மெளலிது, மீலாது விழாக்கள். வேண்டாம் விளையாட்டு
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم
مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ
لِّلْمُؤْمِنِينَ قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ
فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
கடந்த திங்களன்று
நாடு முழுவதிலும் மீலாது விழாக்கள் சிறப்பாக நடை பெற்றன. மெளலூது நிகழ்ச்சிகள் நடந்தன.
மக்கள் பல நல்ல காரியங்களையும் அன்றைய தினம் செய்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
மீது தங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள்.
வழக்கம் போல பல
இடங்களிலும் தவ்ஹீத் என்ற போர்வையில் செயல்படும் அமைப்புக்கள். நமது மஹல்லாக்களின்
முற்றத்தில் மீலாது நபிக்கு எதிராக – மெளலூதிற்கு எதிராக பகிரங்க பிரச்சாரம் செய்தார்கள்.
இதை நாம் கண்டும்
காணாமல் – ஏதோ அவர்களது பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்று கடந்து போய்விடுகிறோம்.
இது சரியானது அல்ல;
நாம் பெருமிதப்படுத்துகிற ஒரு விசயத்தை நமது காதுகளை குடைவது போல் மைக் வைத்து இழிவாக
பேசுகிறார்கள். சில இடங்களில் நாய் குலைப்பது
போல கெட்ட வார்த்தைகளில் குறைக்கவும் செய்கிறார்கள் எனில் இதன் மூலம் நமக்கு மன உளைச்சலை
ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
இதே வேலையை இந்துத்துவ
அமைப்பை சேர்ந்தவர்கள் யாராவது செய்தால் நாம் பொறுத்துக் கொள்வோமா? கல்யாணராமன் என்பவன்
பெருமானாரைப் பற்றி குறை கூறினான் என்றவுடன் நாம் கிளர்ந்து எழுந்தோம். போராட்டங்களில்
இறங்கினோம். அரசு அவனை கைது செய்தது. மீலாது மெளலிதை கூறை கூறுபவனை நாம் பொறுத்துக்
கொண்டிருக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?.
நாம் மீலாது விழா
கொண்டாடுவோம். மெளலூது நடத்துவோம் அதை எதிர்த்து இழிவாக பேசுகிறவர்களை கண்டு கொள்ள
மாட்டோம் என்றால் நாம் இது விசயத்தில் வேஷம் போடுகிறோம் என்றல்லவா அர்த்தமாகிவிடும்?
எனவே நாம் வாழ்கிற
பகுதியில் பகிரங்கமாக மீலாது மெளலூதிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுமானால் அதை எதிர்க்க
வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
முஸ்லிம்கள் அதிகமாக
வசிக்கும் நகரின் பிரதான பகுதியில் கடந்த வாரம் இரண்டு மூன்று பேர் தெருவில் மைக்கை வைத்துக் கொண்டு
மீலாது மெளலூதிற்கு சப்தமாக எதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். கேவலாம பேசியிருக்கிறார்கள்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒருவர் எனக்கு
போன் செய்து நான் என்ன செய்யட்டும் என்று கேட்டார்.
நான் சொன்னேன்.
தைரியமாக உங்கள் பகுதி காவல் அதிகாரிக்கு போன் செய்யுங்கள். எங்களை அவமரியாதை செய்து
இப்படி பேசுகிறார்கள். எங்களை மதித்து அரசு மீலாது விழாவுக்கு விடுமுறை அளித்திருக்கிறது.
இவர்கள் அதையும் மீறி இழிவுபடுத்துகிறார்கள். இவர்களது பேச்சு எங்களுக்கு மன உளைச்சலை
ஏற்படுத்துகிறது. நீங்கள் இவர்களை நிறுத்த வேண்டும் நான் கம்ப்ளைண்ட் தருகிறேன் என்று
சொல்லுங்கள் என்று சொன்னேன். அவர் சரி என்று சொல்லி போன் செய்தார். கொஞ்ச நேரத்தில்
அவர்களது கலாட்டா நிறுத்தப்பட்டது. திருட்டுப் பய்லகள்! தெருக்களில் மைக் உபயோகிப்பதற்கான
அனுமதியை காவல் துறையிடம் எதற்கும் பெறுவதில்லை என்று காவல்துறையினர் அவருக்கு சொல்லியிருக்கிறார்கள்.
