நமது முன்னோர்களில்
சிறந்த முன்னோடிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
இது முஸ்லிம் உம்மத்தின்
அரும் பெருமைகளில் ஒன்று.
வேறு எந்தச் சமூகத்திடமும்
பெருமைக்கும் அருமைக்கும் உரிய இவ்வளவு முன்னோர்களின் பட்டியல் இல்லை
தமிழ் சமூகத்தில்…
இந்துச் சமூகத்தில்… கிருத்துவர்களில்… யூதர்களில்…
ஏன் இல்லை. காரணம்
ஒன்றுதான்.
பின்னால் வந்தவர்கள்.
முந்தயவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. உரிய முறையில் மதிக்கவில்லை. அவர்களது வாழ்க்கை
வரலாறுகளை எழுதிவைக்கவில்லை.
அல்லது அவர்களை
கடவுள்களாக ஆக்கிவிட்டனர்.
இஸ்லாம் முன்னோர்களை
அறிந்து தெரிந்து பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது.
மக்காவின் காபிர்கள்
தவறான ஷிர்க் கொள்கையை தமது முன்னோர்களின் வழி என்று நியாயப்படுத்திய போது திருக்குர்
ஆன் அதிலுள்ள தவறை சுட்டிக் காட்டியது,.
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ
اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ
كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (170
முன்னோர்கள்
சிறந்தவர்களாக அறிவாளிகளாக நேர்வழி பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் வழியாகவே வாழ்க்கையை
நடத்திச் செல்ல வேண்டும் என்பதை திருக்குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது,
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ
الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُوا نَعْبُدُ
إِلَٰهَكَ وَإِلَٰهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَٰهًا وَاحِدًا
وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (133)
நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று கேட்டால் நாம் சொல்லுகிற பதில் அல்லாஹ்வை வணங்குவோம் என்பதாகும், ஆனால் யாகூப் அலை அவர்களின் மக்கள். அவர்கள் அனைவருமே நபிமார்கள் தான் என்று திருக்குர் ஆனிய விரிவுரையாளர்களில் ஒரு சாரார் கருதுவதுண்டு. அத்தகையோர் சொல்கிறார்கள். நாங்கள் நமது முன்னோர்களின் இலாஹை வணங்குவோம். நாங்கள் அல்லாஹ்வை வணங்குவோம் என்று இலேசாக சொல்லிச் சென்றிருக்க வேண்டிய நிலையில் நீட்டி முழக்கி அவர்கள் கூறிய வாசகங்களில் உம்மத்திற்கு மிக முக்கிய மான வழிகாட்டுதல் இருக்கிறது.
அல்லாஹ்வின் மார்க்கத்தை முன்னோர்களின் வழிகாட்டுதலின் படியே பின்பற்ற வேண்டும். சுய முடிவுகளின் படியல்ல.
இஸ்லாம்
முன்னோர்களிலும் மூத்தோர்களின் கருத்துக்கு அதிக கவனம் தருமாறு நமக்கு சொல்லி இருக்கிறது.
فقال صلى الله عليه وسلم: ”خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ
الَّذِينَ يَلُونَهُمْ“ [صحيح البخاري ومسلم].
முன்னோர்களின்
வழி முறையை நிராகரித்துச் செல்வோர் குறித்து கடும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறது.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ
الْهُدَى وَيَتَّبِعْ
غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ
وَسَاءَتْ مَصِيرًا} [النساء: 117
மார்க்கத்தில்
அக்கறை செலுத்துகிற எந்த மனிதரும் இளைஞனும் ஆணும் பெண்ணும் இதை சற்று
நிதானமாகவும் நியாயமாகவும் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ் ரஸூலைத்
தவிர நமக்கு எந்த முன்னோரும் தேவையில்லையா ?
அபூபக்கர் சித்தீக்,
உமர், பிலால், காலித் பின் வலீத், அபூஹுரைரா,
சுமய்யா, கதீஜா ஆயிஷா, அப்துல்லாஹ்
பின் மஸ்வூத் (ரலி) போன்ற சஹாபாக்களையோ சயீதுப்
முஸைய்ப் அதா இப்னு அபீ ரபாஹ், ஹஸனுல் பஸரீ (ரஹ்) போன்ற தாபிஈ களையோ அவர்களுக்குப்
பின் வந்த இமாம் அபூஹனீபா, மாலிக், ஷாபி அஹ்மது பின் ஹன்பல். அவர்களுக்குப் பின்னால்
வந்த ஹதீஸ் கலை அறிஞர்கள் இமாம் புகாரி, முஸ்லிம். துர்முதி நஸஈ இப்னுமாஜா அபூதாவூத்
ஹாகிம் போன்றவர்களையோ நாம் ஒதுக்கி வைத்து விட்டு மார்க்கத்தை எடுத்துக் கொள்ள முடியுமா
?
முன்னோர்களின்
வழியில் இஸ்லாம் நமக்கு
போதுமானது என்ற கருத்து நம்முடைய இதயத்தில் ஆழப்பதிவது இன்றைய குழப்பமான காலத்தில்
நம்மிடம் அவசியமாக அழுத்தமாக இருக்க வேண்டிய தத்துவமாகும். அதுவே நமக்கு விடிவையும் தெளிவையும் நிம்மதியையும் அளிக்கும்.
நமது முன்னோடிகளில்
முதன்மையானவர்கள் சஹாபாக்கள்;
صحابة رسول الله واحده صحابي مصطلح تاريخي يقصد به من صحبوارسول الله محمد بن عبد الله وآمنوا بدعوته
ஆரம்பமாக தீனை ஏற்றுக் கொண்டவர்கள். அதற்காக பெரும் அர்பணங்களை செய்தவர்கள். உலகின் எட்டுத் திக்கிற்கும் தீனைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள்.
தீன் அவர்களை அங்கீகரித்து விட்டது.
وَالسَّابِقُونَ
الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ
بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ
تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ
الْعَظِيمُ} [التوبة: 100]
தக்வாவின் முதல் தர குடிமக்கள்
فأَنْزَلَ اللَّهُ
سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا
أَحَقَّ بِهَا وَأَهْلَهَا وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا} [الفتح: 26].
அவர்களது
வழிதான் ஈமானிய வழி. அதை விட்டு முகம் திருப்புவர்கள் பிரிவினை வாதிகள்.
فَإِنْ آَمَنُوا بِمِثْلِ مَا آَمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا
هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ} [البقرة: 137].
சஹாபாக்களின்
பெருமையை எந்த வார்த்தைகளில் கூறிய
போதும் பெருமானார் (ஸல்) அவர்களின் மனம்
போதும் என அமைதி கொண்டதில்லை.
உலகில் எந்த
தலைவராவது தனது தொண்டர்களை சீடர்களை இவ்வளவு தூரம் புகழ்ந்து புனிதப் படுத்தியதுண்டா
?
عن أبو هريرة قال :
قال رسول الله
لا تسبوا أصحابي لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم
أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم ولا نصيفه
இந்த வித்தியாசத்திற்கு
இஹ்லாஸ் என்று பரவலாக சொல்லப்படுவதுண்டு.
وسبب التفاوت ما يقارن الأفضل من مزيد الإخلاص ،
وصدق النية
இமாம் பைளாவி ரஹ் அவர்கள் இதற்கு இப்படியும் ஒரு காரணம் கூறுகிறார்கள்.
قيل السبب فيه أن تلك النفقة أثمرت في فتح الإسلام ،
وإعلاء كلمة الله ما لا يثمر غيرها ،
இஸ்லாத்தின்
வெற்றிக்கு சஹாபாக்களின் தர்மங்கள் ஏற்படுத்தி பலனை மற்றெவரது தர்மமும் தந்ததில்லை.
எவ்வளவு எதார்த்தம்.
ஒரு ஹதீஸை அறிவித்தவர்கள்
முஸ்லிம் உம்மத்திற்கு செய்த கொடை எத்தகையது.
حدرد بن أبي حدرد السلمي என்ற
சஹாபி ஒரே ஒரு ஹதீஸை
அறிவித்திருக்கிறார்.
روَى حدرد بن أبي حدرد السلمي عن رسول اللّه صلى اللّه عليه وسلم : «
من هجر أخاه سنة فهو كسفك دمه » ، روَاه أبو داود .
எனவே தான் அவர்களது பிடியளவு தர்மம் மலையளவு தர்மத்திற்கு ஈடானது
சஹாபாக்களை பெருமானார்
(ஸல்) அவர்கள் புகழ்வது தொடர்கிறது.
عن أبو بردة قال : قال رسول الله لنجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد ، وأنا
أمنة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون ، وأصحابي أمنة لأمتي فإذا ذهب
أصحابي أتى أمتي ما يوعدون
சஹாபாக்கள் விசயத்தில் உம்மத்தின் உறுதியான நிலைப்பாடு. மஃசூம்கள் அல்ல. ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்
إتفق أهل السنة على أن جميع الصحابة عدول لا يجوز
تجريحهم ولا تعديل البعض منهم دون البعض
كُنتُمْ
خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ
عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ
خَيْرًا لَّهُم مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
واتفق المفسرون على أن الآية واردة في أصحابمحمد صلى الله عليه وسلم.
