வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 24, 2019

தீனைக் குலைக்கும் பிளவுகள்

(திருச்சியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிற தப்லீக் இஜ்திமா குறித்து தொடர்ந்து விசாரிக்கப் படுகிறது. அதில் மார்க்கத்தின் அடிப்படையில் தெளிவை தேடி இந்தக் கட்டுரை- தப்லீக் ஜமாத்தின் பெயரில் நமது எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் பிரச்சனை செய்கிற மூடர்கள் இருப்பார்கள் எனில் இத்தகைப்பில் திருச்சி இஜிதிமா குறித்த செய்தியை ஆலிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். நாம் உண்மையை சொல்லப் போய் அது சர்ச்சையாகி விடக்கூடாது அல்லவா ? )


இஸ்லாம் மகத்தான சமூக ஒற்றுமையை நிலை நாட்டிய மார்க்கம்.
தலை முறை தலைமுறையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அரபுக் கோத்திரத்தார் லாயிலாக இல்லல்லாஹ்வின் குடையின் கீழ் பரஸ்பரம் அன்பு கொண்ட சகோதர்ர்களாக ஒன்றினைந்தனர்.

لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (63
)
அஸ் அது பின் ஜராரா ரலி அவர்கள் தான் மதீனாவிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை தழுவிய முதல் நபித்தோழர்.
முதலாம் அகபா உடன்படிக்கையின் போது பெருமானாரை முதன் முதலில் சந்தித்த ஆறுபேரில் ஒருவர். பெருமானாரின் தஃவா வை கேட்ட பிறகு மற்றவர்கள் தயங்கி நின்ற போது குதித்துக் கொண்டு முன்னால் வந்து பெருமானாரிடம் பை அத் செய்து கொடுத்தவர்.  அவர் மதீனாவின் கஜ்ரஜ் குடும்பத்தைச் சார்ந்தவர்.
أنه أول من بايع ليلة العقبة
இரண்டாம் மூன்றாம் அகபா உடன்படிக்கைகளின் போது இடம் பெற்றவர்.  மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது பெருமானாரை மதீனாவிற்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்தவரும் அவர் தான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்து குபாவில் தங்கியிருந்தார்கள். ‘குபாவில் பெருமானார் பனூ அம்ரு பின் அவ்பு களின் குடும்பத்தாரின் ன் வீடுகளில் தங்கியிருந்தார்கள் . அந்தக் குடும்பம் அவ்ஸ் களின் ஒரு உட்பிரிவு.
அஸ் அது ரலி அவர்களுக்கு குபாவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது. பெருமானாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.  ஆனால் என்ன செய்வது பெருமானார்  அவ்ஸ்களின் குடும்பத்தில் அல்லவா தங்கியிருக்கிறார்கள். அங்கு சென்றால் அஸ் அதை அவர்கள் பழைய பகையில் கொன்று விடுவார்களே! அஸ் அது ரலி தயங்கித் தயங்கி நின்றார். ஒருகட்டத்தில்  பெருமானாரைச் சந்திக்கும் ஆவலை அடக்க முடியாமல் இரவு நேரத்தில் ஒரு யாருக்கும் தெரியாதவாறு ஒரு போர்வையை எடுத்துப் போர்த்துக் கொண்டு ரகசியமாக பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு வைகறையிலேயே புறப்பட்டுச் சென்றார்.
சற்று நேரத்தில் குபா வாசிகளில் மூன்று பேர் பெருமானாரை வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் அஸ் அது வந்து சென்றதை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அம்மூவரும் ஆச்சரியமடைந்தனர். அவர் இங்கு வந்தாரா என்றனர். பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களிடம் அவர் இப்போது தான் சென்றிருக்கிறார். அதிக தூரம் சென்றிருக்க முடியாது அவரைச் சந்தித்து அழைத்து வாருங்கள் என்றார்கள். அஸ் அது ஒரு மரத்தின் அடியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்த அம்மூவரும் அவருக்கு நிம்மதியளிக்கும் வார்த்தைகளை கூறி அவரை ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
இஸ்லாம் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் முதல் அடையாளம் இது. ஒருவரின் ஆடு இன்னொருவரின் தோட்ட்த்தில் மேய்ந்து விட்ட்து என்பதற்காக 400 ஆண்டுகள் சண்டையிட்ட பகைவர்களாக இருந்த குடும்பத்தினர். ஒரு தாய் மக்களைப் போல மாறினர்.
இதே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் இஸ்லாம் பரவிய தேசமெங்கும் ஏற்படுத்தியது.
மால்கம் எக்ஸ் தன்னுடைய வரலாற்றில் வெள்ளையர்களை சைத்தான்கள் என்றே கருதியதாக கூறுகிறார். ஹஜ்ஜுக்கு வந்த போதுதான் தனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்ட்து வெள்ளையர்களை சகோதரர் களாக கருதத் தொடங்கியதாக கூறுகிறார்.
அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் மனிதர்களை ஒன்றினைப்பதில் மற்றதையும் விட மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
மிக ஆச்சரியமான முறையில் வெளிப்பட்ட ஒற்றுமை
கர்பலா மைதானத்தில் ஹுசைன் ரலி அவர்கள் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவரை எதிர்ப்பதற்காக இராக்கின் ஆளுந்தர் இப்னு ஜியாத் அப்துர் ரஹ்மான் உமர் பின் சஃது என்பவரை 4000 பேர்களுடன் அனுப்பி வைத்தார். அவர் ஹுசைன் ரலி அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் மென்மையாக நடந்து கொண்டார். லுஹர் தொழுகையின் நேரம் வந்த போது இரு அணியினரும் ஹுசைன் ரலி அவர்களின் தலைமையில் ஒன்றாக இணைந்து தொழுதனர்.
இந்த ஒற்றுமையை தவறாக சித்தரித்து இப்னு ஜியாத் அனுப்பிய படைத்தளபதி ஹுசை ன் ரலி அவர்களுடன் குலாவிக் கொண்டிருப்பதாக கோள் சொன்ன சம்ருப் பின் தில் ஜோஷன் தான் பிறகு படைக்குப் பொறுப்பேற்று ஹுசைன் ரலி அவர்களைக் கொன்றான். அவரின் தலையை தனி வெட்டி எடுத்தான்.

