வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 23, 2012

திசை திருப்புதலுக்கு ஆளாகும் முஸ்லிம் சமுதாயம்.



ஒரு சமுதாயம் ஏமாளிச் சமுதாயம் என்பதற்கு அடையாளம் திசை திருப்புதலுக்கு ஆளாவதாகும்.

கீழே சிதறிக்கிடக்கிற பத்து ரூபாய் நோட்டுக்களை பொறுக்கும் ஆசையில் இலட்சக்கணக்கான ரூபாய்களை சிலர் தொலைத்து விடுவதுண்டு அது போல.

அசாம் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 250 முகாம்களில் சுமார் 4 இலட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் வசிக்கிறார்கள்.

இதில் சுமார் 5000 கர்ர்பிணிகள், 15000 குழந்தைகள். 8000 பேருக்கு நோய  தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அந்த முகாம்களின் நிலையோ சொல்லும் தரமற்றது. கேரளாவிலிருந்து அசாமிற்கு நிவாரணத்திற்காக சென்று வந்த ஒருவர் கூறினார்.

ஒரு முகாமில் 1400 பேர் இருக்கிறார்கள். அது ஒரு பள்ளிக் கூடம்.அங்கே இரண்டு டாய்லெட்கள் தான் இருக்கின்றன.

போர்க்கால அடிப்ப்டையில் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நாட்டு மக்கள் ஒன்று திரண்டு அந்த மக்களின் வாழ்க்கையை மீட்க ஒத்துழைத்திருக்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன?
அரசு எஸ்.எம்.எஸ் களை தடை செய்து வருகிறது. இணைய தளங்களை தடை செய்து வருகிறது. வதந்திகளை பரப்புவோரை எச்சரித்து  வருகிறது. அசாம் பற்றிய தகவல்களை மட்டுமல்லாது, மியான்மர் பற்றிய தகவல்களும் பரவி விடாதவாறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு குழந்தை கிணற்றுக்குள் சிக்கி விட்ட்து என்று சொன்னால் அதற்காக 24 மணி நேரமும் தங்களது செய்தியாளர்களை அங்கேயே நிறுத்தியிருக்கிற செய்தி ஊடகங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன. உடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் தவறானவை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஊடகங்களை தடை செய்வது பற்றியும் தணிக்கை செய்வது பற்றியும் விஞ்ஞானப்பூர்வமாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றன,

இத்தனைக்கும் காரணம் ஒரு வகையில் முஸ்லிம்களே!

ஒரு சம்பவம் அவர்களை பாதிக்கிற போது அதிக உணர்ச்சி வசப்படுவதும். அது பற்றிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிற பொறுப்பை உரியவர்களிடம் விட்டு விடாமல் தான் தோன்றித்தனமாக ஒவ்வொருவரும் செயல் படுவதும் பிரச்சினையை வேறு திசையில் கொண்டு சென்று விடுகிறது.

அசாம் மியான்மர் விவகாரங்களில் அப்படித்தான் நடந்து விட்டது.  அங்குள்ள நிலவரங்கள் தொடர்பாக ஆதாரமற்ற புகைப்படங்களையும் செய்திகளையும் இணையம் வழியாகவும் எஸ் எம் எஸ் வழியாகவும் சிலர் ஏதோ பெரும் நன்மை செய்வதாக நினைத்து பரப்பி விட்டனர். கடும் அதிர்ச்சியை தரும் புகைப்படங்கள் அவை.

இது போன்ற சந்தர்ப்பங்களில் சற்றும் ஆராயாமல் மின்ன்ஞ்சல் பேஸ்புக் எஸ் எம் எஸ்களை சிலர் அக்கிரமாமாக பயன்படுத்து கின்றனர்.

யாரோ ஒரு சிலர் செய்த கைங்கர்யம் அரசாங்கமும் மீடியாக்களும் பிரச்சினையை திசை திருப்ப அற்புதமாக பயன்பட்டு விட்டது.

அசாமில் போடோ இயக்கம் ஒரு இராணுவத்தை போல ஆயுதம் தரித்த ஒரு வன்முறைக் கும்பலை உருவாக்கி வைத்துக் கொண்டு முஸ்லிம்களை அழித்து வருகிறது. அவர்களது வீடு நிறுவன்ங்களை விட்டு துரத்தி வருகிரது. அது சர்சையாகவில்லை, இலட்சக்கணக்கான அப்பாவி இந்திய முஸ்லிம்கள் சொல்லணா துய்ரங்களை சந்தித்து வருகிறார்கள். அது விவாதமாகவில்லை.

