வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 31, 2013

இஸ்லாத்தின் அடையாளம் வன்முறை அல்ல.


இஸ்லாம் எப்படி அறிமுகமானது?  எவ்வாறூ பின்பற்றப்பட்ட்து?

சமாதானம் மற்றும் அமைதி வழியில் மட்டுமே இஸ்லாமிய பிரச்சாரம் நடை பெற்றது. இன்னும் குறிப்பாக சொல்வதானால் இஸ்லாமி வலியுறுத்திய உயர்ந்த  பண்பாட்டு கூறுகளே இஸ்லாமின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.

மக்காவின் மக்கள் பெருமானாரை நெருக்கடிக்கு உள்ளாக்கிய நேரத்தில் மதீனாவிலிருந்து வந்து பலர் இஸ்லாமை தழுவினர். அவர்கள் எந்த அடிப்படையில் இஸ்லாமை தழுவினர் என்பதை வரலாறு சொல்கிறது.

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنِّي مِنْ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا وَلَا نَسْرِقَ وَلَا نَزْنِيَ وَلَا نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ وَلَا نَنْتَهِبَ وَلَا نَعْصِيَ  بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ   - البخاري 6873

முஹம்மது நல்லதை சொல்கிறார் என்றே மக்கள் அவரை பின்பற்றினர். சண்டைக்கு அழைக்கவில்லை. சச்சரவு செய்ய நினைக்கவில்லை. யார் வம்புக்கும் போவதில்லை என்பதே பெருமானாரை மக்கள் நம்புவதற்கு முதல் காரணமாக இருந்தது.

அபீஸீனியாவில் அடைக்கலம் பெற்றிருந்த முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டுவதற்காக மக்காவிலிருந்து திட்டமிட்டு வந்த மக்கவின் தலைவர் அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ வும் அம்ருப் பின் ஆஸூம் நஜ்ஜாஸீ மன்ன்னிடம் இவர்கள் எங்களது மார்க்கத்திலும் இல்லை. உங்களது மார்க்கத்திலும் இல்லை. புதுமையாக ஒன்றை சொல்கின்றனர். இவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றனர். அப்போது அவர்களிடம் விசாரிக்காமல் ஒப்படைக்க முடியாது என்று கூறிய நஜ்ஜாஷி முஸ்லிம்களிடம் உங்களுடை தீன் என்ன என்று கேட்ட போது ஜாபர் பின் அபீதாலிப் தீனுக்கு அற்புதமான விளக்கம் சொன்னார். இஸ்லாமிற்கு சொல்லப்பட்ட விளக்கங்களில் இதை விட உன்னதமான சொற்கள் வேறு இல்லை.

قال  النجاشي : «ما هذا الدين الذي أنتم عليه؟ فارقتم دين قومكم ولم تدخلوا في يهودية، ولا نصرانية»،[21][22] فكان الذي كلمه جعفر بن أبي طالب، فقال له:
أيها الملك، كنا قوماً أهل جاهلية، نعبد الأصنام، ونأكل الميتة، ونأتي الفواحش، ونقطع الأرحام، ونسيء الجوار، ويأكل القوي منا الضعيف، فكنا على ذلك، حتى بعث الله إلينا رسولاً منا، نعرف نسبه وصدقه وأمانته وعفافه، فدعانا إلى الله لنوحده ونعبده، ونخلع ما كنا نعبد نحن وآباؤنا من دونه من الحجارة والأوثان، وأمرنا بصدق الحديث، وأداء الأمانة، وصلة الرحم، وحسن الجوار، والكف عن المحارم والدماء، ونهانا عن الفواحش، وقول الزور، وأكل مال اليتيم، وقذف المحصنات، وأمرنا أن نعبد الله وحده، لا نشرك به شيئاً، وأمرنا بالصلاة والزكاة والصيام، فصدقناه وآمنَّا به، واتبعناه على ما جاء به من الله، فعبدنا الله وحده، فلم نشركْ به شيئاً، وحرمنا ما حرم علينا، وأحللنا ما أحل لنا، فعدا علينا قومنا، فعذبونا، وفتنونا عن ديننا، ليردونا إلى عبادة الأوثان من عبادة الله تعالى، وأن نستحل ما كنا نستحل من الخبائث، فلما قهرونا وظلمونا وضيقوا علينا، وحالوا بيننا وبين ديننا، خرجنا إلى بلادك، واخترناك على من سواك، ورغبنا في جوارك، ورجونا أن لا نظلم عندك أيها الملك
فقال له النجاشي: «هل معك مما جاء به عن الله من شيء؟»، فقال له جعفر بن أبي طالب: «نعم»، فقال له النجاشي: «فاقرأه علي»، فقرأ عليه صدراً من سورة مريم: Ra bracket.png كهيعص Aya-1.png ذِكْرُ رَحْمَةِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا Aya-2.png إِذْ نَادَى رَبَّهُ نِدَاءً خَفِيًّا Aya-3.png La bracket.png، إلى الآيات: Ra bracket.png وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا Aya-16.png فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا Aya-17.png قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا Aya-18.png قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا Aya-19.png La bracket.png.[24]
قالت: فبكى والله النجاشي حتى اخضلت لحيته، وبكت أساقفته حتى أخضلوا مصاحفهم حين سمعوا ما تلا عليهم، ثم قال النجاشي: «إن هذا والذي جاء به عيسى ليخرج من مشكاة واحدة، انطلقا، فلا والله لا أسلمهم إليكما، ولا يكادون

