வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Friday, June 15, 2018

பெருநாள் சிந்தனை மறக்க கூடாத நினைவுகள்

 قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ (14وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ 

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.
(துஆக்கள்)

இந்த மகிழ்ச்சியான நாளில் மனச்சுமையை ஏற்படுத்தக் கூடிய ஒரு செய்திதான் என்றாலும் சமுதாயத்திற்கு நினைவூட்ட வேண்டும் என்ற கடமையில் ஒரு செய்தியை கூறுகிறேன்.

இந்த ஆண்டு ரமலான் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது மே 14 ம் தேதி அமெரிக்க அரசு ஜெரூசலமில் தனது தூதரகத்தை திறந்தது.

குதுஸ் எனப்படும் ஜெரூசலம் நகரை பெருமானார் (ஸல்) அவர்கள் சொர்க்கத்து நகரங்களில் ஒன்று என்று குறிப்பிட்டார்கள்

عن أبي هريرة ، مرفوعًا ، أَرْبَعُ مَدَائِنَ مِنْ مُدُنِ الْجَنَّةِ فِي الدُّنْيَا : مَكَّةُ وَالْمَدِينَةُ وَبَيْتُ الْمَقْدِسِ وَدِمَشْقُ 
ஜெரூசல் நகரில் தான் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் இருக்கிறது.

1993 ம் ஆண்டு  ரமலான் 15 ம் நாள் இஸ்ரேலிய இராணுவம் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலுக்குள் நுழைந்தது. பலரை கொன்றது. அதன் இறுதியில் பைத்துல் முகத்தஸ் இரண்டாக பிரிக்கப் பட்டு ஒரு பகுதி முஸ்லிம்களின் வக்பு வசமும் இன்னொரு பகுதி இஸ்ரேலின் வசமும் சென்றது. மொத்த ஜெரூசலம் நகரமுமே ஐ நாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றாலும் இஸ்ரேல் அதை எல்லாம் பொருட்படுத்திக் கொள்வதே இல்லை. அது தன்னிஷ்டத்திற்கு நடந்து கொள்கிறது.

இப்போதும் பைத்துல் முகத்தஸின் ஒரு பகுதியில் தொழுகை நடை பெறுகிறது என்ற போதும் அது ஒவ்வொரு வாரமும் போராட்டமாகவே நடைபெறுகிறது. இஸ்ரேலிய ராணுவம் தொழுகைக்கு வருபவர்களை கட்டுப்படுத்துகிறது .

ஜெரூசலத்தை இஸ்ரேல் தன்னுடைய தலை நகராக ஆக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கிறது, உலக் நாடுகள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் டெல் அவிவ் தலை நகராக இருக்கிறது. உலகின் எந்த நாட்டின் தூதரகமும் ஜெரூசலத்தில் இல்லை. இஸ்ரேலை ஏற்றுக் கொண்ட 86 நாடுகளின் தூதரங்கள் அனைத்தும் டெல் அவிவிலேயே இருக்கின்றன. ஜெரூசலத்தில் எதுவும் இல்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலை நகராக ஏற்கப் போவதாக அறிவித்தார். அத்தோடு அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்தில் திறக்கப் போவதாகவும் அதற்கு தானே நேரில் செல்லப் போவதாகவும் கூறியிருந்தார்.

அவரது திட்டப் படி கடந்த மே மாதம் 14 ம் தேதி ஜெரூசலத்தில் அமெரிக்கா தனது தூதரகத்தை திறந்தது. டிரம்ப் நேரடியாக செல்லாவிட்டாலும் அவரது மகள் இவாங்கா தனது கணவருடன் சென்று தூதரகத்தை திறந்து வைத்தார். பாலஸ்தீன் மக்கள் தமது இயலாத நிலையிலும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நமக்கெல்லாம் ரமலான் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேலிய அரசு மிக கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 55 பேர் ஷஹீதாக்கப் பட்டனர், 2450 பேர் கடும் காயமடைந்தனர். . 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இப்போதுதான்  நடந்துள்ளது.


