வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 29, 2018

சவூதியின் தடுமாற்றங்கள்




அல்லாஹ் விரும்பியதை படைக்கிறான். விரும்பியதை அதில் சிறப்பாக்கி வைக்கிறான்.
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ [القصص: 68]:

பூமியில் அல்லாஹ் தேர்ந்தெடுத்த  நிலப் பரப்பு அரபு தீபகற்பம்
அறிஞர்கள் கூறுவதுண்டு.
·        خلَق السموات سبعًا، فاختار السماء السابعة.
·        وخلق الجنان، فاختار جنة الفردوس.
·        وخلق البلدان والجزر، فاختار بلاد العرب وجزيرة العرب.
·        وخلق الأقاليم، فاختار مكة والمدينة.
·        وخلق الأرض، فاختار موضع الكعبة والروضة الشريفة.
·        وخلق الجبال، فاختار الطور وأُحُدًا والصفا والمروة.
·        وخلق الأودية، فاختار الوادي المقدَّس طُوى والعقيق.
·        وخلق الأنهار، فاختار النيل والفرات.
·        وخلق الأحجار، فاختار الحجر الأسود.

அரபு தீபகற்பம் ஐந்து மாகாணங்களை கொண்ட்து.
وجزيرة العرب على خمسة أقسام: تِهامة، والحجاز، ونجد، والعروض واليمن[3]

தீபகற்பம் என்பது ஏன்
நான்கு புறமும் கடல் சூழ்ந்த பகுதியை தீவு என்பார்கள். மூன்று புறம் கடல் சூழ்ந்த பகுதியை தீப கற்பம் என்பார்கள்.
அரபு நாட்டை அதன் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் கடல் சூழ்ந்திருக்கிறது.
மேற்கில் செங்கடலும். தெற்கில் அரபிக் கடலும், கிழக்கில் பாரசீக வளைகுடா அமைந்துள்ளன.
வடக்கில் சிரியா  தரை வழித் தொடர்பு நாடாக இருக்கிறது.

2500 கிலோ மீட்டர் நீளமும். 2000 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய தீபகற்பம் அரபு தீபகற்பம்.

அரபு தீபகற்பத்திற்கு ஏராளமான சிறப்புக்கள் உண்டு.

அதில் பிரதானமானது,

அங்குதான்
முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
அல்லாஹ்வின் இறுதி வஹி க்கு தேர்வு செய்யப் பட்டது.
அங்குதான் ஈமான் நிலைக்கும் என பெருமானார் (ஸல்_) கூறினார்கள்.

قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الإيمان ليَأْرِزُ إلى المدينة كما تَأْرِزُ الحيَّةُ إلى جُحْرِها)) متفق عليه

அல்லாஹ் இறுதித்தூதருக்கு அரபுலகை தேர்வு செய்தான். அதற்கு காரணம் உண்டு.

அன்றை உலகு எல்லா நிலையிலும் சீர் குலைந்திருந்த்து.

யூதர்களிடம் தவ்ராத்திய நடை முறை அழிந்து விட்டிருந்த்து.

நபிமார்களை நிராகரிக்கும் மனோ நிலையில் இருந்தார்கள். தாவூத் அலை சுலைமான் அலை ஆகியோரை நபிமார்கள் என்றே அவர்கள் ஏற்கவில்லை.
சில நபிமார்களை கொலை செய்தார்கள்.
தவ்ராத்தை விட அதற்கு விளக்கமாக எழுதப்பட்டதாக கூறப்படும் தல்மூத் எனும் நூலையே பிரதானமாக கருதினார்கள்தல்மூதை விடுத்து தவ்ராத்தை படிப்பவனுக்கு எந்தக் கடவுளும் இல்லை என்றார்கள்.

மாயமந்திரங்களுக்கான ஒரு நூலைத் தான் அவர்கள் வேதம் போல கருதிக் கொண்டிருந்தார்கள்.  (இன்றளவும் மாய மந்திரங்களுக்கான பெரும்புள்ளிகளாக யூதர்களே இருந்து வருகிறார்கள்.

இனப் பெருமையும் அக்கிரம் செய்கிற இயல்பும் யூத உலகத்தை ஆட்கொண்டிருந்தது.

கிருத்துவ உலகம் கொள்கைள் ஏதுமற்றதாக தடுமாறிக் கொண்டிருந்தது.  

