வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 30, 2019

விடை பெறுகிறதா ரமலான்

விடை பெறுகிறதா ரமலான்
ரமலானுக்கு விடை கொடுக்க – பெருநாளை வரவேற்க மிகுந்த மகிழ்ச்சியோடு தயாராகி வருகிறோம்.
நம்மில் பலருடைய நாட்கள் ஷாப்பிங்கில் கழிகின்றன. தவறில்லை.
பெருநாளுக்காக தயாராவதும் ஒரு ஈமானிய குணமே!
ஆனால் ரமலானுடைய புண்ணிய மான நிறைவுதருணங்கள் வீணாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம். விரைவில் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு நன்மைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவோம்.
نَحن نُودِّع شَهْرَ القرآن والتَّقْوى والصَّبْر والرحمة والمغفرة والعتق من النار...
ونقول له: السلام عليك يا شهرنا الكريم، السلام عليك يا شهر رمضان، السلام عليك يا شهر الصيام، والقيام، وتلاوة القرآن... السلام عليك يا شهرَ التَّجاوز والغُفْران، السلام عليك يا شهر البركة والإحسان، السلام عليك يا شهرَ الأمان، كنت للعاصين حبسًا، وللمتقين أنسًا، السلام عليك يا شهر الصيام والتَّهَجُّد، السلام عليك يا شهر التراويح، السلام عليك يا شهر الأنوار والمصابيح،

ஒரு வேளை இன்னும் சில நாட்களில் நமது வாழ்கை முடிய இருக்கிறது என்றால் அதற்கு  நாம் எப்படி விடையளிப்போமோஒ அதே போல ரமலானுக்கு விடையளிக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறுவார்கள். அந்த கடைசி நிமிடங்கள் நமக்கு எவ்வளவு உன்னதமானவையாக இருக்கும் ?
புத்திசாலிகள் யார் என்பதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கம்.  
قال رجل للنبي - صلَّى الله عليه وسلَّم - أي المؤمنين أفضل؟ قال: ((أحسنهم خلقًا))، قال: فأيُّ المؤمنين أكيس؟ قال: ((أكثرهم للموت ذكرًا، وأحسنهم لما بعده استعدادًا، أولئك الأكياس...))،

பொதுவாக இந்த சிந்தனை வரும் போது அதனால் மூன்று பலன்கள் ஏற்படும்

قال حامد اللفاف: "مَن أكثر من ذكر الموت، أُكْرِمَ بثلاثةِ أشياء: تعجيل التوبة، وقناعة القوت، ونَشاط العبادة، ومَن نسي الموت، عُوقِب بثلاثة أشياء: تسويف التوبة، وتَرك الرِّضا بالكفاف، والتكاسُل في العبادة"

சுப்யானுஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது அவரை ச்ந்திக்க ஒருவர் வந்தார். அவர் ஒரு செய்தி சொன்னார்.  அதை குறித்துக் கொள்ள  தலையணைக்கு கீழே இருந்த பேனாவை எடுத்துக் கேட்டார்.  இப்போதைக்கு இது தேவையா என்று உடனிருந்தவர்கள் கேட்டார்கள். ஒரு நன்மையை செய்து விட்டு செல்கிறேனே என்றார். உடனிருந்தவர்கள் பேனாவை எடுத்துக் கொடுத்தார்கள். மார்க்கம் சம்பந்தப் பட்ட அந்த செய்தியை குறித்துக் கொண்டார். உடனிருந்தவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் விடை பெற்று வீட்டு வாசலை தாண்டக் கூட இல்லை. அதற்குள் இன்னாலில்லாஹி சம்பந்தம் கேட்ட்து.

கடைசி நேரத்திலும் கூட நன்மைகளை தேடிக் கொள்ள நமது முன்னோர்கள் காட்டிய ஆர்வம் எத்தகையது ?

நிறைய தவ்பா செய்து – முடிந்த வரை நன்மைகள் செய்து ரமலானை வழியனுப்புவோம்.

ரமலானில் நாம் செய்த நன்மைகளில் சிலவற்றையாவது தொடர்ச்சியாக நடை முறைப் படுத்த முயல்வோம்.

فيا مَن صام لسانُه في رمضان عن الغِيبة والنَّميمة والكَذِب، واصلْ مَسيرتَكَ، وجدَّ في الطلب، ويا من صامت عينُه في رمضان عن النظر المحرم، غضَّ طرفَك ما بقيت، يورثِ الله قلبَك حلاوةَ الإيمان ما حييت، ويا من صامت أذنه في رمضان عن سماع ما يحرم من القول، وما يُستقذر من سماع غيبة، أو نميمة، أو غناء، أو لهو، اتَّقِ اللهَ ولا تعد، اتَّقِ الله، ولا تعُد،

قيل لِبِشْرِ الحَافِي رحمه الله : إنَّ قَوماً يَتعبَّدون ويجتَهِدُون في رمضان ؟ فقال : بِئْسَ القومُ قومٌ لا يَعرفُونَ للهِ حَقَّاً إلَّا في شَهْرِ رَمَضَان ، إنَّ الصَّالحَ الذي يَتَعَبَّدُ ويَجْتَهِدُ السَّنَة كلَّها .

وعن علقمة قال: قلت لعائشة - رضي الله عنها -: "هل كان رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - يَختص شيئًا من الأيام؟ قالت: لا، بل كان عمله ديمة"؛ البخاري (1987) ومسلم.

நன்மையான காரியங்கள்  முடிவதில்லை. நன்மை ஏற்றுக் கொள்ளப் பட்ட்தின் அடையாளம் நன்மையான காரியங்கள் தொர்வதாகும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:رُبَّ صَائِمٍ حَظُّهُ مِنْ صِيَامِهِ الْجُوعُ وَالْعَطَشُ ، وَرُبَّ قَائِمٍ حَظُّهُ مِنْ قِيَامِهِ السَّهَرُ. أخرجه أحمد 
ரமலான் என்றதும் நிறைய தர்ம்ம் செய்தோம் . நன்மைகள் செய்தோம். நமது நடைமுறை ரமலான் மட்டுமே நன்மைகள் செய்வதற்குரியது என்பதாக இருக்க கூடாது.
وسُئِلَ الشِّبْلِيُّ رحمه الله : أيُّهما أفضلُ : رَجبٌ أو شَعْبَان ؟ فقال : كُنْ ربَّانِيَّاً ولا تَكُنْ شَعَبَانِيَّاً !.

ரமலானில் சைத்தானின் பல  வழிகளை விட்டு விலகி இருந்தோம்.
பேஸ்புக் , யூ டியூப் , மற்ற கேளிக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு வாழ்ந்தோம்.
இதே போல தொடர்ந்து இருக்க முடியுமா ? அது சாத்தியமாகுமா என்று சிந்திக்க வேண்டாம்.
சாத்தியமாகும்.
அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். துஆ செய்யுங்கள்.

சைத்தானை எதிர்க்க சிறந்த வழி அல்லாஹ்விடம் உதவி தேடுவதேயாகும்.

ஒரு ஞானி ஒரு இளைஞனிடம் சைத்தான் உன்னிடம் வேலையை காட்டினால் என்ன செய்வாய் என்று கேட்டார். போராடி திருப்பி அனுப்பி விடுவேன் என்றான் இளைஞன் , திரும்பி வந்தால் என்றார் ஞானி. அப்போதும் திருப்பி அனுப்பிவிடுவேன் என்றான் இளைஞன். ஞானி சொன்னார் இது தொடர்ர்ந்து கொண்டே இருக்கும். நீ ஒரு ஆட்டு மந்தையை கடந்து செல்ல நினைக்கிற போது அதை பாதுகாக்கும் நாய் உன்னை தடுத்தால் என்ன செய்வாய் என்று கேட்டார் ஞானி. அதை சமாளிக்க உத்திகளை கையாள்வேன் என்றான் இளைஞன் , ஞானி சொன்னார். இது தாமதமாகு,. ஆட்டு மந்தைகாரனிடம் உதவி கேட்டால் இலகுவாக கடந்து விடலாம் என்றார்.

، ولكن استعن بصاحب الغنم يكفه عنك - ابن الجوزي : تلبيس إبليس 35.

சகோதர்ர்களே!
 சமூகத்தில் வெட்க கேடான காரியங்கள் பரவி வருகின்றன.

நம் கையில் வைத்திருக்கிற செல்போன் இப்போது எல்லா தீமைகளுக்கும் மையமாகி வருகிறது.

அன்னிய பெண்களுடன் நியாயமற்ற பேச்சுக்கள்
ஒழுங்கீனமான டிக் டாக் காட்சிகள்
முறையற்ற சாட்டுகள்
ஆபாசமான காட்சிகள் என வாழ்கை பிறர் அறிந்தாம் நாம் வெட்கப்படும் படியான காரியங்களே நம்மை சூழ்ந்து நிற்கின்றன

ரமலானின் பரக்கத்தால் அவற்றிலிருந்து விலகி நிற்கிற அருமையான வாய்ப்பு கிடைத்த்து.

ரமலானுக்குப் பிறகும் அத தொடரட்டும் .

அது வே ரமலானுக்கு நாம் விடையளிக்கும் முறையாகும்.

நமது குடும்பத்திலிருப்பவர்களையும் எச்சரிக்கை செய்து மீட்போம்.

அடுத்த்தாக நம்மிடம் பரவிவருகிற சீர்திருத்த சிந்தனை அற்ற கோபமும் விமர்சன்ங்களும் மிக கவலை யளிக்கின்றன.

ஒரு பெண் மணி ஏதோ ஒரு ஆர்வத்தில் டிக்டாக் வீடியோ வை வெளியிட்டு விட்டார். அந்த பெண்மணியை உண்டு இல்லை என்று ஆக்கி அந்த பெண்ணின் கணவர் அவளை விவாகரத்து செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விட்டார்கள் சிலர்.

நாம் எவ்வளவு சுத்தம் என்று நம்மில் பலரும் யோசிப்பதில்லை. பிறர் விசயத்திலான குறைகளை பெரித் படுத்துகிறோம்,

நமது கையிலிருக்கிற செல்போன் சாட்டுகள் யார் மீதும்  இத்தகைய குறைகூறல்களை  எளிதாக்கி விட்ட்து ,

எச்சரிக்கை

ஒரு மனிதரின் மானம் மரியாதையோடு விளையாடுவது அவரது உயிரோடு விளையாடுவதற்கு சம்மாகும்.

ஹஜ்ஜத்துல் விதாவின் போது பெருமானாரின் பெரும் எச்சரிக்கை இது

وعنْ أَبي بكْرةَ t أنَّ رسُول اللَّه ﷺ قَالَ في خُطْبتِهِ يوْم النَّحر بِمنىً في حجَّةِ الودَاعِإنَّ دِماءَكُم، وأمْوالَكم وأعْراضَكُم حرامٌ عَلَيْكُم كَحُرْمة يومِكُم هَذَا، في شهرِكُمْ هَذَا، في بلَدِكُم هَذَا، ألا هَلْ بلَّغْت متفقٌ عَلَيهِ.

وَعَنْ أنَسٍ t قالَ: قَالَ رسُولُ اللَّهِ ﷺلمَّا عُرِجَ بي مررْتُ بِقَوْمٍ لهُمْ أظْفَارٌ مِن نُحاسٍ يَخمِشُونَ وجُوهَهُمُ وَصُدُورَهُم، فَقُلْتُ: منْ هؤلاءِ يَا جِبْرِيل؟ قَال: هؤلاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُوم النَّاسِ، ويَقَعُون في أعْراضِهمْ رواهُ أَبُو داود.

 
وعن أَبي هُريْرة t أنَّ رسُول اللَّه ﷺ قَالَكُلُّ المُسلِمِ عَلى المُسْلِمِ حرَامٌ: دَمُهُ وعِرْضُهُ وَمَالُهُ رواهُ مسلم.

ஒரு ஊரில் ஐந்து அமீன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரது மகள் வேற்று மத பையனோடு ஓடிவிட்டாள் . இதை ஊருக்கு எச்சரிக்கை செய்வதாக நினைத்த ஒருவர் வாட்ஸப் குரூப்பில் அமீன் மகள் ஓடிவிட்டாள் என்று தகவல் பதிவிட்டார். ஓடிப்போனது ஒரு அமீனின் மகள் ஆனால் ஐந்து அமீன்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

ரமலானின் பரக்கத்தில் நாம் இத்தகை தீய நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்தது போல ரமலானுக்குப் பிறகும் தொடர்வோம்.

இது போல நாம் பழகி வைத்திருக்கிற நன்மைகளை தொடர்வோம்.

அய்யாமுல் பியழ் நோன்புகள் வியாழன் திங்கள் கிழமைகளில் நபிலான நோன்புகளை தொடர்ந்து கடை பிடிக்கலாம்.

திருக்குர் ஆனை தொடர்வோம்.

இரவுத் தொழுகைகளை பின் தொடர்வோம்.

எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வின் உதவியை தேடுவோம்.

ரமலான் விடை பெறுவதில்லை. நம்மிடம் விடையை எதிர்பார்க்கிறது.

நம்மை வெற்றி பெறச் செய்வதற்கு .

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

லைலத்துல் கத்ரை பயன்படுத்திக் கொள்வோம். பெருநாள் இரவை பயன்படுத்திக் கொள்வோம்.
ஜகாத்தையும் சதகத்துல் பித்ரையும் நாமே நேரடியாக் வழங்குவோம். இதற்கு ஏஜெண்டுகள் தேவையில்லை. அது நமது அக்கறையின்மைக்கு அடையாளம்.  அல்லது இயக்க வெறிக்கு அடையாளம் .

சதகத்துல் பித்ர் தர்மத்தை தொழுகைக்கு வருவதற்கு முன் கொடுத்து விடுவோம். . அதை அதிகமாக கொடுத்தால் தப்பில்லை. குறைந்த பட்ச அளவுதான் 80 ரூபாய். வசதியானவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம்.

தமிழ் நாடு அரசு தலைமைக் காஜி அறிவிக்கிற தினத்தில் பெருநாளை கொண்டாடுவோம்.

 அல்லாஹ் எல்லா நன்மைகளுக்கும் நமக்கு தவ்பீக் செய்வானாக!

(ஆலிம்கள் புனித ரமலானில் எனக்காகவும் எனது குடும்பத்தின் ஆபியத்திற்காகவும் பரக்கத்திற்காகவும் நிறைய துஆ செய்ய வேண்டுகிறேன். )



اللهم تقبل من الصائمين والقائمين والراكعين في شهرك شهر الرحمة، أعاده على المؤمنين والمؤمنات بالخير والبركة والغفران، ربنا استودعناك رمضان فلا تجعله آخر عهدنا. اللهم اجعلنا من المقبولين، واجعلنا ممن قام رمضان إيماناً واحتساباً وفاز بعفوك وغفرانك.

இந்த வாரத்திற்கு பொருத்தமான முந்தைய பதிவுகள்









2 comments:

  1. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா விதமான பரக்கத் ரஹ்மத் களை ஈருலகிலும் தருவானாக.... ஆமீன்

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா விதமான பரக்கத் ரஹ்மத் களை ஈருலகிலும் தருவானாக.... ஆமீன்

    ReplyDelete