வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 29, 2020

பிரான்ஸ் கத்திக்குத்து தாக்குதல் கண்டிக்கத்தக்கது. நபித்துவ போதனைகளுக்கு எதிரானது.

 وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۚ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ (34)

عن ابن عباس, قوله( ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ ) قال: أمر الله المؤمنين بالصبر عند الغضب, والحلم والعفو عند الإساءة, فإذا فعلوا ذلك عصمهم الله من الشيطان, وخضع لهم عدوُّهم, كأنه وليّ حميم.

நேற்று பிரான்ஸின் நைஸ் நகர தேவாலயத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தது.

நைஸ் நகர மேயர் கத்தியால் குத்தியவர் அல்லாஹு அக்பர் என்று சப்தம் எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் குற்றவாளி யார் ? குற்றத்திற்கான காரணம் என்ன என்பதை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. 21 வயதுடைய துனீசிய இளைஞன் கைது செய்து செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் கடந்த மாதம் தான் பிரான்ஸிற்குள் நுழைந்ததாகவும் பிரான்ஸீன் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஒருவேளை இந்த இழி செயலில் ஈடுபட்ட்து ஒரு முஸ்லிமாக இருக்கும் எனில் அது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அல்லாஹு அக்பர் என்ற சொல்லின் பெருமையை குலைக்க கூடியது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கட்டிக்காத்த நெறிமுறைகளுக்கு எதிரானது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை உண்மையாக நேசிக்கும் எவரும் அவர்களது அடிப்படையான பெருஞ்சிறப்பை ஒரு பேதும் மறக்கலாகாது.

இந்த உலகின் மாபெரும் வெற்றியாளர். முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்களது வெற்றியின் பெரும் ரகசியம், அவர் தீமைகளை நன்மைகளால் வென்றார் என்பதாகும்.

ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தை காட்டு என்ற இயேசு பெருமானின் புகழ்மிக்க வார்த்தைகளை விட அதிக கணம் கொண்ட்து பெருமானாரின் இயல்பு.

அடிப்பவனை மேலும் அடிக்க தூண்டுவதை விட அடித்தவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது மிக மிக உன்னதமான இயல்பல்லவா ?

இதுவே பெருமானாரின் நபித்துவ அடையாளங்களில் ஒன்றாக இருந்த்து.

தவராத்தில் கூறப்பட்ருந்த பெருமானாரின் இயல்பு

وفي البخاري 

عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي التَّوْرَاةِ‏.‏ قَالَ أَجَلْ، وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَاةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا، وَحِرْزًا لِلأُمِّيِّينَ، أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ، لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلاَ سَخَّابٍ فِي الأَسْوَاقِ، وَلاَ يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ، وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا، وَآذَانًا صُمًّا، وَقُلُوبًا غُلْفًا‏  

பெருமானாரின் தோழர்கள் விவிரிக்கும் இயல்பு

وعن أبي عبد الله الجدلي قال: سألت عائشة رضي الله عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالتلم يكن فاحشا ولا متفحشا، ولا صخابا في الأسواق، ولا يجزي بالسيئة السيئة، ولكن يعفو ويصفح. رواه الترمذي، وقالحديث حسن صحيح.

ஆரம்ப காலத்தில் தொழுகையில் தேவையான அளவு பேசிக் கொள்ள அனுமதி இருந்த்து, பிறகு மாற்றப் பட்ட்து அதை அறியாம்ல் ஒரு நபித்தோழர் பேசி விட்டார். பெருமானார் அவரிடம் நடந்து கொண்ட விதம்

حديث معاوية بن الحكم السُّلَمي t قال: "بينا أنا أصلي مع رسول الله ﷺ إذْ عطس رجل من القوم، فقلت: يرحمك الله، فرماني القوم بأبصارهم، فقلت: واثُكْلَ أُمِّيَّاهْ، ما شأنكم تنظرون إليّ؟ فجلعوا يضربون بأيديهم على أفخاذهم، فلما رأيتهم يصمتونني، لكني سكتُّ، فلما صلى رسول الله ﷺ فبأبي هو وأمي، ما رأيت معلماً قبله ولا بعده أحسن تعليماً منه، فوالله ما كَهَرني، ولا ضربني، ولا شتمني، قالإن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس، إنما هي التسبيح والتكبير وقراءة القرآن،

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரிடம் பெருமானார்,

 அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போதே கடுப்பை ஏற்படுத்தும் வார்த்தைகளோடு வந்தார்.

 وبينما هو يطوف في سكك المدينة إذ أبصر مسجد رسول الله -صلى الله عليه وسلم- فاشتهى أن يصلّي ركعتين فيه، قبل أن يغادر إلى بعض شؤونه، فدخل المسجد ووقف مصلّياً على مقربة من رسول الله عليه الصلاة والسلام وأصحابه.

ولما انتهى من صلاته تذكّر نعمة الله عليه بالنبي -صلى الله عليه وسلم-، فلولاه لظلّ على جاهليّته طيلة عمره، فرفع يديه إلى السماء ودعا عجباً: "اللهم ارحمنى ومحمدا ، ولا ترحم معنا أحدا"!.

دعاءٌ مجحف ورجاءٌ ظالم يُقفل أبواب الرحمة الإلهيّة التي وسعت كل شيء، وسرتْ مشاعر الاستنكار بين جلساء النبي -صلى الله عليه وسلم-، وهم ينظرون إليه صلوات الله وسلامه عليه ينتظرون ردّة فعله، لكنّه رسول الله الذي امتدّ حلمه واتسع صدره لأخطاء الناس وجهالاتهم، فهو يعلم أن هذا الأعرابي وأمثاله إنما يتصرّفون على سجيّتهم وطبيعتهم التي اكتسبوها من قسوة الحياة في البادية وشدّتها، ودواء الجهل لا يكون إلا بالعلم والتعليم، فقال له عليه الصلاة والسلام : (لقد حجرت واسعا) أي: لقد ضيّقت واسعاً.

 قام الرّجل من مكانه، وبينما هو يتهيّأ للخروج إذ أحسّ برغبة في قضاء حاجته، وعلى سجيّته مرّةً أخرى توجّه إلى ناحية المسجد وشرع في إراقة الماء.

ولئن تحمّل الصحابة الكرام جهالات الرّجل في أقواله، فإن تحمّل مثل هذا الفعيل الشنيع ليس بمقدورٍ، خصوصاً إذا نظرنا إلى ما ينطوي عليه من امتهانٍ بالغٍ لحرمات بيتٍ من بيوت الله تعالى، فتواثبوا ليوسعوه ضرباً، ويلقّنونه درساً، لكنّ إشارةً صارمةً من النبي -صلى الله عليه وسلم- أوقفتهم عن فعل ذلك، حيث قال لهم: ( دعوه وأريقوا على بوله ذنوباً من ماء) ، ولكم كان الموقف قاسياً على الصحابة وهم ينظرون إلى الأعرابيّ وينتظرونه كي يفرغ من شناعته، حتى صار للحظات الانتظار ثقلٌ بالغٌ على نفوسهم. 

وبعد أن انتهى الأعرابيّ ناداه النبي -صلى الله عليه وسلم- وسأله : (ألست بمسلم ؟) فقال له : "بلى!"، قال : (فما حملك على أن بِلْت في المسجد ؟) ، فقال له صادقاً: "والذي بعثك بالحق، ما ظننتُ إلا أنه صعيد من الصعدات فبِلْتُ فيه" رواه أبو يعلى ، فقال له عليه الصلاة والسلام معلّماً ومربّياً في جواب ملؤه الرحمة والشفقة، واللطف في العبارة، : ( إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول والقذر إنما هي لذكر الله والصلاة وقراءة القرآن) متفق عليه.

 

 حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ وَهُوَ عَمُّ إِسْحَقَ قَالَ بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْ مَهْ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُزْرِمُوهُ دَعُوهُ فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ فَقَالَ لَهُ إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأَمَرَ رَجُلًا مِنْ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ

 

பெருமானாரின் வரலாற்றில் ஏராளமான செய்திகள் இந்த வகையில் உண்டு. வன்மத்தை மென்மையால் வெற்றி கண்டவர் பெருமானார் (ஸ்ல்)

இஸ்லாம் வெற்றி கொண்ட நிலம் எங்கும் இதே இயல்புதான் வெளிப்படுத்தப் பட்ட்து.