சொந்த நபியின் கொள்கைகளை கொள்ளாத  எவரும் தத்தமக்கு தோன்றியதை கொள்கைகளாக உருவாக்கிக் கொள்வார்கள் என்ற தத்துவத்திற்கேற்ப கிருத்துவத்தில் புதிய புதிய கோட்பாடுகள் தோன்றின

கிருத்துவிற்கு 320 வருடங்களுக்குப்பிறகு பாலஸ்தீனில் முதல் தேவாலயத்தை காண்ஸைன்டின் மனைவி ஹலாலா கட்டினார்கல்லறை தேவாலயம் எனப்படும் அந்த ஆலயத்தில் தான் சிலுவை வைக்கப் பட்டது. சிலுவையை உருவாக்கியவர் ஹலாலா தான். சிலுவைக்கும் இறைத்தூதர் ஈசாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் இன்று சிலுவைதான் கிருத்துவ மத்த்தின் சின்னமாக ஆகிவிட்டது. அது மட்டுமல்ல சிலுவைச் சுற்றி பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப் பட்டன, மனித சமூகத்தை பாவங்கள் மொத் தத்திற்கும் ஈஸா சிலுவையை சுமந்தது பரிகாரமாகி விட்டது  என்று பரப்பப்பட்ட்து. ஒவ்வொரு கிருத்துவனும் ஏதேனும் ஒரு வகையில் கழுத்தில் கையில் தலையில் சிலுவையை சுமக்க ஆரம்பித்தனர். கிருத்துவ தேவாலயங்கள் சிலுவை இல்லாமல் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

என்ன அதிசயம் இது ?
சம்பந்தமே இல்லாமல் சிலுவை கிருத்துவர்களை ஆக்ரமித்த்துக் கொண்டது.

கிருத்துவம் அதன் தூதரிடமிருந்து பெற்ற உண்மையான இன் ஜீல் வேதத்தை தவர விட்டிருந்தது,

கிருத்து பிறந்து 130 வருடங்களுக்குப் பிறது மாத்தேயு சொன்னதாக எழுதப் பட்ட செய்திகளாக பைபிளாக கிருத்துவ உலகிற்கு கிடைத்தது.   

யூதர்களையும் கிருத்துவர்களையும் தவிர்த்து அன்றைய உலகை ஆட்கொண்டிருந்தவர்கள் நெருப்பு வணங்கிகளான மஜூஸிகள் .

அன்றைய பாரசீக பேர்ரசு முழுவதிலும் மஜூஸிகள் ஆக்ரமித்திருந்தனர்,

அவர்களிடம் மனித சமூகத்திற்கு எந்த வகையிலும் ஒவ்வாத தத்துவங்களே இருந்தன.

நிலத்திலும் பெண்ணிலும் எந்த தனி அதிகாரமும் இல்லை என்ற ஒரு ஆபத்தான கருத்து அவர்களிடம் இருந்த்து.

ஒரு நபர் வெளியூர் போய் விட்டு வந்தால் தனது வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னாள்  “ இந்த வீட்டில் எனக்குப் பின்னால் வேறு யாரும் வசிக்கின்றனரா என்று கேட்க வேண்டிய நிலை இருந்தது.

இந்தியாவிலும் மங்கோலியாவிலும் சிலை வணக்கம் மேலோங்கி இருந்த்து.

இத்தகைய சூழலில் அரபுகள் நாடோடிகளாக இருந்த்தால உலகின் ஒட்டொ மொத்த குணமும் அவர்களிடம் இருந்த்து.

சிலை வணங்கிகளின் இயல்புகள் வேதக் கார்ர்களின் இயல்புகள்  இரண்டும் அவர்களிடம் கலந்திருந்தன.

ஆனாலும் இவற்றில் எதிலும் அவர்கள் உறுதியான பற்றில் இருக்க வில்லை.

நகரங்களுக்கு சில இயல்புகள் உண்டு.  எதையும் சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் சுய நலம் அதிகமாக இருக்கும்.

இந்த இயல்புகளிலிருந்து தூய ஒரு சமூகத்தை கட்டமைக்க திட்டமிட்ட இபுறாகீம் அலை அவர்கள் மனித சஞ்சாரமற்ற அன்றைய மக்காவின் நிலப் பரப்பில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் திட்ட்த்தோடு ஹாஜ்ரா அம்மாவையும் இஸ்மாயில் அலை அவர்களையும் மக்காவில் தங்க  வைத்தார்கள்.
தெளிவான ஒரு புதிய சமுதாயம் அங்கே உருவாகத் தொடங்கியது.

