வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 29, 2015

குர்ஆனின் ஒளியில் முஸ்லிம்




إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا(35)
அஹ்சாப் அத்தியாயம்  இஸ்லாமிய  சட்டங்களையும் வாழ்வியல் பண்பாடுகளை சிறப்பாகவும் நிறைவாகவும் போதிக்கிற ஒரு அத்தியாமாகும்.
இது 73 வசனங்களை கொண்டிருந்தாலும் இதில் சொல்லப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடர்த்தி காரணமாக பகரா அத்தியாயத்திற்கு நிகரானதாக கருதப்பட்டதாக உபை பின்  கஃபி ரலி கூறுகிறார்
سورة الأحزاب وهي ثلاث وسبعون آية. وكانت هذه السورة تعدل سورة البقرة.
இவ்வத்தியாயத்தில் பல மிக முக்கிய செய்திகள் தீர்க்கமாக பேசப்பட்டுள்ளன , சரித்திர சாதனைகளுக்குரிய பல சட்டங்களை இவ்வத்தியாயம் சுமந்திருக்கிறது.  
இவ்வத்தியாயத்தில் பேசப்படுகிற சில முக்கிய செய்திகள்
 முஃமின்களிடம் நபியின் அந்தஸ்து,
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ
நபி எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு முன்னுதாரனமாக இருக்கிறார்.
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
பெண்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டியவர்களே
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
அல்லாஹ்வோ இறைத்தூதரோ ஒன்றை சொல்லி விட்டால் அதில்  முஸ்லிம்களுக்கு சுய விருப்பம் என்று ஒன்று இருக்க கூடாது அது அவர்களது சொந்த விசயமாக இருந்தாலும் சரி, , அவ்வுத்தரவுக்கு அப்படியே கட்டுப்பட்டு விட வேண்டியது தான் அதை மீறி நடந்தால்  அது பெரும் வழிகேடுதான்,
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ
ஜிம்ஆ குத்பாவில் ஓதப்படுகிற நபியின் மீது சலவாத்துச் சொல்லும் உத்தரவு
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا(56)
பெண்கள் பார்தா அணியும் சட்டம்
يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا(59)
இத்தகைய அத்தியாயத்தின் 35 வசனம் முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறது,
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا(35)
இவ்வசனத்தின் அர்த்தம் என்ன ?
அடுக்கஅடுக்காக வார்த்தைகளை திருப்பித் திருப்பிச் சொல்வதன் மூலம் இந்த வசனம் உறுதிப்படுத்துகிற முதன்மையான செய்தி என்ன தெரியுமா?
ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தின் பார்வையில் சமமான அந்தஸ்துடையவர்களே!
ஆண்கள் தொழுதால் …. என்ன நன்மையோ அதே நன்மை பெண்களுக்கும் கிடைக்கும், கூடுதல் குறைவு இல்லை.
சில சந்தர்ப்பங்களில் ஆண்களை விட அதிகமாகவே கிடைக்கும்.
ஹஜ்ஜு செய்கிற பெண்கள் ஜிஹாதின் கூலியை பெறுவார்கள்.
ஒரு சில காரணங்களுக்காக அவரவரின் இயல்புக்கு ஏற்ப சட்டரீதியாக சில வித்தியாசங்களை கூறியதை தவிர மார்க்க அந்தஸ்தை பொறுத்த வரை ஆண்களும் பெண்களும் சமமே என்பதை இவ்வசனம் அழுத்தமாக பேசுகிறது.
இந்த வசனம் இறங்கிய சூழலை கவனித்த்தால் இது தெளிவாகும்.
பெண்குலத்தின் தூதர் அஸ்மா பிந்து யசீது
அஸ்மா பிந்து யஜீது (ரலி) பெருமானாரிடம் கேட்டார்கள்.
நான் பெண்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன், 
திருக்குர் ஆனில் எங்கும் ஆண்களை குறிக்கிற வர்த்தைகளே (முதக்கர் ) சொல்லப்படுகிறது. அதில் பெண்கள் உள்ளடங்கி விடுவார்கள் என்றாலும் அவர்களைப் பற்றி வெளிப்படையாக ஏன் சொல்லப்படவில்லை
ஒரு ரிவாயத்தில் இப்படியும் உண்டு
ஆண்கள் ஜிஹாதுக்கு செல்கிறார்கள், ஜும் ஆவிற்கு வருகிறார்கள், ஜனாஸாவில் கலந்து கொள்கிறார்கள், திரும்ப திரும்ப ஹஜ்ஜு செய்கிறார்கள் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறோமே?  எங்களுக்கு ஆண்களுக்கு நிகரான நன்மைகள் கிடைக்குமா என்ன ? என்று கேட்டார்.
இதை செவியுற்அர் பெருமானார் (ஸல்) அவர்கள் சஹாபாக்களை நோக்கி
தீனின் அக்கறையிலும் மார்க்ச் சிந்தனையிலும் இந்த பெண்மணியை விட சிற் ப்பாக கேள்வி கேட்டவரை  நீங்கள் அறிந்ததுண்டா? என்று: கேட்டார்கள்.
சஹாபாக்கள் சொன்னார்கள்  பெண்கள் இப்படி கேள்வி கேட்பார்கள் என நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை.
இதற்கு பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் அஸ்மா அம்மையாரிடம் சொன்னார்கள், உன்னை அனுப்பி வைத்த பெண்களிடம் சென்று சொல்!
எந்தப் பெண் அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றி, தனது கணவருடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறாறோ,  கணவருக்கு கட்டுப்பட்டு அவரது நற்காரியங்களில் உதவியாக இருக்கிறாறோ அவர் தனது கணவருடன் சேர்த்து அனைத்து அமல்களிலும் சம்மான கூலியை பெறுவார். அவர்கள் வீட்டிலிருந்தே ஜிஹாதின் நன்மையையும் ஹஜ்ஜின் நன்மையையும் ஜனாஸாவில் பங்கேற்ற நன்மையையும் பெறுவார்கள். ஆனால் உங்களில் சிலரே
جاءت أسماء بنت يزيد الأنصارية للنبي صلى الله عليه وسلم وقالت: يا رسول الله أنتم ......معاشر الرجال فضلتم علينا بالجمع والجماعات والجنائز وفوق ذلك الجهاد في سبيل الله، وإذا خرج الواحد منكم حاجًّا أو معتمرًا قعدنا في بيوتكم فربينا لكم أولادكم وغزلنا لكم أثوابكم فهل بقي لنا من الأجر شيء يا رسول الله ؟فسُرَّ النبي صلى الله عليه وسلم بقولها والتفت إلى الصحابة وقال: "هل سمعتم مقالة أفضل من هذه ؟ قالوا: ما ظننا أن امرأة تفطن إلى مثل ذلك يا رسول الله. فقال لها الرسول صلى الله عليه وسلم" ارجعي أيتها المرأة وأعلمي من خلفك من النساء أن طاعة الواحدة منكن لزوجها تعدل كل ذلك وقليل منكن تفعله". صحيح مسلم
அஸ்மா அம்மையாரைப் போலவே உம்மு சலமா அம்மையாரும் கேள்வி கேட்டார்கள்
عن أم سلمة رضي الله عنها قالت: قلت يا رسول الله أيذكر الرجال في كل شيء ولا نذكر؟ فأنزل الله تعالى "إن المسلمين والمسلمات
அப்போது தான் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا(35)
அல்லாஹ்வே ஆண்களையும் பெண்களையும் சமமாக குறிப்பிட்டு  பேசிவிட்டதால்இந்த உம்மத்தில்  எக்காலத்திலும் பெண்களின் அந்தஸ்தை குறைத்து யாரு பேசி முடியாது என்ற சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான்,
இந்த ஆயத்தின் பிரதான நோக்கம் ஆண்பெண் சமத்துவத்தை நிலை நாட்டுவது என்றாலும் இன்னொரு வகையில் முஸ்லிமான ஆண் பெண் இருவரின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசுகிறது.
10 பண்புகளை இவ்வசனம் பேசுகிறது. திருக்குர் ஆன் ஒளியில் தன்னை கட்டமைத்துக் கொள்ள நினைக்கிற எந்த முஸ்லிமும் இந்த வசனத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று அதிலுள்ள முதல் ஐந்து பண்புகளை மட்டும் பார்க்கிறோம்.
முஸ்லிமின் முதல் இயல்பு இஸ்லாம் ஆகும்,
முஸ்லிம் என்றால் சரணடைந்தவர் என்று பொருள். முஸ்லிம் அல்லாஹ் விற்கும் அல்லாஹ்வின் ரஸூலுக்கும் முழுக்க கட்டுப்பட்டவராக, அவர்களிடம் சரண்டைந்தாவராக இருக்க வேண்டும். நமது செயல்களை விருப்பத்தை ஆசைகளை அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கீழானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இது விச்யத்தில் தமது சொந்த  விருப்பத்தையோ, சூழ்நிலையையோ, கருத்தையோ ஒதுக்கி வைத்து விட்டு பெருமானாருக்கு முழுமையாக கட்டுப்படவேண்டும். 
உன் பெயரை மாற்றிக் கொள் என்று பெருமானார் உத்தரவிட்ட போது இதுகாறும் அழைக்கப்பட்டு வந்த தமது பெயரை சஹாபாக்கள் மாற்றிக் கொண்டார்கள்.
நான்கு மணைவியரை மட்டுமே திருமணம் செய்யலாம் என அல்லாஹ் உத்தரவிட்ட போது 10 மனைவியரை வைத்திருந்த غيلان  ரலி ஆறு பேரை தலாக் சொல்லிவிட்டார்கள்
أن غيلان بن سلمة الثقفي أسلم وتحته عشر نسوة فقال له النبي صلى الله عليه وسلم " اختر منهن أربعا"
இந்த இடத்தில் இவ்வாறு பெருமானாரின் பேச்சுக்கு கட்டுப்பட்ட கைலான் ரலி , பிற்காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க சொல்லியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல், மகன்களுக்கே சொத்து முழுவதும் சேர வேண்டும் என்ற அடிப்படையில் மற்ற நான்கு மனைவியரையும் கூட விவாகரத்துச் செய்தார். அதை வன்மையாக கண்டித்த உமர் ரலி அவர்கள் அவரை தலாக்கிலிருந்து அப்பெண்கள மீட்டுக் கொள்ளுமாறு கோரினார்கள். இல்லை எனில் அவர் இறந்து விட்டால் முறறப்படி அடக்கம் செய்யாமல் குழிக்குள் தூக்கி வீசப்படுவார் என எச்சரித்தார்கள்.
فلما كان في عهد عمر طلق نساءه وقسم ماله بين بنيه فبلغ ذلك عمر فقال: إنى لأظن الشيطان فيما يسترق من السمع سمع بموتك فقذفه في نفسك ولعلك لا تلبث إلا قليلا وأيم الله لتراجعن نساءك ولترجعن مالك أو لأورثهن منك ولأمرن بقبرك فيرجم كما رجم قبر أبي رغال. وهكذا رواه الشافعي والترمذي
உம்மு ஹபீபா
மார்க்கத்திற்கு கட்டுப்படுவதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தார்கள்.
உம்மு ஹபீபா அம்மா அவரது தந்தை அபூசுப்யான் ஷஹீதான போது நான்காம் நாள், எண்ணையை கொண்டு வரச் சொல்லி தலைக்குத் தேய்த்துக் கொண்டார்கள். எனக்கு இது இப்போது தேவையில்லை, எனினும்  எந்த ஒருவருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிகக் கூடாது என பெருமானார் சொன்னார்களே அதற்காக தேய்த்துக் கொள்கிறேன் என்றார்கள்.
நமது எந்த செயலையும் இபாதத்துக்கள் – வாழ்வியல் நடைமுறைகள் – திருமணம் – விவாகரத்து – வியாபாரம் பொதுச் சேவை அனைத்தையும் இஸ்லாத்திற்கு உட்பட்டே நாம் செய்ய வேண்டும். அவர் தான் முஸ்லிம்.
இரண்டாவது இயல்பு ; ஈமான்
அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்படுவது என்பது இயந்திரத்தனமான கட்டுப்படுதலாக இருக்க கூடாது, அதில் ஈமான் நம்பிக்கை முழு அளவில் மிளிர வேண்டும் .
ஈமான்  என்றால் என்ன?
ஈமானின் சுருக்கமான வடிவம் (முஜ்மல்) நாம் படித்திருக்கிறோம். மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
كل ما جاء به النبي حق
முஹம்மது  நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் சத்தியம் என்று நம்புவது ஈமானாகும்
அன்வர்ஷா கஷ்மீரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
நம்பிக்கை கொள்வது என்றால் அல்லாஹ் மலக்குகள் வேதங்கள் கியாமத் கேள்வி கணக்கு சொர்க்கம் நரகம் ஆகிய வை உண்டு என்று அறிந்து வைத்திருப்பது மட்டுமல்ல. அவற்றை ஒப்புக்கொள்வதே ஈமானாகும்.
அறிந்து வைத்திருப்பது அல்ல; ஒப்புக்கொள்வதே ஈமானாகும்.
யூதர்கள் பெருமானார் உண்மை நபி என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆயினும் அவர்கள் ஈமான் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
الَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ(20)
அபூஜஹ்லும் அபூலஹ்பும் கூட பெருமானாரை அறிந்தே இருந்தனர். ஆயினும் அவர்கள் பெருமானாரை ஒப்புக் கொள்ளவில்லை.
நாம் பெருமானாரை அவர் கொண்டு வந்தது அனைத்தும் சத்தியம் என்றும் அதுதான் ,உலகின் நிலையான நாகரீகம் என்றும் முழுமையாக ஒத்துக் கொள்ள வேண்டும்
இன்றைய படிப்பறிவு அல்லது நாகரீக மோகத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் என்று தெளிவாக தெரிகிற விசயங்களில் ஏதேனும் ஒரு விசயத்தை  நாம் ஏற்க மறுப்போம் என்றால் -  அல்லது தயங்குவோம் என்றால் நாம் முஃமின் அல்ல.
சில முஸ்லிம்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தை தமது சொந்த அறிவின் படியும், காபிர்களின் கேலியின் பின்னணியிலும் அணுகினார்கள். அதனால் இந்தச் செய்திக்குப் பிறகு அவர்கள் முர்தத்தாகி விட்டார்கள்.
ஆனால் அபூபக்கர் சீத்தீக் ரலி அவர்கள் ஒரு முஸ்லிமுக்கு சரியான முன்னுதாரணமாக நின்று, சொன்னது அவர்தானா என்பதை மட்டும் கேட்டார்கள். அவர் தான் என்பது உறுதியான போது இதை மட்டுமல்ல. இதை விட பாரமானதையும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள்.
لما أصبح رسول الله صلى الله عليه وسلم أخبر الناس بما رآه فصدقه الصدِّيق وكل من آمن به إيماناً قوياً وارتد ناس ممن آمن به
فسعى رجال من المشركين إلى أبي بكر رضي الله عنه فقالوا: هل لك إلى صاحبك يزعم أنه أُسري به الليلة إلى بيت المقدس؟ قال: وقد قال ذلك؟ قالوا: نعم، قال: لئن قال ذلك لقد صدق،    
எல்லா விசயத்திலும் பெருமானரை இப்படி ஏற்றுக் கொள்வ்தே ஈமானின் இலட்சணமாகும்.
ஒரு முஸ்லிமிடம் கட்டுப்பாடு முதன்மையாக பார்க்கப்படும் அடுத்ததாக அந்தக் கட்டுப்பாடு முழு நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.
·         நாம் பழம் தத்துவங்களையே பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
·         அதனால் உலகின் வெற்றி நம்மைச் சேராமல் இருக்கிறது,
·         இஸ்லாம் நமது வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது.
·         இதை எல்லாம் சொன்னால் மக்கள் கேட்க மாட்டார்கள்
என்றெல்லாம் பேசி இஸ்லாமிய சட்டங்களை சுமையாக காலாவதியாக கருதினாலே நமது ஈமானும் இஸ்லாமும் பாழாகிவிடும்.
ஒரு முஸ்லிம் வக்கீல்களின் கூட்டத்தில் ஒரு வக்கீல் – பேசினார். இஸ்லாம் பெண்கள் குறித்து சொன்ன சட்டங்கள் பழமையானவை. நாம் அதில் புதிதாக சில மாற்றங்களை சேர்க்க வேண்டும். ஏற்க வேண்டும்.
இது இஸ்லாமிய சட்டங்களை புரிந்து கொள்ளாமல் அவர் பேசியது என்றாலும் நாம் ஞாபகத்தில் வைக்கனும் இவ்வாறு பேசுவது அல்லது நம்புவது குப்ராகிவிடும்.
முஹம்மது நபி எந்த சட்டங்களை சொன்னார்கள் அதுவே இறுதிச் சட்டம் என்ற உறுதியான கட்டுப்பாடும் நம்பிக்கையுமே நாம் முஸ்லிம் என்பதற்கான பிரதான அடையாளங்கள்
மாரியத்துல் கிப்திய்யா அம்மாவின் அருமையான ஒரு உதாரணத்தை பாருங்கள்.
பெருமானாரின் 60 வது வயதில் மாரியத்துல் கிபதிய்யா ரலி யின் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை சிறு வயதிலேயே இறந்தது, பெருமானார் பெரும் கவலையுற்று அழுதார்கள். அதே போன்ற துக்கம் மாரியத்துல் கிப்திய்யா அம்மையாருக்கும் இருந்தது, அம்மையாரை பெருமானார் ஆறுதல் படுத்தினார்கள்.
உனது மகன் சொர்க்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். நீ விரும்பினால் சொர்க்கத்தில் விளையாடும் குழந்தையை காட்டுகிறேன் என்றார்கள்..
அவர் மறுத்துவிட்டார்.
உலகிலேயே சொர்க்கத்தை பார்க்கும் வாய்ப்பை ஏன் மறுத்துவிட்டீர்கள் என மற்றவர்கள் கேட்டார்கள். அம்மையார் சொன்னார்.
பெருமானாரின் சொல்லை நான நம்புகிறேன். அந்த சிறப்பு பார்த்தால் கிடைக்காது அல்லவா?
இத்தகைய நம்பிக்கையும் கட்டுப்பாடும் மார்க்கத்தின் ஒவ்வொரு விசயத்திலும் நமக்கு வேண்டும்
உதாரணத்திற்கு வட்டியை அல்லாஹ் அழிப்பான் ; தர்மத்தை வளர்ப்பான் என்று சொல்கிற போது அதிலும் ஆழிய திடமான நம்பிக்கை நமக்கு வேண்டும்.
முஸ்லிமின் மூன்றாவது இயல்பு கானித
அல்லாஹ் ரசூலின் மீது ஈமான் கொண்டு கட்டுப்படுவது என்பது கானித் என்ற வகையில் அமைய வேண்டும்.
கானித் என்றால் மகிழ்ச்சியோடு கட்டுப்படுகிறவர் என்று பொருள்
முஸ்லிம் தொழுகிற போது மற்ற வணக்கங்களை செய்கிற போது ஆர்வத்தோடும் ஆசை யோடும் கட்டுப்படுகிறவராக இருக்க வேண்டும்.
ஒரு யுத்ததில் அப்துல்லாஹ் பின் உமர், ஜைது பின் சாபித், உஸாமத் து பின் ஜைது, ராபிஃ பின் கதீஜ் சமுரத்துபின் ஜுந்துப் சிறுவர்களாக கருதப்பட்டு விலக்கி வைக்கப்பட்டனர்.
கதீஜ் (ரலி) என மகன் நன்றாக அம்பு வீசுவார் என்று  பெருமானாரிடம் சிபாரிசு செய்தார். இதில் ராபிஃ சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சமுரரா ரலி தனது சிறிய தந்தை முர்ரத்துப் பின் சினானிடம் சென்று “ நான் ராபிஐ விட கெட்டிக் காரன். எங்களுக்கு இடையே போட்டி வைக்கச் சொல்லுங்கள் என்றார்,
பெருமானார் (ஸல்) இருவருக்கும் இடையே போட்டி வைத்தார்கள். போட்டியில் வென்று சமுரா ரலி போரில்  கலந்து கொண்டார்.
முஸ்லிமின் நான்காவது அடையாளம் உண்மையாக நடந்து கொள்வதாகும். ,
ஈமானுக்கும் உண்மைக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. உண்மை இல்லாத இடத்தில் ஈமான் தடுமாறும்..
மக்காவின் காபிர்கள் முஷ்ரிக்கள் என்றாலும் பொய்யை அவர்கள் வெறுத்தார்கள்
عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدى إلى الفجور وإن الفجور يهدي إلى النار ولا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا ولا يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا 
இன்றைய காலகட்டத்தில் பொய் சர்வ சாதாரணமாகிவிட்டது. முஸ்லிம்கள் தங்களது வாழ்கை வியாபாரம் பொது வாழ்வு அனைத்து விசயத்திலும் உண்மைக்கு முக்கியத்துவம் தர முயற்சி செய்ய வேண்டும். இது ஈமான் தொடர்பான இயல்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளனும்
முஸ்லிமின் அடுத்த் இயல்பு பொறுமையாகும்
الصبر نصفُ الإيمان؛ فإن الإيمان نصفان: نصفٌ صبرٌ ونصفٌ شكرٌ.

قد قال عمر بن الخطاب رضي الله عنه: "خير عيش أدركناه بالصبر"

قال: "ما أعطي أحد من عطاء خيرٌ وأوسع من الصبر" رواه البخاري ومسلم

 

பொறுமை என்பது சிரமம் ஏற்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்வது மட்டும் அல்ல.
பெறுமை என்பது முதல் கட்டத்திலே  உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக நடந்து கொள்வதாகும். ஒரு பெண்மணியின் மகன் இறந்து போனார். ஆறுதல் சொல்ல பெருமானார் சென்றார்கள். அதை அவர் கண்டு கொள்ளாமல் இருந்தார், பிறகு நிதானமடைந்து பெருமானாரிடம் சென்று நீங்கள் வந்த போது நான் கண்டு கொள்ள வில்லை, நான் துக்கத்தில் இருந்தேன் என்றார், அப்போது பெருமானார் சொன்னார்கள்.

فقد روى البخاري ومسلم في (صحيحيهما) عن أنس بن مالك - رضي الله عنه - قال: مرَّ النبي - صلى الله عليه وسلم - بامرأة تبكي عند قبر، فقال: "اتقي الله واصبري!"، قالت: إليك عني، فإنك لم تُصب بمصيبتي! ولم تعرفْه، فقيل لها: إنه النبي - صلى الله عليه وسلم - فأتت باب النبي - صلى الله عليه و سلم - فلم تجد عنده بوابين! فقالت: لم أعْرِفْكَ! فقال: "إنما الصبر عند الصدمة الأولى".

உண்மை பொறுமை ஆகிய பண்புகளின் சிறப்புக்கள் நண்மை அவற்றை தவிர்ப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய மிக நிறைய பேசலாம் இங்கு அது நோக்க மல்ல.
இங்கு நீங்களும் நானும் நாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது, அல்லாஹ் முஸ்லிம்களின் நான்காவது ஐந்தாவது இயல்பாக உண்மமயையும் பொறுமையையும் சொல்லியிர்க்கிறான் என்ற தகவலை மட்டுமாகும்.
இந்த சிந்தனனகளை நமது நினனவில் நிறுத்திக் கொள்வதன் வழியாக அல்லாஹ் நம்மை உண்மம முஸ்லிம்களாக்குவானாக!
இது இறை நேசர்களை நினைவு கூறுகிற காலம். இறைநேசர் என்பவர் உண்மை முஸ்லிம்காக வாழ்ந்தவர் என்பதை முதலில் நாம் நினைவில் நிறுத்துவோம்.



1 comment: