வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 12, 2024

வெற்றிகரமான பேச்சாளர் பெருமானார் (ஸல்)

உலகெங்கும் மீலாது விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்ற. வருகின்ற 17 ம் தேதி மீலாதுன்னநபி விடுமுறையை உலகின் பல முஸ்லிம் நாடுகள் அறிவித்துள்ளன. 

குவைத்தில் வழக்கமான விடுமுறை தினமான சனிக்கிழமை அன்று மீலாதுந்நபி தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது..

பெருமானாரின் பிறப்பை உலகம்  கொண்டாடுவதற்கு முழு நியாயம் இருக்கிறது. எல்லா வகையிலும் பெருமானார் (ஸல்) அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களே! குடும்பம், சமூகம், அரசியல், கலாச்சாரம் ஆன்மீகம் என  மனித வாழ்வின் எந்த அம்சத்திலும் பாராட்டத்தக்க முன்னோடியாக பெருமானார் (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

நாம் வாழ்கிற இந்தக்காலம் பேச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவமளிக்கிற காலம். இலக்கியம் சுயமுன்னேற்றம் அரசியல் என பல துறைகளிலும் பேச்சாற்றல் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மூன்று சொற்களை கரகரப்பாக உச்சரித்து பேரறிஞர் அண்ணா இன்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

உறக்கத்தில் வருவது அல்ல கனவு உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேசிய சொற்கள் இன்றளவும் இளைஞர்களின் தாரகமந்திரமாக இருக்கிறது.

இந்த வகையில் தன்னுடைய பேச்சாற்றலாம் உலகில் மகத்தான தாக்கம் செலுத்திய தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

ஒரு கருத்தை நிறுவுவதில் பேச்சாளரின் அனுகுமுறையும் தேர்ந்தெடுக்கும் சொற்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இரவு நேரத்தை தேர்ந்தெடுத்தார் அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத். அடுத்த நாள் காலை நல்ல நேரம் அல்ல என்று சோதிடர்கள் அவரிடம் கூறியிருந்தார்கள். பண்டித நேருவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இலை என்றாலும் நள்ளிரவில் சுதந்திரம் பெறுகிற போது பேச்சை தொடர அவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மிகப் பிரபலமானவை. வரலாற்றில் இடம் பிடித்த சொற்கள் அவை.

"at the stroke of midnight, when the world sleeps, India will awake to life and freedom,"

உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற போது இந்தியா விழித்துக் கொள்கிறது.

இப்படி எல்லாம் மற்ற பேச்சாளர்களைப் போல் பாசாங்கு செய்யாமல் எதார்த்தமாக அதே நேரத்தில் மிக நேர்த்தியாக தனது கருத்தை குறைந்த வார்த்தையில் நிறுவுவதில் முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னிகரற்று திகழ்ந்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மகத்தான பிரச்சாரத்தை எப்படி தொடங்கினார் என்பதை கவனித்துப் பாருங்கள்.

ஒரு கனம் இஸ்லாமின் பிரச்சாரத்தை நீங்கள் தொடங்குவதாக இருந்தால் எப்படி தொடங்குவீர்கள் என்பதையும் கற்பனை செய்து பாருங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் சபா மலைக் குன்றின் மீதேறி வா சபாஹா என்று மக்களை அழைத்து மக்கள் திரண்ட பிறகு இப்படி ஆரம்பித்தார்கள்.

لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} [الشعراء: 214] صَعِدَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم علَى الصَّفَا، فَجَعَلَ يُنَادِي: يا بَنِي فِهْرٍ، يا بَنِي عَدِيٍّ -لِبُطُونِ قُرَيْشٍ- حتَّى اجْتَمَعُوا، فَجَعَلَ الرَّجُلُ إذَا لَمْ يَسْتَطِعْ أنْ يَخْرُجَ أرْسَلَ رَسولًا لِيَنْظُرَ ما هُوَ، فَجَاءَ أبو لَهَبٍ وقُرَيْشٌ، فَقالَ: أرَأَيْتَكُمْ لو أخْبَرْتُكُمْ أنَّ خَيْلًا بالوَادِي تُرِيدُ أنْ تُغِيرَ علَيْكُم؛ أكُنْتُمْ مُصَدِّقِيَّ؟ قالوا: نَعَمْ، ما جَرَّبْنَا عَلَيْكَ إلَّا صِدْقًا، قالَ: فإنِّي نَذِيرٌ لَكُمْ بيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ، 

என்னே ஒரு அருமையான கவர்ந்திழுக்கிற அதே நேரத்தில் நேர்மையின் பொறி பரக்கிற தொடக்கம் ?

