வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 28, 2011

ரமலான்



شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون(185)

இன்னும் சில நாட்களில் ரமலான் வர இருக்கிறது.
ஷஃபான் தாமதமாக துவங்கியதால் 1 ம் தேதி தான்  சந்தேகத்திற்குரிய நாள். அன்றைய தினம் நோன்பு கூடாது.
1 ம்தேதி இரவு பிறை தென்பட்டால் 2 ம் தேதி முதல் நோன்பு. இல்லை எனில் 3ம் தேதி முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகும்.

அல்லாஹ் நமக்கு ஷஃபான் மாத்தின் 29 நாளில் ரமலான் பிறையை காட்டினால் அடுத்த நாள் நோன்பு. இல்லை எனில் அதற்கடுத்த நாளிலிருந்து ரமலான் ஆரம்பமாகும். நபிகள நாயகம் (ஸல்) அவர்களது வழிகாட்டுதலிலும் சஹாபாக்களின் வழி முறைகளிலும் தெளிவாக அறியப்பட்ட நடைமுறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

சவூதி என்று சொல்லி, சர்வதேச பிறை என்று சொல்லி குழப்பும் தீய சக்திகளை புறக்கணிப்பீர்! இஸ்லாத்தின் எதார்த்த்திற்கும் எளிமைக்கும் எதிரான கூற்று அது. இஸ்லாத்தினோடு தொடர்பில்லாத பேச்சு அது. மார்க்கத்தை விளையாட்டுப் பொருளாகவும் விவாத களமாகவும் எடுத்துக் கொண்டு விட்ட சிலர் ரமலானின் பிறையிலிருந்து தஙகளது பித்தலாட்ட்த்தை ஆரம்பித்து விடுவர். சமுதாயம் அந்த குறும்புக்கார்ர்களை அடையாளம் கண்டு விலகி இருக்க வேண்டும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ -  البخاري – 1907

عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي-  مسلم 1819


ரமலானின் சிறப்பு

குறைவான வார்த்தைகளை பேசும் பழக்க முடைய பெருமானார்(ஸல்) ரமலானின் சிறப்பை வழக்கத்திற்கு மாறாக மிக் நீண்ட வார்த்தைகளில் எடுத்துக் கூறினார்கள்.

عن سلمان الفارسي قال   خطبنا رسول الله   صلى الله عليه وسلم   آخر يوم من شعبان فقال يا أيها الناس انه قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر فرض الله صيامه وجعل قيام ليله تطوعا فمن تطوع فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة وهو شهر الصبر والصبر ثوابه الجنة وهو شهر المواساة وهو شهر يزاد رزق المؤمن فيه من فطر صائما كان له عتق رقبة ومغفرة لذنوبه قيل يا رسول الله ليس كلنا يجد ما يفطر الصائم قال يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة ماء ومن اشبع صائما كان له مغفرة لذنوبه وسقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيئا وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه فيه أعتقه الله من النار قلت ويأتي حديث في فضل الصوم في صوم التطوع

சமுதாயம் அதற்கு தகுந்த ஆர்வத்தை காட்ட வேண்டும்.

ஒரு ரமலானை பெற்றுக்கொள்வது வாழ்வின் மிகப்பெரிய பேறு.

عن طلحة بن عبيد الله أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما بينهما أبعد ما بين السماء والأرض  - احمد

ஷஹீதை விட ரமலானை பெற்றுக் கொண்டவர் அதிக மரியாதைக்குரிய்வர் ஆகிறார்.

கவனிக்க வேண்டும்:
ரமலான் வந்து போவது ரமலானை பெற்றுக் கொண்டதாகாது.

ரமலானை பெற்றுக் கொள்ளும் வழி

ரமலானை இதய சுத்தியோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்பது, அதற்காக தயாராவது,
·         பெருமானாரின் அக்கறை -ரஜபிலேயே துஆ –
இரண்டு மாத்த்திற்கு முன்பே ரமலானைப் பற்றி   
சிந்திக்கவும் அதற்காக தயாராகுமாறு தூண்டு கிறது.
·         ரஜப் ஷஃபானில் பெருமானார் (ஸல்) அதிகமாக நோன்பு வைப்பார்கள்,

வாழ்நாளின் ஒரு பொன்னான நேரத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூடுமான நன்மைகளை செய்ய முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்ச்ம் தவறுகளை தவிர்க்க வேண்டும்.

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردة الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة -  
                                                            
நோன்பு ரம்லானின் பிரதான கடமை
சமுதாயம் இதில் சளைக்காத ஆர்வத்தை காட்டுகிறது. சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் பெண்களவரை அனைத்து தரப்பாரும் விருப்பத்தோடு இந்த விரத்த்தை மேற்கொள்கின்றனர்

ஒரு சிறு பையன் நோன்பு வைத்தான், அவனது பட்டினியை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதியம் நேரத்தில் பையனிடம் சொன்னார். தம்பி சாப்பிடு! இப்போது சாப்பிட்டால் அது இன்னொரு சஹராகிவிடும். உனக்கு இரண்டு நோன்பு கிடைக்கும் என்றார். பையன் மறுத்து விட்டான். எல்லோரும் சாப்பிடும் போதுதான் நானும் சாப்பிடுவேன் என்றான்.

மாற்று மத சகோதர்ர்களை ஆச்சரியப் படுத்தக் கூடியது இஸ்லாமிய நோன்பு.

முஃமின்களது காலில் ஒரு முள் தைத்தால் கூட அதற்கு தனியான நன்மைகளை வழங்குகிற இறைவன் ஒரு பகல் முழுக்க அடியான் பட்டினி கிடக்க, தாகத்தை பொறுத்துக் கொள்ள எவ்வளவு கருணை மழை பொழிவான்?

குழந்தை பள்ளிக்கூட்த்திலிருந்து திரும்பியதும் தாய் எவ்வளவு அக்கறையாக கருணையோடு குழந்தைக்கு சோறூட்டுகிறார். அல்லாஹ்வின் கருணை அதைவிடப் பெரிதல்லவா?

அதனால் தான் நோன்புக்கு நானே கூலி கொடுக்கிறேன் என்கிறான்.

ஒரு சிலர் முதல் மூன்று நோன்பு கடைசி மூன்று நோன்பு என்று ஷார்ட்கட் பயன்படுத்துகின்றனர், தவறு. தள்ளாத முதியோர், கர்ப்பிணிகள் பால் கொடுக்கும் பெண்கள், நோயாளிகளை தவிர மற்ற அனைவரின் மீதும் நோன்பு கட்டாயக் கடமை என்பதை மறக்க கூடாது.

தொழுகை
அனைத்து தொழுகைக்களிலும் விஷேச கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக தராவீஹ் மற்றும் தஹஜ்ஜது தொழுகைகள்

தராவீஹ் 20 ரக அத்துக்களே!
நீங்கள் தராவீஹ் தொழ நினைத்தால் ஜமாத்துடன் 20 ரக அத் தொழுங்கள். அது தான் மார்க்கம்.

وعن ابن شهاب عن عروة بن الزبير عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم فجمعهم على أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله 

உமர் (ரலி) ஏற்படுத்திய சுன்னத் இது என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

அப்போதிலிருந்து இப்போதுவரை மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் இருபது ரகாத்துகளே தொழப்பட்டு வருகின்றன. மக்கா மதினாவின் வர்லாறு. இப்போது போல 24 மணிநேரமும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை என்றாலும் அதற்கு குறையாத வகையில் கவனமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பாரம்பரிய பள்ளிவாசல்களின் நடைமுறையும் இவ்வாறே அமைந்துள்ளது.

8, 11, என்ற எண்ணிக்கையில் சொல்லப்படும் ஹதீஸ்கள்  பெருமானாரின் தஹஜ்ஜத் தொழுகையே குறிக்கிறது. ரமலானின் விஷேச இரவுத்தொழுகையை அல்ல.

இது விசயத்தில் தீர யோசிக்காமல் அவசர முடிவுக்கு வந்து தராவீஹ் விசயத்தில் ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.

ஆரம்பத்தில் தராவீஹ் 8 ரக அத் என்று பேசியவர்கள் பின்னர் இரவுத்தொழுகை 8 ரக அத் என்று மாற்றிக் கொண்ட்தையும், அந்த தொழுகையை கூட ரமலானின் பிறபகுதியில் இரவு 12 மணிக்குமேல் தொழுவதையும் கவனியுங்கள்.

தராவீஹுக்கும் தஹஜ்ஜத் தொழுகைகும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொண்டு தீனை கோமாளித்தனமாக்கும் இவர்களது நடைமுறைகளை உதறித்தள்ளுங்கள்.   

தஹஜ்ஜுத்

தனித்துவம் மிக்க தஹஜ்ஜத் தொழுகைக்கு ரமலான் ஒரு நல்ல வாய்ப்பாகும். சஹருக்கு சற்று நேரம் முன்னதாக எழுந்திருத்தால் போதுமானது.
குறைந்த பட்சம் 8 அதிக பட்சமாக 12 ரக அத் தஹஜ்ஜுத் தொழுலாம்.

டிவி

சஹர் நேரத்தில் டி வி பார்க்கிற பழக்கத்தை விட்டுவிட்டால் தஹஜ்ஜத் தொழுகை இலேசாகி விடும்.

என்னதான் சிறந்த பயான் என்றாலும் திட்டவட்டமாக் முடிவெடுத்து சஹர் நேரத்தில் டி வி யை ஆப் செய்துவிட்டு சஹர் செய்து பாருங்கள். அமைதியான சஹரை அனுபவிப்பீர்கள். தஹஜ்ஜுத் தொழுவும் குர் ஆன் ஓதவும் போதிய நேரம் கிடைக்கும்.

குர் ஆன்  
ரமலானின் சிறப்பே குர் ஆன் தான். அதிமாக குரான் ஓத வேண்டும்.
பெருமானாருக்கு ஜிப்ரயீல் (அலை) ஒரு முறை குர் ஆனை ஓதிக்காட்டுவார்.

இமாம் அபூஹனீபா ஒரு ரமாலானில் 63 முறை குரான் ஒதும் பழக்கம் கொண்டிருந்தார். பகலில் ஒன்று இரவில் ஒன்று. ஒரு மாத தராவீஹில் 3 குர் ஆன்.

இந்த ரமலானுக்கு என ஒரு குறிப்பிட்ட செயலை திட்டமிட்டுக் கொண்டால் ரமலானை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

குர் ஆன் ஓதப்பழகுவது, அல்லது பெருமானாரின் வரலாற்றை படிப்பது, கலீபாக்கள் சஹாபாக்களின் வரலாற்றை படிப்பது, அல்லது ஹதீஸ் நூல் ஒன்றை படித்து முடித்துவிடுவது என்று ஒரு திட்ட்த்தை வகுத்துக் கொண்டால் ஒரு ரமலான் எப்படி கழிந்த்து என்பதை பல வருடங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். இவை ரமலானை அர்த்தப் படுத்திக் கொள்ளும் முயற்சியாக அமையும்.

தர்மம்
ரமலானில் பெருமானார் (ஸல்) அவர்கள் வீசும் காற்றை விட அதிகமாக தர்மம் செய்வார்கள்.

ஒரு அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இயன்ற வழிகளிலெல்லாம் அதை பயன்படுத்திக் கொளுவது புத்திசாலித்தனம்.

عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه-  نسائي

عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء وذلك في كل ليلة -  ابن ماجة

பார்க்க : அருளிறங்கும் பருவ காலம். 

Thursday, July 21, 2011

அல்லாஹ்வோடு நாம்


பராத் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு  இறங்கி வந்து மக்களின் பாவங்களை மன்னிக்கிறான் என நபிகள நாயகம் (ஸல்) அவர்கள சொன்னார்கள்

عَنْ عَائِشَةَ : قَالَ  النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  : إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ

மன்னிப்பு வழங்க மக்களிடம் அவன் நெருங்கி வருவதையே முதல் வானத்திற்கு ங்கி வருதல் எனும் சொல் குறிக்கிறது. அல்லாஹ் அவனிடம் கையேந்துகிற அனைத்து தரப்பினருக்கும் மிக அதிகமாக மன்னிப்பு வழங்குகிறான என்பது இதன் கருத்தாகும்.

