வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 16, 2015

இஸ்லாமிய வாழ்வியலில் பாடல்களும் இசையும்.


وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ(6)

நாகூர் ஹனீபா வபாத்து.
அல்லாஹ் அவரது பிழைகளை மன்னித்து, உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக!
அவர் பல தரப்பட்ட பாடல்களைப் பாடி இருந்தாலும் அவரது இஸ்லாமியப் பாடல்கள் இஸ்லாமிய் உலகை அரை நூற்றாண்டுகளாக மகிழ்ச்சிப் படுத்தியவை நெகிழ்ச்சிப்படுத்தியவை.
சமுதாயம், உணரவும் கிளர்ந்தெழவும் காரணமாக இருந்தவை.
எந்த வீட்டிலும் எந்தக் காரிலும் அவரது குரல் ஒலிக்காமல் இருந்த்தில்லை.
ஒரு கால கட்டத்தில் சன்மார்க்க கவிஞர்கள் மார்க்கத்தின் அடிப்படைச் செய்திகளை அழகு தமிழில் வடித்துக் கொடுக்க ஹனீபா தனது வெண்கலக் குரலில் பாடிக் கொடுக்க இஸ்லாம் இண்டு இடுக்கெங்கும் எதிரொலித்தது,
அந்த வகையில் நாகூர் ஹனீபா இஸ்லாமிய சமூகத்திற்கு செய்த தொண்டு மறுக்க வியலாத்தது.
இருபதாம் நூற்றான்டின் தமிழ் முஸ்லிம் வீடுகளில் தவிர்க்க முடியாத ஒரு குரலாக நாகூர் ஹனீபா இருந்தார். தமிழகத்தின் பொதுச் சமூகத்தில் ஒரு அரைநூற்றான்டுக்கு மேலாக தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாது.
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடங்கள் தவக்குலைப் பற்றி ஆழமான சிந்தனையை மதங்களை கடந்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது.
ஐந்து கடமைகளில் அரும் பெரும் தத்துவங்கள் என்ற பாடல் அன்றைய கிராமப்பகுதிகளுக்கு இஸ்லாமிய கடமைகளை எடுத்தியம்பியது.
அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு போன்ற பாடல்கள் நபி (ஸல்) அவர்கள் மீதான நேசத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகளாக சமுதாயத்தில் நாவில் நடமாடியது,
அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும் என்ற பாடல் எந்தப் பாமரனுக்கும் தொழுகையுன் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது,