முஸ்லிம்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை குலைப்பதுதான் சைத்தானின் பிரதான வேலையாக இருக்கும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.
عن جابر قال قال النبي صلى الله عليه وسلم إن الشيطان قد يئس أن يعبده المصلون ولكن في التحريش بينهم

ومعناه : أيس أن يعبده أهل جزيرة العرب ، ولكنه سعى في التحريش بينهم بالخصومات والشحناء والحروب والفتن ونحوها

ஒருமுறை சஹாபாக்களிடையே ஒரு சர்ச்சை எழுந்தது மதீனத்து அன்சாரிகள் முந்தைய காலகட்டத்தில் பாடிக் கொண்ட ஒரு பழியுணர்வூட்டு கவிதையை ஒருவர் படித்தார். இன்னொருவர் அதை எதிர்த்துப் படித்தார். இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் மற்றவர்களுக்க்கு எதிராக அணிதிரளத் தொடங்கினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்னரும் ஜாஹிலிய்யாவின் எச்சங்களா என்று மிக கடுமையாக கண்டித்துக் கூறினார்கள்

 لا تَرْجِعُوا بَعْدي كُفَّاراً، يَضْرِبُ بَعْضُكُمْ رِقابَ بَعْض ))
((
كُلُّ المُسْلِمِ على المُسْلِمِ حَرَامٌ: دَمُهُ ومَالُهُ وَعِرْضُهُ ))
(رواه مسلم عن أبي هريرة)

 அதன் பின் அப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்நாளில் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ (128

என்ற வசனம் அந்த சந்தர்ப்பத்தில் இறங்கியது என்று கூறப்படுவதுண்டு.

حَرِيصٌ عَلَيْكُم என்ற வார்த்தைக்கு உங்களது ஒற்றுமையில் பேராசை கொண்டவர் என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.

எனவே சமுதாயத்தில் பிளவுகள் குழப்பங்களை ஏற்படுத்துவதிலிருந்து மக்களை பெருமளவில் எச்சரித்தார்கள்.

وعن أَبي أُمَامَة الباهِليِّ t قَالَ: قَالَ رَسُولُ اللَّه ﷺأَنا زَعِيمٌ ببَيتٍ في ربَضِ الجنَّةِ لِمَنْ تَرَكَ المِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا،

عن أبي الدرداء - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " عليكم بالجماعة (1) فإنما يأكل الذئب القاصية 

عن النعمان بن بشير - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " الجماعة رحمة، والفرقة عذاب

عن أبي هريرة - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " من خرج من الطاعة , وفارق الجماعة , ثم مات، مات ميتة جاهلية 

عن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: (" من رأى من أميره شيئا يكرهه فليصبر) (فإنه ليس أحد من الناس خرج من السلطان شبرا فمات عليه , إلا مات ميتة جاهلية

عن بشير بن عمرو قال: شيعنا  ابن مسعود - رضي الله عنه - حين خرج , فقلنا له: اعهد إلينا , فإن الناس قد وقعوا في الفتن , ولا ندري هل نلقاك أم لا , فقال: اتقوا الله واصبروا , حتى يستريح بر , أو يستراح من فاجر , وعليكم بالجماعة , فإن الله لا يجمع أمة محمد على ضلالة.

மினாவில் எத்தனை ரக அத் என்பதில் கருத்துவேறு பாடு கொண்டிருந்த போதும் உஸ்மான் ரலி அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுத இப்னு மஸ்வூத்

عن عبد الرحمن بن يزيد قال: (صلى بنا عثمان بن عفان - رضي الله عنه - بمنى أربع ركعات , فقيل ذلك لعبد الله بن مسعود - رضي الله عنه - فاسترجع , ثم قال: صليت مع النبي - صلى الله عليه وسلم - بمنى ركعتين , وصليت مع أبي بكر - رضي الله عنه - بمنى ركعتين , وصليت مع عمر بن الخطاب - رضي الله عنه - بمنى ركعتين) (ومع عثمان صدرا من إمارته) (ثم تفرقت بكم الطرق , فلوددت أن لي من أربع ركعات , ركعتين متقبلتين) (ثم قام فصلى أربعا , فقيل له: استرجعت ثم صليت أربعا؟ , قال: الخلاف شر)

கறுத்து வேறுபாடுகளில் பிளவுகள் ஏற்படுமானால் அது தான் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய ஆபத்து என பெருமானார் எச்சரித்துள்ளார்கள்

இத்தக்க கட்டத்தில் பிளவு பட்டுக் கிடக்கிற எந்தப் பக்கத்திலும் சாராமல் ஒது ங்கியிருக்கவே மார்க்க ம் அறிவுறுத்தியது.

நம்முடைய விருப்பம் – கோபம் அளவு கடந்த ஆர்வம் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சார்பாக நிற்க தூண்டும்.  சற்று நிதானத்தை கடைபிடித்தால் சாதாரணமாகவே ஒரு அணி இல்லாமல் போய்விடும் . எது சத்தியமோ அது நிலைக்கும். ஓவ்வொரு வரும் தமது விருப்பத்திற்குரிய அணியை தேர்ந்தெடுக்கிற போது குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

உஸ்மான் ரலி அவர்கள் கொல்லப் பட்ட பிறகு இஸ்லாமிய உலகில் முஸ்லிம்களுக்கு இடையே குழப்ப மேகம் சூழ்ந்த போது அப்போதிருந்த சஹாபாக்களில் மிகச் சிலர் மட்டுமே ஏதேனும் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தார்கள். பலர் ஒதுங்கியே இருந்தார்கள் என்பது தான் வரலாறு.



وقد روى ابن بطة عن بكير بن الأشج قال إما إن رجالا من أهل بدر لزموا بيوتهم بعد قتل عثمان فلم يخرجوا إلا إلى قبورهم

حدثنا أيوب يعني السختياني عن محمد بن سيرين قال هاجت الفتنة وأصحاب رسول الله صلى الله عليه وسلم عشرة آلاف فما حضرها منهم مائة بل لم يبلغوا ثلاثين وهذا الإسناد من أصح إسناد على وجه الأرض

சஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்களை பலரும் நிர்பந்தித்த போது முஃமினை வெட்டாத காபிரை மட்டுமே வெட்டுகிற வாள் இருக்குமானால் கொடுங்கள் ! நான் ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.
ஏதேனும் ஒரு அணியை ஆதரித்தவர்கள் அதிலிருந்து விடுபடா முடியாத நிர்பந்த சூழலில் பிளவுக்கு பலியானார்கள்.
அலி ரலி அவர்களுக்கு எதிரணியில் தல்ஹா ரலி இருந்தார்கள் .  யுத்த களத்தில் அவரைச் சந்தித்த அலி அவர்கள் நம்மிருவருக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன எச்சரிக்கையை நினைவூட்டவா என்று கேட்டு நினைவூட்டினார்கள். தல்ஹா ரலி யுத்தத்தை விட்டு வெளியேறினார்.
عن إسماعيل بن أبي حازم قال : قال علي للزبير : أما تذكر يوم كنت أنا و أنت في سقيفة قوم من الأنصار فقال لك رسول الله صلى الله عليه و سلم : " أتحبه فقلت : و ما يمنعني ؟ قال : إنك ستخرج عليه و تقاتله و أنت ظالم" قال فرجع الزبير" أخرجه الحاكم 
ஆனால் அவரை பின்  தொடர்ந்து சென்றவர்கள் ஒரு ஆற்றின் கரையில் அவரை வெட்டிக் கொன்றார்கள்.
என்வே சமூகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பிளவுகள் ஏற்படும் போது . இரண்டு தரப்பிலும் நியாயங்கள் முழுமையாக வெளிப்படாத போது பிளவுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியிருப்பதே முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டிய நெறியாகும்.
பிளவுகள் பல்வேறு தீய குழப்பங்களை உண்டாக்கும். ஏன் மார்க்த்தை திருத்திக் கூற வைக்கும்.
உமய்யாக்களின் ஆட்சிக் காலத்தில் உமையாக்களின் குடும்ப அரசியலின் பாகுபாட்டை எதிர்த்து அப்பாஸிகள் புரட்சியை ஆரம்பித்த போது புரட்சியாளர்களுக்கு சாதகமாக பேசுவதற்கு வீறு கொண்டு வந்த கராஷ் என்ற பட்டப் பெயர் கொண்ட ஒருவர் தொழுவதை விட நோன்பு வைப்பதை விட அப்பாஸிகளை பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை என்றார்.
நல்ல வேளையாக அப்போதிருந்த அப்பாஸிகளின் தலைவர் முஹம்மது பின் அலி இந்த தீமையை  புரிந்து அவரை வெறுத்து ஒதுக்கினார்.
தபிலீக் அமைப்பு இரண்டு பிரிவாக உடைந்துள்ளது. துரதிஷ்ட வசமாக அவர்களுக்குள் நடக்கும் போட்டி பள்ளிவாசல்கள் இஜ்திமாக்களின் கடும் சண்டை வரை சென்றுள்ளது. பங்களாதேஷில் சிலர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். நாட்டின் நீதிமன்றங்கள் பலவற்றிலும் இரு பிரிவினரின் பல வழக்குள் உள்ளன்.


இந்நிலையில் தப்லீக்கின் பாரம்பரிய அமைப்பான தில்லி மர்கஜ் அமைப்புக்கு எதிராக மெளாலான் சாது சாஹிப் என்ற அரசியல் பின்புலம் உள்ள ஒரு அமீரின் கீழ் நடை பெறூம் .ப்லீக் அமைப்பில் நாளை திருச்சியில் தொடங்குவதாக பெரிய அளவில் பிரம்மாண்டப் படுத்தப் பட்டுள்ள இஜிதிமா ஏற்பாட்டை கவனத்தீர்கள் என்றார்கள் பிளவுகள் ஏற்படுடும் போது ஒரு பிரிவு தன்னை நிலை நாட்டிக் கொள்ள என்னென்னெ யுத்திகளி கையாளுமோ அந்த ஆர்ப்பாட்ட உத்திகளை கையாள்வதை கவனிக்கலாம்.


தில்லி தாருல் உலூம் அரபுக்கல்லூரி. வேலூ அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரி ஆகிய இரு பெரும் இந்திய மார்க்க கேந்திரங்கள் இந்தப் பிரிவினர் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிற நிலையிலும் தமிழகத்தில்  இந்த கூட்டத்திற்கான திரளுதல்களும் ஏற்பாடுகளும் ஆச்சரியத்தை தருகிறது.  குழப்பங்களில் விழுவதற்கு மக்கள் எவ்வளவு விரைந்து செல்கிறார்கள் ?.

எனவே பிளவுகளை உயர்த்திப் பிடிக்கிற இத்தகைய மாநாடுகளை தவிர்த்துக் கொள்வதே சிறந்த வழியாகும்.
 إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا يَفْعَلُونَ (159)
فهو بريء من محمد صلى الله عليه وسلم، ومحمد منه بريء
என்ற அல்லாஹ்வின் வார்த்தையை நினைவில் கொண்டு ஆடம்பரத்திற்கும் ஆர்ப்பாட்டமான வசதி வாய்ப்புக்களை பிரம்மாண்டங்களையும் கண்டு வாய்பிளந்து விடாமல் நான் இதில் இல்லை என்று ஒதுங்கியிருப்பதே இன்றைய முஸ்லிம்களின் கடமையாகும்.
எல்லோரும் போகிறார்கள் அல்லது என்னதான் நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன் என்ற எண்ணத்தில் ஒரு சாராரின் கூட்டங்களுக்கு செல்வது குழப்பம் தலைதூக்கியிருக்கிற காலத்தில் பொறுப்பற்ற செயலாகும்.
அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பிளவு படுத்தும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக!

1 comment:

  1. ما شاء بارك الله في خدمتك


    قد خشيت لعلك تدهنهم


    الحمد لله


    بل الدين باق ما اللذي ترك حضرة اعلي

    ReplyDelete