இனி வரும் காலத்தில்
இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள நம்மில் ஒவ்வொரு ஜமாத்தும் தனி மனிதரும் தயாராக வேண்டும்.
முஸ்லிம் என்பவர்
ஒரு கொள்கைய ஒப்புக் கொண்டவர் மாத்திரம் அல்ல. அதற்கு சார்பாக நிற்பவரும் ஆவார்.
من رأى منكم منكرًا
فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان رواه
مسلم في الصحيح
நாம் இது விசயத்தில்
கொஞ்சம் விழிப்போடு செயல்பட்டால் இனிவரும் காலங்களில் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருந்து
கொண்டு. எல்லா அவலட்சமாண காரியங்களை வெட்கமில்லாமல் செய்து கொண்டு இப்படி தெருக்களில்
நின்று நம்மை கொச்சைப் படுத்த நாம் அனுமதிக்க
கூடாது.
மீலாது மொளலூது
என்பவை முஸ்லிம் உம்மத்தின் மகத்தான கொள்கை தெளிவின் அடையாளங்களாகும்.
மீலாது மெளலூது
என்றால் பிறப்பு என்று பொருள் .
நபி பிறப்பின்
புகழ்பாடுவது என்பது முஹம்மது நபி கடவுளல்ல
என்பதை பிரகடணப் படுத்தும் ஒரு ஏற்பாடாகும்.
.இறைவன் பிறப்பற்றவன்
என்பதுதான் இஸ்லாமிய தெய்வீக கோட்பாட்டின் முக்கிய பகுதியாகும்.
இஹ்லாஸ் அத்தியாயத்தின்
பிரதான செய்தி
لم يلد ولم يولد என்பதாகும்.
இஹ்லாஸ் அத்தியாயத்தின் மற்ற வாசங்கள் அனைத்தும் இதற்குள் அடங்கும்.
இஹ்லாஸ் அத்தியாயம்
எப்போது இறங்கியது என்றால் மக்காவின் காபிர்கள் பெருமானாரிடம் உனது இறைவனின் வமிசம்
என்ன என்று சொல் என்று கேட்டனர்.
روى الترمذي عن أبي بن كعب أنَّ المشرِكينَ قالوا
لرسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ : انسِب لَنا ربَّكَ ، فأَنزلَ
اللَّهُ تعالى : قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ والصَّمَدُ : الَّذِي
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ،
அதற்கு அல்லாஹ்
சொன்ன பதில் தான் அல்லா பிறப்பற்றவன் எனற வார்த்தையாகும். அவன் பெற்றெடுக்கவும் இல்லை.
பிறக்கவும் இல்லை.
எனவே பிறப்பின்மை
என்பது தெய்வீகத்தை அடையாளப்படுத்தும் பிரதான தத்துவமாகும். முஹம்மது நபி பிறந்தார்
என்பது நபிக்கு தெய்வத் தன்மை இல்லை என்பதை உரத்து ஒலிக்கும் ஏற்பாடாகும். நம்முடைய
முன்னோர்கள் முஸ்லிம் உம்மத்தை நல்வழிப்படுத்த திட்டமிட்டு உருவாக்கிய உண்மையில் ஏகத்துவத்தை
நிலை நிறுத்தும் ஏற்பாடே மீலாது விழாக்களும் மெளலிது நிகழ்ச்சிகளுமாகும்.
நபி
மீலாது விழா கொண்டாடினார்களா ?
மீலாது விழா என்றால் பிறப்பை கொண்டாடுவது என்று பொருளாகும்.
ஆனால் ஒவ்வொரு
மனிதனின் பிறப்பின் மகிழ்ச்சியை கொண்டாட இஸ்லாம் ஒரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் பெயர் அகீகா வாகும்.