நோன்பு பற்றிய அவரது பாடல் சின்னப்பிள்ளைகளை நோண்புக்கு தூன்டியிருக்கிறது

பெரியார் பிலாலின் என்ற பாடலப் போன்ற பல பாடல்கள் இஸ்லாமின் வரலாற்றை மக்கள் மனதில் கல்லில் செதுக்கிய வரிகளாக பதிய வைத்ததுண்டு, அதில் வரும் பாங்கை கேட்டு அது போல பாங்கு சொல்லிப் பழகாதவர்கள் இருக்க முடியாது,
இந்த ரபீஉல் அவ்வல் மாதம் இரயில் ஒரு ஆலிம் சொற்பொழிவாளரைச் சந்தித்தேன் .மீலாது தொடர் சொற்பொழிவில் பெருமானாருக்கு முன் மக்கா எனும் தலைப்பில் உரையாற்றப் போகிறேன் என்று சொன்ன அவர் இன்று நாகூர் ஹனீபாவின் பாடல் ஒன்றையே முழுசா பாடிடலாம்னு இருக்கேன் என்றார். அதில் சில வரிகளையும் பாடிக் காட்டினர். அந்த வரிகளில் ஜாஹிலிய்யாவின் அடையாளங்களை மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருந்தது அப்பாடல்.
அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததை கேளுங்கள்- இன்று
அன்பின் எல்லையாய் அறிவின் சிகரமாய் அமைந்த்தைப் பாருங்கள்
அங்கே போவோம் வாருங்கள்.
கஃபா என்னும் கடவுள் ஆலய்ம் முதலில் தோன்றியது
உலகில் முதலில் தோன்றியது. அதை
களங்கம் செய்து முன்னூற்றம்பது
சிலைகள் மூடியது. உருவச் சிலைகள் மூடியது,
மழை பெய்யாவிடில் மாட்டின் வாலில் தீயை வைத்தார்கள். தீயோர்
தீயை வைத்தார்கள்.
மங்கைக்கு பலபேர் கணவர்களாகி மயங்கிக் கிடந்தார்கள்- மதுவில்
மயங்கிக் கிடந்தார்கள்.
மழலைப் பேசும் பெண் மகள் மகள் பிறந்ததும்
உயிருடன் புத்தைத்தார்கள் சிசுவை
உயிருடன் புத்தைத்தார்கள்.
மனித உருவிலே மிருகங்களாகி மானம் இழந்தார்கள். மேலாம்
ஞானம் இழந்தார்கள்.
இந்த வேளையில் இருளைக் கிழித்து
அஹ்மது பிறந்தார்கள். அண்ணல்
முஹம்மது பிறந்தார்கள்.
ஹிரா குகையில் தனியே இருந்து தவமே புரிந்தார்கள்
தினமும் தவமே புரிந்தார்கள்.
என்று பேசுகிற வர்லாறு தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை சுருக்கென்றும் நறுக்கென்றும் விவரிக்கப்படுகிறது,
போலிக் கடவுள்கள் பொய்மைகள் எல்லாம்,
தரையில் வீழ்ந்தனவே யாவரும் தீன் கொடி ஏந்தினரே!
மது பானைகள் மக்கா வீதிகளெங்கும்
ஆறாய் ஓடினதே! உடைந்தே ஆறாய் ஓடினதே!
செல்வங்கள் இரண்டை விட்டுச் செல்கின்றேன், தெளிவீர் என்றார்கள்
நன்கு தெளிவீர் என்றார்கள்.
ஒன்று திருமறை மற்றது என் வழி என்று
திருவாய் மலர்ந்தார்கள். இறைவன் திருவடி சேர்ந்தார்கள்.நபிகள்
இறையடி சேர்ந்தார்கள்,

மிக எளிமையாக நாகூர் சலீம் எழுதிய வரிகள் நாகூர் ஹனீபாவின் குரலில் உயிர் பெற்று மக்கள் மனதில் நங்கூரம் பாய்ச்சியது போல் பதிந்து கிடப்பதை இப்போது நான் உணர்கிறோம்.

2008 ல் முதல் ஹஜ்ஜின் போது மதினாவில் முதன் முறையாக சலாமிற்காக பெருமானாரின் வாசலருகே நின்ற அந்தச் சந்தர்ப்பத்தில் படித்ததெல்லாம் மறந்து போய் அஸ்ஸலாமு அலைக்குமுக்குப் பிறகு ஒன்றும் தெரியாமல் நின்ற சந்தர்ப்பத்தில் காவலர்கள் உந்தித்தள்ள என்ன செய்வது என்ற் திகைத்த தருணத்தில் "அஷ்ஷபா அத்த யாரஸூல்லாஹ் " என்ற ஹணீபா அண்ணணிண் குரல் நினைவில் ஒலித்ததை மறக்க முடியாது.


பல பாடகர்கள் இருந்தாலும் ஹனீபா இந்த உம்மத் பெரிதும் ஏற்றுக் கொண்ட மனிதராக இருந்தார். அதற்கு காரணம் அவரது குரல் வளம் மட்டுமல்ல பாடல்களின் பின்னணியில் இருந்த அவரது உணர்வும் அடங்கியிருக்கிறது என்று அவரை நெருக்கமாக தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் பிரபலமான ஆலிம் ஒருவர் சொன்னார்.

ஒரு தடவை நாகூர் ஹனீபா அவர்களை சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்தித்தோம். இப்போது தான் ஒரு பாடல் தயாராகியிருக்கிறது, இனிமேல் தான் ரிகார்டிங் செய்ய வேண்டும் என்று சொன்ன அவர் அந்த்ப் பாடலை பாடிக்காட்ட ஆரம்பித்தார்.

