஆரம்பமக இஸ்லாமைத் தழுவியவர்களில் ஒருவராவார். அவரது கணவரது பெயர் ஆமிர் என்பதாகும். ஆமிரின் தந்தை ஜைது தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில்  மகன் ஆமிரிடம் ஒரு ரகசியம் சொன்னார்.
ليلى بنت أبي حثمة
أن زيد بن عمرو بن نفيل قال لعامر زوجها: أنا أنتظر نبياً من ولد إسماعيل، ثم من بنى عبد المطلب، ولا أراني أدركه، وأنا أؤمن به وأصدقه، وأشهد أنه نبي، فإن طالت بك مدة - يا عامر - ورأيته فأقرئه مني السلام، وبتهيئة زوجها كانت ليلى مهيأة لقبول الدين الجديد، لأن زوجها كان يردد كثيراً قول زيد بن عمرو بن نفيل؛ فلما سرى في مكة أن رسول الله - صلى الله عليه وسلم - يدعو إلى الله الواحد الأحد؛ أقبل عامر وليلى وأسلما
ولم تكن هجرة ليلى بنت أبي حثمة إلى المدينة (يثرب) مجرد انتقال من مكان إلى مكان، ولكن كان لها دور إيجابي هي وباقي المهاجرات والمهاجرين في توطيد دعائم الدين الإسلامي في قلوب اليثربيات واليثربيين، وليس أدل على ذلك مما رأيناه من خروج الأنصار والمهاجرين ونسائهم للقاء النبي - صلى الله عليه وسلم - بعد  علمهم بهجرته المباركة                         .

லைலா அம்மையார் இஸ்லாமைத் தழுவியதில் மட்டுமல்ல அவர் முதன் முறையாக அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதிலும் ஒரு விஷேசன் உண்டு. அதை அந்த அம்மையாரே சொல்கிறார்:

நாங்கள் இஸ்லாமைத் தழுவிய காலகட்டத்தில் உமர் இஸ்லாத்தின் பெரும் எதிர்ப்பாளராக இருந்தார். நான் ஹிஜ்ரத் செல்வதற்காக ஒட்டகையில் உட்கார்ந்திருந்த போது உமர் எங்களது பக்கமாக வந்தார். என்னை பார்த்ததும் அப்துல்லாஹ்வின் தாயே! எங்கே செல்கிறீர்! என்று கேட்டார்.

நான்,எங்களது மார்க்கத்தை பின்பற்ற விடாமல் நீங்கள் தொல்லை தருகிறீர்கள். அதனால் நாங்கள் இறைவனை வணங்க தொல்லைகளற்ற ஒரு இடத்திற்கு புலம் பெய்ர்கிறோம் என்றேன். இறைவன் உங்களோடு இருக்கட்டும் என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்த் விட்டார். இந்த அதிசயச் செய்தியை என் கணவரிடம் சொன்னேன். அப்போது அவர் உமர் இஸ்லாமை தழுவுவார் என்று நீ நம்புகிறாயா? என்று என்னிடம் கேட்டார். நான் ஆம் என்றேன்.
  
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் உமர் (ரலி) அவர்களால் ஹிஜ்ரத்திற்கு  வழியனுப்பி வைக்கப்பட்டவர் என்ற பெருமையை லைலா அம்மையார் பெற்றார்.

லைலா அம்மையாரின் ஹிஜ்ரததைப் பற்றி கூறுகையில் வரலாற்று ஆய்வாளர்கள் அவரது ஹ்ஜ்ரத் ஒரு ஊரிலிர்ந்து மற்றொரு ஊருக்கு புலம்பெய்ர்தலாக மட்டுமிருக்கவில்லை. அவரும் அவரைப் போன்ற போன்ற பெண்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த போது மதீனா பெண்களிடம் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெருமானாருக்காக பெண்கள் கூட இவ்வளவு பெரிய தியாகங்களை செய்கிறார்களே என்ற மதீனாவாசிகள் மலைத்தனர்.  


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரின் ஹிஜ்ரத்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களோடு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அவ்விருவருடைய குடும்பத்தினரும் மக்காவிலேயே இருந்தனர்.