முஸ்லிம் சமுதாயம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிகழ்வு இது. ஏனெனில் இது பைத்துல் முகத்தஸூடன் தொடர்புடையது.

இந்தச் சூழலில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு அதிபர் டிரம்ப் அடுத்த முறை இஸ்ரேல் வரும் போது ஜெரூசலத்தை சுற்றலா நகரமாக்கி அதை டிரம்புக்கு சுற்றிக் காட்டும் கைடாக தான் இருக்க ஆசைப்படுவதாகவும் கூறினார்.

முஸ்லிம் சமுதாயம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிகழ்வு இது. ஏனெனில் இதுவும் பைத்துல் முகத்தஸூடன் தொடர்புடையது.

ஜெரூசலம் நகரை உருவாக்கியது நபி சுலைமான் அலை அவர்கள். மூன்று மலைகளுக்கு நடுவே ஜெரூசலம் கட்டமைக்கப் பட்டுள்ளது. ஜபல மோரியா மலைக்கு மேல் தான் பைத்துல் முகத்த்ஸ் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்பள்ளிவாசலின் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுப் பகுதியை ஜெரூசலம் நகராக சுலைமான அலை அவர்கள் உருவாக்கினார். உலகின் தொன்மையான அந்தப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றமும் முஸ்லிம் உம்மத்தின் கவனத்திற்குரியது

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜெரூசலமின் வளர்ச்சியை மதீனாவின் அழிவோடு முடிச்சிட்டு கூறியுள்ளார்.

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلمعُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ قُسْطَنْطِينِيَّةَ وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ

 இறுதி நாளின் அடையாளங்களாக பெருமானார் (ஸல்) அவர்கள் இவற்றை பட்டியலிட்டார்கள். இந்த அடையாளங்கள் முத்து மாலை உதிர்ந்து விழுவது போல ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக நிகழும் என பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَثْلُ الْآيَاتِ مَثَلُ خَرَزَاتٍ مَنْظُومَاتٍ فِي سِلْكٍ ، انْقَطَعَ السِّلْكُ فَتَبِعَ بَعْضُهَا بَعْضًا

மதீனாவின் அழிவு என்பது முற்றிலுமான அழிவல்ல. மதீனாவின் சில வகையான அழிவுகள் தொடரும் என்பது தான் இதன் பொருள் என விரிவுரையாளர்கள் கூறுகிறார். ஏனெனில் தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய முடியாது என்ற நபி மொழிகள் தஜ்ஜாலின் வருகைக்குப் பின்னரும் மதீனா இருக்கும் , ஈஸா அலை அவர்கள் மதீனா விற்கு சென்று பெருமானா ர் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வார்கள் என்றும் ஹதீஸில் வந்துள்ளது. எனவே பைத்துல் முகத்தஸீன் கட்டுமானங்கள் அதிகரிப்பது மதீனாவின் அழிவுகளின் தொடக்கமாக இருக்க கூடும்.  

கான்ஸ்டாண்டி நோபிள் இப்போதைய இஸ்தான்பூல் என்ற பெயரில் துருக்கியின் தலை நகராக இருக்கிறது. அதை எதிரிகள் கைப்பற்றுவார்கள். இறுதியில் மீண்டும் அதை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள்

அதன் பிறகு கியாமத் நாளின் மிகச் சமீபத்திய அடையாளமான தஜ்ஜாலின் வருகை அமையும் என இந்த ஹதீஸ் எச்சரிக்கிறது.

தற்போது சவூதி அரபியாவில் நடை பெற்று வரும் மாற்றங்களையும் கவனித்துப் பாருங்கள். அங்கே சினிமாக்களுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கும் அனுமதியளிக்கப் பட்டுள்ளது. சவூதியின் கடறகரை பகுதிகள் துபாய் மற்றும் அமீரக கடற்கரை பகுதிகளை போல உல்லாச தளங்களாக மாற்றப் படும் என்றும் சவூதியின் இளவரசர் அறிவித்துள்ளார். காலங்காலமாக இஸ்லாமின் கலாச்சார கேந்திரமாக திகழ்ந்து வருகிற மண் இப்போது அழிவுப் பாதையில் அடிபோடத்தொடங்கியிருக்கிறது. இந்த அழிவு எது வரை சென்று நிற்கும் என்று கூறமுடியாது.