ஒரு கேள்வியிலிருந்து தொடங்குகிற உரையாடல்கள் வெற்றி பெறுகின்றன.

அதுவும் அந்த உரையாடல் நிகழ் கால நிஜத்தை ஒட்டி அமையுமானால் அது ஒரு மயக்க நிலையிலிருந்து விடுவிக்கும் என்கிறார்கள். (ஐஸ் பிரேக்கிங்க்) என்கிறார்கள் சுய முன்னேற்றக் கலை அறிஞர்கள்

அல்லாஹ் மூஸா அலை அவர்களுடனான உரையாடலை உங்களது வலது கையில் وما تلك بيمينك  என்ன இருக்கிறது என்று கேட்டு ஆரம்பித்தான்.  அது போல பெருமானாரும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டு அவர்களை பேச வைத்து தெளிய வைத்த பிறகு தனது கருத்தை சொன்னார்கள்.

இது ஒரு அற்புதமான உரையின் தொடக்கமாகும்.

இஸ்லாம் என்கிற மகத்தான புரட்சியின் தொடக்கமும் ஆகும்.

அதே போல பெருமானர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பிறகு மக்கா வாசிகளைப் பார்த்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டு விட்டு யூசுப் அலை அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி தனது கருத்தை தெரிவித்தார்கள்.

وأخرج البيهقي في «الدلائل» عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم لما فتح مكة طاف بالبيت وصلى ركعتين ثم أتى الكعبة فأخذ بعضادتي الباب فقال : ماذا تقولون وماذا تظنون قالوا : نقول ابن أخ ، وابن عم حليم رحيم فقال : أقول كما قال يوسف لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين ) فخرجوا كأنما نشروا من القبور فدخلوا في الإسلام .

 இது போன்ற நேரத்தில் தலைவர்கள் தங்களது பெறுமையை காட்ட வழ வழா கொல கொலா என்று பேசுவார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கோட்டி பேசிய விதம் உன்னதமான இலக்கிய தரமாகும். அந்த வார்த்தை மக்களின் இதயங்களில் மின்னெல் என வெளிச்சம் பாய்ச்சியது. செத்துக் கிடந்த மனிதர்கள் உயிர் பெற்று புதை குழிகளில் இருந்து எழுந்து ஓடுவது போல பெருமானாரை நோக்கி இஸ்லாமை தழுவ ஓடினார்கள் என்கிறார் அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள்.

இது போல ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானாரின் பேச்சு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருமானாரின் நீண்ட கால எதிரிகளில் ஒருவராக இருந்தார் அம்ரு பின் ஆஸ் (ரலி)

உஹ்து யுத்தத்தில் திரும்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக மனைவியுடன் வந்திருந்தார்.

அகழ் யுத்த்தில் பெருமானார் (ஸல்) அவர்களது அகழியை எப்படியாவது கடந்து விட முடியுமா என்று இருவர் மிகவும் ஆழமாக திட்டமிட்டனர். அதில் ஒருவராக இருந்தார் அம்ரு . மற்றொருவர் காலித் பின் வலீத் ரலி.

ஹிஜ்ரீ 6 ஆண்டில் அவர் தானாக முன் வந்து பெருமானாரைச் சந்தித்து இஸ்லாமை தழுவினார். அவருக்கு உடனடியாக ஒரு ஆடைய பெருமானார் வழங்கினார்கள்.

சற்று நேரத்தில் ஒரு ஆளை அனுப்பி அவரை ஆயுதம் தரித்து வரக் கூறினார்கள். அவர் ஆச்சரியத்துடன் வந்தார். உங்களை ஒரு படைப்பிரிவுடன் அனுப்புகிறேன் . அல்லாஹ் உங்களை பாதுகாப்பான். உங்களுக்கு கனீமத்தாக காசுபணமும் தருவான் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்

என்ன ஆச்சரியம் பாருங்கள்

அம்ரு பின் ஆஸ் ரலி கூறினார். அல்லாஹ்வின் தூதரே நான் காசுக்காக முஸ்லிமாகவில்லை. அல்லாஹ்வின் தூதருக்காக இஸ்லாமை தழுவினேன் என்றார். அவருக்கு பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் . காசும் நல்லவர்களுக்கு நல்லது தான்.

இந்த வார்த்தை தொடர்ந்து போரில் ஈடுபட அம்ரு ரலி அவர்களை தூண்டியது. அவர் தான் உமர் ரலி அவர்களிடம் பேசி எகிப்தின் மீது படை எடுத்தார். அதை வென்றும் கொடுத்தார்.

عن عمرو بن العاص قال: بعث إلي النبي صلى الله عليه وسلم فأمرني أن آخذ علي ثيابي وسلاحي، ثم آتيه، ففعلت فأتيته وهو يتوضأ، فصعد إلي البصر ثم طأطأ، ثم قال: «يا عمرو، إني أريد أن أبعثك على جيش فيغنمك الله، وأرغب لك رغبة من المال صالحة» ، قلت: إني لم أسلم رغبة في المال، إنما أسلمت رغبة في الإسلام فأكون مع رسول الله صلى الله عليه وسلم، فقال: «يا عمرو، نعم المال الصالح للمرء الصالح» 

 பெருமானாரின் பேச்சாற்றல் எத்தகைய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள்.

மற்றொரு உதாரணம்

நபி (ஸல்) அவர்களது மச்சினரின் மகன் ஹகீம் பின் ஹிஸாம் .பெருமானாரை விட 13 வயது மூத்தவர். 120 ஆண்டுகள் வாழ்ந்த நபித்தோழர். ஆரம்பத்தில் நீண்ட காலம் அவர் இஸ்லாத்திற்கு வரவில்லை. மக்கா வெற்றியின் போது இஸ்லாத்திற்கு வந்தார்.

ஹுனைன் யுத்த்தில் அவர் பெருமானாருடன் கலந்து கொண்டார். அவருக்கு பெருமானார் 100 ஒட்டகைகளை கொடுத்தார்கள். இன்னும் வேண்டும் என்பது போல அவர் கேட்டார். அவருக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் செல்வ வளத்தைப் பற்றி மிக அற்புதமாக ஒரு அறிவுரை சொன்னார்கள்.

இன்றும் நம் அனைவருக்கும் பொருந்தக் கூடிய காசு பற்றிய அற்புதமான கருத்து அது.

; أن رسول الله - صلى الله عليه وسلم - أعطى حكيما  يوم حنين فاستقله ، فزاده ،

فقال له النبي : «يا حكيم، إن هذه الأموال حلوة خضرة، فمن أخذها بسخاوة نفس بورك له فيها، ومن أخذها بإشراف نفس لم يبارك له فيها، وكان كالذي يأكل ولا يشبع واليد العليا خير من اليد السفلى

தன்னிறைவுடன் பணத்தை கையாள வேண்டும். கொடுத்துப் பழக வேண்டும். வாங்கிப் பழக கூடாது. கொடுக்கும் கை தான் வாங்கும் கையை விட சிறந்தது.

என்ன அருமையான பேச்சாளுமை? சிந்தித்துப் பாருங்கள்! வேறு எப்படிச் சொல்லியிருந்தாலும் இந்தக் கருத்து இவ்வளவு வலிமை பெற்றிருக்காது.

ஹக்கீம் பின் ஹிஸாம் அப்போதே சத்தியம் செய்தார். இனி ஒரு போதும் யாரிடமும் கேட்க மாட்டேன்.

واللهِ يا رسول الله، والذي بعثك بالحق لا أسأل أحدا بعدك شيئا، ولا آخذ من أحد شيئا بعدك حتى أفارق الدنيا)

அபூபக்கர் உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் மற்ற சஹாபாக்களுக்கு வழங்க்கப்பட்டது போல ஹக்கீம் ரலி அவர்களுக்கும் மானியம் வழங்க கலீபாக்கள் அழைத்தனர். ஆனால் ஹக்கீம் ரலி அதை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். கடைசியில் உமர் ரலி இதை பிரகடணம் செய்ய நேர்ந்தது.

ففي عهد أبي بكر دعاه الصديق أكثر من مرة لأخذ عطاء من بيت مال المسلمين فأبى أن يأخذه، ولما آلت الخلافة إلى الفاروق دعاه مرة ثانية إلى أخذ عطاء فأبى أن يأخذه، فقام عمر في الناس وقال : (أشهدكم يا معشر المسلمين، أني أدعو حكيما إلى أخذ عطائه فيأبى)

ஆனால் ஹக்கீம் ரலி பெருமானாருக்கு செய்து கொடுத்த வாக்கின் படி உறுதியாக நடந்து கொண்டார்.

அதன் பிறகு கொடுத்தார் கொடுத்தார் ஏராளமாக மற்றவர்களுக்கு கொடுத்தார். மேலிருக்கும் கையாக இருந்தார் .

أن حكيم بن حزام  حضر يوم عرفة  ، ومعه مائة رقبة ، ومائة بدنة ، ومائة بقرة ، ومائة شاة ، فقال : الكل لله . وعن أبي حازم  قال : ما بلغنا أنه كان بالمدينة  أكثر حملا في سبيل الله من حكيم

 ஜுபைர் ரலி அவர்களின் இலட்சம் திர்ஹம் கடனில் பாதியை அடைத்தார்.

 لما توفي الزبير  ، لقي حكيم  عبد الله بن الزبير  ، فقال : كم ترك أخي من الدين ؟ قال : ألف ألف ، قال : علي خمسمائة ألف

 பிறருக்கு வாரிக் கொடுத்தார். பிறரிடமிருந்து எதையும் கேட்க மறுத்தார்.

 ஒரு தடவை ஒட்டகையிலிருந்த அவரது கையிலிருந்த சாட்டை கீழே விழுந் போது அதை கூட எடுத்துக் கொடுக்க யாரிடமும் கேட்காமல் அவரே கீழே இறங்கி எடுத்தார்.

பெருமானாரின் வார்த்தைகளின் விளைவு எப்படி இருந்த்து பார்த்தீர்களா?  ,

பெருமானார் சுயமாக எதையும் பேசுவதில்லை. அல்லாஹ்வின் வஹியைத்தான் பேசுகிறார் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.    

 وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ (3إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ (4

திருக்குர் ஆனை தவிர்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் பேசிய மற்ற கருத்துக்களும் வஹீ தான் என்றாலும் அந்த சொற்கள் பெருமானாருக்குரியவை.

அந்த சொற்கள் அலாதியான தாக்கம் செலுத்தின.

 அப்படி தாக்கம் செலுத்தும் வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் பேசினார்கள்.

 அதனால் இன்று வரை உலகின் தலை சிறந்த சொற்பொழிவாளராக பெருமானர் (ஸல்) திகழ்கிறார்கள்.

 அவர்களுடைய பேச்சுக்கள் ஹதிஸ்களாக ஏராளமாக நம்மிடம் இருக்கின்றன.

 அவற்றில் சிலவற்றையாவது நாம் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

நம்முடைய முன்னோர்கள் இலட்சக்கணக்கில் அவற்றை மனனம் செய்தனர். இமாம் புகாரி ரஹி 6 லட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்.

 நாம் மிகப் பிரபலமான சில ஹதீஸ்களையாவது மன்னம் செய்ய முயற்சிப்போம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

( வக்பு சட்ட திருத்த்திற்கு எதிராக கருத்துச் சொல்வதற்கான நேரம் முடிவடைய இருக்கிறது. ஆகையால் மிக எளிய முறையில் அமைக்கப்பட்டுள்ள நடை முறையை பயன்படுத்தி நமது கருத்துக்களை பதிவு செய்வது நமது கடமை. விவரம் அறிந்தவர்கள் மற்றவர்களும் கருத்துக்களை பதிய உதவுவது நன்மையானது. ).

(குவைத்தின் ஜலீப் ஸுவைஹ் பகுதியிலிருந்து)

4 comments:

  1. Anonymous4:19 PM

    மாஷா அல்லாஹ் மிக அற்புதமான கட்டுறை அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக. முபாரக் அலி பாகவி

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்,புதிய புதிய கண்ணோட்டத்தில், புதிய புதிய தலைப்புகளில் குறிப்பு தருவதில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களுக்கு நிகர் ஹழ்ரத் அவர்கள் தான்

    ReplyDelete
  3. Anonymous10:19 PM

    மாஷா அல்லாஹ்

    ReplyDelete