அல்லாஹ் எபோதும் நமக்கு நெருக்கமாகவே இருக்கிறான்.
وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ – الحديد
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

விசேஷ நாட்களில் அந்த நெருக்கம் இன்னும் அதிகரிக்கிறது.
இன்றைய நம்முடைய கேள்வி என்னவென்றால் நாம் அல்லாஹ்வை நெருங்கிச் செல்கிறோமா என்பதே!

அல்லாஹ்வை நாம் நெருங்கினால மட்டுமே அவனுடைய அருட்கொடைகளின் பயனை நாம் அனுபவிக்க முடியும்,

சூரிய வெளிச்சம் எங்கும் வியாபித்திருக்கிறது. ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் செடியை சூரிய வெளிச்சம் படுகிற வண்ணம் வைத்திருந்தால் மட்டுமே அது வளரும்.

தொழுகையில் அல்லாஹ்வுடை ரஹ்மத் நம்மை நோக்கி வருகிறது. நாம் அதை ஏற்கிற நிலையில் இருக்க வேண்டும்

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلَا يَمْسَحْ الْحَصَى فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ

செல்போன் வைத்திருப்பவர் சுவிட்ச் ஆன் செய்திருந்தால் மட்டுமே அதை நோக்கி வருகிற சிகனலை பெற முடியும். அணைத்து வைத்திருந்தால் அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தால் சிக்னல் கிடைப்பதில்லை அது போல

நாம் அல்லாஹ்வுடன் இருக்க வழி.
அல்லாஹ்வை ஞாபகத்தில் வைத்திருப்பது,
நாம் அல்லாஹ்வை அறிந்திருக்கிறோம். சந்தேகமில்லை.(علم (
ஞாபகத்தில் வைத்திருக்கிறோமா  إستحضار)  (

சிறுவனை பறிகொடுத்த தாய் அவன் இறந்து பல நாட்களாகிய பிறனும் அவனுடைய ஞாபகமாக இருக்கிறாள். அவன் நடப்பது போல, சாப்பிடுவது போல, வீட்டிற்குள் வருவது போல, அவன் அம்மா என்று அழைப்பது போலவே உணர்கிறாள். காரணம் அவளுடைய ஞாபகத்திலிருந்து சிறுவன் அகலுவதில்லை.

நம்மிடம் அல்லாஹ்வின் ஞாபகம் இப்படி இருக்குமெனில் 2 பயன்கள்

1) எந்த நிலையிலும் அல்லாஹ்வின் பாதுகாப்புக் கிடைக்கும்.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அப்படி அல்லாஹ்வின் ஞாபகம் இருந்தது.

ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لَأَبْصَرَنَا فَقَالَ مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا البخاري – 3653

 மிக ஆச்சரியமாக அவர்கள் பாதுகாக்கப் பட்டார்கள்.

2)  காரணம் இல்லாமல் அல்லாஹ் ரிஜ்க் தருவான்.
ரிஜ்கின் பொருள் ஆழமானது.

மர்ய்ம அம்மையாருக்கு அல்லாஹ் ரிஜ்க் அளித்த்து போல

மர்யம் அம்மையாரின் வாழ்வின் இரண்டு தருணங்கள்
அவரிடம் ஆச்சரியமான வகையில் உணவு இருப்பதை ஜக்ரியா (அலை) பார்த்தார்கள். اني لك هذا  அவர் கேட்க هُوَ مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ  என மர்யம் அம்மையார் பதிலளித்தார்.

அதே மர்யம் அம்மையாரிடம் ஜிபரயீல் (அலை) உங்களுக்கு ஒரு குழந்தையை தரப்போகிறான் என்ற போது அவர் கேட்டார்
أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ

இரண்டு நிலைகளிலும் காணப்பட்ட வித்தியாசத்திற்கு காரணம்  முதல் நிலையில் அவர் தனிமையில் அல்லாஹ்வின் நினைவில் இருந்தார். இரண்டாவது நிலையில் மக்களோடு கலந்துறவாடிக் கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் நினைவு குறைந்திருந்த்து என இஸ்லாமிய அறிஞர் துல்பிகார் சாஹிப் குறிப்பிடுகிறார்.

அல்லாஹ்வின் நினைவில் இருக்கிற போது எதற்கும் எப்போதும் அல்லாஹ் இருக்கிறான் என்ற தைரியமும் நம்பிக்கையும் கூடவே இருக்கும்.  காரண காரியங்களைத் தாண்டி அவனது உதவியும் கிடைக்கும்.

ஒருநணபர் இன்ஞினியரிங்க கவுன்சிலிங்கில் உட்கார்ந்திருந்தார். ஒருகுறிப்பிட்ட கல்லூரியில் அரது பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட படிப்பை எதிர்பார்த்திருந்தார். அவரது வரிசை எண் 300 க்கு மேல் இருநது. கல்லூரியிலோ 3 சீட்டுக்கள் தான் இருந்தன. கவுன்சிலிங்க் தொடங்கியதில் இடங்கள் வேகவ்கமாக  தீர்ந்து கொண்டிருந்தன. நணபர் பதற்றத்தில் இருந்தார். ஒரு கட்ட்த்தில் அவருக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வந்த்த்து ஹஸ்புனல்லாஹ் திக்ரில் ஈடுபட்டார். என்ன ஆச்சரியம் அவருக்குரிய வரிசை வந்த போது எதிர்பார்த்த கல்லூரியில் 3 இடங்களும் அப்படியே இருந்தன. அன்றைய தினம் அந்தக் கல்லூரிக்கான முதல் இடம் அவருக்கு கிடைத்த்து.

அல்லாஹ்வை சாதாரணமாக நினைக்கிற போதே இப்படி உதவி கிடைக்குமென்றால் சதா நினைத்துக் கொண்டிருந்தால் எத்தகைய உதவி கிடைக்கும்?

அல்லாஹ்வை நினைப்பதால் குறைந்த பட்சம் பதற்றம் குறைந்து மன அழுத்தம் குறைகிறது. நிதானமாகவும் நிம்மதியாகவு காரியங்களை எதிர்க் கொள்ள முடிகிறது,

அல்லாஹ்வை ஞாபகத்தில் வைத்திருக்கும் வழி முறைகள்

தனிமையில் அவனை நினைவு கூர்வது
படைப்புக்களின் பலகீனத்தை எண்ணிப் பார்ப்பது.
சலனமற்ற சிந்தனையுடனும், உள்ளத்தூய்மையுடன் திக்ருகளை அதிகப் படுத்திக் கொண்டிருப்பது.

உலகியல் லாபங்களை எதிர்பார்க்காமல் அல்லாஹ்வின் சக்தியை அஞ்சியும், அவனது கருணையில் ஆசை கொண்டும் நடந்து கொள்வது.

புனித மிக்க ரமலானை எதிர்க் கொள்கிற இந்த புண்ணிய நேரங்களில் நம்மை நெருங்கி வருகிற அல்லாஹ்வை நாம் நெருங்கிச் செல்வதற்கு முயற்சிப்போம்.
 





  

Thursday, July 14, 2011

மும்பை குண்டு வெடிப்பு


13/7 அன்று மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடை பெற்ற குண்டு வெடிப்புக்கள் இதயமுள்ள எவரையும் பதற்ச் செய்யும் கொடூரச் செயலாகும்.

                                                                                      மேலும் படிக்க....

சுன்னத்தும் பித்அத்தும்

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

குர் ஆன் ஹதீஸைப் போல முஸ்லிம்களின் அதிக கவனத்திற்குரிய வேறு இரு சொற்கள், சுன்னத் பித்அத்

துரதிஷ்டவசமாக தற்கால முஸ்லிம்கள் இவற்றின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளதாதால ஏகப்பட்ட பிரச்சினைகளும் பிளவுகளும் தோன்றின.

இன்றைய இளைய முஸ்லிம் சமுதாய த்தின் ஒரு சிறு பிரிவினர் பித்அத் என்ற வார்த்தையின் சரியான பொருளை புரிந்து கொள்ளாமலே சமுதாயத்தை பிளவு படுத்திக் கொண்டிருக்கினர் .

தீன் என்ற பெயரில் தீனின் அடிப்படைகளுக்கும் தெளிவுகளுக்கும் மாற்றமாக வறட்டு சித்தாந்த்தில் உலவிக் கொண்டிருக்கின்னர்.

இந்தப்பிரச்சினைக்கு, பிற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களாக புகழப்பட்ட இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் ஆகிய இருவரின் தவறான அபிபராயங்களே முக்கிய காரணமாகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் ஷிர்க் சாயம் பூசி தங்களை மட்டுமே உண்மையான முஸ்லிம்களாக காட்டிக் கொள்ள முயலும் இன்றைய சவூதி அரசாங்கத்தின் பரப்புரைகளும் ஒரு பெரும் காரணமாகும்.

சுன்னத் ஹதீஸ் அறிஞர்களிடம் :
ما نقل عن النبي صل الله عليه وسلم قولا، وفعلا, وإقرارا

சுன்னத்  சட்ட  அறிஞர்களிடம்
ما واظب النبي صل الله عليه وسلم  بتركه احيانا

பெருமபாலான சமயங்களில் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட வழி முறை என்பதே சுன்னத் என்பதின் பொருளாகும். சில சமயங்களில் அதை தவிர்த்தும் இருப்பார்கள்.

சுன்னத்கள் பின்பற்றப் படனும்இஸ்லாமின் அடிப்படைகளை முழுமைப் படுத்துபவை சுன்னத்துகளே. சுன்னத்துக்கள் இல்லாத இஸ்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட்து. உயிரில்லாத உடல் போன்றது. அல்லது உடலில்லாத உயிர் போன்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ(20)  الانفال
مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا(80) النساء
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِيهِ فَأُوْلَئِكَ هُمْ الْفَائِزُونَ(52) النور
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا(17) الفتح

சாப்பிட்ட பிறகு விரல் சூப்புவதிலிருந்து அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களிடமிருந்து அன்பளிப்புக்களை ஏற்கக கூடாது என்பது வரை வாழ்க்கைப்பாதையின் வழி நெடுகிலும் தனித்துவமிக்க தனது வழி முறைகளை விட்டுச் சென்ற பெருமை பெருமானாரைப் போல வேறெவருக்கும் இல்லை.

குடும்பம், சமூகம், அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் என அனைத்து துறையிலும் பெருமானாராது வழிமுறைகள் உண்டு.

சுன்னத் தானே என்ற அலட்சியம் கூடாது.
பர்ளை நிறைவேற்றாவிட்டால் அல்லாஹ் பிடிப்பான். சுன்னத்தை விட்டால் பிரச்சினை இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

இந்த எண்ணம் தவறு. சுன்னத் கடமை அல்ல என்றாலும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றே.

சுன்னத்தை கடைபிடிக்கிற போதுதான் பெருமானாரின் ஷபாஅத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சுன்னத் என்பது பெருமானாரின் வழி முறை மட்டுமல்ல நபித்தோழர்களது வழி முறைகளும் சேர்ந்த்தாகும்.

عن عِرْبَاضَ بْنَ سَارِيَةَ   : وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ

சுன்னத்துக்களை பின்பற்றுவதில் சஹாபாக்களின் ஆர்வம்  -

 உதாரணம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ

عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ وَرَمَى بِسَبْعٍ وَقَالَ هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طَوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَهُ

كَانَ ابْنُ عُمَرَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ لَا يُصَلِّي قَبْلَهَا وَلَا بَعْدَهَا فَقِيلَ لَهُ مَا هَذَا قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَصْبُغُ ثِيَابَهُ بِالزَّعْفَرَانِ فَقِيلَ لَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ – النسائي

சுன்னத்துக்களை தனி கவ்னத்தோடு பின்பற்றுகிற காலமெல்லாம் சமுதாயம் உன்னதமான இட்த்தில் இருந்த்து. இருக்கும். வழி தவறாது.

சுன்னத்துக்களை கடைபிடிக்கிற அதே நேரத்தில் பித்அத்கள் தவிர்க்கப் பட வேண்டும்

عن عائشة - رضي الله عنها - عن النبي - صلى الله عليه وسلم - قال: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد)) صحيح البخاري  4273

كان رسول الله - صلى الله عليه وسلم- يخطب الناس؛ يحمد الله، ويثني عليه بما هو أهله؛ ثم يقول: ((من يهده الله فلا مضل له، ومن يضلل الله فلا هادي له، وخير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة)) صحيح مسلم 867  ، وفي رواية للنسائي: ((وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار)) ،

பித்அத்  என்றால் என்ன?  

தற்காலத்தில் இது பற்றி முறையாக விளங்காமலே பல சுன்னத்துக்களை பித் அத் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

எதையாவது புதிதாக சொல்லி தங்கள பக்கம் மக்களை ஈர்க்க நினைக்கும் தீய தலைவர்களின் கைங்கர்யம் இது.

இத்தகையோர் பித் அத் என்பதற்கு பெருமானார் காலத்தில் இல்லாத்து என்று பொத்தம் பொதுவாக கூறுவர்.
 

இது இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்  போன்ற பிந்தய நவீனத்துவ சிந்தனையாளர்களின் சுய கருத்தும் விளக்கமுமாகும்,

"البدعة في الدين هي ما لم يشرعه الله ورسوله، وهو ما لم يأمر به أمر إيجاب ولا استحباب - ابن تيمية- مجموع الفتاوى 4/108

இந்த விளக்கம் நல்லது போல தோன்றினாலும் சரியானது அல்ல. ஆபத்தானது. சஹாபாக்களை ஒரு புறத்திலும் பெருமானாரை மறு புறத்திலும் நிறுத்தக் கூடியது

இந்த விளக்கத்தின் காரணமாக  நேர்வழி பெற்ற் கலீபாக்களான உமர் உஸ்மான் (ரலி) ஆகியோரும் மற்ற பல சஹாபாக்களும் பெருமானாரிடமிருந்து புரிந்து கொண்ட்தன் அடிப்படையில் செய்த காரியங்களை பித் அத்தாக கண்டனம் (நவூது பில்லாஹ்)

உதாரணத்திற்கு ஜும் ஆவில் இரண்டு பாங்கு நடைமுறை. குர்ஆனை தொகுத்தது, ரமலான் முழுவதும் தராவீஹ் ஜமாத்.

பித் அத்தின் சரியான விளக்கம்  : முன்னோடி மார்க்க விற்பன்னர்களின் கருத்து
இப்னு ஹஜர்  அல் அஸ்கலானிபுகாரி விரிவுரையாளர்.

البدعة  ;ما أحدث وليس له أصل في الشرع  -   الحافظ ابن حجرفتح الباري
البدعة : "ما أحدث مما لا أصل له في الشريعة يدل عليه"-  ابن رجب الحنبلي

இந்த விளக்கமே மார்க்கத்தையும் மார்க்க முன்னோடிகளையும் சரியாக புரிந்து கொள்ள உதவக்கூடியது.

பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றன, அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ் அரி, போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பரா அத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان  என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

இப்படி ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித் அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்

பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ் களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சி செய்யலாம்.

பரா அத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ள முடியும். 

அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக தொழுகையில் துஆ செய்வதை பரா அத்தை பித் அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா? 

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.

வருகிற 17 ம் தேதி இரவில் பள்ளிவாசல்களில் நடைபெறுகிற  பரா அதி நிகழ்ச்சி களில் பங்கேற்பீர். முறையான அமல்களைச் செய்வீர்.

பரா அத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்லஇதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்

பரா அத் பற்றிய நபி மொழிகள்:

ابن ماجة  

عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144 


عن علي بن أبي طالب قال قال رسول الله   صلى الله عليه وسلم     إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر 

عن عائشة قالت   فقدت النبي   صلى الله عليه وسلم   ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن   الله تعالى   ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب    

  عن أبي موسى الأشعري عن رسول الله   صلى الله عليه وسلم   قال   إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن       

البيهقي

عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر