(அன்பான ஆலிம்களே!
பொடி எழுத்தில் உள்ள முன்னுரை உங்களது மஹல்லாவுக்கு சரிப்படும் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லை என்றால் இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு இதற்கு பின்னால இடம் பெற்றுள்ள வறுமை v/s இஸ்லாம் செய்திகளை உபயோகப் படுத்திக் கொள்ளவும்.)
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான வருவாய் வரையரையை நகர்ப்பகுதிகளில் ரூ.32 என்றும், கிராமப்பகுதிகளில் ரூ.29 என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.வறுமையை விரட்டி விட்ட்தாக காட்டிக் கொள்ள அரசுஇந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
உலகில் உள்ள ஏழைகளின் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் வசிப்பதாக உலக வங்கியின் ஆய்வு ஒன்று கூறுகிறது. அதே நேரம், நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்வதாகவும், அதனால் வறுமை ஒழிப்பு வெற்றிகரமாக நடந்தேறி வருவதாகவும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இந்திய அரசு கூறுகிறது.
வறுமயை ஒழிக்க இந்திய அரசு செய்த அற்புதமான(?) உத்தியை கடந்த இரண்டு நாட்களாக பத்ரிகைகளில் படித்திருப்பீர்கள்.
நாளொன்றுக்கு 32 ரூபாய் சம்பாதிக்கிற நகரவாசியும், 29 ரூபாய் சமபாதிக்கிற கிராம வாசியும் வறுமைக் கோட்டை தாண்டியவர்கள் என இந்திய திட்டக் கமிஷன் தலைவர் அலுவாலியா அறிக்கை அளித்தார். அது தற்போது நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஆகியுள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் என்ற வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
உலக காப்பகத்தின் வரையறையின்படி மேம்பாடு அடையாத நாடுகளின் வறுமைக் கோடு என்பது நாளொன்றுக்கு ஒரு ஆள் வருமானம் ஒரு அமெரிக்க டொலர் அல்லது ஆண்டொன்றுக்கு 365 அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த வரையறையின் அடிப்படையில் 75 விழுக்காடு இந்தியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடுகிறார்கள். அதாவது 80 கோடி மக்கள் வறுமையில் உழல்கிறார்கள்!
இந்த எண்ணிக்கையை குறைத்துக் காட்ட மத்திய அரசின் திட்டக் குழு தலைவர் கையாண்ட மன்சாட்சி அற்ற உத்திதான். வறுமைக் கோட்டுக்கு தற்போது அவர் அளித்த விளக்கமாகும்.
நகர்ப் புறத்தில் மாத வருமானம் ரூ 560 க்குக் குறைவாகவும், கிராமப் பகுதிகளில் ரூ368 க்குக் குறைவாகவும் சம்பாதிக்கும் மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோர் என்று வரையறுக்கிறார்கள்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் 2004-05 ஆம் ஆண்டில் இந்தியாவில 27.5 % மக்கள் தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே உழன்றதாக திட்டக் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அடிப்படையில்பார்தால் கூட இந்தியாவில் முப்பது கோடி மக்கள் ஒரு நாளைக்கு 29 ரூபாய் கூட சம்பாதிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு டீ 7 ரூபாய். ஒரு புரோட்டா 8 ரூபாய். என்று கண்க்குப் போட்டு பாருங்கள் 29 ரூபாயில் என்னென்ன சாதித்துவிடலாம் என்று புரியும்.
வாடகைக்குக் கூட உறைவிடம் தேட முடியாமல் வீதியில் படுத்துறங்கும் நிலை என்பது நிச்சய வறுமை. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமது அரசாங்கத்தின் வறுமைக் கோட்டுக் கணக்கீடு அப்படி நினைக்கவும் இல்லை; கணக்கிடவும் இல்லை.
இந்த வரையறை நடைமுறை நிலவரத்தை ஏளனம் செய்வது போலுள்ளது.
எதன் அடிப்படையில் வறுமைக் கோடு வரையப்படுகிறது ?
ஒரு ம்னிதனுக்கு கிராமங்களில் தினசரி 2400 கலோரி உணவும், நகரங்களில் 2100 கலோரி உணவும் கிடைத்தால் போதுமானது அவன் உயிர் வாழ்ந்து கொள்ள முடியும் என்று ஒரு காலத்தில் கருதப் பட்டது. இதற்கு 1978 இல் கணக்கிடப்பட்ட அளவுதான் 560 ரூபாய்.
உயிர் வாழத் தேவையான அடிப்படை ஆகாரத்தை 560 ரூபாய் அளிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், அது மட்டுமே ஒரு மனிதனை வறுமையில் இருந்து மீட்டு விடுவதாக இப்போது கருத முடியுமா?
இப்போதோசுகாதாரமான குடிநீர் வேண்டுமென்றால்கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.
அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி என எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும், குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினாலும் அதற்கும் ஒரு செலவு இருக்கிறது.
ஆணும், பெண்ணும் ஆடை உடுத்தாமல் வாழ முடியாது. சென்னை மாநகரில் 2100 கலோரி உணவைத் தின்று விட்டு அம்மணமாகத் திரிந்தால் அவன் வறுமைக் கோட்டைத் தாண்டியவனா? புரியவில்லை.
சாப்பாடு மட்டும் இந்தால் போதும், அவன் வீதியில் படுத்துத் தூங்கினாலும் பரவாயில்லை; சாலையில் மலம் கழித்தால் பரவாயில்லையா?
அதைத்தானா நமது வறுமைக் கோடு வலியுறுத்துகிறது?
கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து உயிரை மாய்த்டுக் கொண்ட விவசாயிகளைப் பற்றிய அதிகாரப் பூர்வ எண்ணிக்கை மட்டும் 1,80,000 க்கும் மேலாகும்.
உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இத்தனை பெரியது என்றால், உயிரோடு செத்துக் கொண்டிருப்ப்போர் எத்தனை கோடிப் இருக்கக் கூடும்?
ஆடம்பரம் என்று சில ஆண்டுகள் முன்பு வரை கருதப்பட்ட பொருட்களும் வசதிகளும் இன்று அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், இன்றியமையாதது என்று கருதக் கூடிய அம்சங்களே வறுமையை அளக்கப் பயன்படவில்லை என்பதே வேதனைக்குரிய விசயம்.
வறுமையை ஒழிக்க வழி காண்பதை விட்டு விட்டு வறுமைக் கோட்டை தள்ளிப் போடுகிற அரசாங்கத்தின் போக்கை எந்த நாகரீகத்தில் சேர்ப்பது?
வறுமை v/s இஸ்லாம்
வறுமை மனித சமூகத்தின் பெரிய தார்மீக சவால்.
· வரலாறு நெடுகிலும் சமுதாயத்தின் ஒரு அச்சுறுத்தலாகவே தொடர்ந்து வந்துள்ளது.
· ஏராளமான மக்களை பலி கொண்டுள்ளது.
· வரலாற்றில் இன்னொரு உண்மை பெரும்பாலானா மக்களை ஏழைகளாகவும் சிலர் செல்வந்தர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.
இஸ்லாம் செல்வந்தர்களை அடையாளப் படுத்தியுள்ள விதம் அற்புதமானது. வருமைக் கோடு நிர்ணயிப்பதற்கு பொருத்தமானது.
632 கிராம் வெள்ளிக்கி நிகரான பணத்தை கடன் எதுவுமில்லாம தன் தேவைகளுக்கும் மேலதிகமாக ஒரு வருடம் முழுவதும் வைத்திருப்பவர் செல்வந்தர் ஆவார்.
மற்றவர்களை இரு பிரிவாக இஸ்லாம் பிரிக்கிறது .
· மிஸ்கீன் – பணக்கார தகுதியை எட்டாத ஓரளவு வாழ்க்கை தேவைகளை பெற்றுக் கொண்டவர்
· பகீர் – அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்ளாதவர்.
பகீர் என்ற வார்த்தை குர்ஆன் 12 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. அதில் ஓரிட்த்தில்
يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمْ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ(15
இது ஆன்மீக நிலையில் அனைவரும் இறைவனிடம் கையேந்தி நிற்கிற வரியவர்களே என்பதை குறிப்பிடுகிறது. மனிதர்கள் இந்த உண்மையை ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
பொருளாதார அடிப்படையில் பகீர் என்பர் ஏதுமற்றவர் ஆவா.
இந்த மூன்று நிலைகளில் முதல் நிலையில் மக்கள் வாழ முயற்சிக்க வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது.
வாழ்க்கைத் தரம் எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்ற இஸ்லாமின் எதிர்பார்ப்பை இது புலப்படுத்துகிறது.
பெருமைக்கும் ஆதிக்கம் செய்வதற்கும் காரணமாகி விடாத வகையில் இஸ்லாம சொத்துக் களை சம்பாதிக்க ஊக்குவிக்கிறது.
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنْ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ(32)قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّي الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(33)
வறுமை அழிக்கப் பட வேண்டிய சமூக அவலம் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்
வறுமையிலிருந்தும் அதனால் ஏற்படுகிற பாதிப்புக்களிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோர வேண்டும் என இஸ்லாம் கற்பிக்கிறது.
عن أَبيُ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ الْفَقْرِ وَمِنْ الْقِلَّةِ وَمِنْ الذِّلَّةِ وَأَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ – النسائي 5368
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْفَقْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ - البخاري 6368
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنْ الْخِيَانَةِ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ – النسائي 5373
வறுமையும் குப்ரும் சமம்
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ فَقَالَ رَجُلٌ وَيَعْدِلَانِ قَالَ نَعَمْ – النسائي 5390
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ – البخاري 3241
நபிகள் நாயகம் (ஸல்) ஏழ்மையை ஏற்றார்கள் வறுமையை அல்ல!
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا وَأَمِتْنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ يَوْمَ الْقِيَامَةِ فَقَالَتْ عَائِشَةُ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّهُمْ يَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفًا يَا عَائِشَةُ لَا تَرُدِّي الْمِسْكِينَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ يَا عَائِشَةُ أَحِبِّي الْمَسَاكِينَ وَقَرِّبِيهِمْ فَإِنَّ اللَّهَ يُقَرِّبُكِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ – ترمذي2275
வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவதும் அவர்களை கைதூக்கி விடுவதும் ஒரு நல்ல் அரசின் முதன்மையான கடமையாகும்.
இலவசங்களை எடுத்து வீசுவது – வறுமையை போக்காது
சம்பாதிப்பதற்கு வழி காட்டுவது, சுய தொழில் தொடங்க ஒத்துழைப்பது, தேவையான கல்வி தொழில் நுட்பம், சூழ்நிலைகளை ஏற்படுத்த அரசுகள் முன்வர வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் முன்னுதாரணம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ الْأَخْضَرِ بْنِ عَجْلَانَ عَنْ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنْ الْمَاءِ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَأَتَاهُ بِهِ فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ ثُمَّ قَالَ لَهُ اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ – ابوداوود – 1398
இன்றைய நம்முடைய அரசுகள் அனைத்து வியாபாரங்களையும் தொழில்களையும் உலக மயமாக்கி உள்ளூர் தொழில்களை அழிய வைத்து விட்டு – வறுமைக்க் கோட்டை அழிக்க அதை தள்ளிப் போடுகிறார்கள்.
உயர் தொழிலதிபர்களுக்கு கணக்கின்றி சலுகைகளை வழங்குகிறார்கள். சாமாண்ய மக்களி சங்கட்த்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
டாடா கம்பனி உப்பு விற்க வந்த்து. உள்ளூர் வியாபாரிகள் காணாமல் போனார்கள்.
அதனால் வறுமைக் கோடு இன்னும் ஆழமாக இந்திய பூமியில் பதிந்து கொண்டிருக்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான் ;
புள்ளிகளால் வருவது கோடு. பெரும் புள்ளிகாளல் உருவாவது வறுமைக் கோடு.
நமது கடமை
வறுமைக் கோட்டைப் பற்றிய தகவல்கள் நமக்கு ஒரு நடுக்கத்தை தருகின்றன.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 29 ரூபாய் சம்பாதிக்க முடியாத மக்கள் 30 கோடிக்கு மேல் இருக்கிறார்கள்.
நம்மில் மூன்றில் ஒருவர் வீடு வாசலற்றவராக, தொழில் அற்றவராரக, வயிறாற சாப்பிடும் உணவு அற்ற்வராக, சுகாதர வசதிகளற்றவரக! வாழ்கிறார்.
அல்லாஹ் நம்மை எவ்வளவு நல்ல நிலையில் வைத்திருக்கிறான்.
எந்த் அளவு நம்க்கு வசதிகள் கிடைக்க்ப் பெற்றோமோ அந்த அளவுக்கு நாம் அல்லாஹ்வுகு வழிப்பட்டும் நன்றியோடும் நடக்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ - ترمذي 2437
நன்றியோடும் பொறுப்போடும் நடந்து கொண்டால் நமக்கு கிடைத்டுள்ள வசதிகள் மேலும் அதிகமாக கிடைக்கும்ம்
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
நமது இரண்டாவது கடமை நம்மைச் சார்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை கைதூக்கி விடுவது.
கவனிக்கவும், உதவுவது அல்ல. கைதூக்கி அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்பது.
இஸ்லாம் அதற்காக மூன்று பொருளாதார திட்டங்களை நமக்கு வழங்கியுள்ளது.
1. ஜகாத்
2. சதகா
3. வக்பு
இந்த திட்டங்களின் அடிப்படையில் நாம் நிறைய உதவிகளைச் செய்கிறோம். ஆனால் கைதூக்கி விடுகிறோமா என்பது தான் இப்போது கவனத்திற்குரியதாகும்.
இன்று நம்மைச் சுற்றி சமூகச் சீர்கேடுகள் பலவும் வறுமை காரணமாக நடக்கிறது. இளம் பெண்கள் வழி தவறுவது அதில் குறிப்பிடத்தக்கது. அத்தகையவரகளை கண்டறிந்து வறுமை நிலையிலிருந்து மீட்பது நமது கடமை.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) கூறீனார்.
ஒரு பெண் பணக்கஷ்டத்தினால விபச்சாரத்தில் ஈடுபட்டால், அந்த் பாவத்தில் ஒரு பங்கு அந்தப் பகுதியில் உள்ள பண்க்காரருக்கும் இருக்கிறது.
இன்று நம்மைச் சுற்றி சமூகச் சீர்கேடுகள் பலவும் வறுமை காரணமாக நடக்கிறது. இளம் பெண்கள் வழி தவறுவது அதில் குறிப்பிடத்தக்கது. அத்தகையவரகளை கண்டறிந்து வறுமை நிலையிலிருந்து மீட்பது நமது கடமை.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) கூறீனார்.
ஒரு பெண் பணக்கஷ்டத்தினால விபச்சாரத்தில் ஈடுபட்டால், அந்த் பாவத்தில் ஒரு பங்கு அந்தப் பகுதியில் உள்ள பண்க்காரருக்கும் இருக்கிறது.
ஒரு நபர் சுயமாய் நிற்க அவரது கோடாரிக்கு நாம் பிடி அமைத்துக் கொடுத்தால்
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
க்டன் தொல்லையில் சிக்கியிருப்பனுக்கு ஒருவர் உதவி செய்வதில் ஈடுபட்டால் அவரது மீஸான் தட்டு நிறுத்தப் படுகிற போது நான் அதன் அருகில் இருப்பேன். அவருக்க் அமல் போதவில்லை எனில் நான் அவருக்கு சொர்க்கத்திற்கு பரிந்துரைப்பேன்.
إذا كان العبد في قضاء دين أخيه كنت واقفا عند ميزانه شفعت له- اوكما قال
நமது மீஸான் அருகே பெருமானார் நிற்பார்கள், இது மட்டுமல்ல யார் அழித்தும் அழியாத வறுமைக் கோடு தானாக அழிந்து விடும்.
No comments:
Post a Comment