வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 05, 2016

இமாம் ஷாபிஈ ரஹ் - சோதனையிலும் சாதானை

لقد خلقنا الإنسان في أحسن تقويم                                                                                         இதே போன்றதொரு ரஜ்ப் மாதத்தின் 30 வது பிறையில் ஒரு வியாழன் மஃரிபு தொழுகைக்குப் பிறகு  இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் வபாத்தானார்கள். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிற்கு எகிப்தில் அடக்கம் செய்யப் பட்டார்கள்.
இஸ்லாம் கண்ட பேரறிஞர்களின் வரிசையில் சட்ட மேதையாக பெரும் புகழ்பெற்றவர்கள் இமாம் ஷாபி (ரஹ்)
எதீமாக பிறந்த போதும் பிறர் எட்ட முடியாத உயரத்தை எட்டிப்பிடித்த அவர்களது வரலாற்றில் நமக்கு நிறையப்பாடங்களும் படிப்பினைகளும் இருக்கிறது;
இன்றைய ஜும் ஆவில் இமாம் ஷாபி ரஹ அவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பார்க்க இருக்கிறோம்.  
இமாம் ஷாபியின் வரலாற்றை அவரது ஐந்தாவது பாட்டனாரிலிருந்து தொடங்குவது சிறப்பாக அமையும்.
இமாம் ஷாபியின் பாட்டனார் பத்று யுத்தத்தில் காபிர்களின் அணியின் கொடியையை சுமந்திருந்தார்.
பத்ரு யுத்தத்தில் இஸ்லாத்திற்கு பயன்பட மாட்டார்கள் என்ற நிலையிலிருந்த எதிரிகளில்  அழிக்கப்பட வேண்டியவர்கள் பெரும்பாலோனோரை அல்லாஹ் அழித்தான். .
ஒரு உதாரணம் பாருங்கள்.
இஸ்லாத்தின் பெரிய எதிரிகளில் ஒருவானாக இருந்தவன் உக்பத் பின் அபீமுஈத்.
அபூஜஹ்லின் உத்தரவின் பேரில் பெருமானார் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்த போது முதுகில் நாற்றமெடுத்த ஓட்டகையின் குடலை தூக்கி வந்து போட்டவன்.
பத்று யுத்தத்தில் மக்காவின் பெரும்பாலான தலைவர்கள் கொல்லப்பட்ட போதும் உக்பா கொல்லப்படாமல் தப்பினான். முஸ்லிம்கள் அவனை சிறை பிடித்தார்கள். ஆனாலும் மதீனாவிற்கு திரும்பும் வழியில் அவனை கொன்றுவிடுமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிடவே . அவன் கொல்லப்பட்டான்.
இவ்வாறு முஸ்லிம்களின் பெரும்பாலான எதிரிகள் கொல்லப்பட்ட நிலையில் முஸ்லிம் உம்மத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என அல்லாஹ்வால் தீர்மாணித்திருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
அவ்வாறு காப்பாற்றப்பட்டார் காபிர்களின் கொடியை தாங்கி நின்ற – ஸாயிப்
சாதாரணமாக கொடி பிடித்திருக்கிறவர்கள் தான் யுத்த களத்தில் குறிப்பாக கொல்லப்படுவார்கள், முதல் பலியாவார்கள்.
ஆனாலும் பத்ரில் கொடி பிடித்திருந்த ஸாயிபை அல்லாஹ் காப்பாற்றினான்.

وكان حامل لوائهم السائب بني يزيد ثم أسلم رضي الله عنه وهوالأب الخامس للإمام الشافعي رضي الله عنه

