வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 24, 2013

விசுவரூபம் ஒரு விளக்கம்


விசுவரூபம் ஒரு விளக்கம்
 திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை.

சமீப ஆண்டுகளில் ஒரு தரப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து ஊடகங்கள் சித்தரிப்பதால் பொதுவான முஸ்லிம்களின் வாழ்க்கை பெரும் சங்கட்த்திற்கு உள்ளாகியிருக்கிறது.

எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தரப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் ஒரு தரப்பாகவே காட்சிகளையும் செய்திகளையும் வெளியிடுகின்றன. அத்தோடு தங்களது கற்பனைக்கு தோன்றியதை உண்மை போல சித்தரிக்கின்றன,

இதனால் பொது இடங்களில் கோடிக்கணகான முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற நிராகரிக்கப்படுகிற சூழல் அதிகரித்து வருகிறது. சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் இதனால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது.

கமல் ஹாசனது திரைப்படம் முஸ்லிம்களை ஒரு தரப்பாக மேலும் அதிகமாக புண்படுத்தியிருப்பதாக சொல்வதை திரு கமல் ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது.

அவருடை வருமானம் அவருக்கு முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் மூலம் ஒரு பெரும் சமுகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படுவது எந்த வகைய்லும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தப்படத்தில் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவை போன்ற நகரங்களில் தங்கியிருந்த்தாக காட்டப்படுகிறது.  பெரும் சோகத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக அமைதி நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற கோவை போன்ற நகரங்களில் அவநம்பிக்கையையும் மத நல்லிணக்கத்தையும் பாதித்து விடக்கூடியது.

கட்ட பொம்மன் என்றால் சிவாஜி கணேசனை நினைவு கூறுகிற அளவுக்கு நம்முடைய தமிழகத்து மக்கள் சினிமாவோடு ஒன்றிப்போனவர்கள். இத்தகைய மக்களிடையே கமல் ஹாசன் போன்ற மூத்த கலைஞர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்ம்மான கருத்துக்களை திணிப்பது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிரமப்படுத்தி விடும். ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மேலும்பாதிக்கப்படுவார்கள்

ஒரு தரப்பாக இந்த கொடுமையிலிருந்து அடுத்த தலைமுறையையாவது பாதுகாக்க வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதை கமல்ஹாசனும் கலைத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிமேல் இத்தகைய கொடூரம் தொடராமல் தடுப்பதற்காக முஸ்லிம் சமுதாயம் நடத்துகிற போராட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment: