வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 26, 2015

பட்ஜெட் - இதயத்திலிருந்து பிறக்காத திட்டங்கள்

மார்ச் மாதம் அரசுகள் புதிய பட்ஜெட்களை வெளியிடுகிற நேரம்இந்த் ஆண்டில் என்ன செய்யப் போகிறோஅதற்காக திட்டச்செலவு என்னஎன்பவை தெரிவிக்கப் படும்

தற்போது இரயில்வே பட்ஜட் அறிவிக்கப் பட்டுள்ளது. நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை பொது பட்ஜெட் அறிவிக்கப்பட இருக்கிறது.

அதிரடி சீர்திருத்த திட்டங்கள் கொண்டதாக பட்ஜெட்கள் இருக்கும் என்ற விளம்பரங்கள் வேகம் பட்ஜெட் திட்டங்களில் இல்லை.

இன்டெர் சிட்டி இரயில் முழுமையாக ஏசி செய்யப்படலாம். வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் ரயில் பெட்டிகளில் புதுவகையான பயோ டாய்லெட்கள் அறிவிக்கப்படலாம் ரயில்நிலையங்களின் தரம் மேம்படுத்தப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்புக்கள் எதையும் புதிய பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை.

இனி வரக்கூடிய  பொது பட்ஜெட்டும் கூட எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவாறு இருக்கவாய்ப்பில்லை என்ற ஆயாசம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.  

தற்போதைய ஆளும் கட்சிக்கு ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் இல்லை. வெளியிலிருந்து யாரோ சொல்லித்தருகிற படி இந்த அரசு செயல்படுகிறது.  என்பது அப்பட்டமாக பல விசயத்திலும் வெளிப்பட்டு வருகிறது. அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதிலும், மொறு மொறுப்பான கோஷங்களை உருவாக்குவதிலுமே தற்போதைய அரசு தனது செயல் திறனை வெளியிட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டுகள் அதற்கு நல்ல உதாரணங்கள்.  

பட்ஜட் அறிவிப்புகள் மிக முக்கியமாக கருதப்படுபவை என்றாலும் தற்காலத்தில் அதன் மரியாதை குறைந்து வருகிறது.

காரணம் பட்ஜட்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் இதன் மூலம் பெரிதும் ஏமாற்றப் படவே செய்கிறார்கள்.

தங்களுக்கு என்ன திட்டம் தேவை என்பதை பற்றிய பிரக்ஞ இல்லாத மக்கள், என்ன வேண்டும் என்று எப்படி கேட்பார்கள்? என்ன வேண்டும் என்று தேவையை கேட்காத மக்களுக்கு எப்படி தலைவர்கள் திட்டம் தயாரிப்பார்கள?

வீட்டிலிருக்கிற மனைவி அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டால் தானே கணவன், தேவைக்கும் வரவுக்குமான செலவுப் பட்டியல் போடுவான்? மனைவி எதையும் கேட்காவிட்டால் கணவனின் உற்சாகத்திற்கு என்ன வாய்ப்பு இருக்கப் போகிறது?

கோவை நகரம் மக்கள் தென்னிந்தியா இரயில்வேயுக்கு சென்னைக்கு அடுத்தபடியாக வருமானத்தை தரக்கூடிய நகரம். ஆனால் இங்குள்ள் இரயில் வசதிகள் கேரளாவின் நகரங்களோடு ஒப்பிடுகிற போது வெகு சொற்பமானது.

என்னைப் பொறுத்தவரை தென்னிந்திய இரயில் நிலையங்களில் மோசமான சர்வீஸ் தரக் கூடிய இரயில் நிலையம் கோவை ரயில் நிலையம். அடிப்படை வசதிகளில் பூஜ்யம் என்று சொல்லி விடலாம். ஊழியர்களின் அலட்சியத்திற்கு அளவே இல்லை.

