வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 08, 2012

பெண்களும் இஸ்லாமும்


  இஸ்லாம் எல்லா அம்சங்களிலும் முழுமை அடைந்த மார்க்கம், ,
பெண்கள் தொடர்பான விசயத்திலும் அப்படித்தான்.
·         பெண்களின் பாதுகாப்பு
·         பெண்களின் சுய கவுரம்
·         பெண்களின் உரிமைகள்
·         பெண்களின் கடமைகள்
·         பெண்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
·         பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
·         பெண்களுக்கான அங்கீகாரமும் மரியாதையும்
·         பெண்களும் அழகும்
·         பெண்களும் அறிவும்
·         பெணகளும் சேவையும். 
·         பெண்மையின் பெருமை
·         பெண்களும் வேலை உரிமையும்
·         பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம்.
·         பெண்களும் தலைமைப்  பொறுப்பும்.
·         பெண்களும் குடும்பமும்
·         பெண்களும் சமயமும்
·         பெண்களும் பண்பாடும்
·         பெண்களும் போராட்டமும்

இனி இது போல எத்தனை தலைப்புக்களை நீங்கள் வரிசைப் படுத்தினாலும் அது அத்தனையிலும் இஸ்லாத்திற்கு உறுதியான கருத்துக்கள் உண்டு. அது தெளிவானது. முரண்பாடுகள் அற்றது.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம்.

இந்த விவகாரங்களில் அனைத்திலும் இஸ்லாத்தின் கருத்துக்கள் பெண்களின் உரிமையை பேணக்கூடியதும் அவர்களுக்கு நனமையானதுமாகும்.

போலித்தனமானதோ, பெண்களை ஆபத்தில் சிக்க வைக்க கூடியதோ அல்ல.

இஸ்லாத்தில் பெண்களில் மதிப்பு உத்திரவாதம் செய்யப் பட்டுள்ள வழிமுறையை கவனியுங்கள்

இறுதி தூதுதுவத்திற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்யப் பட்டார்கள்கள் எனில் அது ஒப்படைக்கப் பட்ட முதல் இடமாக பெண்மை அமைந்த்து.

புதி விற்பனையை தொடங்கும் போது முதல் விற்பனையை தொடங்கி வைப்பவர் மட்டும் அல்ல. அதைப் பெற்றுக் கொள்பவரும் சிறப்பானரவே இருப்பார். அத்தகைய பெருமை அன்னை கதீஜாவுக்கே கிடைத்த்து.

அபூபக்கர் (ரலி) க்கு பெருமானாரைப் பற்றி முன்பே தெரியும். அவர் காத்திருந்தார். ஆயினும் அந்த வாய்ப்பு அவருக்கு இரண்டாவதாகவே கிடைத்த்து.

إن أبا بكر صحب النبي صلى الله عليه وسلم وهو ابن ثماني عشرة سنة والنبي صلى الله عليه وسلم ابن عشرين سنة, وهم يريدون الشام للتجارة, فنزلوا منزلا فيه سدرة, فقعد النبي صلى الله عليه وسلم في ظلها, ومضى أبو بكر إلى راهب هناك فسأله عن الدين. فقال الراهب: من الرجل الذي في ظل الشجرة؟ فقال: ذاك محمد بن عبد الله بن عبدالمطلب. فقال: هذا والله نبي, وما استظل أحد تحتها بعد عيسى.

1500 வருடங்களுக்கு முந்தைய திருக்குரானில் ஒரு இட்த்தில் கூட பெண்களை இழிவு படுத்த்தி ஒரு சொல் இல்லை.

·         அமெரிக்காவின் சியாட்டல் மாநிலத்தில் ஒரு பள்ளி த்லைமை ஆசிரியருக்கு உதவியாளராக இருந்தவர் மிஸ் கரே.
அவர் பள்ளிக்கூடத்திற்கு போகிற வழியில் ஒரு நூலகம் இருந்தது. ஒரு நாள் அந்த நூலகத்திற்கு முன் பழைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
மிஸ் கரே அதில் புனித குர் ஆனின் மொழி பெயர்ப்பை பார்த்தார். வாங்கினார். நீண்ட காலத்திற்கு பிறகு தன்னுடை நூலகத்தை சுத்தம் செய்யும் போது அந்த மொழி பெயர்ப்பை படித்தார். இஸ்லாமை தழுவினார். அதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார்.
திருக்குர் ஆனைப் படித்தேன். ஒரு இடத்தில் கூட பெண்களை அது இழிப்டுத்திக் கூறவில்லை.

பெண்களுக்கான சம உரிமையை மரியாதையை  திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துக் கூறியது.
சமய,  வழிபாடு ரீதியாக உலக அளவில் ஆண்களுக்கு நிகரான அந்தஸ்தை பெண்களுக்கு வழங்கியதில் திருக்குர் ஆனுக்கு ஈடாக இன்னொன்று இல்லை.

ஆன்மீக ரீதியாக பெண்களின் பங்கை மறுப்பதே இஸ்லாம் அல்லாத மற்ற அனைத்து சமூகங்களிலும் சமயங்களிலும் வழக்கம்.

وَمَنْ يَعْمَلْ مِنْ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا(124) النساء
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ(97) النحل

நபிகள் நாயகம் (ஸல்) நல்ல பெண் இந்த உலகின் சிறந்த பொருள் என்றார்கள்

الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الضالحة

عن أبي هريرة -رضي لله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (استوصوا بالنساء خيرا) البخاري ومسلم.
عن أبي هريرة -رضي الله عنه- قال : قال رسول الله -صلى الله عليه وسلم-: (أكمل المؤمنين إيماناً أحسنهم خلقاً، وخياركم خياركم لنسائهم  -أحمد وأبي داود، والترمذي  .


இஸ்லாம் பெண்கள் தொடர்பாக சில சட்டங்களில் வேறுபாடு காட்டியுள்ளது அதற்கு இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது. அவர்களது அந்தஸ்த்தை குறைத்து அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்று அர்த்தமல்ல.

பெண்களின் உடல் திறன்,மற்றும் உணர்ச்சி  அறிவு நிலை வேறுபாடு காரணமாக பெண்களையும் சமூகத்தையும் பாதுகாக்கிற நோக்கில் சில சட்டங்களில் வித்தியாசப் படுத்தியுள்ளது.

இது போன்ற சட்ட வித்தியாசங்கள் இன்றைய அரசுகளிலும் நடைமுறையில் உண்டு. உதாரணத்திற்கு பெண்களுக்கு மட்டும் பிரசவத்திற்கு விடுமுறைகடுமையான வேலைகளிலிருந்து விலக்கு, பாதுகாப்பான இடங்களில் மட்டும் பணியமர்த்த்ப ப்டுதல் போன்ற பல வித்தியாசங்கள் இன்றைக்கும் உண்டு

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் 65 இனங்களில் பெண்கள் பணிக்கு அமர்த்தப் படக்கூடாது என்று சட்டமிருக்கிறது.

பெண்களுக்கு இந்த தீன் வழங்கியுள்ள மரியாதையைதகுதியை-  உரிமையை முஸ்லிம் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் ஜமாத் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது ஆண்கள் தொடர்பான விச்யங்களை மட்டுமே கவனிக்க கூடியது பெண்கள் குறித்து கவலைப்ப்டாத்து என்ற சூழ்நிலை பெரும்பாலும் இருக்கிறது. அத்தகைய சூழ்நிலை மாறவேண்டும்

·         இன்னும் சில ஊர்களில் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கப் படுவதில்லை
·         பஞ்சாயத்து விசாரனையின் போது பெண்களை மதிப்பதில்லை
·         பெண்களின் துயர நிலையை போக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
·         மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கேற்ற வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பதில்லை
·         தலாக் வரதட்சனை உள்ளிட்ட விசயங்களில் பெண்களுக்கு போதிய நியாயம் கிடைக்க பாடுபடுவதில்லை

முஹம்மது நபி (ஸல்) அவர்களிட்த்தில் பெண்களுக்கு எத்தகைய இடம் இருந்த்து என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

·         தங்களது அனைத்து தேவைகளுக்காகவும் அனுகுவார்கள்
·         யாரை திருமணம் செய்வது?
·         உதவி
·         கொடுமையை முறையிடுவார்கள்
·         தீனை தெரிந்து கொள்ள வெட்கப் பட மாட்டார்கள்

 
பெண்கள் விசயத்தில் இன்று நமக்குள்ள கடமை
இஸ்லாமிய ஷரீஅத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தில் பெண்களுக்குள்ள முக்கியத்துவத்தையும் , அவர்களுக்கு கிடைக்கிற நன்மையையும் புரிய வைக்கனும்.

ஒரு உதாரணத்த்திற்கு . பர்தா  - பெண்களின் நன்மைக்காகவே சட்டமாக்கப் பட்ட்து.

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(59)

பர்தா என்பது முறைகேடான பாலுணர்வு தூண்டுதல்கள் ஏற்படாமல் பாதுகாப்பதன் மூலம் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்கிறது.

இஸ்லாம் பெண்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை திணிக்கிறது என்று ஓலமிடுகிற நாடுகளில் நிலைமை என்ன என்பதை கவனிக்க வேண்டும்.

சுவீடன். உலகின் பெரும் பண்க்கார நாடு. அங்குள்ள சிறுவர்கள் பெண்கள் கூட பணக்கார்ர்கள், அங்குள்ள மக்கள் யாரும் உழைக்காமல் உல்லாசமாக ஊர் சுற்றி வாழ்ந்தால் கூட ஆறு ஆண்டுகளுக்கு அவர்களுடை சேமிப்பு போதுமானாதாகும். ஒரு இளைஞன் நான் வேலைக்கு செல்வதில்லை என்று அரசாங்கத்திற்கு தெரிவித்து விட்டால். அவனுக்கு மாதம் ரூபாய் 20 ஆயிரத்தை உதவித்தொகையாக அரசு வழங்குகிறது. இவ்வளவு வசதி படைத்த நாட்டில் frtt sex  யார் எப்படி வேண்டுமானாலு வாழ்ந்து கொள்ளலாம் என்ற கலாச்சாரம் நில்வுகிறது.

இத்தனை இருந்தும் அங்கே அமைதி தவழ்கிறதா எனில் அது தான் இல்லை. இன்னொரு தகவல் .அ ங்கு அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்களாகும்.

அங்கு விவாரத்தில் 70 சதவீத்த்திற்கும் அதிகமாகும். அதாவது 100 ல் 70 திருமணங்கள் முறிந்து போகின்றன. அது மட்டுமல்ல அங்குதான் உலகின் அதிக தற்கொலை நிகழ்கிறது.

நம்முடைய நாட்டில் ஆண் பெண் வேறுபாடு கவனத்திலு எடுத்துக் கொள்ளப் படுவதும், பெண்களின் பர்தா முறை ஓரளவிலேனும் ந்டைமுறையில் இருப்பதால் தான் இங்குள்ள சமூகத்தில் மன அமைதி தவழ்கிறது.

ந்ன்கு யோசித்துப் பாருங்கள்! மனைவி ,சகோதரி அல்லது மகள், கணவன மகன் அல்லது தந்தை சாவகாச்மாக இன்னொரு பெண் அல்லது ஆணுடன் பழகுவது ஒவ்வொருவருக்கும் எத்தகைய மன் அழுத்த்த்தை தரும் .

அந்த சமூகத்தில் ச்ச்சரவுகளை தவிர வேறு என்ன மிஞ்சும்.?

பர்தா முறை என்பது பெண்களின் பாதுகாப்பு சமூகத்தின் அமைதி அனைத்தோடும் சம்ப்ந்ந்தப் பட்ட்து என்பது நமது பெண்களுக்கு ஆழமாக புரிய வைக்கப்படனும்.

அது மட்டுமல்லாது பர்தா என்பதன் பொருள் என்ன என்பதும் விளங்க வைக்க்கப்படனும்.
பர்தா உடலுக்கு மேல் போர்த்துக் கொள்கிற் ஒரு ஆடை மட்டுமல்ல. 
அந்நிய ஆண்களை தம் பக்கம் திசை திருப்பாமல் இருக்க போதுமான குண இயல்பை கைகொள்வதே ஆகும்.
பர்தா போட்டுக் கொண்டு அந்நியர்களிடம் வழிந்து பேசிக்கொண்டிருப்பது, அந்நியர்களுடன் ஈசிக் கொண்டு பழகுவது பர்தாவுக்கு பாதகமானது மட்டுமல்ல. குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பாதகமானதாகும்.

பர்தா பற்றிய சரியான த்த்துவத்தை நமது பெண்களுக்கு நாம் புரிய வைக்கனும்

அதே போல ஷரீஅத்தை க்டைபிடிப்பதிலும் ஷாரீஅத்தை பாதுகாப்பதிலும் பெண்களது பொறுப்புணர்வை நாம் எடுத்துரைக்கனும்.

தந்தை இறந்த நான்காம் தலைக்கு எண்ணை தேய்ந்துக் கொண்டார் உம்மு ஹபீபா (ரலி) பிறகு காரணம் சொன்னார். எனக்கு இப்போது இது தேவை இல்லை. எனினும் எவருடைய மரணத்துக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க் கூடாது என பெருமானார் சொன்னார்களே அதற்காக நான எண்ணை பூசிக் கொள்கிறேன,என்றார்.

சுதந்திரம் உரிமை என்ற பெயரில்  இந்தய உயர்ந்த கலாச்சாரத்திலிருந்து  அவர்களை வெளியே இழுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அவர்களுக்கு நாம் அடையாளம் காட்டனும்
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில்  கணவன் மனைவிக்கு செலவுக்கு கொடுக்க மறுக்கிறான். அவளும் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிறான். இதனால் குடும்பத்தின் பாரத்தை பெரிய அளவில் சுமக்க வேண்டிய நிர்பந்தம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல போலியாக துணிச்ச்லூட்ட்ப்ப்டுகிற காரணத்தால பெண்களை ஆண்களை எதிர்க்கிறார்கள். அதன் விளைவ் என்ன தெரியுமா?
டைஜஸ் இதழ் கூறுகிறது.
கணவன் அல்லது காதலானால் பெண்கள் அதிகம் அடிக்கப் படுகிறார்கள்.

உலகில் பெண்கள் அதிகம் துண்பத்தை அனுபவிக்கிற நாடுகள் கிழக்கில் இல்லை மேற்கில் தான் என்பது இன்று நிரூப்னமாகி வருகிற உண்மை

பெண்கள் தொடர்பான விவகாரங்களில் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் மீறப்படுகிற காரணத்தால் தான் உலகில் சர்ச்சைக்களும் ச்ச்சரவுகளும் பெருகு கின்றன.

இஸ்லாம் எங்கே செழிக்கிறதே அங்கே பெண்கள் பெருமிதமாக வாழ்க்வார்கள்.

No comments:

Post a Comment