வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 30, 2010

அர்த்தமுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டம்

وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا

2011  ம் ஆண்டு தொடங்குகிறது.

கீ.பி ஆண்டு சூரிய ஓட்ட்த்தை அடிப்ப்டையாக்க் கொண்ட்து. ஹிஜிர் ஆண்டு சந்திர ஓட்ட்த்தை அடிப்ப்டையாக்க் கொண்ட்து.

சூரிய ஆண்டு (அதாவது பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர) 365 ¼ நாட்கள் ஆகும். துல்லியமாக சொல்வதானால் 365 நாட்கள் 5 மணி 48 நிமிஷம் 46 விநாடி ஆகிறது.)

சந்திர ஆண்டு என்பது (அதாவது சந்திரன் ஒரு முறை பூமியைச் சுற்றிவர) 354 நாட்கள் ஆகும்.

ஒவ்வொரு சூரிய ஆண்டையும் விட சந்திர ஆண்டு 10 ¾ நாள் குறைவானதாகும்.

ஒவ்வொரு 33 சூரிய வருட்த்திற்கும் ஒரு முழு சந்திர வருடம் அதிகமாக் அமையும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து கண்க்கிடுகிற போது இன்றுவரை யுள்ள சூரிய வருட்த்தில் சுமார் 42 சந்திர வருடங்கள் அதிகரித்துள்ளன,   

கி.பி ஆண்டுடன் முஸ்லிம்களுக்கு சண்டை  எதுவும் இல்லை.

ஆனால் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை இஸ்லாம் ஒரு போதும் ஏற்பதில்லை.

இஸ்லாம் மட்டுமல்ல்  எந்த நாகரீகமுள்ள சமுதாயமும் அதை ஏற்க இயலாது.
  • மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரண்டு இளம் பெண்களை எண்பது இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளனர்.
  • சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டங்களில் விபத்து நேர்ந்ததில் நீச்சல் குளத்தில் விழுந்து ஒருவர் மரணமடைந்தார் .பலர் காயமடைந்தனர். .
  • சுவீடன் நாட்டைச் சேர்ந்த 15 வய்து  பெண் ஒருத்தி கொச்சியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தச் சிறு விபத்துக்களால் மாத்திரமே இந்தக் கூத்துக்களை நாம் எதிர்க்கவில்லை. அடிப்படையில் இந்தக் கொண்டாட்டங்கள் எந்த அர்த்தமும் அற்றவையாகும்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் என்னவெல்லாம் நடக்கிறத்து. செய்திகளில் தேடிப்பாருங்கள்.

மது ஆட்டம் பாட்டம்.ஆபாசம் ஆகிய அனைத்து  ஒட்டல்களும் கிளப்புகளும் உருவாக்கிய கலாச்சாரம்  என்பதை உண்ரலாம்.  

பொதுவாக சமூகத்தில் வியாபாரிகள் பெரும் தொழிலதிபர்களும் தங்களது வியாபார நோக்கத்திற்காக விளம்பரங்கள் மூலம் புதிய திருவிழாக்களை உருவாக்குகிறார்கள்.

ஒரு உதாரணம் அட்சய திருத்திகை – ஒரு இருபது வருட்த்திற்கு முன்பு இப்படி ஒரு வார்த்தையே இல்லை. இப்போது அன்றைய தினத்தில் ஒரு பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என மக்கள் கியூவில் நிற்கிறார்க்ள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் அப்படி அர்த்தமற்றதே!

நள்ளிரவு 12 மணி ஆனதும் ஆ ஊ என்ற ஒரு கத்தல் அவ்வளவு தான். இதற்காக பல பத்தாயிரங்களை மக்கள் அள்ளி வீசுகிறார்கள்.

வியாபாரிகளின் தந்திரத்திற்கு படித்தும் விவரமற்றவர்கள் ஏமாறுகிறார்கள்.

ந்தப்  புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்  தலையாய கடமை போன்ற தோற்றம் இன்று இளைஞர்களிடையே வரவி வருகிறது

சில இளைஞர்கள்  மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்கிறார்கள் , பந்தயங்கள்  நட்த்துகிறார்கள் .