(உங்கள் ஊருக்கான செய்திகளை சேத்துக் கொள்ளுங்கள்)

மக்கள் இது விசயத்தில் விழிப்படைய வேண்டும். நாட்டின் வளம் எப்படி செல்வழிக்கப் படுகிறது. யாருக்காக செலவ்ழிக்கப் படுகிற என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

இந்தியாவின் சாதாரணப் பொதுமக்கள் பட்ஜெட் பற்றி எல்லாம் விவாதித்துக் கொள்கிற காலம் தீர்க்கமாக முடிவு களை அலசுகிற நேரம் எப்போது வருமொ என்று  ஏங்க வேண்டியிருக்கிறது.

நம் நாட்டில் தற்காலத்தில் பட்ஜெட் தயாரிக்கிறவர்கள் பணத்தை அடிப்டையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கிறார்கள், மனதை அடிப்படையாக கொண்டு அல்ல.

அதனால் திட்டங்கள் மக்கள் நலனுக்காக என்ற நோக்கில் இருப்பதில்லை. செலவழிப்பதற்காக திட்டங்கள் போடப்படுகின்றன.

காமராஜர் முத்துப் பேட்டைக்கு போனார். அந்த மக்கள் இரண்டு ஆறுகளால் பெரும் துனபத்திற்கு ஆளாகி வந்தனர். ஒரு ஆறு மேற்கிலிருந்து கிழக்காக பாய்கிறது, மற்றொன்று வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது. இரண்டு ஆறுகளும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. மழைக்காலத்த்தில் இரு ஆறுகளும் சந்திக்கிற இடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரைகளை உடைத்துக் கொண்டு வெளியாகிற தண்ணீர் விவசாயிகளின் மொத்த உழைப்பையும் பாழ்படுத்தி வந்தது, அந்த இடத்தில் போய் உட்கார்ந்தார் காமராஜார் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்கு தோன்றியது. பள்ளிக் கூடம் போகாத அந்த தலைவன் சட்டென் அந்த அதிகாரிகளை கேட்டார் இந்த ஆற்றை அந்த ஆற்றுடன் கலக்கவிடாமல் அப்பால கொண்டு போயிட்டா என்ன? அதிகாரிகள் திகைத்துப் போயினர். ஆறு என்ன சின்னக் குழந்தையா ? தூக்கி அந்தப் புறம் விட? ஐயா அது வந்து என்று அவர்கள் இழுத்தனர். இதென்னய்யா பெரிய விச்யம்? மக்களை கடத்த மேலே மேம்பாலம் கட்டுறீங்களே அது போல தண்ணீய கடத்த கீழே மேம்பாலம் கட்டுங்க! வடக்கேயிருந்து வர்ர தண்ணீர் இந்த ஆத்துல கலக்காக சுரங்கப் பாதை வழியா ஆத்துக்கு அப்பால கொண்டு போங்க! அந்தப் பக்கம் கால்வாய் வெட்டினா அந்தப் பக்கம் இருக்கிற நெலத்துக்கும் தண்ணீ கிடைக்குமல்லே என்றார் காமராஜர். திட்டத்திற்காக உடனடியாக பணம் ஒதுக்கினார், இப்போதும் அந்த அதிசய சுரங்கப் பாதை வடக்கே இருந்து வரும் ஆற்றை தெற்கே கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.

எத்தனை எத்தனை அணைக்கட்டுகள் இன்றைக்கும் தமிழகத்திற்கு தண்ணீர் தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றன, அவை அத்தனையும் காமராஜரின் பெயரை அல்லவா சுமந்து நிற்கின்றன.

பிரம்மாண்ட பட்ஜெட்கள் இல்லாத காலத்தில் காமராஜர் செய்த சாதனைகளை நாம் நினைத்தாவது பார்க்க வேண்டாமா?

இன்றைககு தமிழகம் கல்வித்துறையில் தலை நிமிர்ந்து நிற்கிறது அமெரிக்காவின் நாஸாவிலும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திலும் 30 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள், அதில் தமிழகத்தின் பங்கு மிக முக்க்யமானது என்றால் இதற்கு வித்திட்டவர் காமராஜர் என்றால் அது மிகையில்லை

அவர் தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் திறக்க திட்டமிட்ட போங்கை வரலாறு இப்படிச் சொல்கிறது படித்துப் பாருங்கள்

உயர் நிலைக்குழுக்கள் அமைத்து அவை தரும் பரிந்துரைகளைத் தான் திட்டங்களாக அரசுகள் தயாரிக்கும். காமராஜர் அந்த முடிவை கைவிட்டார்.

காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற அதே கல்வி ஆண்டில் இயன்ற அளவு தொடக்கக் கல்விகள் திறந்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அரசிற்கு நிதி ஏதும் கட்டணமாக அளித்திட தேவையில்லை. இன்னும், சொல்லப்போனால் பள்ளிக்கூடம் திறப்பதற்காக யாரும் எந்த அதிகாரியையும் தேடியும் கூட போக வேண்டாம்.
அதிகாரிகளே ஊர் ஊராக சென்றனர். எங்கெல்லாம 500 பேர் வாழும் சிற்றூர்கள் உண்டோ அங்கே அதிகாரிகளே சென்றனர். ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு கல்வி வருமாறும் பார்த்துக் கொண்டனர். இந்த இரண்டு அடிப்படைகளைக் கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. ஊரில் இருந்த மக்களிடத்தில் கல்வி மேம்பாடு எடுத்து சொல்லப்பட்டது. ஒரு கட்டிடத்தை வாடகை இன்றி பள்ளிக்கூடத்திற்காக தரமக்கள் ஊக்குவிக்கப்பட்டு, பள்ளிக் கட்டிடங்கள் வாடகை இன்றி பெறப்பட்டு, அங்கே பள்ளிக்கூடம் தொடங்கி வைக்கப்பட்டது.
உடன் வரும் ஆசிரியர்களில் அந்தச் சிற்றூர் பள்ளி ஆசிரியரும் அங்கேயே அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பள்ளிக்குரிய கரும்பலகைகள், மேசை நாற்காலிகள், பதிவேடுகள் முதலியவையும் அதே நேரத்தில் வழங்கப்பட்டது. பள்ளி செயல்படுவதற்குரிய வகையில் முறைப்படுத்தப்பட்டவுடன், அந்தக் குழு அடுத்த சிற்றூரை நோக்கி செல்லும்.
இப்படி எளிமையாக்க நடைமுறைகள் வழியாக 1954-55 ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 2,780 ஓராசிரியர் பள்ளிகள் துவக்கப்பட்டன. 500 பேர் மக்கள்தொகை கொண்ட சிற்றூரில்தான் பள்ளிக்கூடம் துவக்கப்படுவது தங்களுக்கு உகந்ததாக இருக்காது என்றும் அதைவிட குறைவான மக்கள்தொகை கொண்ட எல்லா சிற்றூர்களிலும் பள்ளிக்கூடம் திறக்கப்பட வேண்டுமென முதல்வர் காமராஜரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவரிகளின் வேண்டுகோள் நியாயமாக இருந்ததை கருதி, 300 மக்கள் தொகை கொண்ட எல்லா சிற்றூர்களிலும் பள்ளிகள் துவங்கலாமென் காமராஜர் அறிவித்து செயல்படுத்தினார். இதனால், ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிற்றூர்களிலும் பள்ளிக்கூடம் துவங்க வாய்ப்பு ஏற்பட்டது.


ஆண்டு வருமானம் ரூ.12000 இருக்கக்கூடிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி வரை இலவச கல்வி அளித்து 1960-ல் காமராஜர் அரசு ஆணைபிறப்பித்தது. அதுவே 1962-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட்டது.

காமராஜரின் பிரம்மாண்ட திட்டங்களுக்கான மதிப்பு எவ்வளவு தெரியுமா ஒரு லட்சத்து முத்தெட்டாயிரம். அது வே பிறகு 2 ½ இலட்சமாக உயர்ந்தது.

கன்னியா குமரிக்கு இரயில் பாதை அமைத்த பிறகு அங்கு இரயில் நிலையம் கட்ட பொருத்தமான இடத்தை இந்திரா காந்தி தானே நடந்து சென்று தேர்வு செய்தார் என்று வரலாறு சொல்கிறது, நினைத்துப் பார்க்கவே எவ்வளவு அதிசயமாக இருக்கிறது,

இந்த வரலாற்றை படித்துப் பாருங்கள். இது தினமலர் பத்ரிகையின் அன்றைய கட்டுரை

“காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஎன்ற கோஷம் உயிரூட்டப்பட வேண்டுமானால், குமரிக்கு இரயில் அவசியம் வேண்டுமென்று இந்திரா உணர்ந்திருந்தார். கன்னியாகுமரியில் எங்கே இரயில் நிலையம் அமைப்பது என நேரில் சென்று ஆராய்ந்து இடம் தேர்ந்தெடுக்க, இரயில்வே அமைச்சராக இருந்த ஹனுமந்தையாவை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் மற்றும் நண்பர்களைக் கலந்தாலோசித்து, குமரி அம்மன் ஆலயத்தின் அருகில் இரயில் நிலையம் அமைக்கலாம் என இடம் தேர்வு செய்து பிரதமரிடம் ஹனுமந்தையா அறிவித்தார். அந்த இடம் இந்திராவின் மனத்திற்குத் திருப்தி தரவில்லை. ஆலயம் வரை இரயில் வருமானால், ஆலயமும், அதன் எதிரிலே அமைந்த முக்கடலின் அழகும் கெட்டு, இரயில்வே நிலையப் பரபரப்பும், தோற்றமுமே மிஞ்சும் என்பது அவரது கருத்து. 
பின்னர் கன்னியாகுமரிக்கு விஜயம் செய்த பிரதமர் இந்திராகாந்தி, ஒருநாள் அதிகாலையில் தனது பாதுகாவலர்களைக் கூடத் தனக்குப் பாதுகாப்பாக வர வேண்டாமென கூறி விட்டு, கடற்கரையில் நீண்ட தூரம் நடந்து சென்றார். 
குமரி அம்மன் ஆலயத்தை விட்டு சிறிது தொலைவில் உற்ற இடத்தை அப்போது தானே தேர்ந்தெடுத்து நிலையம் அங்கு அமைக்கப்படுவதுதான் சரி என்ற முடிவுக்கும் வந்தார். இன்றைக்கு நிலையம் அந்த இடத்தில்தான் உருவாகியுள்ளது

நாட்டுக்காக மக்களுக்காக திட்டங்கள் போட்ட தலைவர்கள் எங்கே! இப்போது வெறும் பேச்சுக்காக புகழுக்காக சுரண்டலுக்காக திட்டம் போடுகிற தலைவர்கள் எங்கே!

இப்போதொல்லாம் அரசியல் வாதிகள் கொள்ளை அடிப்பதற்காக திட்டங்கள் போடுகிறார்கள். பட்ஜெட்கள் கூட அதற்கு விதிவிலக்காக இருப்பதில்லை,

குஷ்வந்த் சிங் ஒரு ஜோக் எழுதினார்

தமிழக அமைச்சர் ஒரு வர் பஞ்சாபுக்கு சென்றார். உள்ளூர் அமைச்சர் தன் வீட்டுக்கு தனிப்பட்ட முறையில் அழைத்தார். அந்த வீடு மன்னர் மாளிகைகளை தூக்கிச் சாப்பிடும் அளவு பிரம்மாண்டமாக இருந்தது. வியந்து போன் தமிழ அமைச்சர் இந்த மாளிகை எப்படி என்று கேட்டார். அவரை மேல் மாடிக்கு அழைத்துச் சென்ற பஞ்சாப் அமைச்சர் தூரத்தில் தெரிந்த ஒரு பாலத்தை காட்டி அந்தப் பாலம் தெரிகிறதா என்றார். பாலமா? அரைப்பாலம் தானே தெரிகிறது என்றார் தமிழக அமைச்சர், பஞ்சாப் காரர் சொன்னார், மீதி அரைப்பாலம் தான் இந்த வீடு,
தமிழக அமைச்சருக்கு புரிந்து விட்டது. அடுத்த முறை பஞ்சாப் காரர் தமிழகத்திற்கு வந்தார். தமிழக அமைச்சரின் வீட்டில் அவருக்கு தனி விருந்து தரப்பட்டது. அமைச்சரின் வீட்டை பார்த்து பஞ்சாப் காரரருக்கு மயக்கமே வந்து விட்டது, அவ்வளவு பிரம்மாணட வீடு . இது எப்படி என அவர் கேட்டார். மொட்டை மாடிக்கு வா என அமைச்சர் அழைத்துச் சென்றார். தூரத்தில் ஒரு இடத்தை காட்டி அந்த பாலம் தெரிகிறதா என்றார். பஞ்சாப் காரர் கணணை துடைத்து துடைத்து பார்த்தார். பாலமா அப்படி எதுவுமே இல்லையே என்றார். தமிழக அமைச்சர் சொன்னார், அந்த பாலத்திற்கான் திட்டம் தான் இந்த மாளிகையாக வளர்ந்ததிருக்கிறது.

ஒரு காலத்தில் குஷ்வந்த் சிங் எழுதியது  நகைச்சுவையாக தோன்றினாலும் இன்று அது அப்பட்டமாக நடப்பதை பார்க்கிறோம்

அரசின் எந்த திட்டமும் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை, திட்டம் தீட்டப்படுகிற போதே அரசியல்வாதிகள், காண்ட்ராக்டகாரர்கள், இடைத்தரகர்கள் என கால்வாய் வெட்டப்பட்டு கால்வாய்களுக்கான திட்டம் காணாமல் போய்விடுகிறது.

மக்கள மேலும் மேலும் வரிச்சுமைகளின் மூலம் உறிஞ்சப்படுகிறார்கள். உலகிலேயே அதிகமாக வரி செலுத்தும் சுமை தாங்கிகளாக இந்திய மக்கள் இருக்கிறார்கள்.

இது குறித்தெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும், கவலைப்பட வேண்டும். நல்ல திட்டங்கள் வேண்டும் என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

இந்திய மக்களின் பொதுவான நிலை இப்படி இருக்கிறது என்றால் இன்னொரு  புறம் முஸ்லிம் சமுதாயம் பட்ஜெட் போன்ற திட்டமிடுதல்கள் குறித்து பெரிதாக யோசிப்பதில்லை.

முஸ்லிம்களின்  பொருளாதார ஈடுபாடுகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் குருட்டுத்தனமானதாகவே  இருக்கிறது.   

ஒரு காலத்தில் பெரிய வியாபாரிகளாக இருந்தவர்கள் தற்ப்பொது நடுத்தரமாகவும் நடுத்தரமானவர்கள் குருவியாபாரிகளாகவும் மாறிவிட்டார்கள்.

ஒரு ஊரில் சிறு மிட்டாய்க்கடையாக இருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இன்று மாநில அளவில் கடை பரப்பியிருக்கிறது. பல துணிக்கடைகளுக் நகை கடைகளும் இவ்வாறே வளர்ந்திருக்கின்றன. முஸ்லிம்களின் பாரம்பரிய நிறுவன்ங்கள் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது?

தூர நோக்கின்மையும், திட்டமிடுதல் இல்லாமையும் முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவுக்கான காரணங்களாகும்.   

எங்களது ஊரில் முஸ்லிம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன்வழங்க வந்த் மாவட்ட ஆட்சியர் பெண்கள் ஒவ்வொருவரிடமும்கடனுக்கான செக்கை கொடுத்து விட்டு  இதை வைத்து என்னசெய்யப் போறீங்க! என்று கேட்டார்.

ஒரு வெட்க்க் கேடு ! ஒரே ஒரு பெண் மட்டும் நான் இட்லிக்கடை வைப்பேன் என்று சொன்னார். மற்ற அனைவரும்தலையை சொறிந்து கொண்டும் வழிந்து கொண்டும் சென்றார்

நம் சமுதாயத்தில் திட்டமிடுதல் அதிலும் பொருளாதாரதிட்டமிடுதல் என்பது எந்த அளவில் இருக்கிறது என்பதற்குஒரு உதாரணம் இது!

நம்முடைய மார்க்கமோ ஒவ்வொரு விசயத்திலும் திட்டமிடுதலை ஒரு பாடமாகவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்த காரணமே மனிதர்களுக்கு திட்டமிடுதலை கற்றுக் கொடுக்கத்தான.

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ(54)


ஜகாத் பொத்தம் பொதுவான தர்மம் அல்ல.
அது  ஒரு சரியான பொருளாதார திட்டமிடுதலாகும்.
உண்மையாக ஜகாத் கொடுப்பவர் கணக்கு பார்ப்பவராக இருப்பார்.
ஜகாத் கணக்குப் பார்க்கிற இயலபையும். மேலும் மேலும் வளர்ச்சி குறித்த சிந்தனையும் இது தூண்டுகிறது.
5 பேருக்கு ஜகாத் கொடுத்தவர் இனி 50 பேருக்கு ஜகாத் கொடுக்க நினைப்பார்.

ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும் இனி அடுத்த மூன்றாண்டுகளுக்கு தன்னுடைய திட்டம் என்ன? தான் எந்த நிலைக்கு வளர்ந்திருக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.

திட்டம் முக்கியம்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல் திட்டமில்லா வாழ்வும் குப்பையாக ஆகிவிடும்/
உணவுக்கு உப்பை போல வாழ்க்கைக்கு திட்டம் அவசியம். 

·         இன்றைய சுய முன்னேற்ற பயிற்சியாளர்கள் கோல் செட்டிங்கஐ அதிகம் வலியுறுத்துகிறார்கள். ஒரு இலக்கை தீர்மாணித்துக் கொண்டால் தான் அதை நோக்கி நடைபோட முடியும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.

·         நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டும் என்று நினைத்தால் வாங்குவது தாமதமாகும். மாருதி ஸ்விப்ட் அல்லது இனோவா அல்லது ஸ்கார்பியோ என்று துல்லியமாக நினைத்தால் சீக்கிரம் வாங்கி விடுவீர்கள் என்கிறார்கள் அவர்கள்.

·         இஸ்லாம் கோல் செட்டிங்கிற்கு முன்மாதிரி மார்க்கமாகும்.
·         நிய்யத் என்று இஸ்லாம் கோல் செட்டிங்கை குறிப்பிடுகிறது.
·         ஒரு நிய்யத் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது பாருங்கள்.
·         இன்றைய லுஹருடை 4 ரக் அத்தை இந்த இமாமை பின் தொடர்ந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விறாக அதாவாக / கழாவாக தொழுகிறேன் என்ற இந்த நிய்யத் நாம் செய்யப் போகிற செயலைப்பற்றி எவ்வளவு தெளிவான திட்ட முன் வரைவை தருகிறது பாருங்கள்
·         மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள்; இவ்வாறு நிய்யத் வைக்கிற போது நாம் செய்யப் போகிற ருகூஐயும் சுஜூதையும் மற்ற அசைவுகளையும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிறார்கள்
.·         உயர்ந்த, பரந்த கோல செட்டிங்க இன்றை நம்முடைய சமுதாயத்தில் இல்லாமல் போனதும் நமது பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.
·        என்னை வைத்து  பத்து குடும்பமாவது பிழைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட இளைஞர்கள் இன்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
·         முஸ்லிம் சமூகத்தில் தொழிலதிபர்களின் எண்ணிக்கை குறைந்த்தற்கு திட்டமின்மை ஒரு முக்கிய காரணமாகும்.

பொருளாதாரம் விச்யம் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முக்கிய வழிகாட்டுதலை எப்போதும் மறந்து விடக்கூடாது.

·         நம்முடைய பணம் இறைவனால் நம்மிடம் தரப்பட்டுள்ளது.
·         وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ
·         பொருளாதார நிர்வாகம் முக்கியமானது. இறைவன் தந்த பொருளை உரிய முறையில் சம்பாதிக்க வேண்டும். உரிய முறையில் செலவு செய்யும் பொறுப்பு நம்முடையது.
·         கணக்குச் காட்ட வெண்டும் என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபருமான அஜீம் பிரேம்ஜியை இன்று அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, புகழ் மிக்க விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அவர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியச் செய்தி அவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கொடையாளி ஆவார், அவரது தர்மத்தின் மதிப்பு 8846 கோடி பத்ரிகை செய்தி இதோ! ஒன் இண்டியா

  விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி தனது ரூ 8846 கோடி மதிப்புள்ள பங்குகளை சமூக சேவைப் பணிகளுக்காக அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கினார். இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்த பங்குகளின் அளவு 79.36 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக குறைந்துள்ளது. அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற பெயரில் 2001 முதல் இயங்கும் இந்த சமூக சேவை நிறுவனம், இந்தியாவின் அடிப்படைக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளது. இந்த அமைப்புக்கு ஏற்கெனவே பல கோடி ரூபாயை வழங்கியுள்ளார் பிரேம்ஜி. இப்போது தனக்கு சொந்தமான விப்ரோ பங்குகளில் 213 மில்லியன் (21.30 கோடி) பங்குகளை இந்த அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் அஜீம் பிரேம்ஜி. இதன் சந்தை மதிப்பு ரூ 8846 கோடி.

அஜீம் பிர்ர்ம்ஜி வளரத் துடிக்கும் முஸ்லிம் இளம் தலைமுறையினருக்கு ஒரு ஆலோசனை சொன்னார்,

எதெற்கும் கணக்கெழுதி வையுஙகள்.

பொருளாதாரத்தைப் பாதுகாக்க இஸ்லாம் கண்டிப்பான் உத்தரவுகளை இட்டுள்ளது.

ِ إ نَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلَاثًا قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ – البخاري 1477
ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا  -مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَنْزٍ مَيِّتَةٍ فَقَالَ مَا عَلَى أَهْلِهَا لَوْ انْتَفَعُوا بِإِهَابِهَا
عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ خَطِيبًا فَكَانَ فِيمَا قَالَ إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَنَاظِرٌ كَيْفَ تَعْمَلُونَ أَلَا فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ

பணட்தை செலவு செய்யும் போது இதயத்தை கேட்டு, தேவையான இடங்களில் தாராளமாக செலவு செய்யனும்,


என்வே அரசாங்கம் மட்டுமே பட்ஜெட் போட்டால் போதாது. நாமும் நமக்காக பட்ஜெட் போட வேண்டும், அதில் திட்டமிடுதலும் கணக்கிடுதலும் மிக முக்கியமானது, அது போல் திட்டங்கள் இதயத்தை அடிப்படையாக கொன்டு போட வேண்டும், மூளையையோ பணத்தையோ அடிப்படையாக கொன்டு அல்ல,

உறவுக்காரர்கள் தேவையுடையோ இயலாதோர் அனைவருக்காகவும் சேர்த்து சம்பாதிக்கனும் அனைவருக்காகவும் செலவு செய்ய திட்டமிடனும்.

ஒரு அருமையான உருது பழமொழி உண்டு
சஹீ கீ கமாயிமே சப் கா ஹிஸ்ஸா
கொடைவள்ளளின் சம்பாத்தியத்தில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் ரலி அவர்களுக்கு சொன்னார்கள்,
அபூ தர்! சால்னா சமைக்கும் போது அதில் தண்ணீர் அதிகம் விட்டுக் கொள்! பக்கத்து வீட்டுக் காரரையும் கவனி, அவரையும் சேர்த்துக் கொள்
 عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا أَبَا ذَرٍّ : "إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ " .مسلم
பொருளாதாரத்தை செலவிடுவதில் இதயத்தை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை இதை விட அழகாக சொல்லித்தர முடியாது,

சரியான சம்பாத்தியம், சரியான திட்டமிடுதல், முறையான நன்மையான் இரக்க மிகுந்த செலவுமே பொருளாதார ஒழுங்குகள் என இஸ்லாம் தொட்ர்ந்து வலியுறுத்தி வருகிறது, இந்த நூற்றாண்டிலும்.

அல்லாஹ் அத்தகைய வழிமுறைகளை பின்பற்றி வாழ கிருபை செய்வானாக!   

2 comments: