இலங்கையில் இன்னப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு போராட்டக்களம் உருவாகியுள்ளது.
- படுகொலைகள் பெருகி விட்ட காலம் இது.
- நாம் சிறுவர்களாக இருக்கும் போது கொலை அரிதாக இருந்தது.
- மாநிலத்தில் எங்காவது ஒரு கொலை நடை பெற்றால் அதுவே ஒரு பெரிய பேச்சாக பல நாட்கள் தொடரும். கொலைக் குற்றவாளியின் பெயரும் அவனுடைய வரலாறும் பிரபலமாக அறியப்படும். (பில்லா ரங்கா )
- ஆனால் இன்று எத்தனை கொலைகள் என்று எண்ணுகிற அளவு கொலைகள் பெருகி விட்டன
- அற்பக் காரணங்களுக்காக கொலை நடக்கிறது.
- உலகில் தோன்றும் சகல பிரச்சினைகளைப் பற்றியும் எச்சரித்த பெருமானார் (ஸல்) இப்படுகொலைகள் குறித்தும் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்,.
நபியின் ஒரு பெயர் - وَنَبِيُّ
الْمَلْحَمَةِ
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ
سَمَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفْسَهُ
أَسْمَاءً مِنْهَا مَا حَفِظْنَا فَقَالَ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ
وَالْمُقَفِّي وَالْحَاشِرُ وَنَبِيُّ الرَّحْمَةِ قَالَ يَزِيدُ وَنَبِيُّ
التَّوْبَةِ وَنَبِيُّ الْمَلْحَمَةِ
- احمد 18704
نَبِيُّ
الْمَلْحَمَةِ என்றால் நபி இற்நதால் யுத்தங்கள் தொடரும்
أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَارَبُ الزَّمَانُ
وَيَنْقُصُ الْعَمَلُ وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ قَالُوا وَمَا
الْهَرْجُ قَالَ الْقَتْلُ الْقَتْلُ – البخاري -6037
- கேரளாவில் கோழிக் கோட்டில் கார் சக்கரத்திலிருந்து சேற்றுநீர் தெரித்து விட்டது என்பதற்காக ஒரு வர் கொலை செய்யப் பட்டார்.
- கோவையில் ஒரு ஹோட்டல் சிப்பந்தி சரியாக உபசரிக்க வில்லை என்பதற்காக கொலை செய்யப்பட்டார்.
- எதற்காக கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே பலர் கொல்லப்படுகிறார்கள்,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ
لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِي أَيِّ شَيْءٍ
قَتَلَ وَلَا يَدْرِي الْمَقْتُولُ عَلَى أَيِّ شَيْءٍ قُتِلَ – مسلم 5177
- தலைவன் இன்ன ஆளை கொன்று போடு என்று சொன்னால், கொன்று விடுவார்கள். கொலைகாரனுக்கும் கொல்லப்பட்டவனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
- கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் எதற்காக என்பதை அறிவதற்குள் கொல்லப் பட்டார்கள்
காலம் இன்னும் மோசமாகத்தான் போகும்
لا يأتي زمان إلا اللذي بعده أشر منه
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ
اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا
شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ يَفِرُّ بِدِينِهِ مِنْ الْفِتَنِ - –
البخاري
أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ
فِتَنٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنْ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ
الْمَاشِي وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنْ السَّاعِي وَمَنْ يُشْرِفْ لَهَا
تَسْتَشْرِفْهُ وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ – البخاري
3602
தனி மனிதர்கள் நட்த்துகிற கொலை வெறியாட்டங்கள்
ஒரு புறம் அதிகரித்து வருகிறதென்றால் மறு புறம் அரசுகளும் பெரும்பான்மை குழுவினர்கள்
சிறுபான்மையினர் மீது நட்த்தி வரும் இன வெறித்தாக்குதல்களும் குலை நடுங்கச் செய்யும்
வகையில் பெருகி வ்ருகின்றன
1994 ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டில் நடந்த மனித சமுதாயத்தில் நடந்த மிக கொடூரமான நிகழ்வுகளில் ஒன்று,
1994 ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 க்குள்(நூறு நாட்களில் ) பத்து லட்சம் டூட்சி இனத்தவர் ஹுடுஸ் இனத்தவரால கொல்லப்பட்டனர்.
1994 ஏப்ரல் 6 முதல் ஜூலை 16 க்குள்(நூறு நாட்களில் ) பத்து லட்சம் டூட்சி இனத்தவர் ஹுடுஸ் இனத்தவரால கொல்லப்பட்டனர்.
ஐந்து லட்சங்களுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர்,இதில் HIV
யால் பாதிக்கப்பட்ட ஆண்களை ஆயுதமாக பயன்படுத்தி இந்த பாலியல் வல்லுறவுகள் நடத்தப்பட்டன ,இதனால் 67
% பெண்கள்
HIV யால் பாதிக்கப்பட்டனர்,இந்த கற்பழிப்பால் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் இருபதாயிரம்.
ஐம்பதாயிரம் விதவைகள்,எழுபத்தைந்தாயிரம்
அனாதைகள்,நாற்பதாயிரம்
வீடுகளை இழந்தவர்கள்.இப்படி ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அசிங்கப்பட
வேண்டிய கொடூரமான நிகழ்வு தடுக்க வக்கற்ற அனைத்து உலக நாடுகளின்
பார்வையின் கீழ் நடந்தேறியது,
யூத இனவாத அரசின் பயங்கரவாத்த்தால் 1936 லிருந்து 2012 வரை பாலஸ்தீனில் 19 லட்சம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளின்
எண்ணிக்கை ஏராளம். 70 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர்.
இராக்கில் அமெரிக்க இராணுவ பயங்க்ரவாத்தால் 2003
லிருந்து 2011 வரை 27 இலட்சம் இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2002 ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்துக்கு பிற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குழு குழுவாக கொல்லப்பட்டனர். அரசாங்கத்தின் ஆதரவோடும் மாநில அமைச்சர்களின் மேற்பார்வையிலும் இப்படுகொலைகள் நடை பெற்றன. , மாயா கோத்னானி எனற பெண் அமைச்சர் இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin)
என்று நீதிபதியால் குறிப்பிடப்பட்டார். கோத்ரா நிகழ்சிக்கு மறுநாள் நடைபெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9
மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்றார்கள்
கோத்ரா படுகொலையினால் ஆத்திரம் அடைந்த இந்துக்களின்
எதிர்வினைதான் குஜராத் படுகொலை, என்ற வாதத்தை தனது தீர்ப்பில் நிராகரித்திருக்கிறார்
நீதிபதி திருமதி. ஜியோத்ஸ்னா யாக்னிக்.
இது திட்டமிட்ட சதி என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுடன், சதிக்குற்றத்துக்காக தண்டித்துமிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது என்பதையும் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் யாக்னிக்.
இது திட்டமிட்ட சதி என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுடன், சதிக்குற்றத்துக்காக தண்டித்துமிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது என்பதையும் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் யாக்னிக்.
இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல இலட்சம் பேர் அகதிகளாக வெளி நாடுகளில் வசிக்கிறார்கள். 2009 ல் நடை பெற்ற இறுதி கட்ட போரில் மட்டும் 20,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது.
இலங்கையில் சிங்கள பேரின வாத அரசு அங்கு வாழ்கிற
அனைத்து சிறு பான்மையினரையும் கணக்கு வழக்கின்ற கொடுமைப் படுத்தி வருகிறது.
புத்தர் உலகத்திற்கு அமைதியை சொன்னார், ஆனால் உலகெங்கிலும்
வாழ்கிற புத்தர்கள் மிகப் பயங்கர வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.
பர்மார்வில் சிறுபானமையினரான் முஸ்லிம்கள் அங்குள்ள
புத்த அரசாங்கத்தால மிக்கொடூரமாக நசுக்கப் பட்டு வருகிறார்கள்.
சமூபத்தில் நடை பெற்ற கலவரத்தில் 30 ஆயிரம் முஸ்லிம்கள்
கொல்லப் பட்டிருக்கிறார்கள். உலகில் மிகவும் கைவிடப்பட்ட சமூகம் பார்மாவில் உள்ள முஸ்லிம்
சமூகம் என்று ஐ நா வின் அறீக்கை கூறுகிறது.
இலங்களையில் புத்த மத்த்தை சார்ந்தவர்கள் செய்து
வரும் கொடுமைகளை பார்த்தால் இவர்கள் நாட்டில் வாழ்வதற்கு தகுதியானவர்கள் தாமா என்ற
சந்தேகம் வந்து விடும்.
தமிழகத்தில் இப்போது இலங்கையில் பாதிக்கப் பட்ட
தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் வலுத்து வருகின்றன. ஒரு அடக்கு முறைக்கு எதிரான பொதுக்கருத்து
உருவாவதும் அதற்கெதிரான போராட்டங்கள் தொடர்வதும் வரவேற்கத்தக்கதே
ஆனால் அதே நேரத்தில் இலங்கையில் நடை பெறுவது இனப்படுகொலை
என்றால் அதே இனம் என்ற கண்ணோட்ட்த்தில் அதை மட்டுமே எதிர்ப்பது கூட இனவாதமே ஆகும்.
மனிதர்கள் – மனிதாபிமானம் என்ற அடிப்படையில் நியாயத்திற்கு
புறம்பான அனைத்து படுகொலைகளையும் சித்ரவதைகளையும் கண்டிக்கிற எதிர்த்துப் போராடுகிற
மன்ப்பக்குவம் இன்றைய தமிழ் சமூகத்திலிருக்க அனைவருக்கும் வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் இன வெறிக்கு ஆளானது போல இந்தியாவின்
காஷ்மீர் மாநிலத்து முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களுக்கு சிதரவதைகளுக்கும் தொடர்ந்து
ஆளாகி வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஒவ்வொரு வீடும் ஏதாவது ஒரு வகையில் இராணுவத்தின்
தாக்குதலை சித்ரவதையை சந்திக்கிறது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.
ஊரடங்கு இரவு என்று ஒரு நூல் தமிழில் வெளியாகி
இருக்கிறது. காஷ்மீரத்தை பூர்வீகமாக கொண்ட தில்லியை சேர்ந்த ப்ஷாரத் பீர் என்பவர் தனது
சொந்த மாநிலத்திற்கு சென்று அங்கு பாதிக்கப் பட்டவர்களின் கதைகளை எழுதியிருக்கிறார்.
இதயத்தை கல்லாக்கிக் கொண்டால் தவிர அந்நூலை படிக்க முடியாது. காஷ்மீரில் இந்திய இராணுவம்
அமைத்திருக்கிற சித்ரவதை கூடங்கள் பற்றி படித்தால் அகிம்சை பேசுகிற தேசத்தில் இப்படி
ஒரு கொலைகார இராணுவமா என்ற கேள்வி எழும்.
காஷ்மீரில் மட்டுமல்ல இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்
அசாமில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள் சகித்துக் கொள்ள இயலாதவை. ஒரு கட்ட்த்தில்
மக்கள் முழு நிர்வாணமாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மனிதர்களாக நம்முடைய கடமை எல்லா வகையான அத்துமீறல்களையும்
க்ண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
ஒரு தரப்புக்கு மாத்திரம் குரல் கொடுத்தால் அதுவும்
கூட இனவாதமாகி விடும்.
தனி மனிதர்கள் மன்னிக்கிற இயல்பு குறைந்து விட்ட்தாலும்
பொறுமை இல்லாமையிலும் பண ஆசைக்காகவும் கொலை செய்கிறார்கள். இது மனித இயல்பிலே உள்ள
குறை.
ஆனால் அரசுகள் ஆட்சியதிகாரத்திற்காகத் தான் பெரும்
பாலும் படுகொலைகளை நிகழ்த்துகின்றனர். இது
மிருக இயலபு, மிருகங்கள் தான் அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்ள கொலை செய்யக் கூடியவை.
عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ الْأَنْصَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ
لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ – الترمذي
மக்களின்
கடமை 2
1.
கொலை என்பது கொடூர குற்றம் என்பதை முதலில் உணர வேண்டும்.
கொலையின்
கொடூரத்தை திருக்குர் ஆணும் நபி மொழிகளும் உணர்த்துகின்றன.
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي
حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا
لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَنصُورًا(33)
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا
وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا(30)
عَنْ
ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يَزَالَ الْمُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ
مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا البخلري 6862
கொலை
பெரும் பாவம்
عَنْ
أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَنْ الْكَبَائِرِ قَالَ الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ
الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ وَشَهَادَةُ الزُّورِ تَابَعَهُ غُنْدَرٌ
وَأَبُو عَامِرٍ وَبَهْزٌ وَعَبْدُ الصَّمَدِ عَنْ شُعْبَةَ
கொலை ஈடேற முடியாத பாவம்
عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ إِنَّ مِنْ وَرَطَاتِ الْأُمُورِ الَّتِي لَا
مَخْرَجَ لِمَنْ أَوْقَعَ نَفْسَهُ فِيهَا سَفْكَ الدَّمِ الْحَرَامِ بِغَيْرِ
حِلِّهِ
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجِيءُ الْمَقْتُولُ بِالْقَاتِلِ يَوْمَ الْقِيَامَةِ
نَاصِيَتُهُ وَرَأْسُهُ بِيَدِهِ وَأَوْدَاجُهُ تَشْخَبُ دَمًا يَقُولُ يَا رَبِّ هَذَا
قَتَلَنِي حَتَّى يُدْنِيَهُ مِنْ الْعَرْشِ قَالَ فَذَكَرُوا لِابْنِ عَبَّاسٍ التَّوْبَةَ
فَتَلَا هَذِهِ الْآيَةَ وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ
قَالَ مَا نُسِخَتْ هَذِهِ الْآيَةُ وَلَا بُدِّلَتْ وَأَنَّى لَهُ التَّوْبَةُ - الترمذي
2. நியாயமற்ற படுகொலைகளை எந்த நிலையிலும் யார் செய்தாலும்
அது கண்டிக்கப்பட வேண்டும்.
தற்போது இலங்கைக்கு எதிரான தீர்மாணத்தை அமெரிக்கா
கொண்டு வந்துள்ளது.
சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற வார்த்தைக்கு இதை
விடச் சிறந்த உதாரானம் வேறு இல்லை.
உலகில் நடை பெற்ற மிகப் பெரும் படுகொலைகளுக்கு
விசாரனை நட்த்த வேண்டுமெனில் முதலில் அமெரிக்க அதிபர்களைத்தான் குற்றவாளிக் கூண்டில்
நிறுத்த வேண்டும்.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதும் கேஸ் வாங்குவதும்
இந்தியாவுக்க்கும் இந்திய மக்களுக்கும் நன்மையானது. ஆனால் அதை அமெரிக்கா தடுக்கிறது,
தன் பேச்சை கேட்காவிட்டால் ஆபத்தை சந்திக்க வேண்டியது வரும் என நம்மை பயமுறுத்திவருகிறது.
அதே போல இலங்கை இப்போது தன் பேச்சை கேட்பதில்லை – சீனாவின் பக்கம்
சாய்கிறது என்ற கோபத்தில் அமெரிக்க இப்போது
இந்த தீர்மாணத்தை கொண்டு வருகிறது. அதை நாம் பெரிதாக நம்பினால் ஒரு பயங்கர வாத்த்தை
எதிர்த்து இன்னொரு பயங்கரவாத்த்தை ஆதரிக்கிறோம் என்று தான் அர்த்தமாகும்.
அதே போல தமிழகத்தில் தற்போது நடை பெறு ஆர்ப்பாட்டங்களும்
போராட்டங்களுமே கூட நாடக்த்தன்மை கொண்ட்தாகும். வெறும் கூத்து.
இதனால் யாருக்கு என்ன நன்மை என்பது எவருக்கும்
புரியவில்லை.
நாம் இன மத பேதமின்றி பொதுவாக பய்ங்கரவாத்தை உண்மையிலேயே
எதிர்ப்பவர்களாக ஆகவேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَنْ نَصَرَ
قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ
- ابوداوود4453
இனத்தில் அடிப்படையி மட்டுமே
பயங்கரவாதச் செயல்களை நாம் பாப்போமானார்ல் முதலாவதாக நாம் நீதி த்வறியவரகள் ஆவோம்.
இரண்டாவதாக நமக்கு வெற்றி கிடைக்காது, நாமும் தோல்வியடைவோம்
alhamdu lillah, mikaum arumai jazakallah - pudukai ulama
ReplyDeleteஇனப்படுகொலைகளை எதிர்ப்பதில் கூட இனவாதம் கொஞசம் தூக்கலாக இருக்கிறது என்ற உண்மையை தங்களின் கட்டுரை அழுத்தமாக பதிவு செய்கிறது. அநியாயங்களை எதிர்ப்பதிலும்,அதற்கெதிராக குரல் கொடுப்பதிலும் மனிதாபிமானம் மட்டுமே பார்க்கப்படவேண்டுமே தவிர அதை இனவெறியுடன் பார்க்கும் போது அதுவும் ஒருவகையில் இனவெறியே! இலங்கையில் நடைபெற்ற இனவெறிக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது?என்று தங்களின் கட்டுரை எழுப்பியிருக்கும் கேள்வி அபாரமானது. உலகில் முதல் போர் குற்றவாளியாக அமெரிக்காவை அறிவிக்கட்டும்.முஸ்லிம்களின் பார்வையை தூரநோக்குடன் சிந்திக்கத்தூண்டிய தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. அல்லாஹ்விடம் தங்களின் பணி தொடர துஆச்செய்கிறோம்.
ReplyDeleteassalamu alaikkum very fentastik .jazakallah
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஒவ்வொரு தமிழ்முஸ்லிமும் படித்து சிந்திக்கவேண்டிய செய்தி...
அல்லாஹ் மனிதசமுதாயத்தை தீயசக்திகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்..
முஹ்யித்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி
இராமநாதபுரம்
அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் படித்து விளங்க வேண்டிய செய்தி......
அல்லாஹ் மனித சமுதாயத்தை தீயசக்திகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்..
முஹ்யித்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி
இராமநாதபும்