வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 14, 2013

சொர்க்கம் யாருக்கு ( இரண்டு)


1.       நன் நம்பிக்கை
2.       நற் செயல்கள்
3.       நற் குணம்இம்மூன்று அம்சங்களும் சொர்க்கத்திற்கான பாதைகளாகும். இதில் நற்குணம் சத்தமில்லாமல் சாதிக்கும் இயல்பு படைத்ததாகும்.   

 மனதை சுத்தமாக வைத்திருந்தாலே சொர்க்கத்திற்கு சொந்தக் காரராகி விடலாம்.

 فعن أنس بن مالك رضي الله عنه قال: كنا جلوساً عند رسول الله صلى الله عليه وسلم فقال: ((يطلع الآن عليكم رجل من أهل الجنة)) فطلع رجل من الأنصار تنطف لحيته من وضوئه، قد علق نعليه بيده الشمال. فلما كان الغد قال النبي صلى الله عليه وسلم مثل مقالته أيضاً، فطلع ذلك الرجل على مثل حاله الأول، فلما قام النبي صلى الله عليه وسلم تبعه عبد الله بن عمرو  - أي تبع ذلك الرجل-  فقال: إني لاحيت أبي، فأقسمت أني لا أدخل عليه ثلاثاً، فإن رأيت أن تؤويني إليك حتى تمضي، فعلت، قال: نعم. قال أنس: فكان عبد الله يحدث أنه بات معه تلك الليالي الثلاث فلم يره يقوم من الليل شيئاً، غير أنه إذا تعار من الليل ذكر الله عز وجل وكبر، حتى قام لصلاة الفجر. قال عبد الله غير أني لم أسمعه يقول: إلا خيراً، فلما مضت الثلاث الليالي، وكدت أن احتقر عمله، قلت: يا عبد الله لم يكن بيني وبين أبي غضب ولا هجر، ولكن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لك ثلاث مرات: ((يطلع عليكم الآن رجل من أهل الجنة)) فطلعت أنت الآن، فأردت أن آوي إليك فأنظر في عملك فأقتدي بك، فلم أرك عملت كبير عمل، فما الذي بلغ بك ما قال رسول الله صلى الله عليه وسلم؟ قال: ما هو إلا ما رأيت؟ فلما وليت دعاني، فقال: ما هو إلا ما رأيت غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غشاً ولا حسداً على خير أعطاه الله إياه، فقال عبد الله: هذه التي بلغت بك، وهي التي لا نطيق


   واه أحمد (12697.

இயல்பாக நம்முடை இதயத்தில் தேவையற்ற கோபமும் குரோதமும் உண்டாகிறது. காரணமில்லாமல் பிறர் மீது ஆத்திரமும் தப்பெண்ணமும் கொண்டு விடுகிறோம். நாம் தப்பே செய்வதில்லையா ? எல்லா விதத்திலும் நாம் பரிசுத்தமானவர்கள் தாமா ? என்று யோசித்தால் பிறர் பற்றி ஆட்சேபனைகளோ தவறான சிந்தனைகளோ எழாது.

மூஸா (அலை) தனது வாழ்வில் நடை பெற்ற நிகழ்வுகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் ஹிழ்ரு (அலை) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள்.

1.   மூழ்கிப் போகும் நிலையிலுள்ள ஒரு சின்ன தொட்டியில் தான் அவர் ஆற்றில் விடப்பட்டார். அவரை அல்லாஹ் காப்பாற்றவில்லையா?

2.   அவர் அடித்து எதிர்பாராமால் ஒரு எகிப்தியன் இறந்து போனான். அதில்  அவர் சமாதானமாக இருக்கவில்லையா?

3.   கூலி வாங்காமல் தான் அவர் ஷுஐபு நபியின் மகள் களுக்கு உதவினார். அது போல ஒரு உதவியை மற்றவர்கள் செய்ய மாட்டார்களா?

பிறரைப் பற்றிய எந்த தப்பான நினைப்புக்கும் பேச்சுக்கும்  முன்பு நம்மைப் பற்றி ஒரு கணம் யோசித்தால் உள்ளம் சுத்தமாகி விடும். உள்ளம் சுத்தமாகி விட்டால் சொர்க்கம் சொந்தமாகி விடும்.

அறிவை தேடி..

அறிவை தேடி.. அதிலும் குறிப்பாக மார்க்கத்தை தெரிந்து கொள்ள எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் சொர்க்கத்தை சொந்தமாக்கும். அறிவு பெறுதலின் மீதான தாகம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

فعن أبي هريرة رضي الله عنه أنَّ رسول اللَّه صلى الله عليه وسلم قالَ: ((.... ومن سلك طريقاً يلتمس فيه علماً سهَّل اللَّه له به طريقاً إلى الجنة)) رواه مسلم (2699.

உண்மை பேசுதல், வாக்குறுதியை நிறைவேற்றுதல், கற்பொழுக்கம், பார்வையை தாழ்த்திக் கொள்ளுதல்

فعن عبادة بن الصامت أن النبي صلى الله عليه وسلم قال: ((اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة، اصدقوا إذا حدثتم، وأوفوا إذا وعدتم، وأدُّوا إذا اؤتمنتم، واحفظوا فروجكم، وغضوا أبصاركم، وكفوا أيديكم)) رواه أحمد (22756.

இன்றுள்ள சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியமா என்று யோசித்தால் ஒரு போதும் நல்லவராக முடியாது. இது நம்மை சொர்க்கத்திற்குள் கொண்டு போகும் என்று நினைத்தால் சிறந்த மனிதராவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும் சொர்க்கமும் கிடைக்கும்.

பெற்றோரை பராமரித்தல்

فعن أبي الدرداء أن رجلاً آتاه فقال: إن لي امرأة وإن أمي تأمرني بطلاقها؟ فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((الوالد أوسط أبواب الجنة فأن شئت فأضع ذلك الباب أو احفظه)) رواه الترمذي (1900).

இன்றைய காலம் மனைவிக்காக பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கிற காலமாக மாறிவருகிறது.

ஒரு ஆண்மகன் என்பவன் மனைவியை பெற்றோரையும் சம அளவில் தனித்தனியே பராமரிக்க கடமை பட்டவன் ஆவான். அதில் தான் அவனது ஆண்மையின் ஆன்மா இருக்கிறது. இதில் தேர்ந்த பக்குவத்தோடு அவன் நடந்து கொள்ள வேண்டும்.

வயது முதிர்ந்த பெற்றோரைப் பெற்றிருப்பது சொர்க்கம் செல்வதற்கு இலகுவான வழியாகும்.

 சொந்தங்களை சேர்ந்து வாழுதல்

فعن أَبي أيوب الْأَنصاري رضي الله عنه أَن رجلاً قال: يا رسول اللَّه! أَخبرني بعمل يُدخلُني الجنَّة؟ فقال رسول اللَّه صلى الله عليه وسلم: ((تعبد اللَّه لا تشرك بِهِ شيئاً، وتقيم الصَّلاة، وتُؤتي الزكاةَ، وتصل الرحم)) رواه البخاري (5637) ومسلم (13

இஸ்லாம் சொந்தங்களை அரவணைத்து வாழ்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

இன்றைய நாகரீக உலகில் சொந்தங்கள் மதிப்பிழந்து வருகின்றன.

தனிமனித வருமானமும் தன் குடும்பத்தின் வசதிகளைப் பற்றி யோசிப்புமே இன்றைய நாகரீக உலகின் பிரதான போக்காக இருக்கிறது.இதனால் தான் சமூகத்திம் மகிழ்ச்சி குறைந்து பிரச்சினைகளும் மன அழுத்தமும் அதிகமாகி வருகின்றன..

சொந்தங்களை அரவணைப்பது இந்த உலகில் ஆறுதலுக்கு மட்டுமல்ல சொர்க்கத்திற்கு உரிமை பெறுவதற்கும் காரணமாகும்.

கணவருக்கு கட்டுப்படும் பெண்கள் 

قال النبي صلى الله عليه وسلم: ((إذا صلت المرأة خمسها، وصامت شهرها، وحفظت فرجها، وأطاعت زوجها؛ دخلت جنة ربها)) رواه البخاري (1661.

இன்றைய பெண்கள் கண்வன் தங்களுக்கு அடிமைச் சேவகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரகள். எங்கு கணவரின் நியாயமான விருப்பங்களுக்கு கட்டுபடுவதை நன்மையாக கருதி மனைவி செயல்படுகிறாறாறோ அங்கு இனிமையான இலறமும் கிடைக்கும் சொர்க்கமும் கிடைக்கும்.  

மன வருத்தமின்றி பெண் குழந்தைகளை பராமரித்தல்

فعن أَبي سعيد الخدرِي رضي الله عنه أَن رسول اللَّه صلى الله عليه وسلم قال: ((من كان له ثلاث بنات أو ثلاث أخوات أو بنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة)) رواه الترمذي (1916).

பிறருக்கு முடிந்த வரை உதவுதல்

பால் கறந்து அருந்திக்கொள்ள அனுமதித்தல்

فعن أبي محمد عبد الله عمرو بن العاص قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((أربعون خصلة أعلاهن منيحة العنز، ما من عامل يعمل بخصلة منها رجاء ثوابها وتصديق موعودها إلا أدخله الله بها الجنة)) رواه البخاري (2488.

பிறமனிதர்களின் துயர் நீக்க பாடுபடுதல்

فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((لقد رأيت رجلاً يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي المسلمين)) رواه مسلم (1914. وفي رواية: ((مر رجل بغصن شجرة على ظهر طريق، فقال: والله لأنحين هذا عن المسلمين لا يؤذيهم فأدخل الجنة))  رواه مسلم (1914.

பொறுமையும் இழப்புக்களை சசித்துக் கொள்வதும்

 فعن أَبي هريرة رضي الله عنه أَنَّ رسول اللَّه صلى الله عليه وسلم قَالَ: ((يقول اللَّه تعالى: ما لِعبدي المؤمن عندي جزاءٌ إذا قبضت صفيَّه من أَهل الدنيا ثم احتسبه إلا الجنة)) رواه البخاري (6060. وعن أَنس أَنَّ رسول اللَّه صلى الله عليه وسلم قال: ((من احتسب ثلاثة من صلبه دخل الجنة))، فقامت امرأَة فقالت: أَو اثنان؟ قال : ((أَو اثنان ...)) رواه النسائي (1872.

فعن أبي هريرة رضي الله عنه رفعه إلى النبي صلى الله عليه وسلم قال: يقول اللَّه عز وجل: ((من أذهبت حبيبتيه فصبر، واحتسب، لم أرض له ثواباً دون الجنة)) رواه الترمذي (2401.

அநாதைகளை ஆதரித்தல்

فعن سهل رضي الله عنه قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم: ((أَنا وكافل اليتيم في الجنة هكذا)) وأَشار بالسبابة والوسطى، وفرج بينهما شيئاً رواه البخاري (4998.

நோய் விசாரித்தல்
   فعن أَبي هريرة رضي الله عنه قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم: ((من عاد مريضا، نادى مناد من السماء: طبت وطاب ممشاك، وتبوّأت من الجنة منزلا)) رواه الترمذي (2008)، وابن ماجه (1443.

சிரமப்படுவோரின் சிரமங்களை குறைத்தல்

فعن حذيفة عن النبي صلى الله عليه وسلم: ((أن رجلا مات فدخل الجنة، فقيل له: ما كنت تعمل؟ قال: فإما ذكر، وإما ذُكر، فقال: إني كنت أبايع النَّاس، فكنت أنظرُ المعسرَ، وأتجوَّز في السِّكَّة، أو في النّقد، فغفر له)) رواه مسلم (1560 .

சொர்க்கம் செல்ல துணை செய்யும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச்  சொன்ன சில காரணங்களே இவை !

இவற்றில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் தனித்தனியாக சொல்லியிருக்கிறார்கள்.  

அல்லாஹ் அவனது சொர்க்கத்தை கொடுத்து நம்மை கண்ணியப்படுத்துவனாக! நமமை அவனது திருப்தியை பெற்ற நல்லடியார்களில் சேர்ப்பானாக!


No comments:

Post a Comment