பின்னர் அவர் இஸ்லாத்திற்கு வந்தார்.  அவரது தலைமுறையில் ஐந்தாவது பேரராக இமாம் ஷாபி ஹிஜ்ரீ 150 ல் பிறந்தார்.
இமாம் ஷாபியின் குலம் குறைஷிக் குலம் என்றாலும் அவரது முன்னோர்கள் பாலஸ்தீனிற்கு குடிபெயர்ந்து சென்ற காரணத்தால்
இன்றைய பாலஸ்தீனத்தின் முஸ்லிம்களின் சோதனைகளமான காஸா பகுதியில் இமாம் ஷாபி பிறந்தார்.
   وهو مجدد الإسلام في القرن الثاني الهجري كما قال بذلك أحمد بن حنبل
இமாம் ஷாபியுக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் முஹம்மது என்பதாகும் தந்தையின் பெயர் இத்ரீஸ். அதனால் இமாம் ஷாபியின் இயற்பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் என்பதாகும்.
இமாம் ஷாபியின் வமிசத் தொடர் இது
أبو عبد الله، محمد بن إدريس بن العباس بن عثمان بن شافع بن السائب بن عبيد بن عبد يزيد بن هاشم بن المطلب بن عبد مناف   بن قصي  بن كلاب  بن مرة  بن كعب  بن لؤي بن غالب بن فهر بن مالك بن النضروهو قريش بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس بن مضر بن نزار بن معد بن عدنان الشافعيّ المطَّلِبيّ القرشيّ

இந்த வகையில் இமாம் ஷாபி குறைஷி குலத்தவராகவும் பெருமானாரின் குடும்பத்தவராகவும் ஆகிறார்.
முப்பாட்டனாரின் பெயராகிய ஷாபி (ரலி) யுடன் இணைத்து ஷாபியீ என்று அழைக்கப்படுவது பிரபலாமாகிவிட்டது.
இமாம் ஷாபி கைக்குழந்தையாக இருந்த போதே தந்தையை இழந்தார். அதனால் அவ்ரது தாயார் இரண்டு வயதில் இமாம் ஷாபியை அழைத்துக் கொண்டு பூர்வீக நிலமான மக்காவிற்கு திரும்பினார்கள்
இமாம் ஷாபியை உருவாக்கியதில் அவரது தாயிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இமாம் ஷாபியின் குடும்பம் பெரும் சிறப்புப் பெற்ற குடும்பமாக இருந்த போதும் மிக்க ஏழ்மை நிலையில் இருந்தது.
குடும்பத்தின் சூழல் மிக நெருக்கடியாக இருந்த நிலையிலும் தனது குழந்தை சிறந்த அறிஞராக வரவேண்டும் என்ற கனவு அந்த தாயிக்கு இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு தமது குழந்தைகள் எப்படி வர வேண்டும் என்ற மேலெண்ணம் இருப்பதில்லை . அது தானாக வளர்ந்து தனக்கான வழியை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. .
இமாம் ஷாபியின் தாயுக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது, அப்படியே வளர்ந்தார்.
எதிலும் தீட்சண்யத்துடன் ஈடுபடும் இயல்பு இமாம் ஷாபியிடம் சிறுவயதிலிருந்தே இருந்தது.
இமாம் ஷாபி தனது ஏழாது வயதில் திருக்குர் ஆனை மனனம் செய்தார்கள்
பிறகு ஹதீஸ்களை மன்னம் செய்தார்.
பிறகு அம்பு எறிவதில் தேர்ச்சி பெற்றார்கள்
وأقبل على الرمي ، حتى فاق فيه الأقران ، وصار يصيب من عشرة أسهم تسعة ، ثم أقبل على العربية والشعر ، فبرع في ذلك وتقدم . ثم حبب إليه الفقه ، فساد أهل زمانه .
பிறகு அரபு இலக்கியத்தில் தேர்ச்சி பெற கிராமங்களுக்குச் சென்றார்
ஆசிரியர் வெளியே செல்லும் போது மாணவர்களை கவனித்துக் கொள்வதே  - கட்டணம்
قال الحميدي : سمعت الشافعي يقول : كنت يتيما في حجر أمي ، ولم يكن لها ما تعطيني للمعلم ، وكان المعلم قد رضي مني أن أقوم على الصبيان إذا غاب ، وأخفف عنه . 

அரசகூடத்திற்கு சென்று மட்டைகளை அன்பளிப்பாக பெற்றுவருவேன் – இமாம் ஷாபி

وعن الشافعي قال : كنت أكتب في الأكتاف والعظام ، وكنت أذهب إلى الديوان ، فأستوهب الظهور ، فأكتب فيها 

இளமைக் காலத்தில் ஏழ்மை வாழ்வு என்பது பிற்காலத்தில் பெருமனிதர்களுக்கு மிகவும் உதவியாகவும் அவர்களை பக்குவப்படுத்துவதாகவு இருந்திருக்கிறதும் இமாம் ஷாபியிக்கும் அப்படித்தான்.
இமாம் ஷாபியின் கல்வித்தேவைக்காக அவரது தாய் பழைய காகிதங்களை பொறுக்கிக் கொடுத்தார் என ஒரு வரலாறு சொல்கிறது.
சமீபத்தில் அரபு நாட்டில் ஒரு கதை பிரபலமாக பேசப்பட்டது,
ஒரு பெரும் பணக்காரர் மகனை வெளிநாட்டில் படிக்க அனுப்பினார் . அவர் அங்கு சென்று சேறுவதற்கு முன்னரே ஒரு விலை உயர்ந்த காரை வாங்கி அனுப்பி விட்டார். விலை உயர்ந்த காரில் கல்லூரிக்கு சென்ற மாணவருக்கு கல்லூரியின் எளிமையும் ஆசிரியர்கள் கூட பேருந்தில் வந்து இறங்குவதும் ஆச்சரியமளித்தது. தான் விலை உயர்ந்த காரில் வந்திறங்குவது வெட்கத்தையளித்தது, தந்தைக்கு கடிதம் எழுதினார் தாந்தையே இந்தக் கல்லூரியில் படிக்கிறவர்களும் ஆசிரியர்களும் பஸ்ஸில் வந்து இறங்குகிறார்கள். எனக்கு காரில் செவது சிரமமாக இருக்கிறது என்று.
அடுத்த நாள் தந்தையிடமிருந்து கடிதம் வந்தது, மகனே உனது கடிதம் கிடைத்தது, உனக்கு தனியாக பஸ் வாங்கி அனுப்பியிருக்கிறேன். அதை பயன்படுத்திக் கொள் மகிழ்ச்சியாக இரு!
இப்படி பெற்றோர்கள் இருக்கிற காலத்தில் இமாக் ஷாபியின் வாழ்க்கையயும் அவரது தாயாரின் நடை முறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நமது பிள்ளை நல்ல கல்வியை கற்க வேண்டும் என்ற ஆசை பெற்றோருக்கு வேண்டும். தமது அந்தஸ்தின் அடையாளத்தை பிள்ளைகள் மீது சுமத்தி அவர்களை வழி திருப்பி விடும் வேலையை பெற்றோர்களே செய்யக் கூடாது.
மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன், இன்று இப்போது யோசித்துப் பாருங்கள் இமாம் ஷாபியின் அந்தஸ்து என்ன? அவரது சட்ட விளக்கங்களை பின்பற்றும் மக்கள் எத்தனை கோடிப்பேர். ஒரு நாளில் எத்தனை ஆயிரம் தடவை – எத்தனை ஆயிரம் இடங்களில் அவருடைய பெயரை மரியாதையோடும் துஆ வோடும் சொல்கிறார்கள்
மறந்து விடாதீர்கள் இமாம் ஷாபியும் அவரைப் போலவே இமாம் அஹ்மதுவும் எத்தீம்கள்.
வாழ்க்கையில் இத்தகைய மாபெரிய அந்தஸ்தை அவர்கள் தமது இயல்புகளாலும் குணத்தாலும் பெற்றார்கள்.
ஷாபியின் தாயார் அவரை தேவையான  -நன்மையான விசயத்தில் மட்டுமே கவனம் செலுத்த சிறு வயது முலே துண்டினார். கல்வியின் மீது இன்பத்தை ஏற்படுத்தினார் எனது தாய்
وجعلت أطلب العلم ، فتقول لي : لا تشتغل بهذا ، وأقبل على ما ينفعك ، فجعلت لذتي في العلم .

அழுவதற்காக இமம் ஷாபியின் கிரா அத்தை கேட்க திரண்ட மக்கள்.
قال ابن نصر : كنا اذا اردنا ان نبكي قال بعضنا لبعض : قوموا الى هذا الفتى المطلبي يقرأ القران ، فاذا أتيناه (يصلي في الحرم ) استفتح القران حتى يتساقط الناس ويكثر عجيجهم بالبكاء من حسن صوته فاذا راى ذلك امسك من القراءة .
இமாம் ஷாபி 14 வயதில் மதீனாவில் இமாம் மாலிக்கைப் பற்றியும் அவர்களது மு அத்தாவைப் பற்றியும் கேள்விப்பட்டார்.
இமாம் ஷாபியின் தாயார் மகனை இமாம் மாலிக்கிடம் அனுப்ப ஆசைப்பட்டர். இமாம் மாலிக்கிடம் செல்வதற்கு முன்னதாகவே அவர் தொகுத்த முஅத்தா நூலை ஷாபி மனனம் செய்து விட்டார்.
حدثنا المزني ، سمع الشافعي يقول : حفظت القرآن وأنا ابن سبع سنين ، وحفظت " الموطأ " وأنا ابن عشر 

·        فكان أول ما فعله قبل سفره هو حفظ الموطأ، فحفظه في تسع ليالٍ

இமாம் மாலிக் ரஹ் அவர்களின் பாட வகுப்பு மிகவும் மரியாதையானதாக பல வெளிநாடுகளிலிருந்து ம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிலும் இடமாக – ஒவ்வொரு நாட்டுக்காரருக்கும் தனித்தனியே பாடங்கள் நடை பெறும் இடமாக இருந்தது.
இமாம் ஷாப்யியின் சிறு வயது காரணமாக அவர்களுக்கு அங்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை.
ஒரு தடவை ஒரு மனிதர் ஒரு பிரச்சனையை கொண்டு வந்தார்.
என மனைவியோடு பேசிக் கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய அழகை பெருமையடித்து நான் நிலவை விட அழகானவள் என்று சொன்னாள்.  எனக்கு கோபம் வந்து அப்படி இல்லை எனில் நீ தலாக் என்று சொல்லி விட்டேன். என்ன செய்வது என்று கேட்டார்.
இமாம் மாலிக் தலாக் தான் என்றார்.
அந்த இடத்தில் தலையிட்ட இமாம் ஷாபி . இதற்கு நான் வேறு தீர்வை கூற முடியும் என்றார்.
·        وفي مرة جاء رجل الي الامام مالك ليساله في امرحيث انه قال لزوجته ( انتي طالق ان لم تكوني اجمل من القمر )
·        فقال له الامام مالك انت قد طلقتهافما كان من الرجل الا ان خرج حزينافساله الامام الشافعي عن جواب فتواه
·        وعندما علم الامام الشافعي دخل الي الامام مالك وقال له يا امام - الله سبحانه وتعالي يقول (لقد خلقنا الإنسان في أحسن تقويم
·        فما كان من الامام مالك الا ان تراجع عن فتواه وقال ( اخطأ مالك واصاب الشافعي)
·        ومن ذلك حين صار يسمح للامام الشافعي للدخول الي مجلسه.
அதன் பிறகு அக்கலாசாலையில் இமாம் ஷாபியிக்கு அக்கலாசாலையில் தனி இடம் கிடைத்தது.

அப்போது போதிய வசதி அவரிடம் இருக்க வில்லை. இமாம் மாலிக்கிடம் கற்போர் அனைவரும் கேள்விப்படும் செய்திகளை தாள்களில் எழுதிக் கொள்வர். இமாம் ஷாபி தனது கையில் எச்சிலாம் எழுதிக் கொள்வார் என்கிறது வரலாறு
இமாம் மாலிக் ரஹ் வபாத்தாகும் வரை அவரின் மாணவராகவே இருந்தார். இமாம் ஷாபி.
.  فلازمه الشافعي حتى وفاة مالك سنة 179 هـ

மக்கா திரும்புதல் – யமன் கவர்ணரின் நெருக்கம். நஜ்ரானின் அதிகாரியாதல்.  அங்கு அரசியல் பழிவாங்கும் நோக்கிலான குற்றச் சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டது.  ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார். என்ற குற்றச் சாட்டின் காரணமாக நாட்டின் தலை நகருக்கு விலங்கிட்டு அழைத்து வரப்பட்டார்- பக்தாதில்  மன்னர் ஹாரூன் ரஷீதிடம் விளக்கம் மளித்தல் விடுதலை பெற்றார். இமாம் ஷாபியின் அறிவு நுட்பமும் அழகிய அரபு மொழியாற்றலும் மன்னரை வியப்பிலாழ்த்தியது.
بعد وفاة مالك بن أنس عاد الشافعي إلى مكة، وصادف قدوم والي اليمن إلى مكة، فذهب معه وأصبح والي نجران، فحكم فيهم بالعدل، فوجد معارضة من الناس حتى وشوا به ظلمًا إلى الخليفة هارون الرشيد أنه يريد الخلافة . أحسن الدفاع عن نفسه بلسان عربي مبين، وبحجة ناصعة قوية؛ فأعجب به الخليفة، وأطلق سراحه

பக்தாதில் இமாம் ஷாபியின் திறனை அறிந்து கொண்ட மக்கள் மன்னர் முன்னிலையிலே அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். இமாம் ஷாபி மின்னல் வெட்டுவது போல பதிலளித்தார்.
ما قولك في رجل ذبح شاة في منزله , ثم خرج في حاجة فعاد وقال لأهله: كلوا أنتم الشاة فقد حرمت علي، فقال أهله: علينا كذلك ..
فأجاب الشافعي: إن هذا الرجل كان مشركًا فذبح الشاة على اسم الأنصاب وخرج من منزله لبعض المهمات فهداه الله إلى الإسلام وأسلم فحُرّمت عليه الشاة وعندما علم أهله أسلموا هم أيضًا فحُرّمت عليهم الشاة كذلك .
_

وسُئل: شرب مسلمان عاقلان الخمر، فلماذا يقام الحد على أحدهما ولايقام على الآخر ؟
فأجاب إن أحدهما كان صبيًا والآخر بالغًا
_

 وسُئل: زنا خمسة أفراد بامرأة ,فوجب على أولهم القتل ، وثانيهم الرجم ، وثالثهم الحد ورابعهم نصف الحد ، وآخرهم لا شيء ؟
فأجاب: استحل الأول الزنا فصار مرتدًا فوجب عليه القتل , والثاني كان محصنًا، والثالث غير محصن، والرابع كان عبدًا، والخامس مجنونًا .....
_

وسُئل: رجل صلى ولما سلّم عن يمينه طلقت زوجته ! ولما سلم عن يساره بطُلت صلاته! ولما نظر إلى السماء وجب عليه دفع ألف درهم ؟
فقال الشافعي: لما سلّم عن يمينه رأى زوج امرأته التي تزوجها في غيابه ، فلما رآه قد حضر طلقت منه زوجته ، ولما سلم عن يساره رأى في ثوبه نجاسة فبطلت صلاته، فلما نظر إلى السماء رأى الهلال وقد ظهر في السماء وكان عليه دين ألف درهم يستحق سداده في أول الشهر.


وسُئل: ما تقول في إمام كان يصلي مع أربعة نفر في مسجد فدخل عليهم رجل ، ولما سلم الإمام وجب على الإمام القتل وعلى المصلين الأربعة الجلد ووجب هدم المسجد على أساسه ؟

فأجاب الشافعي: إن الرجل القادم كانت له زوجة وسافر وتركها في بيت أخيه فقتل الإمام هذا الأخ ،وادعى أن المرأة زوجة المقتول فتزوج منها، وشهد على ذلك الأربعة المصلون، وأن المسجد كان بيتًا للمقتول، فجعله الإمام مسجدًا !
_

وسُئل: ما تقول في رجل أخذ قدح ماء ليشرب، فشرب حلالاً وحُرّم عليه بقية ما في القدح ؟
فأجاب: إن الرجل شرب نصف القدح فرعف أي(نزف في الماء المتبقي) ، فاختلط الماء بالدم فحُرّم عليه ما في القدح !

_ فقال الشافعي: أطال الله عمر أمير المؤمنين،
إني سائل هؤلاء العلماء مسألة، فإن أجابوا عليها فالحمد لله، وإلا فأرجو أمير المؤمنين أن يكف عني شرهم

فقال الرشيد. لك ذلك وسلهم ما تريد يا شافعي .

فقال الشافعي : مات رجل وترك 600 درهم، فلم تنل أخته من هذه التركة إلا درهمًا واحدًا، فكيف كانا الظرف في توزيع التركة ؟ ؟

فنظر العلماء بعضهم إلى بعض طويلاً ولم يستطع أحدهم الإجابة على السؤال، فلما طال بهم السكوت،
طلب الرشيد من الشافعي الإجابة.

فقال الشافعي: مات هذا الرجل عن ! ابنتين وأم و زوجه واثني عشر أخًا وأخت واحدة، فأخذت البنتان الثلثين وهي 400 درهم ، وأخذت الأم السدس وهو 100 درهم، وأخذت الزوجة الثمن وهو75 درهم، وأخذ الاثنا عشر أخا 24 درهمًا فبقي درهم واحد للأخت فتبسم الرشيد وقال: أكثر الله في أهلي منك، وأمر له بألفي درهم فتسلمها الشافعي ووزعها على خدم القصر ...
பக்தாதில் தங்கியிருக்கும் போது இமாம் அபூஹனீபாவின் மாணவரான முஹம்மது ரஹ் அவர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து சட்ட அறிவை பெருக்கிக் கொண்டார்.
பிறகு மக்காவிற்கு திரும்பி 9 ஆண்டுகள் மக்காவில் தங்கினார், கலீபா  இமாம் ஷாபியை மக்காவின் முப்தியாக நியமித்தார்.  . அந்த காலகட்டங்களில் அவர் கூறிய சட்டக் கருத்த்துகள் (மத்ஹபு) அங்கு பரவியது.
பக்தாது விஜயம்
இரண்டாம் முறையாக ஹிஜ்ரீ 195 ல் மீண்டும் பக்தாதுக்கு வந்தார்; அங்கு அவருடைய சட்ட விளக்கம் கூறும் வகுப்புக்கள் தொடங்கின,
இந்த சந்தர்ப்பத்தில் கலீபாஹவிற்கு முன் அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தினார்கள். அவரின் சொல்லாற்றில் கண்ணீர் வடித்த கலீபா ஹாரூன் ரஷீது . ஐம்பதாயிரம் தங்க நாணயத்தை அன்பளிப்பாக கொடுத்தார்.  
அவற்றில் நாற்பதாயிரத்தை அப்போதே ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் தர்மம் செய்தார் இமாம் ஷாபி .(ரஹ்)
இமாம்கள் எவரிடமும் காசு ஆசையோ பதவி ஆசையோ செல்வாக்கின் மீதான மோகமோ ஒரு போதும் இருந்ததில்லை.   
பக்தாதில் தங்கியிருந்த அந்த சந்தர்ப்பத்தில் சட்டவிளக்கங்களின் மூலமான் (உஸூலுல் பிக்ஹின் முதல் நூலான ( அர்ரிஸாலாவை அப்போது எழுதினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் ஷாபியிடம் கல்வி பயின்றார்கள்.
மீண்டும் மக்காவிற்கு திரும்பிய இமாம் ஷாபி
ஹிஜ்ரி 198 ல் மீண்டும் பக்தாதுக்கு சென்றார்..அப்போது கலீபா ஹாரூன் ரஷீது இறந்தார். அதன் பிறகு அங்கிருக்க விரும்பாமல் எகிப்துக்கு சென்றார் . அவர் எகிப்துக்கு வருவதற்கு முன் அவரது செல்வாக்கு எகிப்தில் பரவியிருந்தது.
செல்லுமிடமெல்லாம் இமாம் ஷாபியின் சட்ட விளக்கங்கள் தொடர்ந்தன. மக்கள் அவரை பின்பற்றத் தொடங்கினர்.  
எகிப்தின் ஜாமி ஆ அம்ரு பின் ஆஸ் பள்ளிவாசலில் தனது தர்ஸை தொடங்கினார் . ஏராளமானோ அவரிடமிருந்து கல்வியை பெற்றுச் சென்றனர்.
அணியணியாய் வகை வகையாய் மாணவர்கள்
محمد بن عبد الحكم قال: «ما رأيت مثل الشافعي، كان أصحاب الحديث يجيئون إليه ويعرضون عليه غوامض علم الحديث، وكان يوقفهم على أسرار لم يقفوا عليها فيقومون وهم متعجبون منه، وأصحاب الفقه الموافقون والمخالفون لايقومون إلا وهم مذعنون له، وأصحاب الأدب يعرضون عليه الشعر فيبين لهم معانيه

இமாமின் செல்வாக்கில் ஆத்திரம் கொண்ட ஒருவன் இமாம் ஷாபியின் தலை மீது சம்மட்டியால் அடித்து விட்டான்.
அதன் காரணமாக ஹிஜ்ரீ 24 ம் ஆண்டு ரஜப் 30 தேதி இமாம் ஷாபி ரஹ் அவர்கள் வபாத்தானார்கள். அப்போது அவர்களுக்கு வயது 55.
எகிப்தின் தலை நகர் கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கு இப்போதும் இமாம் ஷாபியின் மண்ணரை இருக்கிறது.
அந்த இடத்தில் சுல்தான் மலிக்குல் காமில் ஒரு கட்டிடம் எழுப்பினார்.
அதே இடத்தில் சலாஹுத்தீன் அய்யூபி ஒரு மதரஸாவை உருவாக்கினார்.
இமாம் ஷாபி சொன்ன சட்டக் கருத்துக்கள் ஒரு சட்டப் பிரிவாக மத்ஹபாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டன் . பின்னாட்களில் வந்த பல பெரும் அறிஞர்கள் ஷாபி மத்ஹபை பின்பற்றினார்கள்.
அவர்களில் முக்கியமானோர்/
இமாம் பைஹகீ
ஹாகிம் அன்னய்ஸாபூரி
ஜலாலுத்தீன் சுயூத்தி
இமாம் தகபீ
இமாம் கஸ்ஸாலி
இமாம் நவவி
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி
ஹாபிழ் இப்னு கஸீர்

இமாம் ஷாபியின் இயல்பு
ما حلفت بالله تعالى لا صادقاً ولا كاذباً قط.
எதையும் பார்த்தவுடன் மனனம் செய்து கொண்டு விடும் சக்தி இமாம் ஷாபியிக்கு இருந்தது. ஒரு நாள் ஆசிரியரிடம் செல்லும் போது முன்னே சென்ற ஒரு பெண்ணின் கொளுசின் மீது இமாமின் பார்வை பட்டது. அன்று அவரது பாடங்கள் மனதில் பதியவில்லை ஆசிரியர் வகீ யிடம் இது பற்றி கூறினார்,

شكوت الي وكيع سوء حفظي فأرشدني الي ترك المعاصي....و اخبرني بأن العلم نور. ونور الله لا يهدى لعاصي.

வெகு குறைவாகவே சாப்பிடுவார்.

والله ما شبعت منذ ست عشرة سنة إلا شبعة طرحتها لأن الشبع يثقل البدن، ويزيل الفطنة، ويجلب النوم، ويضعف صاحبه عن العبادة.

ஆனால் ஒரு தடவை இமாம் அஹ்மது பின் ஹன்பலின் வீட்டில் நிறைய உண்டார்/
  زار الإمام الشافعي رحمه الله تعالى الإمام أحمد بن حنبل ذات يوم في داره ، وكانت للإمام أحمد ابنة صالحة تقوم الليل وتصوم النهار وتحب أخبار الصالحين والأخيار ، وتود أن ترى الشافعي لتعظيم أبيها له ، فلما زارهم الشافعي فرحت البنت بذلك ، طمعاً أن ترى أفعاله وتسمع مقاله . وبعدما تناول طعام العشاء قام الإمام أحمد إلى صلاته وذكره ، والإمام الشافعي مستلقٍ على ظهره ، والبنت ترقبه إلى الفجر ، وفي الصباح قالت بنت الإمام أحمد لأبيها :
يا أبتاه ... أهذا هو الشافعي الذي كنت تحدثني عنه ؟
قال : نعم يا ابنتي .
فقالت : سمعتك تعظم الشافعي وما رأيت له هذه الليلة .. لا صلاة ولا ذكراٍ ولا ورداً؟
وقد لا حظت عليه ثلاثة أمور عجيبة ، قال : وما هي يا بنية ؟
قالت : أنه عندما قدمنا له الطعام أكل كثيراً على خلاف ما سمعته عنه ، وعندما دخل الغرفة لم يقم ليصلي قيام الليل ، وعندما صلى بنا الفجر صلى من غير أن يتوضأ .
فلما طلع النهار وجلسا للحديث ذكر الإمام أحمد لضيفه الإمام الشافعي ما لاحظته ابنته ، فقال الإمام الشافعي رحمه الله :
يا أبا محمد لقد أكلت كثيراً لأنني أعلم أن طعامك من حلال ، وأنك كريم وطعام الكريم دواء ، وطعام البخيل داء ، وما أكلت لأشبع وإنما لأتداوى بطعامك ، وأما أنني لم أقم الليل فلأنني عندما وضعت رأسي لأنام نظرت كأن أمامي الكتاب والسنة ففتح الله عليّ باثنتين وسبعين مسألة من علوم الفقه رتبتها في منافع المسلمين ، فحال التفكير بها بيني وبين قيام الليل ، وأما أنني صليت بكم الفجر بغير وضوء ، فوالله ما نامت عيني حتى أجدد الوضوء . لقد بقيت طوال الليل يقظاناً ، فصليت بكم الفجر بوضوء العشاء . ثم ودّعه ومضى .

