இன்றைய நம்முடைய வாழ்வியலில் மிகவும் தேவைப்படுகிற இயல்பு சகிப்புத்தன்மை
சகிப்புத்தன்மை
என்றால் என்ன?
நமக்குள்ளே
பதிலுக்கு பதில் என்ற உணர்வு
இயல்பாக இருக்கும்.
அவன்
பேசிவிட்டால் நாமும் பேசவேண்டும் ,அவன்
அடித்து விட்டால் நாமும் அடிக்க வேண்டும்.
அவன் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டால் நாமும்
அப்படியே நடந்து கொள்ள வேண்டும்
என்று நினைப்பது தான் பழி வாங்கும்
தன்மை.
இந்த
பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால்
அது சகிப்புத்தன்மை.
மனைவி,
முதலாளி, மாமியாரோ பிள்ளைகளோ நண்பர்களோ பார்ட்னர்களோ அலட்சியப்படுத்தி விடுவார்கள் எனில் பதிலுக்கு ஒரு
நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று
நினைக்காமல் இருந்தால் அது சகிப்புத்தனமை.
அதே
போல மற்றவர்கள் எல்லா விதத்திலும் நமது
விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள
வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுக்குரிய
முறையில் அவர்கள் இருப்பார்கள் என்று
ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.
பழி
வாங்கும் நடவடிக்கையை கைவிடுதல் பிறருடைய உணர்வை ஏற்றுக் கொள்ளுதல்
என சுருக்கமாக சகிப்புத்தன்மைக்கு விளக்கம் கொடுக்கலாம்.
நமது
இன்றைய வாழ்வியலில் சகிப்ப்புத் தன்மை வெகுவாக குறைந்து
வருகிறது.
மத சகிப்புத்தனமை மொழி இன சகிப்புத் தன்மை வெகுவாக குறைந்து வருகிறது.
சகிப்புத்தன் மைக்கு எதிராக கோஷம் போடப்படுகிறது.
இதனால் வெறுப்பும் அமைதியின்மையும் பெரிய அளவில் ஏற்படும்.
சகிப்புத்தன்மையை தவறினால் பல பிரச்சனைகள் உருவாகும். சமூக வாழ்வு பலத்த சிக்கல்களுக்கு உள்ளாகும்.
நம்முடனிருக்கிறவர்களை
சகித்துக் கொள்ளாமல் நாம் நடந்து கொள்கிறோம்.
இதனால்
டென்சன் அதிகரிக்கிறது.
நமது
வாழ்வில் டென்சனை குறைக்க வேண்டும்
என்று நினைத்தீர்கள் என்றால் பிறரை சகித்துக்
கொள்ள முதலில் பழக வேண்டும்.
ஒரு
பணியாளர் நீங்கள் விரும்பிய படி
செயல் படாத போது
உங்களது
பிள்ளைகளோ மற்றவர்களோ உங்களுக்கு கட்டுப்படாத போது ,
சகிப்புத்தன்மையை
தவறவிடுவீர்கள் எனில் தாறுமாறான விளைவுகள்
ஏற்படும்.
இந்த
உலகில் மகத்தான சாதனைகளை படைத்த
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்
கற்றுக்கொடுத்த முக்கிய இய்ல்பு
அழகானதை கொண்டு அல்லதை தடுங்கள்.
ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
இந்த
வழி முறையை தன் வாழ்வின்
ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானார் கடைபிடித்தார்கள்.
காழி
இயாழ் தன்னுடைய ஷிபா என்ற நூலில்
கூறுகிறார்.
وهو صل الله عليه وسلم لا يزيد من كثرة
الأذي إلا صبرا
சகிப்புத்தன்மையின்
பெரு விளைவு இது .
பெருமானாரின்
வாழ்வில் மனைவியரிடம் பணியாளர்களிடம் நண்பர்களிடம் எதிரிகளிடம் என அனைவரிடத்திலும் சகிப்புத்தன்மையை
வெளிப்படுத்தினார்கள்/
ஆயிஷா
ரலி கூறுகிறார்;
நான்
எப்போதாவது கோபப்பட்டு பெருமானாரிடம் பேசினால் பெருமானார் “ ஆயிஷ்! சிவந்த சிறுமியே!
என அழைப்பார்கள்.
ஒரு
வார்த்தை கோபத்தை தணித்துவிடும்.
தாயிப்
நகர மக்கள் கொடுந்துயரளித்த போதும்
பெருமானார் அவர்களை சபிக்க வில்லை.