திடீரென பிரதமர் அசாமுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார் என்ற செய்தி வெளியான போதுதான் பிரச்ச்னையின் தீவிரம் என்ன என்பது இந்திய மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

பாரதீய ஜனதா தலைவர் அத்வானி மிகச் சாமார்த்தியமாக பிரச்சினையை அகதிகள் பிரச்சினையோடு முடிச்சிட்டு திசை திருப்பி விட்டார். பாராளுமன்றம் அவர் உண்டு பண்ணிய விவாத்த்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப் பட்ட மக்களைப் பற்றியோ அவர்களுக்கான நிவாரணம் பற்றியோ பேசுவோர் யாரும் இல்லை. 

அசாம் விவகாரத்தை முதலில் திசை திருப்பியவர் அதவானி என்றால். அடுத்ததாக அந்த பணீயை செய்தவர்கள் அவசரக்குடுக்கைகளான சில முஸ்லிம்கள்.

பிரச்சினையை சரியான கோணத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய முஸ்லிம்கள் ஆத்திரப்பட்டு மும்பையில் வன்முறையில் இறங்கினார்கள். இரண்டு முஸ்லிம் உயிர்கள் பலியாயின.

ஆராயாமல் கிடைத்த செய்திகளை எல்லாம் ஏதோ புனிதம் போல நினைத்து பரிமாறினார்கள். காவல் துறை வதந்திகளை பரப்பிய குற்றத்திற்காக அவர்களை கைது செய்து கொண்டிருக்கிறது. அசாம் பிரச்ச்னினை இப்போது மறக்கப்பட்டு வதந்தி பிரச்சினை இப்போது பெரிதாகிவிட்டது.

சில எதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ள மறந்தால் ,  எச்சரிக்கையாக நடந்து கொள்ள தவறினால் கடும் விளைவுகளை நாமே சந்திக்க வேண்டியது வரும். நாம் அநீதி இழைக்கப் பட்டவர்களாக இருந்தாலும்.

இன்றைய பேஷன். முஸ்லிம்களை குறை கூறுவது, அவர்களது பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது. அதே போல இன்றை நிலையில் மிகவும் எளிதானது முஸ்லிம்களை தாக்குவது அல்லது துன்புறுத்துவது.

இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் முக்கிய கடமை எந்த ஒரு விச்யத்திலும் அதிக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளவதாகும்.

ஒரு செய்தி வருகிற போது அதைப் பற்றி ஆளாளுக்கு முடிவு செய்வதை தவிர்த்து விட்டு பொறுப்பான மனிதர்களிடம் அதை விட்டு விட வேண்டும்.

திருக்குர் ஆன் கற்றுக் கொடுக்கிற அதி அற்புதமான வழி முறை அது.

إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ(15)

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوْ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُوْلِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمْ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا(83)  النساء

இது தொடர்பாக தப்ஸீர் இப்னு கஸீரில் சில செய்திகள்

عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال "كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع" - مسلم

وفي الصحيحين عن المغيرة بن شعبة أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قيل وقال:
أي الذي يكثر من الحديث عما يقول الناس من غير تثبت ولا تدبر ولا تبين

وفي سنن أبو داود أن رسول الله صلى الله عليه وسلم قال "بئس مطية الرجل زعموا"

وفي الصحيح "من حدث بحديث وهو يرى أنه كذب فهو أحد الكاذبين"

ولنذكر ههنا حديث عمر بن الخطاب المتفق على صحته حين بلغه أن رسول الله صلى الله عليه وسلم طلق نساءه فجاء من منزله حتى دخل المسجد فوجد الناس يقولون ذلك فلم يصبر حتى استأذن على النبي صلى الله عليه وسلم فاستفهمه أطلقت نساءك؟ فقال "لا" فقلت الله أكبر وذكر. الحديث بطوله. وعند مسلم فقلت: أطلقتهن فقال " لا" فقمت على باب المسجد فناديت بأعلى صوتي لم يطلق رسول الله صلى الله عليه وسلم نساءه ونزلت هذه الآية "وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم" فكنت أنا استنبطت ذلك الأمر

பெருமானாரின் தலாக் பற்றிய வதந்தி – உமர் ரலி யின் முற்றயான அணுகுமுறை  குறித்த  விவரமான தகவல்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும். 
தலாக் பற்றீய வதந்தியும் உமர் ரலி அணுகுமுறையும் 

பெருமானார் (ஸல்) கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு வதந்தியால் ஏற்பட்டது தான் உஹது யுத்த்தின் படுதோல்வி.

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் போரிட்டுக் கொண்டிருந்த போது. தூர்ஸ் யுத்தத்தின் போது முஸ்லிம்களின்  கூடாரங்களுக்கும் பொருட்களுக்கும் ஆபத்து என்று பரப்பப்பட்ட செய்தியால் முஸ்லிம்கள் கலவரமடைந்த போது அது அந்த யுத்தத்தின் தோல்விக்கு காரணமானது..

தப்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பரப்பிய காரணத்தால் தான் இன்று அசாம் விச்யத்தில் ஊடகங்களும் அரசும் அதைச் சொல்லியே பிரச்சினையை திசை திருப்பி விட்டனர். இப்போது அசாம் பிரச்சினை வதந்திகளோடு தொடர்புடைய பிரச்சினையாகி விட்ட்து, அங்கு பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கான பிரச்ச்னையாக இல்லை.
அதே போலத்தான் பெருநாள் அன்று இரவு மருதாணியால் ஏற்பட்ட அலர்ஜி தொடர்பான பிரச்ச்னையும். தேவையற்ற பதற்றத்திற்கும் குழப்பத்திற்கு ஒரு நல்ல நாளில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் பீதி மயப்படுத்தி விட்ட்து.

பல பள்ளி வாசல்களில் நடுநிசியில் மைக மூலம் இருவர் நால்வர் இறந்து விட்ட்தாக தகவல்களைப் பரப்பினார்கள். எங்கது பக்கத்து மஹல்லாவில் ஒரு குழந்தை இறந்து விட்ட்து என்று ஒருவர் செய்தி சொன்னார். அங்குள்ள உங்களது உறவினர்களிடம் இது பற்றி கேட்டீர்களா என்றேன் இல்லை. என்றால். நான் விசாரித்த வரை அந்த மஹல்லாவில் அப்படி ஒன்றும் நடக்க வில்லை. இதைப் பேசாதீர்கள் என்றேன். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை.

ஒரு மஹல்லா பள்ளிவாசலில் ஒரு அறிவிப்புச் செய்யப்படுகிற போது அதுவும் நடு நிசி நேரத்தில் – அதற்குள்ள முக்கியத்துவம் பற்றி யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஏதே இயக்க – அமைப்புக்களின் பிரச்சார மேடையைப் போல அதை நினைத்துக் கொண்டார்கள். சென்னையில் ஒரு பள்ளிவாசலில் ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் இருட்டில் இமாமை எழுப்பி அறிவிப்புச் செய்கிறாயா இல்லையா? இது எங்களது தலைமையகத்தின் உத்திரவு. நீ அறிவுப்புச் செய்யாவிட்டால் நான் கதவை உடைத்துக் கொண்டு வந்து  அறிவிப்புச் செய்வேன் என்று சொன்னார்.

தூத்துக்குடி மாவட்டம் காயா மொழியில் ஒரு வீட்டில் அம்மாவும் பொண்ணும் மருதாணியிட்ட கையை ஆசிட்டால் கழுவிவிட்டனர். கை புண்ணாகிப் போனது.
எங்களது பக்கத்து வீட்டில் இரவு 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை எழுப்பி புளியை கரைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். என்ன என்று விசாரித்த போது மருதாணிப்பிரச்ச்னைய்லிருந்து தப்பிக்க இவ்வாறூ செய்யுமாறு ஒட்டன் சத்திரத்திலிருந்து ஒரு உறவினர் போன் செய்த்தாக கூறினர்.

இப்படி எல்லாம் வயிற்றில் புளியை கரைப்பது? 

பீதியை பரப்பிய எந்த ஒரு அமைப்பும் ஜமாத்தும் - ஒரு வேளை மருதாணியால் ஒரு பிரச்சினை உருவாகி இருக்கும் என்றால் அதை எதிர் கொள்வதற்கு ஆக்கப் பூர்வமாக எந்த ஆலோச்னையையும் ஏற்பாட்டையும் செய்து வைக்க வில்லை என்பதே எதார்த்தமாகும். 

எது பொறுப்பான பணீ என்பது குறீத்து சமுதாயம் சிந்திக்க வேண்டும்.  

முஸ்லிம் சமுதாயம் அவசரப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் குறைத்துக் கொள்ள பயிற்சி பெற வேண்டும். நிதானமாகவும் பொறுமையாகவும் பிரச்சினைகளை ஆராய பழக வேண்டும். நம்மைப் பாதிக்கிற விச்யங்களில் கவனத்தோடு செயல்பட வேண்டும். கலவரத்தை உண்டு பண்ணும் செய்திகளை கேட்டால் பொறுப்பானவர்களிடம் அதை கொண்டு செல்ல வேண்டும். உறுதியற்ற செய்திகளை பரப்பக் கூடாது.

பிரச்சினைகள் திசை திருப்ப்படுவதற்கு நாம் காரணமாகிவிடக் கூடாது.










   




.


No comments:

Post a Comment