فقال الإمام أحمد لابنته : هذا الذي عمله الشافعي الليلة وهو نائم ( أي مستلقٍ ) أفضل مما عملته وأنا قائم .

ஏழையின் கரை காணா தாயாளம்

·        قال الحميدي: خرج الشافعي إلى اليمن مع بعض الولاة فانصرف إلى مكة بعشرة آلاف درهم فضرب له خباء في موضع خارجاً عن مكة فكان الناس يأتونه، فما برح من موضعه ذلك حتى فرقها كلها.
·        وخرج من الحمام مرة فأعطى الحمامي مالاً كثيراً.
·        وسقط سوطه من يده مرة فرفعه إنسان إليه فأعطاه جزاء عليه خمسين ديناراً.
·        قال الربيع بن سليمان كان الشافعي إذا سأله إنسان يحمرّ وجهه حياء من السائل، ويبادر بإعطائه.


இமாம் ஷாபியின் அமல்கள்
·         وروي أنه كان يقسم الليل ثلاثة أجزاء: ثلث للعلم، وثلث للعبادة, وثلث للنوم
·         كان الشافعي يختم القرآن في رمضان ستين مرة كل ذلك في الصلاة

மூல நோயின் கடும் சிரமத்திலும் மார்க்கச் சட்டப்பணிகளில் கவனம் செலுத்தினார்.
இன்று ஒரு சிறு தலைவலிக்கு கடமையை துறக்கிற உலகம்.

ظهر فيه مرض البواسير وهو في مصر،
وربما ركب فسال الدم من عقبيه،
  وكان لا يبرح الطست تحته وفيه لبدة محشوة، وما لقي أحد من السقم مالقي،
  قال الربيع بن سليمان: أقال الشافعي ها هنا أربع سنين، فأملى ألفا وخمسمائة ورقة، وخرج "الأم" ألفي ورقه و"السنين" وأشياء كثيرة، كلها في أربع سنين.
இமாம் ஷாபியின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சிறந்த உதாராணம் .
எந்தக் கண்ணும் பார்த்திராத ஒரு மனிதரை உனக்கு காட்டட்டுமா எனக்கேட்ட அஹ்மது பின் ஹன்பல்இஸ்ஹாக் பின் ராஹவைகிக்கு இமாம் ஷாபி யை காட்டினார்கள்

وقال إسحاق بن راهويه: لقيني أحمد بن حنبل بمكة، فقال : تعال حتى أريك رجلاً لم تر عيناك مثله . قال: فأقامني على الشافعي ( 18

இமாம் அஹ்மது இன்னொரு சட்ட அறிஞராக – இன்னொரு மத்ஹபின் தலைவராக இருந்த போதும் இமாம் ஷாபி பற்றி அவர் சொன்ன கருத்து இமாம் ஷாபியின் அந்தஸ்ததையும் பேசுகிறது. இமாம்களின் இக்லாசான வாழ்க்கையையும் ஒற்றுமையையும் காட்டுகிறது.
இதுவெ மத்ஹபுகளின் சத்தியத்தன்மைக்கு அடையாளமாகும்.
இன்றைய இயக்கவாதிகள் அமைப்புக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பாருங்கள். தீனுக்கு நல்லது செய்தது யார் என்பதையும் தீமை செய்பவர்கள் யார் என்பதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் இமாம் ஷாப்யின் அந்தஸ்தை ஈருலகிலும் உயர்த்தி வைப்பானக! அவர்கள் காட்டிய சத்திய வழியை பின்பற்றி நடக்க நமக்கு தவ்பீக் செய்வானாக!  

No comments:

Post a Comment