இவ்விரு குடும்பத்தினரும் அபூபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லாஹ் வுடன் மதீனாவுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்கள். இதில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மகளும் பெருமானார் (ஸல்) அவர்களது மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தார். 

மதீனாவில், அபூஅய்யூப் அன்சாரி(ரலி) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த  பெருமானார் (ஸல்) அந்த வீட்டிலேயே தன்னுடைய குடும்பத்தினரை அன்பும் மகிழ்ச்சியும் பொங்க வரவேற்றார்கள். இவர்களின் வருகையோடு பெருமானார் (ஸல்) அவ்ர்களது குடும்பத்தினரில் பெருமபாலோனோரின் ஹிஜ்ரத் நிறைவடைந்தது. பெருமானாரின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்கள் மட்டும் மக்காவில் இருந்தார்.
هاجرت أم كلثوم مع أختها فاطمة الزهراء ، وزوجة الرسول صلى الله عليه وسلم سودة بنت زمعة، ثاني زوجاته بعد خديجة رضي الله عنها، بكل شوق وحنان إلى المدينة ، فاستقبلهن الرسول -صلى الله عليه وسلم، وأتى بهنّ إلى داره التي أعدّها لأهله بعد بناء المسجد النبوي الشريف .

ஜைனப் (ரலி) ஹிஜ்ரத்
عندما علم رجال قريش بخبر خروج السيدة زينب إلى أبيها لحق بها هبار بن الأسود ومعه رجل آخر من قريش فعندما لقيها روعها برمحه فإذا هي تسقط من فوق بعيرها على صخرة جعلتها تسقط جنينها، فولى الرجال من بعد ذلك هاربين

உக்பாவின் மகளின் உன்னத ஹிஜ்ரத் 
ஹிஜ்ரத்தின் புரட்சிக்கு ஒரு புதிய உதாரணத்தை உக்பாவின் மகள்  உம்குல்ஸூம் ஏற்படுத்தினார்.

உக்பது பின் முஈத் இஸ்லாமின் மிக தீவிர எதிரிகளின் ஒருவனாக இருந்தான்.
உகபா வின் மகள் உம்மு குச்ஸும் ஹிஜ்ரீ 6 ம் ஆண்டிற்குப் பிறகு இஸ்லாமை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புலம் பெயர்ந்து வந்து பெருமானரைச் சந்தித்தார். அப்போது அவர் பதிமூன்றே வய்துடைய பெண்ணாக இருந்த அவர் தனியாகவே நடந்து வந்து சேர்ந்தார்  என்று வரலாற்றின் ஒரு குறிப்பு சொல்கிறது.

அந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கும் மக்காவின் எதிரிகளுக்குமிடையே புதிதாக யாரும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது.

உம்மு குல்ஸூம் மதீனாவுக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரது இரு சகோதரர்கள் அம்மாராவும் வலீதும் மதீனாவுக்கு வந்து உம்மு குல்ஸுமை திருப்பி அனுப்பும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேட்டுக் கொண்டனர்.

ஒப்பந்தத்தை பேணுவதில் நெறி தவறாத பெருமானார் (ஸல்) அவர்கள் இப்போது என்ன செயயப்போகிறார்களோ என்று முஸ்லிம்கள் மனமுருகி நின்றனர். அவர்களது நெஞ்சில் பால் வார்ப்பது போல அப்பொது திருக் குர் ஆனில் ஒரு வசனம் அருளப்பபட்டிருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ( 60: 10) 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمْ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُمْ مَا أَنفَقُوا

இதைக் கேட்டதும் அம்மாராவும் வலீதும் இது என்ன உடன் படிக்கை மீறல்? என்று கோபித்தனர்.
அப்போது இருதரப்பாருக்கும் இடையே நடைபெற்ற உடன் படிக்கையின் வாசகத்தை சுட்டிக் காட்டினார்கள். அந்த வாசகம்

أن لا يأتيك منا رجل وإن كان على دينك إلا رددته إلينا

மக்காவிலிருது வருகிற ஆண்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றே கூறியது.
ருகையா பின்து சைப்பி
ஹிஜ்ரத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியப் பங்கு வகித்த ஒரு பெண்மணியைய் பற்றி வரலாறு பேசுவோர் பலரும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஆனால் வரலாறு அந்த அம்மையாரின் பங்களிப்பை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது.

والتاريخ الإسلامي يحفظ لها وقفة مع الإسلام كثيراً ما يغفلها المؤرخون،
وقد اجتمع كبار المشركين ليلاً ومعهم إبليس اللعين في صورة شيخ نجدي، وانتهى أمرهم إلى أن يقتلوا النبي - صلى الله عليه وسلم - في داره بيد فتية من كل قبيلة فتى؛ ليتوزع دمه - صلى الله عليه وسلم - في القبائل، تلك المرأة المسنة - رقيقة - هي التي استشفت خبر قريش يوم ائتمروا بالنبي - صلى الله عليه وسلم -، فذهبت العجوز تجر أثقالها حتى انتهت إلى النبي - صلى الله عليه وسلم -، وأخبرته الخبر، وحذرته من المبيت في داره، وحدثته بحديث القوم الذي لا يعلمه إلا الله، ثم هي ومن تآمروا عليه، ثم ذهبت العجوز التي أنافت على المائة، لتنقل الخبر، ولم تأمن على نقله ابنها مخرمة بن نوفل وهو من لحمة النبي - صلى الله عليه وسلم - وذوي صحبته؛ ذلك لأن الشك فيها وهي العجوز المسنة مستبعد، وما أطيب امرأة، وأجل منزلتها لاسيما وهي تذهب إلى رسول الله - صلى الله عليه وسلم - بمثل ما سبق به جبريل إليه - على نبينا وعليه أفضل الصلاة والسلام -.

வரலாற்றின் அந்த வரவேற்புக்கு பாதை அமைத்ததில் பெண்மணிகளின் பங்கும் வளப்பமானது.

Thursday, November 17, 2011

மலிவா உயருது விலை வாசி


கடுமையான விலை உயர்வு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

விலை உயர்வு கவலையளிக்க்கூடியது. சாமாணிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்க்க் கூடியது.

பொதுவாகவே சமீப சில வருடங்களாக விலை வாசி உயர்வு என்பது ஜெட் வேகத்தில் மேலே ஏறிக் கொண்டிருக்கிறது.

காய் கறிகள் பால் பொருட்கள் கட்டிட சாமான்கள், மின்சாதன்ங்கள் இரும்பு சிமெண்ட போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, மற்ற சேவைக் கட்டணங்களும் (கொத்தனார். கார்பெண்டர்)  200 300 மடங்குகள் உயர்ந்து விட்ட்து.

விலை உயர்வு கட்டுப்படுத்தப் படாவிட்டால்.. மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.

என்ன விலையானால் என்ன வாங்கி வா! என்று சொல்கிற சில பணக்கார்ர்கள் இருக்கலாம்தேவையானதை கூட வாங்க முடியாமல் பலர் பரிதவிக்க வேண்டியது வரும்.

சமூகத்தில் ஏழ்மை தாண்டவமாடும்., குற்றங்கள் பெருகும். நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாக மாறிவிடுவர்.

விலை வாசி உயர்வினால் ஏற்பட்ட சோதனைகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் பல அச்சமூட்டும் முன்னுதாரன்ங்கள் உண்டு

அப்பாஸிய கிலாபத்தின் கடைசி காலத்தில் ஒரு ஷஃபான் மாத்தில் பெருமளவில் பொருட்களின் விலைகள் உயர்ந்தன, மக்களால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியவில்லை. விட்டைகளையும் செத்தவைகளையும் சாப்பிட்டார்கள். பாதைகளில் விழுந்து இறந்தார்கள். அவர்களது உடல்களை நாய்கள் சாப்பிட்டன. ரொட்டித் துண்டுகளுக்கு பதிலாக மக்கள் தங்களது வீடு வாசல்களை விற்றனர். மக்கள் வேறு ஊர்களுக்கு குடிபெய்ர்ந்தனர். போகிற வழியிலேயே இறந்து போயினர்.

فقد حكى صاحب "النجوم الزاهرة" في أواخر عهد بني العباس عظم الغلاء ببغداد في شعبان، حتى أكلوا الجيف والروث، وماتوا على الطرق، وأكلت الكلاب، وبيع العقار بالرغفان -أرغفة الخبز-، وهرب الناس إلى بلدان أخرى، فماتوا في الطريق.

ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் எகிப்தில் கடுமையான விலை வாசி உயர்வு ஏற்பட்ட்து. மக்கள் சாப்பிடக் கூடாதவைகளை எல்லாம் சாப்பிட்டனர். அந்த ஆண்டின் சபர் மாத்த்தில் ஒரு இலட்சத்து முப்ப்தாயைரம் பேர் இறந்தனர்.

விலை வாசி உயரும் போது மக்கள் கடை பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
(எல்லாவற்றிற்கும் வழி காட்டிய இஸ்லாம் இதற்கும் வழி காட்டியுள்ள்து.)

1.   தவ்பா இஸ்திக்பார் செய்வது. ஈமானிய குணம்
நமக்கு ஏற்படும் எந்த தீமைக்கும் நாம் தான் காரணம் என்று உணரவேண்டும்
·        {وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ} سورة النساء:79

أثر التوبة والاستغفار في الفكاك من الأزمة.
·        فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً * يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} سورة نوح:12.

2.       தேவையற்றதை (ஆசைப்பட்ட்தை) எல்லாம் வாங்க் கூடாது

·        مرّ جابر بن عبد الله ومعه لحم على عمر -رضي الله عنهما- فقال: ما هذا يا جابر؟ قال: هذا لحمٌ اشتهيته فاشتريته. قال: أو كلما اشتهيت شيئاً اشتريته، أما تخشى أن تكون من أهل هذه الآية: {أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا} سورة الأحقاف:20

3.       எது முக்கியம் என்பதை தீர்மாணிப்பது
4.       காசு உரிய முறையில் தகுதியாக செலவழிக்கப்படவேண்டும்
5.       போதும் என்ற மனம்

·         انظروا إلى من أسفل منكم، ولا تنظروا إلى من هو فوقكم، فهو أجدر ألا تزدروا نعمة الله)). رواه مسلم.
·         ((قد أفلح من أسلم ورزق كفافاً، وقنعه الله بما آتاه)). رواه مسلم

6.       விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருப்பது.
விழிப்பும் புத்திசாலித்தனமும் அவசியம்.
7.   கஷ்ட நேரத்திலும் ஏழைகளை வறியவர்களை மறக்காமல் இருப்பது
·        وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لا تُظْلَمُونَ} سورة البقرة: 272.
·         ((يا ابن آدم أَنفق أُنفق عليك)) البخاري (4316)، مسلم (1658).
8.       விலை ஏற்றத்திற்கான காரணத்தை கண்டு பிடிப்பது அதை சரி செய்வது

நம்முடைய  நாட்டில் சுதந்திர பொருளாதாரம் என்ற பெய்ரில் அன்னிய முதலீடுகள் பெருகிய போது அவர்கள் நமது உள் நாட்டுச் சந்தையை அவர்களது கைகளில் எடுத்துக் கொண்டனர். தோசையிலிருந்து தக்காளி வரை அவர்களே விலை நிர்ணயம் செய்கின்றனர். தயிரிலிருந்து கஷாயம் வரை மார்க்கெட்டிங்க் ஏஜென்ஸிகள் - பிராண்ட்ட் கம்பெனிகளே விற்பனை செய்கின்றன. விலை அவர்கள் சொல்வது தான். ஒரு உதாரணத்திற்கு உள்ளூர் சத்து மாவை புறக்கணித்த நாம் ஹார்லிக் பூஸ்ட் என்று பிராண்டுக்கு மாறினோம். அவர்களோ – (போட்டிக் கம்பெனிகளாக இருந்தாலும் கூடஎல்லோரும் பேசி வைத்து ஒரே விலை நிர்ணயிக்கின்றனர்.) இந்த மாதம் அரைக்கிலே ஹார்லிக்ஸ் விலை 145 எனறால் சந்தேகமே வேண்டாம் பூஸ்ட் விலை தானாகவே எகிரிவிடும். அவர்களுடைய நோக்கம் தெளிவானது. இலாபத்தை மக்களுக்கு கொடுத்து விடக்கூடாது என்பதே.

இன்றைய முறைகேடான விலை உயர்வுக்கு இரண்டு காரணிகள்
1.   சுய நலப் பித்து கொண்ட கார்ப்ப்ரேட் முதலாளிகள்
2.   பொறுப்பற்றநேர்மையற்ற ஆட்சித் தலைவர்கள்

·         இன்றைய வியாபாரிகள் வியாபாரிகள் அல்ல; அவர்கள் முதலைகள்
·         கோல்கேட் கம்பெனி பெரிய அளவில் விற்பனையான போது விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கு அவர்கள் கையாண்ட உத்தி. பேஸ்ட் பேக்கின் வாயை பெரிதாக்கினர்.
·         இன்று பொருளாதாரம் படிப்பவர்கள் மக்களை மேலும் சுரண்டு வதற்கு செலவாளிகள் ஆக்குவதற்கான வழி முறைகளை ஆய்வு செய்கின்றனர்.

சில நல்ல வியாபாரிகளை எண்ணிப்பார்க்கிறோம் இத்தகைய வியாபாரிகளை இனிமேல் வரலாற்றிலும் கதைகளிலும் தான் கேட்க முடியும் என்று தோன்றுகிறது..

எனினும் முஃமினான வியாபாரிகள் இவர்களை முன்னுதாரனமாக கொள்ள வேண்டும்.

جاء عن محمد بن المنكدر -رحمه الله- أنه كان له سلعٌ تباع بخمس وأخرى بعشرة، فباع غلامه في غيبته شيئاً من الخمسيات بعشرة، فلما عرف لم يزل يطلب ذلك المشتري طول النهار حتى وجده، فقال له: إن الغلام قد غلط فباعك ما يساوي خمسة بعشرة. فقال: يا هذا قد رضيت. قال: وإن رضيت فإنا لا نرضى لك إلا ما نرضاه لأنفسنا، فاختر إحدى ثلاث: إما أن تستعيد مالك وتعيد السلعة، وإما أن نرد إليك خمسة، وإما أن تأخذ بدلاً من سلعة الخمس سلعة العشر. فقال: أعطني خمسة. فرد عليه خمسة، وانصرف الأعرابي المشتري يسأل ويقول: من هذا الشيخ؟ فقيل له: هذا محمد بن المنكدر. فقال: لا إله إلا الله، هذا الذي نستسقي به في البوادي إذا قحطنا.
وكان أبو حنيفة -رحمه الله- بزازاً يبيع القماش، وكان عنده ثوبٌ فيه عيب، فجعله جانباً، فجاء خادمه في غيبته فباع الثوب المعيب بقيمته كما لو كان سليماً، فلما جاء الإمام إلى محله وسأل عن ذلك الثوب قال الغلام: بعته. قال: بكم؟. قال: بكذا –أي: بسعر السليم-. قال: هل أطلعت المشتري على العيب الذي فيه؟. قال: لا. فتصدق بقيمة الثوب كله.

وقد خرج النبي -صلى الله عليه وسلم- إلى المصلى فرأى الناس يتبايعون، فقال: ((يا معشر التجار)). فاستجابوا لرسول الله -صلى الله عليه وسلم-، ورفعوا أعناقهم وأبصارهم إليه. فقال: ((إن التجار يبعثون يوم القيامة فجاراً، إلا من اتقى الله وبر وصدق)). رواه الترمذي وهو حديث صحيح.

அன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு மக்களின் மீது உண்மையான் அக்க்றை இருந்த்தால் இது போன்ற சிரமங்கள் மக்களுக்கு ஏற்பட்ட  போது அவர்கள் புழுவாய்த்துடித்தார்கள். போர்க்கால அடிப்ப்டையில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை போக்கினார்கள்.

உமர் (ரலி) காலத்தில் ஒரு தடவை 9 மாதம் கடும் வறட்சி நிலவியது.
ولما قامت الأزمة في عهد عمر -رضي الله عنه- في عام الرمادة، وحصل قحطٌ شديد وقل الطعام، ودام 9 أشهر. وسمي عام الرمادة؛ لأن الريح كانت تسفي تراباً كالرماد، وقيل: لأن الأرض كانت سوداء مثل الرماد.
·        حث الناس على كثرة الصلاة والدعاء واللجوء إلى الله، وكان يصلي بالناس العشاء، ثم يخرج حتى يدخل بيته، فلا يزال يصلي حتى يكون آخر الليل، ثم يخرج فيأتي الأنقاب –أطراف المدينة – فيطوف عليها ويقول في السحر: اللهم لا تجعل هلاك أمة محمد على يدي.    ويقول: اللهم لا تهلكنا بالسنين –يعني القحط- وارفع عنا البلاء، يردد هذه الكلمة
·        كتب إلى عماله على الأمصار طالباً الإغاثة، وفي رسالته إلى عمرو بن العاص -والي مصر-، بعث إليه: "يا غوثاه! يا غوثاه! أنت ومن معك ومن قبلك فيما أنت فيه، ونحن فيما نحن فيه". فأرسل إليه عمرو بألف بعير تحمل الدقيق، وبعث في البحر بعشرين سفينة تحمل الدقيق والدهن، وبعث إليه بخمسة آلاف كساء.
·        أرسل إلى سعد بن أبي وقاص، فأرسل له بثلاثة آلاف بعير تحمل الدقيق، وبعث إليه بثلاثة آلاف عباءة.
·        أرسل وإلى والي الشام، فأرسل إليه بألفي بعير تحمل الدقيق، ونحو ذلك مما حصل من مواساة المسلمين لبعضهم
·        أحس عمر بمعاناة الناس، قال أنس -رضي الله عنه-: كان بطن عمر يقرقر عام الرمادة، وكان يأكل الزيت، ولا يأكل السمن. فقرقر بطنه فنقرها بأصبعيه، وقال: تقرقر، إنه ليس لكِ عندنا غيره حتى يُحيا الناس -أي: يأتي الله بالحياة والمطر الذي يغيث به الأرض-.
·        وقال أسلم: كنا نقول: لو لم يرفع الله المَحْلَ عام الرمادة؛ لظننّا أن عمر يموت هماً بأمر المسلمين.
·         அப்போது தான் பெருமானாரின் பெரிய தந்தை அப்பாஸ் (ரல்) அவர்களை வஸீலாவாக் வைத்து அல்லாஹ்விடம் மழை வேண்டி உமர் (ரலி) அவர்கள் பிரார்த்தித்தார்.
·         யூசுப் (அலை) அவர்கள், எகிப்து மக்களுக்கு தானியங்களை பங்கிட்டு வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நோன்பு நோற்றார்கள். அப்போதுதான் மக்களின் பசி தனக்கு நினைவில் இருக்கும் என்று சொல்வார்கள்.

இன்றைய கால கட்ட்த்தில்ஆட்சிப் பொறுப்பில் இருப்ப்வளின்  பெரும் செலவுகள்ஊதாரிச் செலவுகள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கியக் காரணம் ஆகும்

நம்முடைய தலைவர்கள் யாரும் ஒரு ஏழை தேசத்தின் அதிகாரிகள் என்பது போல நடப்பதே இல்லை.

இன்றைய சமூகத்திற்கு நேர்ந்த மிகப் பெரும் தீமை. ஆட்சியாளர்கள் மக்களிடம் நேரமையற்றவர்களாகஉண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய எண்ணம் கொண்டவர்களாக இல்லாமல் இருப்பதாகும்

தமிழக அரசு பால் விலையையும்பேருந்து கட்டணத்தையும் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணம் கனிசமாக உயர்த்தப் படக்கூடும் என்று அறிவித்துள்ளதுஅதற்கான நியாயத்தையும் மிக இளகிய பாணியில் சொல்லப் பட்டுள்ளது. அந்தக் காரணங்கள் ஓரளவு உண்மையே என்றாலும் நம்முடைய  ஓட்டுக்களை வாங்கி, நம்மை ஆளுகிறவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் பாருங்கள்!

தேர்தல்கள் அனைத்தும் முடிந்த பிறகு, இலாபங்கள அனைத்தையும் பெற்ற பிறகு எவ்வளவு அழகாக மக்களை மொட்டை அடிக்கிறார்கள்?

இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு நியாயமாக நேர்மையாக நடந்து கொள்ளும் ஒரு அரசியல் வாதியை பார்ப்பது அரிதாகிவிட்ட்து.

இந்தியா குடியரசான பிறகு நேரு உத்தரபிரதேசத்தில் ஒரு ஊருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப் பட்டிருகிற வேட்பாளர் சரியானவர் அல்ல என்பது அங்கு சென்ற பிறகுதான் அவருக்கு தெரிந்த்து. நேரு அந்தக் கூட்ட்த்தில் இப்படி பேசினார். நாங்கள் தலை நக்ரில் இருக்கிறோம். இங்கிருப்பவர்கள் ஒரு பட்டியலைத் தருகிறார்கள். அதில் ஒவ்வோருவரை பற்றியும் முழுமையாக எங்களுக்குத் தெரியாது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப் பட்டிருக்கிற வேட்பாளர் சரியானவர் அல்ல என்று தெரியவருகிறது. அப்ப்டியானால் அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்

மக்களிடம் நேர்மையாக நடந்து கொள்கிற இத்தகைய அரசியல் வாதிகளை இனி எங்கே போய் தேடுவதுஇதற்கான தீர்வுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்

பிரச்சினைக்கு தீர்வு மக்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்

ம்க்களிடம் மாற்றம் வராத வரை ஆட்சியாளர்கள் மாற மாட்டார்கள்.  மக்கள் எதிர்க் கேள்வி கேட்காதவரை ஆட்சியாளர் திருந்த வாய்ப்பில்லை.
இவ்வாண்டு 9.12 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு லாப்டாப்கள், 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் கருவிகள், 12,000 குடும்பங்களுக்கு தலா ஒரு கறவை மாடு, மேலும் 1 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் என்ற ரீதியில் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இவற்றிற்காக 2353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இலவசங்கள் நாங்கள் கேட்டோமா ! லாப் டாப் நாங்கள் கேட்டோமா ! நீங்கள் ஆட்சிக்கு வர கண்டதை கூறுவீர்கள் அதற்கு நாங்கள் பலி கடாவா ? எங்களுக்கு இலவசமும் வேண்டாம்...விலை உயர்வும் வேண்டாம்  
என்று இப்போது சிலர் சொல்கிறார்கள் இதை எல்லோரும் சொல்ல வேண்டும்?

ஒரு  பஸ் வைத்திருப்பவன் சில வருடங்களில் 40 பஸ்க்ளை இயக்குகிறான். பல்லாயிரம், பஸ் வைத்திருக்கிற அரசு பேருந்து நிறுவனம் நஷ்ட்த்தில் ஓடுகிறது ஏன்?   
·          வேலை செய்யாமலே சம்பளம் வாங்குகிற யூனியன் தலைவர்கள்!
·         நான்கு மெக்கானிக்குகள் வேலை செய்வதை மேற்பார்வையிட, ஒரு டைம் கீப்பர், இரண்டு போர்மென்கள் , மேலதிகாரிகளாக இரு உதவி இளநிலை பொறியாளர்கள்,அவருக்கு மேல் ஒரு இளநிலைப் பொறியாளர், அவருக்கு மேல் உதவிப் பொறியாளர், அவருக்கு மேல் பொறியாளர்,அதற்கும்,மேல்,கிளை மேலாளர்.  அவருக்கும்,மேல் ..
என்று பெரும் தேவையற்ற நிர்வாகச் செலவின்ங்கள்/  

இது பற்றி எல்லாம் கேளிவி கேட்காமல் பொதி சுமக்கிற கழுதைகளாக ,பொது மக்கள் இருக்கிறவரை அம்மா ! என்ன ? ஐயா என்ன ?  எல்லா ஆட்ட்சியாளர்களுமே இப்படித் தான் இருப்பார்கள்.