வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 30, 2013

பாவத்திற்கும் பகைமைக்கும் துணையாகாதீர்!


وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب(2)

நன்மையான காரியாங்களுக்கு முன்னிற்க வேண்டும்
இல்லை என்றால் துணை நிற்க வேண்டும்.

பாவமான விரோதத்தை உண்டு பண்ணுகிற காரியாங்களுக்கு முன்னிற்கவும் கூடாது. துணையாகி விடவும் கூடாது.

கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் தத்துவங்களில் இதுவும் பிரதானமானதாகும்.

அது மட்டுமல்ல தற்கால சூழ்நிலையில் பாவத்திற்கும் பகைமைக்கும் துணை போகாக்க்கூடாது என்ற உறுதியான மனப்போங்கு இன்றை இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் தேவையாக இருக்கிறது.


பாவமான காரியங்கள் எது?

அல்லாஹ் ரஸூலின் தடைகளும், அல்லாஹ் ரஸூலின் உத்தரவுகளுக்கு மாற்றமான நடைமுறைகளும் பாவமான காரியங்களாகும்.

·         மது
·         சூது
·         வட்டி
·         சதி
·         கொலை
·         திருட்டுகொள்ளைஅபக்ரித்தல்
·         அநீதியிழைத்தல்

இது மாதிரியான குற்றச் செயல்களுக்கும்இணை வைத்தல்செய்வினை செய்தல்ஜோஷியம் போன்ற குறிபார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்ஆகிய கொள்கை முரன்பாடான காரியங்களும் பாவமான காரியங்களாகும்.

இக்காரியங்களில் நாம் ஈடுபடவும் கூடாது. இதற்கு துணை போகவும் உடன்படவும் கூடாது.

வட்டி சம்பந்தமாக எச்சரிக்கையில் பாவத்திற்கு எந்த வகையிலெல்லாம் ஒத்துழைக்க கூடாது என்று பெருமானார் (ஸ்ல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَشَاهِدَهُ وَكَاتِبَهُ-  ابوداوود

இனறைய காலகட்டத்தில் நண்பர்களுக்காக பலர் பாவ காரியங்களில் துணை போகிறார்கள். பண உதவி – வாகன உதவி – உடன் செல்லுதல் ஆகிய வழிகளில் பலர் அப்பாவிகள் ஒத்துழைக்கிறார்கள். சிலர் நிர்பந்த்த்தில் ஒத்துழைக்கிறார்கள். சில அவன் தப்பு பன்றான் அதுக்கு நான் என்ன செய்யறது என்று வேதாந்தம் பேசி உடண்படுகிறார்கள்

தீயது நடக்கிற இடங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருப்பதே கூட ஒரு வகை ஒத்துழைப்புத்தான்.

عن اوس بن شرحبيل انه سمع رسول الله صلى الله عليه و سلم يقول : ( من مشى مع ظالم ليعينه و هو يعلم انه ظالم فقد خرج من الإسلام - الطبراني في المعجم الكبي

பாவமானதாக இருக்குமா என்ற சந்தேகத்திற்கு இடமான காரியமும் கூட தவிர்த்துக் கொள்ளப்ப்ட வேண்டியதே!.

மனதுக்குள் சஞ்சலம் ஏற்பட்டால் அது பாவம் தான் பெருமானார் பாவத்துக்கு விளக்க்ம் சொன்னார்கள்.

நனமைக்கும் பாவத்திற்கும் அற்புதமான விரிவுரை

عَنْ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ الْأَنْصَارِيِّ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ

விளையாட்டு கூட இன்றை காலகட்ட்த்தில் எவ்வளவு பாவகரமானதாக மாறிவிட்ட்து?
நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

பாவ காரியங்களுக்கு துணை நின்றால எப்போதாவது ஏதாவது ஒரு கட்ட்த்தில் நாம் குற்றவாளியாக்கப்பட நேரிடும். அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

மக்களிடையே விரோத்த்தை ஏற்படுத்துகிற பகைமையான காரியங்க நாம் செய்யக் கூடாது. .

எவரிடமும் வலிந்து பகையை ஏற்படுத்திக் கொள்ளாத ஒரு போக்கை மார்க்கம் வலியுறுத்துகிறது.

 وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ وَ قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ الْآيَةَ

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ الْبَيْنِ فَإِنَّهَا الْحَالِقَةُ
 قَالَ أَبُو عِيسَى وَمَعْنَى قَوْلِهِ وَسُوءَ ذَاتِ الْبَيْنِ إِنَّمَا يَعْنِي الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ وَقَوْلُهُ الْحَالِقَةُ يَقُولُ إِنَّهَا تَحْلِقُ الدِّينَ

பகையை எச்சரிக்கிறேன், அது தீனை சிறைத்துவிடும்.

عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِ السَّلَام لِابْنِهِ دَعْ الْمِرَاءَ فَإِنَّ نَفْعَهُ قَلِيلٌ وَهُوَ يُهَيِّجُ الْعَدَاوَةَ بَيْنَ الْإِخْوَانِ -  احمد

முஸ்லிம் உம்மத்தில் சைத்தான் விள்ளயாடும் இடம் பகையை உண்டுபண்னுவதுதான்.

عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ

தற்கால கட்ட்த்தில் இஸ்லாம் சமுதாயம் ஒற்றுமை என்ற கோஷங்கள் அதிகமாக இருந்தாலும் = பகை வளர்ச்சியடைந்திருக்கிறது.

அதற்கு காரணம் அனைவரும் தங்களை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்

ஒத்துக் கொள்ளாதவர்களை பகைகவர்களாகவும் கருதுகிற இயல்பு – பகை வளர்க்கிற குணமும் பெருகி இருக்கிறது.

பல இடங்களில் மார்க்கத்தின் பெயரால் பகை வளர்க்கப்படுகிறது.

அமைப்புக்கள் இயக்கங்களை விடுங்கள்!

நல்லவர்கள் சாதுக்கள் பணீவானவர்கள் இஹலாசானவர்கள் அப்பாவிகள் என்று பார்க்கப்படுகிற தப்லீக் சாதிகளே கூட இப்போது பகைமையை வளர்க்கிற காரியங்களில் முன் நிற்கிறார்கள். குண்டாயிசம் செய்கிறார்கள்.

எல்லா பள்ளி வாசல்களிலும் தப்லீக்கை அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அப்படி கட்டாயப்படுத்தும் பதவாவை அவர்களே கூட சொல்ல மாட்டார்கள். நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக பாடுபடுகிற அமைப்புக்களில் தப்லீக்கும் ஒன்று.

எல்லா அமைப்புக்களும் மார்க்கத்திற்காக சமுதாயத்த்திற்காகத்தான் பாடுபடுகிறார்கள். அர்ப்பணிக்கீறார்கள்.

என்றாலும் முதலில் தோன்றிய அமைப்பு என்ற காரணத்த்தால் பள்ளிவாசல்களில் தப்லீக் பணிகள் நடக்க பலரும் அனுமதித்தார்கள்.

தப்லீகில் இருக்கிற கொளகை வேறுபாடுகளை கூட பலரும் கவனிக்க வில்லை.

மற்ற எந்த அமைப்புக்களுக்கும் இல்லாத சவுக்ரியங்களும் வசதிகளும் பள்ளிவாசல்களில் தப்லீக் கார்ர்களுக்கு வழங்கப்பட்ட்து. இமாமத்தை தவிர மொத்த பள்ளிவாசலும் எங்கிருந்தோ வருகிறவர்களுக்கு தாரை வார்க்கப்பட்ட்து.

இதில் மற்ற இஸ்லாமிய சமய் அமைப்புக்களுக்கு தரப்படாத சலுகைகள் அவர்களுக்கு மட்டுமே தரப்படுவதற்கு எந்த நியாயமும் மார்க்க சட்ட ரீதியான காரணமும் கிடையாது.

மற்ற அமைப்புக்களுக்கு கிடைக்காத பள்ளிவாசலின் வசதிகளை  அனுபவித்துக் கொள்கிற உரிமை தப்லீக் கார்ர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட்து என்று ஷரீஅத்தின் சட்டவிதிகள் எதுவுமில்லை.

 ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படியில் தப்லீக் கார்ர்களுக்கான அனுமதியை பள்ளிவாசல் நிர்வாகிகள் அனுமதிக்கிறார்கள்

சில இடங்களில் அனுமதி மறுக்கிறார்கள்;

தற்போது ஒரு பெரிய பித்னா தலை தூக்கியுள்ளது.

தப்லீக் கார்ர்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் தப்லீக்கின் பெயரால பலரும் தனி இடங்களை வாடகைக்கு எடுத்து பள்ளிவாசல் மதரஸாக்களுக்கு போட்டியாக மதரஸாக்களை நட்த்துகிறார்கள்.

இது தப்லீக் மேலிட்த்தின் அனுமதியின் பேரில் செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இது மக்களிடைய் கோபத்த்தை பிளவையும் ஏற்படுத்தி வருகிறது.

மதரஸா என்ற பெய்ர்ரைப் பயனப்டுத்தியே பகையை வளர்க்கிறார்களே!

இதே போல இன்னும் சில அமைப்புக்கள் அவர்களை யாராவது எதிர்த்து விட்டால பகை கொண்டு சமுதாயத்தை சமுதாயத்தை பிளக்கிற வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

பகையான காரியங்களுக்கு துணை போகவும் கூடாது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மீது பகை கொண்டு முனாபிக்குகள் ஆயிஷா நாயகியின் விசயத்தில் அவதூறு செய்தி பரப்பிய போது அதற்கு துணையாகிவிட்ட சில நல்ல சஹாபாக்களுக்கு க்சையடி கிடைத்த்து.
  
சென்னையில் ஒரு இமாம் பள்ளீவாசலில் பெரும் முயற்சி எடுத்து ஒரு வாசக சாலை அமைத்தார். அவரது சொந்தப் பணத்தையும் செலவு செய்து மற்றவர்களின் உதவியை பெற்றும் அப்பணியை செய்தார். அவ்வாசக சாலைக்கு பொதுவான பத்ரிகைகள்ள வாங்கினார். ஒரு அமைப்பை சார்ந்தவர்கள் எங்களது பத்ரிகையை வாங்கவில்லை என்று தகறாறு செய்து அவரை அடித்துவிட்டார்கள். போலீஸ் நிலையத்திற்கு புகார் சென்ற போது அவ்வமைப்பை சார்ந்தவர்கள் ஒன்று திரண்டு இமாமை அடித்த தங்களது அமைப்ப்பைச் சார்ந்தவர்களுக்கு சார்பாக இருந்தார்கள்.

இந்த நிலை மிகவும் வருந்த்தக்கது. இது போன்ற சூழல்கள் அதிகரித்து வருகின்றன. அது முஸ்லிம் சமுதாயத்தின் சிக்கல்களை மேலும் அதிகமாக்கு கிறது.

அதனால் தான் இன்றை முஸ்லிம் சமுதாயத்தில் பாவத்திற்கும் பகைமைக்கும் துணை போகாது நிற்கிற உறுதியான நீதி மனப்பான்மை அதிக தேவை என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பாவத்திற்கும் பகைமைக்கும் துணை ஏறபோம். அது தான் இப்போதைய முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்கிற பெரிய கித்மத்  சேவை ஆகும்.




No comments:

Post a Comment