வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 21, 2012

பாதுகாக்கப்பட்ட சமுதாயம்


இஸ்லாமிய சமயமும் முஸ்லிம் சமுதாயமும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பவையாகும்.

அவ்வப்போது சில சோதனைகள் ஏற்பட்டதுண்டுஅந்த சோதனைகள் காட்டுத்தீ போல வேகமாகவும் தீவிரமாகவும் பரவி கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதுண்டுஅல்லாஹ்வின் தனித்த கிருபையினால சமுதாயம் அந்த சோதனைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறது. வரலாறு நெடுகிலும் இதற்கான ஆதரங்கள் ஏராளமாக கிடைக்கின்றன.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ(9)-  الحجر
இந்த வசனத்தில் குர் ஆனை பாதுகாக்கிற பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கிறான்.

முந்தைய வேதங்களை பாதுகாக்கிற பொறுப்பு ஒப்படைக்க அம்மக்களிடமே தரப்பட்டது அவர்களால பாதுகாக்க முடியவில்லை.

இறுதி வேதமான திருக்குர் ஆன பாதுகாக்கிற பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டான.

மிக அற்புதமாக குர் ஆன் பாதுகாக்கப் படுகிறது.
15 நூற்றாண்டுகளாக குர் ஆனைப் போல பாதுகாக்கப் படுகிற் நூல வேறெதுவும் இல்லை.

حدثنا الحسين بن فهم قال: سمعت يحيى بن أكثم يقول: كان للمأمون - وهو أمير إذ ذاك - مجلس نظر, فدخل في جملة الناس رجل يهودي حسن الثوب حسن الوجه طيب الرائحة, قال: فتكلم فأحسن الكلام والعبارة, قال: فلما تقوض المجلس دعاه المأمون فقال له: إسرائيلي؟ قال نعم. قال له: أسلم حتى أفعل بك وأصنع, ووعده. فقال: ديني ودين آبائي! وانصرف. قال: فلما كان بعد سنة جاءنا مسلما, قال: فتكلم على الفقه فأحسن الكلام; فلما تقوض المجلس دعاه المأمون وقال: ألست صاحبنا بالأمس؟ قال له: بلى. قال: فما كان سبب إسلامك؟ قال: انصرفت من حضرتك فأحببت أن أمتحن هذه الأديان, وأنت تراني حسن الخط, فعمدت إلى التوراة فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت, وأدخلتها الكنيسة فاشتريت مني, وعمدت إلى الإنجيل فكتب نسخ فزدت فيها ونقصت, وأدخلتها البيعة فاشتريت مني, وعمدت إلى القرآن فعملت ثلاث نسخ وزدت فيها ونقصت, وأدخلتها الوراقين فتصفحوها, فلما أن وجدوا فيها الزيادة والنقصان رموا بها فلم يشتروها; فعلمت أن هذا كتاب محفوظ, فكان هذا سبب إسلامي.

திருக்குறளில் பல பாக்கள் இடைச் செருகள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பக கடவுள் வாழ்த்துப் பாக்கள்.

விரிவுரையளர்கள் கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி ஹதீஸையும் எடுத்டுக் கொள்ளும்.  ஹதீஸை பாதுகாக்கிற பொறுப்பையும் அல்லாஹ்வே எடுத்துக் கொண்டுள்ளான என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் குர் ஆனுக்கு விளக்கமாக் இருப்பவை ஹதீஸ். ஹதீஸ் இல்லையேல் குர் ஆனை விளங்கிக் கொள்ள முடியாது.
தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று குர் ஆன் கூறியது. எப்படி தொழுவது என்பதை ஹதீஸ் தான் கற்றுத்தருகிறது. ( இது போல இன்னும் பல..)

ஹதீஸ் பெருமானார் காலத்தில் எழுதி வைக்கப் பட வில்லை. என்றாலும் ஹதீஸ் அற்புதமான முறையில் பாதுகாக்கப் பட்டது.

பெருமானார் (ஸல்) எந்த எழுத்துக்களை உச்சரித்தார்களோ அந்த எழுத்துக்கள் சுத்தமாக பாதுகாக்கப் பட்டான்.
பிற்காலாத்தில் ஹதீஸ் அல்லாத பலவும் ஹதீஸுக்குள் புகுந்த போது முஸ்லிம் அறீஞர்கள் ஒரு பெரும் கூட்டம் சரியான ஹதீஸ்களை கண்டறீயும் பணியில் ஈடுபட்டு ஹதீஸ்களையும் இட்டுக்கட்டப் பட்டவைகளையும் பிரித்தரிந்தது.

உலகின் வேறெந்த தலைவருக்கு இப்படி ஒரு சிறப்பு இல்லை.

ஒருவரது வார்த்தகளுக்காக பல கலைகள் உருவான சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.

இது போலவே, இஸ்லாமிய மார்க்கத்தின் சமயக் கோட்பாடுகளையும் அல்லாஹ் பாதுகாத்து வருகிறான். இந்த வசனத்தின் வாக்குறுதியில் அதுவும் அடங்கும்.

இஸ்லாத்தின் சமயக் கோட்பாடுகள் தத்துவங்கள் அனைத்தும் அதி அற்புதமாக பாதுகாக்கப் படுகின்றன.

மற்ற சமயங்கள் அனைத்தும் தனது ஆதிக் கோட்பாடுகளை பறி கொடுத்து விட்டன.

இஸ்லாம் எவ்வளவு அற்புதமாக பாதுகாக்கப்படுகிறது பாருங்கள்
உஹது யுத்தத்தின் போது பெருமானார் (ஸல்) கொல்லப் பட்டதாக ஒரு வதந்தி பரவியது. என்ன செய்வது ? இனி யாருக்காக சண்டையிடுவது என்று  திகைத்த சஹாபாக்களில் பலர் பேர்க்களத்திலிருந்து வெளியேறினர். சிலர் மதீனாவிற்கே வந்து விட்டனர். உஹதுக் களத்தின் வாசலில்  ஒரு சஹாபியின் வார்த்தைகள் அல்லாஹ் இந்த தீனை பாதுகாத்க்கிற ஆச்சரியமான விதத்தை புலப்படுத்துகின்றன.

` فقال أنس بن النضر عم أنس بن مالك رضي الله عنهما: يا قوم إن كان محمد قد قُتل فإن رب محمد لم يُقتل، فقاتلوا عليه، وشهد له بهذه المقالة عند النبي صلى الله عليه وسلم سعد بن معاذ رضي الله عنه ووافق أنس بن النضر جماعة كثيرون على هذه المقالة وهم المؤمنون أهل الصدق واليقين الذين تمكن الإيمان من قلوبهم.
இந்த சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் இந்த வ்சனத்தை அருளினான்.
{وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفإِيْن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَبِكُمْ} (آل عمران: 144)،
இதே வசனம் பெருமானாரின் வபாத்தின் போது முஸ்லிம் சமுதாய்த்தையும் இஸ்லாமிய சமயத்தையும் சலனத்திற்கு ஆளாகாமல் பாதுகாத்தது.

சஹாபாக்கள் பெருமானாரை மன்னுக்குள் அடக்கம் செய்தார்களே அது இந்த சமுதாயம் பாதுகாக்கப் பட்ட் சமுதாயம் என்பத்ற்கான அடையாளமாகும்.

இந்த சமுதாயத்திற்கு பெருமானாரின் மீது அந்த அளவு மரியாதை இருக்கிறது.

இன்னும் இந்ந்த சமுதாயம் பெருமானாரை அப்துஹூ என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறது.

பெருமானார் விசயத்திலேயே வழி தவறிச்செல்லாத இஸ்லாம் வேறு யார் விசய்த்திலும் வழி தவறும் சாத்தியமில்லை.

ஆனால் இடையில் அவ்வப்போது சில குழப்பங்கள் தோன்றும். குழப்பங்கள் கடுமையானதாகவும் இருக்க கூடும்.

இறுதியில் இஸ்லாம் எல்லா வித குழப்பங்களிலிருந்தும் பாது காக்கப்படும். மிகக் குறுகிய காலத்தில் குழப்பங்கள் தெளியும், குழப்ப வாதிகள் உறுதியாகவும் தெளீவாகவும் அடையாளம் காணப்படுவார்கள். இனம் பிரிக்கப் படுவார்கள்:.
குழப்பங்கள் தோன்று கிற போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்.

நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக் கூடாது. குழப்பங்களுக்குள் இறங்கிவிடாமல் பொறுமை காக்க வேண்டும்.

குழப்பங்கள் தலை தூக்குகிற போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெருமானார் அருமையாக கூறியுள்ளார்கள்.

குழப்பங்களுக்குள் சிக்கக்  கூடாது
புதிய வித்தியாசமான கருத்துக்களுக்கு தலை சாய்க்கக் கூடாது..
சமய ரீதியான புதிய அமைப்புக்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும்.
முஸ்லிம் ஜமாத் என்று வெளிப்படையாக தெரிகிற சமுதாயத்திலிருந்து விலகக் கூடாது.

أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنْ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ الْمَاشِي وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنْ السَّاعِي وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ – البخااري 3334


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ يَفِرُّ بِدِينِهِ مِنْ الْفِتَنِ- البخااري -18

عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ اصْبِرُوا فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- - البخااري 6541

கடந்த 20 வருடங்களுக்குள் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்த்திற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம்.

சில புதிய கருத்துக்கள் கவர்ச்சியாக சொல்லப் பட்ட போது முஸ்லிம் பொதுமக்களும் இளைஞர்களும் அவசரப்பட்டு அந்த குழப்பங்களுக்குள் சிக்கிக் கொண்டதாகும்.

இன்று ஏராளமான முஸ்லிம்கள் அப்புதிய இயக்கங்களையும் அமைப்புக்களையும் ஏளனமாக, அவமானகரமானதாக பார்க்கின்றனர்.
முஸ்லிம் சமுதயாத்தை பிளவு படுத்தி அந்த சுகத்தில் இவ்வியக்கங்கள்  குளீர்காய்வதை அறிந்து ஏன் இதில் இணைந்திருந்தோம் முஸ்லிம் ஜமாத்துக்களிலிருந்து பிரிந்து செல்ல நமக்கு நியாயமான காரணம் எதுவும் இல்ல்யே! சில சின்ன சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றில்ருந்து நாம் ஒதுங்கியிருந்தால் போதுமே! இப்படி தனியாக அமைப்புக்களையும் பள்ளிவாசல்களையும் உருவாக்கி வேறு வேறு நாட்களில் பெருநாட்களையும் சிறப்பான நேரங்களையும் நாம் சீர்குலைத்திருக்க தேவையில்லையே இன்று இப்போது கவலைப் படுகிறார்கள். ஆனால் அதற்குள்ளாக காலம் கடந்து விட்டது.

ஐ.என். டி.ஜே போன்ற அற்பர்கள் கூட தனி அமைப்பை உருவாக்கி முஸ்லிம் மஹல்லாக்களில் போட்டி பள்ளிவாசல்களை கட்டிக் கொண்டு குழப்பங்களை செய்து வருகின்றனர்.

நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களானால் இதற்கான காரணத்தை எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு கால கட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் பொதுமக்களில் ஒரு பகுதியினரும் தீன் விச்யத்தில் நிதானமில்லாமல் போதிய அனுபவமில்லாமல் அவசரப்பட்டு அணி சேர்ந்ததாகும்.

குழப்பங்களின் சமயத்தில் கொஞ்சம் பொறுமையாக, குழப்பங்களில் இருந்து சற்று விலகி இருந்திருந்தால்   முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த பிளவுகளையும் அதன் பின்விளைவுகளையும் தவிர்த்திருக்க முடியும்.

சின்ன சின்ன விசயங்களை சொல்லி எவ்வளவு பெரிய பிளவை சமுதாயத்தில் உண்டுபண்ணப் பட்டது. விரல் அசைப்பதும் தொப்பி போடுவதும். துஆ ஓதுவதும், சமூக விரோதிகளால் எவ்வளவு பெரிய பிரச்சினைகளாக ஆக்கப் பட்டன. பிறகு அவர்களே எப்படி எல்லாம் இதில் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்?
ஜியாரத்தை அசிங்கமாக் சித்தரித்த டி என் டி ஜே வினர் இப்போது பெண்கள் ஜியாரத் செய்யலாம் இது தான் எங்களுடைய புதிய ஆய்வு என்கின்றனர்( ஏகத்துவம் 2012)
முஸ்லிம்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.
அல்லாஹ் இந்த தீனை பாதுகாப்பாகவே வைத்திருக்கிறான். அவ்வப்போது சில புயல்கள் வீசலாம். அப்போது முஸ்லிம்கள் தமது இடத்தில் உறுதியாக நின்று கொள்வார்கள் எனில் குப்பைகளும் கூளங்களும் அவர்களை கடந்து சென்று விடும்.

No comments:

Post a Comment