வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 23, 2018

சாத்தானிய வலைகள்


இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்த அல்லாஹ்வின் விருந்தினர்கள் இன்றோடு தமது ஹஜ் கடமைகள் அனைத்தையும் நிறைவு செய்து விட்டார்கள்.  சாமாணிய மனிதர்களாக சென்றவர்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்ட ஹாஜிகளாக திரும்புகிறார்கள். இன்னும் ஒரு சில நாட்கள் அவர்கள் நாடு திரும்ப தொடங்குவார்கள். அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பாகவும் நிம்மதியாக வும் வீடு சேர்ப்பானாக!
ஹஜ் கடமை செய்த்தானை கல்லெறிவதோடு நிறைவு பெறுகிறது,
சைத்தானை கல்லெறிதல் ஹஜ்ஜின் முக்கிய வணக்கமாகும்.
மக்காவிலிருந்து 7 கீ மீ தொலைவில் இருக்கிற மினா மைதானத்தில் ஹாஜிகள் ஹஜ்ஜின் நாட்களான துல் ஹஜ் 8 முதல் 13 மாலை வரை தங்கியிருப்பார்கள். இதில் துல் ஹஜ் 10 ,11,12,13 ஆகிய மூன்று நாட்களிலும் சைத்தானை கல்லெறிவார்கள்.
சைத்தானை கல்லெறிவதற்கு மூன்று இடங்கள் மினாவில் உண்டு.
1.       جمرة الاولي
2.       جمرة الوسطي
3.       جمرة العقبة
இதை சின்ன சைத்தான் நடு சைத்தான் பெரிய சைத்தான் என்று பொதுமக்கள் வழக்கில் கூறுவதுண்டு. அது ஒரு பாமர வழக்காகும். எதார்தத்தில்  சைத்தானை கல்லெறியும் முதல் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என்பதே  இதன் சரியான பொருளாகும்.
மீனா மைதானத்தின் நுழைவாயிலில் மூன்று தூண்களும் அதைச் சுற்றி மூன்று கிணறு வடிவத்திலான சுவர்களும் உள்ளன, ஹாஜிகள் ஒவ்வொரு கல்லெறியும் ஒவ்வொரு முறையும் அந்தக்  கிணற்றில் விழுமாறு ஏழு கற்களை எறிய வேண்டும். அது அந்த தூணில் பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு இட்த்தில் ஏழு கற்களை எறிவது ஒரு முறை கல்லெறிவதாக கருதப்படும். துல் ஹஜ் 10 ம் நாள் அன்று கடைசி கல்லெறியும் இடத்தில் மட்டும் ஹாஜிகள் கல்லெறிவார்கள். 11,12,13 ஆகிய நாட்களில் மூன்று இடங்களிலும் ஏழு கற்கள் என நாளென்று 21 கற்கள் வீதம் மொத்தம் 70 கற்களை எறிவார்கள். இதற்கான பொடிக்கற்களை முஸ்தலிபா எனும் மைதானத்தில் இருந்து திரட்டிக் கொள்வார்கள்.   
மினாவின் இந்த இடத்தில் தான் சைத்தான் இருக்கிறான் என்பது இதன் பொருளல்ல. இங்கு இபுறாகீம் அலை அவர்கள் சைத்தானை கல் எறிந்து துரத்தினார்கள். ஹாஜிகள் இபுறாகீம் நபியை பின் பற்றி சைத்தானை கல்லெறிது துரத்துகிறார்கள் என்பதே இதன் தத்துவமாகும் .
சிலர் இங்குதான் சைத்தான் இருப்பதாக இருதிக் கொண்டு, செருப்பு வீசுவதுண்டு.. இந்த ஆண்டு ஒரு ஹாஜி  “ எனது விரோதி ஒருவரை நினைத்துக் கொண்டு கல்லடிக்கலாமா என்று கேட்டார்”
عَنِ ابْنِ عَبَّاسٍ - رضي الله عنهما - رَفَعَهُ إلى النبيِّ صلى الله عليه وسلم قَالَ: (لَمَّا أَتَى إِبْرَاهِيمُ خَلِيلُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَنَاسِكَ عَرَضَ لَهُ الشَّيْطَانُ عِنْدَ جَمْرَةِ الْعَقَبَةِ، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ حَتَّى سَاخَ فِي الأَرْضِ[14]، ثُمَّ عَرَضَ لَهُ عِنْدَ الْجَمْرَةِ الثَّانِيَةِ، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ حَتَّى سَاخَ فِي الأَرْضِ، ثُمَّ عَرْضَ لَهُ فِي الْجَمْرَةِ الثَّالِثَةِ، فَرَمَاهُ بِسَبْعِ حَصَيَاتٍ حَتَّى سَاخَ فِي الأَرْضِ. قَالَ ابْنُ عَبَّاسٍ - رضي الله عنهما: الشَّيْطَانَ تَرْجُمُونَ، وَمَِّلةَ أَبِيكُمْ تَتَّبِعُونَ 