அதுவே இஸ்லாமின் மகத்தான வெற்றிகளுக்கு பின்னணியாக அமைந்த்து.

முஸ்லிம்கள் இந்த இயல்பை ஒரு போதும் மறந்து விடக் கூடாது. கை கொள்ளத் தவறக் கூடாது.

பதிலுக்கு பதில் என்ற சட்ட அனுமதி நீதியை நிலைநாட்டுவதற்கானது.

 தீமைக்கு பதில் நன்மை என்பது இஸ்லாமை வெளிப்படுத்துவதற்கானது.

 இந்த இயல்பை மீறும் கட்டங்களில் இஸ்லாம் அல்லது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது குறை கூறப்படும் வாய்ப்புக்கள் ஏற்படும்

ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில்  தொடர்ந்து இஸ்லாமிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. 2017 ன் கணக்கெடுப்பின் படி சுமார் 57 இலட்சம் முஸ்லிம்கள் அங்கு வாழ்கிறார்கள். பிரான்ஸ் மக்கள் தொக்கயில் இது 9 சதவீதமாகும். மேற்குலக நாடுகளில் பிரான்ஸில் தான் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்.

 ஸ்பெயினை வெற்றிக் கொண்ட முஸ்லிம் படையினர் தெற்கு பிரான்ஸில் தூர்ஸ் யுத்தத்தில் முதலில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த்தாக தோற்றுப் போனார்கள். அந்த வெற்றி மட்டும் நிலைத்திருக்குமானால் பிரான்ஸ் இன்று முஸ்லிம் தேசங்களில் பட்டியலில் இணைந்திருக்கும்.

 அல்லாஹ்வின் நாட்டம் அது நடைபெற வில்லை. ஆயினும் இப்போது பிரான்ஸில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 வெளிப்படையாக அகதிகளின் வருகை தான் அதற்கு காரணம் என்று சொல்லப் பட்டாலும். பிரான்ஸின் படு மட்டமான கலாச்சாரப் போக்கி அயர்ச்சியடைந்த ஐரோப்பியம் மக்கள் அர்த்தமுள்ள வாழ்வை தேடி பெரிய எண்ணிக்கையில் நாள் தோறும் இஸ்லாமை தழுவி வருகிறார்கள்.   

 இதுவே இஸ்லாமிய வெறுப்புணர்வு பிரான்ஸில் படர்ந்து வருவதற்கு காரணம். திட்டமிட்டு பல வகைகளிலும் முஸ்லிம்கள் ஒடுக்கப் படுகிறார்கள்.

 சமீபத்டில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணியக் கூடாது என பிரான்ஸ் சட்டம் இயற்றியது.

 தொடர்ந்து இஸ்லாமிற்கு எதிராகவும் முஹம்மது நபி (ஸ்ல) அவர்களை கேலி  செய்தும் சித்திரங்கள் வெளியிடப்படுவதற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிரான்ஸ் அரசு அனுமதித்து வருகிறது.

 பிரான்ஸின் சில பதிரிகைகள் தொடர்ந்து பெருமானர் (ஸல்) அவர்களின் கேலிச் சிதிதிரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

 2005 ம் ஆண்டு ஜலன் போஸ்டன் என்ற டென்மார்க் பத்ரிகை வெளியிட்ட முஹம்மது நபி அவர்களை பற்றிய கேலிச்சித்திரத்தை பிரான்ஸின் சார்லி ஹெப்டூ என்ற பத்ரிகை திரும்ப வெளியிட்ட்து . அந்த பத்ரிகை தொடர்ந்து இது போல கார்ட்டூன்களை வெளியிட்டு வந்த்து. 2015 ம் ஆண்டு அந்த பதிர்கை அலுவலகம் தாக்கப் பட்டு 9 பத்ரிகையாளர்கள் உட்பட சுமார் 13 பேர் கொல்லப் பட்டனர்.

 இந்த ஆண்டு அக்டோர்பர் 6 ம் தேதி சாமுவேல் பட்டி Samuel Paty 

என்ற புவியியல் ஆசிரியர் வகுப்பறையில் சார்லீ ஹெப்டூ வின் கார்டூனை காட்டி பேசியிருக்கிறார். அதை வகுப்பிலிருந்த முஸ்லிம் மாணவர்கள் ஆட்சோபித்திருக்கிறார்கள். பிடிக்காவிட்டால் அறையிலிருந்து வெளியேறுமாறு அவர் கூறியிருக்கிறார். இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முஸ்லிம்கள் வட்ட்டத்தில் இது பேசும் பொருளாகியிருக்கிறது, இரண்டு நாள் கழித்து 8 ம் தேதி வியாழக்கிழமை ரஷ்யாவை தாயகமாக கொண்டு 2008 ம் ஆ ண்டு பிரான்ஸில் குடியேறிய 18 வயதுடைய செஷ்னிய இளைஞரான அப்துல்லாஹ் அன்ஜுரோவ் Abdullakh Anzorov  அந்த உயர்நிலைப் பள்ளி கூட்த்திற்கு வெளியே சாமுவேலை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டார். அப்போது அவர் அல்லாஹு அக்பர் என்று சப்தமிட்டமாக பிரான்ஸ் செய்தி நிறுவன்ங்கள் கூறுகின்றன. அப்துல்லாஹ் அப்போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த நிலையில் அப்துல்லாஹ் அந்த பள்ளிக் கூடத்தின் இரண்டு மாண்வர்களுக்கு 300 யூரோ பணம் கொடுத்து அந்த ஆசிரியரை அடையாளம் காட்டச் சொன்னதாக பிபிசி செய்தி கூறுகிறது. சார்ந்த  

 இதையொட்டி ஏராளமான முஸ்லிம் வீடுகளை சோதனை செய்த அரசு  இந்த பிரச்சனை சார்ந்த வீடியோவை வெளியிட்ட்தாக கூறி  பாரிஸ் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாண்டின் பள்ளிவாசலை 6 மாதங்களுக்கு மூடுமாறு உத்த்ரவிட்டிருக்கிறது.

 ஏற்கெனவே பிரான்ஸில் முஸ்லிம் வெறுப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகள் வேகம் பிடித்திருக்கிற நிலையில் பிரான்ஸ் அரசு இதை மேலும் வளர்க்கும் விதமாக நடந்து கொண்டது. ஆசிரியர் சாமுவேலின் நினைவுக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கார்ட்டூன்களுக்கு ஆதரவாக பேசினார்.

 அது உலகம் முழுவதிலும் பலத்த எதிர்ப்பை சந்தித்து.

குவைத் சவூதி அரேபியா கத்தார் துருக்கி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் மெக்ரான் எரிகிற நெருப்பில் எண்ணை வார்ப்பதாக எச்சரித்தன. பாக்கிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் பிரம்மாண்ட பேரணிகளை நடத்தி  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விசயத்தில் தங்களது பேரன்பையும், மெக்ரானிற்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். முஸ்லிம் நாடுகளில் பிரான்ஸின் பொருட்களை நிராகரிக்கும் கோரிக்கை வலுவடைந்த்து,

 மெக்ரானின் பேச்சு பிரான்ஸில் உள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிக்கலாக்கியது. பிரான்ஸ் மக்கள் தொகையில் 10 சதவீதம் உள்ள  முஸ்லிம்கள் “ தாங்கள் தங்களது மத நம்பிக்காக இன்வாத சக்திகளால் தொடர்ந்து குறிவைக்கப் படுவதாகவும் தங்கள் மீது  பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறினர் .

 Some French Muslims say they are frequent targets of racism and discrimination because of their faith - an issue that has long caused tension in the country. (பிபிசி)

 மெக்ரோனின் பேச்சுக்குப் பிறகு பிரான்ஸில் இனவாத சக்திகள் சாமுவேலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்ற போர்வையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான கேலிச் சித்திரங்களை ஏந்தி பெரும் ஊர்வலங்களை நடத்தினர்.

 இந்த நிலையில் தான் நைஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது மட்டுமல்ல ஆயுத்த்துடன் ரயிலில் பயணம் செய்ய முயன்ற ஒரு முஸ்லிம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்.

 சவூதி அரேபியாவில் பிரான்ஸ் தூதரகத்திற்குள் நுழயை முயன்ற சவூதி நாட்டவர் ஒருவரும் கைது செய்யப் பட்டிருக்கீறார்.

 உலகம் முழுவதிமும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் கொண்டாடங்கள் நடை பெற்று வருகீற வேலையில் – கொரோனோ நோய்த்தொற்றின் பாதிப்புக்களிலிருந்து இன்னும் முழுவதுமாக வெளியேறாத நிலையில் திட்டமிட்டு இனவாத சக்திகள் உருவாக்கிய பதற்றத்தை தடுக்கத் தவறிய மெக்ரோன் அந்த பதற்றத்தை மேலும் அதிகப் படுத்தியிருக்கிறார்.

 இப்போது பிரான்ஸ்ல் நடைபெறும் குழப்பங்களுக்கு அதிபர் மெக்ரானே காரணம் . அடுத்து வருகிற தேர்தலை இலக்காக வைத்து மெக்ரான் திட்டமிட்டே இந்த சூழ் நிலையை உருவாக்கியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

 பிரான்ஸிலும் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள். நைஸ் தேவாலய தாக்குதலை கண்டித்துள்ளன. கோபத்தை சோகத்தையும் ஏற்படுத்தும் நிகழ்வுகள் என வரணித்துள்ளன.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை எந்த மதமும் ஏற்காது இஸ்லாமும் ஏற்பதில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளுக்கு நேர் எதிரானது அது.

 திருக்குர் ஆன் கூறுகிறது.

 وَالَّذِينَ لا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا(68) يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا (69

  مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَلِكَ فِي الأَرْضِ لَمُسْرِفُونَ

 عن ابن عمر رضي الله عنهما ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لن يزال المؤمن في فسحة من دينه ، ما لم يصب دما حراما

 عن البراء بن عازب ، أن رسول الله صلى الله عليه وسلم قال : " لزوال الدنيا أهون على الله من قتل مؤمن بغير حق

 கத்தியை காட்டி பயமுறுத்தினாலே குற்றம்

 عن ابن سيرين ، سمعت أبا هريرة ، يقول : قال أبو القاسم صلى الله عليه وسلم :" من أشار إلى أخيه بحديدة ، فإن الملائكة تلعنه ، حتى يدعه وإن كان أخاه لأبيه وأمه "

 முஸ்லிம் அல்லாதவர்கள் என்றாலும் இதே குற்றம் தான்.

 عن عبد الله بن عمرو رضي الله عنهما ، عن النبي صلى الله عليه وسلم قال :" من قتل معاهدا لم يرح رائحة الجنة ، وإن ريحها توجد من مسيرة أربعين عاما(

 முஹம்மது நபியை நேசிப்பதாக நினைப்பவர்கள் , இஸ்லாமிய வாழ்விற்காக பாடுபடுகிறவர்கள் ஒரு போது நபித்துவ போதனைகளுக்கு எதிராக செயல்பட முடியாது.

 அப்படி செய்வது இஸ்லாமிய வாதமும் ஆகாது. 

எனவே நைஸ் தேவாலய தாக்குதல் மிக வன்மையாக் கண்டிக்கத் தக்கதே! அதே நேரத்தில் தனது அரசிய சுயலாபத்திற்காக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புச் செய்திகளுக்கு தூபம் போடுகிற அதிபர் மெக்ர்ரன் அவர்கள் தான் நடப்பு நிகழ்வுகளுக்கு பொறூப்பேற்க வேண்டும்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த பொன்னாள் கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் பெருமானாரின் வெற்றி வாழ்கையின் இரக்சியமான நன்மையால் தீமையை எதிர்கொள்வது என்ற நடைமுறையை நமது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் கடை பிடிக்க உறுதி ஏற்போம் .

 

 

        

 

No comments:

Post a Comment