உஹது
யுத்தம் கடும் இன்னலுக்கு தாமும்
தம் சகோதரர்களும் ஆளாக்கப்பட்ட நிலையில் .. பெருமானாருக்கு ஏற்பட்ட காயங்களை கண்டு
பொறுக்க முடியாத தோழர்கள் சிலர்
காபிர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்ய
கூறிய போது நபி (ஸல்)
சொன்னார்கள்.
وعن أبي هريرة ، قال : قيل يا
رسول الله ادع على المشركين قال : إني لم
أبعث لعانا ، وإنما بعثت رحمة .
رواه مسلم .
பிறகு
சொன்னார்கள்
أنه (صلى الله عليه وآله وسلم) قاله يوم أحد عندما شج في وجهه وقيل
له: ألا تدعو عليهم؟ قال:
(اللهمَّ
أهد قومي فإنهم لا يعلمون)
மக்காவாசிகளுக்கு
எமனிலிருந்து கோதுமை விநியோகம் செய்து
வந்த சுமாமா பின் அஸால்
ثمامة بن اثال
இஸ்லாமை தழுவினார். இனி மக்காவின் மக்களுக்கு கோதுமை சப்ளை செய்ய மாட்டேன் என சபதமேற்றார். மக்காவாசிகள் பெருமானாரின் சிபாரிசுக்கு வந்தார்கள். பெருமானார் பகையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வில்லை, வேறு நிபந்தனை எதையும் போட வில்லை.
இஸ்லாமை தழுவினார். இனி மக்காவின் மக்களுக்கு கோதுமை சப்ளை செய்ய மாட்டேன் என சபதமேற்றார். மக்காவாசிகள் பெருமானாரின் சிபாரிசுக்கு வந்தார்கள். பெருமானார் பகையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வில்லை, வேறு நிபந்தனை எதையும் போட வில்லை.
பெருமானார் (ஸல்)
அவர்கள் சுமாமாவுக்கு கடிதம் எழுதினார்கள்.
வழமை
போல மக்காவாசிகளுக்கு கோதுமை அனுப்பவும். அவர்களை
பசியில் தள்ளிவிட வேண்டாம். என்று எழதினார்கள்,
பெருமானாரின்
மகள் ஜைனப் அம்மையார் மக்காவிலிருந்து
தப்பி மதீனாவிற்கு செல்லும் போது அவர்களை நோக்கி
ஈட்டி எறிவது போல பாசாங்கு
செய்தார் ஹிபார் பின் அஸ்வர்
. கர்ப்பிணியாக இருந்த ஜைனப் அம்மையார்
பயந்து போய் சரிந்தார்கள். ஒட்டகையின்
மேலிருந்து பாறையின் மீது விழுந்தார்கள். கர்ப்பம்
கலைந்து போனது, இதே சிரமத்தோடு
15 நாட்கள் பயணம் செய்து சைனப்
அம்மையார் மதீனா வந்து சேர்ந்தார்கள்,
அவரிருந்த கோலத்தைப் பார்த்து பெருமானார் (ஸல் கண்ணீர் விட்டழுதார்கள்.
எனது இந்த மகள் பட்ட
சிரமத்தைப் போல தீனுக்காக யாரும்
சிரமப்பட்டதில்லை என்றார்கள்.
அப்போது
ஏற்பட்ட அந்த பலகீனமே ஜைனப்
அம்மையாரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.
இதே
ஹிபார் மக்கா வெற்றிக்கு பிறகு
பல ஊர்களையும் சுற்றி விட்டு பெருமானாரிடம்
வந்த போது பெருமானார் அவரை
ஏற்றுக் கொண்டார்கள்.
இன்று
சின்ன சின்ன குற்றங்களுக்காக அடுத்தவர்களை
ஏற்றுக் கொள்ள முடியாது என்று
நினைக்கிறோமே நாம். பெருமானார் ஹிபாரை
ஏற்றுக் கொண்டதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
எதிரியின்
மகனை ஏற்று கொண்ட பெருமானார்.
அபூ
ஜஹ்லுடைய மகன் இகிர்மா வுக்கு
மன்னிப்பு கிடையாது என மக்கா வெற்றியின்
போது பெருமானார் அறிவித்தார்கள். அவரது மனை உம்முஹகீம்
வந்து கணவருக்காக பரிந்து பேசினார். பெருமானார்
இகிரிமாவை ஏற்றுக் கொண்டார்கள்.
சட்டமாக
சொன்ன உத்தரவுக்குப் பின்னரும் அதையே காரணமாகச் சொல்லி
பெருமானார் மறுத்திருக்கலாம். ஆனால் பெருமானார் சகித்துக்
கொண்டார்கள்.
அதிகார
பலம் வந்த சமயத்திலும் பெருமானாரின்
சகிப்புத்தன்மை தளரவில்லை.
மதீனாவிற்கு
ஹிஜ்ரத் புறப்படுவதற்கு முன் கஃபாவில் தொழுது
விட்டு புறப்பட நினைத்த பெருமானார்
சாவிக் காப்பாளர் உஸ்மான் பின் தல்ஹாவிடம்
கதவை திறந்து விடக் கூறினார்கள்.
அவர் மறுத்தார். பெருமானார் சொன்னார்கள். உஸ்மான் ஒரு நாள்
வரும் அப்போது நீர் இருக்கிற
இடத்தில் நான் இருப்பேன். நான்
இருக்கிற இடத்தில் நீர் இருப்பீர் என்றார்கள்.
மக்கா வெற்றியின் போது அப்படி ஒரு
நிலை வந்தது, அப்போதும் பெருமானார்
சகிப்பித்தன்மையை இழக்க வில்லை. சாவியை
வாங்கி கஃபாவுக்குள் சென்று தொழுத பெருமானார்
அங்குள்ள சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு
சாவியை உஸ்மானிடமே கொடுத்தார்கள்.
இது
போல எண்ணற்ற உதாரணங்களை பெருமானாரின்
வரலாற்றிலிருந்து எடுத்துக்
கூறலாம்.
வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சகிப்புத்
தன்மை மேலோங்கியிருந்தது,
இதன்
பலனை பெருமானாருடைய வாழ்க்கையில் பார்க்கலாம்.
பெருமானாரின்
வாழ்வில் எதிர்ப்பு அதிகம் இருந்த போதும்
சகிப்புத்தன்மையால் அமைதி தவழ்ந்தது.
இழிவு
படுத்தும் முயற்சிகள் தொடர்ந்த போதும் கண்ணியம் அதிகரிக்கவே
செய்தது.
சதித்
திட்டங்களை தீட்டியவர்கள் சகோதரர்கள் ஆனார்கள்.
நாம்
வாழ்கிற இன்றைய கால கட்டத்தில்
கருத்து வேறுபடுகள் பகையாக மாறிவிடாத அளவுக்கு
சகிப்புத்தன்மையை கடைபிடிப்பது அவசியம்.
சகிப்புத்
தன்மை கொண்டவர் வாழ்க்கையில் தானாக உயர்வார். பெருமானார்
உயர்ந்ததைப் போல
ஒரு ஆங்கிலப்
பழ மொழி உண்டு
To run a big show one
should have a big hart
சகிப்புத்தன்மை
கொண்டவர்கள் வாழ்வின் சிரமங்களை இலேசாக எதிர்கொள்வார்கள்
அப்துல்லாஹ்
பின் சுபை ரலி அவர்களின் சகோதரி ரம்லாவுக்கு அவருடைய கணவருக்கும் ஒரு தகறாறு, திடீரென்
கணவர் மோசமாக ஏச ஆரம்பித்து விட்டார். ரமலா அம்மையார் பொறுமையாகவும் கம்பீரமாகவும்
அதை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கணவர் களைத்து கோபம் சற்று தணிந்த சந்தர்ப்பம் பார்த்து கணவரைப் பார்த்து புன்னகைத்தார்கள்.
கணவரும் புன்னகைத்தார். ஒரு புன்னகையில் என் கோபத்தை மாற்றிவிட்டாயே என்றார் கணவர்
\. ரம்லா அம்மையார் சொன்னார். எனது ஒரு புன்னகை உங்களது கோபத்தை போக்கி விடும் என்பது
எனக்குத் தெரியும், உங்களது கோபத்தை நான் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்
உங்களது பேச்சுக்களை நான் தடுக்க வில்லை என்றார்.
இன்று நம்முடைய
வாவில் ஒரே புலம்பல்கள் குடும்பத்தை பற்றி அலுவலகம் சமூகம் ஆகியவற்றைப் பற்றி புலம்பல்கள்
அதிகரித்திருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் சகிப்புத் தன்மை இல்லாதிருப்பதாகும்.
வெற்றிக்கு
காரணமாக இருப்பதிலும். தோல்விகளை – டென்சனை – புலம்பலகளை குறைபதிலும் சகிப்புத் தன்மைக்கு
முக்கியப் பங்கு உண்டு.
No comments:
Post a Comment