أن رسول الله قال: "الله الله في أصحابي، لا تتخذوهم غرضا بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم
فببغضي أبغضهم، ومن آذاهم فقد أذاني، ومن أذاني فقد أذى الله، ومن آذى الله فيوشك أن يأخذه"
அல்லாஹ்வும் ரஸூலும் இவ்வாறெல்லாம் கூறி இருக்காவிட்டால் கூட சஹாபாக்கள் விசயத்தில் இந்த உறுதியான நிலையை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை சஹாபாக்களின் பங்களிப்புக்கள் நமக்கு உணர்த்துகின்றன என்கிறார் இப்னு ஹஜர் ரஹ்
ونقل ابن حجر عن الخطيب في "الكفاية, أنه لولم يرد من الله ورسوله فيهم شيء مما ذكرناه لأوجبت الحال التي كانوا
عليها من الهجرة،
والجهاد، ونصرة الإسلام, وبذل المهج والأموال, وقتل الآباء, والأبناء,
والمناصحة في الدين, وقوة الإيمان واليقين: القطع بتعديلهم, والاعتقاد
بنزاهتهم, وأنهم كافة أفضل من جميع الخالفين
எனவே தான் சஹாபாக்களை குறை சொல்வதை இஸ்லாத்தில் குப்ரின் அடையாளம் என மார்க்கம் கூறுகிறது,
சஹாபாக்களை குறை கூறுவோ கிதாபையும் சுன்னாவையும் தகர்க்க முயல்வோர் என்கிறார்
அபூ ஜர் ஆ (ரஹ்) எதார்த்தமான வாதங்களோடு.
قال أبو زرعة الرازي: "إذا رأيت الرجل ينتقص أحدا
من أصحاب محمد فاعلم أنه زنديق, ذلك
أن الرسول حق, والقرآن حق, وما جاء به حق, وإنما أدى إلينا ذلك كله الصحابة,
وهؤلاء يريدون أن يجرحوا شهودنا, ليبطلوا الكتاب والسنة, والجرح بهم أولى, وهم
زنادقة
சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும்.
” قال رسول
الله فَإِنَّهُ مَنْ
يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلَافًا كَثِيرًا وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ
الْأُمُورِ فَإِنَّهَا ضَلَالَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ
الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ -- الترمذي وأبو داود “ حديث حسن
قال رسول الله وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى
ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ
مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً“، قالوا: ومن هي يا رسول الله؟
قال: ”مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي الترمذي
“ حديث حس
முஸ்லிம் உம்மத்தை பொறூத்தவரைக்கும் சஹாபி என்றாலே அவர் விஐபி தான் என்றாலும் அவர்களிலும் ஹதீஸ்களை அதிகம் அறிவித்தவர்கள் மார்க்கத்திற்கு மிகவும் கொடையளித்தவர்கள் ஆவார்கள்.
அதில் சில பெயர்களை நாம் நினைவு படுத்திக் கொள்வோம்.
அபூஹுரைரா (ரல்)
பசித்த வயிற்றை மஸ்ஜிதுன் னபவியின் மண்ணோடு ஒட்டவைத்து படுத்துக் கிடந்தே பல்லாயிரம்
ஹதீஸ்களை தீனுக்குத் தந்த பெருந்தகை
الصحابي الجليل أبو هريرة (المتوفى سنة 59هـ): وهو
عبد الرحمن بن صخر الدوسي اليماني، وقد اشتهر بكنيته حتى غلبت على اسمه، وهو من
أكثر الصحابة حديثًا عن رسول الله صلى الله عليه وسلم ؛ وذلك لكثرة ملازمته لرسول
الله صلى الله عليه وسلم وجرأته في السؤال، وحبه للعلم، ومذاكرته لحديث الرسول
الكريم في كل حين وفرصة، وقد روى له الإمام أحمد بن حنبل في مسنده ثلاثة آلاف
وتسعمائة وسبعة وخمسين حديثًا، وفيها مكرر كثير باللفظ والمعنى ، وله في الصحيحين
خمسمائة وسبعة عشر حديثًا، اتفقا على ثلاثمائة وستة وعشرين حديثًا وانفرد البخاري
منها بثلاثة وتسعين حديثًا، ومسلم بثمانية وتسعين حديثًا.
அப்துல்லாஹ் பின் உமர் ரலி
பெருமானாரின் சுன்னத்துக்களை பின்பற்றுவதில் நிகர் சொல்ல முடியாத பரோபகாரி . எதீம் இல்லாமல் உணவருந்தமாட்டார்.
2630 ஹதீஸ்களின் அறிவிப்பாளர்.
عبد الله بن عمر بن الخطاب العدوي (المتوفى سنة 73هـ)، وقد اشتهر رضي
الله عنه بحرصه على إتباع السنة والتأسي برسول الله صلى الله عليه وسلم في جميع
أحواله، وبلغت مروياته ألفين وستمائة وثلاثين حديثًا، وكانت وفاته بمكة المكرمة.
இன்னொருவர் அனஸ் பின் மாலிக்
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நாள் முதல் இறுதி மூச்சு வரை பெருமானாருக்கு ஊழியராக இருந்த தோழர். அவரது தாயார் உம்மு சுலைம் அவரை பெருமானாருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
2286 ஹதீஸ்களை அறிவித்தவர்.
أنس بن مالك بن النضر بن ضمضم الأنصاري الخزرجى (المتوفى سنة 93 هـ)
وهبته أمه أم سُلَيْم بنت مِلْحَان لرسول الله صلى الله عليه وسلم ، فقبله في
خدمته، وأقام على ذلك عشر سنين، فشاهد أنس ما لم يشاهد غيره، وبلغت مروياته ألفين
ومائتين وستة وثمانين حديثًا،
இன்னொருவர்
அபூசயீத் அல் குத்ரி ரலி
உஹது யுத்தத்தில்
தந்தையை இழந்து வறுமையின் கோரப் பிடியில் வாடிய போதும் 2170 ஹதீஸ்களை தந்தவர்.
أبو سعيد الخدري (المتوفى سنة 74 هـ) وهو سعد بن مالك بن سنان
الأنصاري الخزرجي، استشهد والده في غزوة أحد، فقاسى أبو سعيد شظف العيش، ويُرْوى
أنه كان من أهل الصُّفَّة، ثم شهد معظم الغزوات، وكان يحضر حلقات الرسول صلى الله
عليه وسلم ، فتحمل عنه الكثير حتى عُدَّ في المكثرين عنه، وبلغت مروياته ألفا
ومائة وسبعين حديثًا،.
இன்னொருவர் ஆயிஷா ரலி
பெருமானார் (ஸல்) அவர்கள் இறக்கும் போது 18 வயதே நிரம்பியிருந்த அன்னை ஆயிஷா ரலி அவர்கள் சமுதாயத்திற்கு 2210 ஹதீஸ்களை தந்தார்கள்.
ஹதீஸ்களை அறிவித்த சஹாபாக்களின் இந்த தொடர் சாமாணியமானதல்ல.
சஹாபாக்களில் சுமார் ஆயிரத்து 800 போர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
سبعة منهم
لكل واحد أكثر من ألف حديث، وأحد عشر صحابيًا لكل منهم أكثر من مائتي حديث، وواحد وعشرون
صحابيًا لكل واحد منهم أكثر من مائة حديث، وأما أصحاب العشرات فكثيرون يقربون من المائة،
وأما من له عشرة أحاديث أو أقل من ذلك فهم فوق المائة، وهناك نحو ثلاثمائة صحابي روى
كل واحد منهم عن الرسول صلى الله عليه وسلم حديثًا واحدًا.
இத்தகை பெருமைக்குரிய
சஹாபாக்களின் காலம்
பெருமானாரில் தொடங்கிய ஹிஜ்ரீ 110 முடிவடைகிறது.
சஹாபாக்களுக்கு அடுத்த அந்தஸ்திற்குரியவர்கள் தாபிஈ கள்
இந்த தீனின் அஸ்திவாரமாக இருந்த இப்பெருமக்களைப் பற்றி நாம் அறியாமல் இருக்கலாகாது. சரியாக உச்சரித்து பழகுவோம். தாபிஈ - தாபிஈன்கள்.
தாபிஈ என்றால் சஹாபியோடு தோழமை கொண்டவர் என்று பொருள்.
மார்க்க கல்வியை பரப்புவதிலும் இஸ்லாமிய சட்டத்துறையை உருவாக்குவதிலும் புதிய
முஸ்லிம் சமுதாயத்தை இஸ்லாத்தின் நிழலில் வளர்ப்பதிலும் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.
சஹாபாக்கள் விட்டுச் சென்ற இடத்தை தாபிஈன்கள் தொட்டுத் தொடர்ந்தார்கள்.
அப்துல்லாக்களுக்குப் பிறகு அவர்களது நகரங்கள் தோறும் அவர்களது மாணவர்கள் பொறுப்பேற்றனர்
என்கிறார் அப்துர் ரஹ்மான பின் யஜீது.
قال
عبد الرحمن بن زيد بن أسلم: «لما مات العبادلة: عبد الله
بن عباس وعبد الله
بن الزبير وعبد الله
بن عمر وعبد الله بن عمرو بن العاص: صار الفقه في جميع البلدان إلى الموالي: فقيه مكةعطاء، وفقيه اليمن طاوس، وفقيه اليمامة يحيى بن
أبي كثير، وفقيه البصرة الحسن، وفقيه الكوفة إبراهيم
النخعي، وفقيه الشام مكحول، وفقيه خراسان عطاء
الخراساني، إلا المدينة فإن الله تعالى خصها بقرشي فقيه غير
مدافع: سعيد بن
المسيب.»—طبقات الفقهاء
சஹாபாக்களின் அதே தியாக உள்ளாத்தோடும் சத்திய வீரத்தோடும் தாபிஈன்கள் மார்க்கத்திற்காக
பங்காற்றினர்/
وعن جابر بن عبد الله رضي الله عنهما قال رسول
الله صلى الله عليه وسلم: "لا تمَسُّ النارُ مسلماً رآني، أو رأى من
رآني"
وعن واثلة بن الأسقع رضي الله عنه قال: قال رسول
الله صلى الله عليه وسلم: "لا تزالون بخير ما دام فيكم من رآني وصاحبني،
والله لا تزالون بخير ما دام فيكم من رأى من رآني، وصاحب من صاحبني
ஸஈதுப் பின் முஸைப் ரஹ் அவர்கள் மதீனாவின் மஸ்ஜிதுன் னபவீ பள்ளியில் கல்வி கற்றுக்
கொடுத்தார். அவரது கடைசி நாற்பது வருடங்களில் பள்ளிவாசலையும் வீட்டையும் தவிர ( ஹஜ்ஜுக்கு
தவிர ) அவர் வேறெங்கும் சென்றதில்லை. அதனால் ஆட்சியாளர்கள் தேவை எனில் அவரை தேடியே
வருவார்கள். ஒருமுறை மதீனாவின் ஆளுநராக இருந்தவர் அவர் தன் சொல்லைக் கேட்கவில்லை என்பதற்காக
சாட்டையால் அடித்திருக்கிறார். அந்த அடியைப் பெற்றுக் கொண்ட போது தனது உறுதியிலுருந்து
ஸஈது பின் முஸைப் ரலி விலகவில்லை.,
அதாஇப்னு அபீ ரபாஹ் –
உமைய்யா சாம்ராஜ்யத்தின் மா மன்னர் சுலைமான் பின் அப்துல் மலிக் மக்ளோடு ஒருவராக
கஃபாவை தாவாபு செய்து கொண்டிருக்கிறார். அவரது
மேனியிலும் சாதாரண பகட்டில்லாத இரண்டு ஆடைகள் மட்டுமே கிடக்கின்ற்ன. அவருடன் அவருடை
இரு மகன்கள் சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசுகளும் இருக்கின்றனர். தாவாபு முடியும் தறுவாயில்
மக்காவின் அதிகாரியிடம் மன்னர் பணிவாக கேட்டார். “ எங்கே அவர். “
أين صاحبكم
அதிகாரி சொன்னார்.
إنه هناك قائم يصلي
மன்னர் மெதுவாக அந்த இடம் நோக்கி நகர்ந்தார். மன்னருக்காக அதிகாரிகள் இடம் ஏற்படுத்தி
தர முயன்றனர். மன்னர் அதை தடுத்தார். இங்கு மக்கள் அனைவரும் சமம். இது தேவையில்லை என்றார். அவர்
தேடிச் சென்ற மனிதர் தொழுது கொண்டிருந்தார்.
அவர் கறுப்பர் இனத்தை சேர்ந்தவர். வரிசையற்ற பற்களை கொண்டவர், மூக்கு பெருததவர். அவர்
உட்கார்ந்தால் ஒரு காகத்தை போலவே இருப்பார். அவர் தொழுது முடிக்கட்டும் என்று எதிர்பார்த்து
மன்னர் சபையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டார். அந்த மனிதரை சுற்றி அவரை போலவே ஏராளமானோர்
முன்னும் பின்னுமாக காத்திருந்தனர். அந்த மனிதர் சலாம் கொடுத்து திரும்பிய போது மன்னர்
அவருக்கு சலாம் சொன்னார். அவரை நோக்கி நகர்ந்து சென்றார். சில சட்ட விளக்கங்களை கேட்டார்.
அவருக்கு பொருமையாக அந்த மனிதர் பதில் சொன்னர். இளவரசர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சஃய் செய்ய சபா வை நோக்கி நகர்ந்து சென்ற போது அரசாங்க அறிவிப்பாளரின்
ஒலி பெரிதாக கேட்டது.
இங்கே அதா பின் அபீ ரபாஹை தவிர வேறு யாரும் மார்க்க தீர்ப்பு கூறக் கூடாது.
இளவரசர்கள் அரசரிடம் கேட்டனர். உங்களது அதிகாரி இப்படி அறிவிக்கிறார். நீங்களோ
உங்களை சற்றும் பொருட்படுத்தாத ஒரு மனிதரிடம் சென்று தீர்ப்பு கேட்டீர்களே .. ?
அரசர் சொன்னார். செல்லக் குழந்தைகளே . அவர் தான் அதா பின் அபீ ரபாஹ். இந்தப்
பணிக்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸீன் வாரிசு,
هذا
اللذي رأيته يا بني هو عطا ء بن ابي رباح , ووارث عبد الله بن عباس
இவ்வாறு கூறி விட்டு மன்னர் சுலைமான் தன் இளவல்களுக்குச் சொன்ன செய்தி மிக முக்கியமானது.
يا بني تعلموا العلم فباالعلم يشرف الوضيع ويعلو
الارقاء علي الملوك
செல்ல மகன்களே! கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்!! கல்வியினால்
தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் சிறப்படைவார்கள். அடிமைகள் அரசர்களை விட உயர்ந்து நிற்பார்கள்.
அதா பின் அபீர் ரபாஹ் மக்காவின் ஒரு பெண்மணிக்கு அடிமையாக
இருந்தார். தனது அன்றாடப் பணிகளை மூன்றாக பிரித்துக் கொண்டார்.
1.
தனது எஜமானிக்கு
செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்து முடித்து விடுவது
2.
அல்லாஹ்வை தொழுவது
3.
சஹாபாக்களை தேடிச்
சென்று கல்வியை கற்றது.
தனது அடிமையின் கல்வித்தாகத்தை கவனித்த அந்தப் பெண்மணி அவரை விடுதலை செய்தார்.
அதன் பிறகு அவர் இருபது ஆண்டுகள் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலிலேயே தங்கி கல்வி கற்றார்.
அவர் பின்னாட்களில் எந்த நிலைக்கு உயர்ந்தார் எனில் அவரைச் சுற்றி இருந்தோர்
எல்லோரும் மார்கக் அறிவு பெற்றவர்களாயினர்.
இமான் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுவார்கள்.
மக்காவில் ஒரு நாவிதனிடமிருந்து நான் ஐந்து விசயங்களை கற்றுக் கொண்டேன்.
முடிவெட்டிக்கொள்ள அமர்ந்த போது காசு எவ்வளவு என்று கேட்டேன். அவர் இது ஹஜ்ஜின்
அமல், இதில் நிபந்தனை எதுவும் கூடாது. உங்களுக்கு பிரியமானதை கொடுங்கள் என்றார்.
கிப்லாவிற்கு எதிர் திசையில் உட்கார்ந்தேன்
அவர் என்னை கிப்லாவை நோக்கி உட்காருமாறு சைகை செய்யவே கிப்லாவை நோக்கி உட்கார்தேன்.
இடது தலையை முதலில் மழிக்க கொடுத்தேன் அவர் வலது தலையை காட்டு என்றார்.
நான் சும்மா உட்கார்திருந்தேன். தக்பீர் செல்லிக் கொண்டிரு என்றார்.
வேலை முடிந்ததும் எழுந்து என் இருப்பிடம் செல்ல நினைத்தேன். இரண்டு ரக்க அத்
தொழுது விட்டுச் செல் என்றார்.
நான் ஆச்சரியத்தோடு இவற்றை எல்லாம் எங்கே கற்றீர்கள் என்று கேட்டேன்.
நான் எங்கே படித்தேன். அதா பின் அபீ ரபாஹ் இவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்தேன்.
அதிலிருந்து என்னிடம் வருபவர்களுக்கு இப்படிச் செய்கிறேன் என்றார் அந்த நாவிதர்.
நீதிபதி இயாஸ்
உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களது காலத்தில் பஸராவிற்கு ஒரு நீதிபதியை நியமிக்க
வேண்டியிருந்தது, பஸரா அன்று மிக முக்கியமான நகராக விளங்கியது. அரசப்பிரதாணிகள் வியாபாரப்
பிரமுகர் நிறைந்த அந்த நகரில் நீதியாகவும் துணிச்சலாகவும் திகழும் ஒரு நீதிபதி தேவைப்பட்டார்.
அரசர் அதிகம் யோசித்தார். இறுதியில் பஸராவின் அதிகாரி அதீய் பின் அர்தா விடம் إياس بن معاوية المزني - القاسم بن ربيعة الحارثي இருவரில் ஒருவரை நீதிபதியாக நியமிக்க கேட்டுக் கொண்டார்.
அதீய் இருவரையும் அழைத்து அ ரசரின் திட்டத்தை சொன்னார். மிகவும் புத்திசாலியான இயாஸ்
தலைவரே இது விசய்த்தில் பொறுத்தமானவரை தேர்ந்தெடுக்க இந்நகரின் பெரும் அறிஞர்களான ஹஸன்
அல் பஸரீ அல்லது இப்னு சீரீன் இருவரில் ஒருவரை நீங்கள் ஆலோசனை கேட்கலாமே என்றார். இந்த
இருவருக்கும் காஸீமுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது அவருக்கு தெரியும், இந்த அறிஞர்கள்
காஸீமைத் தான் கூறுவார்கள். இது காஸீமுக்கு தெரிந்தது அவர் சமாளித்துக் கொண்டு உடனடியாக
ஒரு சத்தியம் செய்தார்; அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை விட இயாஸே நீதிபதிக்கு பொருத்தமானவர்.
அதன் பிறகு அதிகாரியை பார்த்து தலைவரே நான் சத்தியம் செய்தது சரி
என்றால் இயாஸையே நீங்கள் நியமியுங்கள். நான் பொய் சத்தியம் செய்து விட்டேன் எனில் என்னை
நீங்கள் நீதிபதியாக நியமிக்க கூடாதல்லாவா என்றார்.
அதிகாரி அதீய திகைத்து நின்றார்.
சட்டென இயாஸ் சொன்னார். தலைவரே இவர் நீதிபதி பதவியை நரகத்தின்
ஓரத்தில் நிற்பது போல கருதுகிறார். அதனால் அதிலிருந்து தப்பிக்க சத்தியம் செய்து விட்டார்.
பிறகு அதற்கான பரிகாரம் செய்து மீள நினைக்கிறார். எனவே இவரையே நியமியுங்கள் என்றார்.
அதீ சட்டென் சொன்னார். இந்த உண்மையை கண்டுபிடிக்கும் வேகம் உங்களது
திறமையை பறை சாற்றுகிறது, நீங்களே நீதிபதியாக இருக்க தகுந்தவர் என்று சொல்லி இயாஸை
பஸராவின் நீதிபதியாக் நியமித்தார்.
கல்வியை கற்றுக் கொண்டு தீனுக்கு சேவை செய்வதில் போட்டி போட்டுக்
கொண்டு செயல் பட்ட இவர்கள் பதவிக்கும் பட்டத்திற்கு சிறிதும் ஆசைப்பட வில்லை,
இந்த நிகழ்வில் இடம் பெற்ற அணவரும் மிகச் சிறந்த தாபிஃகள்
இது போன்ற தாபிஃகளின் எண்ணிக்கை ஏராளம். தாபிஈன்களை பல அடுக்குகளாக சட்ட அறிஞர்கள்
பிரிக்கிறார்கள்.
அவர்களில் 15 அடுக்குகள் தபகாக்கள் உண்டு
قال أبو عبد الله الحاكم رحمه الله تعالى في معرفة
علوم الحديث في معرض كلامه على التابعين ( وهم خمس عشرة طبقة آخرهم من لقي أنس بن
مالك من أهل البصرة ومن لقي عبد الله بن أبي أوفى من أهل الكوفة ومن لقي السائب بن
يزيد من أهل المدينة ومن لقي عبد الله بن الحارث بن جزء من أهل مصر ومن لقي أبا
أمامة الباهلي من أهل الشام )
தாபிஃகளின் காலம் 110 லிருந்து 170 வரையாகும்
قال السيوطي: والأصح
أنه ـ يعني القرن ـ لا ينضبط بمدة، فقرنه صلى الله عليه وسلم هم الصحابة
وكانت مدتهم من المبعث إلى آخر من مات من الصحابة مائة وعشرين سنة، وقرن التابعين
من مائة سنة إلى نحو سبعين، وقرن أتباع التابعين من ثم إلى نحو العشرين ومائتين
انتهى.
தப உத்தாபிஈன்
تبع التابعي هو من لقي التابعي
இவர்களது காலம் ஹிஜ்ரீ இருநூற்றூ இருபது வரையுமாகும்.
இந்தக் காலத்திலுள்ள பெருமக்களின் எண்ணிக்கையும் ஏராளமாகும்
இவர்களில் முக்கியமானவர்கள்
இமாம் அபூஹனீபா ரஹ்
இமாம் மாலிக் ரஹ்
ومن أشهر أتباع التابعين الإمام مالك بن أنس ومحمد الباقر وجعفر الصادق بالمدينة المنورة، وسفيان بن عيينة بمكة المكرمة، والأوزاعي بالشام، والليث بن سعد بمصر، وأبو يوسف بالعراق.
இந்தக்
காலத்தில் உள்ளவர்கள் நான்கு மத்ஹபுகளின் இமாம்களும்.
இமாம் அபூஹனீபா
ரஹ் ஹிஜ்ரி - 80 – 150
இமாம் மாலிக்
ரஹ் 93 – 179
இமாம் ஷாபி
ரஹ் 150 – 204
இமாம் அஹ்மது
பின் ஹன்பல் ரஹ் 164 – 241
இதை
தொடர்ந்து இதற்கு அடுத்த கால
கட்டத்தில் வந்தவர்கள் பிரபல ஹதீஸ் நூல்களின்
தொகுப்பாளர்கள்.
இமாம் புகாரி
194 புகாராவில் பிறந்தார். (13 شوال 194 هـ - 1 شوال 256 هـ)
இமாம் முஸ்லிம்
204 நைஸாபூரில் பிறந்தார். (206 هـ - 261 هـ
இமாம் நஸஈ
215 ல் பிறந்தார் (215 هـ - 303 هـ)،
இமாம் அபூதாவூத்
ஸஜஸ்தானில் 202 ல் பிறந்தார். (202-275 هـ)
இமாம் துர்முதி
209 ல் பிறந்தார் . (209 هـ - 279 هـ)
இமாம் இப்னு மாஜா 209 ல் பிறந்தார். 209 هـ 273 هـ
ஹிஜ்ரீ 200
லிருந்து முன்னூறுக்குள்ளாக இந்தப் பெருமக்கள் வாழ்ந்து மகத்தான பெரும் சாதனைகளை இந்த
மார்க்கத்திற்காக செய்துள்ளனர்.
இவர்கள் மட்டுமல்லாது திருக்குர் ஆனிய விரிவுரையாளர்களின் ஒரு பெரும் கூட்டம், ஆண்மீக வழிகாட்டிகளின் ஒரு பெரும் கூட்டம். இராணுவத் தளபதிகளின் ஒரு கூட்டம் என எண்ணற்ற மனித வளங்களை சுமந்து நிற்கிற மார்க்கம் இஸ்லாம்.
இவர்கள் மட்டுமல்லாது திருக்குர் ஆனிய விரிவுரையாளர்களின் ஒரு பெரும் கூட்டம், ஆண்மீக வழிகாட்டிகளின் ஒரு பெரும் கூட்டம். இராணுவத் தளபதிகளின் ஒரு கூட்டம் என எண்ணற்ற மனித வளங்களை சுமந்து நிற்கிற மார்க்கம் இஸ்லாம்.
இவர்களின் பெயர்களை
கூறுவதற்கே நம்மிடம் நேரம் இல்லை . இவர்களின் சாதனைகளை பட்டியலிடவும் வாழ்க்கை சரிதைகளைப்
பேசவும் நம்மிடம் நேரம் எங்கே இருக்கிறது.
இவர்களுக்குப்
பின்னாலும் நம் வரைக்கும் நமது மார்க்கத்தில் மகத்தான முன்னோடிகளின் பட்டியல் பிரம்மாண்டமாக
நீளுகிறது.
அந்த முன்னோடிகள்
ஒவ்வொருவரிடமிருந்தும் இந்த மகத்தான மார்க்கத்தை கடைபிடிப்பதற்காக ஊக்க சக்தி நமக்கு
கிடைக்கிறது.
அன்பானவர்களே
இந்தப் பெருமக்களின் வழியே தீனைப் படிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அதுவே சரியான
வழி என நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இன்றைய சூழலில்
அதிக குழப்பத்திற்கு ஆட்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தெளிவடைய வேண்டிய மிக முக்கிய விசயம்
. இது
அல்லாஹ் கிருபை
செய்வானாக!
No comments:
Post a Comment