வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 20, 2017

விஞ்ஞானத்தை அடிபணியவைக்கும் முஃஜிஸா

அதிசயமே அசந்து போகும் அதிசயம்.
மிஃராஜ் முஸ்லிம் உம்மத்தின் ஆழ்ந்த கவனத்திற்குரிய ஒரு நிகழ்வாகும்.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தரப்பட்ட முஃஜிஸாக்களில் சந்திரண் பிளந்த முஃஜிஸா இந்த அளவு நினைவு கூறப்படுவதில்லை.
சந்திரனை பிளந்து காட்டியது உம்மத்திற்காக.
மிஃராஜ் முஹம்மது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்காக. பிரதானமாகவும். அவர் வழியாக உம்மத்திற்கு அடுத்த்தாகவும் அற்புதமாகிறது.
மிஃராஜின் காலம்.
தாயிப் பயணத்தின் தோல்வியில் பெருமானார் (ஸல்) அவர்கள் துவண்டு போயிருந்த நேரம்.
وقد سافر إليها النبي صلى الله عليه وسلم لثلاث بقين من شوال سنة عشر من المبعث (يناير - فبراير سنة 620 م) ومعه مولاه زيد بن حارثة يلتمس من ثقيف النصرة فعمد إلى جماعة من أشراف ثقيف ودعاهم إلى الله فقال واحد منهم: أما وجد الله أحداً يرسله غيرك؟ وقال الآخر: والله لا أكلمك أبداً لأنك إن كنت رسولاً من الله كما تقول لأنت أعظم خطراً من أن أرد عليك الكلام ولئن كنت تكذب على الله ما ينبغي لي أن أكلمك، وأغروا به سفهاءهم وعبيدهم يسبونه ويرمونه بالحجارة ويصيحون به، حتى اجتمع عليه الناس وألجأوه إلى حائط وقد أدموا رجليه فلما اطمأن ورجع عنه السفهاء قال عليه الصلاة والسلام: «اللهم إليك أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس، اللهم يا أرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني؟ إلى بعيد يتجهّمني أو إلى عدو ملكته أمري، إن لم يكن بك عليّ غضب فلا أبالي ولكن عافيتك هي أوسع، إني أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات، وصلح عليه أمر الدنيا والآخرة من أن تنزل بي غضبك أو تحل بي سخطك لك العتبى حتى ترضى لا حول ولا قوة إلا بك». وهذا الدعاء مشهور بدعاء الطائف،
மிஃராஜ் பயணம் அசைக்க முடியாத உறுதியையும் உற்சாகத்தையும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கொடுத்தது.
மிஃராஜிற்குப் பிறகு தனது வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெருமானார் (ஸல்) அலாதியான உறுதிப்பாட்டை வெளியிடத் தவறவில்லை.
தவ்ரு குகையில்அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்றார்கள்
உஹது யுத்தத்திற்கு பிறகு அபூசுப்யான் அடுத்த ஆண்டு சந்திப்போம் என சவால் விட்டிருந்தார். அடுத்த ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அப்போது சஹாபாக்களில் சிலர் இது தேவையா எனக் கருதிய போது நான் தனியாகவேனும் செல்வேன் என்றார்கள்.
இறுதியாக ஹுனைன் யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையில் இருந்த முஸ்லிம்கள் மலைக் கனவாய்களில் மறைந்திருந்த எதிரிகள் தொடுத்த  திடீர் தாக்குதலில் முஸ்லிம்கள் சிதறி ஓடிய போதும் போர்க்களத்தில் தனியாக நின்ற பெருமானார் (ஸல்)
انا نبي لا كذب أنا إبن عبد المطلب  என பாடிய படி தனியே நின்றார்கள். நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.

மிஃராஜிற்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களின் பிரச்சாரப் பயணம் மிக உறுதியாக நடக்கத் தொடங்கியது.
அதுவரை தான் இருக்கிற இடத்தில் அல்லது மக்கள் கூடுகிற சந்தையில் ஹஜ்ஜுக்கு மக்கள் கூடுகிற போது தனது பிரச்சாரத்தை நிகழ்த்தி வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குப் பிறகு அரபு கோத்திரத்தாரை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று தீனுக்கு அழைத்தார்கள்/.

முஹம்மது ரஸூலுல்லாஹ் வரலாற்று நூலில் மிஃராஜ் நிகழ்ச்சியைப் பற்றியை பேசியதற்கு அடுத்த்ததாக இந்த தலைப்பு இடம் பெற்றுள்ளது.

عرض الرسول صلى الله عليه وسلم نفسه على قبائل العرب

وكان يطوف على الناس في منازلهم ويقول: «يا أيها الناس إن الله يأمركم أن تعبدوه ولا تشركوا به شيئاً»

சிலர் அதிகாரத்தில் பங்கு கேட்டார்கள். அது அல்லாஹ்வின் கையில் இருக்கிறது என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய போது அம்மக்கள் தீனுக்கு வர மறுத்தார்கள்/

وروى ابن إسحاق: أنه صلى الله عليه وسلم عرض نفسه على كندة وكلب وعلى بني حنيفة وبني عامر بن صعصعة فقال له رجل منهم: أرأيت إن نحن بايعناك على أمرك ثم أظفرك الله على من خالفك أيكون لنا الأمر من بعدك؟ فقال: الأمر إلى الله يضعه حيث يشاء، فقال له: أنقاتل العرب دونك فإذا أظفرك الله كان الأمر لغيرنا؟ لا حاجة لنا بأمرك وأبوا عليه

பெருமானார் (ஸல்) அவர்களி பிரச்சார வேகத்தைப் பார்த்து அபூ லஹ்பு ஒரு உத்தியை கையாண்டான். நபி (ஸல்_) அவர்கள் செல்லுகிற இடங்களுக்கெல்லாம் அவனும் சென்றான். பெருமானார் (ஸல்) அவர்கள் பேசி முடித்தவுடன் அவன் எழுந்து பேசுவான்.

وكان أبو لهب يمشي وراءه ويقول: إن هذا يأمركم أن تتركوا دين آبائكم

அவனது இந்த திட்டம் வேலை செய்தது. பல கோத்திரத்தாரும் இதை சொல்லி பெருமானாரைப் புறக்கணித்தனர்.

وروى الواقدي أنه صلى الله عليه وسلم أتى بني عبس وبني سليم وبني محارب وفزارة ومرة وبني النضر وعذرة والحضارمة فردوا عليه صلى الله عليه وسلم أقبح الرد وقالوا: أسرتك وعشيرتك أعلم بك حيث لم يتبعوك،

எந்த நிராகரிப்பும் பெருமானாரை பின்னடையச் செய்யவில்லை.  நான யாரையும் நிர்பந்தப் படுத்தவில்லை.எனது பிரச்சாரத்தை ஏற்பவர் அதை திருப்திப் பட்டுக் கொண்டால் அது போதும், என்து பிரச்சாரத்தை ஏற்காதவர்களை நான் நிர்பந்தப் படுத்தப் போவதில்லை. என்னைக் கொல்லாமல் விட்டீர்கள் என்றால் போதும் நான் என் கடமைய செய்வேன். இறைவனின் செய்தியை சொல்வேன் என்றார்கள்.

وما زال صلى الله عليه وسلم يعرض نفسه على القبائل في كل موسم يقول: «لا أكره أحداً على شيء، من رضي الذي أدعو إليه فذاك ومن كره لم أكرهه وإنما أريد منعي من القتل حتى أبلغ رسالة ربي»،

இந்தப் பிரச்சாரப் முயற்சிகள் எதுவும் வெற்றி பெற வில்லை.

உனது குடும்பத்தினர் தான் உன்னை நன்கு அறிந்தவர்கள் அவர்களே ஏற்றுக் கொள்ளாத போது நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது என்று கூறியே பெருமானாரை தவிர்த்தனர்.

فلم يقبله صلى الله عليه وسلم أحد من تلك القبائل ويقولون: قوم الرجل أعلم به، أترون أن رجلاً يصلحنا وقد أفسد قومه؟

இதில் நாம் கவனிக்க வேண்டியது.
தாயிப் பயணத்தில் மனம் ஒடிந்து நின்ற பெருமானார் (ஸல்) அவர்கள்,. மிஃராஜுக்குப் பிறகு அதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அதில் பயன் அதிகம் இல்லை என்ற போது பிரச்சாரம் சிறிதும் தளர்வடையவில்லை.

இது மிஃராஜின் பலனையும் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

பெருமானார் (ஸல்) அவர்களின் தொடர் முயற்சிகளில் தோல்விகளே பதிலாக கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் தான் மதீனாவின் அன்சாரிகள், அஸ்அது பின் ஜராராவின் (ரலி) அவர்களின் தலைமையில் வந்து பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் வந்து பை அத் செய்தனர். தஙகளது ஊருக்கு வந்து விடுமாறு பெருமானாரை அழைத்தனர்.

இஸ்லாம் வென்றது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் வெளிப்படுகிற அலாதியான மன உறுதிக்கும் மிஃராஜுக்கும் இடையே முக்கியத் தொடர்பு இருக்கிறது.

இந்த மகத்தான பெரு நிகழ்வை. ஈமானிய அற்புதங்களின் களஞ்சியத்தை முஸ்லிம் உம்மத் நினைவு கூறாமல் இருக்கலாமா ?

அதனாலேயே நமது முன்னோர்கள். ரஜப் 27 ல் மிஃராஜின் மகோன்னதங்களை நினைவு கூர் வதற்கான ஏற்பாட்டை செய்தார்கள்.

ரஜப் 27 தான் மிஃராஜின் இரவு என்பதை முஸ்லிம் உம்மத் பெருவாரியாக ஒத்துக் கொண்டுள்ளது என்பதை இப்னு ஹஸ்மு ரஹ் அவர்கள் தனது மராத்திபுல் இஜ்மா எனும் நூலில் குறிப்பிடுகிறார்சமுதாயம் ஒன்று பட்டு நிற்கிற செய்திகளின் தொகுப்பு அது.

இந்த தேதியில் கருத்டு வேறுபாடு இருக்கலாம். அது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியே அல்ல.

பெரும்பாலான மக்கள் அங்கீகரித்து நடைமுறையில் உள்ள ஒரு செய்தியை மறுக்கிறவர்கள், தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என்று சொல்கிற புத்திசாலிகள் (?)  என்று தான் சொல்ல வேண்டும்.
மிஃராஜ் இரவின் புனிதத்திற்கு எதிராக தில்லி தாருல் உலூம் தேவ்பந்தின் பத்வா என சில செய்திகள் உலா வருகின்றன்.

( அது போதிய விசய ஞானம் அற்ற சில ஆலிம் பட்டதாரிப் பெயர் தாங்கிகளின் உளறல்களாகும். முஹத்திஸ் அப்துல் ஹக் தஹ்லவி தன்னுடைய ما ثبت بالسنة في أيام السنة   என்ற தன்னுடைய நூலில் ரஜப் 27ம் நாள் இரவில் மிஃராஜின் சிறப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்கள்.
إعلم أنه قد إشتهر فيما بين الناس بديار العرب أن معراجه صل الله عليه وسلم كان لسبع وعشرين من رجب. وموسم الرجبية فيه متعارف بينهم قريبا من موسم الحج يأتون لزيارة النبي من بلاد النائية ، ومن كل واد بعيد زفج عميق. 

பரா அத்துடைய இரவை போலவே ரஜபுடைய இரவிலும் மக்கள் தாமாகவே சில காரியங்களை இபாதத் என்ற எண்ணத்தில் செய்வதையே சில பத்வாக்களில் முன்னோர்கள் கண்டித்துள்ளார்கள். அதை ஒட்டு மொத்தமாக மிஃராஜ் இரவுக்கான மறுப்பு எனக் காட்டுவது பேதமையாகும். இன்னும் சில இடங்களில் மிஃராஜ் இரவின் நாள் குறித்து சந்தேகத்த்தை கிளப்பி அதன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிகள் நடக்கிறது, அது வஹாபிஸத்தை காதலிக்கிற சில ஆலிம்கள் தம்மை உண்மையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் சப்பை காரணங்களுக்குள் மறைந்து கொள்கிற வஞ்சகமாகும். ஆலிம்களும் சமுதாயமும் இது விசய்த்தில் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த நல்ல நேரத்தில் இத்தகைய புல்லுறுவிகளைப் பற்றி பேசுவது தேவையற்றது எனில் அது மாதிரியான மஹல்லாக்களில் இந்தச் செய்தியை பேசுவதை ஆலிம்கள் தவிர்த்துக் கொள்க!
மிஃராஜ் பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்வில் மக்த்தான் தாக்கத்தை செலுத்திய நிகழ்வாகும்.
முஸ்லிம் உம்மத்திற்கும் தொழுகை போன்ற மகத்தான பலாபலன்களை அது வழங்கியுள்ளது.
மிஃராஜின் மிக உன்னதமான பலன்
உம்மத்தின் ஈமானுக்கு மிஃராஜ் வலுவேற்றியது, சஞ்சலக் காரர்களை வெளியேற்றியது,
மிஃராஜினால் யார் சஞசலமடைந்தார்கள் ? யார் தான் தோன்றித்தனமான முஸ்லிம்களாக இருந்தார்களோ அவர்களே சஞ்சலமடைந்தனர்.
இது பெருமானார் சொன்னது. அதற்கு மேல் வேறு என்ன தேவை என்று நினைத்த சித்தீக்குகளின் ஈமான் சிறப்படைந்தது.
ஒவ்வொரு மிஃராஜின் போதும் எண்ணி எண்ணி மகிழ்வதற்கும் நம்மை பக்குவப்படுத்திக் கொள்வதற்குமான செய்தியாகும் இது.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் இத்தகைய மகா அற்புதங்களின் எதார்த்தங்களை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கிறத. அது மட்டுமல்ல, இந்த எதார்த்தங்களை புரிந்து கொள்வதன் பயனாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் கடமையும் எளிதாக புரிகிறது.
இரவின் கொஞ்ச நேரத்தில் இஸ்ரா நடந்ததாக குர் ஆன் கூறுகிறது. (லைலன்)
நவீன் விஞ்ஞானத்தின் தந்தை எனக் கருதப்படுகிற ஆல்பர் ஐன்ஸ்டீன் கூறிய ரிலேட்டிவிட்டி தத்துவம் ஒரு செய்தி சொல்கிறது.
ஒளியின் வேகம் ஒரு செகண்டிற்கு ஒரு இலட்சத்து 86 ஆயிரம் மைல்கள்.(கீ,மி அல்ல- மைல்)
இந்த ஒளியின் வேகத்தின் 90 சதவீத வேகத்தோடு (அதவாது செகண்டிற்கு 160 மைல் வேகத்தில்) ஒரு மனிதன் வானை நோக்கிப் பயணித்தால். பூமியின் மணி நேரங்களில் பாதி அவனுக்கு குறைந்து விடும். அதாவது பூமி 10 மணி நேரங்களை கடந்திருக்கும் என்றால் அவனுக்கு 5 மணி நேரமே கடந்திருக்கும்.
அதே மனிதன் ஒளியின் முழு வேகத்தில் - அதாவது செகண்டிற்கு 186000 மைல் வேகத்தில் ஒரு மனிதன் பயணித்தால் அவனுக்கு டைம் என்ற கணக்கே இருக்காது. அதாவது பூமியில் 10 மணி நேரம் கடந்திருக்கும் என்றாலும் அவரைப் பெருத்தவரை ஒரு நிமிசம் கூட கடந்திருக்காது
ஒரு ஒளியின் வேகமே இப்படி நேரத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்கிற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் பயணம் செய்த புராக் மின்னல்களின் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது.
அரபியில் பர்க் என்றால் மின்னல் அதன் பன்மை புராக் ) அப்படியானால் பல ஒளிகளின் வேகத்தில் சென்ற அந்தப் பயணம் இரவின் கொஞ்ச நேரத்தில் நடந்திருப்பதை எப்படி மறுக்க முடியும் ?
நஸஈ யில் இந்த ஹதீஸ் புராக்கின் வேகத்தை பேசுகிறது.
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُتِيتُ بِدَابَّةٍ فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ خَطْوُهَا عِنْدَ مُنْتَهَى طَرْفِهَا فَرَكِبْتُ وَمَعِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَسِرْتُ
இன்றைய விஞ்ஞானம் டைம் அன்ட் ஸ்பேஸ்நேரம்ஆகாய வெளி குறித்து அதிகமாக சிந்திக்கிறது.