ஹாஜி ஹஜ்ஜின் நிறைவாக செய்கிற வணக்கம்  சைத்தானை நம் வாழ்விலிருந்து துரத்த வேண்டும் என்பதையே செய்தியாக நமக்கு தருகிறது .

சைத்தான் நம்முடைய பகிரங்கி பயங்கர விரோதியா என்பதை எந்த சந்தர்த்தப்பத்திலும் மறந்து விடக்கூடாது,

إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ۚ

يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر

நமக்கு மனிதர்களில் ஒரு எதிரி இருப்பான் எனில் எந்த நிமிட்த்திலும் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்போம் அல்லவா ? அவன் நம்மை ஜெயித்து விடக் கூடாது என்பதில் உஷாராக இருப்போம் அல்லவா

சைத்தான் விசயத்தில் நமக்கு அதே கவனமும் எச்சரிக்கையும் அவசியம் .

சைத்தான் நமது வாழ்க்கையில் மிக இலாவகமாக நுழைந்து விடக் கூடியவன்.  நேரடியாக வரக் கூடியவன் அல்ல.

சைத்தான் நமது வாழ்வில் நுழையும் முக்கியமான இரண்டு வழிகள்

ஒன்று التسويف
நன்மையான காரியங்களை தள்ளிப்போடச் செய்வது
நன்மை செய்ய வேண்டாம் என்று சைத்தான் கூற மாட்டான். மனிதர்கள் அதை ஏற்றூக் கொள்ள மாட்டார்கள் என்பது அவனுக்கு தெரியும்.
நாளைக்குச் செய்யலாம் . அடுத்த ஆண்டு பார்க்கலாம் என தாமதப் படுத்த வைப்பதே அவனது வழி முறையாகும்.
இமாம் அபூஹனீபா சுறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது பழைய ஜுப்பா ஏதாவது கிடைக்குமா என்று ஒருவர் கேட்டார். அப்படியே தான் அணிந்திருந்த ஜுப்பாவை கழட்டிக் கொடுத்து விட்டார்கள். சிறு நீர் கழித்து முடிப்பதற்குள் சைத்தான் மனதை மாற்றிவிடலாம் என்றார்கள்.

சைத்தானின் இரண்டாவது பேராயுதம் தகப்புர்
தற்பெருமை

நமது எல்லா நன்மைகளை ஒன்றுமில்லாமல் செய்து விடக்கூடியது பெருமை
அல்லாஹ்விற்கு மட்டுமே பெருமை கொள்ள தகுத்தி உண்டு.
நம்மிடம் இருக்கும் எதுவும் பெருமை கொள்வதற்குரியது அல்ல.
ஏனெனில் நம்மைவிட உயர்ந்தவர்கள் எல்லா துறையிலும் உண்டு.

எனவே பெருமையை எல்லா நிலையிலும் தவிர்ப்போம். அது சைத்தானை எதிர்த்துப் போராடும் பெரிய ஜிஹாதாகும்.

பள்ளிவாசலை கட்டி கொடுத்து விட்டு பெருமைப் படுகிறவர்கள் எத்தகைய பரிதாபத்திற்குரியவர்கள் ? அதே போல ஹஜ்ஜு செய்து விட்டு, பெரிய தர்மங்களை செய்து விட்டு பெருமைப் படுகிறவர்கள் எத்தகைய நஷ்ட்த்த்திற்குரியவர்கள் ?

அல்லாஹ் கொடுத்த மகத்தான கூலியை எவ்வளவு சாதாரணமாக இகழ்ந்து விடுகிறார்கள் ?

இது போல சைத்தானின் வலைகள் பலது உண்டு. இவை இரண்டும் மிக முக்கியமானது

சைத்தானிய வலைகளில் சில
ففي صحيح مسلمعن جابر - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ( إن إبليس يضع عرشه على الماء، ثم يبعث سراياه، فأدناهم منه منزلة أعظمهم فتنة ).

1.      மனச் சலனத்தை ஏற்படுத்துவது
الوسواس الخناس
وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم } (الأعراف:200)
அவூது பில்லாஹ் அதிகம் சொன்னால் சரியாகிவிடும்.
2.       குடும்பம் காசு பணத்தில் அதீத கவனத்தை ஏற்படுத்துவது

3.       தேவையற்ற்றதை ஆசைப்பட வைப்பது. அதை தேவையாகவும் நன்ம்மயாகவும் கருத வைப்பது, அவனது வாக்குறுதி பொய்யானதாகும்.  
 ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين\
4.      மூட நம்பிக்கைகளின் பக்கம் திருப்புவது. வாஸ்து – ஜோஸியம்.
قال تعالى:{هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون }(الشعراء:221-222)، وفي الحديث الصحيح أن النبي صلى الله عليه وسلم: سئل عن الكهان ؟ فقال: ( ليسوا بشيء، قيل: يا رسول الله فإنهم يحدثون أحيانا بالشيء يكون حقا . فقال تلك الكلمة من الحق يخطفها الجني فيقرها في أذن وليه قرّ الدجاجة فيخلطون عليها أكثر من مائة كذبة ) متفق عليه

5.      மார்க்க விவகாரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்து வது
 إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا }(الحجرات: 15 )
فعن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: ( إن الشيطان يأتي أحدكم فيقول من خلقك ؟ فيقول: الله تبارك وتعالى، فيقول: من خلق الله ؟ فإذا وجد أحدكم ذلك فليقل: آمنت بالله ورسوله فإن ذلك يذهب عنه )
6.      ஆடம்பரம் வீண் விரயம்
إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا }(الإسراء:27)
தீய வழியில் பணத்தை செலவழிப்பது.  வீண் களியாட்டங்களில் ஆபாசமான வழிகளில் செலவழிப்பது அனைத்தையும் இது எடுத்துக் கொள்ளும்,

7.      மனோ இச்சைப் படி வாழத்தூண்டுவது. அவற்றை அழகாக்கி காட்டுவது.
وزين لهم الشيطان ما كانوا يعملون }ْ(الأنعام:43) وقال أيضا: { وإذ زين لهم الشيطان أعمالهم }(الأنفال:48)




அல்லாஹ் பாதுகாப்பானாக!

(மினாவின் 13 எண் கூடாரத்திலிருந்து. பாலைவனப் பொட்டலில் அமைந்துள்ள  நபிமார்களின் இந்த நந்தவனத்தில், மதீனாவின் திக்கில் தீனின் வாசலை திறந்து வைத்த இந்த புனிதர்களின் தீவில் தமிழகத்தின் ஆலிம்கள் அனைவரையும் குடும்பத்தோடு  கொண்டு வந்து அல்லாஹ் அமரச் செய்வானாக!)




2 comments: