வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 25, 2014

மீலாது உன்னத இஸ்லாமிய கலாச்சாரம்




ரபீஉல் அவ்வல் உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்குரிய மாதம்.
இங்கு மட்டுமல்ல உலகெங்கும் மீலாது மொலூது நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெற்று வருகின்றன.
அந்நிகழ்ச்சிகளில் திருக்குர் ஆன் ஓதுதல் பெருமானாரின் புகழ் பாடுதல் உணவளித்தல் உதவிகள் செய்தல் என பல நல்ல காரியங்களை பெருமானாரின் மீதுள்ள அன்பினால் மக்கள் பிரியத்தோடு செய்கிறார்கள். ஊர்வலங்களும் பேரணிகளும் பெருமானாரின் முஸ்லிம் மஹல்லாக்களை அலங்கரிக்கின்றன.
நமக்கு கிடைத்த அல்லாஹ்வின் அருளுக்காக மகிழ்ச்சியடையவும் வெளிப்படுத்தவும் அல்லாஹ் கூறுகிறான்.
قل بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ

முஹம்மது (ஸல்) அவர்களை தலைவராக பெற்றது நமக்கு கிடைத்த பேரருள் அல்லவா?
ஈருலகிலும் நமது மகிழ்ச்சி, அவர்களின் உம்மத்து என்பதில் அல்லவா ?
எனவே அதற்காக மகிழ்ச்சியடைவதும் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் அல்லாஹ்வின் உத்தரவாகும்.
இன்னொரு வசனம் இப்படிச் சொல்கிறது
لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا(9)
குர்துபி இந்த ஆயத்தை விளக்குகிறார்.
والهاء فيهما للنبي صلى الله عليه وسلم. وهنا وقف تام, ثم تبتدئ "وتسبحوه"
ஆயத்தின் பொருள் :
அல்லாஹ்வையும் ரஸூலையும் ஈமான் கொள்ளுங்கள்; பெருமானாரை பலப்படுத்துக்குங்கள், கண்ணியப்படுத்துங்கள், அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யுங்கள்.
இந்த வசனம் பெருமானார் (ஸல்) அவர்கள் தொடர்பில் மூன்று கடமைகளை நமக்கு சொல்கிறது.
1.   ஈமான் கொள்ளுதல்
2.   பலப்படுத்துதல்
3.   கண்ணியப்படுத்துதல்
பலப்படுத்துதல் என்பதற்கு கட்டுப்படுதல் என குர்துபி ஒரு அர்த்தம் செய்கிறார். அவரது போராட்டத்தில் இணைந்து போராடுங்கள் என்றும் அர்த்தம் உண்டு.
பெருமானாருக்கு கட்டுப்படனும். நமது உயிரை அர்ப்பணிக்கிற விசயத்திற்கு அழைத்தாலும் அவர்களுடன் சேர்ந்து போராடனும்.
கட்டுப்படுவதோடு கடமையை அல்லாஹ் முடித்து விடவில்லை.
கண்ணியப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறான்.
கண்ணியப்படுத்துதல் மகிமைப்படுத்துதலின் ஒரு அம்சமாகத்தான் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ரபீஉல் அவ்வல் மாத்தின் பணிரெண்டாம் நாளிலும்வருடம் முழுவதிலும் முஸ்லிம்கள் மீலாது மொலூதை விமரிசையாக நடத்துகிறார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த வீடு இப்போது மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலுக்கு வெளியே சலாம் கேட்டிலிருந்து சுமார் 20 – 30 டிகிரி  இடது புறமாக திரும்பினால்  மக்கா லைப்ரரியாக இப்போதும் இருக்கிறது. அங்கு ஆண்டு தோறூம் ரபீஉல் அவ்வல் 12 அன்று மக்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
மீலாது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்று பொருள் என்றாலும் முஸ்லிம்கள் மீலாதை வருடம் முழுவதிலும் நடத்துகிறார்கள்.
இதை அறிவுள்ளவர்கள் அத்தனை பேரும் அறிந்திருப்பார்கள்.
எனவே ஒரு நாள் பெருமானாரைப் புகழ்ந்தால் போதுமா என்று யாராவது கேட்டால் அவர்கள் உண்மையை திரிக்கிற. மோசடிப் பேர்வழிகள் ஆவார்.
மீலாது மொலூதை விமர்ச்சிக் முற்படுகிற யாரும் முதலில் நடப்பிலுள்ள உண்மையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இல்லை எனில் அவர்கள் அவதூறு பேசுகிற பாவிகள் ஆவர்.
இன்றைய சூழலில் பிறந்த நாள் விழா என்பது எல்லோரும் எல்லோருக்காகவும் கொண்டாடுகிறார்கள். அதே போல பக்திப் பூர்வமாக அதை எடுத்துக் கொள்பவர்களும் இருக்க்கிறார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி, மதுவிருந்தளித்து கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.
இஸ்லாமின் கோட்பாட்டின் படி பொதுவாக பிறந்த நாள் கொண்டாடுவது பர்ளோ சுன்னத்தோ அல்ல. ஆனால் பிறந்த நாளுக்கு மகிழ்ச்சியடைவதும் அதில் அல்லாஹ்வுடைய கிருபயை எதிர்பார்க்கிற காரியங்களை செய்வதும் தவறல்ல.
நபி யஹ்யா அலை அவர்களின் பிறந்த நாளை குறிப்பிட்டு அல்லாஹ் அவருக்கு வாழ்த்துச் சொல்கிறான்.
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
நபி ஈஸா அலை அவர்கள் தனது பிறந்த நாளுக்கு தானே வாழ்த்துச் சொல்லிக் கொண்டார்கள். அதாவது அல்லாஹ்வின் அருள் வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا
நண்பர்களே! மறந்து விடாதீர்கள் இது குர் ஆனிய வாழ்த்துக்களாகும்.
இன்னும் சொல்லப் போனால் பிறந்த நாள் வாழ்த்து எப்படிச் சொல்வது என்பதை இதிலிருந்து கற்றுக் கொள்ளலாலம்.
ஹாப்பி பர்த் டே என்பதை விட இறைவனின் அமைதி உங்களுக்கு உண்டாகட்டும் என்றும் சொல்வது மேலானது.   
மீலாதை  யூத கலாச்சாரம் கிருத்துவ கலாச்சாரம் என்றும் கேலி பேசுவோர் உண்மையை திரிக்கிறார்கள்.
நாம் மீலாது விழா கொண்டாடுவது போல் யூதர்களும் கிருத்துவர்களும் எந்த மீலாதையும் கொண்டாடுவதில்லை.
மீலாது விழா, யூதர்களின் கலாச்சாரம் என்று சொல்வது கடைந்தெடுத்த பொய்யாகும். 
யூதர்கள் என்ற வார்த்தை அரசியல் ரீதியில் இன்று முஸ்லிம்களிடம் அசூசையான சொல்லாக இருப்பதால் குருட்டுத்தனமாக இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். யூதர்கள் மூஸா நபிக்காகவோ மற்ற யாருக்காகவோ இப்படி செய்ததில்லை.
நபிமார்களின் தகுதியை குறைத்து மதிப்பதும் – அவர்களை அவமதிப்பதும் தான் யூதக் கலாச்சாரமாகும்.
மீலாது விழாக்களை எதிர்க்கிற தறுதலைகள் தான் யூதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். முஹம்மது ஸல்) அவர்களின் அந்தஸ்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்,
கிருத்துவர்கள் ஈஸா வின் பிறந்த நாள் என்று டிஸம்பர் 25 தேதி ஒரு நாளில் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்,
அதை எப்படி கொண்டாடுகிறார்கள்- கிருஸ்துமஸ் மரம் வைக்கிறார்கள்- குடில் அமைக்கிறார்கள். ஸ்டார் என நட்சத்திர பலூன்களள வீட்டு வாசலில் மாட்டி வைக்கிறார்கள், மது அருந்துகிறார்கள்.
முஸ்லிம்கள் இப்படியா மீலாது விழா கொண்டாடுகிறார்கள் ?
கண்ணும் கல்பும் உள்ளவர்கள் யாராவது மீலா விழாக்களை இத்தோடு ஒப்பிடுவார்களா?
குர் ஆனுடையவும் சுன்னாவினுடையவும் எல்லைகளை விட்டு வெளியேறிவிட்ட ஒரு கூட்டம் இன்று மீலாதை மொலூதை விமர்ச்சிக்கிறது.
தமிழகத்தில் சமீப காலமாக சில மதரஸாக்களில் ஓதி பட்டம் பெற்றோர் என்ற பெயரில் உலாவரக்கூடிய சிலரும் இந்த மீலாது மொலூதுக்கு எதிராக பேசி வருகிறார்கள். 
ஆனால் தாருல் உலூம் தேவ்பந்த கலாசாலையின் முன்னாள் வேந்தர் காரி தைய்யிப் சாஹிப் தன்னுடைய குத்பாத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.
خضور اكرم صل الله عليه كي ولادت طيبة كا ذكرحقيقة عين عبادت هي
தொடர்ந்து அவர் சொல்கிற வாசகங்கள் மணிவாசகங்களாகும்.
இறந்த நாளை கொண்டாடலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த அன்றுதானே பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் அந்த நாளை கொண்டாடலாமா என அவர்கள் கேட்கின்றனர்.
இந்தக் கேள்விக்கு இமாம் சுயூத்தி ரஹ் பதில் சொல்கிறார்கள்.
இமாம் சுயூத்தி ரஹ் அவர்கள் கூறுகிறார்;  
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் பிறப்பு உண்மையில் அது தான் மிகப்பெரும் பாக்கியம், நபியின் வஃபாத் - மரணம் நமக்கு துக்கமும் வேதனையுமாகும. என்றாலும்  நமது ஷரீஅத், சந்தோஷம் ஏற்படும் போது இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படி வலியுறுத்துகிறது. கஷ்டங்கள் சங்கடங்கள் சம்பவிக்கும் போது பொறுமையாக அமைதி காக்கும் படியும் கட்டளையிடுகிறது.
உதாரணத்திற்கு குழந்தை பிறக்கும் போது அந்தக் அல்லாஹ்வுக்கு நன்றியை வெளிப்படையாக தெரிவிப்பதற்காக ஆடு அறுத்து அகீகா கொடுக்கும் படியும் மார்க்கம் நமக்கு கட்டளையிடுகிறது.
ஆனால் மரணம் சம்பவிக்கும் போது துக்கத்தைக் கொண்டாட ஒப்பாரி வைப்பதையோ அழுது புலம்புவதையோ துக்கத்தை வரம்பு மீறி வெளிப்படுத்துவதையோ தடை செய்திருக்கிறது. ஆகவே தான் ரபீவுல் மாதத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மீலாதை பிறப்பை சந்தோஷமாக மட்டும் வெளிப்படுத்துகிறோம். துக்கத்தை வெளிப்படுத்துவதில்லை.
இன்னும் ஒரு செய்தி இருக்கிறது. பொதுவாகவே மரணம் என்பது முஸீபத் அல்ல. அதிலும் குறிப்பாக நபிமார்களின் மரணம் சமுதாயத்திற்கு நன்மையே. ஏனெனில் அவர் இறக்கும் போது அவர் நபி என்பது வெளிப்படும். மக்கள் அவரை இறைவன் அளவுக்கு உயர்த்தாமல் இருப்பார்கள். மக்களின் ஈமானை பாதுகாப்பதற்கு நபியின் இறப்பு ஒரு வகையில் முக்கிய காரணியாக இருக்கிறது,.
முஹம்மது ரஸூல் ஸல் அவர்கள் மீது அலாதியான நிகர் சொல்ல முடியாத பாசம் வைத்திருந்த சஹாபாக்களால் பெருமானா அவர்களின் இறப்பை தாங்கிக் கொள்வது சாமாணியமானதாக இருக்கவில்லை.
தீட்சண்யம் கொண்ட உமர் ரலி அவர்களுக்கே அந்த நிலை இருந்தது. “ மூஸா தவ்ராத் வாங்க சென்றது போல முஹம்மது ஸல் சென்றிருக்கிறார். வந்து விடுவார்கள். “என்று உமர் ரலி கூறினார்.
அங்கு வந்த அபூபக்கர் சித்தீக ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்குமாறு செய்தார்கள்.
அந்த மரணத்தை முஸ்லிம் உம்மத் ஏற்றுக் கொண்டதே அந்த கணம் தான் இந்தச் சமுதாயம் பாதுகாக்கப் பட்ட உன்னதமான கணங்களாகும்,
அந்த கணத்தில் பெருமானாரின் மரணத்தை ஏற்க முடியாமல் சமுதாயம் தடுமாறி இருக்கும் என்றால் பெருமானார்  (ஸல்) பாடுபட்டுக் கட்டிய தீனின் கோட்டை பழுதடைந்திருக்கு, அல்லாஹ் காப்பாற்றினான்.
இந்த வகையில் பெருமானார் (ஸல்) அவர்களின் மரணமும் இநதச் சமூகத்திற்கு நன்மையாகவே அமைந்தது.
சஹாபாக்கள் மீலாது விழாவை இப்படி கொண்டாடினார்களா?
நாம் இன்று செய்கிற மாதிரி மேடை போட்டு பயான் வைத்து மொலூது ஓதி சஹாபாக்கள் இவ்வாறு செய்யவில்லை என்றாலும் பெருமானாரை புகழ்பாடுகிற அவர்களை கண்ணியப்படுத்துகிற வேலைகளை செய்வதில் சஹாபாக்களின் முன்மாதிரிகள் பலதும் இருக்கின்றன.
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ مَرَّ عُمَرُ فِي الْمَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ فَقَالَ : كُنْتُ أُنْشِدُ فِيهِ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ثمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقَالَ : أَنْشُدُكَ بِاللَّهِ أَسَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ أَجِبْ عَنِّي اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ نَعَمْ.

ஒரு முறை ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலி அவர்கள் மஸ்ஜித் நபவியில் நபிபுகழ் பாடிக் கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த இடத்தைக் கடந்து சென்ற உமர் ரலி அவர்கள்,இது என்ன என்று கேட்டார்கள்.அதற்கு ஹஸ்ஸான் ரலி அவர்கள் உங்களை விட சிறந்த [சர்சதார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ] வர்கள்  இங்கு இருக்கும் போதே நான் இந்த [நபி] புகழ் பாக்களை பாடி மகிழ்ந்திருக்கிறேன்.  பிறகு அபூஹுரைரா ரலி அவர்களின் பக்கம் திரும்பி இவ்வாறு பெருமானார் சொன்னதை நீங்கள் கேட்டுள்ளீர்கள் அல்லவா ? என்று கேட்டார். அபூஹுரைரா  (ரலி) ஆம் என்றார்கள்.

ஹஸ்ஸான் ரலி பெருமானாரை புகழ்ந்து பாடிய அற்புதமான வரிகள்


وأَحسنُ منكَ لم ترَ قطُّ عيني ** وَأجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النّسَاءُ

خلقتَ مبرأً منْ كلّ عيبٍ ** كأنكَ قدْ خلقتَ كما تشاءُ
ما إن مدحت محمدا بمقالتي ... لكن مدحت مقالتي بمحمد

உங்களை விட அழகானவரை
என் கண்கள் பார்த்ததே இல்லை.
எந்தத தாயும் தங்களை விட அழகான
குழந்தையைப் பெற்றதில்லை.
நீங்கள் குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள்
நீங்கள் எப்படி படைக்கப்பட
                                    விரும்புவீர்களோ - அப்படி.

என் கவிதைகள் முஹம்மதுக்கு புகழ்
சேர்க்கவில்லை.
என் கவிதைகளுக்கு முஹம்மதால்
புகழ் கிடைத்தது.

இது போல இன்னும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. அந்த உதாரணங்கள் சொல்லும் செய்தி என்னவென்றால்
சஹாபாக்கள் பெருமானாருக்கு கட்டுப்படுவதில் மட்டும் நமக்கு முன்னுதாரணம் அல்ல. பெருமானாரை கண்ணியப்படுத்துவதிலும் நமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.
சஹாபாக்கள் சதா சர்வ நேரமும் பெருமானாரை நினைப்பவர்களாக இருந்தார்கள். பெருமானாரை நினைவு கூற தனியாக ஒரு நேரம் அவர்களுக்கு தேவைப் படவில்லை.
நம்முடைய சமூக சூழலில் பெருமானார் (ஸல்) அவர்களுடை நினைவுகள் பேசப்படுகிற மேடைகள் இல்லை என்றால் இன்று நாம் பெருமானாரை அறிந்து வைத்திருப்பதே பெரிய விசயமாகியிருக்கும்,. இது நம்முடைய பலவீனம் இந்த பலவீனத்தை கருத்தில் கொண்டுதான் நம்முடைய முன்னோர்கள் இப்போது நாம் கொண்டாடுகிற முறையில் மீலாது மொலூது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள்.
இந்த மீலாது நிகழ்ச்சிகளில் மார்க்கம் அனுமதித்த நிகழ்வுகள் தான் செய்யப்படுகின்றன.
மார்க்கம் தடை செய்திருக்கிற இசைக் கச்சேரி போன்றவைகள் எங்காவது சில இடங்களில் அறியாமையினால் நடக்கலாம். அவை முறையாக சொல்லி தடுக்கப்பட வேண்டுமே தவிர மொத்தமாக மீலாதை தடுக்க முய்றசிக் கூடாது.
பெண்களை கூட்டம் கூட்டம் தெருவுக்கு அழைத்து வந்து. கோர்ட்டுக்கு முன்- நிறுத்தி- சிறைக் கூடத்திற்கு முன் நிறுத்தி - அழகான பெண்கள் கோஷம் போடுகிற காட்சியை போட்டோ எடுத்துக் கொடுத்து பத்ரிகைகளிலும் சேனல்களிலும் காட்டுகிறார்களே இந்த அசிங்கம் பிடித்தவர்கள் இது மாதிரி ஏதாவது மீலாது விழாக்களில் நடக்கிறதா?
வட்டச் செயலாளரும் மாவட்டச் செயலாளரும் பெண்களை மொத்தமாக வண்டிகளில் ஏற்றி வெளியூருக்கு அழைத்துச் செல்கிறார்களே இப்படி ஏதாவது கேவலம் மீலாதில் நடக்கிறதா?
மகிழ்ச்சியை வெளிப்படுத்த மீலாது விழாக்களில் கொடி பிடிப்பதை குறை சொகிறார்களே, உப்புச் சப்பில்லாத கூட்டத்திற்கு தேவையே இல்லாமல் ஒரு மைல் தூரத்திற்கு கொடி கட்டுகிறார்களே அது எந்த வகையில் என்று இவர்கள் யோசித்தார்களா?
சிறுவர் சிறுமிய ஊர்வலம் செல்வதையும் அவர்களுக்கு இனிப்பு வழங்கப்படுவதையும் குறை சொல்கிறார்களே.. அவர்களுடை மதரஸாக்களுக்கு செல்கிற சிறுவர்களை தெருத்தெருவாக நோட்டீஸ் விநியோகிக்கவும் வீடு வீடாக மாநாடுகளுக்கு பிச்சை கேட்கவும் அனுப்புகிறார்களே அதை எண்ணிப்பார்த்தார்களா?
அன்பில் செய்யப்படுகிற செயலுக்கு ஆபாச தோற்றம் கற்பிக்கிற இந்த காமாலைக் காரர்களை என்ன வென்று சொல்வது?
குழதைக்கு பாலூட்டுகிற தாயை கூட வக்கிரத்தோடு பார்க்கிற பாவிகள் என்று தானே சொல்ல முடியும்.
இமாம்கள் முன்னோர்கள் கொண்டாடினார்களா?
மீலாது விழா இன்று நேற்று தொடங்கியது அல்ல ஆயிரமாண்டுகளாக நடந்து வருவதாகும்.
மார்க்கத்தின் முத்த அறிஞர்கள் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டதாகும்.
திருக்குர் ஆனின் விரிவுரையாளர் ஹாபிழ் இப்னு கஸீர் கூறுகிறார்
قال ابن كثير وقد ذهب الجماهير من العلماء من المذاهب الأربعة إلى مشروعية الاحتفال بميلاد سيد البشرية وإمام الإنسانية سيدنا محمدٍ صلى الله عليه وسلم، وصنفوا في ذلك مصنفات.

இமாம் இப்னு கஸீர்  (ரஹ்) அவர்கள் இமாம் முக்ரிஸி அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்கள். அதில் இவ்வாறான ஒரு மவ்லிது மஜ்லிஸில் சுல்தான் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் மந்திரிப் பிரதானிகள், சுல்தானுக்கு வலப்புறம் ஷைகுல் இஸ்லாம் புல்கீனி, நானிலமறிந்த  நபிமொழி விரிவுரையாளருமான புகாரி ஷரீபின் முதன்மை விளக்கவுரையாளர்] ஷைகுல் இமாம் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அமர்ந்திருக்கிறார்கள். அதற்கடுத்து அந்தக் கால நான்கு மத்ஹபின் பிரதம நீதிபதிகள்- பேரறிஞர்களெல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். அந்த சபையில் முதலில் குர்ஆன் ஷரீப் ஓதினார்கள். பிறகு மவ்லிது ஷரீப் நபி புகழ் பாடினார்கள். பிறகு பெரிய விருந்து நடைபெற்றது. முடிவில் இனிப்பு (நேர்ச்சை) வழங்கப்பட்டது.
எனவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற மீலாது மொலூது நிகழ்ச்சிகள் என்பது ஏதோ முந்தா நாள் தோன்றிய நடைமுறை அல்ல. நம்முடைய முன்னோர்கள் மார்க்கம் அறிந்து மக்களுக்கு அறியச் செய்த பெருமக்கள் நடைமுறையில் கையாணட வழிமுறையாகும்.
பெருமானார் (ஸல்)அவர்களுக்கு கட்டுப்படுவது மட்டுமல்ல கண்ணியப்படுத்துவதும் நமது கடமை என்பதை நாம் புரிந்து நடந்து கொள்வோம்.
மீலாது என்கிற உன்னத கலாச்சாரம் நமது சமூகத்தில் பெருமானாரின் மீது அன்பை- மதிப்பை பற்றுதலை ஏற்படுத்தியது. அது மக்களது உள்ளத்தில் இறைய்ச்சத்தை தோற்றுவித்தது. சமூகத்தில் பரகத்த்தையும் நல்லிணக்கத்தையும் நன்மைகளுக்கான சூழ்நிலையையும் உண்டுபன்னியது.
இதை எதிர்த்தவர்கள் தீமைக்க்கும் தீவிரவாத்திற்கு சமூக அமைதி குலைவதற்கும் குர் ஆணையே மறுக்கிற நிலைக்கும் சென்றார்கள்.
இந்த எதார்த்ததையும் நாம் சிந்தித்துப் பார்த்துச்செயல்படவேண்டும்.
உங்களது மஹல்லாக்களில் நடைபெறுகிற மீலாது விழாக்களில் கலந்து கொள்ளுங்கள். பெருமானாரின் அன்போடு. அல்லாஹ் நம்முடைய ஈருலக வாழ்வையும் வெளிச்சமாக்கித்தருவான

காரி தய்யிப் சாஹிபின் வரிகள்  
குத்பாத் நூலில் முஹம்மது பின் அப்தில்லாஹ் சே முஹம்மது ரஸூலுல்லாஹ் தக்.





3 comments: