வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, May 14, 2014

ஆட்சி அல்லாஹ்வுடையதே!



قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 3:26

இன்று இரண்டு செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாம் சிந்திக்க வேண்டியவை
  1.    10 ஆண்டுகள் பதவி வகித்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு பெறுகிறார்.
  2. ·       தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கணிப்புக்கள் பாஜக அணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறுகின்றன. 
பாஜக குறைந்த படசமாக 240 தொகுகளையும் அதிகபட்சமாக 280 தொகுதிகளையும் கைப்பற்றும் என தொலைக்காட்சிகள் கூறுகின்றன. அறிவியல் பூர்வமான கணிப்பு என் அவை அறிவிக்கின்றன. அறிவியலுக்கும் அரசியலுக்கும் என்னடா தொடர்பு என ஒரு பேஸ்புக் கமெண்ட் கேட்கிறது. கணிப்புக்கள் சரியா தவறா என்பது இன்னும் சிறிது நேரத்தில் முடிவாகிவிடும்.

எது எப்படி இருப்பினும் ஆட்சியதிகாரத்தை தீர்மாணிப்பவன் அல்லாஹ் தான் எனபதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம்களின் உள்ளத்தில் திடத்தையும் தெளிவையும் ஏற்படுத்துகிற சித்தாந்தம் இது.

மதினாவில் பெருமானார் (ஸல்) அவர்களும் முஸ்லிம் உம்மத்தும் கூட்டணிப் படையினரின் (அஹ்ஸாப்) நெருக்கடிகளுக்கு ஆளாகியிருத சமயத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்த பிரார்த்தனை இது.

பிரார்த்தனை மட்டுமல்ல முஸ்லிம்கள் பிரதான அரசியல் கோட்பாடும் இதுவாகும்.
قُلْ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ263;

அல்லாஹ் தான் மாலிகுல் முல்க் அவன் விரும்புகிறவர்களுக்குத் தான் அரசு.

இந்த சத்தியக் கோட்பாட்டை அல்லாஹ் பெருமானாரின் வாழ்க்கையில் நிறைவேற்றினான்.

  • மக்காவிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எட்டுவருடத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசரானார்கள். அரசியல் அதிகாரம் என்ற வார்த்தை பிரயோகம் எதுவும் செய்யாமலே மாபெரும் அரசியலமைப்பை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸ்தாபித்தார்கள். அல்லாஹ்வின் விருப்பம் ஒன்றை மட்டுமே அதற்கு காரணமாக சொல்ல முடியும்.
  •  ஓட்டகை மேய்க்க கூட தகுதியற்றவர் என்று தந்தை கத்தாபால் ஏசப்பட்ட உமர் (ரலி) இருபத்திரண்ட்ரை இலட்சம் சதுர மைல்களை கட்டியாண்டார்கள்.
  • வியாபாரியான உஸ்மான் (ரலி) அவர்களும் சாமாணி கூலித் தொழிலாளியான அலி ரலி அவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.

திருக்குர் ஆன் சில பழைய வரலாறுகளை சுட்டிக் காட்டுகிறது.
  • கன்ஆன் தேசத்தில் பிறந்து சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் (அலை) எங்கோ இருக்கிற எகிப்தின் அரியனையை அலங்கரித்தார்கள்.
  •  ஜாலூட்தின் (கோலியத்) படையில் சாதரண கவன் அடிக்கும் வீர்ரான தாவூத் (அலை) டேவிட்இஸ்ரவேலர்களின் அரசரானார்
  • எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்  நியாயமான தேர்தல் மூலம் வெற்றி பெற்ற பிறகும் -  ஆட்சியில் அமர முடியவில்லை
  • அமெரிக்க தாக்குதலுக்கு முன் யார் என்றே உலகிற்கு தெரியாத ஹமீத் கர்சாய் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் அதிபராக 14 ஆண்டுகளாக (22 December 2001) பதவி வகித்து வருகிறார்.
  • ஏன் இந்தியாவின் பிரதமராக கடந்த 10 ஆண்டுகள் பதவி வகித்த மன்மோகன் சிங் அரசியல் அரங்கிற்கு தொடர்பே இல்லாதவராவார். 
மனமோகன் தில்லி பல்கலைகழகத்திலும் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திலும் அதை தொடர்து ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்திலும்  பயின்று பொருளாதாரத்தில் டாக்டரேட் பெற்றவராக இருந்த்த்தால் அவர் இந்திய ரிசர்வு வங்கியின் கவர்னராக இருந்தது எதிர்ப்பார்க்கப் படக்கூடிய ஒரு முன்னேற்றம் தான்.
னால் 1991 ல் நரசிம்மராவ் திடீரென இந்தியப் பிரதமரான போது இந்தியாவின் நிதியமைச்சராக மன்மோகன் வந்து குதித்த்து நிச்சயமாக யாரும் எதிர்பாராத்தே!
 
