வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 07, 2012

ஆய்வு அதிகாரம் ஊடகம்


முஸ்லிம் சமுதாயத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உயர்ந்த மதிப்பெண், சிறந்த மாணவர்களாக திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது.
நமது அடுத்து இலக்கு
·         ஆய்வாளர்கள்
·         அதிகாரிகள்
·         ஊடகவியலாளர்கள்
சாமானிய மேற்படிப்பை தவிர்ப்பீர் ! சம்பாத்தியமே பிரதானம் என்ற உணர்வு வேண்டாம்.

எல்லோரும் படிக்கிறார்கள் என்பதற்காக ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட தனக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள ஒரு கல்வியை தேடுக!

ஆய்வுகள் மனித சமுதாயத்திற்கு உதவக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை தரக்கூடிய அளவு உயர வேண்டும். அந்த இலட்சியத்தை கொண்ட இளைஞர்கள் முஸ்லிம்களில் அதிகரிக்க வேண்டும்.

முஸ்லிம்களை தற்போதைய மோசமான நிலையிலிருந்து மீட்க சமுதாயத்தின் மரியாதையை கட்டி எழுப்ப அவர்களால் முடியும். ஒரு அப்துல் கலாமினால் முஸ்லிம்களுக்கு கிடைக்கிற சமூக அங்கீகாரத்தை எண்ணிப் பாருங்கள்.

சமுதாயத்திற்கு புதிய கண்டுபிடுப்புகளை வழங்குகிற சக்தியை எந்த சமூகமும் புறக்கணிக்க முடியாது.

முஸ்லிம்கள் உலகை கட்டி ஆண்ட்து அவர்களது இராணுவ வலிமையால் அல்ல. சிறந்த அறிவுச் கண்டுபிடுப்புகளாலும் சிறந்த சமயக் கோட்பாடுகளாலும் தான்.

இஸ்லாமும் திருக்குர் ஆனும் மனிதனை சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் தூண்டின.

இறைவனை வழிபடுவதோ இறை மாக்கத்தை பின்பற்றுவதோ எந்த யோசனையும் இன்றி கன்மூடித்தனமாக நடைபெறுவதை இஸ்லாம் விரும்பவில்லை. திருக்கு ஆன் கூறுகிறது.
وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا(25:73

சிறந்த கல்வியை தேடுவோர் இன்று வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கும் அமொரிக்காவிற்கும் படைஎடுக்கலாம். ஒரு காலம் இருந்தது. சிறந்த கல்வி வேண்டும் என்போர் முஸ்லிம்களின் பக்தாதுக்கும் கார்டோவாவுக்கும் தான் பயணம் சென்றாகள். அங்கு தான் அவர்கள் நிபுணர்களாக முடியும் என்ற நிலமை இருந்தது.

இன்று ஐரோப்பாவும் அங்குள்ள கிருத்துவாகளும் மருத்துவத்துறையில் கொடிகட்டிப்பறக்கிறாகள். ஒரு காலம் இருந்தது. அப்பொது ஐரோப்பிய கிருத்துவர்கள் மருத்துவம் படிப்பபதையும் மருத்தவம் பாப்பதையும் கடவுளோடு போட்டியிடும் செயலாக கருதி அதை வெறுத்தார்கள்.

anatomy உடலியல் ஆய்வு இழிவானதாக கருதப்பட்டது. அப்போது பெரும்பாலும் யூர்களே ஐரோப்பாவின் மருத்துவாகளாக இருந்தனர். அவர்களில் அதிகமானோ முஸ்லிம்களின் மருத்துவக் கல்லூகளில் கல்வி பயின்றவர்களே!

அவிசென்னா என்று மருவிப்போன அலி பின் சீனா தான் மருத்துவ உலகின் பிதாமகராக கரதப்படுகிறா. அவர் எழுதிய அல் கானூன் பித் திப்பு என்று நூல் 15 ம் நூற்றாண்டிலேடீய 16 பதிப்புகள் வௌயிடப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றின் தனி மருத்துவராக இருந்த புட்ரஸ் அல் போன்ஸி ஸ்பொயின் முஸ்லிம்களிடம் மருத்துவம் பயின்றவராவார்.

வைசூரி மற்றும் தட்டம்மை நோய் பற்றி ஆராய்ந்து முதலில் நூல் எழுதியவர் இமாம் ராஜி ஆவார். அவர் எழுதிய அல் ஜுத்ரு ல் ஹஸ்பா என்ற அரபு நூல்தான் இந்நோய் பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வு நூல் என்று வரலாற்று ஆய்வாளாகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.  1565 ஆண்டு இந்நூல் வெனிஸ் கரில் லத்தீன மொழியில் மொழிபெயாக்கப்ட்ட பிறகு இந்நூல் ஐரோப்பா முழுவதும் பரவிது. இந்நூலை படித்த பிறகுதான் எட்வொட் ஜென்னர் அம்மைக் கான தடுப்புசியை அம்மை குத்துததலை பற்றி ஆய்வு செய்தா என வரலாறு சொல்கிறது.

இந்நோய்களை கடவுளின் சாபம் என்று ஐரோப்பா கருதிய காலகட்டத்தில் எந்த ஒரு நோயுக்கும் மருந்துண்டு என்ற பெருமானா(ஸல்) அவாகளின் பொன் மொழி (முஸ்லிம் 4084) இமாம் ராஜியை இது பற்றி ஆராயத்தூண்டியது.

கெமிஸ்ட்ரீ (வேதியில்) துறையின் தந்தையாக ஜாபிர் பின் ஹய்யான் போற்றப்படுக்றா.15 நூற்றாண்டு வரை அவருடைய நூற்கள் தான் ஐரோப்பாவில் வேதியில் துறையின் இறுதிச் சான்றுகளாக கருதப்பட்டன.

இது போல இன்னும் ஏராளமான தகவல்கள் முஸ்லிம்கள் அறிவுலகத்தின்  அரசர்களாக வாழ்ந்த வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் அறிவியல் துறைகளில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பா அறிவியல் ஒளியற்ற ருண்ட கண்டமாக இருந்தது என  பிட்டானிய கலைக்களஞ்சியம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. ஐரோப்பிய வரலாற்றில் கி.பி 6 ம் நூற்றாண்டுக்கும் 10 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் இருண்ட காலம் என்றழைக்கப்படுகிறது. ரோப்பாவில் வன்முறை நிறைந்து அறிவொளி இருண்டுகிடந்த காலம் அது.
( பிட்டன் என்ஸைக்ளோபீடியா1984)

இது போன்ற முன்னுதாரணங்களை நினைவில் கொண்டு ஏதேனும் ஒரு துறையில் ஒரு முஸ்லிம் நிபுபணரவாவது இன்றைய சுழ்நிலையில் அவருக்கு மட்டுமே பெருமை சோப்பதாக இல்லாமல் சமுதயத்திற்கும் மரியாதையை பெற்றுதருவதாகவும் அமையும்.

நூறு பணக்காரர்களை விட நூறு செல்வாக்கு பெற்ற தலைவாகளைவிட ஒரு சிந்தனையாளர் -  ஒரு விஞ்ஞானி சமுதாயத்திற்கு அதிகம் முக்கியமானவராவர். 

கிரேக்க நாடு எத்தனையோ அரசர்களை பாத்திருக்கலாம். எத்தனையோ செல்வந்தர்களைப் பாத்திருக்கலாம். ஒரு சாக்ரடீஸ் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது கவனித்தில் கொள்ளத்தக்க செய்தியாகும்.

உயர் கல்வி கற்க நினைக்கும் முஸ்லிம் மாணவர்கள் அறிவியல் துறைகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபடு முயற்சிக்க வேண்டும். அத்தைகயோருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டும. 

இன்றைய கால கட்டத்திற்கு தேவையான மற்றொரு பயனுள்ள துறை அதிகாரிகளாவதற்கான படிப்பாகும்.

ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போன்ற உயர் அதிகார துறையில் மட்டுமல்ல. குரூப் 1- குரூப் 2 - குரூப் 3 போன்ற அரசுத்துறை பணியிடங்களுக்கான தேர்வுகளிலும் சமுதாய மாணவர்களும் மாணவிகளும் கவனம் செலுத்த வேண்டும்

முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தாசில் தார்களாக – கிராம அதிகாரிகளாக – அரசுத்துறையின் அதிகாரிகளாக பார்க்க ஆசைப்பட வேண்டும்.

இத்துரைகளில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியிருப்பதை ச்ச்சார் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.


தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரைவிடவும் முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர்.
·         நீதித்துறையில் மிகபிற்படுத்தப்பட்டோர் 23% தாழ்த்தப்பட்டோர் 20% முஸ்லிம்கள் வெறும் 7.8%.

·         14 இலட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%. அதுவும் மிகவும் கீழ்மட்ட பணிகளில் வேலைசெய்கின்றனர்.

·         நாட்டின் உயர் அரசு பணிகளில் 3% முஸ்லிம்களே.

·         மாவட்ட நீதிபதிகளில் 2.7%. முஸ்லிம்களே

மாநில வாரியாக முஸ்லிம்களின் சதவீதமும் அரசுப்பணிகளில் அவர்களது எண்ணிக்கையும்.

·         ஆந்திரா: முஸ்லிம்கள் 9.2%; பணியில் 8.8%;
·         கேரளா: முஸ்லிம்கள் 24.7%; பணியில் 10.4%;
·         அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9%; பணியில் 11.2%
·         தமிழ்நாடு: முஸ்லிம்கள் 5.6%; பணியில் 3.2%;
·         பீஹார்: முஸ்லிம்கள் 16.5%; பணியில்
·         7.6%; உத்திரபிரதேசம்: முஸ்லிம்கள் 18.5%; பணியில் 5.1%.
·         மேற்கு வங்கம் : 25.2% முஸ்லிம்களில் வெறும் 4.2% பேருக்குத்தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது

அரசுப்பணிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அதிகார வர்க்கத்தின் நசுக்குதல்களுக்கு  நாம் அதிகமாக ஆளாகிறோம்.

·         மகாராஸ்டிராவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 10.6%. சிறையிலுள்ள மொத்த தொகையில் 40% இவர்கள்தான்.

·         ராஜஸ்தானில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 9.6%. சிறையிலுள்ள மொத்த தொகையில் இவர்களின் பங்கு 25% ஆகும்.

·         மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் சிறைச்சாலைகளில் இருப்பவர்களின் பட்டியலைத்தர மறுக்கின்றன. அந்தப் பட்டியல் கிடைத்தால் அதில் கிடைக்கிற தகவல்கள் இன்னும் அதிர்ச்சிகரமாக இருக்கும்.

·         நமது நாட்டில் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கல்ளில் 80% முஸ்லிம்களே!.

இன்றைய சூழ்நிலையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு முக்கியத்துறை ஊடகத்துறையாகும்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மிகப்பெரிய அவதூறுகளையும் இழப்புக்களையும் ஊடகங்கள் செய்து வருகின்றன.

தாடி வைப்பவர்களெல்லாம் வன்முறையாளர்கள் அல்லது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற எண்ணமும், பிரச்சனை நடந்தால் முஸ்லிம் இளைஞர்களை காவல்துறையினர் கேள்வி கேட்காமலேயே கைது செய்வதும், காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய பதவி உயர்வுக்காக வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆயுத குச்சுகளையும் துப்பாக்கிகளையும் தாங்களே தயார் செய்துவிட்டு முஸ்லிம்களை ஆயுதங்களுடன் கைதுசெய்ததாக பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரம் செய்து பதவி உயர்வினை பெறுவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவர்கள் காவல்துறையினரே என்றால் அதில் அவர்களுக்கு முக்கிய துணையாக இருப்பது ஊடகங்களே. மட்டுமல்ல மக்களிடம் முஸ்லிம்களை இஸ்லாத்தைப் பற்றி தீய எண்ணத்தை விதைப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
 .
இதனால் இன்றைய ஜிஹாத் என்பது ஊடகங்கள் மூலமே – என யூசுப் அல் கர்ளாவி கூறுகிறார்.

முஸ்லிம் இளைஞர்கள் இத்துறைகளை தேர்ந்து படிக்க முன்வர வேண்டும். பெற்றோர்கள் பணத்தை மட்டுமே குறியாக கொள்ளாமல் சமுதாய நன்மையை நினைத்துப் பார்த்து தங்களது பிள்ளைகளை ஊக்கப் படுத்த வேண்டும்

1 comment:

  1. Hazarath thatkalathitku mika mika avasiyamana bayanai thankal thanthullirkal

    ReplyDelete