எந்த ஒரு காரியத்தை அதி வேகத்தில் முடிப்பபது . அதே போல செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா மனிதர்கள் தங்கமுடியுமா என்பது போன்ற ஆகாய அதிசயங்களைப் பற்றி அதிகம் ஆராய்கிறது.
அந்த விஞ்ஞானத்தை திகைப்பில் ஆழ்த்தும் வகையில் பெருமானாருடைய மிஃராஜ் அமைந்திருந்தது.
விஞ்ஞானத்தை அதிசயங்களின் புதையல் என்பார்கள். அந்த அதிசயத்தையே வியக்க வைக்கும் அதிசயமாக மிஃராஜ் அமைந்திருக்கிறது.
பொதுவாக வே நபிமார்களின் முஃஜிஸாக்கள் அவர்களது காலத்திய விஞ்ஞானத்தை வியப்பில் ஆழ்த்தி அல்லாஹ்வுக்கு அடிபணியச செய்கிற வகையில் தான் அமைந்திருக்கும்
மூஸா நபியின் காலத்தில் மந்திர தந்திரங்கள் விஞ்ஞான அதிசயங்களாக இருந்தன.
ஈஸா நபியின் காலத்தில் மருத்துவம் விஞ்ஞான அதிசயமாக இருந்தது.
இந்த நபிமார்களுக்கு தரப்பட்ட அதிசயங்கள் அவர்களது காலத்து விஞ்ஞானத்தை விஞ்சி நின்றன,
மக்களை அல்லாஹ்வுக்கு அடி பணியச் செய்தன.
பிர் அவ்னின் மந்திர வாதிகள் நிமிடச் சருக்கில் மூஸாவின் ரப்பை சரண்டைந்தனர் என்கிறது குர் ஆன்
فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى(70)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி நாள் வரைக்குமான இறைத்தூதர் அவருக்கு ஏற்ப்பட்ட அதிசய அனுபவமானது இறுதி நாள் வரைக்கும் பிறக்க கூடிய மக்களை அவர்களளவில் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும்.

லைலன் என்ற வார்த்தையின் எதார்த்தம் இன்றைய விஞ்ஞானத்தை வியப்பில் ஆழ்த்துவது போல்.
மிஃராஜ் பயணத்தில் அற்புதங்களின் பெரும் புதையல்கள் கிடக்கின்றன. சிந்திக்க்ச் சிந்திக்க மக்கள் தம்மை சிறிதாக உணர்வார்கள். அவர்கள் எத்தனை உயரத்தில் இருந்தாலும்.
அல்லஹ்வின் சக்தி எப்படிப் பட்டது ? நமது பணம் பதவி அந்தஸ்து என்ற சக்தி எப்படிப்பட்டது ?
அல்லாஹ் இந்த நிகழ்வை சுப்ஹான் என்ற வார்த்தையில் தொடங்குகிறான்.
இயல்பாக இந்த இடத்தில் பெருமானாரை சிறப்பிக்கிற வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஏனெனில் மிஃராஜ் என்பது பெருமானாருக்கான சிறப்பு.
ஆனால் அல்லாஹ் தன்னைப் போற்றி தொடங்குகிறான்.
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ
இதில் இரண்டு செய்திகள் இருப்பதாக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
1.   அல்லாஹ் பரிசுதமானவன். குறைகளுக்கு அப்பாற்பட்டவன். அவனால் முடியாதது என்று எதுவுமே கிடையாது.
2.   இது பெருமானார் நடந்து சென்ற பயணம் அல்ல. அல்லாஹ் நடத்திச் சென்ற பயணம்.
எனவே இந்தப் பயணம் குறித்துச் சிந்திக்கிற யாரும் பெருமானாரின் சக்தியை குறித்து அல்ல. அல்லாஹ்வின் சக்தியை குறித்தே சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வினால் முடியாது என்பது எதுவும் கிடையாது அவன் குறைகளுக்கு அப்பாற்பட்ட பரிசுத்தவான்.
இந்தப் பயணத்தில் சஞ்சல்ம் கொள்வதற்கான எந்த அம்சமும் இல்லை என்று அல்லாஹ்வே தொடங்கிப் பேசுகிற அற்புதம் மிஃராஜ் அதில் முஃமின்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஏராளாமான செய்திகள் இருக்கிறது.
எனவே வருகிற 24. ம் தேதி இரவு பள்ளிவாசல்களில் நடைபெறுகிற மிஃராஜ் பயான் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் ஆற்றலையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகத்துவத்தையும் அறிந்து கொள்வோம்.  மிஃராஜ் விஞ்ஞானத்தை மட்டுமல்ல. நமது மமதை போக்கையும் தான்தோன்றித்தனததையும் கூட அடிபணியச் செய்யட்டும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!






4 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் காலத்திற்கு தோதுவான கட்டுரை

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
  3. அல்ஹ்துலில்லாஹ்...

    ReplyDelete
  4. Anonymous10:09 PM

    அல்ஹம்துலில்லாஹ்! இன்ஷா அல்லாஹ் 02.02.2024 பேச இருக்கிறேன்!
    எந்த மிஃராஜில் பேசினாலும் பொருந்தும்!
    ஹள்ரத் அவர்களுக்கு மிக்க நன்றி!!
    بارك الله!

    ReplyDelete