வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 07, 2013

தவறுகளை உணர்தல்

اأَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(8)


ஒரு நாளின் / ஒரு மாதத்தின் தொடக்கத்தையும் இறுதியையும் அடிக்கடி கணக்கு கூட்டி சரி பார்ப்பவரே வெற்றி கரமான வியாபாரியாகிறார்.

சிறந்த நிர்வாகிகள் நிர்வாகத்தின் நடவடிக்கையை கலாண்டுக்கு ஒரு தடவை சரி பார்த்து தவறுகள் இருப்பின் உடனடியாக திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அறிவுறுத்துகிறார்கள்.

தோல்வி அடையாமல் இருக்கவும். ஒரு வேளை தோல்வி அடைந்திருந்திருந்தால் அதன பாதிப்பை குறைக்கவும் தேவையான ஏற்பாடு என நிர்வாக இயல் இதை புகழ்கிறது.

ஈமனிய வாழ்க்கைகைகும் இத்தகைய திரும்பிப்பார்தல் அவசியம், ஈமானை பாதுகாக்கவும் தக்கவைக்கவும் இது அவசியம்


தவறு செய்வது இயல்பு, அதற்கு மன்னிப்பு பெற முயற்சிப்பது புத்திசாலித்தனம்
எவ்வளவு பெரிய நிலையிலும் மனிதன் தவறு செய்கிறான். மன்னிப்புக் அவனை பாதுகாக்கிறது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنَّ لَهُ وَادِيًا آخَرَ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ عَلَى مَنْ تَابَ  - مسلم

இன்றைய நிர்வாகப் படிப்பு இப்படிச் சொல்கிறது

·         தவ்று செய்து விட்டீர்களா? யோசிக்கவே செய்யாதீர்கள்! மன்னிப்புக் கேடு விடுங்கள்.
·         அது உங்களுக்கு கீழே வேலை செய்ப்வரிடமாக இருந்தாலும் சரி.
·         இதில் உங்களது அந்தஸ்து உயரவே செய்யும் , மற்றும் உறவு சீராகும் 

மனிதர்களிட்த்திலே இப்படி என்றால் அல்லாஹ்விடம் ?

அல்லாஹ் மன்னிப்பை வாரி வழங்குபவன்கோபிப்பதை விட மன்னிப்பதையே அவன் விரும்புகிறான்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ أَذْنَبَ عَبْدٌ ذَنْبًا فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى عَبْدِي أَذْنَبَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فَقَالَ أَيْ رَبِّ اغْفِرْ لِي ذَنْبِي فَقَالَ تَبَارَكَ وَتَعَالَى أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غَفَرْتُ لَكَ

பாவ மன்னிப்பு கேட்பவர்கள் புன்னியவான்கள்
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ – ترمذي
ஆணால் தவறை  உணராதோர்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ- ترمذي
மன்னிப்புக் கோரும்படி பெருமானாரின்  வலியுறுத்தல்
عَنْ  ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ – مسلم 4871
ஒரு மனிதன் தவ்பா கேட்கிற போது அல்லாஹ்விற்கு ஏற்ப்டும் மகிழ்ச்சி

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ أَحَدِكُمْ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا


َ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنْ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ – إبن ماجة
மனிதனின் மன்னிப்பை பெற பெரு முயற்சி தேவை. அப்படியே மன்னித்தாலும் முழு மனதுடனான மன்னிப்பா என்பது சந்தேகமாகவே இருக்கும்


மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் நிறைய உண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللَّهُ عَلَيْهِ -  مسلم


عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ - ترمذي
ஆனால் நமக்குள்ள வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது.

அல்லாஹ்வின்  மன்னிப்ப்பை பெற  சிறு முயற்சி போதும்

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا – ترمذي

மன்னிப்புக் கேட்பது எப்படி?

நம்மில் பலரது நினைப்பு நான் எதுக்காக மன்னிப்புக் கேட்கனும் என்பது போல இருக்கிறது.