அது அவரே கூட எதிர்பாராதது. “நீங்கள் தான் நிதியமைச்சர் என்று பிரதமரின் முதன்மை செயலாளர் சொன்ன போது அதை ஒரு ஜோக் என்று நினைத்தார். அடுத்த நாள் அவர் தயாராகுமாறு  கோபத்தோடு சொன்ன போது தான் விசயம் உறுதியாயிற்று. (பிரிட்டிஷ் செய்தியாளர் மார்க டல்லி)
  •  Singh told Mark Tully the British journalist in 2005 "“On the day (Rao) was formulating his cabinet, he sent his Principal Secretary to me saying, `The PM would like you to become the Minister of Finance’. I didn’t take it seriously. He eventually tracked me down the next morning, rather angry, and demanded that I get dressed up and come to Rashtrapati Bhavan for the swearing in. So that’s how I started in politics”
(செய்திகளை தொடர்ந்து கவனிக்கிற எனக்கு மன்மோகன் சிங் ரிசர்வு வங்கி கவர்னராக இருப்பதும் அவரது கையெழுத்து ரூபாய் நோட்டுக்களில் இருப்பதும் தெரியும் என்றாலும். நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்ற அந்தச் சபையில் (21 ஜூன் 1991) இரண்டாவதாக மன்மோகன் அழைக்கப் பட்ட போது என்று எழுந்த ஆச்சரிய அலையை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.)
அதன் பின்னார் தான் அவர் காங்கிரஸ் காரர் ஆனார். பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அவர் தவிர்க்க முடியாதவராக மாறினார். சிறிது காலம் இரயில்வே துறை அமைசராகவும் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்த அவர் 22 மே 2004 ல் இந்தியாவின் சர்வ அதிகாரம் பெற்ற பதவியான பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். மட்டுமல்ல ஒரு முழு ஐந்தாண்டு பதவியை முடித்துக் கொண்ட பிறகு இரண்டாவது முறையும் பிரதமரானார். நேருவுக்குப்பிறகு வேறு எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது.   

இதில் அதைவிடவும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு முறை கூட அவர் மக்களை நேரடியாக தேர்தல் களத்தில் சந்தித்து வெற்றி பெற்றதில்லை.  1999 ல் நடைபெற்ற தேர்தலில் தெற்கு தில்லியில் போட்டியிட்ட அவர் தோற்றுப் போனார்.
நிதியமைச்சராக ஆவதற்கு முன்பு வரை மாருதி 800 காரைத் தவிர (noting that he drives a Maruti 800)வேறு காரை அவர் ஓட்டியதில்லை. பிறகு இந்திய அரசாங்கத்திற்கு என்று வாங்கப்படுகிற உயர்தரமான் பி எம் டபிள்யூ ரக கார்களிலும் குண்டு துளைக்காத கார்களிலும் தனி விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலுமே அவரது பயணங்கள் அமைந்தன.
குஷ்வந்த் சிங் தன்னுடையை  Absolute Khushwan  நூலில் 1999 ல் நடைபெற்ற தேர்தலின் போது வாடகை காருக்காக செலவான ரூபாய் 2 இலட்சத்தை தன்னிடமிருந்து மன்மோகன் கடன் வாங்கியிருந்த்தாகவும். அத் தேர்தலில் தோற்ற உடனே அதை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார்.
  • The Low-Down on Life, Death and Most things In-between where after losing the 1999 Lok Sabha elections, Singh immediately returned the 2 lakh he had borrowed from the writer for hiring taxis. 
1991 க்கு முன் சாதாரண இந்திய குடிமக்களுக்கு அறிமுகமில்லாத -  அரசியல்வாதி அல்லாத அவர் அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் மற்ற நாட்டு அரசியல் தலைவர்களால் மதிக்கப்படுபவராக ஆனார். உலகின் பிரபல பத்ரிகையான அமெரிக்காவின் பிரநியூஸ்வீக் எழுதுகிறது .
  •   In 2010, Newsweek magazine recognised him as a world leader who is respected by other heads of state, describing him as "the leader other leaders love.
அமெரிக்க அதிபர் ஒபாமா இதுவரை அரசுத்தலைவர்களுக்கு அளித்த விருந்துகளில் அதிக செலவு பிடித்த விருந்து இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கு வழங்கிய விருந்து தான் என பத்ரிகைக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கல்வி ஒரு மனிதனை எந்த அளவு உயர்த்தும் என்பதற்கு மன்மோகன ஒரு நவீன உதாரணம். சாமான்யத்தில் எட்டாத இந்த உயரத்திற்கு அவரை கொண்டு சென்றது அவரது பொருளாத கல்வி தான் என்று சொன்னால் அது மிகையல்ல.  
  • பஞ்சாப் பல்கலைகழகத்தில்  BA மற்றும் MA பொருளாதாரத்தில் தங்க மெடல் பெற்ற அவர் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பயில்கிற போது பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். பிறகு ஆக்ஸ்போர் பல்கலையில் D.phil பட்டம் பெற்று டாக்டரானார். அவரது கவுர பட்டங்களை கூற ஒரு பட்டியல் தேவை..
ஆட்சியதிகாரத்தை யார் கையில் கொடுப்பது , எத்தனை நாள் கொடுப்பது என்பதையும் அல்லாஹ்வே தீர்மானிக்கிறான் எனப்தற்கும் மன்மோகன் ஒரு உதாரணமே!.  
இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்கு இந்திய அரசியலில் பலரையும் சுட்டிக்காட்ட முடியும்.  லால்பகதூர் சாஸ்திரி , வி.பி. சிங் , தேவகவுடா என  திடும் என பிரதமரான பலர் உண்டு. இதில் சிறந்த உதாரணம் மன் மோகன் சிங், ஏனெனில் மற்றவர்களுக்கு அரசியல் பின்புலம் உண்டு. மன்மோகனுக்கு அதில் எத்வும் இல்லை.

மன்மோகன் நல்ல பிரதமரா இல்லையா என்ற விவாத்திற்குள் நாம் நுழைய வில்லை. ஆட்சியதிகாரத்தை யாரிடம் கொடுப்பது என்பதை அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான   என்பதற்கு அவர் ஒரு உதாரணம் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த ஆட்சித்தலைவர் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்).
அவர் ஒரு ஜும் தொழுகைக்காக புகழ்வாய்ந்த டமாஸ்கஸ் நகரத்தின் உமய்யா ஜாமிஆ பள்ளிவாசலில் உட்கார்ந்திருந்த போது அடுத்த ஆட்சியாளர் யார் என்பது பற்றி மன்னர் சுலைமான் பின் அப்தில் மலிக்கின்  வசிய்யத் படிக்கப் பட்டது. ஆட்சிக்குரியராக சுலைமானுடைய மகன் வலீத் கருதப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக  சுலைமானின் மச்சான் உமர் பின் அப்துல் அஜீசின் பெயர் அறிவிக்கப் பட்டது.
அதிர்ச்சியில் உமர் பின் அப்துல் அஜீஸ் இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொன்னார்.  
دابتيكفايتي وفسطاطي  أوسع لي
எனது கூடாரமே எனக்குப் போதுமானது. எனது வாகனமே எனக்கு அதிகம் என்றார்.
சுலைமான் பின் அப்துல் மலிக் நோயுற்று இருந்த காரணத்தினால் அவருடைய தீர்மாணத்தை அதிகம் மறுக்க முடியாத உமர் பின் அப்துல் அஜீஸ். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு மக்களிடம்எனது விருப்பமில்லாமலும் ஆலோசனை கலக்காமலும் என்னை அமீர் என்று அறிவித்து விட்டார்கள் எனவே மக்களை நீங்கள் விரும்பினால் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்என்று அறிவித்தார்.
மக்கள் பெரும் சப்தமெழுப்பி நீங்களே அரசராக இருக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினர், இப்படித்தான் இஸ்லாமின் ஐந்தாம் கலீபா உமர் ஆட்சியதிகாரத்தைப் பெற்றார்.
بويع بالخلافة بعد وفاة سليمان بن عبد الملك وهو لها كاره فأمر فنودي في الناس بالصلاة، فاجتمع الناس بالمسجد الأموي بدمشق، فلما اكتملت جموعهم، قام فيهم خطيبًا، فحمد الله ثم أثنى عليه وصلى على نبيه ثم قال: "أيها الناس إني قد ابتليت بهذا الأمر على غير رأي مني فيه ولا طلب له... ولا مشورة من المسلمين، وإني خلعت ما في أعناقكم من بيعتي، فاختاروا لأنفسكم خليفة ترضونه". فصاح الناس صيحة واحدة: قد اخترناك يا أمير المؤمنين ورضينا بك، فَوَّلِ أمرنا باليمن والبركة.

அல்லாஹ் ஆட்சியை கொடுப்பதும், அதை பறித்துக் கொள்வதும்  இமை மூடித்திறப்பதற்குள் நூலிழை அளவு காரணத்தில் நிகழ்ந்து விடுகிறது.

அரசியல் கைதிகள் பிற்காலத்தில் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது சகஜமானது. நெல்சன் மண்டேலாவை போல. அவர்.27 ஆண்டுகள் சிறை இருந்த பின்னர் தென்னாப்பிரிக்காவின் புகழ் பெற்ற அதிபரானார்.
ஆனால் பொருளாதாரக் குற்றவாளியாக பல ஆண்டுகள் 1996  லிருந்து 2004 வரை சிறையிலிருந்த ஆசிப் அலி ஜர்தாரி ( பேநசீர் புட்டோவின் கணவர்) 2008 ல் பாகிஸ்தானின் அதிபரானா போது. ஆட்சியதிகாரம் யாருக்கு எப்படி வழங்கப்படுகிறது என்பதில் கணிப்புக்கள் காலாவதியாகி விடுகின்றன.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இங்கிலாந்துக்கு மகத்தான் வெற்றியை தேடித் தந்தவர் வின்ஸன் சர்ர்சில். ஆனால் அதை தொடர்து நடைபெற்ற தேர்தலில் அவர் தோற்றுப் போனார். உலகத் தலைவர்களை ஆச்சரியப் படவைத்த திருப்பம் அது. லேபர் கட்சியை சார்ந்த அட்லீ (Clement Attlee ) இங்கிலாந்தின் பிரதமரானார்.,  இந்தியா உட்பட காலனியாதிக்கத்தில் சிக்கித் தவித்த நாடுகள் சீக்கிரமாக சுதந்திரம் பெற அது காரணமானது.

இஸ்ரேல் என்றொரு நாடு இவ்வளவு வலிமை பெறும் என்றோ,  யூதர்களுக்கு என்று ஒரு நாடு அமையும் என்றோ உலகத் தலைவர்கள் கூட 75 வருடங்களுக்கு முன்  கறபனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

அது போல கடந்த நூற்றாண்டில் 1922 லிருந்து பூமியின் வரை படத்தை  ஆக்ரமித்திருந்த  USSR என்கிற சோவியத் யூனியன் 1991 ல் சிதறிப்போன போது அது மகா அதிசயமாக இருந்தது.   

