வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 28, 2013

தெளிவும் பண்பாடும் மிக்க இளைஞர்கள் தேவை
இன்றைய முஸ்லிம் உலகில் இளைஞர்களின் எண்ணிக்கை பரக்கத்தாக இருக்கிறது. 

எந்த அமைப்பிடமும் குறைந்தது 500 இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு எஸ் எம் எஸ்ஸில் திரள்கிறார்கள். கோஷமிடுகிறார்கள். போராடுகிறார்கள். வலிமையை காட்டுகிறார்கள்.

இளமையின் முக்கியத்துவம் அது எப்படி பயன்பட வேண்டும் இப்போது எப்படி பய்ன்பட்ட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைய ஜும் ஆவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

இளமை என்பது ஒரு அற்புதமான சக்தி. இந்த உலகில் நடை பெற்ற எந்த ஒரு புரட்சியும் சமூக மாற்றமும் மறுமலர்ச்சியும் இளைய சக்தியினாலேயே சாத்தியமாகி இருக்கிறது.


நபி இபுறாகீம் (அலை) அவர்களின் புரட்சிகர வாழ்வை அல்லாஹ் அறிமுகப்படுத்துகிற போது அவரை இளைஞர் என்கிறான்.

قَالُوا سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ(60)

திருக்குர் ஆன் வரலாறுகளை சொல்லுகிற போது அது பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழமான தத்துவம் இருக்கிறது.

இங்கு فَتًى என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பது இளைஞர்களால் தான் இத்தகைய பரிசோதனை முயற்சிகள் சாத்தியமாகும் என்பதை உணர்த்துகிறது என திருக்குர் ஆன் விரிவுரையாளார் முப்தீ ஷபீ சாஹிப் கூறுகிறார்.

இதே போல   ஒரு காலத்தில் ஒரு சமூகமே தவறான கொள்கையில் திழைத்துக் கிடந்த போது தெளிவுடனும் உறுதியுடனும் நடந்து கொண்ட   أصحاب الكهف களைப் பற்றி சொல்லுகிற போதும்
إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى(13) என்று கூறுகிறான். இளைஞர்கள் ஒரு கொள்கைக்காக எத்தனை அர்ப்பணிப்புகளுக்கும் தயாராக இருப்பார்கள் என்பதை இது காட்டுகிறது.

இஸ்லாமின் வெற்றிக்குப் பின்னால் இருந்த பெரும் சஹாபாக்கள் அனைவரும் இளைஞர்களே!
அபூபக்கர் உமர் உஸ்மான் அலி காலித் பின் வல்லித் ஸஃது பின் அபீவக்காஸ் ஜைது பின் தாபித் ஜைது பின் ஹாரிதார் உஸாமா பின் ஜைது தலஹா சுபைர் அப்துர ரஹ்மான பின் அவ்ப் ஹுதைபா முஆத் முஸ்அப் பின் உமைர் (ரலி) போன்ற அனைவரும் இளைஞர்களே! ஆயிஷா நாயகி (ரலி) ஒரு இளம் பெண்ணே!

·         وكان أول من آمن برسول الله بعد زوجه خديجة علي بن أبي طالب وكان صبيا صغيرا نام في فراش رسول الله صلي الله عليه وسلم يوم الهجرة وهو يعلم انه مقتول لا محالة,
·         ثم أبو بكر الصديق الذي أسلم في عمر الثامنة والثلاثين وأنفق ماله كله في سبيل الدعوة الإسلامية ,
·         وعمر بن الخطاب الذي كانت قريش توفده إلي القبائل الأخرى للتباحث معها أسلم في السادسة والعشرين وكان إسلامه ,
·         وهاهو سعد بن أبي وقاص الذي رمي أول سهم في الإسلام أسلم وعمره سبعة عشر عاما وكان رسول الله صلي الله عليه و سلم يقول له: فداك أبي وأمي أرم أيها الغلام الحذور,
·         ثم الزبير بن العوام ابن عمة رسول الله صفية الذي أسلم وعمره ستة عشر عاما الذي قال فيه رسول الله صلي الله عليه و سلم : إن لكل نبي حو اريا وحواريي الزبير,
·         ورفيق الزبير طلحة بن عبيد الله الذي أسلم في السابعة عشرة وكان من أشد المدافعين عن رسول الله في أحد والذي سماه رسول الله بطلحة الفياض أو طلحة الخير,
·         ثم عبد الرحمن بن عوف في الثلاثين
·         , وأبوعبيدة بن الجراح في الثانية والثلاثين ,
·         ومن ينسي أسامة بن زيد الذي خرج رسول اله صلي الله عليه وسلم وهو في مرض الموت بعد أن أكثر المنافقون في الاعتراض علي قيادته للجيش وهو دون العشرين.
பெருமானார் (ஸல்) அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) விசயத்தில் அவதூறு சொல்லப்பட்ட போது பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னுடைய இளைய தோழர்களிடம் ஆலோசனை கலந்தார்கள்.

இளைஞர்கள் துணிச்சலாகவும் தெளிவாகவும் ஒருதலைப் பட்சமில்லாமலும் ஆலோசனை சொல்வார்கள் என்பதே அதற்கு காரணம் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

أن النبي صلى الله عليه وسلم كان دائما ما يستشيرهم في الأمور المهمة وكان ينزل على رأيهم , كما أخذ بمشورة الحباب بن المنذر في غزوة البدر , ونزل على رأي الشباب في الخروج لملاقاة المشركين في غزوة أحد .

يقول ابن شهاب الزهري: (لا تحتقروا أنفسكم لحداثة أسنانكم، فإن عمر بن الخطاب كان إذا نزل به الأمر المعضل دعا الفتيان، واستشارهم يبتغي حدة عقولهم).
இளமையின் சிறப்புக்குரிய் அம்சங்கள்
·         பலமும் ஆற்றலும்
·         வாழ்க்கையின் சிறப்பான காலகட்டம்
·         வாழ்க்கையின் நீண்ட காலம் - 15 வயதிலிருந்து 40 வரை
·         சமுதாயப் பணிகளுக்கு தூணாகும் பருவம்

இந்தப் பொன்னான காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரியாகப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்
1.   நீண்ட இலக்கு + சாலிஹான வெற்றிகரமான மனிதன் + குறீப்பிட்ட துறையில்
(மாருதி ஆல்டோ கார் வாங்க வேண்டும் என்ற அளவிற்கு ஒவ்வொரு விசயத்திலும் குறிப்பான இலக்கு வைப்பவர்களே தங்களது எண்ணங்களை அடைகிறார்கள்)  
2.   துடிப்பான செயல்பாடு
3.   நல்லொழுக்கம்

இந்த மூன்று அம்சங்களும் கொண்ட இளைஞன் வாழ்க்கையில் சாதிப்பது நிச்சயம்.

இன்றைய இளைஞர்கள் கை நிறைய சம்பாத்தியம் என்பதை மட்டுமே இலக்காக கருதுகிறார்கள்.
இந்த எண்ணம் தவறானது. சம்பாதிப்பதற்காக எதையும் செய்யத் தூண்டக்கூடியது.
ஒரு கட்டத்தில் இந்த எண்ணம் வாழ்வின் படுபாதளத்தில் தள்ளி விட வாய்ப்பு உண்டு.

சத்தியம் நிறுவனம் இந்திய மக்களுக்கு முதன் முதலாக இண்டர்னெட் சேவை அளித்த நிறுவனம். அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு 38 வயதில் இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர். அவருடை பிக்ஸட் டெபாசிட் மட்டும் 822 கோடி.

பிரதமரோடு தேனீர் அருந்தும் நிலையில் இருந்தவர் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்பட்டதில்  14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடியாக கணக்கு காட்டியதால் இந்தியாவின் மிகப்பெரிய மோசடியில் சிறைக்குச் சென்றார். நிறுவனம் பறி போனது. அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இப்படி முடிகிறது.
Mr Raju's downfall will be a lesson for people who wants to amass illegal wealth!

கை நிறைய சம்பாதிப்பது  என்பதை விட நிம்மதியான வாழ்க்கை மகிழ்ச்சியான எதிர்காலம் என்ற சிந்தனையை இளைஞர்கள் குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

கோணலான சிந்த்னையும் குறுக்கு வழிகளும் நிம்மதியை குலைத்து மகிழ்ச்சியை சிதைத்து விடும்.

இளமைப் பருவத்திலே தெளிவான இறைபக்தி வாழ்க்கையை நெறிப்படுத்தும். சரியான வெற்றியை ஈருலகிலும் தரும்.
يقول الرسول صلى الله عليه وسلم: ((سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في طاعة الله سبحانه وتعالى

இரண்டாவது முக்கிய அம்சம் நல்லொழுக்கம்
நல்லெழுக்கங்களை இளஞர்கள் காப்பாற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

யூசுப் அலை ஒரு சிறந்த உதாரணம்
மோகந்தாஸ் கரம் சந்த் காந்தி

இன்றைய இளைஞர்களை பாடுபடுத்தும் அம்சங்கள்
காமம்.
திரைப்படங்கள் இணைய தளங்கள் கிளப்புகள் டிஸ்கொதேக்கள் இன்றைய அலுவலகச் சூழல்கள் அனைத்தும் கற்பொழுக்கத்தை அலட்சியம் செய்யத் தூண்டுகின்றன. அது பிந்தைய வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும் என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் இளைய தலைமுறை சென்று கொண்டிருக்கிறது.

ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார்.


செய்தி ஊடகங்கள் - விளம்பரங்கள் –சுதந்திரம் என்று சொல்லி முன்னேற்றம் என்று கதை விட்டு இளைஞர்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றன. எச்சரிக்கை அவசியம்.

தன்னிஷ்டப்படி நடக்க நினைக்கும் எந்த இளைஞனும் பெருமானாரின் ஒரு அறிவுரை போதுமானது.  

وفي هذا الجانب وفي إطار حرص النبي صلى الله عليه وسلم على الشباب وصيانتهم من عواقب هذه الشهوة نقف مع حوار دار بين النبي صلى الله عليه وسلم وبين أحد الشباب الذي جاء يستأذنه في الزنا جاهلاً بحكمه في الإسلام، وإليك الحوار:
قال الشاب: يا رسول الله ائذن لي بالزنا.
فقال النبي: ادنه، فدنا منه قريبا، قال فجلس، قال أتحبه لأمك.
قال: لا والله! جعلني الله فداءك.
قال: ولا الناس يحبونه لأمهاتهم، قال: أفتحبه لابنتك؟
قال: لا والله يا رسول الله! جعلني الله فداءك.
قال: ولا الناس يحبونه لبناتهم، قال أفتحبه لأختك؟
قال لا والله! جعلني الله فداءك.
قال: ولا الناس يحبونه لأخواتهم، قال أفتحبه لعمتك؟
قال: لا والله! جعلني الله فداءك.
قال: ولا الناس يحبونه لعماتهم، قال أفتحبه لخالتك؟
قال: لا والله! جعلني الله فداءك.
قال: ولا الناس يحبونه لخالاتهم.
قال: فوضع يده عليه وقال اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن فرجه فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شي - أخرجه الإمام أحمد في المسند، حديث رقم 21708

திருமணம் வரைக்கும் காத்திருப்பதும் - திருமணம் செய்து கொள்வதும் இளமையை காப்பாற்றும் முக்கிய வழிகளாகும்.
قَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
காமத்தைப் போலவே போதைப் பழக்கம் இளைஞர்களை சீரழித்து வருகிறது.
போதை ஒரு தீமை அல்ல; அது வரிசையாக அனைத்து தீமைகளையும் கொண்டு வரும்.

இளைஞர்களிடம் பக்தி ஒழுக்கம் என்ற இரண்டு அம்சங்கஇருந்தால் அவர்களுடையவும் சமூகத்தினுடையவும் வெற்றியும் பாதுகாப்பும் உறுதிப்படும்.   

இளைஞர்களுக்கோர் எச்சரிக்கை
عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ

கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை கற்பூரப் பருவம்என்பார்.  எதையும் சட்டென்று பற்றிக் கொள்கிற பருவம் அது. நல்லவைகளை பற்றிக் கொள்ளவும் அல்லாதவைகள் பற்றிக் கொள்ளாதவாரும் எச்சரிக்கையோடிருப்பது எதிர்கால வாழ்க்கையை காப்பாறும்.


அமைப்புக்கள் ஜமாத்துக்களின் கடமை
இளைஞர்களின் பலத்தை பல வகையிலும் பயன்படுத்திக் கொள்கிற அமைப்புக்கள் அவர்களுக்கு சமய உலகியல் அறிவுகளை தருகின்றனவா என்பது பயிற்சியளிக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குரியே!

இளைஞர்களை கண்கானித்து திருத்த வேண்டியது சமூகத்தின் கடமை
الشباب عدةٌ وذخرٌ لأمتهم في الملمات، وعلى الأمة أن تحفظ ذخرها وعدتها على خير حال

وإذا رأيت شباب الأمة هابط الخلق والقيم، منشغلا بسفاسف الأمور، يتساقط على الرذائل كما يتساقط الذباب على جيف الفلاة -فاعلم أنها أمة ضعيفة البناء مفككة الأوصال هشة الإرادة، سرعان ما تنهار أمام عدوها، فيستلب خيراتها، ويحقر مقدساتها، ويهين كرامتها، ويشوه تاريخها وثقافتها.

இளைஞர்களுக்கு
·         மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் கற்றுக் கொடுக்கப்படனும்,
·         ஈமானின் ஆன்மா உணர்த்தப்பட வேண்டும்.
·         நல்லொழுக்கங்கள் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லப்படனும்
·         நமக்கும் நமது இளைஞர்களுக்குமிடையே இடைவெளியை குறைக்க வேண்டும்
·         இளைஞர்களை அரவணைக்கனும். கண்டு கொள்ளனும், நன்மை செய்பவர்கள் திறமையாளர்கள் பாராட்டப்படனும


15 வயதை கடந்த அனைவரும் இளைஞர்களே! அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் இளைஞர்களை கவனித்து தகுந்த அறிவுரைகளை சொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

وعناية الرسول صلى الله عليه وسلم بالشباب تتخذ أشكالاً عديدة منها الوصايا النافعة لهم، ومن ذلك وصيته لابن عمه عبد الله بن عباس (رضي الله عنهما) قال: كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوماً فقال: ((يا غلام! إني أعلمك كلمات، احفظ الله يحفظك، احفظ الله تجده تجاهك، إذا سألت فاسأل الله، وإذا استعنت فاستعن بالله، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك، رفعت الأقلام وجفت الصحفر أخرجه الترمذي في سننه، كتاب صفة القيامة، 4/667

أوصى بها الشاب معاذ بن جبل (رضي الله عنه) حيث قال: يا رسول الله! أوصني، قال: ((اتق الله حيثما كنت -أو أينما كنت- قال: زدني قال: أتبع السيئة الحسنة تمحها، قال: زدني، قال: خالق الناس بخلق حسن أخرجه - الإمام أحمد في المسند، حديث رقم 31554


இளைஞர்களை கண்கானிப்பதும் கட்டுப்படுத்துவதும் அறிவுரை கூறுவதும் மட்டுமல்ல
இளைஞர்களை மதிப்பதும், அவர்களது சிந்தனைகளுக்கும் செயலபாடுகளுக்கும் ஊக்கமளிப்பதும்
இஸ்லாமிய முறையாகும்.No comments:

Post a Comment