முதலில் தவறுகள் பாவங்களைப் பற்றிய பிரக்ஞை வேண்டும். அதுவே
மன்னிப்பை தேடிய மேற்கொள்ளும் ஒரு சரியான முயற்சியாகும்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لَا فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ

இந்த ஆண்டு நான் என்ன தவறுகள் செய்தேன் என்று ஒரு பட்டியலை மனதுக்குள் தயார் செய்து கொண்டால்

இறவனிடம் கண்ணீர் பொங்க கையேந்துகிற மனோ நிலை தானாக வரும்.

இந்த ரமலானில் வாழ்க்கையின் கசப்பான பகுதிகளை கொஞ்சம் திருப்பிப்பாருங்கள்,, அல்லாஹ்வின் முன்னிலையில் அழுவதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக தோன்றும்

அந்தப் பாவங்களை எந்த மனிதனிடமும் சொல்லிப் புலம்ப வேண்டியதில்லை. சொல்லக் கூடாது.

அல்லாஹ்விடம் முறையி வேண்டும்.

எப்படி முறையிட வேண்டும்

செய்வதையெல்லம் செய்து விட்டு கங்கையில் குளித்து விட்டால் பாவம் போய்விடும் என்று இந்து மதம் சொல்கிறது. ஊரைக் கொள்ளை யடித்து சாமி உண்டியலில் காணிக்கை போட்டு விட்டால் போதும் என்று ஆசாமிகள் நினைக்கிறார்கள்.

நீ செய்கிற பாவத்திற்கெல்லாம் சேர்த்து இயேசு சிலுவையில் அறையப் பட்டு விட்டார். அதனால பாதிரியாரிடம் பாவத்தை சொல்லி மன்னிப்பை பெற்றுக் கொள் என்று கிருத்துவம் சொல்கிறது.

பெரும் பாவத்திற்கு தண்டனை மரணமே என்று யூத மதம் சொல்கிறது.

இவை எதுவும் தவ்று செய்யும் மனிதனை திருத்தவோ, அவனுக்கு உணர்த்தவோ அவனை மீட்சி பெறச் செய்வதாகவோ இல்லை.

பாவ மன்னிப்பு பெறுவதற்கு இஸ்லாமிய வழிகாட்டுதல் அற்புதமானது.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّدَمُ تَوْبَةٌ -– إبن ماجة
பாவமன்னிப்புக்கோரும் இஸ்லாமின் வழி
·         தவ்றுகளிலிருந்து விலக வேண்டும்
·         செய்த்த்து தவ்று என்பதை உணர்ந்து வருந்த வேண்டும்
·         இனி இந்த தவ்று செய்ய மாட்டேன் என்று உறுதியேற்க வேண்டும்

இதுவே தவ்பதுன்ன்ஸூஹா

இந்த மூன்று அம்சங்களும் இருந்தால் எந்த மனிதனிடமும் தன் பாவத்தை சொல்லி புலம் வேண்டியதில்லை. காசை கொட்டி செலவழிக்க வேண்டியதில்லை. உட்கார்ந்த இட்த்திலிருந்தே அல்லாஹ்வின் மன்னிப்பை அளவின்றி பெறலாம்.

வாய்ப்புக்க கிடைக்கிற போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நாம் புத்திசாலிகளாக இருக்க முடியாது.

எச்சரிக்கை:  

அல்லாஹ் மிக நல்லவன் அதே நேரம் மிக்க வல்லவனும் கூட
நம்மையே நமகெதிராக மாற்றும் சக்தி படைத்தவன்

பிர் அவ்னிடம் ஒரு தடவைநானே எகிப்தின் அரசன் என்று ஒருத்தன் சொன்னால் என்ன செய்வது என்று கேட்கப்பட்ட்து. உயிரோடு அவனை கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்று அவன் சொன்னான். அவனது பதிலே அவனுக்கு வினையாக அமைந்த்து.


No comments:

Post a Comment