பொருளாதார திட்டமிடுதல்
மார்ச் மாதம் அரசுகள் புதிய பட்ஜெட்களை வெளியிடுகிற நேரம். இந்த் ஆண்டில் என்ன செய்யப் போகிறோ, அதற்காக திட்டச் செலவு என்ன? என்பவை தெரிவிக்கப் படும்
தற்போது இரயில்வே பட்ஜட் அறிவிக்கப் பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பொது பட்ஜட் அறிவிக்கப் பட இருக்கிறது.
பட்ஜட் அறிவிப்புகள் மிக முக்கியமாக கருதப்படுபவை என்றாலும் தற்காலத்தில் அதன் மரியாதை குறைந்து வருகிறது.
காரணம் பட்ஜட்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் இதன் மூலம் பெரிதும் ஏமாற்றப் படவே செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு இந்த ஆண்டு தமிழகத்திற்கு 13 புதிய இரயில் சேவைகள் என அறிவிக்கப் ப்ட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்ட பல திட்டங்கள் இன்னும் நடைமுறைப் படுத்தப் படவில்லை. அத்திட்டங்கள் என்ன ஆச்சு என்ற விபரம் யாருக்கும் தெரியாது.
மக்கள் இது விசயத்தில் விழிப்படைய வேண்டும். என்ன சலுகை அறிவிக்கப் படுகிற என்பதில் மட்டுமெ கவனத்தை செலுத்தாமல் நாட்டின் வளம் எப்படி செல்வழிக்கப் படுகிறது. யாருக்காக செலவ்ழிக்கப் படுகிற என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
இந்தியாவின் சாதாரணப் பொதுமக்கள் பட்ஜெட் பற்றி எல்லாம் விவாதித்துக் கொள்கிற காலம் தீர்க்கமாக முடிவு களை அலசுகிற நேரம் எப்போது வருமொ என்று ஏங்க வேண்டியிருக்கிறது.
இது ஒரு புற்ம் என்றால் இன்னொரு பக்கம் முஸ்லிம் சமுதாயம் பட்ஜெட் போன்ற திட்டமிடுதல்கள் குறித்து பெரிதாக யோசிப்பதில்லை.
முஸ்லிம்களின் பொருளாதார ஈடுபாடுகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் குருட்டுத்தனமானதாகவே இருக்கிறது.
ஒரு காலத்தில் பெரிய வியாபாரிகளாக இருந்தவர்கள் தற்ப்பொது நடுத்தரமாகவும் நடுத்தரமானவர்கள் குருவியாபாரிகளாகவும் மாறிவிட்டார்கள்.
ஒரு ஊரில் சிறு மிட்டாய்க்கடையாக இருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இன்று மாநில அளவில் கடை பரப்பியிருக்கிறது. பல துணிக்கடைகளுக் நகை கடைகளும் இவ்வாறே வளர்ந்திருக்கின்றன. முஸ்லிம்களின் பாரம்பரிய நிறுவன்ங்கள் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது?
தூர நோக்கின்மையும், திட்டமிடுதல் இல்லாமையும் பெருந்தன்மை குறைவும் முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவுக்கான காரணங்களாகும்.
எங்களது ஊரில் முஸ்லிம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் வழங்க வந்த் மாவட்ட ஆட்சியர் பெண்கள் ஒவ்வொருவரிடமும் கடனுக்கான செக்கை கொடுத்து விட்டு “ இதை வைத்து என்ன செய்யப் போறீங்க! என்று கேட்டார்.
ஒரு வெட்க்க் கேடு ! ஒரே ஒரு பெண் மட்டும் நான் இட்லிக் கடை வைப்பேன் என்று சொன்னார். மற்ற அனைவரும் தலையை சொறிந்து கொண்டும் வழிந்து கொண்டும் சென்றார்
நம் சமுதாயத்தில் திட்டமிடுதல் அதிலும் பொருளாதார திட்டமிடுதல் என்பது எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் இது!
நம்முடைய மார்க்கமோ ஒவ்வொரு விசயத்திலும் திட்டமிடுதலை ஒரு பாடமாகவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்த காரணமே மனிதர்களுக்கு திட்டமிடுதலை கற்றுக் கொடுக்கத்தான.
إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ(54)
ஜகாத் –பொத்தம் பொதுவான தர்மம் அல்ல.
அது ஒரு சரியான பொருளாதார திட்டமிடுதலாகும்.
கணக்குப் பார்க்கிற இயலபையும். மேலும் மேலும் வளர்ச்சி குறித்த சிந்தனையும் இது தூண்டுகிறது. 5 பேருக்கு ஜகாத் கொடுத்தவர் இனி 50 பேருக்கு ஜகாத் கொடுக்க நினைப்பார்.
ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும் இனி அடுத்த மூன்றாண்டுகளுக்கு தன்னுடைய திட்டம் என்ன? தான் எந்த நிலைக்கு வளர்ந்திருக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
· இன்றைய சுய முன்னேற்ற பயிற்சியாளர்கள் “கோல் செட்டிங்க”ஐ அதிகம் வலியுறுத்துகிறார்கள். ஒரு இலக்கை தீர்மாணித்துக் கொண்டால் தான் அதை நோக்கி நடைபோட முடியும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
· நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டும் என்று நினைத்தால் வாங்குவது தாமதமாகும். மாருதி ஸ்விப்ட் அல்லது இனோவா அல்லது ஸ்கார்பியோ என்று துல்லியமாக நினைத்தால் சீக்கிரம் வாங்கி விடுவீர்கள் என்கிறார்கள் அவர்கள்.
· இஸ்லாம் கோல் செட்டிங்கிற்கு முன்மாதிரி மார்க்கமாகும்.
· நிய்யத் என்று இஸ்லாம் கோல் செட்டிங்கை குறிப்பிடுகிறது.
· ஒரு நிய்யத் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது பாருங்கள்.
· இன்றைய லுஹருடை 4 ரக் அத்தை இந்த இமாமை பின் தொடர்ந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விறாக அதாவாக / கழாவாக தொழுகிறேன்.
· உயர்ந்த, பரந்த கோல செட்டிங்க இன்றை நம்முடைய சமுதாயத்தில் இல்லாமல் போனதும் நமது பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.
· பத்து குடும்பம் என்னை வைத்து பிழைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட இளைஞர்கள் இன்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
· முஸ்லிம் சமூகத்தில் தொழிலதிபர்களின் எண்ணிக்கை குறைந்த்தற்கு இது ஒரு காரணமாகும்.
முஸ்லிம்களிடம் வரவுக்கு மீறிய செலவும், சேமிப்பு இன்மையும் அவர்களது பொருளாதாரத்தை பாதிக்கிறது.
பொருளாதாரத்தைப் பாதுகாக்க இஸ்லாம் கண்டிப்பான் உத்தரவுகளை இட்டுள்ளது.
ِ إ نَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلَاثًا قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ – البخاري 1477
ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا -مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَنْزٍ مَيِّتَةٍ فَقَالَ مَا عَلَى أَهْلِهَا لَوْ انْتَفَعُوا بِإِهَابِهَا
عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ خَطِيبًا فَكَانَ فِيمَا قَالَ إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَنَاظِرٌ كَيْفَ تَعْمَلُونَ أَلَا فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ
தகுதிக்கு மீறிய செலவு என்பது இன்றை முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு அடையாளமாகவே மாறிப்போய்விட்டது.
வீடு கட்டுதல் - விழாக்களை நடத்துதல் - பொருட்களை வாங்கிக் குவித்தல் நுகர்வு கலாச்சார்ம, முஸ்லிம் சமுதாயத்தை மேலும் கடனாளிகளாக – மாற்றிக் கொண்டிருக்கிறது.
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا(27
பொருளாதாரம் விச்யம் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முக்கிய வழிகாட்டுதலை எப்போதும் மறந்து விடக்கூடாது.
· நம்முடைய பணம் – இறைவனால் நம்மிடம் தரப்பட்டுள்ளது.
· وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ
· பொருளாதார நிர்வாகம் முக்கியமானது. இறைவன் தந்த பொருளை உரிய முறையில் சம்பாதிக்க வேண்டும். உரிய முறையில் செலவு செய்யும் பொறுப்பு நம்முடையது.
· கணக்குச் காட்ட வெண்டும் என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.
·
பொருளாதார வளர்ச்சிக்கும் முறையான சம்பாத்தியம் மட்டுமல்ல முறையான செலவும் அவசியமாகும்.
முறைகேடாக செலவு செய்யப்படும் பரகத் இருக்காது. அது நமக்கு எதிராக அமையும்
ஒரு முறை, நஷ்டமடைந்த ஒரு வியாபாரியை சந்திக்க் ஒரு உஸ்தாதுடன் சென்றேன். அங்கு சென்றதும் உஸ்தாது கேட்ட முதல் கேள்வி. “ இவங்க! தப்பான காரியங்களுக்கு செலவு செய்வாங்களா? “
பக்கத்தில் இருந்தவர் சொன்னார். ஆமா! வீண் செலவு செய்வாங்க தான். கோயில் விசேசங்களுக்கு இலட்சக் கணகா செலவு செய்து விளக்கு அலங்காரம் மற்ற தோரணங்கள் கட்டுவாங்க! என்றார்.
பெரியவர் சொன்னார். அதுதான் காரணம். ஜகாத் கொடுத்தா மட்டும் பத்தாது. தப்பான வழிகளில் பணத்தை செலவு பண்ணாமயும் இருக்கனும். என்றார்.
இந்த மாதமும் அடுத்த மாதமும் இந்து சகோதர்ர்களின் திருவிழாக்கள் நடைபெறுகிற காலங்களாகும். முஸ்லிம் இளைஞர்கள் வியாபாரிகள் இவ்விழாக்களில் பங்கேறகவும் ஜாலி என்ற பெயரில் செலவு செய்கிறார்கள். எச்சரிக்கை.
அல்லாஹ் குர்ஆனில் இதை எச்சரிக்கிறான்,
பத்ரு யுத்த்த்தில் காபிர்களுக்காக செலவு செய்தவர்களுக்கு அவர்களது செலவு அவர்களுக்கு எதிரான நட்டமாக மாறியது என்று அல்லாஹ கூறுகிறான்.
وكان المطعمون للجيش الكفار اثني عشر رجلاً وكان كل واحد منهم ينحر كل يوم عشرة جزر، وهؤلاء الإثنا عشر هم: أبو جهل، وعتبة وشيبة ابنا ربيعة، وحكيم بن حزام، والعباس بن عبد المطلب، وأبو البَختري، وزمعة بن الأسود، وأُبي بن خلف، وأمية بن خلف، والنضر بن الحارث، ونبيه ومنبه ابنا الحجاج وفيهم أنزل الله تعالى: {إِنَّ الَّذِينَ كَفَرُواْ يُنفِقُونَ أَمْولَهُمْ لِيَصُدُّواْ عَن سَبِيلِ اللَّهِ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ} (الأنفال: 36).
யாருக்கு செலவு செய்யப் பட வேண்டுமோ அவர்களுக்கு பணம் செலவு செய்யப் படாவிட்டாலும் அது பாதிப்பை தரும்.
وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا(26)
குடும்பத்திலும் சமூகத்திலும் நலிந்தவர்களுக்கு உதவுவது பொருளாதார வளம் பெற்றவர்களின் கடமையாகும்.
பணம் சரியான வழியில் சம்பாதிக்கப் பட்டு சரியான வழியில் செவழிக்கப் பட்டு சரியான வகையில் முதலீடு செய்யப்படுமானார்ல் அது தனிநபர்களுக்கு மட்டுமல்ல. குடும்பத்தினருக்கும் சமூகத்திற்குமே பரகத்தாக அமையும்
என்வே அரசாங்கம் மட்டுமே பட்ஜெட் போட்டால் போதாது. நாமும் நமக்காக பட்ஜெட் போட வேண்டும், அதில் இஸ்லாமின் பொருளாதார வழிகாட்டுதல்களை கவனிக்க மறந்து விடக் கூடாது.
No comments:
Post a Comment