வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 13, 2017

வஞ்சச் சேவை

இனறு சித்திரை முதல் நாள்.
தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் மாதங்கள் 12
தை , மாசி, பங்குனி,சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி,ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மார்கழி.
பண்டைய தமிழர்கள் இந்த 12 மாதங்களை ஆறு பருவங்களாக பிரித்திருந்தனர்.
1.     இளவேனில் -   ( தை---மாசி மாதங்களுக்குரியது)
2.    முதுவேனில் -   (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3.    கார் - (வைகாசி – (ஆனி மாதங்களுக்குரியது)
4.    கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5.    முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)
6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

(வேனில் = வெயில், - கார் = மழை, கூதிர் = குளிர்
சித்திரை வைகாசி ஆடி ஆவணி புரட்டாசி பங்குனி ஆகிய மாதங்கள் 31 நாட்களை கொண்டவை. ஆனி மாதம் 32 நாட்களை கொண்டது, மார்கழி மாதம் 29 நாட்களை கொண்டது. ஐப்பசி கார்த்திகை தை மாசி ஆகிய மாதங்கள் 29 மற்றும் 30 நாட்கள் மாறி மாறி வரக் கூடியவை.

உலகத்தின் பண்டைய நாகரீகத்தைச் சார்ந்த சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள் ,ஆகியோர் தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். அதை ஒட்டி தை மாதமே தமிழர் புத்தாண்டாக தொடக்கத்தில் இருந்தது.

தமிழர்கள் செய்திருந்த இந்த அருமையான ஏற்பாட்டையும் பெயர்களையும் பின்னர் வந்த ஆரியர்கள் மாற்றினார்கள்.
சித்திரையை வருடத்தின் முதல் மாதமாக ஆக்கியதோடு. ஆண்டுகளின் எண்ணிக்கையை  60 ஆக ஆக்கினார்கள்.

ஆரியர்கள் ஒரு மனிதரின் வாழ்வுக் காலத்தை 60 ஆண்டுகளுக்குள்ளானது என்று கணித்தார்கள்.  அந்த வருடங்களுக்கு பிரபவ முதல் அட்சய வரை அறுபது பெயர்களை வைத்தார்கள். அறுபது ஆண்டு முடிவதை சஷ்டியப்த பூர்த்தி என கொண்டாடினார்கள். எனவே வட இந்திய உயர் ஜாதியினரின் தாக்கத்தால் தமிழே அல்லாத அருபது ஆண்டு பெயர்கள் தமிழ் காலண்டருக்கு கிடைத்தன.  

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
சுமார் 80 வருடங்கள் கழித்து  2008 ஆண்டு  தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசு தைம் முதல்நாள்தான் புத்தாண்டு என்று அரசாணை வெளியிட்டது. ஆணால் பின்னால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2011 ம் ஆண்டு அதை இரத்து செய்தது. சித்திரை முதல் நாளே தமிழி புத்தாண்டு என அறிவித்தது.

ஆரியத் தலையீட்டுக்குப் பின் தமிழ் மாதங்கள் இந்து மத நம்பிக்கைகள் சார்தவையாக பரப்பப் பட்ட காரணத்தில் சித்திரையை புத்தாண்டு தினமாக இந்து சமூகத்தைச் சார்ந்த குறிப்பிட்ட தமிழர்கள் மட்டுமே சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதினார்கள், அந்த அடிப்படையில் இன்றை தினத்தை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.
பாரம்பரியம் மிக்க தமிழ் மக்களின் பண்பாடு வட நாட்டு ஆரிய ஆதிக்கத்தின் காரணமாக இப்போது தீர்க்கப் பட முடியாத குழப்பத்திற்குள் சிக்கிக் கிடக்கிறது.

இது முஸ்லிம்களின் இன்றைய வாழ்க்கைகு ஒரு பாடமாகும்.
பழமையான அமைப்பு முறைகள் மீது நவீனத்துவ அமைப்புக்களின் ஆதிக்கம் அதிகரிக்கிற காரணத்தால் முஸ்லிம் சமுதாயத்தின் சிக்கல் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மிக கடுமையான பல் வேறுபட்ட சிக்கல்களுக்குள் சமுதாயம் சிக்கி இருக்கிறது என்பது இன்று நாம் அனைவரும் கவலைப் படுகிற உண்டமை.
உலக மக்கள் மத்தியில் இழிவாகவும். நமக்கிடையே புகைச்சல்களாகவும் எத்ரிகளின் சதித் திட்டங்களுக்கு சவுகரியமான களமாகவும் இன்றைய முஸ்லிம்களின் வாழ்வியல் அமைந்திருக்கிறது.

சமுதாயம் இந்த வரலாற்றுச் சங்கடத்திலிருந்து  மீள் வதற்கு ஒரு துரும்பையேனும் அசைத்துப் போட வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிமாக வாழ்கிற ஒவ்வொரு இதயத்திற்கும் இருக்கிறது. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும். இளைஞனாக இருந்தாலும் முதியவராக இருந்தாலும் படித்தவருக்கும் பாமரருக்கும்.

இந்த ஜும் வின் வழியாக நம்முடைய தாழ்மையான கோரிக்கை என்ன வென்றால் சமுதாயத்தின் சங்கடமான சூழலை மாற்ற உதவ நம்மால் முடிகிறதா என்பதை விட அதிகப்படியான சங்கடத்தை உருவாக்காமல் நம்மால் இருக்க முடியுமா என்று நம்மில் ஒவ்வொரு வரும் யோசிக்க வேண்டும். இதுவே இன்றைய மிக முக்கிய தேவையாகும்..

நம்மில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான கருத்தும் ஆர்வமும் இருக்கிறது.
·       
மத்ஹபு வேண்டும். வேண்டாம்
·        அரசியலில் ஈடுபாடு கட்டாயம். இல்லை.  

இந்த கருத்துவேறுபாடுகளை எப்படி அணுகுவது. அருள் கூர்ந்து 
இமாம்களின் வழிமுறையை பாருங்கள்.

பெண்களை தொட்டால் ஒழு முறியாது என இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூற அதற்கு நேர் மாறாக இல்லை முறியும் என இமாம் ஷாபி ரஹ் அவர்கள் கூறினார்கள். .

மனித வாழ்வில் அன்றாடம் தொடர்புடைய ஒரு மிக முக்கியமான சட்டத்தில் நேர் எதிர் எதிரான இரண்டு கருத்துக்களை இந்த இமாம்கள் வேண்டு மென்றே ஒருவருக்கு பிடிவாத குணத்தோடோ அல்லது நான் தான் பெரியவன் என்ற ஆணவத்தோடோ வெளியிட வில்லை. இயல்பாக அவரரவர்களி ஆய்வு முடிவுகளாக வெளியிட்டார்கள்.
நீங்கள் பெண்களை தொட்டால் அங்கசுத்தி அல்லது தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்று குர் ஆன் கூறுகிறது

وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

இதில் லமஸ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.
லமஸ் என்ற வார்த்தக்கு உடலால் தொடுதல் என்றும் ஒரு பொருள் உள்ளது. (பிஸிகல் டச்)  உடலுறவு (செக்ஸுவல் டச்) என்றும் ஒரு பொருள் உண்டு.

இமாம் ஷாபி முதல் பொருளை எடுத்துக் கொண்டார்கள், அதனால் ஒளு செய்து விட்டு பெண்களை தொட்டால் ஒளு முறிந்து விடும் என்றார்கள்.
இமாம் அபூஹனீபா இரண்டாவது அர்த்தம் சரியானது என்றார்கள் . அதனால் பெண்களை சாதாரணமாக தொடுவதால் ஒழு முறியாது என்றார்கள். ஒவ்வொரு தரப்பும் தமது ஆய்வுக்கான நியாயமான காரணங்களையும் முன் வைத்துள்ளார்கள்/

இக்கருத்துக்களை வெளியிட்ட இமாம்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்தவரைப் பற்றிய் அவருடைய கருத்துக்களை பற்றிய அறிமுகமும் தெளிவும் இருந்தது.

ஒருவரும் மற்றவரை குறை சொன்னதில்லை. மாறாக சரியான புரிந்துணர்வுடன் – குர் ஆன் ஹதீஸிலிருந்து அவருக்கு கிடைத்த ஆய்வு இது நான் செய்த ஆய்வு இது என வெளிப்படுத்தினார்கள்.
இப்படி இரண்டு கருத்துக்கள் சொல்வதற்காக அவர்கள் கூச்சப்பட வோ அச்சப்ப்டவோ இல்லை,

காரணம் பெருமானார் (ஸ்ல்) அவர்களின் அறிவுரை தெளிவாக இருந்தது.
عن عمرو بن العاص  أنه سمع رسول الله[ يقول: «إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران، وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر
.
இரண்டு இமாம்களுமே தாங்கள் ஆய்வு செய்வதன் மூலம் முஸ்லிம் உம்மத்திற்கு நன்மை செய்வதை உணர்ந்தர்கள். அதனால்
·        ஒருவரை ஒருவர் தூற்ற வில்லை..
·       
நீ என் கருத்துக்கு வந்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை.
·        அடுத்தவர் மீது ஆதிக்கம் செய்யும் எண்ணம் அவர்களுக்கு அறவே இருக்கவில்லை.

இதனால் ஏராளமாக கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் ஒருவரை ஒருவர் தாராளமாக பாராட்டினார்கள்.  து ஆ செய்தார்கள்.

இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அற்புதமான உதாரண புருஷர்களாக திகழந்தார்கள்.

இமாம் அபூஹனீபா குறித்து இமாம் ஷாபி

قال الشافعي: الخلق كلهم عيال أبي حنيفة في الفقه
وفى رواية من أراد أن يتبحر في الفقه فهو عيال على أبي حنيفة:

இமாம் அபூஹனீபா குறித்து இமாம் மாலிக்

وقال الشافعي: قيل لمالك هل رأيت أبا حنيفة، قال: نعم رأيت رجلا لو كلمك في هذه السارية أن يجعلها ذهبا لقام بحجّته 


இமாம் ஷாபி குறித்து இமாம் அஹ்மது பின் ஹன்பல்

قال أحمد بن حنبل: (كان الله تعالى قد جمع في الشافعي كل خير   -  المجموع

இமாம் அஹ்மது (ரஹ்) இமாம் ஷாபிஈ க்காக தொழுகையில் துஆ செய்பவராக இருந்தார்.
كان القطان وأحمد يدعوان للشافعي في صلاتهما-المجموع

இமாம் ஷாபி தன்னுடைய மாணவர் என்ற போதும் ஹதீஸ்கலையில் அவருடைய பெருமை எத்தகையது, உம்மு என்ற நூலின் மகத்துவம் எத்தகையது என்பதை இமாம் முஹம்மது (ரஹ்) கூறுகிறார். கூறுகிறார்

ஹதீஸ் துறை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் எனில் அது ஷாபியின் நாவைக் கொண்டுதான்.

قال محمد بن الحسن الشيباني: (إن تكلم أصحاب الحديث يوماً ما فبلسان الشافعي) المجموع 1/ 35 (

இமாம் அஹ்மது குறித்து இமாம் ஷாபி (ரஹ்)

قال حرملة بن يحيى: (سمعت الشافعي يقول: خرجت من بغداد وما خلّفت بها أحدا أتقى ولا أروع ولا أفقه أظنه قال ولا أعلم من أحمد بن حنبل  (طبقات الحنابلة )

மத்ஹபு சட்டங்களிடையே எத்தனை எத்தனை கருத்து வேறுபாடுகள். வாதங்கள். பிரதிவாதங்கள். ?
ஆனால் அவை அத்தனைக்கும் பிறகு இந்த இமாம்கள் இஸ்லாமிய சகோதரத்துவத்தை அதி அற்புதமாக நிலை நாட்டினார்களே எப்படி ?
இவர்கள் உருவாக்கிய சமூக அமைப்பு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கூட கருத்து வேறுபாடுகளை தாண்டி பரஸ்பரஸ்பரம் மரியாதையடும் நல்லிணக்கத்தோடும் நடந்து கொள்கிறதே எப்படி ?
சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தனது தீன் சேவையை உணர்ந்து கொண்டார்கள். பிறரின் சேவையை மதித்தார்கள்..

ஒருவரை விட மற்றவர் தம்மை மேலானவராக கருதிக் கொள்ள வில்லை. மேதமையை காட்ட வோ ஆதிக்கம் செய்யவோ இல்லை.

அடுத்தவரை ஆதிக்கம் செய்ய கனவிலும் நினைக்காத உன்னத தன்மைக்கு ஒரு உதாரணம் பாருங்கள்.

இமாம் ஷாபி சொல்கிறார்கள். நான் வாதம் செய்கிற போது எதிராளி தவறிழைக்க வேண்டும் என ஆசைப்பட மாட்டேன்,
قال الشافعى: (ما ناظرت أحدا فأحببت أن يخطئطبقات الشافعية الكبرى (
இமாம்களின் நோக்கம் தீன் பலப்பட வேண்டும் என்பதாக இருந்ததே தவிர. தனது கட்சி வலுப்பெற வேண்டும் என்பதல்ல. !

மாஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ். அல்லாஹு அக்பர்
மக்தபுகளில் இரண்டு சட்டங்களும் போதிக்கப்படுகிறது எந்த வேறுபாடும் இல்லாமல்.

சட்ட அறிஞர்கள்  தேவைப்படுகிற இடங்களில் மாற்றுமத்ஹபுகளின் சட்டத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஒரு மத்ஹபின் படி தீர்ப்பு ஒன்றாக இருக்கும் போது காலச்சூழ்நிலையில் அத்தீர்ப்பை செயல்படுத்து அதிகப்படியானசிரமமாகிவிடும் எனும் போது மாற்று மத்ஹபின் தீர்ப்புக்களைதாராளமாக பயன்படுத்திக் கொள்ள சுன்னத் வல் ஜமாத்தின்முப்திகள் சகஜமாக அனுமதித்து வருகிறார்கள்

உதாரணத்திற்கு திருமண பந்ததத்தை மிக வலிமையானஉறவாக போற்றுகிற இமாம் அபூஹனீபா ரஹ் ஒரு பெண்ணின்கணவர் காணாமல் போய் விட்டால் அவளது கணவரின்வயதொத்தவர்கள் இறந்து போகும் வரை காத்திருக்க வேண்டும்என்றார்கள்.

இமாம் மாலிக் அவர்களோ நான்கு வருடங்களுக்குப் பிறகுஅவளது திருமண உறவு முறித்து வைக்கப்படும் என்றார்கள்

ஹனபீ மத்ஹபின்  கருத்தை சட்டமாக செயல்படுத்து வதில்அதிகப்படியான சிரமம் இருக்கீற காரணத்தால் மாலிக்மத்ஹபின் படியே இப்போது ஹனபீ மத்ஹபைச் சார்ந்தவர்கள்பத்வா வழங்கி வருகின்றனர்,

இமாம்களின் கருத்து வேறுபாடுகளால் சமுதாயம் எவ்வளவு நன்மயை அடைகிறது பாருங்கள்.

இத்தனைக்கும் காரணம் ஒருவர் மீது ஒரு வர் மேலாதிக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் தம் தம் வழியில் மார்க்கத்திற்கான சேவையை செய்தத்தாகும்.

ஒருவரின் இடத்தை இன்னொருவர் பறித்துக் கொள்ள நினைக்கவும் இல்லை. தம் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள குறுக்கு வழியிலான திட்டங்களை நாடவும் இல்லை.

புதிய வழிகளில் புரட்சிகரமாக இஸ்லாத்த்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் சேவையாற்ற வந்தவர்கள் எவ்வளவு தூரம் சமுதாயத்தை சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறார்க:ளே ஏன் ?

அடுத்தவர் மடத்தை தனதாக்கிக் கொள்வதை வெற்றி என்று நினைக்கிறார்கள். வஞகமான வழிகளில் – இப்படிச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் எதார்த்தம் அது தான். முனாபிக் கின் குணத்தோடு இஸ்லாமிற்கு சேவை இன்று அமைப்புக்களையும் இயக்கங்களையும் சேர்ந்த சிலர்  நினைக்கிறார்கள்.

புரிந்து செய்கிறார்களா புரியாமல் செய்கிறார்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகிறது. சமுதாயத்தை சலனப்பட வைக்கிறார்கள். இவர்களின் வளர்ச்சியை கண்டு சொந்த சமுதாயமே அச்சப்படுகிற சூழ்நிலையை உருவாகிறது.

இப்போது எனக்குடெலிகிராமில் வந்த ஒரு செய்தி.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். ஹள்ரத்
நான் -------------------------------- சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் இமாமாக உள்ளேன்.
------ இயக்கத்திலுள்ள சிலர் நமது பள்ளி நிர்வாகத்தில் உள்ளார்கள்.  அவ்வியக்கத்தின் பெண்கள் அமைப்பான --- சர்பாக பெண்கள் பயான் பள்ளிவாசலில் நடத்துகிறார்கள்.
இதை எப்படி தடுப்பது? ஹள்ரத்! நிர்வாகத்தில்லுள்ள  பலரும் மதில் மேலுள்ள பூனைகள்.
என்னிடம் தெரியப்படுத்தாமலேயை  வர்கிற ஞாயிறு பெண்கள் பயான் உள்ளதாக அறிவிப்பு பலகையில் பார்க்க முடிகிறது.
என்ன செய்வது ஹள்ரத். தங்களின் துஆவையும் ஆலோசனையும் எதிர்ப்பார்த்து ..........
மோதினார் ஓதி ஊதக் கூடாது என கடந்த  மாதம் நிர்வாகம் திர்மானம் போடுகிற பிண்ணனியில் ------  கார்கள் தெரிகிறார்கள். தாங்கள் சுன்னத் ஜமாஅதிற்கு எதிரானவர்கள் இல்லை என்பது போல காட்டிக் கொள்கிறார்கள் . ஆனால் அவர்கள் தொழுகை உட்பட அத்துணை விசயங்களும் போலி தவ்ஹீதின் வாடை. பள்ளிவாசலை முழுமையாக ஆக்ரமித்து விடுவார்களோ என்கிற கவலை வருகிறது..

என அந்த டெலிகிராம் செய்தி பேசுகிறது,

இது போல பல குமுறல்கள் நாடு முழுவதிலும் கேட்கின்றன.

அரசியல் ரீதியாகவும் சமுதாய விழிப்புணர்வுக்காவும் போராடுகிற நோக்கோடு உருவான பிரபலமான சில அமைப்புக்களைச் சார்ந்தவர்களைப் பற்றி இது போன்ற குற்றச் சாட்டுக்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. அமைப்புக்களின் தூண்டுதல் பேரில் இவ்வாறு செய்கிறார்களா ? அல்லது ஆர்வக் கோளாறில் அமைப்புகள் மீது கறையை ஏற்படுத்துகிறார்களா என்பது தெரியாது. ஆனால் இத்தகைய முயற்சிகள் பல இடத்திலும் நடக்கின்றன,  

தீன் பணி செய்ய வேண்டும் என்ற அமைப்புக்களின் சிந்தனையில் தவறில்லை. ஆனால் தமது தீன் பணியை தமது தளத்தில் செய்யாமல், மற்றவர்களின் இடங்களையும் ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு ஆக்ரமிக்கிற மனப் போங்கு சங்கடத்திற்குள்ளாகியிருக்கிற சமுதாயத்தை மேலும் அதிக சிக்கலுக்குள்ளாக்கி விடும்.

இப்போது ம் கூட யாரையும் புண்படுத்துவது நமது நோக்கம் அல்ல. சமுதாயம் மேலும் அதிகமாக புண்பட்டு விடக் கூடாது. தீர்க்க முடியாத குழப்பத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்பதே நமது நோக்கம்.
நீங்கள் அமைப்பில் இருக்கிறீர்களா . அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா ? நன்மையை எதிர்பார்த்து தாராளமாக செயல் படுங்கள்.!
மற்றவர்களை மலினப்படுத்த முயற்சிக்காதீர்கள்.! அடுத்தவர்களை ஆதிக்கம் செய்ய ஆசைப்படாதீர்கள்.

தீன் பணிகளில் உள்ளச் சுத்தம் மிக முக்கியம்.

அலி ரலி அவர்கள் ஒரு எதிரியோடு போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.  எதிரியின் மேலே ஏறி உட்கார்ந்து அவனை கொல்ல முற்படும் சமயத்தில் அவன அலி ரலி மீது காரி உமிழ்ந்தான். அலி ரலி அவர்கள் அவனை கொல்லாமல் எழுந்து விட்டார்கள். அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான். இது வரை நான் போரிட்டது அல்லாஹ்விற்காக, இப்போது இவனைக் கொன்றால் அது இவன் காரித்துப்பியதற்காக என்றாகிவிடும் என்ற அச்சத்தினால் நான் இவனை கொல்ல வில்லை என்றார்கள். 

பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு இந்த உள்ளச் சுத்தம் அவசியம். 

மஸ்ஜிதுகள் மதரஸாக்களுக்கு உள்ளே நுழைந்து அமைப்புக்கள் இயக்கங்கள் ஆதிக்கம் செய்ய முனையுமானால் நிச்சயம் மஸ்ஜிதுகளும் மதரஸாக்களும் தமது மதிப்பை இழக்கும்.

அது மட்டும் அல்ல. சமுதாயம் மேலும் சலனப்படும்.

சகோதரகளே! உங்களது அமைப்பு அல்லது இயக்கம் உங்களுக்கு பெரிதாக இருக்கலாம். சமுதாயம் அதை விடப் பெரிது மறந்து விடாதீர்கள்/ 

அமைப்புக்காக அயராது உழையுங்கள். அதனால் சமுதாயம் பயன் அடையட்டும்./ அல்லாஹ் உங்களது முயற்சிகளுக்கும் அர்ப்பணிப்புகளும் சிறந்த கூலியை தருவானாக!  உங்கள் மூலம் சிறந்த மறுமலர்ச்சியை அல்லாஹ் ஏற்படுத்துவானாக!

ஆனால் ஏற்கெனவே செயல் பட்டுக்கொண்டிருக்கிற மஸ்ஜிதுகள் மதரஸ்லாக்கள் பொது அமைப்புக்களை உங்களது ஆதிக்க வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக முயற்சிக் காதீர்கள்/

இன்றைய சூழலில் சமுதாயத்தை அதிகம் முடமாக்கும் முயற்சி அது. 

கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் சத்தியம் என்பதற்காக உரக்கச் சொல்லுகிறேன்.

நாம் முனாபிக் தனத்தோடு தீன் பணி ஆற்றக் கூடாது. அது தீன் பணியாக ஆகாது                                                                   நான் யாரை பணிந்து முத்தமிடுகிறோனோ அவர் தான் இயேசு என்று 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தான். இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் வஞ்சகச் சேவை செய்தான் என்கிறது பைபிள்.

அல்லாஹ் நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!

1 comment:

  1. அருமை ஜீ சமுதாயம் தெளிவிற்கும் நிர்வாகம் புரிதலுக்கும் உள்ளதாக்கட்டும் இறைவன்

    ReplyDelete