முஸ்லிம்கள்  இவை அனைத்திலிருந்தும் முற்றிலுமாக விலகி நிற்கவேண்டும்.

மகிழ்ச்சி என்ற பெயரில் அல்லாஹ்விற்கு கோபமூட்டும் எந்தச் செயலையும் செய்து விட்டால அல்லாஹ்வின் பரகத் பிறகு எப்படிக் கிடைக்கும்.  

ஒவ்வொரு புத்தாண்டும் நமது ஆயுளின்  எல்லை நெருங்கிவருவதை  ஞாபகமூட்டுகிறது. நமது பொறுப்புணர்வை அதிகப்படுத்துகிறது.

குழந்தைகள் பள்ளியிலிருந்து உயர் நிலைப்பள்ளிக்குச் செல்லும் போது அல்லது கல்லூரிக்கு செல்லும் பேது நாம் நினைவூட்டுகிறோம்.

நீ இப்ப பெரியவன். பொருப்பா நடந்துக்கணும் என்கிறோம்.
இது நம்க்கும் பொருந்தும்

கடந்த வாரம் புத்தாண்டைப் பற்றிய் சிந்தனையோடு கஹ்பு சூரா ஓதிக் கொண்டிருக்கிறேன். இதயத்தை ஈர்த்த்து இந்த வசனம்.

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا
 இந்த வசனத்தை எப்போது ஓதும் போது ஒரு செய்தி ஞாபகத்திற்கு வரும்

வேலூர் ஷம்சுல் உலமா அப்துல் வஹாப் ஹஜ்ரத் அவர்கள் தனது மதரஸாவுக்கு என்ன பெய்ர் வைக்கலாம் என்று யோசித்த ப்டி குர்ஆனைத் திறந்து பார்த்த போது  இந்த வசனமே அவர்களது பார்வையில் பட்ட்து.  பாகியாத் என்று பெயர் சூட்டினார்கள்.

என்ன அற்புதமான பெயர் பொருத்தம் பாருங்கள் அப்துல் வஹாப் ஹ்ஜரத் அவர்கள் இந்த உலகில் விட்டச் சென்ற நிலையான நல்ல காரியமாக அவரது நிறுவனம் அமைந்து விட்ட்து.

ஜமால் முஹம்மது  மறைந்து விட்டார் அவர் உருவாக்கி விட்ட கல்லூரு இன்று திருச்சியில் மட்டுமல்ல அகில உலகிலும் புகழ் பெற்று நிலைத்துக் கொண்டிருக்கிறது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்க்கு காஜா மைதீன் என்பவர் 100 ஏக்கர் நிலம் கொடுத்தார். இன்று அவருடைய பெய்ர் கூட பலருக்கு தெரியாது. ஆனால் அவரது கொடை நின்று நிலைத்துக் கொண்டிருக்கிறது.
இமாம் ரூமி அவர்கள் மஸ்னவி என்று பார்ஸி காவியம் எழுதினார். அவர் மறைந்த பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அவரது பணி வாழ்ந்து கொண்டிருக்கிறது,

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸ் நூலை தொகுத்துக் கொடுத்தார். இன்றும் அது முஸ்லிம்களின் நாவில் குர் ஆனுக்கு அடுத்தப்டியாக பேசப்பட்டுக்க் கொண்டிருக்கிறது.

இது போல ஏராளமான அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் த்த்துவ ஞானிகள் கவிஞர்கள் தாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த்தற்கான தட்த்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள்,

நாம் நம்முடைய பங்கிற்கு நிலைத்து நிற்கிற நற்செய்லாக என்ன செய்தோம் என்று யோசிக்க வேண்டும்.

பணம் சேர்ர்பதும் பிள்ளைகளை பராமரிப்பதுமே நம்முடைய பிரதான் இலக்காக இதுவரை இருந்திருக்கிறது.? திருக்குர் ஆனின் வார்த்தையை கவனியுங்கள்.
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَ
செல்வமும் குழ்ந்தைகளும் அழகுதான் என்று குர் ஆன் ஒத்துக் கொள்கிறது.  
அது தவறல்ல. ஆனால் அது போதுமா என்று யோசிக்க வேண்டும்.

அல்லாஹ்விடம் நன்மை பெறச்சிறந்த்து நிலைத்து நிற்கும் நற்செயலே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல. நாம் பனத்தையும் பிள்ளைகளையும் அது நம்மை பாதுகாக்கும், சிரம்மான சூழ்நிலையில் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வசனத்தின் கடைசி வாத்தை சொல்கிறது.
وَخَيْرٌ أَمَلًا
    
நாம் எதிர்பார்க்கச் சிறந்த்தும் நமது நற்செயல்களே! என்று அது அறிவுறுத்துகிறது.

நம்மில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் ஒரு சக்தியை வழங்கியிருக்கிறான். அந்தச் சக்தியையை பயன்படுத்தி நிலைத்து நிற்கிற நறகாரியங்களை செய்ய நாம் தீர்மாணிக்க வேண்டும்.

எதுவுமே செய்ய முடியவில்லையா தஸ்பீஹ் திக்ர் செய்யும் வழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ  என்பதற்கு திக்ரு தஸ்பீஹ் என்ற அர்த்தமே பிரதானமாக சொல்லப்படுகிறது.

عن سعد بن جنادة رضي الله عنه قال: كنت في أول من أتى النبي صلى الله عليه وسلم من أهل الطائف فأتيت النبي صلى الله عليه وسلم فأسلمت وعلمني " قل هو الله أحد" و " إذا زلزلت " وعلمني هؤلاء الكلمات: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وقال " هن الباقيات الصالحات
நாம் வாழ்ந்த்தின் அடையாளமாக என்ன நன்மைய விட்டுச் சென்றோம் என்று யோசிப்பதும் அதற்காக முயல்வதுமே ஒரு புதிய ஆண்டை வரவேற்கும் புத்திசாலித்தனமான வழி முறையாகும்.

புத்தாண்டை கொண்டாடும் சரியான வழிமுறைகள்

·         புத்தாண்டு தினம் என்பது 'நமது வாழ்க்கை வங்கியில் ஆயுள் பேலன்ஸ் கழிந்து கொண்டிருக்கிறத் ' எனும் பக்குவம் வளரவேண்டும். அல்லது
மனிதத்தையும், குடும்ப உறவுகளையும், சமூக பிணைப்பையும் ஊக்கப்படுத்தும்
செயல்களை புத்தாண்டு தினத்தில் கொண்டாடுவதே சிறப்பானதாக இருக்கும். இஸ்லாமிய பெருநாட்கள் அதற்கான சரியான முன்னுதாரணத்தை நமக்கு வழங்கியிருக்கின்றன.  
·         குடிக்கமாட்டேன், புகைக்கமாட்டேன், உடற்பயிற்சி செய்வேன் என்பது போன்ற  நம் வாழ்வை ஒழுங்கு படுத்தும் உறுதிமொழிகளை  ஏற்கலாம்.
·         குழந்தைகளுக்கு  ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்யப் பழக்கலாம்.
·         ஒவ்வொருவரும் அவரவரது சூழ்நிலைக்கு ஏற்ப தமது ஈருலக வாழ்வை மேம்படுத்த சரியான திட்டமிடலாம்.   

Thursday, December 23, 2010

கிருஸ்துமஸ் முஸ்லிம்கள் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்

கிருத்துவ சகோதர்ர்கள் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்க்ள். 

சகோதர சமுதாயம் என்ற வகையில் அவர்களது மகிழ்ச்சிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கிறோம்.  ஆனால் கிருஸ்துமஸுடன் முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லை. காரணம்  கிருத்து என்ற ஈஸாவைப் பற்றிய தவறான நம்பிக்கையில் கிருத்துவர்கள் வாழ்கிறார்கள்.
    
