வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 30, 2015

சரிந்து வரும் தொழில் தர்மம்


உலகின் பல நாடுகளிலும் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர்.

வேலைக்காரர் களிடம் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்ற சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் இது  என்பதே தொழிலாளர் தினத்தின் அடிப்டையாகும்.

தொழிளார்களின் உரிமை ,தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய அம்சங்களோடு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதனது சம்பாத்தியத்திற்கான வழிகளில் அறிவால் சம்பாதிக்கும் சேவை, பணத்தால் சம்பாதிக்கும் வியாபாரம், உடல் உழைப்பால் சம்பாதிக்கும் தொழில்.

இதில் மூன்றாம் இடத்திலிருக்கிற உடல் உழைப்பு பொதுவாக தாழ்ந்த்தாக கருத்தப்பட்டது. உடல் உழைப்புச் செய்வோர் மலிவானர்களாக நடத்தப்பட்டனர்.

உண்மையில் சம்பாத்தியத்திற்கான வழிகளில் உடல் உழைப்பு தான் உன்னதமானது.  சேவகன், வியாபாரி தொழிலாளி ஆகிய பிரிவில் தொழிலாளிதான் உன்னதமானவன்.

அவனது உழைப்பு இல்லாவிட்டால் நாம் உண்ணமுடியாது உடுத்த முடியாதும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

பணமும் அறிவும் இல்லாமலே கூட உழைப்பாளி தனது திறமையால் வாழ்ந்து விட முடியும் மற்ற இருவருக்கும் அது சாத்தியமல்ல,

மட்டுமல்ல அல்லாஹ் இந்த உலகில் வைத்திருக்கிற ரிஜ்கினுடையவும் சவுகரியங்களுடையவும் அடையாளங்களை தொழிலாளியே வெளிப்படுத்துகிறான்.

பெருமானாருக்கு  கிராமத்திருலிரு காய்கறி கொண்டு வந்து கொடுப்பார் ஒரு சஹாபி. ஒரு நாள் சந்தையில் அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பின்னாலிருந்து அவரை அணுகிய பெருமானார் அவருக்குத் தெரியாமல் அவரது முதுகை தன் நெஞ்சோடு சேர்த்துத் தூக்கிஇவரை வாங்குவோர் உண்டாஎன்று கேட்டார்கள். பெருமானாரின் நெஞ்சோடு தன் முதுகை இறுக இழைத்துக் கொண்ட அந்த சஹாபி சிறிது நேரத்திற்குப் பின்
إنما أنا كاسد –
நான் சாம்னியன் என்னை யார் வாங்குவார்? என்றார். பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.

 لست بكاسد عند الله
ஒரு முறை உழைத்து தழும்பேறிய ஒரு தொழிலாளியின் கையை தடவிய பெருமானார் (ஸல்) சொன்னார்கள்

الكاسب حبيب الله

நபிமார்கள் பலர் தொழிலாளர்களாக இருந்துள்ளார்கள்
·        இத்ரீஸ் அலை தையல்காரர்
·        தாவூத் அலை கொல்லர்
·        ஜகரிய்யா அலை ஆசாரி
·        நபிமார்களின் ஒரு பொது தொழிலாக ஆடு மேய்க்கும் தொழில் இருந்துள்ளது,
·        முஹம்மது நபி (ஸல்) அர்கள் தன் சிற்றன்னைகளின் அடுகளை மேய்த்தார்கள்.
·        சஹாபாக்களில் அலி ரலி அவர்களைப் போன்ற பலரும் கூலித்தொழிலாளர்களாக இருந்துள்ளனர்.

எந்த தொழிலையும்  - தொழிலாளரையும் மலிவாக கருத முடியாத ஒரு நிர்பந்த்ததை இது முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துகிறது.

தொழிலாளியின் சம்பாத்தியத்தை இஸ்லாம் பாராட்டுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلًا فَيَسْأَلَهُ أَعْطَاهُ أَوْ مَنَعَهُالبخاري 1377
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ وَإِنَّ وَلَدَ الرَّجُلِ مِنْ كَسْبِهِ – النسائي

பிறருக்கு நன்மை செய்ய நாடி தொழில் செய்பவரை பாராட்டிய பெருமானார்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ الْكَسْبِ كَسْبُ يَدِ الْعَامِلِ إِذَا نَصَحَ-احمد 8060
தொழில் இல்லாதவருக்கு தொழில் செய்ய ஏற்பாடு செய்த பெருமானார்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنْ الْمَاءِ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَأَتَاهُ بِهِ فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ ثُمَّ قَالَ لَهُ اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ – ابوداوود 1398
தொழிலாளியிடம் இருக்க வேண்டிய குணங்கள்
1.       விசுவாசம்
2.       திறமை

மூஸா அலை அவரகளை வேலைக்கு அமர்த்த நியாயமான இரண்டு தகுதிகளை எடுத்துக் கூறினார் சுஐப் அலை மகள்
قَالَتْ إِحْدَاهُمَا يَاأَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنْ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ(26)
(மூஸா அலை கிணற்றின் பாறையை நகர்த்தியது அவரது வலிமையை புலப்படுத்தியது. தான் முன்னே நடந்து நபியின் மகளை பின்னிருந்து பாதையை அறிவித்துக் கொண்டிருக்கச் சொன்னது அவரது நம்பகத்தன்மையை புலப்படுத்தியது. எனவே தான் அவர் சொன்னார்  الْقَوِيُّ الْأَمِينُ

திருக்குர் ஆன் வெளிப்படுத்தும் ஒரு நல்ல தொழிலாளிக்கான இரண்டு இயல்புகள் இவை;

தொழிலாளி தனது தொழிலில் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். அவரிடம் தொழிலை ஒப்ப்டைத்திருப்பவரின் நம்பிக்கைக்கு மாற்றம் செய்து விடக்கூடாது

பொருட்களை வீணடிப்பது. தரக் குறைவான பொருட்களை பயன்படுத்துவது, முழுமையாக வேலை செய்யாமல் இருப்பது, அறைகுறையாக அல்லது அறை மனதுடன் வேலை செய்வது அனைத்தும் விசுவாசக் குறைபாட்டின் அடையாளங்களாகும்.

திருக்குர் ஆன் இத்தகைய விசுவாசக் குறைபாட்டை வன்மையாக கண்டிக்கிறது,

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ(1)الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ(2)وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ(3)أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ(4)لِيَوْمٍ عَظِيمٍ(5)يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ(6)كَلَّا إِنَّ كِتَابَ الفُجَّارِ لَفِي سِجِّينٍ(7)وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ(8)كِتَابٌ مَرْقُومٌ(9)وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ(10)

لِلْمُطَفِّفِينَ என்பது அளவையில் குறைவு செய்பவர்களை மட்டுமல்ல சேவையில் குறை வைப்பவர்களையும் குறிக்கும் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.
ஒரு மனிதர் அரைகுறையாக தொழுத போது அவரைப் பார்த்து உமர் ரலி அவர்கள் وَيْلٌ لِلْمُطَفِّفِينَ(1) என்று ஓதினார்கள். (மஆரிபுல் குர் ஆன்)
மாணவர்களும் தொழிலாளர்களும் தொழுகைக்கு என்று அனுமதி பெற்றுச் சென்று விட்டு நேரம் கடத்துவது இந்த வகையை சேரும்.
அரபு நாடுகளில் தொழுகைகு செல்லும் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் முஸ்லிம் வேலைக்காரர்கள் வேண்டாம், மற்றவர்களை கொடு என்று அரபு முதலாளிகள் சிலர் ஏஜெண்டுகளை கேட்கின்றனர்.
ரமலான் மாதிரியான நேரத்தில் கருணையின் பேரில் தரப்படுகிற சலுகைகளை தொழிலாளர்கள் தவறாக பயன்படுத்தும் போது அது தீய பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மும்பயில் உள்ள ஒரு பத்ரிகை அலுவலகத்தில் பணியாற்றி அப்பாஸ் அப்பாஸீ என்பவர். அந்த பத்ரிகையில் எடிட்டேரியரில் பணியாற்றும் ஒரே  முஸ்லிம். ரமலான் நோன்பு திறக்கச் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார். அரை மணி நேர அனுமதி தரப்பட்டிருக்கிறது. சரியாக அரை மணி நேரத்தில் பணிக்கு திரும்பிவிட்ட அவர் வேலை நேரம் முடிந்த பிறகு அரைமணி நேரம் அதிகப்படியாக வேலை செய்திருக்கிறார்.  அடுத்த வருடம் நோன்பு நெருங்கும் போது உரிமையாளர் தானே கவனம் வைத்து இலகுவான வேலைகளை அவரிடம் ஒப்படைத்ததோடு தானாகவே முன் வந்து நோன்பு திறப்பதற்கான நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கொடுத்திருக்கிறார்.

தொழிலில் விசுவாசமாக நடந்து கொள்ளும் எவருக்கும் இந்த மதிப்பு கிடைக்கவே செய்யும்.

பொதுவாக இன்றைய தொழில் திறன் வளர்ச்சி பற்றிய அறிஞர்கள் சொல்கிறார்கள். நீங்கள் வாங்கும் ஊதியத்தை தாண்டியும் கொஞ்சம் உழையுங்கள். அதை உங்களது உற்சாகத்திற்காக செய்யுங்கள். ஒரு நன்றியை கூட எதிர்பார்க்காதீர்கள். கண்டிப்பாக நீங்கள் அதிக முக்கியத்துவம் பெறூவீர்கள் என்று சொல்கிறார்கள்.

முதாலாளி இல்லாத சந்தர்ப்பத்திலும் அவர் இருப்பது போலவே நடந்து கொள்ள வேண்டும் இதுவே விசுவாசத்தின் பரிபூர்ண அடையாளமாகும். 

அதே போல தொழிலாளி அவ்வப்போதைய சூழ்நிலைக்கேற்ப தகுதி படைத்தவராக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் உண்மையில் அவர் الْقَوِيُّ ஆக இருப்பார்.

அவரே தொழிலுக்கு தகுதியானவர். ஒரு ஆசிரிரோ, டைலரோ பெயிண்டரோ மெக்காணிக்கோ ஆசாரியோ இன்றைய தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள தவறி விட்டால் அவர் சிறந்த தொழிலாளி என்ற மரியாதையை பெற முடியாது.
தொழிலாளியிடம் இருக்கக் கூடாது இயல்புமுதலாளிகளின் மீது கோபம் காழ்ப்புணர்வு.

ஒரு தொழிலாளி அவருடைய உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்க உரிமை படைத்தவர் ஆவார். அதற்கு மேல் முதலாளியை அவர் நிர்பந்தப் படுத்த முடியாது.  முதலாளியைப் பார்த்து அவர் காழ்ப்புணர்வோ பொறாமையோ கொள்ளக் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது.

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ
இன்றைய நவீன் உலகில் பல இடங்களிலும் தொழில் முடங்க காரணமாக இருப்பது. முதலாளி வர்க்கத்தின் மீது தொழிலாளர்கள் குரோதம் கொள்வது தமது உழைப்பிற்கான நியாயமான கூலியை மீறி அதிகம் கேட்பதுமாகும்.

கேரளாவில் அப்பல்லோ டயர் கம்பெணி தன்னுடைய பேக்டரியில் உற்பத்தியாகும் டயர்கள் தூசு படாமல் இருப்பதற்காக அதற்கு மேலே ஒரு அலுமினியம் பாயில் பேப்பரை சுத்திக் கொடுக்க திட்டமிட்டு ஊழியர்களிடம் அதற்கு உத்தரவிட்டது, இதற்காக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின, இதனால் பல நாட்கள் கம்பெனி மூடப்பட்டது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பு 100 கோடிக்கும் அதிகமாக சென்றது.

காரல் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழி நடத்தினார்.

தொழிலாளர்கள் பசித்த புலியை போல முதலாளிகளிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்,

மனித வரலாறு என்பதே முதலாளி தொழிலாளி என்ற வர்க்கப் போராட்டம் தான் என்று கூறி தொழிலாளர்களை முதலாளிகளுக்கு நிரந்தப் பகை ஆக்கினார்.

இன்றும் சில நாடுகளில் தொழிலாளி என்ற பெயரில் அராஜக அரசுகள் நடைபெறுவதற்கு இத்தகைய சிந்தனைப் போக்கே காரணமாகும்.

இந்த சிந்தனை மனித சமூகத்திற்கு எந்த நன்மையையும் செய்ய வில்லை
வயல்களிலும் ஆலைகளிலும் வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் தூண்டி விட்டு உற்பத்தியையும் வளர்ச்சியையையும் இவர்கள் தடுக்கவே செய்தனர்.

முதலாளிகளின் மிது குரோதத்தை ஏற்படுத்தும்முறைய இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக ஏழைகளும் தொழிலாளர்களும் தம்மளவில் சிற்ப்பாக செயல் பட வே இஸ்லாம் தூண்டுகிறது.

தொழிலாளி தமது உழைப்பால் தான் எல்லாம் நடக்கிறது என்ற மமதையையும்,  உற்பத்தியாகிறவை  அனைத்தும் தன்னால் மட்டுமே நடக்கிறது என்ற தற்பெருமை கொள்வதையும் இஸ்லாம் தடுக்கிறது.

பெருமானாரின் ஒரு அறிவுரையில் இந்த முக்கிய தத்துவம் கிடைக்கிறது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَعَلَّكَ تُرْزَقُ بِهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ2267
உற்பத்தி அனைத்தும் தொழிலாளிக்கே சொந்தம் என்ற கோஷத்தை முன் வைத்துத்தான் மார்க்ஸிசமும் கம்யூனிசமும் தொழிலாளர்களை சர்வாதிகளாக்கினர்.  

அதே நேரத்தில் தொழிலாளர்களிடம் முறையாக நடந்து முதலாளிகளை வலியுறுத்துவதிலும் இஸ்லாம் குறை வைக்கவில்லை.

ஒருவரது சக்திக்குமேல் நிர்பந்தப் படுத்தக் கூடாது.  

﴿ لا يُكَلِّفُ اللَّهُ نَفْساً إِلَّا وُسْعَهَا ﴾ {البقرة: 286}.

ஒரு முதலாளி தனது தொழிலாளியிடம் தொழில் முறையை பற்றியும் கூலியைப் பற்றியும் எவ்வளவு நாசூக்காகவும் மரியாதையாகவும் கூறுகிறார் பாருங்கள்

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَةَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنْ الصَّالِحِينَ(27)
நம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிக்கு அவனுடைய வாழ்க்கை தேவையை நிறைவேற்றுவதில் முதலாளி அக்கறை செலுத்த வேண்டும் என்றார் பெருமார் (ஸல்) –  

يقول النبي صلى الله عليه وسلم « للمملوك طعامه وكسوته، ولا يكلف إلا ما يطيق؛ فإن كلفتموهم فأعينوهم، ولا تعذ بوا عباد الله خلقاً أمثالكم
அடிமைகளுக்கே இப்படி என்றால் தொழிலாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று நினைக்கிற தொழிலாளியை எச்சரித்த பெருமானார் , முதலாளிகள், செல்வமும் வேலைக்காரர்களை வைத்துக் கொள்வதும் தமது பிறவிப் பயனாக கருதிக் கொள்ளக் கூடாது, அல்லாஹ் நாடினால் அவனிருக்கிற இடத்தில் உன்னை உட்கார வைத்திருப்பான். என என எச்சரிக்கிறார்கள்.

ويقول صلى الله عليه وسلم: « إخوانكم خولكم ، جعلهم الله تحت أيديكم، فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل، وليلبسه مما يلبس، ولا تكلفوهم ما لا يطيقون؛ فإن كلفتموهم فأعينوهم »[

தொழிலாளிக்கு சம்பளம் கொடுப்பது என்பதில் அவர்களது உணவு உடை இருப்பிடம் திருமணம் வாகனம் ஆகிய தேவைகளை கவனிக்க வேண்டும் என பெருமானார் உத்தரவிட்டுள்ளார்கள்

روي عن النبي -صلى الله عليه وسلم- أنه قال:  »من ولى لنا عملاً، وليس له منزل، فليتخذ منزلاً، أو ليست له امرأة فليتزوج، أو ليست له دابة فليتخذ دابة  «.

தொழிலாளிக்குரிய கூலியை உடனடியாக் செலுத்திவிட பெருமானார் அறிவுருத்தியது வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பெரிக்கப்படுகிற செய்தியாகும்

وعن ابن عمر –رضي الله عنهما- قال: قال رسول الله –صلى الله عليه وسلم-: « أعطوا الأجير أجره قبل أن يجف عرقه »

தொழிலாளர்களின் நிர்பந்த நிலையை பயன்படுத்தி கூலியை குறைக்க கூடாது.

قال تعالى: ﴿ ولا تبخسوا الناس أشياءهم ﴾ {الشعراء: 183}،
இன்று உலகிலே நாகரீகத்தையும் மனித உரிமைகளையும் பேசுகிற பல அரசுகள் அரபு நாடுகள் உட்பட ஒரே வேலை செய்கிறவர்களுக்கு உள் நாட்டுக் காரர்களுக்கு ஒரு சம்பளம் வெளிநாட்டுக் காரர்களுக்கு ஒரு சம்பளம் என கொடுக்கிறார்கள். அப்பட்ட மான மனித உரிமை மீறலாகும். இது

பேசிய கூலியை தொழிலாளிக்கு தராமல் தாமதப்படுத்துவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

روى البخاري في صحيحه عن أبي هريرة –رضي الله عنه- أن النبي –صلى الله عليه وسلم- قال: « قال الله: ثلاثة أنا خصمهم يوم القيامة: رجل أعطى بي ثم غدر، ورجل باع حراً فأكل ثمنه، ورجل استأجر أجيراً فاستوفى منه ولم يعطه أجره
இஸ்லாம் உழைப்பாளிக்கும் முதலாளிக்கும் இடையே உள்ள தொடர்பையும் நட்பையும் மிக சீராக பராமரித்துள்ளது. ஒவ்வொருவரையும் அவரது எல்லையில் நிறுத்தி அவரவர்களுக்கான அந்தஸ்தை உறுதி செய்துள்ளது.

இந்த எல்லை மீறப்பட்டால் உலகில் ஒரு கை நியாயமற்று ஓங்கும். அது அடுத்த சில நாட்களில் மற்ற கை ஓங்குவதற்கே வழி வகுக்கும். தொழிலாளிகளின் கை இருபதாம் நூற்றாண்டில் நியாயமற்று ஓங்கியது, 21 ம் நூற்றாண்டில் மீண்டும் முதலாளி வர்க்கத்தின் கை நியாயமற்று ஓங்கி வருகிறது.

ஒரே ஒரு வித்தியாசம் முதலாளிகளின் தனி அடையாளங்களுக்கு பதிலாக இப்போது கம்பெணிகளின் அடையாளம் தலை எடுத்துள்ளது.

இன்று கொஞ்சம் அதிகம் சம்பளம் தருகிறான் என்பதற்காக படித்த இலட்சக் கணக்கானோர் கார்ப்பரேட் கம்பணிகளின் அடிமைகளாக மென்பெருள் துறையில் வேலை செய்கின்றனர், அமெரிக்கர்கள் விழித்திருக்கிற சமயத்தில் இவன் விழித்து அவர்கள் தூங்குகிற சம்யத்தில் இவர்கள் தூங்க முடியாமல் ஒரு ஆரோக்கியமற்ற சூழலில் வாழ்கின்றனர். 

இன்றைய சூழ்நிலையில் பழைய ஜமீந்தாரி மிராசுதார் முறையை விட அதிகமாகவும் கொடுமையாகவும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். ஆனல் அதைப்பற்றி கவலைப்படாமல் காசு கிடைத்தால் போதும் என காசையும் காசு வைத்திருப்பவனையும் எஜமானர்களாக உலகம் கருதிக் கொண்ட  நிலையை இன்று பார்க்கிறோம்.

கார்ப்பரேட் கம்பெணிகள் வைத்தது தான் இன்று நாடுகளுக்கு சட்டமாகி விட்டது.  மாநியத்தை குறைகடனுக்கு வட்டியை ரத்து செய்யாதேஎன்பது போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் மந்திரங்களுக்கு இன்றைய அரசுகள் தலையாட்டுகிற காரணத்தினால் தான். இன்று நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஒரு பேரணியில் நாட்டு மக்களின் கண்ணெதிரிலேயே  ஒரு விவசாயி தற்கொலை செய்த பயங்கரம் நடந்துள்ள  சூழ்நிலையில் இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியல் வாதிகள் எத்தகைய தடித்த தோளுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை மேலும் ஒரு முறை நிரூபித்த நிகழ்ச்சி அது.

தினசரி 2000 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

உலகின் முதல் தொழிலாளி விவசாயிதான்.  முக்கிய தொழிலாளியும் அவனே

கவிஞர் மேத்தா சொல்வார்

அவர்கள் சேற்றில்
கால் வைக்காவிட்டால்
நாம் சோற்றில்
கை வைக்க முடியாது.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

ஆனால் அந்த விவசாயி நம்முடைய நாட்டில் இப்போது

போதிய மகசூல் இல்லாமல், அல்லது மகசூலுக்கு போதிய விலை கிடைக்காமல் அல்லது செத்துப் போன மண்வளம் தந்த ஏமாற்றத்தினால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், நாளை கஞ்சிக்கு என்ன வழி என்று தெரியாமல் விவசாயி மிக கடுமையான ஒரு முடிவை எடுக்கிறான்.

ஆரோக்கியமான விவசாய உற்பத்தி விவசாய நலன் சார்ந்த எந்த 
விசயத்திலும் உண்மையான அக்கறை செலுத்தாத நாடுகளில் ஒன்றாக நம்முடைய நாடு மாறிவருகிறது. கார்ப்பரேட் கம்பணிகள் மக்களுக்கு எதிராக உத்திகளை சொல்லிக் கொடுக்கின்ற, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இலைகளுக்கு தலையாட்டும் ஆடுகளை போல் தலை யாட்டுகிறார்கள். இதனால் மக்கள் பலியாகிறார்கள்.

இஸ்லாம் கூறுவது போல தொழில் தர்மம் என்பது முதலாளி தொழிலாளி இரு தரப்பிற்குமானதாக அமைய வேண்டும். இல்லை எனில் சமாதான சகவாழ்வுக்கான வாய்ப்புக்கள் குறையவே செய்யும்.
 







No comments:

Post a Comment