இந்த நிகழ்வுகள் எல்லாம் கற்பனைக்கும் யூகங்களுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டவை அல்லாஹ்வின் மகத்தான சக்தியின் வெளிப்பாடுகள்.
ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது என்பதன் பொருள் அல்லாஹ் தான் இந்தியப் பிரதமராக வரவேண்டும் என்பதல்ல. 
ஆட்சியதிகாரம் முழுக்க அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவன் நாடுகிறவர்களே அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்பதாகும்
ஒரு சமூகத்திற்கு நன்மையை நாடுகிற போது அல்லாஹ் சிறந்த ஆட்சியாளர்களை கொடுக்கிறான்,
அதே போல ஒரு சமூகத்திற்கு வேதனையை கொடுக்க நினைத்தால் அவர்கள் மீது தீய ஆட்சியாளர்களை அல்லாஹ் ஏவீவிடுகிறான் என திருக்குர் ஆனிய அறிஞர்கள்  
قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ(65(6:

மேலெயிருந்து வருகிற தண்டன் என்பது (புயல் காற்று, கல்மழை போல) தீய ஆட்சியையும் குறிக்கும் என முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் குறிப்பிடுகிறார். அதே போல கீழே இருக்கிற ஏற்படுகிற தண்டனை என்பது பூகம்பம் நிலச்சரிவு போல விசுவாசமற்ற வேலைக்காரர்களையும் குறிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

தப்ஸீர் இபுனு கஸீரில் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாக இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
إن ابن عباس كان يقول في هذه الآية "قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم" فأئمة السوء "أو من تحت أرجلكم" فخدم السوء -

அதாவது ஒரு மக்களுக்கு தண்டனையாக அல்லாஹ் தீய ஆட்சியாளர்களை தருகிறான். தலைவர்களுக்கு தண்டனையாக தீய தொணர்களை  தருகிறான் என்பத் இதன் கருத்து,
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் மழையை போல அது அல்லாஹ் நமக்கு கொடுத்த கொடை என்றும் ஒருவேளை ஆட்சியாளர்கள் தீயவர்களாக இருந்தால் அது அல்லாஹ் நமக்கு வைத்த சோதனை என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.'
அதே போல எந்த ஆட்சியாளரையும் அவர் செய்கிற பணிகளை வைத்துத்தான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர எடுத்த எடுப்பிலேயே அல்ல
இஸ்லாமிய அறிஞர்கள் தருகிற அற்புதமான கருத்து ஒன்றை இங்கு நினைவில் நிறுத்திக் கொள்ள தவறக் கூடாது. 
பூமியில் அரசாட்சி செய்த பலரும் தமது ஆட்சிப் பிரதேசத்திற்கு நன்மை செய்கிறவரை அல்லாஹ் அவர்களை அனுமதிக்கிறான் என்றும் அவர்கள் அக்கிரம்ம் செய்யத் தொடங்குகிற போது அல்லாஹ் அவர்களிடமிருத் அதிகாரத்தைப் பறித்து விடுகிறான் ,

  • எகிப்தை ஆட்சி செய்த யூதர்கள் யூசுப் அலை காலத்தில் கன் ஆனிலிருந்து வந்து எகிப்தில் குடியேறிய வெளியூர்க்கார்ர்கள், சிறுபான்மையினர். அவர்கள் யூசுப் நபியை பின் தொடர்ந்து அவரைப் போல நீதியாளர்களாக ஆட்சி செய்யும் வரை எகிப்தின் அதிகாரம் அவர்களிடம் இருந்த்து. பெரும்பான்மை மக்களை அவர்களுக்கு கட்டுப்படுமாறு அல்லாஹ் செய்தான். பின்னால் வந்த யூதர்கள் அதிகாரம் தங்களது குடும்பச் சொத்து என்பது போல கருதி அக்கிரமம் செய்த போது அல்லாஹ் அவர்களது அதிகாரத்தை பறித்து கிப்திகளான பிர் அவ்ன்களிடம் கொடுத்தான். யூதர்கள் கொத்தடிமைகளாக்கப் பட்டார்கள்.
  •  இந்தியாவை முன்னர் ஆட்சிய செய்த உள்நாட்டு அரசுகள் காலத்திற்கேற்ற ஆட்சியை தரமுடியாது என்ற நிலையில் வெளியிலிருந்து வந்த படை எடுப்பாளர்களிடம் அல்லாஹ் ஆட்சியை வழங்கினான். முகலாயர்களால் இந்தியாவிற்கு நன்மை ஏற்பட்ட வரை அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்த இறைவன், அவர்களால் தொடர்ந்து நாட்டை பராமரிக்க முடியாது என்ற நிலையில் அதிகாரத்தை அவர்களிடமிருது பறித்து ஆங்கிலேயர்களிடம் அல்லாஹ்வே அதிகாரத்தை வழங்கினான், அவர்கல் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையாக இருக்கிறவரை அனுமதிக்கப் பட்டார்கள். அவர்களது அக்கிரமம் எல்லையை கடந்த போது அந்த மகா சர்வாதிகாரச் சக்தியிடமிருந்த் அல்லாஹ் ஆட்சியை பறிந்த்துக் கொண்டான்.
அவர்கள் நீதியை நிலைநாட்டுகிறவர்களாக மக்களின் நலன்ன பேணுகிறவர்களாக இருக்கும் வரை அனுமதிக்க்ப்படுவார்கள் . இல்லை எனில் தூக்கி எறியப்படுவார்கள்.
  