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 350 வருடங்களுக்கு அந்த புதிய சமூகத்தை பனூ குஸா ஆ எனும் பழங்குடி இணம் ஆக்ரமித்தது. அவர்கள் கஃபாவுக்குள் சிலை வணக்கத்தை ஆரம்பித்தனர். அவர்களை பின்பற்றி இஸ்மாயீல் நபியின் வழித்தோன்றல்களும் சிலை களை வணங்கினர்.

சிலை வணக்கத்திலும் மக்காவாசிகளின் பற்று ஆழ் ந்த்தாக இருக்க வில்லை. காரணம் அது அவர்களுடைய கொள்கை அல்ல.

வரலாறு ஒரு காட்சியை காட்டுகிறது .

ஒரு அரபி எப்போதும் தனது கையில் ஒரு சிலையை வைத்திருப்பார்.  அதை விட்டு விலக மாட்டார். ஒரு தடவை சிறு நீர் கழிக்கும் அவசர தேவை ஏற்பட்ட்து. கையில் தெய்வச் சிலையை வைத்துக் கொண்டு சிறு நீர் கழிக்க தயங்கினார். அதனால் ஒரு ஓரமாக சிலையை வைத்து விட்டு சிறு நீர் கழிக்க சென்றார். அந்தப் புறமாக ஒரு நாய் வந்த்து. அது கல்லைப் பார்த்த்தும் அதன் மேல் காலை உயர்த்தி சிறு நீர் கழித்த்து. அந்த காட்சியை பார்த்த அரபிக்கு கோபமும் தெளிவும் ஒரு சேர ஏற்பட்டன.  எனக்கு ஆடையில்லாவிட்டாலும் உனக்கு ஆடை அனிவித்து அழகு பார்த்தேனே!  விக்கிரகமே!  இப்போது இந்த் நாய் உன் மீது சிறு நீர் கழிப்பதைக் கூட உன்னால் தடுக்க முடியவில்லையே!  நீ யா என்னைப் பாதுகாப்பாய் ? முஹம்மது சொல்வது சரி தான் என்று கூறி கையிலிருந்து சிலையை இரண்டாக உடைத்துப் போட்டு விட்டு இஸ்லாமைத் தழுவினார்.

அந்த அரபு சமூகத்திடம் இரண்டு சிறப்பு இயல்புகள் இருந்தன.

ஒன்று எளிதில் நம்பக் கூடிய குணம்
இரண்டாவதாக கொண்ட கொள்கைகாக எந்த தியாகத்தை ஏற்றூக் கொள்ளும் துணிவு

இந்த இரு காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது இறுதித்தூதரை அந்த சமூகத்தில் அனுப்பினான்.

அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது மார்க்கத்தை முழுமையாக நம்பினார்கள்.

மார்க்கம் அபூஜஹ்லின் மகன் இக்ரிமாவை ஆட்கொண்டது. அவர் மகத்தான தியாகியானார்.
வலீதின் மகனை ஆட்கொண்ட்து, அவரது மகன் காலித மிகப் பெரிய வெற்றியாளரானார்.

கரடுமுரடான மனிதராக இருந்த உமர் ரலி அவர்களை இஸ்லாம் ஆட்கொண்ட்து. அவர் மகத்தான மனிதராக ஆனார்.

பண்பட்ட மனிதராக இருந்த அபூபக்கரை இஸ்லாம் ஆட்கொண்ட்து .அவர் இஸ்லாமிற்கு மிகவும் பயன்மிக்க மனிதரானார்.

அன்றைய உலகத்தில் மானுட்த்திற்கு ஏற்பட்டிருந்த வெற்றிட்த்தை இஸ்லாம் நிரப்பியது.

அரபு தீப கற்பம் இஸ்லாமின் அந்தப் புரட்சிக்கேற்ற பூமியாக இருந்த்து.

மகத்தான மாற்றங்களை கண்டது.

சிலை வணக்கம் மது   , ஆபாசம் , கொலை , கொள்ளக் குற்றங்கள் அற்ற ஒரு புனிதப் பிரதேசமாக அரபு தீபக்றபத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாற்றினார்கள்.

قول النبي صلى الله عليه وسلم: ((إن الشيطان قد أَيِسَ أن يعبُده المصلُّون في جزيرة العرب، ولكن في التحريش بينهم))،


சாமாணிய சாதனை அல்ல. இமாலயச் சாதனை . மனித வரலாற்றின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சாதனை/

இன்றைய உலகில் பெண்கள் ஆபாசமாக நடை போட முடியாத ஒரே பிரதேசம் அரபு தீபகற்பம் தான்.

இன்றும் மது அனுமதிக்கப் படாத ஒரே தேசம் அரபு தீபகற்பம் தான்.

அரபு தீபகற்பத்தை வஹாபிஸ கொள்கையை வைத்து சவூது குடும்பம் கைப் பற்றியது. அதன் பிறகு அரபு தீபகற்பத்திற்கு அது சவூதி அரேபியா என்று பெயர் சூட்டியது

அந்த சவூதியில் நாகரீகத்தின் அனைத்து அழுத்தங்களையும் தாண்டி மக்கள் ஆண்டாண்டு காலமாக இஸ்லாமிய நாகரீகத்தை கடைபிடித்தனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வழங்களை வழங்கினான். அவர்கள் உலகின் பொருளாதார வல்லரசாக திழ்ந்தார்கள்.

நபியின் போதனைகளுக்க் எதிரான வஹாபிஸ கோட்பாடு காரணமாக சவூதியின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரியத் தொடங்கியிருக்கிறது.

சோதனை நேரத்தில் இத்த்தகைய கோட்பாட்டு காரர்கள் களத்தில் ஏமாளிகளாகி விடுவார்கள். கோழைகளாகி விடுவார்கள்.

இப்படித்தான் சவூதியின் இளவரசாக திடீரென பட்டமேற்ற இளவரசர்  முஹம்மது பின் சல்மான் ஏமாளியாகவும் கோழையாகவும் மூர்க்கராகவும் மாறியிருக்கிறார்/

அமெரிக்காவில் பயின்ற அவர் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு நெருக்கமான நண்பர் என்று பேசிக் கொள்கீறார்கள்.

இந்த செல்வாகை கொண்டே முஹம்து தற்போதைய மன்னர் சல்மானின் அடுத்த வாரிசாக திடீரென் முடி சூடிக் கொண்டார்.

அவரது நடவடிக்கை தொடர்ந்து சர்ச்சையாகி விடுகின்றன.

அமெரிக்க அரசு கச்சா எண்ணை விலையை சந்தையில் வெகுவாக குறைத் தை அடுத்து சவூதியின் பொருளாதாரம் சரி வு கண்டது.

இஸ்லாமிய வழிகாட்டுதலின் வழியே அதை சமாளிக்கத் தெரியாத சவூதி இளவ்ரசர் அமெரிக்காவின் வழிகாட்டுதலின் படி நடக்கத் தொடங்கினார்.

சவூதிக்கு நிறைய டூரிஸ்டகள் வந்தால் வருமானம் பெருகும் என்று அது ஆலோசனை கூறியது. பயணிகள் வரவேண்டுமானால் மது மாது களியாட்ட்த்திற்கும் ஆபாசத்திற்கும் அனுமதியளித்தால் தான் அது சாத்தியமாகும் என்பதால்

இளவரசர் முஹ்ம்மது பொறுப்பேற்றதும். மக்கா மதீனா இரண்டு நகரங்களை தவிர மற்ற பகுதி புனிதப் பகுஇ அல்ல என்று அறிவித்தார்.

தனக்கு உடன்பட்டு வராதவர்களை சர்வாதிகார முறையில் கடுமையாக அடக்கி வருகிறார்.

சவூதியின் பதிரிகையாளரான ஜமால் கஸீகி அமெரிக்காவில் இருந்து கொண்டு பத்ரிகைகளில் இளவர்ர் முஹம்மதின் தேர்வை எஹிர்த்துக் கொண்டிருந்தார்.

அவரை  துருக்கி நாட்டிலுள்ள சவூதி தூதரகத்து வரவழைத்து தூதரக வளாகத்திற்குள்ளேயே  கொன்று போட்டிருக்கிறார். அவருடைய் உடல் கண்டு பிடிக்க முடுயாதப் படி அப்புறப் படுத்தப் பட்டுள்ளது.


இத்தகைய காரியங்கள்ள ஆற்றுவதற்குரிய ஆட்கள் தற்சமயத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும். தான்.

அந்த அமெரிக்காவின் உதவியோடு தான் இந்த ப் படு கொலை நிகழ்ந்திருக்கிறது.

இது விசயத்தில் உலகின் கண்டன்ங்களுக்கு ஆளானாலும் அமெரிக்காவின் தயவில் அவர் தப்பித்துக் கொண்டு வருகிறார்.

எனினும் அவரது மரியாதை பெரும் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அவருடைய மரியாதை மட்டுமல்ல. சவூதி அரேபியாவின் மரியாதையும் தான்.

நியூயார்க இரட்டை கோபுர தகர்ப்பில்  ஈடுபட்ட்தாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் சவூதிகளே அதிகம்.

ஆயினும்

தீவிரவாதச் குற்றச்சாட்டுகளிலிருந்து மிகவும் தூரமாக எச்சரிக்கையாக வைக்கப் பட்டிருந்த நாடு சவூதி

இளவரசர் முஹம்மது பின் சல்மானின் நடவடிக்கையால் சவூதி சர்வதேச அளவில் பெரும் தலைக்குனிவை சந்தித்திருக்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை நடை பெறுகிற வளர்ச்சியடை ந்த 20 நாடுகளின் கூட்ட்த்தில் அவர் கலந்து கொள்ள வருகிற போது பல உலக தலைவர்களும் அவரை புறக்க கணிப்பார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் அது பெரும் தலைக்குணிவு தான்.

இதை விட இளவரசர் முஹம்மது சவூதி அரேபியாவை நவீனப் பாதைக்கு மாற்ற நினைக்கும் திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை

சவூதியின் இன்றை கட்டமைப்புக்கு காரணம் முஹம்மத் ரஸீல் (ஸல்) அவர்கள்

அவர்களால் ஒழுங்கு படுத்தப் பட்டு அந்த ஒழுங்கை 1400 ஆண்டுகளாக அரபு தேசத்தி மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஜித்தாவிற்கு சென்றிருந்தேன். பெண்களை அனைவரும் புர்காவில் இருந்தன. ஆபாசத்திற்கான அறிகுறியே இல்லை.

மாற்றுமத பெண்கள் புர்கா அணிந்திருந்தனர். அவர்களது சிகை அலங்காரம் மட்டுமே வெளியெ தெரிந்த்து.  அது மட்டுமே பெண்களை திரும்பி பார்க்க வைத்தது.  ஒரு நண்பர் பெரு மூச்சோடு சொன்னார்.  தலையை கூட இப்பெண்களும் மறைத்து தான் இருந்தனர். இவர்கள் வந்து அந்த சட்டத்தை தளர்த்தி விட்டனர். இதுவே சகிக்க முடியவில்லை. இனி இந்த பர்தா சிஸ்டத்தையும் நிர்பந்தப் படுத்தப் போவதில்லை என இளவரசர் அறிவித்திருக்கிறார். நாடு எங்கே செல்லப் போகிறது என்பது தெரியவில்லை என்றார்.

இது ஒரு புறம் இருந்தாலும் முஹ்ம்மது நபி (ஸள்) அவர்களின் தனித்த சாதனையாக கடைபிடிக்கப் படும் இந்தக் கட்டுப்பாட்டை இப்போது நிமிசத்தில் நாம் மாற்றி விடலாம். ஆனால் இந்தக் கட்டுப் பாட்டை இனி கொண்டு வருவது குறித்து கற்பனை செய்யக் கூட முடியாது,

ஏனெனில் இன்னொரு நபி வரப்போவதில்லை.

ஜமால் கஸோக்கியின் நடவடிக்கை இளவரசர் சல்மானுக்கு ஒரு நல்ல பாடம். அமெரிக்காவின் நடபு இருந்தாலும் மனித செல்வாக்கு என்பது நட்த்தையை பொறுத்துத்தான் என்பது அவருக்கு இப்போது புரிந்திருக்கும். அதே போல அவர் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொஎரு உண்மை உண்டு

ஹழ்ரத் உமர் ரலி கூறிய சத்தியம் அது.

 لقد كنّا أذلاء فأعزنا الله بالإسلام ، فإذا إبتغينا العزة بغيره ِ أذلنا الله "  


சவூதியில் ஏற்படும் தடுமாற்றங்கள் சர்வதேச முஸ்லிம் சமூகத்தை ஆழமாக பாதிக்க கூடியவை.

அல்லாஹ் அரபு  தீபகற்பத்தை பாதுகாப்பானாக!  அதன் ஆட்சியாளர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்குவானகா! அ


 சவூதியின் தடுமாற்றத்திலிர்ந்து அரபு தீபகற்ம விரைவாக மீண்டெழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அரபு தீபகற்பம் மக்களின் தேர்வு  பகுதியாக  மாறும். என்பது முஹம்மது நபி  (ஸல்) அவர்களின் அருள்வாக்கு.

ஏனெனில் முஸ்லிம் உம்மத்தின் மீட்பராக வரக்கூடிய மஹ்தி அலை அவர்கள் அங்குதான் தோன்றுவார்கள்.

அவரின் தலைமையில் முஸ்லிமகள் தஜ்ஜால் உள்ளீட்ட தங்களது எதிரிளை வெல்வார்கள்.

இன்ஷா அல்லாஹ்.








.

  











No comments:

Post a Comment