வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 14, 2013

இறைநேசர்களால் இந்த சமுதாயம் பெற்ற நன்மை என்ன?



الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب

رواه البخاري عن أبي هريرة قال : قال رسول الله - صلى الله تعالى عليه وسلم - : " من عادى لي وليا فقد آذنته بالحرب " . قال شارح له : أي أعلمته بمحاربته ومعاداته معي ، أو بأني سأحاربه ، وأقهره ، وأنتصر منه ، وأنتقم له .

وعن عمر بن الخطاب - رضي الله عنه - أنه خرج يوما إلى مسجد رسول الله - صلى الله عليه وسلم –
فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي - صلى الله عليه وسلم - يبكي ، فقال : ما يبكيك ؟ قال : يبكيني شيء سمعته من رسول الله - صلى الله عليه وسلم - ، سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : إن يسير الرياء شرك ، ومن عادى لله وليا فقد بارز الله بالمحاربة ، إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا ، وإن حضروا لم يدعوا ولم يقربوا ، قلوبهم مصابيح الهدى ، يخرجون من كل غبراء مظلمة " . رواه ابن ماجه ، والبيهقي في ( شعب الإيمان


இது ரபீஉல் ஆகிர் மாதம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஆவர்கள் சிறப்பாக நினைவு கூறபடுகிற மாதம்.

ஆனால் பொதுவக இறைநேசர்களின் மீதான பற்றையும் மரியாதையை நினைவு கூர்ந்து அவர்களுடைய அறிவுரைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிற மாதமாகும்.  

ஜீலானி ரஹ் அவர்களின் புகழ்ந்து பாடப்படுகிற மௌலூதின் இறுதியில் இறைநேசர்கள் பலருடைய பெயரும் நினைவு கூறப்படுகிறது.


நபி தன்னை பகிரங்கமாக பிரகடனப்படுத்த வேண்டும்.

இறைநேசர்கள் பகிரங்கமாக அறியப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலருக்கும்  தாம் ஒரு வலி என்பது தெரியாமலெ கூட இருக்கலாம் 
كما في الحديث القدسي : ( أوليائي تحت قبائي لا يعرفهم غيري
எனது நேசர்கள் எனது போர்வைக்குள் இருக்க்றார்கள்.

அதனால்  அனைத்து இறைநேசர்களும் உலகிற்கு வெளிப்பட வில்லை. சிலர்   அவர்களுடைய அபாரமான சமூக சேவையின் காரணமாக அடையாளம் காணப்பட்டார்கள். சரியான மார்க்கத்தை கடைபிடிக்க உதவிய காரணத்தால் மக்கள் அவர்களை பெரிதும் மதித்தார்கள்.

இஙகே ஒரு தகவலை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதர்களில் மிகச் சிறந்தவர் பெருமானா (ஸல்) அதன் பிறகு மற்ற நபிமார்கள் அதன் பிறகு நமது நபியின் தோழர்களான சஹாபாக்கள் அதன் பிறகு இறைநேசர்கள்  என்பதே சிறப்பிற்குரிய மனிதர்களைப் பற்றிய நமது கொள்கையாகும். அந்த் அடிப்படையில் நபித்தோழர்க்ளான சஹாபாக்கள்  அனைவரும் மிக உயர்ந்த இறைநேசர்கள்  ஆவர். நபித்தோழர்களுக்குப் பின் வந்த எந்த இறைநேசரும் சஹாபாக்களின் அந்தஸ்தஸ்திற்கு ஈடானவர்கள் அல்ல.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்களிடம் முஆவியா (ரலி) சிறந்தவரா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) சிறந்தவரா என்று கேட்கப்பட்டது. இமாம் ஷாபி (ரஹ்) கூறினார். முஆவியா (ரலி) யின் குதிரையின் குளம்படி மண்ணுக்கு கூட உமர் பின் அப்துல் அஜீஸ் ஈடாக முடியாது

எனவே அவ்லியாக்கள் எனப்படும் இறைநேசர்க்ளின் அந்தஸ்து நபித்தோழர்களின் அந்தஸ்திற்கு கீழ் தான் என்பதையும்,  இறைநேசர்கள் தங்களுடைய மார்க்க் சமூகப் பணியினால் தான் சமூகத்தின் கவனத்திற்கு வந்தார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.

இந்த நல்லடியார்கள் நமக்கு இறையச்சத்தையும் இறைத்தூதரின் மீது பற்றையும் மார்க்கத்தின் மீது பிடிப்பையும் உருவாக்கினாகள். தாம் வாழ்ந்த காலத்தில் மக்களை நல்வழிப்டுத்த அதிக முயற்சி செய்த்தார்கள்.


இறைநேசர்கள் செய்த பணி

·         மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள்.
·         முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லிக் கொடுத்தார்கள்.
·         அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வழி காட்டினார்கள்.
·         சமூக சீர்திருத்தப் பணிகள் பலவற்றை திறம்படச் செய்தார்கள்.
·         அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்க் உழைத்தார்கள்.
·         அக்கிரமச் சக்திகளுக்கு எதிராக் போரடினார்கள்.


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ஹிஜிரி 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அவ்ருடைய காலத்தில் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த்து. உலகில் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலம் அது. கல்வி, கலை, அறிவியல், மருத்துவம். என முக்கியத்துறைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள். மற்றவர்கள் தமது தேவைகளுக்காக முஸ்லிம் நாடுகளையே நம்பியிருந்த காலம் அது.

அங்கே இரண்டு வகையான தீமைகள் பெருகி வந்தன.

1.   அறிவியல் துறையில் முன்னேறிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மார்க்கத்தின் உயிரோட்டமான ஆன்மீக சிந்தனைகளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருந்தார்கள். படிப்பறிவு மேலோங்கி பக்தி குறைந்து கொண்டிருந்த்து.

2.   ஆன்மீக வாதிகள் என்று அறியப்பட்டோர் ஷரீஅத்தின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த இரண்டு சூழ்நிலைகளையும் அடியோடி மாற்றினார் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

ஞானம் மிக்க அவரது உபதேசங்கள் மனித உள்ளங்களை தட்டி எழுப்பி மார்க்கத்தின் பாதைக்கு அழைத்து வந்தன. கணக்கிலடங்காதோர் அவரால நேர் வழி பெற்றனர். அவரது உரையை கேட்க ஒரு சமயம் பக்தாது நகருக்கு 90 ஆயிரம் பேர் திரண்டதாக வரலாறு சொல்கிறது. அந்த சபையை பற்றி ஆச்சரியமூட்டும் வகையில் பேசப்படுகின்றன. ஏராளமானோர் அவரது பேச்சில் திருந்தினர். அதனால் மக்கள் அவரை பேராசானாக போற்றினர். ஒரு முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனப் போக்கை மார்க்கத்தை நோக்கி திருப்பியதால் தான் அவர் முஹியித்தீன் என்று அழைக்கப்பட்டார்.

அன்னாரின் மற்றுமொரு சிறப்பு, ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறீ நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார். இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப் பட்டது.

அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி
ஒரு நாள் தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார். சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து  என்னைப் பாராட்டி விட்டு ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால் என்றான். அவனை விரட்டினேன் என்றார். அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டன்ர்.. ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்.     
சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்)  யிடம் சொன்னான் இதே போல நாற்பது பேரை ஏமாற்றி யிருக்கிறேன் நிர் மார்க்க ஞானம் பெற்றிருந்த்தால் தப்பித்துவிட்டீர்.

ஜிலானி (ரஹ்) அவர்கள் அனைத்து தரீக்கா பிரிவின்ரையும் இணைத்து மாபெரும் மாநாடுகளை நட்த்தி தரீக்கா பற்றீய புரிந்துணர்வை ஏற்படுத்தினார். அதனால் நக்ஷபந்தி தரீக்காவினர் ஜீலானி (ரஹ்) அவர்களை எங்களுடையவும் உங்களுடையவும் ஷைகு என்று அழைப்பதுண்டு.

ஜிலானி ரஹ் அவர்களின் முயற்சியின் விளைவாவாகத்தான் பல த்ரீக்கா  களும் இணைந்த பொத்துவான ஷைகுகளும் தரீக்காகளும் உருவாயின.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மார்க்கம் தளர்வுற்றிருந்த நேரத்தில் ஜீலானி ரஹ் அவர்கள் ஆற்றிய பணியின் விளைவாக் முஸ்லிம் சமூகம் மிகப் பெரும் மலர்ச்சியை கண்ட்து. அதனால் தான் மக்கள் அவரை முஹ்யித்தீன் என்று அழைத்தார்கள்.

அன்னாரது அறிவுரைகளும் உபதேசங்களும் இன்றும் கூட உள்ளத்தை உருக்குபவையே!

கிட்ட்த்தட்ட இதே காலத்தில் ஜீலானி (ரஹ்) அவர்களின் தொடர்பிற்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்தவர் தான் அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்கள்.

அவர்தான் வட இந்தியாவில் இஸ்லாம் பரவ காரணமாக இருந்தார்.  

அவருடைய முயற்சியால் ஆயிரம் வருட்ங்களுக்கு முன்பு 90 இலட்சம் மக்கள் இஸ்லாமை தழுவியதாக ஆர்னால்டு தாயன்பி என்ற அறிஞர் கூறுகிறார்.

காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி அவர்கள், இந்தியாவில் நிலவிய சதீ க் கொடுமைக்கு எதிராக போராடினார். சாமாண்ய மக்களுடைய் வசதிகளுக்காக உழைத்தார். அவர்களுகு நிதி பெற்றுத்தருவதற்காக தானே நேரடியாக அரசர்களிடம் சென்றார்ர்.

தமிழகத்தில் மிகப் பிரப்லமாக இருக்கிற நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா – ஏர்வாடி சையத் இபுறாகீம் பாதுஷா (ரஹ்) ஆகியோரும் முஸ்லிம் சமூகத்து மக்களுக்கு மார்க்கத்திலும் சமூகத்திலும் முன்னேற்றம் காண உதவிவர்களே எனபது அவர்களுடைய வரலாறுக்ளை படித்தால் அறிந்து கொள்ள முடியும்,

ஒவ்வொரு பகுதியிலும் கிராமத்திலும் இறைநேசர்களாக் அடையாளம் காணப்படுகிறவர்களின் வரலாற்றை தேடி ஆராய்ந்து பார்த்தால் அவர்களால் இந்த சமூகம் அடைந்த நன்மைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

வலி மார்கள் பெரும்பாலும் தங்களது உரைகளால் உலகியல் மோகத்தில் மூழ்கியிருக்கும் மக்களை அல்லாஹ்வின் எதார்த்த சக்தியை நோக்கி திருப்பி விட்டனர்.

ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) ஹ்ஜிரி 3 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் – 221 -298
உயிரோட்டமிக்க சொற்பொழிவால் மக்கள் மன்ங்களில் இறை நம்பிக்கையை இறையச்சத்தை விதைத்தார்

·         الغفلة عن الله اشد من دخول النار
¨  இறைவனின் மீது நம்பிக்கை தவ்க்குல் வைத்து செயலாற்றாதிருப்பது இறைவனை சோதிப்பதாகும்.
¨  தன் திறமையால் எல்லாம் நிகழ்கின்றன என்று நினைப்பது இறைவனை அலட்சியம் செய்வதாகும்.
¨  தோற்றத்தினால் அல்ல; குணத்திலாயே ஒரு நபர் மனித்ராக தோன்றுகிறார்.
¨  மனதுக்கு கட்டுப்படுவதே முறைகேடுகளுக்கு முல காரணம்
¨  அல்லாஹ்வின் படைப்புக்களிலிருந்து பாடம் படிக்காத கண்ணை விட குருட்டுத்தனம் மேல். இறைவனை துதிக்காத நாவை விட ஊமைத்தனம் மேல். உண்மையை செவியேற்காத காதை விட செவிட்டுத்தனம் மேல். அல்லாஹ்வை வணங்காத உடலை விட மரணம் மேல்.
¨  ஒரு மாணவர் சில வருடங்கள் உடன் இருந்து விடை பெற்ற போது “ உங்களிடம் விஷேசமாக ஒன்றும் தெரியவில்லையே என்றார்.
குர் ஆணுக்கு நபியின் வழிமுறைக்கும் மாற்றமாக எதையாவது கண்டீரா
இல்லை
அதை தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை

இத்தகையவர்களின் வழிகாட்டுதல்கள் தூண்டுதல்கள்  நமக்கு அவசியம்.
¨  سفيان الثوري  மிகப் பெரிய அறிஞர். நான்கு மதஹபுகளின் இமாம்களுக்கு நிகரான கருத்துச் செல்வாக்கு மிக்கவர்.

¨      وقال علي بن الحسن بن شقيق عن عبد الله قال: ما أعلم على الأرض أعلم من سفيان. وقال بشر الحافي: كان الثوري عندنا إمام الناس. وعنه قال: سفيان في زمانه كأبي بكر وعمر في زمانهما
அவர் சொல்கிறார்.   அபுஹாஷிம் அஸ்ஸூபி இல்லை என்றால் முகஸ்துதியின் மெல்லிய இழைகளை என்னால்  அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது

2 comments:

  1. mohammed hathees9:23 PM

    Jazakallah haz rath, barakallahu fee ilmika va aafiyathika va hayathika .valimarhalai nesippom valvil uyarvom .

    ReplyDelete
  2. அருமையான பயனுள்ள பதிவு
    அக்பர் சார்ஜா

    ReplyDelete