அது குழந்தை பிறந்த
மகிழ்ச்சிக்காக பெண் என்றால் ஒரு ஆடும் ஆண்ட் என்றால் இரண்டு ஆடுகளையும் குர்பானி கொடுப்பதாகும்.
சாதாரணமாக பெற்றோர்கள்
இந்த சுன்னத்தை நிறைவேற்றுவார்கள். பெற்றோர்கள் செய்யவில்லை. பிள்ளைகளே அவர்கள் வளர்ந்த
பிறகு தங்களுக்கான அகீகாவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
நபிகள் நாயம்
(ஸல்) அவர்கள் தனக்கான அகீகாவை தானே நபியான பிறகு கொடுத்தார்கள் என்று ஹதிஸில் இருக்கிறது.
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ النُّبُوَّةِ. أَخْرَجَهُ
الْبَيْهَقِيُّ
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பிறப்பை பெருமை படுத்தினார்கள் எனில் நாம் பெறுமனாரின் பிறப்பை ஏன் பெறுமைப் படுத்தக் கூடாது?
தனது பிறப்பை பெருமானார் (ஸல்) அவர்களே மகிமை படுத்தினார்கள் என்பதை இதை விட வேறு என்ன ஆதாரம் வெண்டும் ?
சஹாபாக்களும்
மெளலிதும்.
شَقَّ لَهُ مِنِ إِسمِهِ كَي يُجِلَّهُ_
فَذو العَرشِ مَحمودٌ
وَهَذا مُحَمَّدُ
அல்லாஹ் தன்
பெயரிலிருருந்து பிரித்தெடுத்து பெருமானாருக்கு பெயரிட்டான். அவர்களை மகிமைப்படுத்துவதற்காக.
அல்லாஹ் மஹ்மூது. இவர் முஹம்மது.
خلقت مبرأ من كل عيب.... كأنك قد خلقت كما تشاء.
பெருமானார்
(ஸல்) அவர்களைப் புகழ்ந்து கஃபு பின் ஜுஹைர் ரலி போன்றவர்களும் ஏராளமாக கவிதை பாடியிருக்கிறார்கள்.
அதை பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்.
முஸ்லிம் உலகம்
அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போதும் கூட
பெருமானாரின் ரவ்ழா ஷரீபில் பெருமானாரை புகழ்ந்து பாடும் பல கவிதைகள் இருக்கின்றன.
அவற்றில் சிலது இப்போது வெளியே தெரிகின்றன.
துருக்கிய சாம்ராஜ்யத்தின் 32 வது பேரரசர் சுல்தான் முதலாம் அப்துல் மஜீத் இந்தப்
பாடல்களை பெருமானாரின் அறைக்கு வெளியே சுவற்றின் பல பகுதிகளிலும் பொறிக்க ஏற்பாடு செய்தார்.
அவற்றில் சில வரிகள் கஃபு பின் ஜுஹைர் ரலி அவர்களுடயவை. மற்ற சில இமாம் பூஸ்ரி அவர்களுடையவை.
يَـا مَـنْ تَفَجَّرَتِ اْلأَنْهَـارُ نَـابِعَةً مِنْ إِصْبَعَيْهِ
فَأَرْوَى الْجَيْشَ بِالْمَدَدِ
رَبُّ الْجَـمَـالِ تَعَالَى اللهُ خَـالِقُهُ فَمِثْلَهُ فِي جَمِيعِ
الْخَلْقِ لَـمْ أَجِدِ
இவர் சலாஹுத்தீன் அய்யூபியின் படையில் இணைந்து கொண்டவர். அவரது சகோதரியை மணந்தவர், சலாஹுத்தீனுடன் இணைந்து பல சிலுவை யுத்தங்களில் பங்கேற்றவர்.
சலாஹுத்தீன்
அய்யூபியின் காலத்தில் அர்பேல் நகரில் முழப்பருத்தீன் மீலாது விழாக்களை சிறப்பாக நடத்தினார்.