காதிஸிய்யா போர்க்களத்தில் பாரசீக படைத்தளபதி ருஸ்துமிடம் முஸ்லிம் படைவீர்ர் பேசிய வீரம் தழும்பும் சொற்களில் நன்மைக்கு அழைக்கும் தொனியே மிகைத்திருந்த்து.

. فقال رستم: إئذنوا له، فأقبل  وهو ربعي بن عامر فقالوا له: ما جاء بكم؟ فقال: الله ابتعثنا لنخرج من شاء من عبادة العباد إلى عبادة الله، ومن ضِيق الدنيا إلى سعَتَها، ومن جَوْر الأديان إلى عدل الإِسلام، فأرسلنا بدينه إلى خلقه لندعوهم إليه؛ فمن قبل ذلك قبلنا منه ورجعنا عنه، ومن أبى قاتلناه أبداً حتى نفضيَ إلى موعود الله، قالوا: وما موعودُ الله؟ قال: الجنة لمن مات على قتال من أبى، والظفر لمن بقي

இஸ்லாம் பண்பாட்டின் வழியே பரப்பப் பட்டது. முஸ்லிமுக்கு அடையாளமாகவும் பண்பாட்டுக் கூறே சொல்லப்பட்டது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَسَمَ بَيْنَكُمْ أَخْلَاقَكُمْ كَمَا قَسَمَ بَيْنَكُمْ أَرْزَاقَكُمْ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُعْطِي الدُّنْيَا مَنْ يُحِبُّ وَمَنْ لَا يُحِبُّ وَلَا يُعْطِي الدِّينَ إِلَّا لِمَنْ أَحَبَّ فَمَنْ أَعْطَاهُ اللَّهُ الدِّينَ فَقَدْ أَحَبَّهُ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُسْلِمُ عَبْدٌ حَتَّى يَسْلَمَ قَلْبُهُ وَلِسَانُهُ وَلَا يُؤْمِنُ حَتَّى يَأْمَنَ جَارُهُ بَوَائِقَهُ قَالُوا وَمَا بَوَائِقُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ غَشْمُهُ وَظُلْمُهُ وَلَا يَكْسِبُ عَبْدٌ مَالًا مِنْ حَرَامٍ فَيُنْفِقَ مِنْهُ فَيُبَارَكَ لَهُ فِيهِ وَلَا يَتَصَدَّقُ بِهِ فَيُقْبَلَ مِنْهُ وَلَا يَتْرُكُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ إِنَّ الْخَبِيثَ لَا يَمْحُو الْخَبِيث  - احمد 3490

முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம்களோடு சண்டைக்கு வராத முஸ்லிமல்லாதவர்களின் மரியாதையும் பாதுகாப்பும்.   

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا-        البخاري6914 

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ  من آذي ذميا فقد آذاني


அநீதி இழைக்கப்பட்ட திம்மிகளுக்காக வாதாடும் வக்கீலாக மறுமையில் என்னைக் காண்பீர்கள் என்றார் பெருமானார்

அதனால் முஸ்லிம்கள் எந்த பகுதியை வென்ற போதும் அன்பு சமாதானம் பொறுமை மூலமே மக்களை அணுகினர்.

ويقول المؤرخ الإنجليزي السير توماس أرنولد في كتابه "الدعوة إلى الإسلام": " لقد عامل المسلمون الظافرون العرب المسيحيين بتسامح عظيم منذ القرن الأول للهجرة ، واستمر هذا التسامح في القرون المتعاقبة ، ونستطيع أن نحكم بحق أن القبائل المسيحية التي اعتنقت الإسلام قد اعتنقته عن اختيار وإرادة حرة ، وإن العرب المسيحيين الذين يعيشون في وقتنا هذا بين جماعات المسلمين لشاهد على هذا التسامح ".

முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுவதை திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ  المائدة 8

அதனால் வன்முறையோ தீவிரவாதமோ முஸ்லிம்களுக்கு ஒரு போதும் தெரியாது. உலகின் மொத்த வரலாறும் இதற்கு சாட்சி.

தற்கொலை தாக்குதல் – அப்பாவிகளை கொல்லுதல் – நம்பிக்கைகும் மோசம் செய்தல் – ஆக்ரமித்தல் – கட்டிடங்களை உடைத்தல் எதுவும் இஸ்லாமின் வழிமுறை இல்லை.

؛ فقد جاء في وصيّة الرسول صلى الله عليه وسلم لجيش مؤتة: "ولا تَقْطَعَنَّ شَجَرَةٍ وَلا تَعْقِرَنَّ نَخْلا ولا تَهْدِمُوا بَيْتًا

இந்த வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்த்து. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளுமேயாகும்.

யூதர்கள் - மேற்கத்திய சக்திகளின் எல்லை மீறிய அக்கிரமங்கள் காரணமாகவே முஸ்லிம்கள் அவர்களுடைய வழிமுறைகளை கையாண்டு அவர்களுக்கு பதிலளிக்க நேர்ந்த்து.

முஸ்லிம்களின் வன்முறை போக்கிற்கு காரணத்தை சுட்டிக்காட்ட வேண்டுமெனில அமெரிக்காவையோ மேற்குலகத்தையோ தான் சுட்டிக்காட்ட வேண்டும். இது இஸ்லாமின் சுன்னத்தோ நபியின் சுன்னத்தோ அல்ல. அமெரிக்காவினுடையதும் மேற்குலக நாடுகளுடை சுன்னத்தாகும்.

உலகின் எந்தப் பகுதிய்லும் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கினார்கள் என்று கேள்விப்பட்டால் அதில் எதிர்ப்பாளர்களின் பங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தேடிப்பார்த்தால் முஸ்லிம்களின் குற்றம் எந்த வகை சார்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

எதிர்கள் கொடுக்கும் வன்மமான நீதியற்ற நிர்பந்தமே முஸ்லிம்களை வன்ம்மான நடைமுறைகளை கையாளுமாறு 20 ம் நூற்றாண்டிலும் 21 ம் நூற்றாண்டிலும் முஸ்லிம்களை தூண்டியுள்ளது.

ஆப்கானிய தாலிபான்கள். பாலஸ்தீன புரட்சியாளர்கள். இராக்கிய மக்கள் என யாரையும் குறை சொல்வதற்கு முன் அவர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளை பற்றியும் பேசுகிறவர்களே நியாயவான்களாக நீதி பேசுபவர்களாக இருக்க முடியும்.

தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்கி இருக்கும் திரைப்படம் ஒரு பக்கமாக அமெரிக்கர்களை நல்லவர்களாகவும் தாலிபான்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கிறது.

இந்த திரைப்படம் அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறையின் ஏற்பாட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது.

திரு கமல்ஹாசன 2011 ம் ஆண்டு இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்டை அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுள்ளார். (தந்தி தொலைக்காட்சியில் மணியன்)

இப்படம் தயாரிப்பதற்கான உதவிகள் கருவிகள் துணைச் சாதன்ங்கள் அனைத்தும் அமெரிக்காவின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

கமல் ஹாசன் திரையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சிறந்த நடிகரே! இந்தப் பட்த்தினால் தான் தான் திவாலாகப் போவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

திரு கமல் ஹாசன் இப்படத்தை தயாரிப்பதற்கு முன்னரே பெரும் நஷ்ட்த்தில் தான் இருந்தார்.  இவரிடம் பேசினால் எங்கே கடன் கேட்டு விடுவாரோ என்று அஞ்சியே திரைப்பட்த்துறையை சார்ந்த அவருடை சகாக்கள் அவரிடமிருந்து விலகி இருந்தனர்.  

முஸ்லிம்களை இழிவு படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு உதவி செய்தால அதில் கிடைக்கிற இலாபத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

இந்தப் படத்தை டி டி எச்சில் வெளியிடுவதற்கு அவர் பெரு முயற்சி செய்ததும்
அவருடை சதித் திட்டமே!  

தாலிபான்கள் தொழுது விட்டு குர் ஆன் வசன்ங்களின் பின்னணியில் குற்றம் புரிவதாக காட்டுகிற கமல் ஹாசன் அதை தடுக்கிற முஸ்லிமாக வருகிற அவர் தொழுவது போல ஓரிடத்திலாவது காட்டினாரா?  அமெரிக்க இராணுவ வீர்ர்கள் சர்ச்சில் பிரார்த்தனை செய்து விட்டு பைபிளை கையில் வைத்துக் கொண்டு தினசரி பைபிள் படித்து விட்டுத்தான் அப்பாவி மக்கள் மீது உலகின் மிக மோசமான ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். அதை எல்லாம் கமல் காட்டினாரா?  உலக் அரங்கில் போராடுகிற முஸ்லிம்களின் ஒரு பிரிவினரை மட்டுமே மதத்தோடு தொடர்பு படுத்தி விட்டு இந்திய முஸ்லிம்களை நான் குறை சொல்ல வில்லை என்று பேசுவது ஏமாற்றும் நடிப்பின் உச்சமாகும்.

கமல் ஹாசனின் திரைப்பட்த்தை முஸ்லிம்கள் எதிர்க்க காரணம் அவர் சம்பாதிப்பதற்காக முஸ்லிம்களை பலிகடாவாக்கியதே ஆகும்.

இது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை உண்ராமல் இருந்து விட்டால் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும்!

அதனால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த திரப்பட்த்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தை ஆளும் அரசு முஸ்லிம்களின் இந்த உணர்வை புரிந்து பட்த்திற்கு தடை விதித்திருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை முஸ்லிம்களின் உள்ளத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றியிருக்கிறது. இந்த நாட்டில் நமது கருத்தையும் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியை கொடுத்திருக்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க முஸ்லிம்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் முஸ்லிம் சமூகத்தில் அரசியல் புரோக்கராக இருக்கிற கோனிகா பஷீர் என்பவரும் காங்கிரஸ் எம்பி ஹாரூனும் தேவையற்று இந்த விச்யத்தில் தலையிட்டு முஸ்லிம் சமூகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளனர், ஒரு தலைமையின் கீழ் அணி திரண்டு முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையில் கீழறுப்பு வேலை செய்கிற இத்தகையவர்களை அடையாளம் கண்டு சமுதாயம் ஒதுக்கி வைக்க வேண்டும். இவர்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். வேதனையிலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் அசிங்கமான பிறவிகள் இவர்கள்.

முஸ்லிம் லீக் என்ற ஒரு கட்சி இருக்கிறதா? அது முஸ்லிம்களுக்கு தேவையா என்ற கேள்வியும் இந்தக் கட்டத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி வழக்கப் படி முஸ்லிம்களை கழுத்தறுக்கிற வேலையை இப்போதும் செய்திருக்கிறது. முஸ்லிம்களை புண்படுத்துகிற ஒரு திரைப்படத்தை அந்த ஆட்சியின் பொறுப்பில் இருக்கிற மத்திய சென்சார் போர்டு பொறுப்பில்லாமல் அனுமதித்திருக்கிற போது அதை கவனிக்காமல் பட்த்திற்கு மாநில அரசு தடை விதித் திருப்பதை மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி குறை கூறுகிறார்.

குற்றப்பத்ரிகை என்ற திரைப்பட்த்தை வெளியிட அனுமதி மறுத்த சென்சார் போர்டை கையில் வைத்திருந்தவர்கள் இந்தப் பட்த்திற்கு அனுமதி கொடுத்த்திற்கு வெட்கப்படாமல், அதை ஆதரித்துப் பேசுவது கேடுகெட்ட அரசியலாகும்.

இந்தப் படம் குறித்து தீர்ப்பு என்ன வாக வந்தாலும் முஸ்லிம்கள் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இனி இது போல முஸ்லிம்களை மட்டுமே ஒரு தரப்பாக குற்றம் சாட்டுகிற வகையில் திரைப்படங்கள் வெளிவராத வகையில் திரைப்பட தணிக்கை வாரியம் திருத்தி அமைக்கப்படுவதற்கு போராட வேண்டும். தான் செத்து இந்திய அரசியலை சாகடித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியை இதற்காக உளுக்க வேண்டும்.

இப்போதைக்கு, கடந்த காலங்களில் முஸ்லிம்களை ஒரு தரப்பாக அவமதிக்கும் திரைப்படங்களை தயாரித்தவர்களையும் அதில் இடம் பெறும் நியாயமற்ற காட்சிகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக தயாரித்து தமிழகத்திலுள்ள சினிமா கலைஞர்களிடம் கொடுத்து தொடர்ந்து இவ்வாறு நீங்கள் செயல்படுவது நியாயமா? இவ்வாறு செயல்படுப்வர்களுக்கு துணை போவது சரியா என்று கேட்க வேண்டும்.

இறுதியாக கண்டிப்பாக ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு விசயம் ஒரு திரைப்படம் முஸ்லிம் சமூகத்தை கொச்சைப் படுத்துகிற என்பதற்காக இந்த தகவலகளை நாம் பரிமாறிக் கொண்டோம்.

ஆபாசங்கள் நிறைந்த திரைப்படம் பார்ப்பதும் அதை பரப்புவதும் மார்க்கம் தடை செய்திருக்கிற விசயம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


  

No comments:

Post a Comment