ஒரு நாள் மதீனா நகர் தனிலே..! ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே..!

என்ற உக்காஷா ரலி அவர்களின் வரலாற்றை கூறும் அந்தப் பாடலை பாடி முடித்த மனிதர் குலுங்கிக் குலுங்கி அழுத்ததை இப்போதும் என்னால் மறக்க முடியாது  

நாகூர் ஹனீபாவின் பாடல்களை காலம் கடந்து நிற்பதற்கு அவரது குரல்வளம் பாடும் திறன் மட்டுமல்ல அவரது உள்ளத்து உணர்வும் காரணமாக இருந்திருக்கிறது.

திகைப்பிலாழ்த்தும் கவிச்சொற்கள் ஹனீபாவின் குரல் வழியாக பாமர மக்களின் நாவுகளில் நடமாடின, மகத்தான கவிஞர்களின் மாபெரும் சிந்தனைகள் மக்களை சென்றடைய ஹனீபா இனிய பாலமாக இருந்தார். தமிழின் செழுமை ஹனீபாவின் நாவில் மேலும் அழகு பெற்றது, அந்த தமிழின் இனிமைக்காகவே அனைத்து தரப்பு மக்களும் அவரை விரும்பினர்.
நாகூர் ஹனீபாவின் வபாத்து நிகழ்ந்து விட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எண்ணிப்பார்ப்பதற்குரிய இரண்டு விச்யங்கள் உண்டு,

ஒன்று

எந்த ஒரு சமுதாயத்தின் எழுச்சிக்கும் மன மகிழ்ச்சிக்கும் பாடல்களின் பங்களிப்பும் முக்கியமானது., கொள்கைகளை விளக்கிச் சொல்லவும் - திரும்ப திரும்பச் சொல்வதன மூலம் அதை மனதில் பதிக்கவும் – அக்கொள்கையில் துணிவை ஊட்டவும் – உற்சாகம் அடையவும் – ஊக்கம் பெறவும் மெட்டுக்கலாக அமைந்த பாடல்கள் பெரும் துணை சேர்ப்பவை ஆகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை வரவேற்று மதீனா வாசிகள் பாடிய பாடல வரலாற்றின் வைர வரிகளுக்குச் சொந்தமானவை
طلع البدر علينا .. من ثنيات الوداع
وجب الشكر علينا .. مادعي لله داع
ايها المبعوث فينا .. جئت بالامر المطاع
 قال الإمام البيهقي أنها حدثت عند استكماله الهجرة قادماً من مكة - البداية والنهاية

அதே போல் மதீனாவின் பள்ளிவாசலை கட்டுகிற போது செங்கற்களை எடுத்துக் கொடுத்த நிலையில் பெருமானார் (ஸல்) அவர்கள் பாடினார்கள்,
ثم بناه مسجداً وطفق رسول الله صلى الله عليه وسلم ينقل معهم اللبن في بنيانه ويقول وهو ينقل اللبن:

هذا الحمال لا حمال خيبر
هذا أبر ربنا وأطهر

ويقول:

إن الأجر أجر الآخرة
فارحم الأنصار والمهاجره

அதே போல கந்தக் யுத்தத்திற்காக அகழ் வெட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் பெருமானார் பாடினார்கள்

عَنْ أَبِي إِسْحَقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ وَلَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ وَهُوَ يَقُولُ
وَاللَّهِ لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا
وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا
فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا
إِنَّ الْأُلَى قَدْ أَبَوْا عَلَيْنَا

قَالَ وَرُبَّمَا قَالَ إِنَّ الْمَلَا قَدْ أَبَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا وَيَرْفَعُ بِهَا صَوْتَهُ – مسلم 3365

ஹுனைன் யுத்ததில் தனித்து விடப்பட்ட நிலையில் தனது துணிவை வெளிப்படுத்துகிற இடத்திலும் ஒரு வரிப் பாடல் வெளிப்பட்டது,

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ أَبِي إِسْحَقَ قَالَ قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ يَا أَبَا عُمَارَةَ أَفَرَرْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لَا وَاللَّهِ مَا وَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ عَلَيْهِمْ سِلَاحٌ أَوْ كَثِيرُ سِلَاحٍ فَلَقُوا قَوْمًا رُمَاةً لَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ جَمْعَ هَوَازِنَ وَبَنِي نَصْرٍ فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ فَأَقْبَلُوا هُنَاكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَقُودُ بِهِ فَنَزَلَ فَاسْتَنْصَرَ وَقَالَ أَنَا النَّبِيُّ لَا كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ثُمَّ صَفَّهُمْ- مسلم3325

காயம்பட்ட சந்தர்பங்களில் பாடினார்கள்
عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ قَالَ دَمِيَتْ إِصْبَعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ تِلْكَ الْمَشَاهِدِ فَقَالَ
هَلْ أَنْتِ إِلَّا إِصْبَعٌ دَمِيتِ
وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ
- مسلم3326
உணர்வெழுச்சியின் வெளிப்பாடாக பாடல் படுவதை அனுமதித்தார்கள்

عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ فِي عُمْرَةِ الْقَضَاءِ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ يَمْشِي بَيْنَ يَدَيْهِ وَهُوَ يَقُولُ
خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهِ
الْيَوْمَ نَضْرِبْكُمْ عَلَى تَنْزِيلِهِ
ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهِ
وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهِ

 فَقَالَ لَهُ عُمَرُ يَا ابْنَ رَوَاحَةَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي حَرَمِ اللَّهِ عَزَّ وَجَلَّ تَقُولُ الشِّعْرَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلِّ عَنْهُ فَلَهُوَ أَسْرَعُ فِيهِمْ مِنْ نَضْحِ النَّبْلِ


தினமும் பெருமானாரின் சபையில் பாடல் பாடப்பட்டது,

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ كُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مُصَلَّاهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَيَتَحَدَّثُ أَصْحَابُهُ يَذْكُرُونَ حَدِيثَ الْجَاهِلِيَّةِ وَيُنْشِدُونَ الشِّعْرَ وَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – النسائي – 1341

பெருமானார் பாடல்களை விருபிக் கேட்டார்கள்.

عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ )الشَّرِيدِ( قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ قُلْتُ نَعَمْ قَالَ هِيهْ فَأَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ مسلم 4185

பாடல்களில் உள்ள அருமையான தத்துவங்களை பாராட்டி உள்ளார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَشْعَرُ كَلِمَةٍ تَكَلَّمَتْ بِهَا الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلٌ- مسلم -4186

பாடலக்ள் ஒரு சமூகத்தின் மகிழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் தேவைப்படக் கூடியவை. எனவே அதை பெருமானார் அனுமதித்தார்கள்.

பெருநாட்களில் திருமண நிகழ்வுகளில் தப் அடித்து பாட்டுப்பாட அனுமதித்த்தார்கள்

அதே நேரத்தில் பாடல்களில் ஆபாசம் – தீய வர்ணனைகள் – தீய கருத்துக் கொண்டவை இருக்கும் என்றால் அதை மார்க்கம் தடுத்துள்ளது,

رواه الطَّبَراني عن عبد الله بن عمر
: الشِّعر كالكَلام؛ فحسَنُه حسَن، وقَبِيحه قبيح. والمباح وهو ما خَلا موضوعُه عن فُحْش وبذاءة ، ولَم يُحرِّك الشَّهوات الكامنة. والمحرم هو ما كان في موضوعه بذاءةٌ وفُحْش ودعوةٌ إلى الفجور والأمور المَرْذولة، كأشعار الهجاء والأشعار الشركيَّة.

இன்று வாழ்கிற முஸ்லிம்கள் தமது வாழ்க்கைப் போங்கில் இதயததை இலக வைக்கிற அல்லது எழுச்சு யுறச் செய்கிற அல்லது எளிதாக தத்துவங்களை புரிய வைக்கிற பாடல்கள் இல்லாத சமுதாயமாக வரட்சியாக கிடக்கிறது,

முஸ்லிம் சமுதாயம் தனது அருமை பெறுமைகளையும் மார்க்கத்தின் கோட்பாடுகளையும் பாட்ல்களின்  வடிவில் தயாரிக்கவும் பயன்படுத்தவும் முன் வர வேண்டும்.
நாகூர் ஹனீபா வின் இழப்பு அந்த இடத்தை நமக்கு வெற்றீடமாக விட்டுள்ளது, அதை தகுந்த வகையில் நிரப்ப வேண்டும். 

அதே நேரத்தில் நாம் நினைவு கூற வேண்டிய இரண்டாவது அம்சம்.

இஸ்லாம் இசையை தடை செய்துள்ளது என்பதாகும்.

நாகூர் ஹனீபாவின் பாடல்களில் இசை இடம் பெற்ற காரணத்தால் தான் அது இன்று வரை இஸ்லாமிய உலகில் சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற முடியவில்லை. அவருக்கு பிரபலம் கிடைத்ததே தவிர சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை.  அவரது பணி சன்மார்க்கப் பணியாக கருதப்படவுமில்லை, ஒரு பாடகராக மட்டுமே அவர் பார்க்கப்பட்டார், போதகராக பார்க்கப்படவில்லை,

மார்க்கம் அனுமதிக்காத வழியில் மார்க்கத்தை எடுத்துச் சொல்வது தீனிய பணியாகாது,.

இசைக்கருவிளில் தப்பை தவிர  மெல்லிய சத்தம் வரக் கூடியவைஆர்மோனியம் பியானோ வயலின் போன்றவை அனைத்தையும் இஸ்லாம் தடை செய்துள்ளது என்பதே நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் கருத்தாகும்.

قال رسول الله صلى الله عليه وسلم : " ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف .. " الحديث ، ( رواه البخاري تعليقا برقم 5590 


عن نافع رحمه الله قال : " سمع ابن عمر مزمارا ، قال : فوضع إصبعيه على أذنيه ، ونأى عن الطريق ، وقال لي : يا نافع هل تسمع شيئا ؟ قال : فقلت : لا ، قال : فرفع إصبعيه من أذنيه ، وقال : كنت مع النبي صلى الله عليه وسلم فسمع مثل هذا ، فصنع مثل هذا " صحيح أبي داود ؛

சிலர் இதைக் கூடும் என்று வாதிட்டாலும் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தை பின்பற்றிக் கொள் என இமாம் தப்ரீ சொல்கிறார்

الطبري رحمه الله : ( فقد أجمع علماء الأمصار على كراهة الغناء والمنع منه وإنما فارق الجماعة إبراهيم بن سعد وعبيد الله العنبري ، وقد قال رسول الله صلى الله عليه وسلم : " عليك بالسواد الأعظم " ، ومن فارق الجماعة مات ميتة جاهلية " ) ( تفسير القرطبي 14/56 

إتفق مؤسسوا المذاهب الأربع على تحريم الغناء،
وورَدَ في كتاب التترخانيَّة - وهو من كتب الأحناف - أنَّ الغناء مُحرَّم في جميع الأوطان.
وعند المالكية سُئِل الإمام مالِكٌ عن الغناء، فاجابلهم: إنَّما يفعله الفُسَّاق عندنا.

وعند الشافعية رواية أن الشافعيُّ عند خروجه من بغداد إلى مصر: خرجتُ من بغداد، وخلَّفتُ شيئًا ورائي أَحْدَثه الزَّنادقة يُسمُّونه التَّغبير؛ لِيَصدُّوا الناس به عن القرآن. ويقصد بالتغبير آلةٌ يُعزَف بها تشبه العود
. وقال الشافعي أيضا: إذا جمع الرَّجلُ النَّاسَ لِسَماع جاريته، فهو سفيهٌ مَرْدود الشَّهادة، وهو بذلك ديُّوث. 
وعند الحنابلة روى عبد الله عن أبيه الإمام أحمد: سألتُ أبي عن الغناء، فقال: لا يُعجِبُني، إنَّه ينبت النِّفاق في القلب، كما ينبت الماء البقل.

இசை நிபாக் தனத்தை விதைக்கிறது என்ற இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்களின் கருத்து நம்மை எச்சரிக்க போதுமானது,

وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ(6)

 என்ற வசனத்தில் لَهْوَ الْحَدِيثِ என்பது இசைக்கருவிகளை பெண்களை வைத்து பாடல்களை இசைப்பதை குறிக்கிறது என பெரும்பாலான முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள் – வசனம் இறங்கிய காரணத்தின் அடிப்படையில்

திருக்குர் ஆனை கேட்பதிலிருந்து மக்களை தடுப்பதற்காக  நுழர் பின் ஹாரிஸ் என்பவன் ஒரு அடிமைப் பாடகியை விலைக்கு வாங்கி வந்து மக்களை ஈர்க்க திட்டமிட்டான். அது  குறித்து இந்த வசனம் அருளப்பட்டது,

மட்டுமல்ல நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بُعِثْتُ بِكَسْرِ الْمَزَامِيرِ وَالْمَعَازِفِ كنز العمال •



நாகூர் ஹனீபாவின் பாட்ல்களிலே கூட தத்துவங்களும் கவிதை வரிகளும் மெட்டும் பிரதானமானவையே தவிர இசைஅல்ல. இசையை தவிர்த்து விட்டு கேட்டாலும் அந்தப்பாடல்கள் இனிமையானவை

எனவே இசை நமது இலட்சியத்தை மறக்கடிக்க கூடியது, வீண் பொழுது போக்கு. அதை தவிர்த்து வாழ்வதற்கு நம்மால் இயன்ற வரை முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய இளைய சமுதாயமும் உழைக்கும் நற்சிந்தனைகளை கேட்பதை விட நல்லுரைகள் கேட்பதை விட இசை மோகத்திலேயே மூழ்கித்திளைப்பதை பார்க்கிறோம். இசை எந்த அளவு நம் சிந்தனையை வசப்படுத்தி விடக்கூடியது, கவனததை ஆழ்த்தக் கூடியது என்பதற்கு நிறைய உதாரணங்கள் நம்மிடமே இருக்கிறது.

எனவே நம் பொழுதுகளை வெறுமனே போக்கடிக்கிற வீண் விளையாட்டாக இருக்கிற இசையை – நிபாக்கிற்கு காரணமாகும் என்று சொல்லப்படுகிற இசைய முடிந்த வரை புறக்கணிக்க முயற்சி செய்ய வேண்டும்.   

அதே நேரத்தில் இசைக்கருவிகள் துணை இல்லாத பாடல்களை சமுதாயம் உருவாக்கவும் பயன்படுத்தவும் அக்கறை செலுத்த வேண்டும்.

அந்தப் பாடல்கள் நமது ஈமனை வலிமைப் படுத்தும். ஒரு யா நபீ பைத்து போலவும் ஒரு புர்தா பைத்து போலவும்.





4 comments:

  1. அற்புதமான ஆக்கம் தலைவர் அவர்களே

    ReplyDelete
  2. களந்தை பீர் முகம்மது அவர்களின் களங்கம் நிறைந்த தி இந்து பத்திரிகை யில் வெளியான கட்டுரை க்கு தக்க பதிலடி. .. جزاك الله خيراً

    ReplyDelete
  3. எப்போதும் தங்களின் தொகப்பே எனக்கு பயான் நேற்றைய ஜுமுஆவிலும் கடந்த ஜுமுஆவின் தலைப்பான இனனா லில்லா வைப் பற்றி பேசும் போதும் நல்ல வரவேற்பு மக்களிடையே கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உமது ஆற்றலை மென்மேலும் அதிகரித்து தருவானாக ஆமீன்

    ReplyDelete
  4. தங்கள் சிறபான பணி தொடர வாழ்த்துகிறோம்

    ReplyDelete