வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 31, 2012

மதித்து வாழ வேண்டும்


احترام الغير والمجتمع
பிறரை மதித்தல்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(11)يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12)

சக மனிதர்களை மதிக்கத் தெரிதல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு முக்கிய அம்சம் என்பதை இன்று சுய முன்னேற்றம் பற்றி பேசுகிற அனைவரும் கூறுகின்றனர்.

தொழிலாளியை மதிக்கிறவர் சிறந்த முதலாளி, மாணவர்களை மதிக்கிறவர் சிறந்த ஆசிரியர், பிள்ளைகளை மதிக்கிறவர் சிறந்த தந்தை

வெற்றிகரமாக செயல்படுவதற்கு இந்த இயல்பு தனி வாழ்விலும் அவசியம் பொது வாழ்விலும் அவசியம்

கல்வி பற்றி அதிகம் பேசப்படுகிற இன்றைய நம்முடைய சமுதாயத்தில் இந்தப் பண்பு குறைந்திருக்கிறது.
அடுத்தவரை நான் ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வி பெரிதாகி இருக்கிறது.

இதற்கு இரண்டு காரணம்
கூட்டு குடும்ப அமைப்பு அல்லது சமூக கூட்டு வாழ்வு குறைந்த்து.

முஸ்லிம்கள் குறிப்பாக இளைஞர்களிடம் இந்த பண்பு இல்லாமல் போனதற்கு காரணம் மரியாதையை ஷிர்குடன் சேர்த்து குழப்பிக் கொண்ட்து.

கடந்த 20 ஆண்டுகளாக சமூகத்தில் பிற மனிதர்களை பெரியவர்களை மதித்து விட்டால அது ஷிர்க் என்று போதிக்கப் பட்டது. அதனால் பெற்றோரை கூட மதிக்காக தான் தோன்றி இளைஞர்களின் எண்ணிக்கை இன்று அதிகம்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய பின்னடைவு என்ன தெரியுமா?

50 இளைஞர்கள் கூடுகிற இட்த்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பெரியவர்களுக்கு கட்டுப்படுகிற இளைஞர்கள் இல்லை. எதிர்க்கிறவர்கள் தாராளமாக உருவாகி இருக்கிறார்கள்.

மார்க்கத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு இந்த இயல்பை சில தீய சக்திகள் உருவாக்கி விட்டனர் என்பது தான் பெரிய சோகம்.

பெரியவர்களின் முன்னிலையில் மெதுவாக மரியாதையாக நடந்து கொள்ளுதல் பெரியவர்களுக்காக எழுந்து நிற்குதல் ஆகியவற்றை தேவையற்றதாக இன்றைய இளைய சமுதாயம் கருதுகிறது என்பதல்ல அவற்றை ஏதோ செய்யக் கூடாத பாவம் போல கருத ஆரம்பித்து விட்டார்கள்.

பெரியவர்களை கண்டால எழுந்து நிற்பது கூடாது, அது ஷிர்க என்று சில இளைஞர்களின் எண்ணம்.

நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் எனக்காக எழுந்து நிற்காதீர்கள் என்று சொன்ன ஹதீஸை கட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த ஹதீஸின் எதார்த்த்தை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

அன்றைய மன்னர்களின் முன்னிலையில் மக்கள்  உட்காராமால் நின்று கொண்டே இருப்பது போல  எனது முன்னிலையில் நிறக் வேண்டாம் என்பதே பெருமானாரின் அந்த உத்தரவின் கருத்தாகும்
                                            
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَصًا فَلَمَّا رَأَيْنَاهُ قُمْنَا فَقَالَ لَا تَفْعَلُوا كَمَا يَفْعَلُ أَهْلُ فَارِسَ بِعُظَمَائِهَا -  إبن ماجة

பெருமானார் இவ்வாறு உத்தரவிடாவிட்டால் பெருமானாரின் முன்னிலையில் சஹாபாக்கள் உட்கார்ந்திருப்பார்களா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தனக்காக எழுந்திருக்க வேண்டாம் என்று சொன்னதன் பொருள் இது தான்.

அகழ் யுத்த்த்தை தொடர்ந்து நடந்த  பனூ குறைழா முற்றுகையின் போது யூதர்கள சஃது பின் முஆத் (ரலி) அவர்கள் சொல்லும் தீர்ப்புக்கு கட்டுப்பட யூதர்கள் சம்மதித்தார்கள். அப்போது அங்கு வந்த சஃது (ரலி)அவர்களை எழுந்து சென்று வரவேற பெருமானார் உத்தரவிட்டார்கள்இந்த நபிக்கு விளக்கமளிக்கிற இமாம் நவ்வி அவர்கள் எழுந்து நிற்குதல் சம்பந்தமாக என்ன சொல்கிறார்கள் என்பத்த கவனியுங்கள்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا نَزَلَتْ بَنُو قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ هُوَ ابْنُ مُعَاذٍ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ قَرِيبًا مِنْهُ فَجَاءَ عَلَى حِمَارٍ فَلَمَّا دَنَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُومُوا إِلَى سَيِّدِكُمْ فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ –

قال النووي في شرحه
( قوموا إلى سيدكم أو خيركم ) فيه : إكرام أهل الفضل وتلقيهم بالقيام لهم إذا أقبلوا , هكذا احتج به جماهير العلماء لاستحباب القيام , قال القاضي : وليس هذا من القيام المنهي عنه , وإنما ذلك فيمن يقومون عليه وهو جالس , ويمثلون قياما طول جلوسه , قلت : القيام للقادم من أهل الفضل مستحب , وقد جاء فيه أحاديث , ولم يصح في النهي عنه شيء صريح , وقد جمعت كل ذلك مع كلام العلماء علية في جزء وأجبت فيه عما توهم النهي عنه . والله أعلم

தபூக் யுத்தத்திற்கு செல்லாமல் பின் தங்கி விட்ட காரணத்திற்காக சமூகப் பகிஷ்கரிப்பு செய்யப் பட்டிருந்த கஃபு (ரலி) அவர்கள் மீதான தண்டனை விலக்கிக் கொள்ளப் பட்ட பிறகு அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்த போது அவரை நோக்கி எழுந்து தோடி சஹாபாக்கள் வரவாற்றைதை அப்போது பெருமானார் அங்கு அமர்ந்திருந்ததை ஹதீஸ்கள் புலப்படுத்து கின்றன.
عن كَعْبِ بْنِ مَالِكٍ : ،،،
فَسَمِعْتُ صَارِخًا يَا كَعْبَ بْنَ مَالِكٍ أَبْشِرْ فَلَمَّا جَاءَنِي الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ فَانْطَلَقْتُ حَتَّى إِذَا دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي- ابوداوود – 2392

எதார்த்தமாகவும் இயல்பாகவும் விளங்கிக் கொள்ளவேண்டிய விச்யங்கதை குதர்க்கமாகவும் குயுக்தியாக செயல்படக் கூடுய சில தீய சக்திகள் இன்றை இளைய சமுதாயத்தின் மனோ நிலையில் விரும்பத்தகாத பல் வக்கிரத்தை உண்டு பண்ணி விட்டார்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மகளை பாத்திமா (ரலி) அவர்களை எழுந்து வரவேற்பார்கள் என்பதும் பாத்திமா அம்மையார் தனது தந்தையை அன்பொழுக முத்தமிட்டு எழுந்து வரவேற்பதையும் ஹதீஸ்கள் காட்டுகின்றன.

روى البخاري وأبو داود والترمذي عن عائشة رضي الله عنها قالت:ما رأيت أحداً أشبه سمتاً ودلاً وهدياً برسول الله صلى الله عليه وسلم ـ في قيامها وقعودها ـ من فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم، وكانت إذا دخلت على النبي صلى الله عليه وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه، وكان النبي صلى الله عليه وسلم إذا دخل عليها قامت من مجلسها وقبلته وأجلسته في مجلسها.

எழுந்து நிற்குதல் மாத்திரமே மரியாதையின் மொத்த அம்சம் அல்ல. ஆனால் இது பற்றிய செய்திகளை சொல்லி உசுப்பேற்றியே ஒரு தலைமுறையை மரியாதையற்ற தலைமுறையாக இன்றைய போலி தவ்ஹீதிய சக்திகள் உருமாற்றியிருக்கிறார்கள். அதனால் இதை பிரதானமாக குறிப்பிடுகிறோம்.

இஸ்லாமிய வாழ்வுக்கு ஆசைப்படுகிற பொதுமக்களை, இளைஞர்களை கேட்டுக் கொள்கிறோம். மரியாதையாக நடப்பதற்கான அனைத்து வழிகளிலும் கவனம் செலுத்துங்கள். நமது சமுதாயத்தின் மேன்மையும் உயர்வும் அதில் அடங்கியிருக்கிறது.  
احترام الكبير:
·        تقديمه على الصغير.
قال أبو مسعود البدري رضي الله عنه : قال رسول الله صلى الله عليه وسلم ..ليلني منكم أولو الأحلام والنهى (الرجال البالغون ) . ثم الذين يلونهم . ثم الذين يلونهم رواه مسلم.

·        الحياء منه
عن أبي سعيد رضي الله عنه قال "لقد كنت على عهد رسول الله صلى الله عليه وسلم غلاماً فكنت أحفظ عنه فما يمنعني من القول إلا أن ها هنا رجالاً هم أسن مني" . رواه الشيخان
وعن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله قال أخبروني بشجرة مَثَلَها مثل المسلم ، تؤتي أكلها كل حين بإذن ربها ، ولا تحتُّ ورقها . فوقع في نفسي أنها النخلة ، فكرهت أن أتكلم ، وثَمَّ أبو بكر وعمر ، فلما لم يتكلما ، قال النبي صلى الله عليه وسلم : هي النخلة. فلما خرجت مع أبي قلت : يا أبتاه ، وقع في نفسي أنها النخلة ، قال : ما منعك أن تقولها ، لو كنت قلتها كان أحب إلي من كذا وكذا ، قال : ما منعني إلا أني لم أرك ولا أبا بكر تكلمتما فكرهت . رواه البخاري

احترام الصغير

·         அன்பு கருணை காட்டுதல் மூலம் சிறுவர்களை மதிக்கனும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு சலாம சொல்லுவார்கள்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ-  
கறபனை செய்து பாருங்கள் விளையாடிக் கொண்டிருக்கிற சிறுவர்களுக்கு ஒரு பெரியவர் சலாம் சொல்லி கடந்து செல்வாரென்றால் அந்த சமுதாயம் எவ்வளவு உன்னதமாக வளரும்?

சிறுவர்கள் தானே என்று அலட்சியம் காட்டக்கூடாது.

عن ابن عباس رضي الله عنه قال : دخلت مع رسول الله صلى الله عليه و سلم أنا وخالد بن الوليد على ميمونة فجاءتنا بإناء فيه لبن فشرب رسول الله صلى الله عليه و سلم وأنا على يمينه وخالد على شماله فقال لي :" الشربة لك فإن شئت آثرت بها خالداً " ، فقلت : ما كنت أوتر على سؤرك أحداً


احترام المجلس :
சபை மரியாதைக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
  
·        ففي البخاري ومسلم عن ابن عمر رضي الله عنهما عن النبي صلي الله عليه وآله وسلم قال‏:‏ لا يقيم الرجلُ الرجلَ من مجلسه ثم يجلس فيه‏.‏

عدم إيذاء شعور الآخرين .
·        عن أنس رضي الله عنه قال ‏:‏ بلغ صفية بنت حيي أم المؤمنين أن حفصة أم المؤمنين أيضا قالت عنها ‏:‏ بنت يهودي ‏،‏ فبكت صفية‏ ،‏ فدخل عليها النبي صلي الله عليه وآله وسلم وهي تبكي ‏،‏ فقال‏:‏ ما يبكيك؟‏، قالت‏:‏ قالت لي حفصة إني بنت يهودي ‏، فقال النبي صلي الله عليه وآله وسلم‏:‏ إنك لابنة نبي ، وإن عمك لنبي ‏، وإنك لتحت نبي‏ ، ففيم تفخر عليك ؟‏!، اتقي الله يا حفصة‏ . ‏ أخرجه أحمد والترمذي‏.‏


احترام أمن المجتمع وعدم الاخلال به .
சபை அமைதியை பாதுகாப்பதிலும் அதில் இடையூறு செய்யாதிருக்க கூடுமானவரை முயல் வேண்டும் .

அமைதி என்பது எவ்வளவு முக்கியம் என்றால் உண்வுக்கு முன்னால் இபுறாகீம் நபி அமைதியை கேட்டார்கள்

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَداً آمِناً وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ} .

عن عبيد الله بن مُحصِنٍ الخطمي - وكانت له صحبة - قال: قال رسول الله صلى الله عليه وسلم: "مَنْ أصبح منكم آمناً في سربه، معافى في جسده، عنده قوت يومه، فكأنَّما حيزت له الدنيا" . رواه الترمذي

இந்த அமைதியை குலைப்பதில் இன்றைய இளைய சமுதாயமும் பெரியவர்களும் சற்றும் தயக்கம் காட்டுவதில்லை. தன்னுடைய ஒரு சிறு அசட்டுத்துணிச்சலாம் சபையில் தொடர்ந்து எத்தகைய தேவையற்ற சலசலப்புகள் உருவாக்க் கூடும் என்பதை நம்மில் பலரும் யோசிப்பதில்லை. சபையில் பேச கூச்சப் படுகிறவர்கள் கூட யாராவது எழுந்து நிற்கத் தொடங்கினால் துணிச்சல் பெற்று சப்தமிட்த்தொடங்கி விடுகிறார்கள்.

النهي عن ترويع المسلم .
மக்களை மிரட்டக் கூடாது. இது இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சாபக்கேடாக மாறிவிட்டது. கொலை செய்து விடுவேன். வெட்டிப் போடுவேன் என்ற குரல்கள் அதிகரித்து விட்டன.
பெரும்பாலும் இப்படிப் பேசுகிறவர்கள் பேடிகளாகத்தான் இருப்பார்கள் எங்கே வெட்டு பார்க்கலாம் என்றால் ஓடிப்போய் விடுவார்கள்.

இத்தகைய மிரட்டல் ஒரு முஸ்லிமின் அழகல்ல.

عن عبد الرحمن بن أبي ليلى رضي الله عنه قال: قال رسولُ الله صلى الله عليه وسلم:"لا يحل لمسلمٍ أن يروع مسلماً" .


النهي عن إشهار السلاح .
பொது இடங்களில் ஆயுதங்களை காட்டுதல் கூடாது.
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا يشير أحدكم على أخيه بالسلاح، فإنَّه لا يدري أحدكم لعلَّ الشيطان ينزغ في يديه فيقع في حفرة من النار"

சமூக மரியாதையில் கவனம் செலுத்த வேண்டிய இன்னும் சில விசயங்கள்

·         عدم الجلوس في الطرقات
قال صلى الله عليه وسلم : " إياكم والجلوس في الطرقات قالوا : يا رسول الله ، ما لنا بد من مجالسنا نتحدث فيها . قال : فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا : وما حقه ؟ قال : غض البصر ، وكف الأذى ، ورد السلام ، والأمر بالمعروف ، والنهي عن المنكر

இன்றைய முஸ்ளிம் மஹல்லாக்களில் வீணாக தெருவோரம் உட்கார்ந்து இரவு நீண்ட நேரம் வரை வம்பளக்கிற கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஒரு பகுதி முஸ்லிம் பகுதி என்பதற்கான அடையாளமாகவும் அது மாரிவிட்டது.

மரியாதையான மனிதர் என்ற இலக்கணத்திர்கு பொது இடங்களில் தவிர்த்துக் கொள்ள பட வேண்டியவை சில  அநாகரீக செயல்கள் .
கேலி , கிண்டல்,  புறம் பேசுதல், கோள் சொல்லுதல்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(11)يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12)

நாம் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது. அத்தகைய சபைகளில் கலந்து கொள்ளவும் கூடாது. நம்முடைய கூட்டங்கள் எதுவும் இவை இல்லாமல் இல்லை என்பது வேதனையானது.
عدم الغيبة .
·        قال تعالى { ولا يغتب بعضكم بعضاً أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتاً فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم } وقال صلى الله عليه وسلم :" أتدرون ما الغيبة ؟ قالوا : الله ورسوله اعلم . قال ذكرك أخاك بما يكره . قيل : أفرأيت إن كان في أخي ما أقول ؟ قال صلى الله عليه وسلم:" إن كان فيه ما تقول فقد اغتبته وإن كان فيه ما تقول فقد بهته ". رواه مسلم . وعن جابر رضي الله عنه قال : كنا مع النبي صلى الله عليه وسلم فارتفعت ريح جيفة منتنة فقال رسول الله صلى الله عليه وسلم :" أتدرون ما هذه الريح ؟ هذه ريح الذين يغتابون المؤمنين". رواه أحمد وهو صحيح.

البعد عن النميمة
وعن أبي هريرة رضي الله عنه قال : كنا نمشي مع رسول الله صلى الله عليه وسلم فمررنا على قبرين فقام فقمنا معه ، فجعل لونه يتغير حتى رعد كم قميصه ، فقلنا : مالك يا رسول الله ؟ فقال :" أما تسمعون ما اسمع ؟ " فقلنا وما ذاك يا نبي الله ؟ قال : هذان رجلان يعذبان في قبورهما عذاباً شديداً من ذنب هيِّن " قلنا : فيما ذاك ؟ قال : كان أحدهما لا يستنزه من البول ، وكان الآخر يؤذي الناس بلسانه ويمشي بينهم بالنميمة ، فدعا بجريدتين من جرائد النخل فجعل في كل قبر واحدة ، قلنا : وهل ينفعهم ذلك ؟ قال :" نعم ، يخفف عنهما ما دامتا رطبتين ". متفق عليه حُرمة المسلم وعِصمة دمه

முஸ்லிம் என்பவர் ஒரு மரியாதையான மனிதர் என்ற இலக்கணத்திற்கு அடையாளமாக வாழ முயற்சி செய்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!

Thursday, May 24, 2012

மரியாதை



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ  - احمد 2228

கண்ணியமாக மரியாதையாக நடந்து கொள்ளுதல் என்பது சிறந்த மனித இயல்பு.

இஸ்லாம் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. இஸ்லாமிய பண்பாட்டியலில் முதன்மையாக பேசப்படக்கூடியது.

அது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கிய வழி

الاحترام هو الموقف الذي يساعدك على النجاح في حياتك وبناء علاقات متناغمة. تعلم أن تحترم نفسك ، والزملاء ، والأصدقاء ، والعائلة ، والبلد التى تعيش فيها ، والطبيعة ، وكل ما خلقه الله.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமிய கோஷம் அதிகரித்திருக்கிறது.  ஆனால் இஸ்லாமிய வாழ்வு குறைந்து விட்டது.

பொதுவாக முஸ்லிம்களிடமும் குறிப்பாக இன்றைய இளைய தலை முறையினரிடமும்   மரியாதையாக நடந்து கொள்ளும் இயல்பு குறைந்து போய்விட்ட்து.

மத வேறுபாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி மரியாதையாக நடந்து கொள்ள இஸ்லாம் கற்பித்த்து.

இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் முஹம்மது (ஸல்) அவர்கள் மரியாதையான நடத்தையின் மூலமே அரபுலக மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தார்கள். சஹாபாக்களும் அப்படித்தான்.

இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

மரியாதையான வாழ்க்கை என்பது பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட்து.

احترام الذات ، واحترام الوالدين ، واحترام المرأة ، واحترام المجتمع وقيمه ، واحترام العلماء ، واحترام الأمراء ، واحترام غير المسلمين بحفظ كراماتهم وآدميتهم

இவற்றில் முக்கியமானது. احترام الذات

எந்த மனிதனும் முதலில் தன்னை மதிக்க வேண்டும்.
தான் ஒரு மரியாதையான பிரஜை என்பதை உண்ர வேண்டும்.
எல்லா வித்த்திலும் மரியாதையான மனிதனாக நடந்து கொள்ள முய்றசிக்க வேண்டும்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கேலிக்கைகள்  நடந்து கொண்டிருந்த ஒரு இடத்தை கடந்த போது சட்டென்று அந்த இடத்தை  விட்டு அகன்று விட்டார் இதை அறிந்த பெருமானார் இப்னு மஸ்வூத் மரியாதையாக நடந்து கொண்டார் என்று சொன்னார்கள்.
_وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا -   معارف القرآن)

நம்மை நாம் மதிக்கிற வழிகள் ( புறத்தில் )

  • உடல் ஆரோக்கியத்தை கவனித்தல்
  • உடற்பயிற்சி
  • நல்ல கல்வி, படிப்பு
  • நல்ல பேச்சு – குறைவான தரமான பேச்சு
  • வாழ்வில் வெற்றி பெற உழைத்தல்
  • நேரிய சிந்தனையும் செயல் பாடுகளும். எதையும் குதர்க்கமாக யோசிக்கலாகாது. ஏட்டிக்கு போட்டியாக செயல் படக்க்கூடாது.

(இதில் ஒவ்வொன்றையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. நல்ல ஆடை அணிதல் , சீரான தோற்றப் பொழிவு, ஆரோக்கியமான வாழ்வு அனைத்தையும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது.)

  •  وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
  • عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَمَتَ نَجَا احمد 6193
  • عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ – الترمذي- 4816

புறத்தோற்றத்தல் நம்மை மதிக்கிற வழ்களை பலரும் சொல்லித்தருவார்கள். இன்றைய கால கட்ட்த்தில் மக்கள் கட்டணம் செலுத்தி அந்த பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். இஸ்லாம் நமக்கு அதற்கும் வழிகாட்டியது.

அகத்த்தில் – அந்தரங்கத்தில் நம்மை நாம மதிப்பது எப்படி என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

எந்த மனிதன் தன்னுடைய மனசாட்சிக்கு மரியாதைக்குரியவனோ அவனே உண்மையான மரியாதை ஆசாமி. அழகிய ஆடையை காட்டி பிறரிடம் மரியாதையை பெற்று விடலாம். அழகிய குணம் இருந்தால் மட்டுமே நம்மை நாம் மதிப்போம்.  

ஆத்மார்த்தமாக நாம்  மரியாதைக்குரியவராக திகழ சில முக்கிய வழிகள்
       
من سبل تحقيق احترام الذات

 تقوى الله تعالى

  • ·        عن ابن عباس قال : لا أرى أحدا يعمل بهذه الآية {يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم } فيقول الرجل للرجل : أنا أكرم منك فليس أحد أكرم من أحد إلا بتقوى الله . البخاري في الأدب المفرد ،
  • ·        وعن أبي هريرة ، رضي الله عنه ، قال قيل يا رسول الله من أكرم الناس ؟، قال :" أتقاهم ". رواه البخاري
  • ·         وقال تعالى { وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ }
·         அல்லாஹ்வை பயந்து நன்மை செய்கிற போது, அல்லது தீமைகள் செய்யாமல் விலகிக் கொள்கிற போது நம்மை நாம் மதிக்க தொடங்குகிறோம்.

العمل الصالع

مَنْ عَمِلَ صَالِحاً مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ }
·         قال أبو سليمان الداراني رحمه الله : من أصلح سريرته أصلح الله علانيته، ومن أصلح آخرته أصلح الله دنياه ، ومن أصلح ما بينه وبين الله أصلح الله ما بينه وبين الناس . وقد صدق رحمه الله ، فمن جمعت فيه تلك الخصال الثلاث جمع الله له سعادة الدنيا والآخرة .
·          
வயதுக்கேற்ற அமல்களே நமது மரியாதைக்கான அளவு கோள்.

البعد عن مواطن الريب والشبهات

·         أن الرجل إذا اتقى الشبهات ومواضع التهم فقد أحرز دينه عن الضياع وعرضه عن القدح فيه
·         قول علي رضي الله عنه : إياك وما يسبق إلى الأذهان إنكاره ، وإن كان عندك اعتذاره فليس كل سامع نكرا يطيق أن تسمعه عذر
·          
·         قال النبي صلعم :  إنما هي صفية بنت حيي "، قالا : سبحان الله يا رسول الله ، وكبر عليهما ما قال، قال : "إن الشيطان يجري من ابن آدم مبلغ الدم ، وإني خشيت أن يقذف في قلوبكما ". أخرجه البخاري.  2035

عدم التطاول على الآخرين

அடுத்தவர்களிடம் மலிவாக நடந்து கொள்ளாமை.
பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் நமது மரியாதைக்கேறப நடந்து கொள்ள வேண்டும்.

·         أن تعامل الناس بالطريقه التى تحب أن يعاملوك بها.

·         وعن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: " لعن الله من لعن والديه : قالوا يا رسول الله ويلعن الرجل والديه ، قال : يسب الرجل أبا الرجل فيسب أباه ويسب أمه ، فيسب أمه " .

عدم سؤال المخلوقين

தொட்ட்தற்கெல்லாம் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க கூடாது.
·         " ومن يستعفف يعفه الله " . متفق عليه .
قال صلى الله عليه وسلم : " من كان همه الآخرة جمع الله عليه أمره وجعل غناه في قلبه وآتاه الدنيا وهي راغمة، ومن كان همه طلب الدنيا جعل الله فقره بين عينيه وشتت عليه أمره ولم يأتيه من الدنيا إلا ما كتب له " .

மேலும் சில வழி முறைகள் உண்டு

·        احترام القواعد والقوانين
·        احتفظ بأسرارك الخاصة
·        اعترف بأخطائك بسرعة
·         دائما قدر قيمة الوقت

இவை நம்மை நாம் மதிக்கிற சில வழிகள் –
இது போல நாம் மதிக்க வேண்டிய பிறரின் உரிமைகள் பிறவற்றின் பெறுமைகள் பல உண்டு.
நம்மையும் மதிதுது மதிக்கப் பட வேண்டிய வற்றையும் மதித்து வாழ்வதே சிறந்த பணபாட்டின் அடிப்பை இலக்கணமாகும்