வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Saturday, August 18, 2012

பெருநாள் சிந்தனை 3


அசாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கட்டுக்கடங்காத வன் முறை அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்க. வன்முறை வெறிச் செயல் காரணமாக தங்களது வாழ்வுக்கு அஞ்சி சுமார் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் போதிவசதிகள் எதுவுமின்றி வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் சொந்த மக்கள் இந்தியாவிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

வன்முறைகளை தடுத்து, மக்களின் பாதுகாப்பான் வாழ்கையை உத்திரவாதப்படுத்த  வேண்டிய அரசுகளும் அரசியல் கட்சிகளும் பாதிக்கப் பட்டிருக்கிற பிரச்சினைக்கு யார் காரணம் என்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. ரோம் பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்த்து போல.

இப்போது பாதிக்கப்பட்டிருக்கிற முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. இந்திய நாட்டின் சொந்த மக்கள்,

அசாமில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் இன அழிப்பு முயற்சியை கண்டு அமைதியாக இருக்க முடியாது. மத்திய மாநில அரசுகள்  உடனடியாக பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணத்தையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டும்.

வன்முறைக்கு காரணமாகிற விஷமிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும்.

முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு பிஜேபி க்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்று எம் ஐ எம் கட்சியின் தலைவர் உவைஸீ மிகச் சரியாகவே கூறியிருக்கிறார்.

அதே போல மியான்மரிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் இப்படுகொலைகளை அரசாங்கமும் இராணுவமும் முன்னின்று செய்கின்றன,

இதை சர்வதேச சமுதாயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பர்மாவின் படுகொலைகளைப் பற்றி கவலைப்படாமல் சிரியாவைப் பார்த்து அதிகம் சீரிக்கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சமூகத்தின் இந்த இரட்டை வேடம் வன்மையாக கண்டிக்கத் தக்க்கது,

முஸ்லிம்கள் தங்களது பக்திகளில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக துஆ செய்வோம். முடிந்த வகையில் உதவி செய்வோம்.,

No comments:

Post a Comment