கிருஸ்துமஸ் என்பது கூட  போலியான கற்பனையாக உருவாக்கப் பட்ட் ஒரு கொண்டாட்டமே.   டிஸம்பர் 25 தேதிதான் ஈஸா பிறந்தார் என்பத்ற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பது படித்த கிருத்துவர்களுக்கு தெரியும் 

  கிருஸ்துமஸ் பற்றிய கட்டுரையில் விக்கீபீடியா என்ற கலைக்களஞ்சியம் இப்படிச் சொல்கிறது.  
கிருத்துவின் பிறப்புத் தேதி உறுதியாக அறியப்பட்டதல்ல..  
The date is not known to be the actual birthday of Jesus  
ஐஸக் நிய்யூட்டன் கூறுகிறார்; 
“ஐரோப்பியர்கள் குளிர்கால திருவிழாகவாக கொண்டாடி வந்த புரூமா  என்ற பண்டிகை தினமான டிஸம்பர் 25, பின்னர் கிருஸ்துமஸ் தினமாக மாற்றப்பட்ட்து.    
” Isaac Newton argued that the date of Christmas was selected to correspond with the winter solstice  which the Romans called bruma and celebrated on December 25.  

கிருத்துவ சமுதாயம் மிக அப்பட்டமான வழி கேட்டில் இருக்கிறது.

 கிருத்துவர்கள் தங்களது அன்பிற்குரிய தலைவரைப் பற்றிய உண்மை அறியாமல் இருக்கிறார்கள். 

ஈசாவை மதிக்றோம் என்ற பெயரில் ஈஸாமீது இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட பொய்களை கிருத்துவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
   ولا الضاليين
   என்ற வார்த்தை கிருத்துவர்களையே குறிக்கிறது. 

  ஈஸா (அலை) அவர்களது உண்மையான வாழக்கை வரலாற்றை கூறக்கூடிய ஒரே நூல் குர் ஆன் மட்டுமே!  குர் ஆனைத் தவிர்த்தூ ஈஸா அலை வர்களின் வரலாற்றுக்கு ஆதாரமான நூல் எதுவும் இல்லை.  

பெட்ரெண்ட் ரஸ்ஸல் கூறுகிறார்:   
"ஈஸா என்பவர் உலகத்தில் எங்காவது எப்போதாவது பிறந்தாரா? என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது.  

திருக்குர் ஆன்  ஈஸா (அலை) அவர்களது வரலாற்றை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவரது பாட்டனாரின குடும்பத்தி (ஆலு இம்ரன்) லிருந்து தொடங்குகிறது.   

நபி (ஸல்) அவர்களின் மனைவி மக்களின் பெய்ரில் கூட திருக்குரானில் ஒரு அத்தியாயம் இல்லை. ஆனால் மர்யம் அம்மையாரின் பெய்ரில் ஒரு அத்தியாயம் இருக்கிறது   

அனைத்துக்கும் காரணம் ஒரு பெரும் சமூகம வழி தவறிச் சென்ற விசயத்தில் அதற்கு சரியான வழியை காட்டுவதற்கேயாகும்.  

ஈஸா (அலை) அவர்களது வரலாற்றை அவரது பாட்டி இம்ரானின் மனைவியின் நேர்ச்சையிலிருந்து குர் ஆன் ஆரம்பிக்கிறது.
   إِذْ قَالَتْ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ(35)فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ(36    فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يامريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب(37)

     إذ قالت الملائكة يامريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين(45)   

உ லகிற்கு தெரியாதிருந்த ஈஸாவின் வரலாற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி  அவரது வரலாற்றின் மீது வீசப்பட்ட களஙகத்தை துதைதொந்து அவரைப்பற்றிய சாயான தெளிவான செய்திகளை தொவித்த நூல் திருக்குஆண் மட்டுமே !

திருக்குர் ஆன் யூதர்களின் கடும் பொய்ப்பிரச்சாரத்திலிருந்து மர்யம் அம்மையாரை புனிதப்படுத்தியது.   

அதனால் ஜாபர் (ரலி) அவர்கள் நஜ்ஜாஷியின் முன்னைலையில் குர் ஆனை ஓதிக்காட்டிய போது மர்யம் அம்மையாரை புனிதப்படுத்தும் குர் ஆன் வசங்ன்ங்களை செவியேற்று அவர் அழுதார்.   

ஈஸா வை குர்ஆன் புகழ்கிறது.  
  إذ قالت الملائكة يامريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين(45)  
நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்தார்கள்,  
عن أبي هريرة أن رسول الله صلى اللهم عليه وسلم قال ما من مولود يولد إلا نخسه الشيطان فيستهل صارخا من نخسة الشيطان إلا ابن مريم وأمه ثم قال أبو هريرة اقرءوا إن شئتم ( وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم  

عن أبي هريرة قال قال رسول الله صلى اللهم عليه وسلم أنا أولى الناس بعيسى ابن مريم في الدنيا والآخرة والأنبياء إخوة أبناء علات أمهاتهم شتى وليس بيننا نبي   

அவர் அதிசயமே வாழ்வான மனிதர்  என்பதை குர்ஆன் ஒத்துக் கொள்கிறது   பிறப்பு - பேச்சு - வகை வகையான அற்புதஙகள்.  ஆனால் அதனால் அவர் இறைவனோ இறைவ்னுடைய மக்னோ அல்ல என்பதை உறுதியாகச் சொல்லிக் காட்டுகிறது. முன்னார் வந்துள்ள தூதர்களைப் போலவே அவரும் ஒருவர் என்பதை அழுத்தமாக கூறுகிறது.   

ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنى يؤفكون(75)  المائدة   

ஆதம் அலை அவர்களைப்போல இறைவனின் படைப்பாற்றலுக்கு மற்று மோர் எடுத்துக்காட்டு அவ்வளவே ! என்று கூறுகிறது.
  إن مثل عيسي عند الله كمثل أدم 
   
தந்தையின்றி பிறந்த்தானால் ஈஸா தேவகுமாரன் என்றால் ஆதமை என்ன சொல்வது ?   
அவர் சிலுவையில் சிலுவையில் அறையப்பட்ட்தாக சொல்வது வெறும் யூகமே தவிர எந்த ஆதரமும் அற்றது என் உரத்து கூறுகிறது குர்ஆன். 

   وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا(157)النساء
  
அவர் மீண்டும் பூமிக்கு வந்து அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை நிலை நிறுத்துவார். பொய்மையின் சின்ன்ங்களை உடைத்தெரிவார் என்று இஸ்லாம் கூறுகிறது. 
  عن ابي هريرة رضي الله  عنه  قال رسول الله صلى اللهم عليه وسلم والذي نفسي بيده ليوشكن أن ينزل فيكم ابن مريم حكما مقسطا فيكسر الصليب ويقتل الخنزير ويضع الجزية ويفيض المال حتى لا يقبله أحد * 

அவரது இரண்டாம் வருகையை பற்றி  நம்புவதை முஸ்லிம்களின் மீது இஸ்லாம் கட்டாய்ப்பட்டுத்தி உள்ளது.    

ஈஸா விசயத்திலும் கிருத்துவ மத்த்திலும் பல் தப்பான கோட்பாடுகளை புனித பவுல் என்பவரே கற்பனையாக உண்டு பண்ணினார் .  

முஸ்லிம்களே ஈஸாவை சரியாக மதிக்கிறார்கள். ஒரு நபியாக! அவர் விரும்பியது போல  அவரை மதிக்கிறார்கள்.   

கிருத்துவர்களோ ஈஸா பற்றிய உண்மைகளுக்கு எதிரக நடந்து கொண்டு அவரைக் கொண்டாடுகிறார்கள்.   

அதனால் தான் இஸ்லாம் கிருஸ்துமஸிற்கு முரண்படுகிறது. 
முஸ்லிம்கள் ஈஸா பற்றிய உணமைகளை தெரிந்து கொள்ளனும். கிருத்துவர்களின் கலாச்சாரத்த்தையும் பண்பாட்டையும் விட்டு விலகி நிற்கனும்  

Wednesday, December 08, 2010

ஆஷூரா சில தகவல்கள்

ஆஷூரா பற்றிய சில கவல்களுக்கு இக்கட்ட்டுரையை வாசிக்கவும்

Thursday, December 02, 2010

ஹிஜ்ரத்

இந்த வாரத்திற்கான புதிய தலைப்பு : தலாக் விளையாட்டல்ல.. 

ஹிஜ்ரத் பற்றி பேச  விரும்பும்  இமாம்கள் கீழுள்ள இணைப்பில் ஹிஜ்ரத் கட்டுரையை வாசித்துக் கொள்ளவும்

தலாக் விளையாட்டல்ல..


தலாக்  விளையாட்டல்ல..  சீரியஸ்னெஸ் தேவை

الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون 2/229

மீண்டும் ஒரு தலாக் பிரச்சினை உருவெடுத்துள்ளது.

இண்டெர்னெட்டில் மனைவியோடு சாட்டிங்கில் ஈடுபட்டிருந்த கணவன்  விளையாட்டாக நான் உன்னை த்லாக்விட்டுட்டேன்என்றான்.

இது தலாக் ஆகிவிடும் என்று தேவ்பந்த் தீர்ப்பளித்து.

செல்போனில் மனைவியை தலாக் சொன்னான் ஒருத்தன். மனைவி அந்த வார்த்தை தனக்கு கேட்கவில்லை என்றாள்

இங்கும் தலாக் நிகழ்ந்து விட்ட்து என்று மதரஸா தீர்ப்பளித்த்து.

வழக்கம் போல மீடியாக்கள் விமர்ச்சிக்கின்றன.

இந்த தீர்ப்புக்கள் சரியானவையே! இவ்வாறு  தலாக் கூறியவர்கள். மார்க்கத்தை மலிவு படுத்திவிட்டனர்.

இது கண்டிக்கத்தக்க போக்காகும். இவ்வாறு நடந்து கொள்கிறவர்களை சமுதாயம் தண்டிக்க வேண்டும்.

இலகுவான ரஹ்மத்தாக கிடைத்த மார்க்கத்தை இவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் மார்க்கத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்.

மார்க்கம் தலாக்கிற்கான வழி முறைகளை லேசாக்கியிருக்கிறது. ஆனால் தலாக்கை இலேசான விசயமாக கருதவில்லை.

வேண்டா வெறுப்பாகவே தலாக்கிற்கு அனுமதி கொடுத்த்து.

சர்க்கரை வியாதிகார் விரலை எடுக்க சம்மதிப்பது போல

அல்லாஹ் அனுமதித்த்தில் அவனுக்கு மிகவும் கோபமூட்டக்கூடியது தலாக்
عن ابن عمر عن النبي قال: أبغض الحلال إلي الله الطلاق – ابوداوود

மார்க்கத்தை கடைபிடிக்கும் ஒரு நல்ல முஸ்லிமுக்கு இதை விட வேறு எச்சரிக்கை தேவையில்லை.

முறையற்ற தலாக்கின் போது அல்லாஹ்வின் அர்ஸ் நடுங்குகிறது என்றும் ஒரு ஹதீஸ் உண்டு. (மஆரிபு

ஒரு பெண் முறையற்று தலாக் கேட்டால்
عن ‏ ‏ثوبان ‏ ‏قال  ‏قال رسول الله : ‏ ‏أيما امرأة سألت زوجها طلاقا في غير ما ‏ ‏بأس ‏ ‏فحرام عليها رائحة الجنة     ترمذي – 1108

இஸ்லாம் தலாக்கில் சீர்திருத்த்ம் செய்த்து.

இஸ்லாத்திற்கு முன்னால் இதில் வரையறை எதுவும் இல்லாமல் இருந்த்து. ஒரு கணவன் நூறு முறை கூட மனவியை தலாக் சொல்வான். திரும்ப சேர்த்துக் கொள்வான். பெண்களுக்கு துன்பம் த்ரும் வழிமுறை.

இஸ்லாம் தலாக்கில் பல வரைமுறைகளை அமுல்படுத்தியது

·         எண்ணிக்கையில் -  3 தலாக் மட்டுமே
·         சொல்லப்படும் சூழ்நிலை. - மனைவியின் சூழ்நிலை தெரிந்து அவள் இத்தாவை கணக்கிடுவதற்கு வசதியாக உடலுறவு கொள்ளாத சுத்தகாலத்தில் தலாக் சொல்லவேண்டும்.

·         மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக் கூடாது.

عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيَتْرُكْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ ثُمَّ تَطْهُرَ ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ يُطَلَّقَ لَهَا النِّسَاءُ

பெண்ணின் சூழ்நிலை கவனிக்கப் பட வேண்டும் என்கிற போது அவளுக்கு தகுந்த எச்சரிக்கை செய்யாமல் தலாக் விடுவது நியாயமல்ல.

கடிதம்  செல்போன்  மூலம் தலாக் என்பது அதிகப்ப்பிரசங்கித்தனம். மார்க்கம் ஒரு சௌகரியத்திற்காக அனுமதித்த்தை தவறாகப் பயன்படுத்துவதாகும்.

இஸ்லாமில் தலாக் ஒரு ஆபத்தான சொல்! அதில் விளையாட்டுக்கு இடமில்லை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلَاقُ وَالرَّجْعَةُ  - الترمذي 1104 

இஸ்லாம் வழ்ங்கிய எளிய  முறையில் தலாக் என்று சொல்வோர் அது கூறும் வழி காட்டு நெறிகளையும் கடை பிடிக்க வெண்டும்,

இளைய சமுதாயத்திற்கு ஒரு  முக்கியமான அறிவுரை தலாக் என்ற வார்ர்த்தையை விளையாட்ட்டாக்க் கூட யோசிக்காத்தீர்கள். அது வாழ்வின் வெளிச்சத்தை எடுத்து விடும்.

தேவையற்று இந்த வார்த்தையால் பெண்களை மிரட்டும் பழக்கம தவறானது.
  • உன்னை த்லாக்  விட்டுறுவேன் என்பது
  • இரண்டாவது கல்யாணம் செய்துக்குவேன் என்று கூறுவது
  • எனக்காக் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்று பேசுவது     அழகிய முறையில் குடும்பம் நட்த்தும் அழகல்ல.

பெண்கள் இதை நம்மைப் பார்த்து திருப்பிச் சொன்னால் என்னவாகும் என்று யோசிக்க வேண்டும்.

ஜமாத்துக்களுக்கு ஒரு ஆலோசனை
மாப்பிள்ளைகளுக்கு NOC வழங்கும் போது
அவரை இமாமிடம் அனுப்பி சில சட்டவிதிகளை அறியச்செய்யனும்
குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் ஜமாத்தின் மூலமாக அதை தீர்க்க முயற்சி செய்வேன் என்ற் உறுதி மொழிப்பத்திரத்தில் அவரிடமிருந்து கையெழுத்துப் பெறனும்

கடந்த வாரத்தில் ஒரு கசப்பான செய்தி:
கடந்த வாரத்தில் ஒரு நாள் 65வயது பெரியவர் ஒருவர் வந்தார்.
அவரது மகளுக்கு கல்யாணமாக் 20 வருஷமாச்சு. இரண்டு பேத்திகளில் ஒருவருக்கு கல்யாணம் ஆயாச்சு. மற்றொரு பெண் திருமணத்திற்கு காத்திருக்கிறார். இந்நிலையில் திடீரென கோபித்துக் கொண்டு போன மாப்பிள்ளை. ஏதோ ஒரு வீணாப் போன வக்கீலை அணுகியிருக்கிறார். அவன் விவரமில்லாமல் முத்தலாக் கூறி வாசகம் சொல்லிக் கொடுக்க அதையே கடிதமாக அனுப்பி விட்டார். அந்தப் பைத்திய்க்கார மாப்பிள்ளை. கடித்த்தை அனுப்பி விசய்ம் விபரீதம் என்றானபிறகு ஜமாத்திற்கு வருகிறார்கள் ஆலிம்களைச் சந்திக்கிறார்கள்.

இந்நிலை மாற வேண்டும்,
தலாக்கில் விளையாடக் கூடாது.
முறையாகச் செயல் பட வேண்டும்.
இல்லை எனில் புனித  இஸ்லாம் குறை கூறப்படும்.