அன்றைய தொகைக்கு சுமார் 300 தீனார்களை செலவழித்தா. பக்தாது போன்ற பெரிய ஊர்களில் இருந்தெல்லாம்
மக்களும் அறிஞரகளும் வருவார்கள். வருவோருக்கு முதலில் நல்ல விருந்து பரிமாறப்படும்.
பிறகு ஒரு சிறப்பான மேடை அமைக்கப்பட்டு அதில்
சொற்பொழிவு நடை பெறும் என்கிறது வரலாறு.
மீலாதை புனிதமாக
தொடங்கியவர் முழப்பருத்தீன. இவரை தான் யூதர்
என்று கதை கட்டி விடுகிறார்கள் கபோதிகள்.
முஃமின்களின் உள்ள வேட்கை என்ன வெனில் பெருமானாரின் பிறப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்காக திருக்குர் ஆனில் சபிக்கப்பட்ட அபூலஹ்புக்கே கூட ஒரு பாக்கியம் கிடைக்கிறது எனில் உள்ளார்த்தமான முஃமின்களுக்கு அல்லாஹ் இந்த அன்பின் வெளிப்பாட்டால் சொர்க்கத்தை தந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் தான். மீலாது மெலிது விழாக்கள் ஆகும்.
இதே கருத்தை இப்படியே
இமாம் சுயூத்தி ரஹி கூறுகிறார்கள்.
، فَمَا حَالُ
الْمُسْلِمِ الْمُوَحِّدِ مِنْ أُمَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يُسَرُّ بِمَوْلِدِهِ وَيَبْذُلُ مَا تَصِلُ إِلَيْهِ قُدْرَتُهُ فِي مَحَبَّتِهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ لَعَمْرِي إِنَّمَا يَكُونُ جَزَاؤُهُ مِنَ
اللَّهِ الْكَرِيمِ أَنْ يُدْخِلَهُ بِفَضْلِهِ جَنَّاتِ النَّعِيمِ.
மீலாது மெளலிது
நிகழ்ச்சிகளில் மலர்ந்த சமூக நல்லிணக்கம்.
நம்முடைய தமிழகத்தை
பொறூத்த வரை மாற்றுமத்த்தை சேர்ந்த இலக்கிய வாதிகள் அரசியல் தலைவர்கள் பெருமானாரைப்
பற்றி பேசுவதற்கும் சமூக ஒற்றுமை நிலவுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப்பெரிய பங்கு
வகித்தன.
தந்தை பெரியார்,
மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா என்று பல தலைவர்கள் இஸ்லாமியர்களுடன் நேரடியாக உரையாட, மேடையமைத்துக் கொடுத்து
மீலாது விழக்களே
தந்தைப் பெரியாரும்,
அறிஞர் அண்ணாவும்,
திராவிட இயக்கத்தின் தலைவர்களும்,
இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற வாய்ப்பை விரும்பிப் பெற்றவர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை அகற்றிட, உறுதியை, துணிவை, சகோதரத்துவத்தை, சமத்துவத்தை,
சமதர்மத்தை நிலைநாட்டிட நபிகள் பெருமானுடைய வாழ்க்கையும் அவரது அறிவுரைகளும் எந்த அளவிற்குப் பயன்படும் என்பதைக் கண்டு அவற்றைப் பயன்படுத்தியவர்கள். எனவே தான் இந்தப் பெருவிழாவிலே நான் கலந்து கொள்வதை எனக்குற்ற பெருமையாக, பெரும்பேறாகக் கருதுகிறேன்.
எனவே மீலாது விழாக்கள்
அல்லாஹ்வின் பேர்ருளை உணரவும்,. பெருமானாரின் பெரும் புகழை பரப்பவும் நம்முடைய தமிழகத்தில்
மார்க்க அறிவும் சமூக நல்லிணக்கம் பரவ்வும் காரணமாக இருந்த நிகழ்வுகளாகும்.
மீலாது விழாக்களை
நட்த்துகிற முஸ்லிம்களான நம்மை பொறுத்த்வரை அது பெருமானார் (ஸல்) அவர்களின் மீதான்
தூய அன்பினை வெளிப்படுத்தும் ஏற்பாடாகும்.
அதனால் மீலாது
விழாக்களை மெள்லிது நிகழ்ச்சிகளை பெருமானாரின் மீதான அன்பினால் நாம் ஏற்பாடு செய்ய
வேண்டும். கலந்து கொள்ள வேண்டும்.
அன்பினால் செய்யப்படும்
போது அது உரிய பயனை தரும். அதில் தவறு நேராது.
வேலூர் அண்ணல்
அஃலா ஹழ்ரத் அவர்களின் கப்ரின் மீது யாரோ சிலர் பூக்களை தூவி விட்டனர். இதை சிலர் மிகப்
பெரிய தவறாக சித்தரிக்க முயன்றனர். அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்த கடப்பா செய்யது
அப்துல் ஜப்பார் ஹழ்ரத் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். உயிருடன் இருக்கும் போது பூக்களை
வீசினால் மகிழ்ச்சிடைகிறார்கள். மவ்தான் பிறகு வீசினால் பிரச்சனை செய்கிறார்கள். இது
அன்பினால் செய்யப் பட்டிருந்தால் தவறில்லை என்றார்கள்.
அன்பினால் செய்யப்படும்
போது நற்காரியங்கள் அதனுடைய எல்லையை தாண்டாது. அதே நேரத்தில் ஒரு பெயருக்கா அல்லது
மரியாதையற்ற வெற்று சடங்காக செய்யப்படுமானால் தேவையற்ற முறையற்ற செயல்கள் அதில் மேலும்
அதிகமாக வந்து சேர்ந்து விடும்.
தமிழகத்தை சேர்ந்த
ஒரு ஹழ்ரத், தில்லி நிஜாமுத்தீன் அவுலியா தர்ஹாவிற்கு சென்றார். அங்கிருந்த மலர்கள்
சிலவற்றை கையில் எடுத்தார். உடனே பக்கதிலிருந்த ஒருவர் அவரை மிரட்டுகிற தொனியில் கா! இதைச் சாப்பிடு என்று
கூறினாராம்.
வேஷம் போடுகிற
போது காரியங்களில் கடுமை கூடும். அது தேவையற்றும் மார்க்கமற்றதும் ஆகிவிடும்.
எனவே மீலாது மெளலிது
நிகழ்ச்சிகளில் பெருமானாரின் மீதான உண்மையான அன்பு மற்றும் நேசத்தோடு நாம் பங்கேற்க
வேண்டும். யாரையாவது ஓத வைத்து விட்டு நாம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க கூடாது. மீலாது விழாக்களை குறைந்த பட்சம் அதிகமாக சலவாத்துக்களை
சொல்லவாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறுமனே தப்ருக்கு திரள்கிற கூட்டமாக நாம்
இருக்க கூடாது. அதே போல கந்தூரி நிகழ்வுகள் உண்மையான நபி நேசத்தின் அடிப்படையிலான உணவுப்
பங்கீடுகளாக இருக்க வேண்டும். நமது சொந்த பெறுமையை காட்டுவதாக இருக்க குடாது.
யாரையும் குறை
கூற வேண்டும் என்பதற்காக இதை கூற வில்லை. சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு அருமையான
வாய்ப்பை நாம் நமது அலட்சியத்தால் தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக சொல்கிறோம்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக! .
மாஷா அல்லாஹ்!
ReplyDeleteதேவையான பதிவு! சரியான நேரத்தில்....
மாஷா அல்லாஹ்! தேவையான பதிவு! சரியான நேரத்தில்....
ReplyDeleteMasha Allah, Baarakallah
ReplyDeleteماشاء اللہ, بارك الله
ReplyDeleteஹஜ்ரத் தங்களின் கருத்து அற்புதமானது இந்த வஹ்ஹாபி பேய்களை விரட்டுவதற்கு மஹல்லா தோறும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்
ReplyDelete