நீதியான அரசுகள் அமையும் என்றால் மக்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும்
அநீதியான அரசுகள் அமையும் என்றால் மக்கள் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். 
அநீதியான அரசு என்பது பாய்ந்து தாக்க வரும் புலியை விட கொடியது.

சீனத் தத்துவ அறிஞர் கான்பியூசஸ் தாய் மலையருகே ஒரு பெண்மணியை சந்தித்தார்.
அவள் ஒரு சமாதியின் அருகே கதறிக் கொண்டிருந்தாள்.
கான்பியூஸஸ்   பெருங் கவலைக்கு ஆளானவள் போல் அழுகிறாயே ஏன்
பெண்           :“இதோ இந்த என் குழுந்தையின் கண்ணெதிரே ஒரு புலி என் கணவரையும் மாமனாரையும் சாப்பிட்டு விட்டது . அவர்கள் இறந்து விட்டார்கள். இந்தக் குழந்தையோ இருந்தும் இறந்தவன் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
கான்பியூஸ்ஸ்   :இத்தகைய அச்சம் சூழ்ந்த இடத்தில் இன்னும் ஏன் வாழ்ந்து   கொண்டிருக்கிறாய்?
பெண்           : இங்கே இருக்கிற அரசு அநியாயம் செய்கிற அரசல்ல.  
கான்பியூஸ்ஸ் அந்த இடத்தை கடந்து சென்றார் அவரது வாய் முனுமுனுத்தது. அநியாயமான் அரசு பாயும் புலியை விடக் கொடியது.

  • ஒரு வேளை தற்போதைய தேர்தலில் பாஜக அரசு அமையும் என்றால் அதை  முஸ்லிம்களுக்கு எதிரானதாக நாம் பார்க்கத் தேவையிலை, அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நம்முடைய அடிப்படை அதிகாரம் எதையும் அவர்களால் பறித்து விட முடியாது.
  • அதிகப் பட்சமாக முஸ்லிம்கள் மீது குரோத்த்தை உண்டு பண்னவும் முஸ்லிம்களை அச்சப்படுத்தி வைக்கவும் அவர்கள் முயற்சி செய்யக் கூடும்.
  •  
  • அல்லாஹ்வை சரியாக பயந்து நடந்து கொள்கிற சமூகம் அவனை தவிர வேறு எந்தச் சக்திக்கும் பயப்படத் தேவையில்லை. அஞ்சாது.
  • அதே நேரத்தில் அரசியல் ரீதியாக இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மட்டுமே நம்முடைய கடமையாகும்.
  • அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
  • நிர்வாகத்தையும் நீதித்துறையையும் வரலாற்றையும் காவி மயப்படுத்துவது தான் அவர்களுடை முக்கிய இலக்கு,  அதை நீதி வழிப்படுத்துவதே நம்முடைய இலக்காக அமைய வேண்டும்.
  • பாபர் மஸ்ஜிதின் வழக்கில் தீர்ப்பளித்த ஒரு நீதிபதியே அவர்களது இலக்கை சென்றடைந்து விட்டார் என்றாலும் நீதி நடைமுறைகள் தடம் புரளாமல் செல்ல நாம் அதிக சிரத்தை எடுக்க வேண்டும்.
  • குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் பி யின் குடும்பத்த்தின் எல்லா நிலையிலும் கைவிடப்பட்டுள்ள சூழ்நிலையில் தொடர்ந்து நீதிக்கு போராடி வருவ்தைப் போல நீதிக்கான தொடர் போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும். அதற்கு நாம் மனம் தளராமல் தைரியத்தோடும் வீரத்தோடும் போராட வெண்டும். மறந்து விடக்கூடாது நம்முடைய போராட்டம் நீதியை நிலை நாட்டுவதற்கு.  
  • அவர்களுடைய இரகசிய திட்டங்கள் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு எதிரானவை இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊரு விளைவிப்பைவை என்பதை பொது சமூகத்துக்கு புரிய வைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.  
  • அவர்களுடைய முயற்சி நமக்கு எதிராக குரோத உணர்வை ஏற்படுத்துவது, நாம் அதற்கு இடம் கொடுக்காமல் – உணர்ச்சி வசப்படாமல் சகிப்புத்தன்மையோடு அதே நேரத்தில் காரியத்தை சாதிக்கிற சித்தியோடு செயலாற்ற வேண்டும்.
  • நெருக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிற சமூகம் வீறு கொண்டு எழும் என்பது தான் வரலாறு.   உரிமைகளையும் மரியாதையை தற்காத்துக் கொள்வதற்கு நியாயமாக நாம் செய்கிற எந்த முயற்சிக்கும் அல்லாஹ்வின் உதவியும் மக்களின் ஆதரவும் கிடைக்கும்.
  • நாட்டு நலனில் அக்கறை கொண்ட மதச்சார்பற்ற சக்திகளின் கரத்தை வலிமைப்படுத்தவும அவர்களுடனான நெருக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரளவிலும், மஹல்லாக்கள் அளவிலும்.
  • நமக்கு அதிகம் சிரமத்தை தருகிற வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது.
நிறைவாக ஒரு ஹதீஸை ஞாபகப்படுத்துகிறேன், 
عن علي أن رسول الله صلى الله عليه وأله وسلم قال سألت ربي ثلاث خصال فأعطاني اثنتين ومنعني واحدة فقلت يا رب لا تهلك أمتي جوعا فقال هذه لك قلت يا رب لا تسلط عليهم عدوا من غيرهم يعني أهل الشرك فيجتاحهم قال ذلك لك قلت يا رب لا تجعل بأسهم بينهم فمنعني هذه. - الطبراني-  
என சமூகத்தை பசியால் அழித்து விடாதே என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. என் சமூகத்தை வெளியிலிருந்து வரும் பகையால் அழித்து விடாதே – முஷ்ரிக் களிடம் அடிமைப்படும் நிலையை ஏற்படுத்தி விடாதே என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது.  உட்கட்சி குழப்பத்தால் ஏற்படும் அழிவை ஏற்படுத்தாதே என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
அல்லாஹ்விடம் கையேந்து வோம்.
ربنا لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا

5 comments:

  1. Arumaiyana niraivana padhivu.alhamdhulillah.laa havla vala kuvvattha illa pillarh.

    ReplyDelete
  2. Anonymous8:20 AM

    Arumai arumai alhamdu lillah

    ReplyDelete
  3. thangalin arivuraihalai samudhaayan vilangi nadaka alllah thavfeeq seivanaaha!
    aameen

    ReplyDelete
  4. Alhamdhu lillah..
    Niraivanapathivu...

    ReplyDelete
  5. அல்ஹம்து லில்லாஹ். மிக மிக அருமை ஹழ்ரத். உண்மையில் நீங்கள் மகா பெரும் அறிஞர். இன்ஷா அல்லாஹ் தங்களின் உபதேசங்களை முஸ்லிம்கள் எல்லோருமே பின்பற்ற வேண்டும்.தாங்கள் இது போன்ற நிறைய சேவைகளை செய்ய ரப்புல் ஆலமீன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வங்களையும், பூரண சரிர சுகத்தையும் தந்தருள் புரிவானாக

    ReplyDelete