ஒன்று மட்டும் நிச்சயமாகிறது . முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆபத்துக்களுக்கான சமயம் நெருங்கி விட்டது என்பதை மட்டும் உணர முடிகிறது.

டொனால்டு டிரம்பின் நடவடிக்கையும் நெதன்யாகுவின் அறிவிப்பும் சவூதி அரேபியாவின் போக்கும்.

பெருமானானார் (ஸல்) அவர்கள் எச்சரித்த கியாமத் நாளின் அடையாளங்களாக இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு என முஸ்லிம் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

உம்மத்திற்கான பெரும் எச்சரிக்கை இது.

அசட்டையான மனோ நிலையில் சில்லரை சில்லரை விசயங்களில் மட்டும் கவலைப் பட்டுக் கொண்டு அடிப்ப்டையான உணர்வுகளில் இருந்து உம்மத் வெகு தூரம் விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கல்வி பெருளாராதாரம் அரசியல் அதிகாரம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்ட ஒரு போக்கு முஸ்லிம் உம்மத்தின் இலட்சணமல்ல.

அல்லாஹ்வினுடையவும் அல்லாஹ்வினுடைய தூதருடையவும் இறுதி எச்சரிக்கைகளையுக் கணக்கில் கொண்டு தம்முடைய வாழ்வை கொள்கை நிலையிலும் வாழ்க்கை போங்கிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய கடமை முஸ்லிம் உம்மத்திற்கு உண்டு.

கியாமத் நாள் ஒன்று உண்டு. நம்முடைய நீண்ட தொலைவுக்கான பயணம்  சொர்க்கமா நரகமா என்பதை தீர்மாணிக்கிற அந்த நாளை நாம் கணக்கில் கொண்டே வாழ வேண்டும்.

கியாமத் வெகு தொலைவில் இல்லை. இதோ வந்து விடலாம்.

அங்கு என்ன நடக்குமோ என்று அச்சப்பட்ட நம்முன்னோர்கள் மிகவும் பணிவாக வாழ்ந்தார்கள்.
அந்நபித்தோழரை மக்கள் கண்ணென மதித்தார்கள். அவரோ மக்களிடம் கூறினார். நான் கதவை மூடிக் கொண்டு என்ன செய்கிறேன் என்பதை அறிந்தால் நீங்கள் என்னை இப்படி மதிக்க மாட்டீர்கள். பாவங்களுக்கு ஒரு நாற்றம் இருக்கும் எனில் என்னருகே நீங்கள் அமர மாட்டீர்கள். மாஷா அல்லாஹ் என்ன பணிவு ? அதுவும் ஒரு சஹாபியின் நாவிலிருந்து.


كان عبد الله بن مسعود -رضي الله تعالى عنه- يقول: [[لو أنكم تدرون ما أغلق عليه بابي ما فعلتم كذا]].
والله إننا نعلم أنه رضي الله تعالى عنه لا يغلق بابه إلا على خير وعلى تقوى وعلى قراءة قرآن وعلى عبادة, لكن قال ذلك زاجراً لهم لما تجمعوا ليسيروا خلفه,

وأيضاً من مأثور كلامه رحمه الله يقول''لو أن للذنوب رائحة ما جالسني منكم أحد''

அல்லாஹ்வின் பேரச்சத்தில் வாழ்ந்த அம்ரு பின் கைஸ் ரஹ் அழுகிறார். ஏன்?

'لما احتضر عمرو بن قيس بكى, فقال له أصحابه: علام تبكي من الدنيا فوالله لقد كنت تبغض العيش أيام حياتك فكيف تبكي؟!
فقال: والله ما أبكي على الدنيا وإنما أبكي خوفاً أن أحرم خوف الآخرة''

தாபியீன்களில் அதிகம் அழுதவர்கள் இருவர். நரகம் தங்களுக்காவே படைக்கப் பட்டது போல அழுதார்கள். சுப்யானுஸ் ஸவிரி அவரது காலத்து அபூபக்கராக கருதப் பட்டவர்,

قال بعض السلف: ''أكثر الناس بعد الصدر الأول من الصحابة وكبار التابعين خوفاً رجلان هماعمر بن عبد العزيز وسفيان الثوري كأن النار لم تخلق إلا لهما''. 

உமர் பின் அப்துல் அஜீஸ்  மதீனாவின் ஆளுநராக ஒருந்த போது ஐநூறு திர்ஹமிற்குரிய ஆடையை மலிவானது என்றார். கலீபாவான பிறகு பத்து திர்ஹம் மதிப்புடைய ஆடையை விலை உயர்ந்தது என்றார். தோழர்கள் கேள்வி எழுப்பிய போது நான் கலீபாவான பிறகு எனக்கு சொர்க்கம் பிடித்தமானதாகிவிட்டது,

عمر بن عبد العزيز  أنه لما كان أميراً على المدينة [جيء له بثوب, فقال: كم ثمنه؟ قالوا: خمسمائة دينار, فقال: رخيص! فلما ولى الخلافة جيء له بثوب, قال: كم ثمنه؟ قالوا: عشرة دراهم, قال: هذا غالي!]] فانظر كيف تبدل حاله!
قال بعض جلسائه: والله يا أمير المؤمنين! إني لأذكر؛ لأنه في أول شبابه كان مترفاً رضي الله تعالى عنه مرة عرض عليك الثوب بكذا وكذا دينار, فقلت: رخيص، فقال كلاماً عظيماً عجيباً جداً! قال: [[تاقت نفسي إلى الإمارة، فلما وليتها تاقت نفسي إلى الخلافة, فلما وليت الخلافة تاقت نفسي إلى الجنة
கியாமத்தை நினைவில் வைத்துக் கொண்ட மனிதர்களின் வாழ்வு இத்தகைய புனிதமான மாற்றத்தை சந்திக்கும்.

புனித மிகு ரமலானுக்கு விடையளிக்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் கியாமத்நாள் நெருங்கிவிட்டது என்ற சிந்தனையை கவனத்தில் கொள்வோம்.

நமது மகிழ்ச்சி வணக்கமாக மாறிவிடும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

சதகதுல் பித்ரு கொடுத்த பிறகு தொழுதவர்கள் வெற்றி பெற்று விட்டனர் என் இந்த வசனம் கூறுகிறது.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ (14وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ 

இரண்டிற்கும் இடையே وَذَكَرَ اسْمَ رَبِّهِ என்ற ஒரு வாசகம் அல்லாஹ்வை நினைவு கூறுமாறு பணிக்கிறது.

அல்லாஹ்வை நினைவு கூறூம் சிறப்பான ஒரு வார்த்தையை பாத்திஹா அத்தியாயம் கூறுகிறது. مالك يوم الدين
அல்லாஹ் கியாமத் நாளின் புரபரைட்டர். அதிபதி என்பதை இந்த பெருநாளில் நினைவில் நிறுத்துவோம்.

வாழ்வின் அனைத்து விதமான பாக்கத்துக்களையும் அல்லாஹ் நமக்கு தந்தருளட்டும்.
இன்றைய மகிழ்ச்சியை என்றென்றும் நிலைக்கச் செய்யட்டும்.பாலஸ்தீன் மக்களின் துயரங்களுக்கு அல்லாஹ் முடிவு கட்டட்டும். கடும் சோதனைகளில் இருந்து அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை காக்கட்டும். 
நமது நாடும் முஸ்லிம் உலகமும் அமைதியில் செழிக்கட்டும்.

அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்.  

1 comment:

  1. பாரகல்லாஹ் ஈத் முபாரக் ௌலானா.

    ReplyDelete