வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 23, 2013

பொன்னான வாழ்வியல் தத்துங்கள் 1


உலக வாழ்வில் பரஸ்பரம் உதவிக்கொள்வதையும் உதவி தேடுவதையும்  இயற்கையான ஒரு அம்சாமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்.

இன்னொன்றின் உதவியில்லாமல் எதுவும் வாழ்ந்து விட முடியாது.
பெரும் காரியங்கள் அனைவரின் உதவி இருந்தால் தான் சாத்தியமாகும்

துல்கர்னைன் அரசர் தான், ஆனாலும் அணை கட்ட மக்களின் உதவியை கோரினார், மக்கள் உதவினர்

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا  
مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا [الكهف: 95

 கஃபாவை கட்ட இபுறாகீம் நபிக்கு இஸமாயீல (அலை) செய்த உதவி

 فقال له: ((يا إسماعيل، إنَّ الله أمرني بأمرٍ، قال: فاصنع ما أمرك ربُّك، قال: وتعينني؟ قال: وأعينك، قال: فإنَّ الله أمرني أن أبني ها هنا بيتًا، وأشار إلى أكمةٍ مرتفعةٍ على ما حولها، قال: فعند ذلك رفعا القواعد مِن البيت، فجعل إسماعيل يأتي بالحجارة وإبراهيم يبني، حتى إذا ارتفع البناء، جاء بهذا الحجر فوضعه له فقام عليه، وهو يبني وإسماعيل يناوله الحجارة، وهما يقولان: رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ [البقرة: 127]، قال: فجعلا يبنيان حتى يدورا حول البيت وهما يقولان: رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ))  -  البخاري 3364


பிர்அவ்னிடம் செல்ல மூஸாவுக்கு ஹாரூன் (அலை) அவர்களின் உதவி

وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي هَارُونَ أَخِي اشْدُدْ بِهِ أَزْرِي وَأَشْرِكْهُ فِي أَمْرِي[طه:29-32] فقال الله له: قَالَ قَدْ أُوتِيتَ سُؤْلَكَ يَا مُوسَى [طه: 36]

பிறருக்கு உதவுவதையும் தேவை எனில் பிறரிடம் உதவி கோருவதையும் இஸ்லாம் வலுயுறுத்துகிறது.

அதனால் தான் மார்க்கத்தின் மூலமா திருக்குர்ஆன் சட்டங்களையும் அறிவுரைகளையும் தனிமனிதனைப் பார்த்துச் சொல்லாமல் சமூக ரீதியான அழைப்பு வாசகங்களையே பய்ன்படுத்தியிருக்கிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوَاْ என்று  89 தடவையும்
أَيُّهَا النَّاسُ  என்று 20 தடவையும்
بَنِي آدَمَ என்று 5 தடவையும் கூறியுள்ளான்.

மனிதர்கள் பரஸ்பரம் ஒன்றினைந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு கூட்டாக செயல்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

பரஸ்பரம் உதவி செய்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 فقال:  مَن كان معه فضل ظهر، فليعد به على مَن لا ظهر له، ومَن كان له فضلٌ مِن زاد فليعد به على مَن لا زاد له  - مسلم 1728
فضل ظهر அதிமான ஒட்டகை :

قال النَّبيُّ صلَّى الله عليه وآله وسلَّم: ((المؤمن للمؤمن كالبنيان يشدُّ بعضه بعضًا) البخاري 481

 وعن أنس رضي الله عنه، قال: قال النَّبيُّ صلى الله عليه وسلم: ((انصر أخاك ظالـمًا أو مظلومًا))، قيل: يا رسول الله، هذا نصرته مظلومًا، فكيف ننصره ظالـمًا؟ قال: ((تأخذ فوق يده)) -) البخاري 2444



பொருத்தமான நேரத்தில் செய்யப்படும் நல்ல உதவிகளால் தனி ம்னிதர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

தனது முன்னேற்றத்திற்கும் கல்விப்பணிக்கும் ஜமால் அண்ண்ன் மிக உதவியாக இருந்தார் என டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்.

அதே போல நல்ல உதவியாளர்களால் தான் சமுதாயம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

அபூபக்கர் (ரலி) அவர்களின் உதவி பெருமானாருக்கும் இஸ்லாத்திற்கு எந்த அளவில் உதவியது  சிந்தித்துப்பாருங்கள்.  அவர் மட்டுமா ? அவருடையே மொத்த குடும்பமே பெருமானாருக்கு உதவியதல்லவா?

تعاون أبي بكر وأهل بيته مع النَّبيِّ صلى الله عليه وسلم في هجرته: 
 
هَّز أبو بكر راحلتين عندما أعلمه النَّبيُّ صلى الله عليه وسلم بالهجرة، وخاطر بنفسه وهاجر مع النَّبيِّ صلى الله عليه وسلم، وعندما وصلا غار ثور دخل أبو بكر أوَّلًا ليستبرأ الغار للنَّبيِّ صلى الله عليه وسلم كي لا يصيبه أذى، وأعدَّت أسماء بنت أبي بكر لهما جهاز السَّفر، وكان عبد الله بن أبي بكر يأتي لهما بأخبار قريش، وعامر بن فهيرة مولى أبي بكر يريح الغنم عليهما وهما في الغار ليشربا مِن لبنها، وفي طريقهما إلى المدينة كان أبو بكر إذا تذكر طلب قريش للرَّسول صلى الله عليه وسلم مشى خلفه، وإذا تذكر رصدها له مشى أمامه  

அபூபக்கர் உமர் (ரலி) ஆகியோரது ஆட்சிக் காலத்தில்  தீன் வளர சஹாபாக்கள் அவரவர்களால் முடிந்த வகையில் ஒன்றிணைந்து  உதவிகளை செய்தார்கள். குறைகளை கூறிக் கொண்டிருக்கவில்லை. ஒத்துழைத்தார்கள். காலை வாரி விட்டுக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாம் உடலோடும் உயிரோடும் வளர அதுவே காரணமாக இருந்த்து.  

 وفي الوقت الذي كان فيه أبو عبيدة بن الجرَّاح وسعد بن أبي وقَّاص، وخالد بن الوليد وعمرو بن العاص يفتحون مصر والشَّام والعراق، كان أبو بكر وعمر وعثمان وعلي يسوسون النَّاس، ويرعون شؤونهم، وكان معاذ بن جبل وابن عبَّاس وابن عمر يعلِّمون النَّاس، ويفتونهم ويربُّونهم، وكان أبو هريرة وأنس وعائشة يحفظون الحديث ويروونه، وكان أبو ذرٍّ وأبو الدَّرداء يعظون النَّاس والحكَّام وينصحونهم، فتعاونوا ولم يتعايبوا.. وتناصروا ولم يتدابروا

நாம் வாழ்கிற இன்றைய காலகட்டத்தில் பரஸ்பரம் உதவிக் கொள்கிற மனோபாவ்வத்தை நாம் வலிந்து உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் தேவையுடையவர்களுக்கு,  பக்கத்து வீட்டுக்கார்ர்களுக்கு தெருவாசிகளுக்கும், சமுதாயத்திற்கு உதவும் இயல்பை தேடி உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த உதவிகளுக்கு நன்மை நிறையக் கிடைக்கும்

وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((مَن نفَّس عن مؤمن كُرْبَةً مِن كُرَبِ الدُّنْيا نفَّس الله عنه كُرْبَةً مِن كُرَبِ يوم القيامة، ومَن يسَّر على معسر، يسَّر الله عليه في الدُّنْيا والآخرة، ومَن ستر مسلمًا ستره الله في الدُّنْيا والآخرة. والله في عون العبد ما كان العبد في عون أخيه...))مسلم 2699

பெருமானார் (ஸல்) மக்களுக்கு உதவுபவராக இருந்தார் எனபதை சொல்லி அதனால் அவருக்கு எதுவும் நேராது என கதீஜா (ரலிஆறுதல் கூறினார்

 فقالت له: (كلا والله ما يخزيك الله أبدًا، إنَّك لتصل الرَّحم، وتحمل الكلَّ، وتكسب المعدوم، وتقري الضَّيف، وتعين على نوائب الحقِّ

பிறருக்கு செய்யும் உதவி நம்மை தீமைகள் அணுகாமல் பாதுகாக்கும் என்பது தானே இதன் பொருள்

பிறருக்கு உதவொனால் நன்மை நிறையக் கிடைக்கும் என்பது மட்டுமல்ல அது தான் நம்முடைய சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாகும். நாம் மனிதர்கள் என்பதற்கான் பெருமையாகும்.

நம் எல்லோராலும் தலைவர்களாக முடியாது. அந்த திறமையை  சிலருக்கு மட்டுமே அல்லாஹ் தருகிறான்.

·        وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ(6)
·         وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ(15)


ஆனால் எல்லோரும் நல்ல உதவியாளகளாக இருக்க முடியும்.

நாம் தலைவராக இல்லாவிட்டால் நல்ல உதவியாளராக இருப்போம்.
நல்ல காரியங்களுக்கு உதவியாளராக ருப்பது பெரும் பாக்கியமும் வெற்றியுமாகும்.

அபூபக்கர் – உமர் - கதீஜா – ஆயிஷா முஹாஜிர்கள் – அன்சாரிகள் (ரலி) அத்தனை பேரும் பெருமானாரு ஒரு பெரும் காரியத்தில் உதவினார்கள் என்பதால் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குகை தோழர்களுக்கு உதவி காரணத்தால் ஒரு நாய் குர் ஆனில் இடம் பெற்றது.

நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்த போது உம்மு மஃப்த் என்ற அம்மையார் தன்னிடமிருந்த மடு வற்றிப் போன ஒரு ஆட்டிலிருந்து பால் கறந்து கொள்ள பெருமானாரை அனுமதித்தார். (அவரிடம் அது தான் இருந்த்து.) பயணப்பாதையில் வழிப்போக்கர்களுக்கு செய்த ஒரு சின்ன உதவி அது. ஆனால் அந்து உதவி வரலாறாக இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறதே!    

மதீனா இஸ்லாமாவதற்கு கார்ணமாக இருந்த முஸ் அப் பின் உமைர் (ரலி) தன்னுடைய உதவியால் விளையப்போகும் மாற்றத்தை அறியாமலேயே உஹது யுத்தத்தில் ஷஹீதானார். அவரது உதவி காலங்களை கடந்து எவ்வளவு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. அவரது உதவியை மீஜானை தவிர வேறு எந்த தராசில் வைத்து மதிப்பிட முடியும்.

எனவே நல்ல விசயங்களுக்கு உதவக்கூடிய வாய்ப்புக்கள் வருகிற போது தயங்கிக் கொண்டிராமல் தாரளமாக உதவுங்கள்.

ஒரு சகோதரனை மூன்று காணாவிட்டால் விசாரியுங்கள் என்றார் அதா பின் அபீரபாஹ்
قال عطاء بن أبي رباح: (تفقَّدوا إخوانكم بعد ثلاث، فإن كانوا مرضى فعودوهم، أو مشاغيل فأعينوهم، أو نسوا فذكِّروهم   - إحياء
மாவர்தீ மனிதர்களை நான்கு வைகையாக பிரிகிறார்.

1.   உதவி செய்வார் ; உதவி கேட்பார் مَن يعين ويستعين
2.   உதவி செய்யவும் மாட்டார்;. உதவி கேட்கவும் மாட்டார். مَن لا يعين ولا يستعين
3.   உதவி செய்ய மாட்டார் ; உதவி கேட்பார் مَن يستعين ولا يعين
4.  உதவி செய்வார்; உதவி கேட்க மாட்டார் مَن يعين ولا يستعين

فأمَّا المعين والمستعين ، وهو مشكورٌ في معونته، ومعذورٌ في استعانته، فهذا أعدل الإخوان.
وأمَّا مَن لا يُعين ولا يستعين فهو متروك مذموم.
وأمَّا مَن يستعين ولا يُعين فهو  ومهين مستذلٌّ،.
وأمَّا مَن يُعين ولا يستعين فهو كريم الطَّبع، مشكور الصُّنع فهذا أشرف الإخوان نفسًا وأكرمهم طبعًا

·         முதலாமர் நன்றிக்குரியவர் மன்னிக்கப்பட வேண்டியவர் - நீதமானவர்
·         இரண்டாமர் ஒதுக்கப்பட வேண்டியவர், தூற்றுதலுக்குரியவர்
·         மூன்றாமவர் இழிவானவர்
·         நான்காமவர் மரியாதைக்குரியவர் – நன்றிக்குரியவர். – சிறந்தவர்.

இதில் நாம் எந்த வகை என்று யோசித்துப்பார்க்க வேண்டும் சிறந்தவராகவோ நீதமானவராக ஆவதற்கு முன்வரவ வேண்டும்.


நாம் எதிலெல்லாம் உதவ முடியும்?  எப்படி எல்லாம் உதவ முடியும்?

·         நல்ல தலவருக்கு உதவியாக இருப்பது அவரது வார்த்தைகளுக்கு கட்டுப்ப்படுவது.
·         கல்வியாளர்களு கலாச்சார பாதுகாவலர்களையும் மதிப்பது, அவர்களுக்கு உதவியாக இருப்பது.
·         சத்தியத்தில் உறுதியாக இருப்பது. அந்த வழி முறைகளைப் பின்பற்றுவது.
·         அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு மக்களை அழைப்பது
·         பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், சமூக நலக்கூடங்கள், மருத்துவம்னைகளை ஏற்படுத்துவது அவற்றை பராமரிப்பது.
·         நன்மையை ஏவி தீமையை தடுப்பது அந்தப் பணியில் ஒத்துழைப்பது.
·         பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது
·         திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமணமனத்திற்கு ஏற்பாடு செய்வது.
·         துயறுற்றிருப்போருக்கு ஆறுதல் கூறுவது, உதவி செய்வது
·         தான தர்மங்கள் செய்வது. அதை சேகரித்து வழங்கும் பணிகளில் ஈடுபடுவது
·         சமூகத்தில் கருத்து வேறுபாடுகளை கலையவும்.சண்டை ச்ச்சரவுகளை முடிவுக்கு கொண்டு வரவும் பாடுபடுவது.
·         சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தை உருவாக்க பாடுபடுவது.

இதில் ஏதாவது ஒரு வகையில் பிறருக்கும் சமூகத்திற்கும் உதவுகிற ஆற்றல் நம்மிடம் இருக்கவே செய்கிறது.

ஒரு அறிஞன் சொன்னான் :
فضيلة الفلَّاحين التَّعاون بالأعمال، وفضيلة التِّجَّار التَّعاون بالأموال، وفضيلة الملوك التَّعاون بالآراء والسِّياسة، وفضيلة العلماء التَّعاون بالحِكَم
உழைப்பினால் உதவுவது தொழிலாளர்களின் சிறப்பு, பணத்தினால் உதவுவது முதலாளிகளின் சிறப்பு, சிறந்த ஆட்சியினாலும் கருத்துக்களாலும் உதவுவது அரசனின் சிறப்பு, த்த்துவங்களால் உதவுவது அறின்ஞர்களின் சிறப்பு.

இவ்வாறெல்லாம் உதவுகிற போது கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விச்யம்

உதவி تَّعاون என்றாலே அல்லாஹ்விடமிருந்து கிடைக்கிற கூலியை எதிர்பார்த்து சத்தியத்திற்கு துணை செய்வதாகும்

التَّعاون هو: المساعدة على الحقِّ ابتغاء الأجر مِن الله سبحانه
எந்த ஒரு உதவியை செய்யும் போதும் – ஒரு காரியத்தில் இறங்கும் போதும், இது நல்லது தானா? இதற்கு துணையாக இருந்தால் அல்லாஹ் கூலி தருவானா என்று யோசித்துப்பார்க்க நாம் பழக வேண்டும்.

இன்றையை முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலும் இப்படி யோசிப்பதே இல்லை. அவர்களுக்கு பிடித்த காரியத்தை மார்க்கத்திற்கு செய்கிற உதவி என்று நினைக்கிறார்கள்.

அதனால் தான் தவ்ஹீத அமைப்பை சேர்ந்தவர்கள் தஞ்சை திருவிடை மருதூரில் ரமலானில் தராவீஹ் தொழுகையை முடித்து விட்டு குர் ஆன் ஓதிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். மற்ற பலர் மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சமூக்கத்தில் ச்ச்சரவை ஏற்படுத்தி வருகின்றனர்.

வாழ்வை பொன்னாக்கும் ஒரு தத்துவத்தை குர் ஆன் கற்றுத் தருகிறது.

நல்ல காரியங்களுக்கும் பக்திப் பணிகளுக்கும் உதவியாக இருக்கனும். பாவகாரியங்களுக்கும் பகையை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும் துணை போகக் கூடாது.

وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب(2)
உறவுக்காரகள் நண்பர்கள் சமுதாய தலைவர்கள் அரசியல் தலைவர்கள் யாராக இருப்பினும் அனைவர் விச்யத்திலும் இந்த விதியை கடை பிடிக்க வேண்டு,

அது தனிமனிதர்களுக்கும் நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.

இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு أبو حمزة الشَّيباني  ஒரு விளக்கம் சொன்னார்.

وقال أبو حمزة الشَّيباني لمن سأله عن الإخوان في الله مَن هم؟ قال: (هم العاملون بطاعة الله عزَّ وجلَّ المتعاونون على أمر الله عزَّ وجلَّ، وإن تفرقت دورهم وأبدانهم

நாம் பிறருக்கு உதவி வேண்டு, ஞாபம் வைத்துக் கொள்ளுங்கள் பிர்ரு வத்தக்வாவின் அடிப்படையில் அது அமைய வேண்டும். அதற்குப் பெயர் தான் தஆவுன்.

அல்லாஹ் நல்ல காரியங்களுக்கும் இறையச்சமான காரியங்களுக்கும் உதவக்கூடியவர்களாக நம்மை ஆக்குவானாக!




1 comment: