வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 23, 2015

நவீனம் நினைவூட்டும் நிஜங்கள்

ரஜப் மாதம் பிறந்து விட்டது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ -  احمد 222
دعاء النبي صلى الله عليه وسلم بالبركة في هذه الأشهر الثلاثة يدل على فضلها . وفي تخصيص رمضان بالدعاء منفردا وعدم عطفه على رجب وشعبان دلالة على زيادة فضله 

ஹதீஸ் கலையின் முத்திரையனவர் என்று இப்னுஹஜர் அஸ்கலானி பாராட்டுகிற இப்னு ரஜப் கூறுகிறார்

قال ابن رجب : فيه دليل ندب الدعاء بالبقاء إلى الأزمان الفاضلة لإدراك الأعمال الصالحة فيها فإن المؤمن لا يزيده عمره إلا خيرا
துஆ ஓதுவதோடு நின்று விடாமல் அமல்களில் சற்று கவனம் செலுத்துவோம்.
·         ஜமாத் தொழுகை
·         சுன்னத்தான தொழுகைகள்
·         கடந்த வருடம் நோன்பு கழாவாகி இருந்தால் அதை நிறைவேற்றி முடிப்பது.
·         குர் ஆன் ஒத பயிற்சி எடுப்பது
·         படிப்பதற்கான புத்தகங்களை சேகரிப்பது
·         ரமலானுக்கு தயாராகிறோம் என்ற நிய்யத்தில் ஏதேனும் நல் அமல்களை அதிகப்படுத்திக் கொள்வது, அல்லது அக்கறையுடன் திட்டமிடுவது.

அல்லாஹ்வை நோக்கி  - அவனது அருளுக்கு ஆசைப்படவும் – அவனது தண்டனைகளுக்கும் கோபத்திற்கு அஞ்சி நடக்கவுமான உணர்வுகளை இப்புனித மாதங்கள் நமக்கு  ஏற்படுத்தட்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக!

நவீன் வசதிகளும், அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்பக் கண்டு பிடிப்புகளும் அல்லாஹ் , ரஸூல் , தீன் , மறுமை என்பது போன்ற சிந்தனைகளை பின்னுக்கு தள்ளி விட்டது என சிலர் நினைக்கிறார்கள்,

உண்மை அது வல்ல.
நாம் வாழும் நவீன உலகு அல்லாஹ்வை மறுமை நாளை அஞ்சி  மார்க்கத்தின் வழிப்படி நடப்பதன் நிர்பந்தத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.

19 ம் நூற்றாண்டின் மத்தியில் எந்த ஒன்றையும் அறிவியல் அடிப்படையிலேயே ஒப்புக் கொள்ள்ள முடியும் என்ற கருத்தோட்டம் உருவானது, இந்த சிந்தனையின் தொடக்கத்தில் ஆன்மீக கருத்துக்கள் கேலி செய்யப்பட்டன. விஞ்ஞானம் இறுதி தீர்வாக கருதப்பட்டது.

விஞ்ஞானம் வளர வளர இந்த உலகம் அதில் காணும் படைப்புக்களை பற்றி ஆச்சரியம் , தர்க்க விதிகளுக்கு பொருந்தி வராத அதன் இயக்கம் அறிவாளிகளை மீண்டும் இறைச்  சிந்தனையை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. இப்போதைய் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தத்துவங்களும் மார்க்கத்தின் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்தி அல்லாஹ்வை நோக்கி அதிகம் திரும்புமாறு நம்மை தூண்டு கின்றன.

அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானி ஞாயிற்றுக்கிழமை பைபிளை கையில் தூக்கிக் கொண்டு செல்வதை பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் அறிஞர் பார்த்து, ஐயா ! விஞ்ஞானியான நீங்கள் சர்ச்சுக்கு செல்கிறீர்களா ? என்று கேட்டார். அதற்கு அந்த விஞ்ஞானி சொன்னாராம்.
நான் விஞ்ஞானியாக் இருப்பதனால் தான் சர்ச்சுக்கு செல்கிறேன்

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்த அறிவு ஆச்சரியமானது, குறுக்குச் சிந்தனைகளும் பிடிவாதப் போக்கும் இல்லாமல் அதை அதன் போக்கில் விடுவோம் என்றால் அது செக்கில் கட்டப்பட்ட மாடு சுற்றி வருவது போல அல்லாஹ்விலிருந்து புறப்பட்டு அல்லாஹ்விடமே வந்து நிற்கும்.

சரியான அறிவியல் வளர்ச்சியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இந்த வசனங்கள் விளக்கு கின்றன,

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ(190)الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ(191)رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلْ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ(192)رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ(193)رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ(194)

அறிவாளிகள்
·         இந்த உலகை படைத்த ரப்பை ஒத்துக் கொள்வார்கள்.
·         அவனை சதா துதிப்பார்கள்
·         இந்த உலக்ம் வீணுக்கு படைக்கப்பட வில்ல என சான்றளிப்பார்கள்.
·         அல்லாஹ்வின் வல்லைமையை பிரகடனப்படுத்தி அவனையே அஞ்சி  நடப்பார்கள். அவனிடமே பாதுகாப்புக் கேட்பார்கள்.
·         அவனது அருளைக் கோருவார்கள்.
·         கேவலப்படுத்தி விடாதே என முறையிடுவார்கள்

இது அத்தனையும் இந்த வசனம் வெளிப்படுத்துகிற சிந்தனைகள்.

அறிவியல் அல்லாஹ்வை அஞ்சவும் அவனிடம் பணியவும் அவனை நோக்கி மண்டியிடவுமே கொண்டு போய்ச் சேர்க்கிறது,

இந்த ஆயத் இறங்கியதற்கான சூழ்நிலையை பார்த்தால் இந்த அறிவுப்பூர்வாக அணுகும் சிந்தனை எந்த அளவு அல்லாஹ்வை நெருங்குவதற்கு முக்கியமானது எளிமையானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

குறைஷிகள் யூதர்களிடம் சென்று இறைவனை  எப்படி நம்பினீர்கள் என்று கேட்டார்கள் எங்களுக்கு மூஸா வின் கைத்தடியும் அவரது கையும் சாட்சியளித்தன என்றார்கள் யூதர்கள்.
குறைஷிகள் கிருத்துவர்களிடம் சென்று  நீங்கள் எப்படி இறைவனை  நம்பினீர்கள் என்று கேட்டார்கள்
ஏசு பிறவிக்குருடனுக்கு பார்வை கொடுத்தார் குஷ்ட நோயாளியை குணப்படுத்தினார், மரித்தவனை எழுப்பிக் காட்டினார், என்றார்கள் கிருத்துவர்கள்.

அதே குறைஷியர் பெருமானாரிடம் வந்து நாங்கள் இறைவனை நம்ப முஹம்மதே சபா மலையை தங்கமாக மாற்றுங்கள் என்று கேட்டனர் அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான், இறைவனை நமபிக்கை கொள்ள உலகின் அமைப்பை படைப்புக்களை சிந்தியுங்கள் அது போதும் என்றான், (தப்ஸீர் மனார்)

மூஸா (அலை)  அதிச்யமான கைத்தடியை விட ஈஸா அலை அவர்கள் வெளீப்டுத்தி அற்புதங்களை விட அறிவியல் பூர்வமான சிந்தனையே இறைவனை அறிந்து கொள்ள சிறந்த வழி என்பதை இந்த வசனம் புரிய வைத்தது,

قد أخرج الطبراني ، وابن أبي حاتم ، عن ابن عباس قال : " أتت قريش اليهود ، فقالوا : بم جاءكم موسى من الآيات ؟ فقالوا : عصاه ، ويده بيضاء للناظرين ، وأتوا النصارى ، فقالوا : كيف كان عيسى ؟ قالوا : كان يبرئ الأكمه والأبرص ، ويحيي الموتى ، فأتوا النبي - صلى الله عليه وسلم - فقالوا : ادع لنا ربك يجعل لنا الصفا ذهبا ، فدعا ربه ، فنزلت هذه الآيةإن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب فليتفكروا فيها .

எனவே விஞ்ஞானம் வளர மார்க்கம் சொன்ன அடிப்படை தத்துவங்களை இன்னும் ஆழமாக நம்ப வேண்டியது நம்முடைய கடமையாகிறது.

உங்களது ஒவ்வொரு செயல்களும் உங்களை அரியாமல் கண்காணிக்கடப்படுகின்றன் என மார்க்கம் சொல்லுகிறது.

சமீபத்தில் நீங்கள் தொலைக் காட்சியில் அந்த விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள்

ஒரு கடையில் ஒரு இளம் பெண் காய்கறி வாங்கிக் கொண்டிருப்பாள், ஒரு இளைஞன் தானும் காய்கறி வாங்குவது போல அவளை சீண்டிக் கொண்டிருப்பான், இதை அறிந்து கொண்ட கடைக்காரன் சந்தையின் ஒரு உயரமான இடத்தில் மறைவாக மாட்டப்பட்டிருக்கிற சி சி டி வி காமிராவை இளைஞனுக்கு சுட்டிக்காட்டி சொல்லுவான் ஊப்பர் வாலா தேக் ரஹாஹே!

ஞானிகள்முராகபாஎன்று சொல்லுகிற தத்துவத்தை எவ்வளவு எளிமையாக ஒரு காய்கறிக்கடைகாரர்  நாபகப்படுத்தி விடுகிறார் பாருங்கள்.

சி சி டி கேமிரா என்ற ஒன்று
·         நாடாளுமன்றத்தில் தூங்குகிறவரை
·         சட்ட மன்றத்தில் செல்போனில் ஆபாசக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருபவனை
·         இலஞ்சம் வாங்குகிற அதிகாரியை
·         டோல் கேட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிற நாடாளுமன்ற உறுப்பினரை
·         கர்ண கொடூர கொலைகளை செய்த அரசியல் குற்றவாளின் ஒப்புதல் வாக்கு மூலத்தை
·         பொது இடத்தில் தவறாக நடந்து கொள்கிற பிரமுகரை

எப்படி அடையாளப்படுத்தி உலகின் முன் கேவல்ப்படுத்தி விடுகிறது?

சி சி டி கேமிராவுக்கு அரபியியில் முராகிப் என்று தன் சொல்கிறார்கள்.

கேமரவின் பார்வை எனபதை கூட நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும், ஒரு நமது கண்ணில் தெரிகிற மாதிரி அல்லது தெரியாத மாதிரி மறைக்கப்பட்டிருக்கிற கேமிராக்கள் மட்டுமல்ல வெகுதூரத்தில் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கிர சாட்டிலைட் காமிராக்களும் நம்மை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

நீங்கள் கூகுள் மேப்பில் உங்கள் வீட்டை வெளியே நிறுத்தப் பட்டிருக்கிற காரைப பார்த்து விட முடியும். இன்னும் அதிகம் காசு கொடுத்தீர்கள் என்றால் இப்போது ஓடுகிற வண்டிகளைக் கூட பார்க்க முடியும், இவ்வாறு முழு பூமியும் காமிரா கண்காணிப்பில் இருக்கிறது

உங்களை கேமரா பார்த்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் கண்காணிக்கபடுகிறீர்கள் என நவீன் கட்டிடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள் சொல்லுகின்றன,

திருக்குர் ஆன் சொல்லுகிறது

  • ·        وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَقِيباً
  • ·    يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
  • ·        أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى
  • ·        فَإِنَّكَ بِأَعْيُنِنَا
  • ·        وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُ

 அல்லாஹ் நம்மை எங்கும் எப்போதும் இடைவெளி இல்லாது கண்காணித்துக் கொண்டிருக்கிறான், அவனது பார்வையிலிருந்து எது வும் தப்ப முடியாது,

கடும் இருட்டில் கரும் பாறையில் ஊரும் எறும்பு கூட அல்லாஹ்வின் பார்வையிலிருந்து தப்ப முடியாது என ஆன்மீக அறிஞர்கள் அடிக்கடி செல்வது விளையாட்டல்ல, நூற்றுக் நூறு சத்தியம்,

கேமிராக்கள் பார்க்கிறதே என எச்சரிக்கையாக இருக்கிற அல்லாஹ் பார்க்கிறான் என்பதில் இன்னும் அதிக எச்சரிக்கை அடைய கடமை பட்டிருக்கிறோம்.

முன்னொரு காலத்தில் வனாந்திரக் காட்டில் யாரு மற்ற திட்டில். அல்லது பரந்த வயலில் பார்வைக்கு அப்பாலில் உள்ள திட்டில் நான் இருப்பதை யார் பார்க்க முடியும் என்று ஒரு வன் நினைத்திருந்தால் அவன் அப்பாவி. இப்போது யாராவது அப்படி நினைத்தால் அவனை முட்டாள் என்றல்லவா சொல்லுவோம்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி இறைநம்பிக்கையை எப்படி நியாயபடுத்தி விடுகிறது பாருங்கள்!

2

அதே போல் இன்னொன்று,, மனிதன் செய்கிற எந்த செயலும் பதிவு செய்யப்படுகிறது, எந்த அழிப்பானை பயன்படுத்தியும் அதை அழித்து விட முடியாது அல்லாஹ்விடம் அவை சாட்சி சொல்ல வந்து விடும் என்று மார்க்கம் சொல்லுகிறது, உன்னிடமிருந்தே உனக்கு எதிரான் சாட்சிகள் கிடைத்து விடும் என்று மார்க்கம் எச்சரிக்கிறது,

يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون ( 

عن أبي سعيد ، عن رسول الله صلى الله عليه وسلم : " إذا كان يوم القيامة عرف الكافر بعمله ، فجحد وخاصم ، فيقال له : هؤلاء جيرانك يشهدون عليك ، فيقول : كذبوا ، فيقول : أهلك وعشيرتك ، فيقول : كذبوا ، فيقول أتحلفون؟ فيحلفون ، ثم يصمتهم الله ، وتشهد ألسنتهم ثم يدخلهم النار "

நான் தடயங்களை முற்றாக அழித்து விட்ட நிலையில் எனது குற்றத்தை எப்படி கண்டு பிடிக்க முடியும். என அன்றைய காலத்தில் தவறு செய்கிறவர்கள் நினைத்திருக்கலாம், இப்போது நினைக்க முடியாது,

காரணம் எந்த தவறும் பதியப்பட்ட நிலையில் அதை அழித்து விட்டால் மீட்டுக் கொண்டு வந்து விட முடியும் என்பதற்கு விஞ்ஞானம் சாட்சியாகிறது.

நாம் கம்யூட்டரில் பதிகிற செய்திகளை தெரியாமல் அழித்து விட்டோமானால் கவலை இல்லை அதை ரிகவரி சாப்ட்வேரில் மீட்டெடுத்து விடலாம் என கணிணி வல்லுனர்கள் சொல்கிறார்கள், அவ்வாறு மீட்டும் தறுகிறார்கள்

மெமரியில் பதிவாகிற எந்தச் செயதியும் அடியோடு அழிவதில்லை என்கிறார்கள் அவர்கள்.

சமீபகாலமாக நீங்கள் ஒரு எச்சரிக்கையை கேள்விப்பட்டிருப்பீர்கள், தற்போது கேமரா வைத்த போன்களின் பழக்கமும் புழக்கமும் அதிகமாகிவிட்டது, எதெற்கெடுத்தாலும் ஒரு ஷாட் எடுக்கிற பழக்கம் வந்து விட்டது. ஜனாஸாக்களை கூட படம் எடுத்து பொது தளத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சிலர் தங்களது மனைவியருடன் தனிமையில் இருக்கும் காட்சிகளை அல்லது கவர்ச்சியாக தெரிகிற்  காட்சிகளை படம் எடுத்து விட்டு பிறகு அழித்து விடுகிறார்கள்,

விஞ்ஞானம் எச்சரிக்கிறது. ஒரு முறை எடுத்தது எடுத்தது தான், அதை நீ அழித்து விட்டதாக நினைத்தாலும் கூட அது அழியாது, ரிகவரி சாப்ட்வே கொடுத்து அந்தப் படங்களை மீள் உருவாக்கம் செய்து விட முடியும்,

விஞ்ஞானம் எந்த அளவு எச்சரிக்கிறது உஙகளது ஸ்மார்ட் போன்களை பிறருக்கு விற்காதீர்கள் என்னும் அளவுக்கு எச்சரிக்கிறது.

நமது எந்தச் குற்றமும் அழிந்து விடுவதில்லை, இந்த உலகிலேயே அதன் அடையாளம் தங்கி நின்று விடுகிறது

சமீபத்தில் இன்னொரு செய்தியும் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது,
90 வய்தை கடந்த ஒரு அரசியல் வாதி கவர்ணராக இருந்த நிலையில் அவரது காமக்களியாட்டங்களால் பதவியை மட்டுமல்ல மரியாதையையும் இழந்தார், இரகசியமாக பிடிக்கப் பட்ட படங்கள் அவரது நடவடிக்கையை வெளிப்படுத்தி விட்டது. கவர்ணராக இருந்தவருக்கே இந்நிலை.

அப்போது அவர் விசயத்தில் இன்னொரு புயல் கிளம் பியது .  ஒரு பெண்மணி 25 வயதுடைய தனது மகனை அவரது மகன் என்று வாதிட்டார், அரசியல் வாதி மறுத்தார், இறுதியில் மரபணு பரிசோதனை முடிவில் மருத்துவ அறிக்கை அவருடைய மகன் தான் அந்த இளைஞன் என்று அறிவித்தது,  திருச்சியை சார்ந்த பிரபல அரசியல் பிரமுகரின் மகன் ஒரு பெண்ணிடம் தவறாக நட்ந்து கொண்ட பிறகு அந்த குற்றத்தை - அவளின் குழந்தைக்கு தந்தை - என்பதை மறைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதை பத்ரிகை செய்திகளில் படித்திருப்பீர்கள்.

எந்தக் குற்றத்தையும் மறைத்து விட முடியாது

தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிற நார்கோ அனலிஸ்ட் பரிசோதனை குற்றவாளியை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவனது நாவாலயே குற்றங்களை கண்டு பிடிக்கிற வசதியை வழங்கியிருக்கிறது. அஜ்மல் கசாபிடம் நார்கோ அனலிஸ்ட பரிசோதனை செய்த போது தனக்கு ஜிஹாதைப் பற்றி யோ அது சமப்ந்தமான குர் ஆன் வசனங்களோ தெரியாது என்று சொன்னதாக ஒரு செய்தியை ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அல்லாஹ் நமது நாவையே நமக்கு எதிராக பேச வைப்பான் என்பதை நம்புவதற்கு இந்தக் காலத்தில் நமக்கு அதிக நேரம் பிடிக்காது.

3
பெருமானார் (ஸ்ல்) அவர்கள் சொன்னார்கள் :

عن النبي صلى الله عليه وسلم قال إذا قام أحدكم إلى الصلاة فإن الرحمة تواجهه فلا يمسح الحصى

தொழுகையில் அல்லாஹ்வின் அருள் உங்களை நோக்கி வருகிறது. உங்களது கவனம் அவனை நோக்கி இருக்கட்டும், என்றார்கள் பெருமானார்

ஒரு பயானில் அல்லாமா துல்பிகார் சாஹிப் மிக அருமையான ஒரு உதாரணம் சொல்லி இதை புரிவைத்தார்,

ஒருவர் நம்மை செல்போனில் அழைக்கிற போது அவரது போனிலிருந்து சிக்னல் ஆகாயத்திலிருக்கிற சாட்டிலைட்டிற்கு சென்று அங்கிருந்து நாது போனிற்கு வருகிறது, அப்போது நமது போன் அந்த சிக்னலை ஏற்கிற வகையில் இருக்க வேண்டும். நமது போன் சுவிடசு ஆபாக இருந்தாலோ தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தாலோ அவரது அழைப்பை நாம் பெற முடியாது,  அது போலத்தான் அல்லாஹ்வோடு தொடர்பில் இருந்தால் தான் அவனது ரஹ்மத்தை பெற முடியும்

நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்ற வாசகத்தை கேட்கும் பொழுதெல்லாம் துல்பிகார் சாஹிபின் இந்த அறிவுறை என் நினைவில் வந்து போகும்.

நவீன அறிவுலகம் தனது அத்தனை கண்டுபிடிப்புக்களையும் தாண்டி மன அமைதிக்கும் நிம்மதியான வாழ்வுக்கும். இறைவன் என்ற மகத்தான் சக்தியிடம் மண்டியிடவே நம்மை போதிக்கிறது.

இறைவனுக்கு கட்டுப்படுவது என்பது ஏதோ ஒரு தினத்தில் ஆலயத்திற்கு சென்று வருவது மாத்திரமல்ல. எப்போதும் அவனது உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதும் அவனது தூதரின் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப செயல்படுவதுமாகும். 

ரஜபின் புனித நிமிடங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிற நாம் நவீன வசதிகளும் கண்டுபிடிப்புக்களும் நம்மை திசை திருப்பி விடாத வகையில் இறைவனை நோக்கி கவனத்தை திருப்பி வாழ்வோம்.

இன்றைய உலகில் எந்த மனிதனுக்கும் கிடைக்கிற உண்மையான பேரின்பம் அல்ஹம்து லில்லாஹ் என்பதை உணர்ந்து சொல்லும் பாக்கியம் கிடைப்பதாகும். எவருடைய உள்ளம் இந்த ஆன்மிக வெளிச்சத்தால் நிறைகிறதோ அந்த உள்ளம் வெற்றியடைந்து விட்டது, அது வே உண்மையான அறிவியலின் வெளிச்சமாகும்.

ஒரு பத்ரிகையில் இப்படி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
الله أكبر في سماء لندن
இலண்ட வான் வெளியில் அல்லாஹு அகபர் என்ற தலைப்பில் இலண்டனின் பிரதான பகுதியில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பள்ளிவாசலிலிருந்து தினசரி ஐந்து முறை சொல்லப்படுகிற பாங்குச் சத்ததினால் இலன்டன் வான் வெளியை தக்பீரின் சத்தம் நிறைக்கிறது என்று அந்தக் கட்டுரை பேசுகிறது.

ஒரு அறிஞர் சொன்னார் அல்லஹ் அக்பர் என்பது மிக சத்தியமான வார்த்தை அது இலண்டன் வான்வெளிறை நிறைக்கிறது என்பது பெருமைதான், அதே நேரம் இந்தச் சொல்  நமது இதயத்திற்குள் சென்றதா என்பதை யோசிக்க வேண்டும் என்றார்,

புனித மாத்ததிற்கு தயாராகி நிலையில் நமது மனோ நிலையில் இன்றை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிற  சத்திய மார்க்கத்தின் சங்க நாதக் கருத்துக்கள் நம் உள்ளத்தை நிறைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக!

  















3 comments:

  1. விஞ்ஞானம் மெய்ப்பிக்கும் ஆன்மீகக் கருத்து அருமை ஹஜ்ரத்.அல்ஹம்துலில்லாஹ்.ஆன்மீக வெளிச்சம் தொடரட்டுமாக. ஆமீன்.

    ReplyDelete
  2. விஞ்ஞானம் மெய்ப்பிக்கும் ஆன்மீகக் கருத்து அருமை ஹஜ்ரத்.அல்ஹம்துலில்லாஹ்.ஆன்மீக வெளிச்சம் தொடரட்டுமாக. ஆமீன்.

    ReplyDelete
  3. விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் கலந்த கலவை
    மிக அருமை
    இந்த 21ம் நூற்றாண்டில் இதுபோன்ற கருத்துக்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தருவானாக!
    ஆமீன்

    ReplyDelete